ஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

என் பக்கல் உள்ளது அஹ்ருதயமான உக்தியாய் -மனத்தொடு படாத வார்த்தையாக இருக்க,
இதனை -ச ஹ்ருதயமாக -மனத்தொடு பட்டு வந்த வார்த்தையாகக் -கொண்டு விரும்பி,
இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான பேற்றினைச் செய்து கொடுத்தான் என்கிறார்.

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே–5-1-1-

———————————-

அஸ்தானே பய சங்கிகள் சொல்லும் வார்த்தையை நான் அஹ்ருதயமாகச் சொல்ல,
ஸ்ரீ சர்வஞ்ஞனானவன் அதனை மெய்யாகக் கொண்டு தன் விபூதியோடே கூட
நான் இட்ட வழக்கு ஆனான் என்கிறார்.

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே–5-1-2-

——————–

பொய்யே கைம்மே –உள்ளன மற்றுளவாதல்- சில சொன்னதை விவரியா -நின்று
வாக் மாத்ரத்தாலே உன்னைப் பெற்ற பின்பு உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப் படேன்-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

—————————

பொய்யே கைம்மை சொல்லி என்றும் -சில கூத்துச் சொல்ல -என்றும் –
உள்ளன மற்றுளவாப் புறமே சில மாயம் சொல்லி -என்றும் ஸ்ரீ பகவத் விஷயத்திலேயும் பொய் சொல்லிப் போந்தேன்- என்றார் –
இப்படி பொய்யன் ஆகைக்கு நிபந்தனம் எது என்று பார்த்தார் -பிரகிருதி சம்சர்க்கமாய் இருந்ததீ
மெய்யே பெற்று ஒழிந்தேன் -கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் என்ற வற்றை மறந்தார் –
இந்த பிரக்ருத சம்பந்தத்தால் இதர விஷயங்களில் ப்ரவணமான மனஸை அவற்றில் நின்றும் மீட்டி –
உன் பக்கல் பிரவணமாம் படி தேகத்தில் காட்டில் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்கைக்கு ஷமன் ஆகிறிலேன் –
நீயே என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ள வேணும் -என்கிறார்
என்று –ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
அன்றிக்கே –
கண்டு கொண்டேன் உய்ந்து ஒழிந்தேன் -என்றார் –
அது ஞான அனுசந்தான காட்சியாய் இருந்தது –
காட்சிக்கு அநந்தரம் பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து கை நீட்ட -அகப்படக் கண்டிலர் –
அத்தாலே தளர்ந்து -இதுக்கு அடி தேக சம்பந்தமாய் இருந்தது –
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாய் இருபத்தொரு சாதன அனுஷ்டான ஷமன் ஆகிறிலேன் பக்தி பாரவசயத்தாலே
ஆன பின்பு நீயே என் விரோதிகளை போக்கி உன் திருவடிகளில் அழைத்துக் கொண்டு அருள வேணும் என்கிறார் –
என்று நிர்வஹிப்பாரும் உண்டு

க்ரமத்திலே வரும் பக்தி தமக்கு உண்டாக நினைத்திரார் இறே
(அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ பட்டர் நிர்வாகம்
ஞானாதிக்யத்தாலே -பிரபன்னர் ஸ்ரீ ஆச்சார்யர்கள்
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -ஸ்ரீ ஆழ்வார்கள் -முன்புள்ள ஸ்ரீ முதலிகள் -நிர்வாகம் –
“பெற்றொழிந்தேன்”, “கண்டு கொண்டொழிந்தேன்” என்று முன்னும் பின்னும் பிரீதியாக இருக்க,
இப் பாசுரத்திலும் மேற்பாசுரத்திலும் துக்கமாயிருக்கைக்கு அடி என்? என்ன, அதற்குப் பூர்வாசாரியர்கள்
அருளிச் செய்த இருவகை நிர்வாஹங்களையும் அருளிச் செய்கிறார்)

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

————————

‘நீர் “மலினம்” என்கிறது எதனை?’ என்ன, இன்னதனை என்கிறார் இதில் –

கண்ண பிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே ஓர் உடம்பி லிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே–5-1-5-

———————

“போரவைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’
என்று பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட,
அவ் வடிவழகைக் கண்டவாறே தம்முடம்பை மறந்து பிரீதராய், கண்டு கொண்டேன் என்கிறார்.
இவரை மெய்ம் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயல் ஆழி அங்கைக் கரு மேனி அம்மான் தன்னையே–5-1-6-

—————————

அவன் கிருபையாலே தாம் பெற்ற பேற்றினைக் கண்டு விஸ்மிதராய் -ஆச்சரியத்தை அடைந்தவராய்ப்
ஸ்ரீ பகவானுடைய கிருபை நடையாடா நிற்க, சிலர்க்கு ‘நான் அயோக்யன் -தீவினையேன்’ என்று
இழக்க வேண்டா -கிடிகொள் என்கிறார்.

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே–5-1-7-

——————————-

உபய விபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல் விழுந்து என்னை விடாதே ஹ்ருதயத்திலே -மனத்திலே புகுந்திருந்தான்;
நானும், இனி ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் போலே நித்ய சம்சாரத்தை விட்டு,
அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

————————–

பல சொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
அப்ராக்ருதமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-

—————————

ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் கிருபையாலே சப்தாதி விஷய ப்ராவண்யத்தை – ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை
அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹோபகாரத்தை அனுசந்தித்த -நினைத்த
க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

————————

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் என்கிறார்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: