ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

இத் திருவாய்மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார்;
‘திவ்ய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும் படியை அனுசந்திக்கப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற
ஸ்ரீ எம்பெருமானுடை கல்யாண குணங்களைப் புகழப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அகர்ம வஸ்யனான தான் கர்ம வஸ்யர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு
வந்து ரக்ஷிப்பானாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘ஸ்ரீ சர்வேஸ்வரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே
இவை பட்ட இடரைத் தானும் ஒக்க வந்துபட்டு ரக்ஷிப்பானாய் இருக்கிறபடியை
அனுசந்திக்கப் பெற்ற எனக்கு ஒரு குறைகளும் இல்லை,’ என்கிறார்
(‘இனியது விஞ்சின இடங்களில் மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனை அன்றோ?’ என்றபடி.)

(இத் திருவாய்மொழியிற் சொல்லுகிற பொருளை’ என்றது,
‘ஸ்ரீ பகவானைத் ஸ்துதி செய்தற்குத் தகுதியான உறுப்புகளை யுடையராகப் பெறுகையாலே
உண்டான உவகையராதல் ஆகிற பொருளை’ என்றபடி.
இப் பாசுரத்திற்கு நான்கு வகையில் அவதாரிகை அருளிச் செய்கிறார்.
‘சங்கொடு சக்கரம் வில் ஒண்மையுடை உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு சன்மம் பல பல செய்து வெளிப்பட்டவன்
சீர் பறவப் பெற்ற நான் ஒரு குறைவிலன்,’ என்று கொண்டு கூட்டி முதல் அவதாரிகை அருளிச் செய்கிறார்.
‘அரக்கர் அசுரரை மாளப் பொருத’ என்றதிலே நோக்காக இரண்டாவது அவதாரிகை எழுதப் படுகிறது.
‘சன்மம் பலபல செய்து வெளிப்பட்ட நன்மை யுடையவன்’ என்றதிலே நோக்காக மூன்றாவது அவதாரிகை அருளிச் செய்கிறார்;
‘நன்மை யுடையவன்’ என்றதிலே நோக்காக நான்காவது அவதாரிகை அருளிச் செய்கிறார்.)

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே–3-10-1-

———————

முதற்பாசுரத்தில் திருவவதாரங்களைச் சொன்னார்;
இப் பாசுரத்தில், ‘திருவவதாரத்துக்கு கந்தமாக – மூலமாக ஸ்ரீ திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து,
அங்கு நின்றும் ஸ்ரீ வஸூதேவ குமாரனாய் வந்து திருவவதாரம் செய்து,
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த ஸ்ரீ கிருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை,’ என்கிறார்.

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித் தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே–3-10-2-

————————

ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய போக்யதா அனுசந்தான ப்ரீதி பலாத்காரத்தாலே
அவனுக்கு அடிமை செய்கையிலே ப்ரவ்ருத்தனான இழிந்த எனக்கு
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தால் வரும் ஹிருதய துக்கம் இல்லை,’ என்கிறார்.

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூ வுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்துப்
பட்ட பின்னை இறை யாகிலும் யான் என் மனத்துப் பரிவு இலனே–3-10-3-

—————————

தேவதாந்த்ரங்களைப் பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னுமிடத்தையும்,
தன்னைப் பற்றினவர்களைத் தான் விட்டுக் கொடான் என்னுமிடத்தையும் காட்டின
இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படை யொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே–3-10-4-

———————————-

வைதிக புத்ர நயனத்தை அனுசந்தித்து ‘இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை,’ என்கிறார்

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே–3-10-5-

———————————-

இவ் வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய அப்ராக்ருத விக்கிரகத்தை, இதர சஜாதீயமாக்கி
சம்சாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்கின ஸ்ரீ கிருஷ்ணனுடைய குணங்களை அனுபவிக்கப் பெற்ற எனக்கு
ஒரு துக்க கந்தமும் இல்லை,’ என்கிறார்.

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே–3-10-7-

———————————–

ஸ்ரீ நித்ய விபூதியை அனுபவித்துக் கொண்டிருக்கிற மேன்மையை யுடையவன் ஜகத் ரக்ஷணம் பண்ணும்
நீர்மையினை அனுசந்திக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே–3-10-8-

———————

அகடிதகடநா சமர்த்தனான -ஸ்ரீ வட தள சாயியை – ஆல் இலையில் துயில்கொண்ட ஸ்ரீ அண்ணலை
அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை’ என்கிறார்.
இனி, ‘மஹாப் பிரளயத்தின் விருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் -என்னலுமாம்.

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே–3-10-9-

—————————-

ஜகத் சரீரனாய் – சத்தையையும் நோக்குமவனாய்,ஆபிமுக்கயம் பண்ணினாரை – தன்னிடத்து விருப்பம் செலுத்தினாரை-
அசாதாரண – தனக்கே உரியதான சிறப்பையுடைய- விக்ரஹத்தோடே வந்து அவதரித்து ரஷிக்குமவனைப் பற்றி
எனக்கு ஒரு கேடு இல்லை,’ என்கிறார்.

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம் புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே–3-10-10-

———————————

நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,
மேலே ஸ்ரீ பரம பதத்திலே சென்றால்-தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: