ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – ஐந்தாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன்
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே
கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –
ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -–என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை –
அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு –
மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து –
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்–

ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –
பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –
சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு-
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1-

ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து –என்கிறார் முதல் பாசுரத்தில் –

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து-
நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர் -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப்
புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்–என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-
பிரதிபந்தகத்தைப் போக்கின இது பிறருக்கு உபகரித்தது ஆகை அன்றிக்கே
உன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்றும்படி இருக்கிறவனே
திருவடிகளிலே நான் என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவது ஒரு பிரகாரம் என் பக்கலிலே
கிருபை பண்ணி அருள வேணும் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு
ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –
வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே
ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –
என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும்
பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –
இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————-

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும்
இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –என்கிறார் முதல் பாசுரத்தில்

கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-

வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –
அல்லாத இடங்கள் சக்தி ஏக தேசம் அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ஸ்ரீ ராமாவதாரத்தை
அப்படியே பூமிப் பரப்பு அடங்கலும் நிர்வாஹகனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் வர்த்திக்கிற தேசம்
நன்றான தேனும் பாலும் கலந்தால் போலே யாய்த்து இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –
விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய சூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும்
பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

தாய் மடியும் பொருந்தாத படி ஆர்மடி இவளை இப்படி துஸ் சிஷை பண்ணி விட்டதோ அறிகிறிலேன்
என் மடி அல்லது அறியாதவள் என் மடியில் பொருந்து கிறிலள் –
இவள் தன சர்வஸ்வத்தையும் நேர்ந்து செய்தத்தை என்னாலே நினைக்கப் போமோ
அவன் அகப்படுத்த-இவள் குமிழி நீர் உண்ணும் இத்தனை ஒழிய
கரையிலே நிற்கிற என்னால் இன்னபடி -என்று நினைக்கப் போமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே-
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது
நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறார் ஏழாம் பாசுரத்தில் –

கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி –
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ
இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை –
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது தென்னரங்கத்தே
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே
பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது தென்னரங்கத்தே –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை-
ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை –
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே–என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-
த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –
கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது –
ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்
நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே
என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும்
விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து
அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார் முதல் பாசுரத்தில்

சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள்
மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே
தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –-
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத்
தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய்
ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே –
பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –
ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது
உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும் அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கையும்-பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும்-என்பதால் உகந்து என்கிறார்
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது-ருசி ஜனகமாய் இருக்கையாலும்-தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்-ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ்வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
ஆபி முக்கியம் பிறந்தால் கைங்கர்யத்தில் அன்வயிப்பைக்காக அன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இப்படி நோவு படா நிற்க இவன் நினையாது ஒழிந்தது-ஒரு நீர்ப் புழுவுக்காக சர்வேஸ்வரனை அழைக்கவோ
நாமே வெல்லுவோம் -என்று இருந்தான்
இவன் இப்படி நெடு நாள் நோவு படுகிறபடி அறியாது இருக்கிறான் அன்றே
இவனுடைய அஹங்கார ஸ்பர்சம் அற்றால் முகம் காட்டுகிறோம் -என்று இருந்தான் அத்தனை இறே-
தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்
மடுவின் கரை தேடி வர வேண்டாதே நான் அகப்பட்ட மடுவிலே அன்றோ வந்து சாய்ந்து அருளுகிறது
அங்கு முதலை ஓன்று-இங்கு ஐந்து-திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -என்கிறபடியே
காலம் அளவு பட்டு இருக்கும் அங்கு இங்கு காலம் அநாதி
அங்கு பொய்கை அளவுபட்டு இருக்கும்-இங்கு சம்சாரார்ணவம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அதிகார பூர்த்தியும் சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது-சரண்யன் உடைய நினைவே இறே
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து-அவனை இட்டு இறே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்கை நம் கையிலே காட்டித் தருவதே என்று இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது
இனி இருவருக்கும் அந்யோந்யம்-ரஷ்ய ரஷக பாவம் இறே உள்ளது-பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே
முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் ஸ்ரீ பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –
சேஷ பூதன் ஆகைக்கும் யமாதிகளுக்கு அஞ்சுகைக்கும் என்ன சேர்த்தி உண்டு
யமன் தான் அஞ்சி ஸ்ரீ மதுசூதன பரிகாரம் -என்னும்படி யான உன் திருவடிகளை ஆஸ்ரயித்தேன்-
அனுபவ விரோதிகளைப் போக்கி-ஆஸ்ரிதரை அனுபவிப்பைக்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவனை இரு என்கைக்கும் இவன் இருப்பை இசைகைக்கும் ஒரு கருத்து உண்டாக வேணும்
அதாவது என் என்னில்-ஈஸ்வரன் நினைத்தால்
விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய்
விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –
சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் இறே எதிரம்பு கோத்தான்
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே
அவன் கருத்து அறிந்து கார்யம் செய்தால் போலே என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் –
ஆஸ்ரிதர் அனுரூபமாக அபேஷிதங்கள் ஆராய்ந்து செய்கைக்காக அன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
ஐஸ்வர்யம் வேணும் என்பார்க்கு அத்தை கொடுக்கவும்
தேகத்தை பூண் கட்டிக் கொடுப்பார்க்கு அத்தைச் செய்யவும்
தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்பார்க்கு அத்தைச் செய்யவும் அன்றோ-இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்-

சம்சார சம்பந்தத்தை அறுத்து திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்தாய் –
நாம் கொடுத்தால் இவன் விலக்கான்-என்னும் இதுவே பற்றாசாக உன்னைப் பிரியாத பேற்றைப் பண்ணி அவனுக்கு
கொடுத்தால் போலே உன் விருப்பத்தாலே நானும் அப்பேறு பெற வேணும் என்று சரணம் புகுந்தேன் –
பிரயோஜனாந்தரங்களுக்கு வந்து ஆஸ்ரயித்த வர்களுக்கும் விலக்காமை உண்டாகில்
ஸ்வரூப அனுரூபமான பிரயோஜனத்தை கொடுக்கைக்காக வன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

கையில் வில்லை வாங்கி கடல்கரையிலே சென்ற போதே அஞ்சி வருணன் முகம் காட்ட
ஆச்சார்ய புத்திரன் இங்கே புக்கான் காட்டித் தா -என்ன-அவனும் போக்கற்ற வாறே
ஸ்ரீ பஞ்ச ஜனன பஜித்தான் -என்ன-முன நாள் உண்ட சோற்றை வாங்க ஒண்ணாது இறே
கடலிலே நீர் நீங்கிக் கொடுக்க ஸ்ரீ சங்க ரூபியான இவனை யக்ற்றின அளவிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் வந்து ஆவேசிக்க
திருப் பவளத்தே வைத்து முழக்கிக் கொடு எம புரத்தே எழுந்து அருள-அவனும் அர்க்யாதிகளைக் கொடுத்து
எழுந்து அருளிற்று என் என்ன
ஆச்சார்ய புத்திரன் இங்கே வந்தான் அவனைக் காட்டித் தா -என்ன
அவனும் நரக விசேஷத்தில் நின்றும் அவனைக் கொடு வந்து காட்ட
என் புத்திரன் என்று அவன் பிரத்யபிஞ்ஞை பண்ணும்படி-அவனைக் கொடு வந்து காட்டிக் கொடுத்தான் இறே –
கடல் கொண்ட வஸ்துவை மீட்டு உருவுருவே கொடுத்தால் போலே-சம்சார ஆர்ணவம் கொண்ட என்னை
மீட்டு-வ்ருத்தி பர்யந்தம் ஆக்கி தருகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில் –

இப்படிப் பட்ட உன் அதிசய சக்தியை அனுசந்தித்து சரணம் புகுந்தேன்
அங்கு உள்ளாரை இங்கே மீட்டுக் கொடு வந்து கொடுத்தமை உண்டு-உமக்கு அங்கன் இருப்பது ஓன்று உண்டோ -என்ன
அதிலும் அரியது ஓன்று அன்றோ-இங்கு உள்ளாரை அங்கு ஏறக் கொடு போகை
அது செய்யலாம் -தன் நினைவாலே செய்யுமது ஆகையாலே
இத்தலையை இசைவித்து அத்தலை ஏறக் கொடு போகை அன்றோ அரிது –
இங்கு உள்ளாரை அக்கரைப் படுத்துக்கைகாக அன்றோ இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
தேகாத்ம அபிமானியாய்-விஷய ப்ரவணனாய்-அநந்த கிலேச பாஜனம்-என்கிற சம்சாரத்திலே அழுந்துகிற என்னை
ஸ்வரூப ஜ்ஞானத்தைப் பிறப்பித்து-உன் பக்கலிலே ப்ராவண்யத்தை உண்டாக்கி
அந்தமில் பேரின்பத் தடியரோடே வைக்காக அன்றோ தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஏழு அர்த்தத்தைப் பற்ற ஏழு காலம் என்கிறது இறே –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தியும்
ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
ஸ்வ யதன நிவ்ருத்தியும்
அபந்து ஷூ பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தியும்
விஷய நிவ்ருத்தியும் –
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பிக்க வேணும் -என்று சரணம் புக்கு உஜ்ஜீவித்தேன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வேங்கடமுடையான் அளவிலே பிறந்த அர்த்தத்தைச் சொல்லி ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ திருமலையில் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும் இறே பின்பு போய்ந்து சாய்ந்த இடம் அது இறே
மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று
தலைக் கட்டுகையாலே-ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே சரணாகதியாய் இருக்கிறது –

எந்தையை –பரிகரம் உண்டானாலும் பிறர் கார்யம் செய்ய வேண்டுவது இல்லை இறே
ப்ராப்தி இல்லை யாகில் -கார்யம் செய்கைக்கு ஈடான ப்ராப்தி சொல்லுகிறது
ப்ராப்தன் ஆனாலும் பிரயோஜனம் இல்லை இறே வ்யாமுக்தன் அன்றாகில்-அதுக்காக நெடுமாலை -என்கிறது
இத்தால் ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவங்கள் சொல்லுகிறது –
இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது –
பால் குடிக்க நோய் தீருமா போலே இவருடைய பாசுரத்தைச் சொல்ல ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே-நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது – பத்தாம் பாசுரத்தில்

————————–

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1-

அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி
ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே
என்கிறார் முதல் பாசுரத்தில்

நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க
அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே
மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும்
கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்
அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர்
அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை –
பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் –
கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே
அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் –
அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில்
இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் –
அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது
நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே
முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ –
கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே
அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள்
புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும்
ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும்
ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும்
பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள்
ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும்
அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம்
என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: