ஸ்ரீ திருவாய் மொழி நாலாம் பத்தில் –மூன்றாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி, ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் தொடக்கமானார் உனக்குத் தேவிமார்களாய் இருக்க.
நீ அவர்கள் பக்கலிலே இருக்கும் இருப்பை என் பக்கலிலே இருக்கும்படி என்-சத்தையே – இருப்பே
உனக்கு எல்லாமாய் விட்டது,’ என்கிறார் ஆதல்;
அன்றிக்கே,
‘ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் இடங்களில் அந்த அந்தச் சமயங்களில் வந்து முகங்காட்டி
அடிமை செய்யப் பெற்றிலேன் நான்; இங்ஙனே இருக்கவும்,
என் ஹிருதயத்தையே – மனத்தினையே – போக்ய பொருளாகக் கொள்வதே!’ என்கிறார் ஆதல்.

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே–4-3-1-

——————

என்னுடைய கரண -உறுப்புகளின் காரியங்களான-ஸ்ம்ருதாதிகள் – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் –
பரிபூர்ணனானவனுக்கு நிறைவுற்று விளங்கும் அவனுக்கு-
போக உபகரணங்கள் – இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின- என்கிறார்.

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசககம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேச மான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே–4-3-2-

————————–

இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக்கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

—————————-

பூதநாதிகளுடைய நிரசன சமயத்தில் ஸ்ரமம் தீர சிசிர உபசாரங்களைச் செய்யப் பெற்றிலேனே யாகிலும்,
சிசிர- குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய ஸூகுமாரமான -மிருதுத் தன்மையை யுடைய
திரு மேனிக்குச் சாத்தும் மாலை என் சத்தையேயாய் -உயிரேயாய்-விடுவதே!’ என்கிறார்

மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத் தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே–4-3-4-

—————————

தம்முடைய ஸ்நேஹாதிகள் –அன்பு முதலானவைகள் ஓர் ஒன்றே ஆபரணங்கள் முதலான
எல்லாப் பரிச்சதங்களும் ஆயிற்று அவனுக்கு என்கிறார்-

கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூ வுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே–4-3-5-

————————–

இப்படிக் காதலை உடையையாய் -பிரணயியாய் -இருந்துள்ள நீ என்னைக் கிட்டாதே ஒழிந்தாயே யாகிலும்,
உன் -சத்தையே -திருவடிகளே எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார்.
‘உனக்கு நான் உதவப் பெற்றிலேனாகிலும், என் சத்தை -உயிர் முதலானவைகள் உனக்குத் தாரகம் முதலானவைகள் ஆனால் போலே,
நீ வாராயாகிலும் உன் சத்தை -திருவடிகள் எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார்.
அவனுடைய பிரணயித்வம்- காதலைச் சொல்லா நிற்க,
நடுவே தம்முடைய பிரணயித்வம்- காதலைச் சொல்லுவான் என்?’ என்னில்,
இருவர்-இரண்டு சேதனர் – கூடிக் கலவா நின்றால் பிறக்கும் ரசங்களும் இருவருக்கும் உண்டாய் இருக்குமே யன்றோ?
அவற்றுள், கீழ் எல்லாம் அவனுடைய பிரணயித்வத்தை -காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்;
இப்போது அவனுடைய -பிரணயித்வ அதிசயம் -காதலின் மிகுதி- தம்மையும் காதலன் ஆக்கிற்று
என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே–4-3-6-

—————————

கீழ்ச் சொன்ன ப்ரேமமும் தத் அனுகூலமான வ்ருத்திகளும் இன்றிக்கே இருக்கிலும்
என் சத்தையே உனக்கு ஜீவனத்திற்கு ஹேது ஆவதே!’ என்கிறார்.

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே–4-3-7-

————————-

ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே–4-3-8-

————————

அனுபூதமானது -அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன,
உன் பிரணயித்வ பிரகர்ஷம் -கரை இல்லாத காதல் – என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்–4-3-9-

————————-

நானும், ஸமஸ்த உலகங்களும், ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஒரு மிடற்றினராய் ஏத்தினாலும்
ஏத்தப் போகாத விஷயத்தை என் செல்லாமையாலே ஏத்தினேன்,’ என்கிறார்.

யானும் ஏத்தி, ஏழ் உலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுது மாகித் தித்திப்ப,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,யான் உய்வானே–4-3-10-

————————

நிகமத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் இட்ட வழக்கு,’ என்கிறார் .

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-

—————————–

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: