ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

பிரியத்தையும் ஹிதத்தையும் அனுசந்தித்து ஒன்றைக் கற்பார்,
ஸ்ரீ திரு வயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும் நிர்ஹேதுகமாக -காரணம் ஒன்றும் இல்லாமலே
ஸ்வ சம்ச்லேஷ -தன் சேர்க்கையே- ஸூகமாகவும்
ஸ்வ விஸ்லேஷ-தன் பிரிவே- துக்கமாக வுமுடையராம்படி
செய்தருளின உபகார சீலனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் லெறும் பாதி ஒன்று இன்றியே
நற் பால் அயோத்தியில் வாழும் சரா சரம் முற்றவும்
நற் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-

—————————-

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை ப்ரக்ருத்ய -நோக்க,
கீழில் பாசுரத்தில் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி
மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே–7-5-2-

—————————-

சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட பரம -மேலான கிருபையை அறிந்தவர்கள்,
கேசி ஹந்தா -கேசியைக் கொன்ற ஸ்ரீ கிருஷ்ணனுடைய -கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’ என்கிறார்.

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

————————-

சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,
பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–7-5-4-

——————————-

உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
ஸ்ரீ மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

—————————–

கீழ்ச் சொன்ன குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ,
அலம் புரிந்த நெடுந் தடக் கையைக் கொண்டு –ஸ்ரீ திருநெடுந்தாண்டகம், 6. –
கோட்டம் கை ஸ்ரீ வாமனனாய் இந்தப் பூமியை ரஷித்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்ட மிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென் றிரந்தார்க் கிடர் நீக்கிய
கோட்டங் கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே–7-5-6-

——————————

ஸ்ரீ யபதி -ஸ்ரீ திருமகள் கேள்வனான தன்னைத் தாழ விட்டு இரந்து ரஷித்தது ஒரு பெரிய ஏற்றமோ,
தேவதாந்த்ர பஜனம் பண்ணின மார்க்கண்டேயனை விஷயீ கரித்த இம் மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கண்டு தெளிந்தும் கற் றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–7-5-7-

——————————

தேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீகரித்த மஹா குணத்தைக் காட்டிலும்
ஸ்ரீ நரத்வ ஸிம்ஹத்வங்கள் இரண்டனையும் ஏறிட்டுக் கொண்டு
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின மஹா குணத்தை அருளிச் செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே–7-5-8-

————————–

ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ நரஸிம்ஹமான அதிலும் அதிக குணமான
ஸ்ரீ சாரதியாய் நின்ற வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கறார்

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதி யாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–7-5-9-

—————————-

கீழே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?
அவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே
சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.
ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:- ஸ்ரீ கீதை, 18 : 66.

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–7-5-10-

——————–

நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: