ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஜகத் காரணத்வ -புண்டரீகாக்ஷத்வாதி குணங்களையுடையவன் ஆஸ்ரயணீயன் ;
அவனை ஆஸ்ரயியுங்கோள் – என்கிறார்.
அன்றியே, ‘ஜகத் காரண வஸ்துவை உத்தேசித்து
அவ் வஸ்துக்கே புண்டரீகாக்ஷத்வாதிகளை விதிக்கிறார்,’ என்னுதல்

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படத் தான் பின்னும்
மொய் கொள் சோதி யோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே–3-6-1-

———————-

ஜகத் காரணத்வ புண்டரீகாக்ஷத்வாதிகளைச் சொல்லி, ஆஸ்ரயியுங்கோள் ’ என்னா நின்றீர்;
அவை ஸ்ரீ பரத்வத்துக்கு ஏகாந்தமான லக்ஷணங்கள் ஆயிற்று –
ஆன பின்பு, எங்களாலே அவனை ஆஸ்ரயிக்கப் போமோ?’ என்ன,
‘அப்படிப்பட்டவன் தானே உங்களோடு சஜாதீயனாய் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான்?
அங்கே ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–3-6-2-

———————–

கீழ் பாசுரத்திற்கூறிய ஸ்ரீ ராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே ஆஸ்ரயியுங்கோள் ,’ என்கிறார்

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை
இரவும் ந பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ–3-6-3-

————————–

அபிமான பிரசுரரான -செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும்-
தடையின்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாய் இருக்கிற சீல குணத்தைப் பேசுகிறார்

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே–3-6-4-

——————————

வாத்சல்யத்தால் எப்பொழுதும் விபூதி உடன் கூடி -ஜகதாகாரம் -பெருமைகள் குறையாமல் -அஜகத் ஸுவபாவம் –
மயில் தோகை விரித்தால் போலே சவிபூதிகனாய் –ஆண் மயில் -ஸ்ரீ புருஷோத்தமன் –
தோகை கூடியே தானே இருக்கும் விரித்தாலும் சுருங்கி இருந்தாலும் -தோற்றரவு இப்படியே இருக்கும்
அன்றிக்கே
பூதானாம் ஈஸ்வரோபிசன் -ஐஸ்வர்யம் உடனே அவதரிக்கும் -இங்கு தோற்றம் -அவதாரம்

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

—————————

இவர்களைப் போலே கேட்க இராமல் உபதேச நிரபேஷமாக ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் போலே,
நிரதிசய போக்யனான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை
உத்தேஸ்யமாக உடையேன் அல்லேன்,கால தத்வம் உள்ளதனையும் என்கிறார்.

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரையான் இலேன் எழுமைக்கும-3-6-6-

—————————

இப்படி ஸூலபனானவன் பக்கல் -துர்லபத்வ சங்கை -அரியன் என்னும் ஐயத்தை நீக்கி
அவனை ஆஸ்ரயியுங்கோள் , உங்களுடைய சர்வ துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே–3-6-7-

————————–

சம்சாரிகளுக்கும் ருசி பிறக்கைக்காக, ‘நான் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை அல்லது வேறு ஒருவரை-
ஆபத்தனமாக – ஆபத்துக்குப் பற்றுக்கோடாகப் பற்றி இரேன்,’ என்று
ஸ்வ – தம் சித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே–3-6-8-

——————————

ஸ்ரீ பரத்துவமே தொடங்கி ஸ்ரீ அவதார சௌலப்யத்தளவும் வர உபதேசித்து, ‘ஆஸ்ரயியுங்கோள் ’ என்னா நின்றீர்;
ஸ்ரீ பரத்துவம் அவாங் மனச கோசாரம் ;
ஸ்ரீ அவதாரத்துக்குப் பிற்பாடர் ஆனோம்;
நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்பது ?’ என்ன,
‘நீங்கள் விரும்பியபடியே உகந்தருளப் பண்ண, அத் திருமேனியையே அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்தோடு –
இவ்வுலக சம்பந்தமில்லாத தெய்வத் திருமேனியைப் போன்று-ஓக்க விரும்பும்
ஸ்ரீ அர்ச்சாவதாரத்தைப் ஆஸ்ரயியுங்கோள் , என்கிறார்.
இத் திருவாய்மொழிக்கு நிதானம் இப் பாசுரம்

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம் முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே–3-6-9-

———————————

தாம் உபதேசிக்கத் தொடங்கின சௌலப்யத்தை ஸ்ரீ அர்ச்சாவதாரம் பர்யந்தமாக அருளிச்செய்து,
அநந்தரம் , தன் துறையான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே போய்,
‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ!’ என்னும் –
அநவாப்தியோடே -மனக் குறைவோடே தலைக் கட்டுகிறார்.
ஆயின், ஸூலபமான ஸ்ரீ அர்ச்சாவதாரத்தை விட்டுக் காலத்தால் முற்பட்ட ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே போவான் என்?’ எனில்,
ஒரோ விஷயங்களிலே -ப்ரவணராய் -ஈடுபாடுடையவர்களாய் இருப்பவர்கள்
அருமையும் எளிமையும் பாரார்களே அன்றோ?
ஸ்ரீ பரத்துவத்துக்கு உத் கர்ஷம் உண்டாய், போவாரும் பலர் உளராய் இருந்தும்,
பாவோ நான்யத்ர கச்சதி ‘சுவாமி! எனக்குத் தேவரீரிடத்தில் மேலான பிரீதியானது நிலைத்துவிட்டது;
‘பத்தியும் எப்பொழுதும் இருக்கின்றது; சூரரே! என்னுடைய மனமானது வேறிடத்தில் செல்லுகிறதில்லை,’ என்றனே யன்றோ ஸ்ரீ திருவடி?
அப்படி, ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திற்காட்டிலும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்துக்குச் சௌலப்யம் மிக்கிருந்ததே யாகிலும்,
இவர் ‘எத்திறம்!’ என்று ஆழங்கால் பட்டது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று.
ஆயின், ‘தயரதற்கு மகன் தன்னை அன்றிமற்றிலேன்’ என்றது செய்வது என்?’ என்னில்,
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நீர்மை காணுமளவுமே இது சொல்லுகிறது.
ஆயின், ‘ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைக்காட்டிலும் நீர்மை மிக்க இடம் அன்றோ ஸ்ரீ அர்ச்சாவதாரம்?’ என்னில்,
அதற்கு முன்னரே பரிஹாரம் – சமாதானம் சொல்லிற்றே அன்றோ?

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்கரு மாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்கவே ஸ்ரீ பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: