நம் பூர்வர்கள் உகந்த ஸ்ரீ அருளிச் செயல்கள் பாசுரங்கள்–

ஸ்ரீ பெரிய முதலியார் -ஆளவந்தார் –
ப்ராப்ய சித்தியில் த்வரையாலே -பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை பெரிய முதலியார் திருவாய் மொழி –

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2-

எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும் கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

தேசாந்தரம் -வேறு தேசத்துக்கு சென்று இருந்த பிரஜை -குழந்தை ஊர் அணித்தவாறே
தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-ப்ராப்ய தேசம் – அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–9-8-8-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன் மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ ––9-8-9-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத் திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

———————

உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ-உன்னோடு சம்பந்தித்த ஸ்ரீ திருமலை யாழ்வார்
தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு என்கிறார் –
பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் ஸ்ரீ திருமலை என்று இப் பாட்டை ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தித்த
தேசமே எல்லா நன்மையையும் கொடுப்பதாக இருக்க -என்கிறது –

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய ஸ்ரீ திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் —முதல் திருவந்தாதி-பாசுரம் -76 –

———————–

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில்
இன் அடிசில் வைப்பாரை நாடாயே,திருவாய் மொழி -1-4-8-’ என்றாராம்-

———————————-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–ஸ்ரீ பெரிய திருமொழி 3-6-1-பிரவேசம் –

ஸ்ரீ நஞ்சீயர் உடைய நோவிலே ஸ்ரீ பெற்றி அறியப் புகுந்து இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும் ஸ்ரீ பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று அருளிச் செய்து அருளினார் –
அப்போதே ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு பாட்டுக் கேட்டு அருளா நிற்க
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால் பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –

———————

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

ஸ்ரீ அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் அறிய எழுந்து அருளினவர் அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும் பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

————————

மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

ஆசார்ய ஹிருதயம் ஸ்வாபதேசம் -ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வ தந்த்ரர்
ஸ்ரீ பொன்னாச்சி நாச்சியார் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள –
பிரிவாற்றாமை பாசுரங்கள் அனுசந்தித்து இப்பாசுரம்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே -என்னவே
ஸ்ரீ பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கிப் போயிற்று – ஐதிஹ்யம்-

————————————–

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே––ஸ்ரீ நாச்சியார் திருமொழி -10-8-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே -மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் -அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து -கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்

——————-

ஸ்ரீ பராங்குச துவாதச அக்ஷரீ -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
சாரஞ்ஞர்-நிவ்ருத்தி பரர் -விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கரையும் வீட்டுக் கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்
சாஸ்திரிகள் பிரவத்தக பரர்-தெப்பக்கரையர் போலே இரண்டையும் இடுக்கிப் பிறவிக்கடலை நீந்துவர்
வாழும் சாம்பார் -உபாயமாக எத்தையும் பண்ணாமல் கைங்கர்யமாக எல்லாம் பண்ணுவார் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூர்ணிகை -1-
தாழும் சோம்பர்-கைங்கர்யம் செய்யாதவர்கள்

———————–

அத்வேஷி /ஆனு கூலர் / திரு நாம தாரிகள் /சக்கராங்கன பரர்/மந்த்ரபாடி /வைஷ்ணவர்கள் /ஸ்ரீ வைஷ்ணவர்கள் /
பிரபன்னர்கள் /ஏகாந்திகள் /பரமைகாந்திகள் -இப்படி தசவிதம்
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்

கூறுகேன் உலகோரே குங்குமத தோள் அரங்கேசர்
மாறன் மறைப்பொருள் கேட்க மணவாள மா முனியை
ஏறு மணை தனில் இருத்தி இரு நிலத்திற்றாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரை மலர்த் தாளிணை போற்றி —

பதியுடன் கூடிய ஸ்த்ரீ போலே பிரபன்னர்கள் மொட்டை அடித்துக் கொள்ளாமல் கேசத்துடனே இருக்க வேண்டும்

——————

ஒன்பதாம் பத்து -ஐந்தாம் திருவாய் மொழி -இன்னுயிர் -பிரவேசம் –

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்
தம்முடைய பிராண ரக்ஷணத்துக்கு -உயிரைப் பாது காப்பதற்காக பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய ஸ்ரீ கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே-பாஹ்ய சம்ஸ்லேஷத்தில் –
புறத்திலே காண வேண்டும் என்னும் அபேக்ஷை -ஆசை பிறந்தது
இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் ஸ்ரீ ஈஸ்வரன் –
நினைத்த போதே அபேக்ஷிதம் -விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்
தளர்ந்தவர் லௌகிக – உலகப் பொருள்களில் கண் வைத்தார் –
பரம விரக்தராய் இருக்கிற இவர் லௌகிக -உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –

லௌகிக -உலகப் பொருள்களை நினைக்கும் அனுசந்தானத்தாலே -நினைவாலே ஹ்ருதயத்தை அந்ய பரமாக்கி –
மனத்தினை வேறு ஒன்றினில்செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –
அன்றிக்கே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்
அவை ஆஸ்வாஸ ஹேது – தரிப்புக்கு காரணம் ஆகாமல்-ஸ்மாரகமாய்
அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய்–பாதகமாய் – துன்பினைத் தரப் புக்கன –
யாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் ஸத்பாவம் -உளதாம் தன்மை அவனை ஒழிய இல்லாமையாலே
அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –

ஆக
உலகப் பொருள்கள் ஸ்மாரகமாய் -அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
அவற்றால் நோவு படுகிறபடியை அந்யாபதேசத்தால் பேசுகிறார் –
ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டி -தன் ஆற்றாமையாலே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று அவ் வாற்றாமை கை கொடுக்க
உபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –
அங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை
அவனுடைய பேச்சினையும் வடிவினையும் ஸ்மாரகமாய் -நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
இவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை-இவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்
அது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –
அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து–பிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –
கலந்து நம்மைப் பிரிந்தான் –
பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –

பிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்-நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று
பார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு
உங்களுக்கு நினைவு இதுவாகில் இப் பாரிப்பு எல்லாம் வேண்டுமோ என்று அவற்றைப் பார்த்து கூறி
நம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது
அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று
அவனுடைய கல்யாண குண ஞானத்தால் -குணங்களை ஏத்துகையாலே வருந்தி தரித்து
தலைக் கட்டுகிறதாய் இருக்கிறது –

இது ஸ்ரீ எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்வர்-

—————

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26

வந்தித்து –
அவனை வந்தித்து -அபிமதமான ஸூ ந்யராய் அவனை ஆஸ்ரயித்து-
அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு விரோதிகளாய்க் லொண்டு வழி நின்ற நடுவே நின்று தகைக்கிற ஸ்ரோத்ராதி விஷயங்களில்
போகாத படி உபசயாத்மகமுமாய் அஸ்திரமான தேஹத்துக்கு உள்ளேயாம் படி நியமித்து –
ஐம்பூதம் ஐந்தும் –
பூதங்களையும் இந்த்ரியங்களையும் ஜெயித்து –
ஆர்வமாய் –
அவன் பக்கலிலே அபி நிவேசத்தை யுடையராய்
உந்திப்படி யமரர் வேலையான் –
அஹமஹமிகயா ஒருவருக்கு ஒருவர் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் –
பண்டு அமரர்க்கு ஈந்த –
பழையரான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குக் கொடுத்து -என்னுதல்
முன்பு அவர்களுக்கு கொடுத்தது -என்னுதல்
கீழ் ஆஸ்ரயித்தவர்களுக்கு-
படி யமரர் வாழும் பதி –
பூ ஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற ஸ்ரீ திரு மலை –-அவர்கள் அனுபவித்து வாழுகிற ஸ்ரீ திருமலை
வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் வந்தித்து உந்திப் படியமரர் வேலையான்
படியமரர் வாழும் பதி கிடீர் -பண்டு அமரர்க்கு ஈந்தது -என்று அந்வயம்-
இது ஸ்ரீ பிள்ளை அமுதனார்க்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த பாட்டு-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய முதலியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: