ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -பதினொன்றாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-

பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் –
ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று –
இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது –என்கிறார் முதல் பாசுரத்தில்

தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் –
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில் –

ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற
தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் –
இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே
அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை
வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது –
மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது –
ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ
இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் –
நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் –
ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர –
சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய
புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே
ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே –
அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –
மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே
இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் –
அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே
இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே
நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————–

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்
அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள் முதல் பாசுரத்தில்

இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று
ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை –
சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே –
வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற
வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –
கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –
அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –
ஓர் அபலை இதுக்கு கடகிடவோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது –
அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது –
பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும்–என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று –
சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே
அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம் –

கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது –
கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் –
தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம்
அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –
அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –
இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று
நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –
இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவன் செய்யக் கடவற்றை நாமும் செய்தால் அவன் தொழுமத்தை-நீ கொள்ள வேணும் என்று
என்னை இசைவிக்கைக்கு நீ படும் பாடு அறிதியே –
பிரணயிநி உடைய ஏற்றத்தோடு இருந்து பெறுமது தவிர்ந்தாலும் பக்திமான்கள் பெரும் பேறு பெறத் தட்டில்லையே –
முந்துற -பக்த்யா தவன் அன்யயா சக்ய-என்றானே-நமே மோகம் வசோ பவேத் -என்றும் உண்டே – அவன் பக்கலிலே –
ஸ்ரமஹரமான வடிவை உடையவரைக் காண வேணும் என்று விடாய்த்து பட்டினி விடுகிற கண்களால் காணலாம் ஆகில்
ஒரு முறை பார்த்து இருக்கிறது தான் என் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே
ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் –
வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் –
பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற
இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் –
தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் –
எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே
என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –
தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து
அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –
உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று
இருக்க மாட்டுகிறிலர்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை
அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே
உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால்
பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –
கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில்
வைத்து இன்பம் உற்றார் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இனி ஒரு ஸ்த்ரீத்வம் உண்டோ அது கிடக்க கிடீர் -யென்று அத்தை உபேஷித்து
அவன் நித்ய வாஸம் ஸ்வாமி ஸ்தானமான ஸ்ரீ திரு மலையையும் ஸ்ரீ கோயிலையும் பாடுதுமே –
அந்த உபேஷா கார்யம் இருக்கிறபடி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நாம சஹஸ்ரவானவனை அவனுடைய திரு நாமத்தை ஸ்மரியா நின்று கொண்டு
அவன் சாத்திக் கழிக்கையினாலே சூடப் படுவதான திருத் துழாயை நாம் சிரஸா வஹியோமோ –
இப்படி சூடி நாம் அவனைக் கிட்டுகையில் ஒரு தட்டுண்டோ –
கூடக் குறிப்பாகில்-அவனுக்கு திரு உள்ளம் உண்டாகில் –நமக்கு ருசி உண்டாகில் – என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

சம்சார விபூதிக்கு ஆபரணமாய் இருக்கிற ஸ்ரீ திரு வாலியைத் தொழுது –
அநாதி காலம் சேர்ந்து இருந்துள்ள வல்வினைகள் போம்படிக்கு ஈடாக ஸ்ரமஹரமான வடிவை உடைய வனுடைய –
ஸ்ப்ருஹநீயமான திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களை அணியப் பெற்றோம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு
அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-

தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை –
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு
அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ –
என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய
ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி –
அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன்
வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே-
இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் –
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும்
அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும்
பெரும் புகழை உடையவர் –
சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய்
இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின –
இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே
இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே
ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் –
ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன்
நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம் -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள்
ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் –
பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் –
இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால்
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –
அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –
கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும்
அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும்
ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி –
மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –
சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –
இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு
அபரிச்சின்னனாய் இருக்கும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் –
இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை
வயிற்றிலே வைத்து ரஷிததான் காண் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண்
திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி
ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்
அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1-

தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று
உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் –
அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள்
என்கிறார் முதல் பாசுரத்தில்-

இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-
லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள்
க்ரௌர்யம் இருந்த படி என் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள
ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க –
அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் –
அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன்
ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது –
இனிது என்கை- –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய்
மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பாட்டுக்கு இதையே பொருள்
திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –
இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து –
தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

———————–

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-

அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் –
இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே –
பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு –
ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –
இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –
கேட்டோமே –ஷேபம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார்
இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் –
மூன்றாம் பாசுரத்தில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் –
அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம் –

சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய்
பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு –
சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் –
காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி –
சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை –
தமச பரம -இத்யாதி –
கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள்
அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் –
தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால்
ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே-
இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –
நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் –
பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் –
என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –
அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –
மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு –
தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை –
இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே
சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி-
முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு –
உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன –
அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது –
அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் –
ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு –
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
என்கிறார் முதல் பாசுரத்தில்
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது-
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
வார்த்தையை நினைப்பது-

பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே
பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே
அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது –
மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு –
ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ –
உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது
அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –
இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்
இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே
அநந்தரம் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே
இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று
அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் –
இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை
இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி –
இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று
ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி –
பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் –
அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இப்பாட்டில் அருளிச் செய்யும் போது
இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் –
நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் –
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று –
உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி –
உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி –
நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து
உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி –
பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும்
உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு
நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே
நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண
வாயிற்று ஆசைப் படுகிறது –
ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று –

பிதா ராஜ்யம் பண்ணி சுகித்துப் போரா நிற்க புத்ரனாவான் தரித்ரனாய் இருக்குமா போலே
அவனுடைய நைரபேஷத்தையும்-தம்முடைய தய நீய தசையையும் அனுசந்தித்து ஐயோ -என்கிறார் –
தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே கொள்வார் தேட்டமாய் புறம்பு வழிந்து போம்படியான
உன்னருளைப் பண்ண வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் –
இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும்
சொல்ல வல்லவர்களுக்கு –
பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று
ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து
பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான
பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: