ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -பத்தாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

இதுக்கு முன்பு சம்சாரத்தில் இருக்கும் படி-இனி ஸ்ரீ பரமபத பிராப்தி இருக்கும்படி சொல்லுகிறது
இங்கே அர்த்த புருஷார்த்தம் தந்து விடுகை அன்றிக்கே சரீர சமனந்தரம் வரக் கடவதாய்-
ஆத்மானுபவம் அன்றிக்கே-இவ்வாத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யமுமாய் –ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள ஸ்வரூப ஆவிர்பாவம் –
இன்று அது காண்பதும் காணக் கடவதும் இவ்வோ இடங்களாய் இருக்கை –என்கிறார் முதல் பாசுரத்தில்

அழகு மிக்கு ஏக ரூபமான மின் போலே உஜ்ஜ்வலனானவனை ஸ்ரீ திருமலை உச்சியின் மேலே கண்டு –
இன்று போய் என்னை அடிமையாக உடையவனாய்-எனக்கு நியந்தாவாய் –எனக்கு உபாகாரகனுமாய் -ஆனவனை –
நாம் சென்று ஸ்ரீ திருத் தண் காவிலே காணக் கடவோம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஐஸ்வர்ய சூசகமாய் அழகிதான திருத் துழாயை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – ஸ்ரீ திரு வாலியிலே கண்டு உகந்து போய் –
ஜகத்துக்கு உத்தேயன் ஆனவனை –வரையாதே இன்னார் என்னாமல் ஆஸ்ரயிக்கும் படி இருக்கிறவனை ஸ்ரீ திரு நாங்கூரிலே
காணக் கடவோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஜ்வலந்தம் -என்கிறபடியே ஏக ரூபமான ஒளியை உடையனாய் ஹிரண்யன் உடலைப் பிளக்க வல்ல சர்வ சக்தியை
ஸ்ரீ திருப் பேரிலே வணங்கி-போய் –அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய் அத்தை அயர்வறும் அமரர்களுக்கு
அனுபவிக்கக் கொடுத்து அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர்
அருளாய் இருக்கிறவனை ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அனுபவித்த கிலேசத்தை தவிர்த்தவனை –ஸ்ரீ திரு நறையூரிலே கண்டு –என் சரீரத்துக்கு உள்ளே புகுந்து
நெஞ்சை உருக்கி உண்கிற வித்தகனை ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம்
விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனைச் சொல்லுகிறது
இப்பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன்னைக் கொடுக்குமா போலே எனக்குத் தன்னைத் தந்த உபகாரகனை –
தேன் போலே ரஸ்யன் ஆனவனை –நீண்ட வயலை உடைய ஸ்ரீ திருச் சேறையிலே கண்டு –
குவலயா பீடத்தை கொன்று ப்ரஹ்மாதிகளுக்கு குடி இருப்பு கொடுத்து அவர்களுக்கு தானே சேஷி என்னும் இடத்தை
பிரகாசிப்பித்தவனை-யான் ஸ்ரீ திருக் குடந்தையில் சென்று காண்டுமே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ கோவலனாய் வெண்ணெய் அமுது செய்து வர்த்திக்கிறவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டு உகந்து
ஸ்ரீ திருப் பாற் கடலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர ஆதரித்த
சர்வ ரஷகனானவனை – கண் வளரக் காணலாவது ஸ்ரீ திரு வெக்கா உள்ளே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –ஸ்ரீ தெற்கு திருமலையிலே கண்டு போய் –
முத்து போலே உடம்பிலே அணைந்தால் விடாய் கெடும்படி குளிர்ந்து இருக்குமவனை
நீல மணி போலே கண்ணுக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கை
பெரு விலையனான மாணிக்கம் போலே –தர்ச நீயமாய் இருக்கும் வடிவு அழகு அன்றிக்கே
இதுக்கு எல்லாம் சர்வ காரண பூதனாய் இருக்குமவனை ஸ்ரீ திரு விண்ணகர் காண்டுமே –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நித்ய வசந்தமாய் தழைத்த பொழிலை உடைய ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய்-
எல்லா தசைகளிலும் இவ்வாத்மாவுக்கு தஞ்சமானவனை தன்னை விஸ்வசித்தார் உகக்கும்
ஸ்ரீ திரு நாவாயிலே காண்டும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் –
பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ
இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் –
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய்
அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ –
நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே –
அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு
அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே –
ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே –
என்கிறார் முதல் பாசுரத்தில்

எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –
எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்-
நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே-
எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் –
பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ –
எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே
ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்-
ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய
ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள்
வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள்
பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –
இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –என்கிறார் முதல் பாசுரத்தில்

தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –
உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் –பத்தாம் பாசுரத்தில்
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

———————–

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன்
சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன்
-திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –
ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே
துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை
உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் – நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்-
இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் –
அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –
ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –
வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய் –என்கிறார் பதினொன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –
என்கிறார் பன்னிரண்டாம் பாசுரத்தில்

உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –
வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –
என்கிறார் பதிமூன்றாம் பாசுரத்தில்

இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -–என்கிறார் பதினான்காம் பாசுரத்தில்

————————

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-

காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே –
இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ –
கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே
கிட்டி வர மாட்டுகிறிலன்-
ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ –
காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது –என்கிறார் முதல் பாசுரத்தில்

பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ –
கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார்
அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ –
பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ –
கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ –
பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது – பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ –
இடம் அறிந்து அன்றோ வருவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ
உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் –
உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் –
இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் –
மேன்மை உடையார் வரக் கடவதோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும்
ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே
இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-

இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டு நீர் காதலிக்கக் கடவ இத்தை அன்றோ
இவள் காதலிக்கிறது –பிராப்த விஷயத்தில் காதல் அன்றோ -என்று இராதே
இத்தைப் பழியாக சொல்லுகிற ஊரில் ஸ்திரீகள் உடைய துணிவையும் புத்தி பண்ணாதே –
பாலராய் இருப்பார் கையில் அது நினைத்த போது வாங்குகிறோம் -என்று
இருக்கிறாப் போலே ஆறி இருக்கிறாயோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன் –
அவ்வதாரத்தில் இழந்தாருக்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிறவனே-
ரஷகத்வத்தில் முற்பாடனாய் இருக்கும் நீ-உன்னுடைய ரஷகத்வமும் போராத படியான த்வரை உடைய இவளை –
கையும் வளையுமான சேர்த்தி கண்டு கொண்டாடும் நீயே-அனுபவித்து விடப் புக்காயோ-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை
பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-
பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு –
சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி
உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை –
இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் –
பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே
அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் –
எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –
வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும்
அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே-
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று –
யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி –
அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை –
என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் –
ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை –
ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள் –முதல் பாசுரத்தில்

சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு
பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை –
ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –
வரக் கூவாய் பூங்குயிலே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் –
ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று –
தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை –
பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் –
வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை –
சொல்லாய் பைங்கிளியே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஆறாம் பாசுரத்துக்குப் பொருளாக ஜீயர் அருளிச் செய்தாராக பிள்ளை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ கிருஷ்ணன் கோழி கூவினவாறே வருமாய்-மீண்டு கோழி கூவினவாறே போமாய் –
வரவை ஸூசிப்பிக்கிற கோழி கூவா நின்றது –
பிரிவில் தரிக்க ஒண்ணாத படி கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவர் வரும் காலம் ஆயிற்று –
மீண்டு கோழி கூவப் போவர்–நடுவு சம்ஸ்லேஷத்துக்கு காலம் இல்லை-நான் என் செய்கேன் -என்கிறாள் -என்று
ஸ்ரீ கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக் கொண்டு வரும் போலே காணும் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் –

இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா –
அவன் வடிவு தானே இறே ப்ரேரகம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே

ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப –
தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் –
இங்கே போதுங்கொலோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய –
ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பத்தாம் பாசுரத்தில் பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: