ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ரீ திருவாறன் விளையிலே புக்கு ஹ்ருஷ்டராய் -உவகையினராய்க் கொண்டு
அடிமை செய்யும் காலமாகவற்றே?’ என்று மநோ ரதிக்கிறார் எண்ணுகிறார்.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

—————————–

ஸ்ரீ திருவாறன் விளையிலே மிக்க பரிமளத்தை -வாசனையை யுடைத்தான நீரைக் கொண்டு
திரு நீர் விட்டு வலம் வந்து கையாலே தொழவும் கூடவற்றே!’ என்கிறார்.

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

——————————–

ஸ்ரீ திருவாறன் விளையில் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறி எழுந்தருளக் கண்டாலும்,
அதனைத் தவிர்ந்து ஸ்ரீ திருவாறன் விளையைத் தொழக் கூடவற்றே?’ என்கிறார்.

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

———————–

இதில் ‘அங்குச் சென்று அனுபவிக்க வேண்டா, இங்கே இருந்து அங்குத்தைப் பரிமாற்றங்களை
மநோ ரதிக்கும் எண்ணுகின்ற எண்ணம் நமக்குக் கூடுவது காண்!’ என்கிறார்.

வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ் செந்நெலும் வயல் சூழ் திரு வாறன் விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுல கீசன் வட மதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

———————-

ஸ்ரீ திரு வாறன் விளையிலே புக்கு அடிமை செய்கைக்கு விரோதியானவை எல்லாம்
அவனுடைய மிக்க புகழைப் பாடப் பறந்து போம்’ என்கிறார்.

மலரடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பல ரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந் துறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே–7-10-5-

————————-

ஸ்ரீ எம்பெருமான் பக்கல் சாபலம் -ஆசை யுடையீர்! உங்களுடைய ஸமஸ்த எல்லாத் துக்கங்களும் போம் படி
ஸ்ரீ திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோள்,’ என்கிறார்.

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன் விளை என்னும் நீணகர மதுவே–7-10-6-

—————————-

ஸ்ரீ திருவாறன் விளையே பிராப்யம் என்னா நின்றீர்; அவன் அன்றோ பிராப்யன்?’ என்ன,
அன்று என்ன வல்லேனோ? என் சித்தாந்தம் இருக்கும்படி கேட்கலாகாதோ?’ என்கிறார்.
உபாசனத்தின் பலமாய் வருமவை யெல்லாம் பிராப்யத்திலே சேர்ந்தனவாகக் கடவன;
அன்றிக்கே,
சாத்யத்தின் விருத்திக்கு -வளர்சிக்கு உடலாய் வருமவை யெல்லாம் பலத்துக்கு உடலாகக் கடவன,’ என்னுதல்,
ஆகையாலே, பிராப்ய பூமி அந்தத் தேசமே;
அங்கே கொடு போய்ச் சேர்க்கும் கடகன் அவன்;
இது என் சிந்தாந்தம் இருக்கும்படி’ என்கிறார்.

நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன் விளை
நீணகரத் துறை கின்ற பிரான் நெடு மால் கண்ணன் விண்ணவர் கோன்
வாண புரம் புக்கு முக் கட் பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே–7-10-7-

———————–

ஸ்ரீ திருவாறன் விளையிலே புக நம்முடைய சகல -எல்லாத் துக்கங்களும் போம்,’ என்கிறார்.

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன் விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீ வினை உள்ளத்தின் சார் வல்லவே–7-10-8-

———————–

எனக்கு ஸ்ரீ வைகுண்டமும் ஸ்ரீ திரு வாறன் விளையும் இரண்டும் கிடைப்பதானால்,
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு வாறன் விளையே அமையும் என்னும் என் நெஞ்சம்’ என்கிறார்.

தீவினை உள்ளத்தின் சார் வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நா வினுள்ளும் உள்ளத் துள்ளும் அமைந்த தொழிலி னுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கால்?’ என்னு மென் சிந்தனையே–7-10-9-

———————–

இது தான் ஒரு யுக்தி -வார்த்தை மாத்திரமே யாய் உம்முடைய நெஞ்சு ஸ்ரீ பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,
அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’
என்று இங்ஙனே அருளிச் செய்வர் ஸ்ரீ ஜீயர்.
அன்றிக்கே, ‘நீர் ஸ்ரீ திரு வாறன் விளையை பிராப்யம் என்று இருக்கிறீர்; ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?
அவன் ஸ்ரீ பரம பதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் சர்வஞ்ஞன் -முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’
என்கிறார் என்று ஸ்ரீ பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் -ப்ரதன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே–7-10-10-

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: