ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -எட்டாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1 பிரவேசம் –

கீழ்த் திரு மொழியில்-தன்னுடைய படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்க அனுபவித்து –
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –அது கிடையாத படியாலே ஒரு பிராட்டி தசையைப் பஜிதது-
பிராட்டி உடைய -அவஸ்தையைப் பார்த்த திருத் தாயார் –
தன் பெண் பிள்ளை உடைய பாசுரம் இருக்கிற படியாலும் –
தன் பக்கல் விரக்தியாலும் –
ஆசைப் பட்ட விஷயத்தில் பிரேமத்தாலும் –
பிரிந்த விஷயத்தின் வைலஷண்ய குணங்கள் எவ்வளவாக உடைத்தாய் இருக்கும் –
அவற்றிலே கால் தாழ்ந்தமை தோற்ற அவனுடைய
சௌந்தர்யாதிகளையும் –சீலாதிகளையும் –ஆண் பிள்ளைத் தனத்தையும் – வாய் வெருவா நின்றாள் –

என் ஹித வசனமும் கேடகிறிலள்-தன் ஸ்த்ரீத்வமும் பார்கிறிலள் –அவன் ஸ்வரூபமும் பார்கிறிலள் —
அது தானும்-பரத்வத்தில் ஆதல்-விபவத்தில் ஆதல் அன்றிக்கே
அவ்விடங்கள் எல்லா வற்றிலும் சொல்லுகிற ஏற்றங்கள் எல்லாவற்றையும்
உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே புக்கு
அங்கே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சௌரி ராஜ பெருமாளை சாஷாத் கரித்து
அந்நீர்மையிலே அகப்பட்டாள் போலே இரா நின்றது என்று வினவ வந்தவர்களைக் குறித்துச் சொல்லுகிற
பாசுரமாய் இருக்கிறது –

சில ஆசார்யர்கள் பக்கலிலே சென்று-சில அர்த்தங்களைக் கேட்டு
சரீர பேதத்தளவு அன்றிக்கே -ஜீவர்களுக்கும் பரஸ்பர பேதம் உண்டு என்று அறிந்த ஏக தேச ஜ்ஞான மாத்ரத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகத் வைசித்ரி இருந்தபடி என் -என்று கொண்டு ஆச்சர்யப் பட்டு
எல்லாம் அறிந்தான் போலே பூர்ணனாய்
ஸ்வேதகேது வானவன் பிதாவின் அருகே வந்து இருக்க -பிதா -உத்தாலகன்-பிதா மகன் -அருணன் –
பிதாவும் இவன் வடிவில் வேறுபாடு கண்டு
ஜ்ஞாதவ்யாம்சம் இன்னம் அநேகம் உண்டாய் இருக்க எல்லாம் அறிந்தாரைப் போலே இரா நின்றான் –
அவற்றையும் இவனுக்கு அறிவிக்க வேணும் என்று பார்த்து
ஸ்தப்தோசி-பரி பூர்ணனைப் போலே எல்லாம் அறிந்தாயாய் இரா நின்றாய்
தமாதேசமப்ராஷ்ய பரிபூர்ண இவ லஷ்யசே -இந்த ஆதேசத்தைக் கேட்டாயோ/ ஆதேச -பிரசாசனம்
பிரசாசிதாரம் சர்வேஷாம் -என்று ஒன்றை அறியவே எல்லா வற்றையும் அறிந்ததாய்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் நியமிக்கக் கடவ ஸ்ரீ சர்வேச்வரனையும் அறிந்தாயோ நீ -என்ன
கோன்வாதேச -ஆதேசம் ஆவது என் என்ன-அவன் வேதத்தில் பூர்வ பாகத்தில் சிலவற்றை ஆதல்
ந்யாயாதிகளில் சிலவற்றை யாதல் -கேட்ட அளவாய்-வேதாந்த ஜ்ஞானம் இன்றிக்கே ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒருவனைக் கொண்டு
குலாலாதிகளுக்கு தண்ட சக்ராதிகள் மாதரம் நிமித்தமும் சஹாகாரியுமாம் அளவே ஸ்ரீ ஈஸ்வரன் –
உபாதாநமும் தானேயாய் -பஹூச்யாம் -என்கிற காரியமும் ப்ரஹ்மமேயாய் –
சித் அசித்துக்கள் இரண்டும் விசேஷணம் என்று கொண்டு வேதாந்திகள் போன வழியையும் அறிய வேணும் காண் -என்றான் –

அங்கு – அவன் அறியாத அம்சம் அறிவிக்கைகாக பிதா கேட்டான் –
இங்கு –தன் பிள்ளை உடைய படியாலும்-பேச்சாலும்
இவள் சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை மறுபாடுருவ அறிந்தாள்-என்று
அத்தை தான் அறிந்தமை தோற்றச் சொல்லுகிறாள் –

ஸ்ரீ ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன் புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான் –
ஸ்ரீ கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே-சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன் புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள் காண் -என்கின்றான் –

——————————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-பிரவேசம் –

உண்டிவர் பால் அன்பு எனக்கு -என்று தன் மகள் பாசுரத்தைக் கேட்ட திருத் தாயார்
இவள் அபஹ்ருத சித்தையானாள் போலேயாய் இருந்தது –
பும்ஸாம் திருஷடி சித்த அபஹாரிணாம் -என்கிற ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கண்டாள் அல்லள்-
கண்டவர் தம் மனம் வழங்கும் ஸ்ரீ கண்ண புரத்தம்மானைக் கண்டாளாம் இத்தனை
என்று நினைத்து -முன்னிலையாய்
ஸ்ரீ சௌரிப் பெருமாள் முகத்தைப் பார்த்து
இவள் நெஞ்சைப் பறிக்கை அன்றிக்கே கையில் வளையையும் பறிக்க வேணுமோ -என்கிறாள் –
கண்டவர் தங்கள் உடைய கண்ணையும் நெஞ்சையும் பறித்துக் கொண்டு போமவர் இறே ஸ்ரீ சக்கரவர்கி திரு மகன் –
கண்ட போதே தம்தாமுடைய நெஞ்சுகளைக் கொள்ளலாகாதோ என்று
எழுதிக் கொடுக்கும் படி இறே ஸ்ரீ கிருஷ்ணனன் வடிவு அழகு இருக்கும்படி –

—————————

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-பிரவேசம் –

ஏதைர் நிமித்தை ரபரைச்ஸ் ஸூ ப்ரரூ சம்போதிதா ப்ராகபி சாது சித்தை
வாதாத பக்லாந்த மிவ பிரணஷ்டம் வர்ஷேன பீஜம் பிரதி சஞ்ச ஹர்ஷா –
கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொன்னவாறே
இத்தைக் கேட்டு உணர்ந்த பெண் பிள்ளை தன் கையைப் பார்த்து-இழந்தேன் வரி வளை -என்கிறாள் –
கீழ்த் திரு மொழியிலே -கை வளை கொள்வது தக்கதே -என்று திருத் தாயார் சொன்னாள்
அவள் பல காலும் சொல்லக் கேட்கையாலும்-இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும்
கீழ் பிறந்த மோஹமானது போய்-அல்பம் அறிவு பிறந்து-அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகை தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக-அத்தாலே இரவல் வாயாலே
தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –

————————-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1- பிரவேசம் –

இப்பிராட்டி தன் இழவைச் சொல்லி பரவசையாய் விழுந்து கிடந்தாள்-
தளர்த்தியாலே உடம்பு கிருசமாய்-குழலும் பேணாதே பூவும் மறுத்துக் கிடக்கும் இறே-
இத்தை அறியாதே -பழைய வாசனையைக் கொண்டு
மது பானம் பண்ணுவதாக சில தும்பிகள் வந்து பறந்தன –
அத்தைப் பார்த்து -வாஹி வாத யத காந்தா தாம் ச்ப்ருஷ்டவா மாமபிஸ் ப்ருச -என்னுமா போலே
மதுவுக்கு கிருஷியைப் பண்ணி மது பானம் பண்ணப் பாராய் -என்கிறாள் —

——————

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1–பிரவேசம் –

அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஒன்றைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பிக்க வேண்டும் என்று
சில தும்பிகளை போக விட்டாள் –
அவையும் போய் அவனைக் கொடு வந்தால் தானும் அவனுமாக அனுபவிப்பதாக இவள் இலையகல
பாரித்து கொண்டு இருந்தாள் –
அவன் வந்திலன்–அதுக்கு மேலே பாதக பதார்த் தங்கள் மிகைத்து அவற்றுக்கு ஆடல் கொடுத்து பதார்த்த தர்சனம் பண்ணிப்
போது போக்க ஒண்ணாத படி கண்ட விடம் எங்கும் இருள் மூடி ஹிதம் சொல்வாரும் அழைப்பாரும் தேட்டமாம் படியாய் விழுந்தது –
தானும் ராத்ரியும் பாதக பதார்த்தங்களுமேயாய் நோவு பட்டு ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
ஒரு சந்தையில் பட்ட பாட்டை இவள் ஒருத்தியும் பட்டு கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

———————–

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-பிரவேசம் –

ஆதித்யனும் வந்து உதிக்கிறிலன்-
நாழிகையும் கல்பகத்தில் காட்டிலும் நெடிதாய்ச் செல்லா நின்றது –
அநுகூல பதார்த்தங்களும் பாதகமாய் நின்றன–ஒரு துணை காண்கிறிலேன் –
சத்தையும் கூட அழியும் அளவாகா நின்றது –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுமோ -அறிகிறிலேன் -என்றார் கீழில் திரு மொழியில் –

சம்சார ஸ்வ பாவத்தாலே இவை தான் ஒருபடிப் பட்டு நில்லா விறே-
ஆகையால்-ஆதித்யனும் ஒரு கால் வந்து உதிக்கவும் கூடும் இறே –
இவை தான் அகஞ்சுரிப் பட்டவாறே சொன்ன வார்த்தையும் செவிப்படும் –
அவன் வந்திலன் என்று நீர் நம்மைச் சொன்னவிடம் தப்பைச் சொன்னீர் –
நாம் ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறது ஏதுக்காக–ஆஸ்ரித அர்த்தமாக அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது –
நமக்காக என்று நீர் அறிந்தீர் ஆகில் நமக்கு ஒரு குறைகளும் இல்லை –
நினைத்த அன்றே எல்லாம் செய்கைக்கு ஒரு தட்டும் இல்லை என்று இருந்தீர் ஆகில்
இனி அவ்வருகு உள்ளவை எல்லாம் தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்க அமையாதோ என்று
அவன் சமாதானம் பண்ண -சமாஹிதராய் ஸ்ரீ ஆழ்வார்
தம் இடையாட்டத்தில் தாம் கை வாங்கி இருந்தார் –
அவனோ வந்து உதவுகிறிலன்-இது எவ்வளவாய் வந்து தலைக் காட்டுகிறதோ -என்று
ஒரு நீர்ச் சாவியாய் கிடக்கிற அநுகூல வர்க்கத்தைப் பார்த்து –நீங்கள் இங்கனே நோவுபட வேண்டா
நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு உண்டு -என –
அதாகிறது
ஸ்ரீ சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்- போருங்கோள் என்கிறார் –

———————–

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-பிரவேசம் –

வருந்தாது இரு -என்றார் – என்ன வாசி கண்டு வருந்தாது இருப்பது என்ன –
ஸ்ரீ பரமபதம் நமக்கு பிராப்யம் ஆகிறதும்
பிராப்யன் ஆனவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே அன்றோ –
ஆனபின்பு
ஸ்ரீ பிராட்டிமாரோடு-சேதனரோடு-ப்ரஹ்மாதிகளோடு
வாசி யற-எல்லாருக்கும் ஒக்க பிராப்யன் ஆனவன் தான்
தனக்கு பிராப்யம் என்று விரும்பி வர்த்திக்கிற தேசம்
ஸ்ரீ திருக் கண்ண புரம் –
ஆனபின்பு-நமக்கும் அவ்விடமே பிராப்யம் என்று அத்தேசத்தை அனுபவிக்கிறார் –

——————-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1- பிரவேசம் –

ஸ்ரீ திருக் கண்ண புரம் பிராப்யம் என்றார் கீழ் –
நமக்கு பிராப்யம் என்னும் அளவேயோ-அவன் அநாதி காலம் எதிர் சூழல் புக்கு தட்டித் திரிய
நாம் அத்தை அறியாதே இருந்து திரிந்த நாளிலே இழவு எல்லாம் தீரும்படியான தேசம் அன்றோ – என்கிறார் –

——————–

கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-பிரவேசம் –

தாம் நெடும் காலம் இழந்த இழவுகள் எல்லாம் தீர ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே தம்மை அனுபவிப்பதாக
எழுந்து அருளி இருந்தான் -என்றார் -கீழ்த் திரு மொழியிலே –
இதில்
இப்படி என் இழவு எல்லாம் தீர்க்க வந்து அருளி நிற்கிற ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே -ஜ்ஞான பிரதான தேசம் —
கருவரை போல் நின்றானுக்கு அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன் என்கிறார் –

——————-

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-பிரவேசம் –

கண்ணாலே கண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -என்று சொல்லி நின்றாரே –
கண்ணாலே கண்டு கழிக்கை பேறு ஆனால்
அதுக்கு தன கை பார்த்து இருக்க வேண்டும்படி இருக்கிறவனை
கேட்போம் என்று பார்த்து நீ சொல் -என்கிறார் –
உம்முடைய அநந்ய கதித்வத்தை ஆவிஷ் கரித்து கைங்கர்யத்தை ஒழியச் செல்லாத உம்முடைய சாபல்யத்தை
ஆவிஷ் கரித்த நீர் கைங்கர்யம் பெற்றீரே –
வாசிகமான அடிமை செய்யா நின்றீர் ஆகில் இனி வேண்டுவது உண்டோ என்று
அத்தை இவர் திரு உள்ளத்திலே படுத்த – அத்தாலே இனியராத் தலைக் கட்டுகிறார் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: