ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஏழாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-பிரவேசம் –

கீழே சம்பந்த ஞானம் பிறக்கை யாலே
கைங்கர்ய லாபத்துக்கு கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது படுகிறது என்ன
உமக்கு எல்லாம் பெறுகைக்கு உறுப்பாக அன்றோ
நாம் இவ்வோ இடங்களிலே நிற்கிறது என்று
உகந்து அருளின நிலங்களில் நிலையைக் காட்ட
இவரும் எல்லாம் பெற்றாராய்
க்ருதார்த்தர் ஆகிறார் –

————————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-பிரவேசம் –

கீழ் சம்பந்த ஜ்ஞானம் பிறந்த படி சொல்லிற்று –
பின்பு தாம் நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே-பிறவாமை என்னைப் பணி -என்று அபேஷித்தார்-
நீர் இப்பாடு படுவது என்-உமக்காக அன்றோ நாம் உகந்து அருளின இடங்களில் வந்து நிற்கிறது -என்ன
எல்லாம் பெற்றாராய் சமாஹிதர் ஆனார் –
இதுவே பேறும் இழவும் ஆகைக்கு நம் தலையில் ஏதேனும் உண்டோ -என்று ஆராய்ந்து பார்த்தார் –
இத்தலையில் ஒன்றும் இன்றிக்கே-அவன் எதிர் சூழல் புக்குப் பண்ணின கிருஷி
இப்படி பலித்த பலமாய் இருந்தது –
ஊனேர் ஆக்கை தன்னை யுழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் –
இத் த்யாஜ்யமான சரீரத்தைக் கொண்டே பேற்றுக்கு உடலாம்படி பண்ணி அருளினான் – என்கிறார் –

——————–

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-பிரவேசம் –

நானே எய்தப் பெற்றேன் -என்றார் கீழ் – அந்தப் பேறு தன்னைப் பேசுகிறார் இதில் –

—————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1- பிரவேசம் –

இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை – ஸ்ரீ பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –
ஸ்ரீ பெரிய நம்பி ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர் ஸ்ரீ திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி தீர்த்தமாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
இத்தை ஸ்ரீ எம்பெருமானார் கேட்டு அருளி ஸ்ரீ பெரிய நம்பி பாடே வந்து மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயகிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே ஸ்ரீ மா மதலைப் பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஸ்ரீ நம்பி அழகை அனுசந்தித்து அங்கு நின்றும் போந்து
ஸ்ரீ திருச் சேறையிலே வந்து ஸ்ரீ மா மதலைப் பிரான் உடைய மௌக்த்யத்தை அனுசந்தித்து
அவ் வழியாலே அவதாரங்கள் எல்லாவற்றையும் அனுசந்தித்து
அவை எல்லாவற்றுக்கும் அடியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து
இப்படி அவன் படிகளை அனுசந்தித்து
குணைர் தாஸ்யம் உபாகத -என்று தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு உத்தேச்யர் என்று இங்கனே பாகவத் சேஷத்வத்தை அனுசந்தித்து பேசி அனுபவிக்கிறார் –

இத்தால் அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை இறே-ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

————————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-பிரவேசம் –

கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் –-அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது –-பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே-இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது –
அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ச்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி
நம்மோடு நித்ய சம்ச்லேஷத்தை பிறப்பிக்கைகாக ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை அனுசந்திக்கிறார் –

——————

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-பிரவேசம் –

போன புனிதர் -என்று இன்னாதானார் –நாம் எங்கேனும் போனோமோ – உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில்
வந்து நிற்கிறது –என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான் –
இனித்தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து உதவினவன் என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி-உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று ஸ்ரீ திரு வழுந்தூரிலே நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு த்ருப்தராய் அனுபவிக்கிறார் –
ததேவ கோபாயா யத பிரசாதாயச ஜாயதே -என்கிறபடியே
இந்நிலை தான் இவர்க்கு இழவுக்கும் உடலாய் பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –
ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது –

————————

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-பிரவேசம்-

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ்
அது தானேயாய் நிற்கப் பெறாதே -பாதகமான இந்த்ரியங்கள் விடாதே அணித்தாய் நின்று நலிகிற படியை அனுசந்தித்து அஞ்சி
ஸ்ரீ நம்மாழ்வார் -உண்ணிலாவியில் பட்ட க்லேசத்தை அடையப் பட்டு –
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகைக்கு மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாக
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லிக் கொண்டு சரணம் புகுகிறார்-

————————-

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-பிரவேசம் –

இந்த்ரிய அவஸ்தைக்கு அஞ்சிக் கூப்பிட்டார் –நீர் இங்கனே கிடந்தது கூப்பிடுகிறது என் –
பேரளவுடைய ப்ரஹ்மாதிகள் தங்கள் ஆபத்தை அறிவிப்பிக்கும் போது அக்கரையிலே நின்று கூப்பிடுமது ஒழிய
அவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கக் கடவ நாம் –
உமக்குப் பட்ட குறை அறிவிக்கலாம்படி பண்ணினோமாய் நின்றோமே –
இவ்வளவும் வர நின்ற நாம்-இனி மேல் உள்ள கார்யம் செய்வுதோம் என்று உமக்கு ஆறி இருக்கக் குறை உண்டோ –
உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்கைக்கு அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது என்று
அங்குற்றை நிலையைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுசந்தித்து திருப்தராய்
பிறரைப் பார்த்து-இவன் அல்லது ஆஸ்ரயநீயன் இல்லை
ஆன பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – என்கிறார் –

————————-

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே அவனே கிடி கோள் ஆஸ்ரயநீயன் -என்றார் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய வார்த்தையைக் கேட்டு அனர்த்தப் பட்டு போகாதே –
ஆஸ்ரயநீயன் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்து போகப் பாருங்கோள் என்கிறார் –

———————

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-பிரவேசம் –

அவன் அல்லது ஆஸ்ரயநீயன் இல்லை என்று பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அருளாய் -என்றும்
உனதடியே சரணாமே -என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி தலைக் கட்டினார் –

இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து-வேறே ஒராசனமாக இருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
உமக்கு கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –

ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: