ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -ஒன்பதாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் –
மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு
அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை –
ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-

——————

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் –
அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –
ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்
கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது –
தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது –
உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –
இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட
மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மேன்மையைப் பார்த்த வாறே ஸ்ரீ நித்ய சூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்
மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம் என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை
வடிவு அழகைப் பார்த்தவாறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும்
இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது
பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே
அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –
இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –

அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் -போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது –-இவள் பேதை யாயிற்று –
இவன் தான் முக்த கண்ட மாய் பிரியேன் என்றாலும் அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள்
பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை போனதும் மிகை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது
உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை-நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை
அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும்
அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி ––என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் –
மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –
எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ இளைய பெருமாள் ஒரு கையாலே சத்ரத்தையும் மற்று ஒரு கையாலே சாமரங்களையும் பிடித்து பரிமாறும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி ஆண்ட பரப்பில் அதுக்கு ஓர் ஆள் இல்லாமையால் அன்று இறே
அடிமையில் கலித்தனம் -பசியனாய் – இருக்கிறபடி –
பிரியமாகாத வன்று இவனுக்கு இது பிராப்யம் ஆகாது இறே
இவன் அவனுக்கு உகப்புச் செய்தால் இறே ஸ்வரூபம் சித்தி யாவது
ப்ரஹர்ஷயிஷ்யாமி-இலே இறே இவன் தனக்கு அந்வயம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

முறை உணர்ந்து திருவடிகளிலே விழுகைக்கு அவசரம் இல்லை
பிராப்யம் என்று இருக்கை தவிர்ந்து-ப்ராபகத்வ புத்தி பண்ணுவோம் –
சாதன விச்சேதத்தில் பல விச்சேதம் வரும் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –
இனி அத்தலைக்கு நன்மை பார்க்குமது எல்லாம் தவிர்ந்து நமக்கே நன்மை பார்க்கும் இத்தனை –
இதுக்கு முன்பு நம் இழவுகளும் பாராதே-அவனுக்கே நன்மை பார்த்து போவோம் இறே –
ஒன்றும் தாரேன் -என்று இவன் பிரதிஞ்ஞை பண்ணி இருந்தாலும்
பக்திலப்பயன் என்கிற வசனத்தை மாற்ற ஒண்ணாதே –
எல்லாம் செய்தாலும் அவன் ஆசனத்தை கிளப்பும் போது நம் ஆற்றாமை வேணும் காண் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

இவளுடைய பாரவச்யம் கண்டு-தன் இழந்து இவள் வியாபாரிக்க வேண்டும்படியாய் யாயிற்று அவள் இருக்கிறது
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் – திருவாய் மொழி –
நாம மாத்ரமே காணும் உள்ளது-நாயகன் பிரிந்ததுக்கு நோவு படும் இத்தனையே இவளுக்கு உள்ளது
இவள் ஆற்றாமைக்கும் -அவன் வாராமைக்கும் -இரண்டுக்கும் நோவு பட வேணுமே அவளுக்கு
இது ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது காணும் –
பிரிந்த நிலத்திலே இருக்க ஒண்ணாது ஒழிவதே-பிராப்ய தேசத்திலே புக ஒண்ணாது ஒழிவது
உசாத் துணை இன்றிக்கே ஒழிவதான தசை இறே நமக்கு-இழவில் வந்தால் இருவருக்கும் ஒத்து இருக்கும் இறே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்-இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாக பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள் முதல் பாசுரத்தில்

இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு-உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
இவை தூது போக சமைந்தால் போலே யாய்த்து அவன் கிட்ட வந்து இருக்கிறபடியும் –
அன்னமாய் –தூது போகிற உங்களுக்கு அஞ்ச வேண்டா சஜாதீயராய் இருப்பார் –
இதனை –தன் தசை தன்னைப் பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது போலே காணும்
செப்புமினே –செப்பிக் கொடு வர வேண்டா – அறிவித்து விட அமையும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருத்தி உடைய சிந்தா வ்யதையைப் போக்க என்றே வில் பிடித்தவர்க்கு என்னுடைய் சிந்தாவ்யதையும் அறிவியுங்கோள்-
என் சிந்தை நோய் – அவள் அத்தனை க்ரம பிராப்தி பொறுத்து இருக்குமவள் அன்று இறே-இவள் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நாட்டிலே பொய் மெய்கள் கொண்டு கார்யம் உண்டோ-அவன் பொய் ஆகையாலே அன்றோ எனக்கு ஆகர்கஷமுமாய் இருக்கிறது –
ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவன் உடைய பொய்யே – அவனுடைய பொய்யைக் கேட்டு அத்தாலே தரித்து இருந்தேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தன்னோட்டை சம்ச்லேஷத்தாலே-நிறமும் இரட்டித்து தன் பக்கல் உள்ள ஆபரணங்களும்
என் பக்கலிலே யாக வேணும் என்று ஆசைப் பட்டு-பரிசை ஆசைப் பட்டு முதலை இழப்பாரை போலே
முன்பு உள்ளவற்றையும் இழந்து விட்டேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே –
வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்

—————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

இவள் ஒரு அபலை அன்றோ-இதுக்கு எல்லாம் இவள் ஆடல் கொடுக்க வல்லளோ -என்று
நம் பக்கலிலே கிருபை பண்ணுகிறிலன்-
அன்றிக்கே-தம்மை பிரிந்து பத்து மாசம் ஜீவித்து இருந்தவளோ பாதியாக நினைத்தி இரா நின்றார் –
வடிவைக் காட்டி கண்டது அடைய பகையாம்படி பண்ணி பொகட்டுப் போன இவ்விடம் போல அன்றிக்கே
இவை தான் அனுகூலமாம்படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்திலே கொடு பொய் பொகடுங்கள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –
அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம் விஷயம் அன்றிக்கே
பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை
மநோஹாரி சேஷ்டிதங்களாலே எழுதிக் கொண்டு இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –
அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பத்தாம் பாசுரத்தில் -அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி
திரு வநந்த வாழ்வான் மேலே ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கண் வளர்ந்து அருளுகிற –
இதுதான் ஸ்வயம் பிரயோஜநார்தம் அன்றிக்கே
ஆஸ்ரித அர்த்தம் ஆகையாலே வந்த சுத்தியை உடைத்தவன் வர்த்திக்கிற ஊர் போலே –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார்
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

ஸ்த்ரீகளோட்டை சம்ஸ்லேஷத்தை நன்று என்று அது குவாலாக நினைத்து இருக்கும் அத்தை விட்டு –
ஸ்ரீ திருமலையை வணங்குவோம் வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த
ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள
திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ –
என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் –
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள்
அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

இனிய நகையையும் சிவந்த அதரத்தையும் உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய் அத்தாலே ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு இனியன் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றம் பொறுப்பிப்பாள் ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எனக்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி தன் அழகைக் காட்டி பிரளய ஆபத்தில் ஜகத்தை உண்டு
ஆபத் சகனாய் உமிழ்ந்தவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்கிறபடியே
அவளோடு ஒக்க இவனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்தவன் ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூ மாலையோடு கூடின ஆதி ராஜ்ய சூசகமான ஸ்ரீ திரு அபிஷேகத்தை உடையவனாய் ஸ்ரீ சர்வாதிகனாய்
பூமி எல்லாம் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –
ஜம்பூத் வீபத்தில் ராஜாக்கள் வந்து ஆஸ்ரயிக்க- ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சந்நிதி பண்ணுகிறது இங்கே -என்று
ப்ரஹ்மாதிகள் வந்து ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே-
பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை அடிமை கொள்ள விரும்பி அயர்வறும் அமரர்கள் அதிபதி யான மேன்மையைப் பாராதே
சம்சாரத்திலே என்னுள்ளே புகுந்தான் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயரான அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யானவன் –
இங்கே வந்து வர்த்திக்கிறான் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார் –
பத்தாம் பாசுரத்தில்

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: