Archive for July, 2019

ஸ்ரீ மன் நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –ஸ்ரீ மெய் விரத மான்யம் —

July 31, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————————————

சத்யவ்ரத மஹாத்ம்யம் –மெய் விரதம் -சத்ய விரதம் –29-பாசுரங்கள் கொண்ட பிரபந்தம் –
ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யம் -16-பாதங்கள் அர்த்தங்களையும் அருளிச் செய்கிறார் –

———

1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் –
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் உதவியால் -1710-காஞ்சிக்கு மீண்டும் உத்சவரை எழுந்து அருள பண்ணி வந்தார் —
பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்ரம் பிரதிஷ்டை-கல்வெட்டு உண்டு

1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன்
த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம்
த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம்
கலியுகம் கலவ் வேங்கடம்
1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-

கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் –
வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே

———————

யஸ்ய பிரசாத கலயா பதிர ஸ்ருனோதி பங்கு பிரதாவதி ஜலேந ச வக்தி முக
அந்த ப்ரபஸ்யதி ஸூ தம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி –ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

ஸ்ரீ பேர் அருளாளர் அனுக்ரஹத்தினால் -செவிடனும் செவி பெற்று -முடவனும் விரைந்தோடி -ஊமையும் பேசி –
குருடனும் கண்டு மாலதியும் குழந்தை பெறும் படி -அவரைத் தஞ்சமாகப் பற்றினேன் -ப்ரத்யக்ஷம் ஆதி அத்தி வரதர் வைபவத்தில் –

——————————-

ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே

———————

இந்திரனுடைய வாஹனமான ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே
எம்பெருமானைத் தரித்துக் கொண்டு இருப்பதாலும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பகவானுடைய திருவடித் தாமரைகளிலே
தாமரை புஷபங்களை ஸமர்ப்பித்து உஜ்ஜீவித்த படியாலும்
திக்கஜங்கள் ஆராதிக்கும் க்ஷேத்ரம் ஆகையாலும்
ஸ்ரீ ஹஸ்திகிரி என்ற திருநாமம்

————————

வாழி அருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு –1–

வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி —
பேர் அருளாளர் வாழ்க -பூமிக்கு அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி வாழ்க –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -பிரபத்தி என்னும்
உபாயத்துடன் வேறு ஒன்றை உபாயமாக
கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க -என்று மங்களா சாசனம் செய்தவாறு –

பேர் அருளாளர் -மிகுந்த கிருபையாலேயே ஆள்பவர் -ரக்ஷிப்பவர் -இதுவே நிரூபிக்கப் படுபவர்
உயர்வற உயர் நலம் யுடையவன் -என்றவாறு
கிருபையினால் ஆளப்பட்டவர் என்றுமாம் -அதற்க்கு வசப்பட்டவர் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் த்ரிவிக்ரமனையே -என்றதும் இங்கே அனுசந்தேயம்
ஸம்ப்ரதாய ரக்ஷகர் அன்றோ
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் தொழுதால் உன் தொல் புகழ் மாசூணாதோ –
அணி அத்திகிரி -பூமிக்கே அலங்காரம் ஹஸ்திகிரி -அதுக்கும் அலங்காரம் தேவப்பெருமாள் –
யாத்திராசன் வாசகத்தோர் -ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளே நிரூபகமான நம் பூர்வர்கள்
வாழி ஸரணாகதி – உபாயமும் உபேயமும் தேவப்பெருமாளே என்று இருக்கும் மஹா விஸ்வாசத்துக்கும் பல்லாண்டு

————

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈரேழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரீகத்து அயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்யத்தை உகந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நில மெய் விரதத்தில் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறிப்பாகக் கொண்மினீரே—2–

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும் –எட்டுத் திசைகளையும் –
உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் -ஆகிய ஏழு சமுத்ரங்களையும் —
மஹேந்த்ரம் மலயம் ஸஹ்யம் சுக்திமான் ருக்ஷம் விந்த்யம் பாரியாத்ரம் -ஆகிய ஏழு குல பர்வதங்களையும்
அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும்
ஸ்ருஷ்டித்து பிரகாசிப்பவனும்

புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து -எம்பெருமானுடைய நாபிக் கமலத்து உதித்த ப்ரஹ்மாவால்
நடத்தப்பட்ட பெரிய அஸ்வமேத யாகத்தின் பரிசுத்தமான வாசனையுள்ள ஹவிஸை பெறுவதற்கு மகிழ்ந்து வந்து

தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற –தொண்டை மண்டலம் என்னும் தேசத்தின் நடுவில்
பூமியிலே மிக பரிசுத்தமான ஸ்தலமான சத்யவ்ரதம் என்னும் திவ்ய ஷேத்ரத்திலே திருவவதரித்து சாஸ்வதமாக நிலை பெற்ற

கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே-பேர் அருளாளன் என்னும் மேகத்தின் கருணை என்னும் குணத்தையே –

மனத்தில் பாவமும் வாக்கில் ராகமும் கையில் தாளமுமாகிய பொருந்த வேண்டும் என வகுத்த பாரத சாஸ்திரத்தைத் தழுவி பண்ணும் இசையும் அமையுமாறு

பேர் அருளாளன் பெருமையை நாம் இந்த பிரபந்தத்தில் பேசுகின்றோம்-கூர்மையான அறிவு பெற்றோர்களே -நீங்கள் இதனைக் கவனத்துடன் அறிந்து கொள்க –

வேள்வியும் ஹவுஸும் அக்னியை நினைவூட்டிக் காட்ட அந்த தாபத்தை மறக்க
கருணை மழை பொழியும் காளமேகத்தைக் குறித்து அருளிச் செய்யும் சுவையை அனுபவிப்போம் –

———

வம்மின் புலவீர் அருளாளப் பெருமான் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட பேர் அருளாளர் என்றும்
வியப்பால் விருதூதும் படி கரை புரண்ட கருணைக் கடலை
எவ்வண்ணம் பேசுவீர் ஈது என்ன பாங்கே-3-

வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழியம்மான் என்றும் —
புலவர்களே வாருங்கோள்—பேர் கருணைக் கடலானதாலே
அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட –பிராட்டியைத் தேவியாகக் கொண்டதுமாம் அன்றி
என் மனத்தை வாஸஸ்தலமாகக் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட -பேர் அருளாளர் என்றும் ஆச்சர்யமாய் —
ஆழ்வாராதிகள் பூர்வாச்சார்யர்கள் விருதுகளைக் கூறி முழங்கும் படி நின்ற கரை புரண்டு பெருகும்
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே-கருணைக் கடலான எம்பெருமானை
எவ்வாறு நீங்கள் பேச வல்லீர் -இவ்வாறு செய்வது என்ன நேர்மை -நாம் ஓன்று கூடி
அவன் பெருமையை ஒருவாறு பேசிப் பார்ப்போம் -என்றவாறு–

அதி நீசனான எனது நெஞ்சத்தையும் கோயில் கண்டு அருளி பேர் அருளாளன்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பெருமான் –
அருளாழி அம்மான்
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசக்கற்றவன் காமரு சீர்க் கலியன்

—————-

பிரபன்னனுக்கு பொறுப்பு நீங்கியமை -அம்ருத ரஞ்சனி 18-பாசுரமும் இதுவே –

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குத் பரம் ஓன்று இலதே–4-

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத்–அர்த்த பஞ்சகத்தையும் சரீராத்மா பாவம் முதலிய சம்பந்தத்தையும்
அறிந்த ஆச்சார்யர்கள் உபதேசித்து அருள –
எம்பெருமானே உபாயம் உபேயம் என்று அறிந்த ஆச்சார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை சமர்ப்பித்து அருள
திருவருளால் -பிரதியுபகாரத்தை எதிர்பாராத சிறந்த கிருபையினால் –பிராட்டியுடைய கிருபையினால் என்றுமாம்

அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால் -அப்பொழுதே -ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய
திரு ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் –

இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம் நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே-இப்பொழுதே
இசையின் -முக்தியைப் பெற நாம் சம்மதித்ததால்
தம்முடைய திருவடித்த தாமரைகளில் சேர்த்து கொண்டு அருளுகிறார்
இனி மறுபடியும் இக்கர்ம பூமியிலே பிறக்க மாட்டோம் -இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும்
இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே-
இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை –

இசையில் -அத்வேஷ மாத்ரமே வேண்டுவது –
இச்சைப்படும் காலத்திலேயே -கொடு யுலகம் காட்டாதே –
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருளுவார் அன்றோ

ஒன்றே புகல் என்றது -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
ஒருவனே ஸித்த உபாயம் என்றபடி

உணர்ந்தவர் -என்றது -ஸாஸ்த்ர சார சம்பந்த விஷயங்களையும்
அர்த்த பஞ்சக விஷயமுமான ஞானத்தை யுடையவர்களாயும்
அவற்றை உபதேசிக்க வல்லவர்களாக ஆச்சார்யர்கள் என்றபடி

உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட -என்று அந்வயம்

இனிப் பிறவோம் -இங்கே திரிந்தேர்க்கு இழுக்குற்று என் என்கிறபடி
த்வரை அற்று இருக்கும் அளவிலும்
சரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
அருளுபவர் என்றபடி

————

பிரமன் தனது முயற்சி கர்மத்தால் தடைபட வருந்துதல் —

வம்பவிழ் போதமர் மாதர் உகந்த வம் மா நிதியை
தம் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போல் அழுதனனே–5-

முகிழ் மதி -சுருங்கின ஞானம்
வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் –
அம் மா நிதி -ஹிரண்ய நிதி -நித்ய அநபாயினி கொண்ட சம்பந்தம் மாறாத நிதி –
வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்

வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத் –வாசனையுள்ள மலர்ந்த புஷபத்திலே வசிக்கின்ற பிராட்டியின்
அன்புக்கு உரியனான பெரிய சேமநிதி போன்ற அவ்வெம்பெருமானை —
ஸ்ரீ யபதி-பராத்பரன் -சர்வ அந்தர்யாமி -சர்வ காரணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-
கல்யாணை குண கணன்–வாத்சல்யாதி குணக் கடல் –
கறந்த பாலுள் மறைந்து நிற்கும் நெய்யே போன்றவன் அன்றோ –

தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்-தன்னுடைய யோக பலத்தைக் கொண்டு
சாஷாத் கரிக்க நினைத்த ப்ரஹ்மா
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்–முன்பு பல தவறான செயகைகளாலே
ஏற்பட்ட வழிய கர்மங்கள் சூழ்ந்து கொள்ள மழுங்கிய அறிவுடையனாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -எட்ட முடியாத சந்திரனைப் படித்துத் தரும்படி விரும்பிய
குழந்தையைப் போலே தனது எண்ணம் நிறைவேறாமையாலே அழுதான் –

————-

பிரமன் தன்னை வெறுத்துக் கொள்ளுதல் —

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முன்னம்
நெடும் காலம் இந்நிலமே நிலை யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மை இது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே —6-

சடங்கால் –அங்கங்களினால் –

ஐந்துடன் -கர்ம இந்த்ரியர்களுடன்
ஆறும் -ஞான இந்திரியங்களும் மனஸ்ஸும்
என்ன தன்மை இது-பழுதே பளப்பாக்களும் போயின என்று அஞ்சி அழும் நிலை
அல்ப அஸ்திர பலன்களுக்காக தவம் செய்து வியர்த்தமே ஆயினவே –
பூண்டு -இந்த துக்க பரம்பரைகள் தானே விளைத்துக் கொண்டமை-

இடம் காத்து இருந்த திசைமுகன் –தன்னுடைய பிரம்மா பதவியை வழுவாது ரஷித்துக் கொண்டு இருந்த ப்ரஹ்மா
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்-நீண்ட காலம் இந்த பிரம்மா லோகத்தையே ஸ்திரமாய்
இருப்பதாகக் கொண்டு -நெடு நாள் அப்பதவியில் வாழ விரும்பி

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம் –முன்பே அடங்காத இந்திரியங்கள் ஐந்துடன்
ஞான இந்திரியங்கள் மனஸ் ஆறையும் அடக்கி

சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று தன்னை இகழ்ந்தனனே -விரதங்களால் பெரிய தபஸ் ஸூக்களைச் செய்தேன் –
நான் செய்த இக்காரியம் எத்தகையது -எவ்வளவு இழிவானது என்று தன்னையே வெறுத்துக் கொண்டான் –
கர்ம விசேஷத்தைக் கழிக்காமல் இந்த பதவியை சாஸ்வதம் என்று தவறாக கருதி பெரிய தவம் புரிந்து
இந்த ப்ரஹ்மாண்டத்திலே ஏறியும் இறங்கியும் அல்லல் பட
நெடும்காலம் வீணே சரீரத்தையும் துன்புறுத்திக் கொண்டேன் என்று நெஞ்சு உருகிக்
கண்ணீர் சோர்ந்து நெடு மூச்சு எறிந்து நிலத்தையே பார்த்து இருந்து
தன்னையே வெறுத்துக் கொண்டான் -என்றவாறு –

திசை முகன் -திகைத்த முகத்தன்-என்ற பொருள் பெற பிரயோகம் –

—————-

விண்ணுலகில் வீற்று இருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்ததாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
எண்ணிய நற் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவமும் எட்டு இடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எல்லாம் பலிக்கும் என்று பாரதத்தை பங்கயத்தோன் படிந்திட்டானே -7-

நற் புவனங்கள் ஏழும் ஆறும்–பூமி ஒழிந்த 13 லோகங்களும்
இரு மூன்று தீவமும் -ஜம்பூ த்வீபம் ஒழிந்த பிலக்ஷ -ஸால்மலி -குச -கிரௌஞ்ச -ஸாக -புஷ்கர -த்வீபங்கள்
எட்டு இடமும் -பாரத வர்ஷம் தவிர்ந்த -கிம் புருஷ -ஹரி -இலாவ்ருத -ரம்யக – ஹிரண்யக -குரு –
பத்ராஸ்வ -கேதுமால -என்று சொல்லப்பட்ட எட்டு ஸ்தலங்களும் –
இவற்றை விட்டு -பாரத வர்ஷத்தில் -ஸத்ய விரத ஷேத்ரத்தில் யாகம் பண்ண வந்தான் என்றபடி

பங்கயத்தோன்–பகவானுடைய திரு நாபிக் கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும் —
பிரம்ம லோகத்தில் பிரம்மா பதவி வகித்த பெருமையாலும்
வேதங்கள் நான்கையும் உலகுக்கு வெளியிட்டமையாலும்

கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் -எம்பெருமானை மனத்தில் நிலை பெற்று நிற்கும் படி
நான் நேரில் சாஷாத் கரிப்பேன் என்று நினைத்து யத்னம் செய்து

காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா-அவ்வாறு சாஷாத் கரிக்க முடியாமல் தடை செய்த
தன்னுடைய கர்மத்தைக் கண்டு அதை போக்க நினைத்து

வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப் -சாஸ்திரங்களில் கூறப் பட்ட
சிறந்த லோகங்கள் பதின்மூன்றையும்
ஆறு தீவுகளையும் எட்டு வர்ஷங்களையும் விட்டு

பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் படிந்திட்டானே -செய்யப்பட சிறந்த விரதங்கள் எல்லாம்
பலன் தரும் என்று உறுதி கொண்டு
பாரத தேசத்திலே வந்து தங்கினான் –

ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து பிரமன் தனது பதவியைப் பெற்றதாக சாஸ்திரம் கூறும்
பூமி ஒழிய மற்ற லோகங்கள் பதின்மூன்றும் -பூமியிலும் ஜம்பூத்வீபம் தவிர மற்ற த்வீபங்கள் ஆறும் –
அதிலும் பாரத வர்ஷம் நீங்க மற்ற வர்ஷங்கள் எட்டும்
கர்ம பலன்களை அனுபவிக்கும் இடம் -என்பதால் தவம் செய்ய உரியன அல்ல என்று புறக்கணித்து
எல்லாவற்றுக்கும் தெற்கே உள்ளதாய் சகல தர்மங்களையும் அனுஷ்ட்டிக்க ஏற்றதான பாரத வர்ஷத்தில் வந்து புகுந்தான் என்றவாறு –

ஒன்பது வர்ஷங்கள்–பாரதம் கிம்புருஷம் ஹரி இலாவ்ருதம் ரம்யம் ஹிரண்யகம் குரு பத்ராசுவம் கேதுமாலம் -என்பன

ஏழு த்வீபங்கள் -ஜம்பூ பிலஷம் சால்மலி குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்பன

பதினான்கு லோகங்கள் -அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும் -சொல்லியவாறு —

—————–

பிரமன் விஸ்வகர்மனுக்கு கட்டளையிடுதல் –

எத்திசை நிலனும் எய்தி யாரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்றதொரு உரையின் சார்வால்
அத்திசை சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
உத்தர வேதி செய் என்று உரை அணங்கிறை உரைத்தான் -8-

உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்-

உரை யணங்கு இறை யுரைத்தான் -வாக்கின் தேவதையான சரஸ்வதிக்கு நாயகனான ப்ரஹ்மா
எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள் –எல்லாத் திக்குகளிலும் உள்ள ஸ்தானங்களுக்கும் சென்று
ஒருவராலும் செய்ய முடியாத தவத்தைச் செய்த அக்காலத்திலே

சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால் –சத்யவ்ரத திவ்ய ஷேத்ரத்துக்கு போ என்ற
ஒரு அசரீரி வார்த்தையின் ஆதரத்தால்–
ஆயிரம் அஸ்வமேத யாக பலனை ஒரு அஸ்வமேத யாகம் இங்கே அளிக்கும்

அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை -அந்த திவ்ய ஷேத்ரத்துக்குச் சென்று –
தேவர்களுக்கு வீடு முதலியவற்றை அமைப்பவனாகிய
விஸ்வ கர்மனை அழைத்து யுத்தர வேதி செய் என்று -யாகம் செய்வதற்கு உத்தர வேதியைச் செய்து முடிப்பாயாக என்று கட்டளையிட்டான் —

ஸ்ரீ ஹஸ்திகிரியை நான்கு சதுரமாக வகுத்து அதையே யாக வேதியாக்கி யாகசாலை அமைப்பாயாக –
மேலும் யாகத்துக்கு வரும் தேவர் அசுரர் ராக்ஷசர் கின்னரர் கிம்புருஷர்
சித்தர் வித்யாதரர் மனுஷ்யர் முதலிய பல் திறத்தனாரும் நெருக்கம் இன்றிச் சுகமாய் வசிக்குமாறு
நீண்டு அகன்று உயர்ந்த மிக்கு அழகிய ராஜ தானியை
விரைவில் படைப்பாயாக என்று மிக விரைந்து கட்டளையிட்டான் –

———–

காஞ்சியின் பெருமை –அதிகார சங்கிரகம் -44-பாசுரமும் இதுவே —

உத்தம அமரத்தலம் அமைத்தது ஒரு எழில் தனு கணையால்
அத்திற வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்து உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி அத் திகிரியே –9-

உத்தம அமர்த் தலம் -ருத்ரனுக்கும் பகவானுக்கும் -வில் பரீஷைகைக்காக யுண்டான யுத்த ஸ்தலம்
ஒரு எழில் -அத்விதீயமான -கர்ஜனையாலே ருத்ர வில் பிளந்து போனமையால் –
பகவானைத் தவிர வேறு ஒருவரால் கையாள முடியாத வில் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –

அத்திர அரக்கன் -தபோ பலத்தால் அடையப்பட்ட அஸ்திர பலத்தை யுடைய ராவணன் –
அத்திற -பாட பேதம் –பகவானை எதிர்த்து போர் செய்ய வல்ல -அப்படிப்பட்ட திறல் யுடையவன் என்றபடி
ஒரு கொத்தென –பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடியும் யுதிர வில் வளைத்தோன் -என்கிறபடியே –
ஒரே பணத்தால் அடித்துத் தள்ளின என்றபடி
உதிர்த்த -கிள்ளிக் களைந்தானை -அநாயாஸேந செய்தமை

அத் திகிரி – அற முயல் ஆழிப்படை

அயோத்யா -வடமதுரை -மாயா -காசி -காஞ்சீ -அவந்தி -துவாரகா-ஏழும் முக்தி தரும் ஷேத்ரங்கள் –

உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால் -உயர்ந்த போர் காலத்தில் அமைக்கப் பட்ட
நிகரற்ற அழகிய வில்லினின்றும் செலுத்தப் பட்ட அம்பினால்

யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன் -அஸ்திர பலமுள்ள ராக்ஷசனாகிய ராவணனுடைய தலைகள் பத்தையும்
ஒரு குலை என்று சொல்லும்படி அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ஸ்ரீ ராமபிரானும்

மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம் -மத்தினால் கடையத் தகுந்த
அதிகமான தயிரையும் யசோதையால் வைக்கப்பட்ட அதிகமான வெண்ணெயயையும் அமுது செய்து
அருளிய ஸ்ரீ கண்ணபிரானுடைய வாஸஸ் ஸ்தலமாகிய

அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –ஸ்ரீ ஹஸ்திகிரி என்னும் திவ்ய க்ஷேத்ரம்
சம்பந்தம் இல்லாமல் ஒழிக்க வல்ல அழகிய
அந்த திவ்ய சக்ராயுதம் போன்றதே யாகும் -திவ்ய சக்ராயுதம் திவ்ய கைக்கு அழகுக்கு இட்ட திரு ஆபரணம் என்றுமாம்

———–

பிரமன் விஷ்வா கர்மா படைத்த ஸ்ரீ காஞ்சியைக் கண்டு மகிழ்தல் —

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வன்மை ஏழு ஈர் இரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கு வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண் மகளார்க்கு அலங்காரம் என்ன
மன்னு மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-

பூமியாகிய ஸ்த்ரீக்கு அரை நூண் மாலை போல் அன்றோ திருக் காஞ்சீ
காஞ்சீ ஆபரணத்துக்குத் துல்யமான நகர் என்றபடி –

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும் –
திடமான ரத்தினங்கள் தங்கத்தோடு இழைக்கப் பெற்று இருப்பதாலும்
அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப் பட்டு இருப்பதாலும்

வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும் –
கொடை நிறைந்த நான்கு ஜாதியரும் நிறைந்து இருப்பதாலும்-
அன்றிக்கே வெண்மை கருமை செம்மை பசுமை என்ற நான்கு நிறங்களால் என்றுமாம் –
தேவர்கட்க்கும் வியக்கத்தக்க அமைப்பினாலும்

ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும் –
இயற்க்கை அழகு அமைந்த குதிரைகளின் கனைக்கும் குரல் ஓசையினாலும்
ஒரு போதும் அழியாமல் நிலை பெற்ற அழகினாலும்

உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் என்று கொண்டு நேர்மையுடைய சிறந்த பிரகாசம் உள்ள
வஸ்துக்களாலும் சிறந்த சப்தங்களாலும் என்றுமாம் –

மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -பூமிக்கு ஆபரணம் என்னும் படி பொருந்திய
மதிள்களை யுடைய ஸ்ரீ காஞ்சீபுரத்தைக் கண்டு ப்ரஹ்மா மகிழ்ச்சி யடைந்தான் –

———————

பிரமன் வசிட்டனை தன் மனைவியிடம் அனுப்புதல் –
ப்ரஹ்மா வஸிஷ்டரை ஆஜ்ஞா பித்த பிரகாரத்தை இப்பாட்டாலே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

எம்பெருமானுடைய வாத்சல்ய பிரகாரம் இப்பாட்டிலும்
அடுத்த பாட்டிலும்
அருளிச் செய்கிறார் –

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அழைப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றாட்டானே –11-

கைதவமே-கபட காரியமே -ஆஸ்ரயண வேளையிலே கைப்பற்றி போக வேளையிலே கைவிடுபவர்கள்
சாமங்கள் -ஜாமங்கள்
பூ மங்கை கேள்வனை -ராவணனைப் போலே பிரித்துக்காணாமல் –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
வடிவாய் நின் வழ மார்போனில் வாழும் மங்கையும் பல்லாண்டு
போற்ற -ஸ்துதிக்கவும் நமஸ்கரிக்கவும் ஆராதனம் செய்யவும் –
தனி இருந்து -ப்ரணய கலகத்தினால் தனியே இருந்து தபஸ்ஸூ செய்யச் சென்றமை ஸூசிதம் -த்யோதிதம்

நன்மகனை நான்முகன் தான்-நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மா நல்ல புத்திரனான வசிஷ்டனை அழைத்து
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-காம்ய கர்மங்கள் பலவற்றை வெளியிடுகின்ற வேதத்தைக் கொண்டு –
பகவத் கைங்கர்யத்தைச் செய்யாது கபட காரியங்களையே செய்பவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகக் காண முடியாத

பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் –பூவில் வாழும் பிராட்டியின் நாதனான எம்பெருமானை நான் நேரில் சேவித்து ஸ்தோத்ரம் செய்வதற்காக
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன் -புண்ணியங்களுக்குள் ஒப்பற்ற அஸ்வமேத யாகத்தைத் தொடங்கியுள்ளேன் –
மரீசி முதலிய ப்ரஹ்மரிஷிகளை ருத்விக்குகளாக்கிக் கொண்டான்

சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற -யாமங்கள் கழிவதற்கு முன்பு -காலம் தாழாது விரைவாக நீ போய்
தன் பெயருள்ள சரஸ்வதி நதிக் கரையில் தனியாக இருந்து தபம் செய்பவளான –பெருமான் திருவடியில் நின்றும் அவதரித்த கங்கையை விட
சிறந்த நதி இல்லை என்ற பிரமனின் மீது கோபம் கொண்டு சரஸ்வதி நதிக் கரையில் சரஸ்வதி தவம் புரிந்தாள்

நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நவின்றிட்டானே –வாக்கின் தேவதையான சரஸ்வதி இங்கு வந்து சேரும்படி
நீ அழைத்து வருவாயாக என்று கட்டளையிட்டான் –
ஊடல் நீங்காததால் வர மறுத்து விட்டாள் -சாவித்ரி தேவதை கொண்டு யாகம் செய்யத் தொடங்க -அசுரர்கள் இந்த யாகத்தை கலைக்க நினைத்து
சரஸ்வதி தேவியிடம் சொல்லி கலகமூட்ட -வேகவதி என்னும் வேறு ஒரு நதியாக பெருகி யாகசாலையை அழிக்க முற்பட்டாள் –

—————

சரஸ்வதி தேவி நதி வடிவம் கொண்டு வரும் மிடுக்கு —

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயருமன்ன வரசேறி வருவாள்
அத்தன் அயனத்த நயனுத்திதனை யத்திதென யுத்தி புரியாள்
நன்னடை விடா நடமிது என்ன நடவா நடுவுள் நண்ணு குடகேறி இழிவாள்
நற்பதிகள் அற்பதிகள் கற்புரள வற்புத மருக்கதியினால்
கன்னடை விடா விடமிலுன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக்
கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா யமரர் மன்னு பதியேறி மகிழ
அச்சுதன் அணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்று அணுகினாள்–12-

அத்தன் அயன் -ஆப்தனான ஸ்ரீ ப்ரம்மா
அத் தநயன் உத்திதனை -ஸ்ரீ வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –

குடகு -கற் கூட்டங்களின் மேல்
மருக்கத்தி-வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கல் நடை விடாத இடம் இல் -கல்லிலே போவதை விடாத ஸ்தலம் இல்லாத
இரண்டு நகார பிரயோகம் -கல்லின் மேலேயே ப்ரவஹித்தமை

உன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக் கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
உன்னதி -உயர்ந்து இருப்பதனால்
சிறா -சிறுமை பெறாத -மற்ற மலைகளை விட உயரத்தில் சிறுமை பெறாத -அதாவ்துன் மிகவும் உயந்ததான
விகட -விசாலமான
மன்னு -மிகவும் உறுதியான
கிரி கூட மிடியக்-மலைச் சிகரங்கள் இடியும்படி

கட்ட விடை -கஷ்டமான -ஒருவராலும் அடக்க முடியாத ரிஷபங்கள்
அன்றிக்கே
வண்டி போன்றவற்றில் கட்டப்பட்ட விருஷபங்கள் என்றுமாம்

யிற்று விழ -சந்திப்பந்தங்கள் கீழே விழ
முற்றும் விழி யுற்று -நாலா பக்கங்களிலும் விழித்து விழித்துப் பார்த்து
அடைய விட்டு அருகுற-அனைத்தையும் பரித்யஜித்து ப்ரஹ்மாவிடம் சென்று ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டப்பட்ட எருதுகள் கீழே விழ
ஆவாரார் துணை என்று சுற்றிலும் பார்த்து -யாவரையும் காணாமல்
எல்லாம் விட்டுத் தனித்தனியே நீஞ்சிக் கரை ஏற என்றுமாம்

அன்ன நய -தனது பத்தினியை சாந்தம் செய்ய முடியாமல்
சாஸ்த்ர விதியை அனுசரித்து வேறே பத்னிகளைக் கொண்டு யஜ்ஜம் செய்து நியாயமாக நடந்து கொண்ட
விழா வமரர் – யஜ்ஜம் ஆகிய மஹா உத்சவத்துக்கு வந்த தேவதைகள்

அணைத் தனுவில் –திருப்பள்ளி யாகிய ஆதிசேஷன் சரீரத்தில்
அன்றிக்கே
அணை போட்டால் போல் நிஸ்ஸலமான திருமேனியுடன் என்றுமாம் –
திருவணை -வேகா சேது -அன்றோ
தகைய வற்றணுகினாள் -தடுக்க பற்றுதலை அடைந்தாள் -அதாவது -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
வற்றி -தனது வேகத்தை அடக்கிக் கொண்டு -கோபத்துக்குக்காக வெட்க்கி –
அணுகினாள் -சமீபத்தில் வந்தாள்

அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன்
தனக்கு திருப்பள்ளியாகிற ஸ்ரீ ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –
திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்-

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள் -ஹம்சம் போன்ற அழகை யுடையவளும்
அசைகின்ற ஹம்சம் போன்ற நடையை யுடையவளும் -உயர்ந்த ராஜ ஹம்சத்தின் மீது ஏறிக் கொண்டு வருபவளுமான
சரஸ்வதி தேவி -ஹம்ஸ வாஹனம் அன்றோ –

அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்-உயர்ந்தவனாகிய ப்ரஹ்மாவின்
அந்தப் புத்திரனான வசிஷ்டனுடைய வேண்டுகோளை இது அது அப்படியே யாகுக என்று சொல்லாதவளாய்

நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள் –இவ்வாறு ப்ரஹ்மா அழைத்தது
நல்ல ஒழுக்கத்தின் நின்றும் வேறுபடாதது போல்
தோற்றுகின்ற நாடகம் என்று நினைத்து நடந்து வழியிடையே எதிர்படுகின்ற குன்று மீது ஏறி இறங்குபவளாய்

நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால் –நல்ல சமமான இடங்களிலும் அப்படியல்லாத மேடு பள்ளமான இடங்களிலும் உள்ள
கற்கள் புரளும் படி ஆச்சர்யமான வாயு வேகத்தால்

கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக் -பாறைகள் அசைந்து உருளாத இடம் இல்லாததும் உயரம் குறையாததும்
மேடு பள்ளம் பொருந்தியதுமான மலையின் சிகரம் இடிந்து போகவும்

கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற-அங்கே மலைப்பக்கம் -தாழ் வரை -ஆதி யற்று இடியவும் கண்களை
நாநா திசையும் சென்று பொருந்தும்படி செலுத்தி யாகவேதியின் சமீபத்துக்கு வர

அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ –அப்படிப்பட்ட நன்மையையும் சிறப்பையும் யுடைய
பிரம்மா தேவன் இது என்ன என்று திகைத்து நிற்க
யாகமாகிய -உத்சவத்துக்கு வந்த மற்றைத் தேவர் ஸ்திரமான தங்கள் ஸ்தானத்துக்குச் சென்று தாம் உயிர் பிழைத்து வந்ததற்கு மகிழ்ந்து நிற்க

அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–பக்தர்களைக் காய் விடாத எம்பெருமான்
அணை யுருவத்தில் அங்கே தடுப்பதற்கு எழுந்து அருள வேகம் கெட்டு நெருங்கினாள் –

———————

எம்பெருமான் நதி நடுவே அணையாகக் கிடந்தது அருள் செய்தல்

அன்று நயந்த வயமேத மா வேள்வி
பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர
ஆதி அயனுக்கு அருள் செய்தணை யானான்
தாதை அரவணையான் தான் -13-

நயந்த-அனுஷ்ட்டிக்கப்பட்ட
யுரை யணங்கு-ஸரஸ்வதி யானவள்
பூம்புனலாய்-அழகிய நதியாய் -ஆம்பல் நெய்தல் போன்ற -பூக்கள் கூடிய நதியாய்
கன்றி வர -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
அரவணையான் தானே அணை யானானே -ஆச்ரித ரேஷன் த்வராதிசயத்தினாலே
மழுங்காத வை நுதிய இத்யாதி

அன்று நயந்த வயமேத வேள்வி பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர -அப்பொழுது ப்ரஹ்மாவினால் விரும்பிச் செய்யப்பட அஸ்வமேதம்
என்னும் பெரிய யாகம் அழிந்து போகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகயாகி கோபித்துக் கொண்டு பெருகி வர

ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான் தாதை யரவணையான் தான் -உலகுக்கு தந்தையும் ஆதிசேஷனைப் பள்ளி கொண்டவனுமான
எம்பெருமான் ஸ்ருஷ்டிகாரணான ப்ரஹ்மாவின் மீது கருணையை வைத்து தானே அணையாகப் பள்ளி கொண்டான் –

—————

மூ வுலகினரும் அவ்வணையைக் கண்டு மகிழ்ந்து பேசுதல் —

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான்
கருணை எனும் கடல் ஆடித் திருவணை கண்டதற்பின்
திரணகர் எண்ணிய சித்திர குத்தன் தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-

திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய
மன்னி-விலக்ஷணமாக நித்ய வாஸம் -தீர்த்தம் பிரசாதியாதே -நிலை நின்ற அர்ச்சாவதார
அயனார் -உபகாரக அதிசயத்தால் பஹு வசனம்
திருவணை கண்டதற்பின் -மூன்று லோகத்தாரும் கண்டு அனுபவித்த விலக்ஷணமான சேது –
அந்த நள சேதுவில் வ்யாவ்ருத்தி
சேவை கிட்டவும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தனின் கிருபையே காரணமாகும்

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான் -பூமியில் ஸ்திரமாய் இருந்து ப்ரஹ்மாவினுடைய ஒப்பற்ற
தபஸ்ஸாகிய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி மஹா உபகாரம் செய்து அருளிய எம்பெருமானுடைய

கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின் -கிருபை என்னும் கடலில் நீராடி
அழகிய அந்த அணையை கண்ணார சேவித்த பின்பு

நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த -நரகங்களின் கூட்டத்தை கணக்கிட்டுப்
பார்ப்பவனான யமனுடைய கணக்கனான சித்ர குப்தனால் கனக்குப் பார்த்து எழுதி வைக்கப் பட்ட

சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -கணக் கொலையில் குறித்து வைக்கப் பட்ட நம்மைச்
சூழ்ந்து நிற்கின்ற பாபங்கள் முழுவதும் நீங்கப் பெற்றோம்

இப்படி வேகவதி நதியாய் வந்த சரஸ்வதி தேவியின் கோப வேகம் அடங்குமாறு
திரு வெக்கா என்னும் திவ்ய தேசத்திலே பள்ளி கொண்ட எம்பெருமான் கடாக்ஷிக்க
அதனால் அவளும் மனக் கலக்கம் தெளிந்து வர அவளையும் கூட்டிக் கொண்டு ப்ரஹ்மா அஸ்வமேத யாகத்தை நடத்தினான் –
முடிவில் பசுவின் வைபையை அக்னியில் ஹோமம் செய்தான் –

———–

புண்ய கோடி விமானத்துடன் பேர் அருளாளன் ஆவிர்பவித்தல் —

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்காத துணிந்த அயனார்
அகலாத அன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன் மலை என்றதோர் புண்ணிய கோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரம் சுடர் தோன்றியதே -15-

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்–ப்ரஹ்மா அற்பமான லோக ஸூகத்தை
பெரிதாக எண்ணுவதற்குக் காரணமாயுள்ள சூழ்ந்து நிற்கும் தம் பாபங்களை ஒழிக்க உறுதி கொண்டு

அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல் -நீங்காத பக்தியுடன் அனுஷ்டித்த அஸ்வமேத யாகவேதியின் மீது

புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்-புகழ் நிறைந்துள்ள ஸ்வர்ண பர்வதம் பொன்ற
ஒப்பற்ற புண்ய கோடி என்னும் விமானத்துடன்

பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -சூரியனும் பகலில் வைத்த விளக்கு எண்ணலாம் படி
உத்தமமான பேர் அருளாளன்–
சித்திர மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய ஹஸ்த நக்ஷத்ரம்
காலை நேரத்தில் ஆகிய தேஜஸ் ஆவிர்பவித்தது –

————–

காஹள த்வனி பிரகாரங்களை இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –
பேர் அருளாளன் திருவவதரித்ததைக் கண்டு நித்ய ஸூரிகள்
காலம் வலம் புரி வாத்தியங்களை உத்தி பெருமையை வெளியிட்டு அருளினர் –

பெருமையுடை யத்திகிரி பெருமாள் வந்தார்
பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் யவையாகும் பெரியோர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -16-

அருளாளப் பெருமாள் -கிருபையே தனக்கு ஸ்வரூப நிரூபகம்

பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார் -மிகப் பெருமையுடையரான ஸ்ரீ ஹஸ்திகிரி நாதர் எழுந்து அருளினர்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார் -நீங்காத கருணையைப் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார் -அருமையான வேதத்தின் சிகரத்தில் -வேதாந்தங்களில் போற்றப்பட்டு நின்றவர் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார் -அங்கங்களுடன் அந்த வேத ஸ்வரூபரான அருமையான ஸ்வாமி வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -பிராட்டி சப்த ஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபமாய் நிற்பவர் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார் -தம் சிறந்த கிருபையினால் உயர்ந்த சாஸ்திரங்களை உலகுக்குத் தந்தவர் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார் -தம்மிடம் அன்பற்ற நாஸ்திகருக்கு மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -பரமபதத்துக்குச் செல்ல உபாயத்தை உபதேசித்து அருளியவர் வந்தார் -என்று
நித்ய ஸூரிகள் மிக மகிழ்ந்து திருச் சின்ன ஒலி செய்தனர் –

————-

நித்ய ஸூரிகள் மேலும் திருச் சின்னம் ஒலித்தல் —

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -17 –

ஆனை பரி தேரின் மேல் -திரு வாஹனாதிகளின் மேல் –
கண் கொடுக்கும் பெருமாள் -ரஹஸ்யார்த்த ஞானம் அருளியவர் என்றுமாம்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவார் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் -பெரியாழ்வார்

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளிய பேர் அருளாளர் என்னும் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் -யானை குதிரை தேர் ஆகிய வாகனங்கள் மீது எழுந்து அருளும் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் கண்ணை அளிக்கும் பெருமாள் வந்தார் –
ஹரித வாரண ப்ருத்யர் என்பவருக்கு கண் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் -மனஸினால் அனுசந்தித்தால் வேண்டிய வரங்களைக் கொடுத்து அருளும் தேவச் ஸ்ரேஷ்டர் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் -மோக்ஷமாகிய மழையைப் பொழிகின்றவரும்
மேகம் பொன்ற நிறம் ஸ்வபாவம் யுடையவருமான எம்பெருமான் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதிமூலமே என்று
கூக்குரலிட அதனை காத்து அருள சக்தியுடையவர் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் -ப்ரஹ்மா ஏற்படுத்திய உத்தர வேதிக்குள்ளே ஆவிர்பவித்தவர் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -நித்ய ஸூரிகளால் தொழப் படுகின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் வந்தார் –

——————-

தேவர்களும் முனிவர்களும் பரவசமாய் போற்றுதல் —

திரு பரி திசைந்த மகுடமும் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும்
உருவரு உமிழ்ந்த யுதரமும் வுலகடைய நின்ற கழல்களும்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருளற விளங்கும் ஒளி என மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என வடியவர் உகந்த அமுது என
அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே -18-

உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-திரு உலகு அளந்த திருவடிகளை –
லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்-

மருவினிடை ஓங்கு புனல் என-நீர் இல்லாத பாலைவனத்தின் நடுவில் -லீலா விபூதியில் ஆவிர்பவித்து அருளிய
மலை குனிய நின்ற மலை -ஹஸ்திகிரி மேல் அஞ்சன கிரி

இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும் -இரண்டு வகையாக பிரகாசிக்கின்ற குண்டலங்களில்
எதிரே நின்று சண்டையிடுவதற்கு விரும்பியன போன்ற மீன்களும்

ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும் -ஒப்பற்ற கருணையினால் உயர்ந்து நிற்கும் பிராட்டி பிரகாசிக்கின்ற
ஸ்ரீ வத்சம் என்னும் திரு மறுவோடு நித்ய வாசம் செய்யும் திரு மார்பும்

உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும் -அசேதனத்தையும் சேதனத்தையும் ஸ்ருஷ்டித்த திரு வயிறும்
உலகோர் வந்து சரண் அடையும்படி நிற்கின்ற திருவடிகளும் -ஆகிய இவற்றுடனே
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -அருமையான வேதங்கள் ஒரே முகமாய் நின்று திருவடிகளைத்
தொழுது பேசும்படி அருளே வடிவெடுத்த பேர் அருளாளர் நின்ற பெருமை -எவ்வாறு இருந்தது என்னில்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலை வனத்தின் நடுவில் எழும்பிய ஜலம் என்னும்படி யாகவும் –
அத்திகிரி என்னும் மலை வளையும் படி நின்ற மலை என்னும்படியாகவும்
மலர் அயன் உகந்த பயன் என வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என –பகவானுடைய திரு நாபிக் கமலத்தில்
உதித்த ப்ரஹ்மா விரும்பிய பலன் என்னும்படியாகவும்
சேதனப் பொருள்கள் வசிக்கின்ற உயிர் என்னும்படியாகவும் -சகல அந்தர்யாமியாக என்றவாறு —
பாகவதர்கள் விரும்புகின்ற அம்ருதம் என்னும்படியாகவும் இருந்ததே —
ப்ரஹ்மாதிகள் முனிவர்கள் பேர் அருளாளனும் அடியாராகப் பெற்றோமே என்று நினைந்து மகிழ்ந்து போற்றுகிறார்கள் –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1-

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று சாஸ்திரங்களில் விளக்கிக்
கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து -அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல்பாதம் சாரார்த்தம்

சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள்
முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான
சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் -சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொல்லாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்

சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில் ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின்
பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகாத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய சர்வேஸ்வரன் ஜகாத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –

———–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி
செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள் நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –

கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும் பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்

கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள் கர்மா இந்திரியங்கள் மனஸ் முழுதும்
தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

————-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று

உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும் லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில்
சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் -அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்

உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும் வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்

உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

———–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-

தமனி நெறி–ப்ரஹ்ம நாடி

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்

சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்

தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்

பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

———————–

ப்ரஹ்மா பரபரப்பு மகிழ்ச்சி பயம் இவற்றையுடையவனாய்க் கிட்டிச் சென்று நித்ய ஸூரீகள்
அனுபவித்தற்கு உரிய எம்பெருமான் திருமேனியை அனுபவித்து தான் பெற்ற பேற்றை இவ்வாறு பேசுகிறான் –

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-

ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-
கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க

தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய

அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான

கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –

———-

பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -21-

கரடி கிரி -ஸ்ரீ ஹஸ்தி கிரி
நிலை கவர்தல் -நின்று அருளுகை

அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -நெருங்கியுள்ள பெரிய பிராட்டியுடனும் பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்

பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன்
சேர்ந்து இருந்த பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்

கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –

—————

திருக் கல்யாண குணக் கடலாய் இருக்கும் பேர் அருளாளனின் திவ்ய குணங்களை பிரமன் அனுபவித்துப் பேசுதல் —

வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-

தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு –

அருளாளர்–பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் –
மரங்களை வேர் தரிப்பது போலே பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்

விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்

கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-

கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின்
ஏக தேசத்திலும் முழுவதையும் காண வல்லோம் அல்லோம்

நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –

நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும்
ஸ்வபாவத்தால் பூமி தேவியைப் போன்று இருப்பார்

இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன்
கூடிய நிலையில் அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே

ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள்
முழுவதையும் ஆலோசித்தால் இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று
பிரமன் அனுபவித்து பேசுகிறான் –

மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால்
உபாயமாகவும் யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால்
பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –

————–

பேர் அருளாளன் பிரமனுக்கு அருள் புரிதல் —

எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-

அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினால்
அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது

நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு
எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும் கேட்ப்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –

உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில்
செய்ய வேண்டிய முறைப்படி பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-

————–

ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய
பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –

அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –

———————

ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –

ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –

பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –

—————

ஸ்ரீ பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-

அருளே என்று உபக்ரமித்ததையே -அருள் வரதர் -என்று உபசம்ஹரிக்கிறார்

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி
நின்றவரும் அருளே வடிவு கொண்டவருமான பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித்
துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–காளி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –

——————

ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –

வக்த்ரு வைலக்ஷண்யத்தையும் விஷய வைலக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு

புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27-

பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் -வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப்பொமியில் சத்யா விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –

—————–

இப் பிரபந்தம் பாடி வீறு பெற்றமை

உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28-

இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி –

திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு
உபாயம் வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும்
ஒப்பற்ற விரதத்தை தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும் நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –

—————-

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூழில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மன் நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –(ஸ்ரீ மெய் விரத மான்யம்)–

July 31, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————————————-

1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் /
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே

1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன் / த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம் / த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம் / கலியுகம் கலவ் வேங்கடம்
1854-1892–1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-
2 nd ஜூலை 1979
12 th ஜூலை 1937
13th – 6 – 1892
18 th -8 -1854

கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் -வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே

நீண்டதொரு காலமாக நீரினுள் மூழ்கி நின்று
காண்பவர் வியக்கும் வண்ணம் கரை வந்த வரதன் தன்னை
மாண் புகழ் கொண்ட காஞ்சி மைந்தர்கள் வணங்கும் நாளில்
ஈண்டு வந்து இன்பம் உற்றேன் இறைவனின் செயலே அன்றோ -கண்ணதாசன் -15-7-79-அன்று ஸ்ரீ காஞ்சியில் எழுதியது

———————

க ப்ரஹ்மா -ப்ரஹ்மாவே ஆராதித்த திவ்ய தேசம் காஞ்சி -பெருமாள் கோயில் -சத்ய வரத க்ஷேத்ரம் –
புண்யகோடி விமானம் -கோடி தடவை பண்ணும் பலன் கிட்டும் -அனந்த சரஸ் -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் –
யானை மலை -அத் திகிரி -அந்த -அழகிய சக்கரத்தாழ்வார் -என்றுமாம் -வரம் ததாதி வரதன்-
ஆழியான் அத்தி ஊரான் -என் நெஞ்சமேயான் -என் சென்னியான் -உள்ளில் உள்ள அழுக்கை கருதாமல் –
இதே போலே அனந்த சரஸ் -அந்த களேபரம் -கதம் ஆதாரம் இதுக்கு உமக்கு தேசிகன் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாத் –
உள்ளூவார் உள்ளத்து எல்லாம் உடன் இருந்து அறிந்து -தர்சனமே வாழ்வு –
நிதி நீர் -பக்தி சித்தாஞ்சனம் கொண்டே அறியலாம் –
கராரவிந்தே-பாலா முகுந்தன் -மார்க்கண்டேயர் -ஆலிலை -தன்னையும் கண்டு -உள்ளே புகுந்து -அனைத்தும் ஒடுங்கும் –
நாரங்களுக்குள் அவனும் -அவனுக்குள் நாரங்களும் -அக்ரூரரும் யமுனை நீராட்டம் பொழுது கண்டு அறிந்தார்-
உள்ளும் புறமும் வியாபித்து -நாமும் அத்தி வரதரை உள்ளும் புறமும் -கண்ணனின் பிரதிநிதியை இவரும் –
நாராயண அவதார அர்த்தம் விளக்கும் படி –
பாசி தூர்த்து –மானமிலா பன்றியாம் -நிலா மடந்தை தன்னை இடந்து –
நம்மை சம்சார கடலில் இருந்து இடந்து எடுத்து அருளவே இந்த கோலம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராய் அன்றோ உள்ளோம் –
நார-தண்ணீர் இருப்பிடமாக கொண்டவன் -பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -கடைந்து -இத்யாதி
தீர்த்தன்-தீர்த்தத்துக்குள் இருப்பது அதிசயமோ
பிரதம சதகே விஷ்ய வரதன் -நாலாவது பதிகம் –பத்தாம் பத்து -உடல் ஆழி -கடல் ஆழி நீர் தோற்றி அதன் உள்ளே கண் வளரும் –
அடல் ஆழி அம்மானை -ஆழ்வார் இதுக்கு ஸூசகம் ஆகவே -40-வருஷங்கள்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் -கோரா மா தவம் செய்தனன் கொல்-சேதனன் லாபம் அவனுக்கே –
முத்து மாணிக்கம் -தொண்டை நாட்டில் ஆழ்வார்களை பெற்றுக் கொடுக்க தவம் -ஆச்சார்யர்கள் பலரும் -நமக்கு கிடைக்க தவம்
முதலில் சயனம் பின்பு நின்ற திருக்கோலம் -அது இது உது -எல்லாம் உசிதம்
கிடந்து-இருந்து -நின்று -அளந்து -மீண்டும் கேழலாய் கீழ்ப் புக்கு மீண்டும் புஷ்கரணியில் தனது ஸ்வ ஸ்தானம்
எழுந்து அருளுவதையே ஆழ்வார் மங்களா சாசனம் –

———————————–

ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே

———————

ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே ஸ்ரீ எம்பெருமானை சாஷாத்காரித்ததால் ஸ்ரீ ஹஸ்திகிரி -திரு நாமம்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் திருவடிகளில் புண்டரீகம் சமர்ப்பித்ததாலும் என்னவுமாம்
திக் கஜங்கள் ஆராதித்த திவ்ய க்ஷேத்ரம் என்றுமாம்
நம் ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுக்கு விசேஷ கடாக்ஷம் செய்து அருளிய பெருமையும் உண்டே
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ தேவராஜனின் வடிவு அழகிலே ஈடுபட்டு மோகித்தவர்கள் ஆகையால் மங்களா சாசனம் அதிகம் இல்லை
அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவா -என்று அருளிச் செய்தமையால் அனைத்தும் இவனுக்கே
பரிபூர்ண சோபையிலே ஈடுபட்டு அது வாசா மகோசரமாய் இருப்பதால் வர்ணிக்காமல் இருந்தார்கள்
ஸ்ரீ எம்பெருமானார் உகந்து அருளி பிரதிஷ்டானம் செய்த மகிமையும் உண்டே
ஸ்ரீ கலியனுக்கும் தனம் இருந்தமை காட்டி அருளி உபகரித்தது
வேடன் வேடுவிச்சி ரூபமாக உபகரித்து ஸ்ரீ எம்பெருமானாரை ஸ்ரீ காஞ்சிக்கு விந்தியா பர்வதத்தில் இருந்து கூட்டி வந்து உபகரித்தது
ஸ்ரீ திருக்கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தது
ஸ்ரீ திவ்ய க்ஷேத்ர மஹிமையினால் தானே ஸ்ரீ தேவப்பெருமாளுக்கும் மஹிமை என்பதால்
ஸ்ரீ பேர் அருளாளன் மஹாத்ம்யம் என்னாமல் ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் என்ற திரு நாமம்

இந்த கிரந்தத்தில் விஸ்தாரமாக நிரூபிக்கப் போகிற அர்த்தங்களை ஸூசிப்பித்துக் கொண்டு –
விஷய பிரயோஜன அதிகாரிகளையும் காட்டா நின்று கொண்டு
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் முதல் ஸ்லோகத்திலே –
பிரம்மா ருத்ராதிகள் -சமுத்திர ராஜனின் பத்தினியான ஸ்ரீ கங்கைக்கு உத்பத்தி ஸ்தானம் அன்றோ அரனின் சடா முடி –
இவர்கள் வணங்க பாரிஜாத மொக்குகளால் அலங்க்ருதமான திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணக் கடவோம்-
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே -என்றபடி –
பாவன தமமான ஸ்ரீ கங்கைக்கும் பாவானத்வம் அளிக்கும் திருவடி அன்றோ –

அவாப்த ஸமஸ்த காமன் பரிச்சின்னமான தேச விசேஷத்திலே சாந்நித்யம் பண்ணி அருளுவதும் –
உபய விபூதி நாதன் தனக்கு ஒரு இருப்பிடம் இல்லாதவன் போலே இங்கே அல்ப தேசத்தை
தனக்கு இருப்பிடமாக கொண்டு அருளுவதும் –
சர்வ சேஷி இந்த ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு அலங்காரமாக -வட மா மலை உச்சி -என்றபடி தன்னை சேஷமாக கொண்டு அருளுவதும் –
உத்தர வேதியிலே ஆவிர்பவித்து சகல மனுஷ நயன விஷயதாங்கனாய் இருக்கும் தன்மையும் -அருளிச் செய்து –
இக்கிரந்தத்துக்கு விஷயம் அவனது பரம கிருபையும் –
அதன் மூலமாக அவன் திருவடிகளே பிராப்யம் என்றும் நிரூபிக்கப் பட்டதாகிறது –

————————-

இவ்வர்த்த விசேஷங்களுக்கு ஹேதுவை நிரூபித்து அருளுகிறார்

வாழி அருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு –1–

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க,
பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க,
ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

கிருபா குணமே அன்றோ நிரூபணம் -பூமிக்கே அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி –
அதுக்கும் அலங்காரமாய் அன்றோ இவன் –
ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ ஸூக்திகளையே காலக்ஷேபமாக உடையவர்களுக்கும் மங்களா சாசனம் –
மற்று-என்று உபாயாந்தரங்கள் -பக்த்யாதிகள்
பரத்வம் கழற்ற உண்ணாமல் ஸ்வரூபத்தைப் பற்றி இருக்கும் -தாயாயாதி குணங்களோ ஸ்வரூபத்திலும் விஞ்சி இருக்கும் –
சாதகனுக்கு என் வசமாய்-என்னைப் பற்றும் சாதனமும் சரண நெறி அன்று உமக்கு சாதனங்கள்
இந்நிலைக்கு ஓர் இடையில் நில்லா -என்றவாறு –

———————-

சகல லோகங்களுக்கும் ஹிததம புராண உத்க்ருஷ்டமான ஸ்ரீ பேர் அருளாளன் பெருமையை –
பாவ ரஸ தாளங்களுடன் -அடியார்களின் ஹர்ஷத்துக்கு உறுப்பாக பண்ணும் இசையும் திகழப் பகர்கின்றோம் –
இத்தைக் குறிக்க கொண்டு கேட்டு அருள்மின்

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈரேழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரீகத்து அயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்யத்தை உகந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நில மெய் விரதத்தில் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறிப்பாகக் கொண்மினீரே—2–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் அமுது செய்த சேவை ஸ்ரீ ஆழ்வாருக்கு அருளிச் செய்தது போலே
ஸ்ரீ தேவப்பெருமாள் ஹவிஸ்ஸை அமுது செய்தபடியே அர்ச்சா ரூபத்தில் சேவை சாதிக்க பிரார்த்திக்கிறார்
சர்வ உத்க்ருஷ்டமான அருள் குணத்தை அருளிச் செய்வதாக பிரதிஜ்ஜை செய்து அருளுகிறார்

——————-

வம்மின் புலவீர் அருளாளப் பெருமான் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட பேர் அருளாளர் என்றும்
வியப்பால் விருதூதும் படி கரை புரண்ட கருணைக் கடலை
எவ்வண்ணம் பேசுவீர் ஈது என்ன பாங்கே-3-

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு
சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு
நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது-
அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.
கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?

பூர்ணமாக வர்ணிக்க முடியாவிட்டாலும் சக்திக்குத் தக்க சத்தைக்காக அனுசந்திக்கிறேன் என்றவாறு
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ எம்பெருமானை –
அருளாழி அம்மானைக் கண்டக்கால் –
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட ஸ்ரீ பேர் அருளாளன் பெருமை பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -என்று
இப்புடைகளில் ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த படியே –
கால ஷேபத்துக்காக அறிந்த அளவில் ஸ்ரீ பகவத் குணங்களை வர்ணிக்க உபக்ரமிக்கிறோம் என்றவாறு –

—————————

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குத் பரம் ஓன்று இலதே–4-

ப்ராப்யமும் பிராபகமும் அவனே-என்று தத்வ ஹித புருஷார்த்தங்களை-அர்த்த பஞ்சக ஞானம் – நன்றாக அறிந்த நம் ஸ்ரீ பூர்வர்கள் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இத்யாதிகளில் படியே -உபதேசிக்க –
இசையில் -அத்வேஷம் மாத்திரம் -இல்லாமால்
திரு அருளால் -அபிமுகனாக்கும் ஸ்ரீ -அகில ஜெகன் மாதா -பலப்ரத உன்முகனாய் நின்று அருளும் நம் ஸ்ரீ தேவப்பெருமாள் –
நாம் இச்சைப்படும் காலத்தில் அப்பொழுதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய
திருவடிகளைக் கூட்டி அருளுவர்-என்றதாயிற்று
சரணமாகும் தான தாள் அடைந்தார்கட்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அன்றோ
இங்கு இருக்கும் காலத்தில் கால ஷேப அர்த்தமாக குண அனுபவம் பண்ணுவது உசிதம் என்பதால்
அதில் பிரவ்ருத்தி செய்யப்படுகிறது என்றதாயிற்று

—————————-

சர்வ சேஷியாய் -சர்வ நியந்தாவாய் -சர்வ ஆதாரமாய் -சர்வ காரணமாய் -அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –
கல்யாண குண ஏக தானனாய் -தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று –
மஹாதி ப்ரஹ்ம அண்டாந்தம் தாமாகவே ஸ்ருஷ்டித்து – -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்து
திசைமுகன் கருவுள் வீற்று இருந்து-விவித விசித்திர சந்நிவேஷங்களாகப் பகுத்து –
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்-பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாகி நின்ற –
தனக்கு சரீரமாக உடையவனால் சாஷாத்தாக திரு நாபி கமலத்தில் இருந்து உண்டாகி சிஷ்யனுமாய் –
கறந்த பாலுள் நெய்யே போல் -இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெரு மாயனை
ஸூவ யத்னத்தால் இளைப்பினை இயக்கம் நீக்கி இத்யாதி –

வம்பவிழ் போதமர் மாதர் உகந்த வம் மா நிதியை
தம் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகில் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போல் அழுதனனே–5-

முகிழ் மதி -சுருங்கின ஞானம் / வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் /
மொய்க்க -நெய் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போலே /வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்

—————————-

நின்றவா நில்லா அந்தக்கரணமே இதுக்கு காரணம் -இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினை கூறு செய்வதாக
ஏறவும் இழியவும் நெடும் காலம் காய கிலேசம் பட்டோம் -என்று
நெஞ்சு உருகி கண் பணித்து நெடு மூச்சு எறிந்து நிலத்தைப் பார்த்து இருந்தான் ஸ்ரீ நான்முகன்

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முன்னம்
நெடும் காலம் இந்நிலமே நிலை யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மை இது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே —

சடங்கால் –அங்கங்களினால் –
இடம் காத்து இருந்த -தன்னுடைய ஸ்தானத்தை வேறு எவரும் ஆக்ரமிக்காதபடி காத்துக் கொண்டு இருந்த
ஸ்ரீ பகவத் ஆனந்த அனுபவத்தால் அடிக்கழஞ்சு பெற்றுப் போக்கக் கடவ காலத்தை –
பழுதே பல பகலும் போயின என்று தன்னையே நிந்தித்து
இந்நிலமே -அல்பம் அஸ்திரம் பலம் அன்றோ இங்கு –

—————————-

இப்படி நிர்வேதப்பட்ட நான்முகன் தர்ம அனுஷ்டானத்துக்கு உசிதமான ஸ்தானத்தில் புகுந்தான் –

விண்ணுலகில் வீற்று இருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்ததாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
எண்ணிய நற் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவமும் எட்டு இடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எல்லாம் பலிக்கும் என்று பாரதத்தை பங்கயத்தோன் படிந்திட்டானே -7-

கருத்துறவே -மனசிலே பிரதிஷ்டனமாம்படி
அதல -விதல -நிதல -தலாதல-மஹா தல -ஸூதல –பாதாள -கீழ் லோகங்கள் ஏழும்
புவ-ஸூவ -மஹ -ஜன -தப – சத்யம் -பூமி -மேல் லோகங்கள் ஏழும்
ப்லக்ஷ-சால்மலி -குச-க்ரௌஞ்ச -சாக புஷ்கர-ஜம்புத்வீபம் -ஏழு த்வீபங்கள் –
எட்டு இடங்கள் -பாரத வர்ஷம் தவிர -கிம்புருஷ -ஹரி -இலாவ்ருத-ரம்யக -ஹிரண்யக -குரு-பத்ராஸ்வ -கேதுமால -என்ற வர்ஷங்கள்-

——————–

எத்திசை நிலனும் எய்தி யாரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்றதொரு உரையின் சார்வால்
அத்திசை சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
உத்தர வேதி செய் என்று உரை அணங்கிறை உரைத்தான் -8-

உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று
ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல,
ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.

—————————

இந்த ஸ்ரீ திவ்ய ஷேத்ரமே ஸ்ரீ ப்ரஹ்மாவுக்கு அபேக்ஷிதமான சர்வ பாவ நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கும் என்று
அனுசந்தித்த படியை அருளிச் செய்கிறார்

உத்தம அமரத்தலம் அமைத்தது ஒரு எழில் தனு கணையால்
அத்திற வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்து உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி அத்திகிரியே –9-

அத்தன் -ஆப்தன் / உத்தம -சர்வ உத்க்ருஷ்டமான / சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை -என்பது போலே –
பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி உதிர வில் வளைத்தோன் -கிள்ளிக் களைந்தான் – அநாயாசேந சேஷ்டிதம் அன்றோ –

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால்
அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்;
மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான
என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து
நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

———————————

இவ்வண்ணம் யாகம் செய்யும் இடமும் படை வீடுமாக -க -ப்ரஹ்மாவால் -என்பதால் ஸ்ரீ காஞ்சீ
ஸ்ரீ பூமாதேவிக்கு அரை நூண் மாலை போலே இருப்பதாலும் ஸ்ரீ காஞ்சீ
ஸ்ரீ காஞ்சீ ஆபரணத்துக்கு துல்யமான நகரம் –

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வன்மை ஏழு ஈர் இரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கு வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் ஒரு காலும் அழியாத அழகினாலும்
மன் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னு மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-

அயோத்யா வடமதுரை மாயை காசீ காஞ்சீ அவந்திகா வாரணாஸீ துவாரகா -ஏழும் முக்தி தரும் திவ்ய ஷேத்ரங்கள்

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது.
அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து
தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற
மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற ,
கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த,
குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல
மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.

—————

இனி ப்ரம்மா யஜ்ஜைத்தை ஆரம்பித்து ரித்விக்குகளை வரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
தன் புத்ரன் வசிஷ்டரை ராஜ்ஜாபித்த பிரகாரத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார்

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அழைப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றாட்டானே –11-

காமங்கள் -காம்ய கர்மங்கள் /கைதவம் -கபட கார்யம்-ஆஸ்ரயண வேளையில் வேதங்களைக் கைப்பற்றி போக வேளையில் கை விடுபவர்கள்
பூ மங்கை கேள்வனை -மிதுனத்தைப் பற்ற -ராவணாதிகளைப் போலே அல்லவே
போற்ற -ஸ்துதிக்க -நமஸ்கரிக்க ஆராதனம் செய்ய என்றபடி
தனி இருந்து -பிரணய கலகத்தில் தனியே இருந்து தபஸ் ஸூ இருந்தமை ஸூசிதம்
கோபத்தில் இருக்குமவளை சமாதானப்படுத்தி அழைத்து வரக் கூடிய வாக் சாமர்த்தியம் உள்ள நன் மகன் –

—————–

சமாதானம் அடையாமல் வராததால் ஸ்ரீ சாவித்ரி போல்வாரை வைத்து அஸ்வமேத யாகம் பண்ண
கோபித்து வேகவதி நதியாகப் பெருகி அளிக்க உபக்ரமித்தத்தை அருளிச் செய்கிறார்

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயருமன்ன வரசேறி வருவாள்
அத்தன் அயனத்த நயனுத்திதனை யத்திதென யுத்தி புரியாள்
நன்னடை விடா நடமிது என்ன நடவா நடுவுள் நண்ணு குடகேறி இழிவாள்
நற்பதிகள் அற்பதிகள் கற்புரள வற்புத மருக்கதியினால்
கன்னடை விடா விடமிலுன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக்
கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா யமரர் மன்னு பதியேறி மகிழ
அச்சுதன் அணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்று அணுகினாள்–12-

அன்ன வடிவாள் –ஹம்சம் பொன்ற சரீரம் –வெண்மை நிறம் கொண்டவள் —
அசையும் அன்ன நடையாள் -மெதுவாக சஞ்சரிக்கும் ஹம்ச கதி யுடையவன்
உயருமன்ன வரசேறி வருவாள் -உயர்ந்த –ஆகாசத்தில் பறக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டத்தில் ஏறி வருவாள்
இப்படி இருப்பவள் வேகவதி நதியாக வந்து கிரி கூடங்களில் ஏறி விழுவது எப்படி ஸம்பவித்ததோ-ஆச்சர்யம் த்யோதிதம்
அத்தன் அயன் -ஆப்தனான ப்ரம்மா -கோபத்துக்கு காரணம் அவன் இல்லை என்றவாறு
அத் தநயன் உத்திதனை -வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –
நன்னடை -நல்ல நடை -வேகமான நடையை
விடா நடமிது என்ன நடவா -விடாததான நடனம் இது என்று சொல்லும்படி -நாட்டிய விசேஷம் என்று சொல்லலாம்படி
நடந்து கொண்டு இருக்கச் செய்தே
நடுவுள்-நடுவிலே அதி கம்பீரமாக பிரவஹத்திக் கொண்டு இருக்கையில்
நண்ணு குடகேறி இழிவாள்-அருகில் இருக்கும் கற் கூட்டங்களின் மேல் ஏறி இறங்கும் ஸ்ரீ சரஸ்வதி
நற்பதிகள்-நல்ல சமமான பிரதேசங்கள்
அற்பதிகள் -அப்படி அல்லாத மேடு பள்ளமான ஸ்தலங்கள் இவைகளில்
கற்புரள-கற்கள் புரண்டு வரும்படியாக
வற்புத மருக்கதியினால்-ஆச்சர்யமான வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கன்னடை விடா விடமில் கல்லிலே போவதை விடாத ஸ்தலம் -கல்லில் மேலே சென்றமையை சொன்னவாறு
உன்னதி சிறா –உயர்ந்து இருப்பதினால் சிறுமை பெறாத -மிகவும் உயர்ந்ததாக என்றவாறு
விகட மன்னு கிரி கூட மிடியக் -விசாலமான மிகவும் உறுதியான மலைகளினுடைய சிகரங்கள் இடியும்படி
கட்ட விடை–கட்டப்பட்ட அடக்க முடியாத வ்ருஷபங்கள்
யிற்று விழ– சந்தி பந்தங்கள் இற்றுப் போய் கீழே விழும்படி
முற்றும் விழி யுற்றடைய விட்டு –நான்கு பக்கங்களிலும் விழித்துப் பார்த்து -எல்லாவற்றையும் விட்டு –
உயிர் தப்பினால் போதும் என்று புத்ராதிகளையும் கூட த்யஜித்து
அருகுற-ப்ரம்மா அருகில் சென்று தங்களை ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டிய எருதுகள் கீழே விழுந்ததால் ஆவாரார் துணை என்று எங்கும் பார்த்து யாரையும் காணாமல்
தனித்தனியே அவர்கள் நீந்திக் கரை சேர என்றுமாம்
அன்ன நய-ஹம்சத்தை அடையாளமாக யுடைய நியாயத்தை உடையவனாக -அதாவது பிரணய குபைத்தையான பத்தினியை
சாந்தம் செய்ய புத்ரனை அனுப்பியும் வாராமையாலே சாஸ்த்ர விதிப்படி வேறு பத்னிகளைக் கொண்டு நியாமாமாக யஜ்ஜம் செய்தவனான
சீர் அயன்-குணவானான ப்ரம்மா
இது என் என விழா யமரர் –இது என்ன ஆச்சர்யம் என்று மஹா உத்சவத்துக்கு வந்த தேவர்கள்
விஸ்மிதனாய் நிற்க
மன்னு பதியேறி மகிழ -ஸ்திரமான தங்கள் ஸ்தானங்களில் ஏறி -இன்று செத்து பிழைத்தோம் என்று மகிழ
அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன் தனக்கு திருப்பள்ளியாகிற ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
தன்னுடைய வேகம் எல்லாம் அடக்கிக் கொண்டு லஜ்ஜித்து அணுகினாள் சமீபத்தில் வந்தால் என்றுமாம்

——————-

ஸ்ரீ அரவணையோடே கூட ஸ்ரீ திரு அணையாக கிடந்த அளவிலே கண்ணும் மனமும் களிக்கக் கண்டு இவ்வண்ணம் பேசினார்கள் –

அன்று நயந்த வயமேத மா வேள்வி பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர
ஆதி அயனுக்கு அருள் செய்தணையானான் தாதை அரவணையான் தான் -13-

அன்று நயந்த வயமேத மா வேள்வி-அப்பொழுது அனுஷ்ட்டிக்கப்பட்ட அஸ்வமேதயாகம்
பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர–நசிக்கும்படி சரஸ்வதி அழகிய நதியாய் – கீழே நிரூபித்த பிரகாரமாய் –
ஆம்பல் நெய்தல் பூக்களுடன் கூடிய நதியாக -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
ஆதி அயனுக்கு அருள் செய்தணையானான்-சர்வ ஜகத் காரணமானவன் பிரம்மாவுக்கு கிருபை பண்ணி
தாதை அரவணையான் தான் –அவனுக்கு பிதாவாகிய ஆதிசேஷனை சயனமாகக் கொண்ட சர்வேஸ்வரன் தானே
திரு அணையானான்-மழுங்காத வைனுதியால் இத்யாதிப்படியே வேறு ஒருவரைக் கொண்டு செய்யாமல்
தானாகவே செய்து அருளினான் என்றவாறு –

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால்
நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-
அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

———————————-

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான்
கருணை எனும் கடல் ஆடித் திருவணை கண்டதற்பின்
திரணகர் எண்ணிய சித்திர குத்தன் தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-

மன்னி -தீர்த்தம் பிரசாதித்துப் போகாமல் ஸ்திர பிரதிஷ்டனாய் அர்ச்சா ரூபம் கொண்டு சேவை
அய்யனார் -ப்ரம்மாவினுடைய -உபகார அதிசயம் தோற்ற பஹு வசனம்
திரு வேகா சேதுவைக் கண்ணால் கண்டபின்பு -இதற்கும் அவன் கிருபைக்கடலே காரணம் –
திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய

பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த
எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு
சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.

——————

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்காத துணிந்த அயனார்
அகலாத அன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன் மலை என்றதோர் புண்ணியகோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரம் சுடர் தோன்றியதே -15-

அல்ப ஸூகத்தையே பிராப்யமாக எண்ணியதால் தானாகவே சூழ்த்துக் கொண்ட வினைகளை நிவர்த்திப்பித்துக் கொள்ள
அகலாத அன்புடனே வினை தீர்க்கத் துணிந்து -அநந்ய பிரயோஜனனாய் என்றவாறு –

சித்திரை மாதம் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய மங்களகரமான ஸ்ரீ ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஆவிர்பவித்து அருளினான்
ஸ்ரீ நித்ய ஸூரிகள்-குழாங்கள் வாயால் ஊதப்பட்ட காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் ஆர்த்தன –

பெருமையுடை யத்திகிரி பெருமாள் வந்தார்
பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் யவையாகும் பெரியோர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -16-

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -16-

மருவிலர்க்கு -விஸ்வாசம் இல்லாதவர்களுக்கு
மயக்குரைக்கும் மாயோன் -வ்யாமோஹ சாஸ்திரங்கள் உபதேசிக்கும் வஞ்சகர்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் -கிருபையே நிரூபகம்
கண் கொடுக்கும் -ஞான சஷூஸ் –ரஹஸ்யார்த்த ஞானம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இவர் உபக்ரமித்த
ஸ்ரீ வசன பூஷணம் இரண்டு ஆற்றுக்கு நடுவிலே நிகமித்தார் அன்றோ –
முகில் வண்ணர் -ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் அன்றோ ஞான பிரதத்வம் –

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய்,
ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார்,
நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.
பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார்.
வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார்.
பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.
நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார்.
அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில்
கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார்.
தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார்.
யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர்,
பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

————————

ஆயிரம் கோடி ஆதித்யர்கள் ஓன்று சேர உதித்தால் போலே தேஜஸ்ஸூ தோன்றிற்று
இப்படி ஆவிர்பவித்து அருளின ஸ்ரீ பெருமாளுடைய மஹா தேஜஸ்ஸிலே காள மேக ஸ்யாமளனான படியைக் கண்டு –
காந்தியாகிற மழையைப் பொழியும் கருத்த மேகம் போலே -ஹர்ஷம் -விஸ்மிதம் இவற்றால் – பரவசராய் இங்கனம்
திரு அவயவ சோபையை பேசி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார்–

திரு பரி திசைந்த மகுடமும் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும்
உருவரு உமிழ்ந்த யுதரமும் அலகடைய நின்ற கழல்களும்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருளற விளங்கும் ஒளி என மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என வடியவர் உகந்த அமுது என
அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே -18-

திரு பரி திசைந்த மகுடமும்–ஸூர்ய சத்ருச கிரீடமும்
மதி திகழ்ந்த வதனமும்-பூர்ண சந்திரன் பொன்ற திரு முக மண்டலமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும் -இரண்டு கபோலங்களிலும் தொங்கும் குழல்களிலே
ப்ரீதியுடன் ப்ரவர்த்தித்து இருக்கும் மகரங்களும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணி அருளும்
ஸ்ரீ வத்ஸம் திகழும் திரு மார்பும்
உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-ஸ்ரீ திரு உலகு அளந்த திருவடிகளை -லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலைவனத்தில் தானே கிளம்பா நிற்கும் ஜலம் போலே –
இந்த சம்சாரத்திலே ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாணை கதானனான ஸ்ரீ எம்பெருமான் –
பர்வதம் வணங்கும்படியாக அதன் மேல் நின்று அருளிய மலை போலே
மருளற விளங்கும் ஒளி என -அஞ்ஞானங்கள் போக்கும் ஜ்யோதிஸ் போலே
மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என -சரீரத்தில் வசிக்கும் ஜீவாத்மாவைப் போலே
வடியவர் உகந்த அமுது என -அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே –

——————-

இவ்வண்ணம் தொழுது எழுந்து விண்ணப்பம் செய்தார்கள்–

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று
சாஸ்திரங்களில் விளக்கிக் கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து –
அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள
சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள் முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது
பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற
பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் –
சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொள்ளாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்
சித்தரத்தொழிலை-என்பதால் பிரகிருதி சம்பந்தத்தினால் ஆத்மாக்களுக்கு தேவாதி பேதங்கள் என்பது த்யோதிதம் –
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில்
ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின் பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால்
வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் ஜகத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே –எல்லையில்லா பெருமை உடையவன் என்றதாயிற்று –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை
ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை
பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள்
நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும்
பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை
வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள்
கர்ம இந்திரியங்கள் மனஸ் முழுதும் தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும்
லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில் சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் –
அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும்
வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான
ஸ்ரீ ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த
ஸ்ரீ பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்-

ஸ்ரீ பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

——————————————————-

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-

ப்ரஹ்மா பரபரப்பு மகிழ்ச்சி பயம் இவற்றையுடையவனாய்க் கிட்டிச் சென்று ஸ்ரீ நித்ய ஸூரிகள் அனுபவித்தற்கு உரிய ஸ்ரீ எம்பெருமான் திருமேனியை
அனுபவித்து தான் பெற்ற பேற்றை இவ்வாறு பேசுகிறான் –

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய
நின் தாள் இணைக்கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் -என்கிறபடி வாழ்ந்து கொண்டு இருக்கும் -நித்ய ஸூரிகள்
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான-
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -என்கிறபடியே சர்வலோக சம்ரக்ஷணம் செய்து அருளுபவனான –
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
ஸ்ரீ பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –

—————————————————-

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -21-

பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –
கண்கள் காண்டற்கு அரிய-காயாம்பூ வர்ண காந்தியுடைய சர்வேஸ்வரனை யஜ்ஜ வேதியிலே கண்டு-
ஹர்ஷார்ணவத்திலே மூழ்கி -மொய்மாம் பூம் பொழில் படியே –

அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
ஸ்ரீ பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட ஸ்ரீ பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -நெருங்கியுள்ள ஸ்ரீ பெரிய பிராட்டியுடனும் ஸ்ரீ பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்
பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன் சேர்ந்து இருந்த
பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து
நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –

————————————————–

வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-

திருக் கல்யாண குணக் கடலாய் இருக்கும் பேர் அருளாளனின் திவ்ய குணங்களை பிரமன் அனுபவித்துப் பேசுதல் —

அருளாளர்–ஸ்ரீ பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் -மரங்களை வேர் தரிப்பது போலே
ஸ்ரீ பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்
விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய
அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-
கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின் ஏக தேசத்திலும்
முழுவதையும் காண வல்லோம் அல்லோம்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –
நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும் ஸ்வபாவத்தால்
ஸ்ரீ பூமி தேவியைப் போன்று இருப்பார்
இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன் கூடிய நிலையில்
அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள் முழுவதையும் ஆலோசித்தால்
இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று பிரமன் அனுபவித்து பேசுகிறான் –

தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு
மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவாவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால் உபாயமாகவும்
யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால் பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –

——————————————

எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-

ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பிரமனுக்கு அருள் புரிதல் —
இப்படி பரவசனாய் -முகிழ்த்த உடம்பும் -பனி அரும்பின கண்களும் -தழுதழுத்த மிடறும்-தளர்ந்த நிலையுமாய்க் கொண்டு –
தனது அதிகாரச் சுமையை மறந்து -அடிமையிலே அடி கொண்டு விண்ணப்பம் செய்ய
உனக்கு வேண்டிய வரங்களைக் கொள்வாய் என்று அருளிச் செய்தார்

அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினாள் அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது
நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும்
கேட்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –
உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில் செய்ய வேண்டிய முறைப்படி
ஸ்ரீ பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-

—————————————

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-

ஸ்ரீ ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –
அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –

————————————————————–

ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –

நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான ஸ்ரீ பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –
ஸ்ரீ பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
ஸ்ரீ பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –

——————————————————–

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி நின்றவரும்
அருளே வடிவு கொண்டவருமான ஸ்ரீ பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி
அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின்
குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–கலி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஸ்ரீ ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –

————————————————–

புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27- ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –

வக்த்ரு வை லக்ஷண்யத்தையும் விஷய வை லக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –

பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் –
வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ஸ்ரீ ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப் பூமியில் ஸ்ரீ சத்ய விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –

இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு

—————————————————–

உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28-இப்பிரபபந்தம் பாடி வீறு பெற்றமை –

இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி

திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ஸ்ரீ ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு உபாயம்
வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும் ஒப்பற்ற விரதத்தை
தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான ஸ்ரீ எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும்
நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -ஸ்ரீ சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து ஸ்ரீ வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –

—————————————-

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளில் ஈடுபாட்டினால் பாடினமை –

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூலில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த ஸ்ரீ பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸ்ரீ ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் –பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம் என்கிறார்

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

இப்பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்க்கு-சரீர அவசானத்திலே –உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி ஸ்ரீ காளமேகம் வழித் துணையாம்-

—————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போய்
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்
அந்த முக்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள் -என்பது போன்றவைகளில் சொல்லுகிறபடியே
அங்குத்தை அப்சரஸ் ஸூக்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார் -என்றபடி
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள -10-9-10-என்றதனோடு
வேய் மரு தோள் இணை அணைவர் -என்கிற இதனோடு வாசி இல்லை
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10-என்னக் கடவது அன்றோ

———————-

நிகமத்தில்
அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும்
மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – ஈடுபடுகிறாள் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-

இவையும் பத்து அவற்றின் சார்வே –அவை -என்கிறது கீழில் போந்த ஸ்ரீ திருவாய் மொழிகளையாய் –
அவற்றின் அருகே இதுவும் ஒரு ஸ்ரீ திருவாய் மொழியே என்ற ஆச்சர்யத்தில் ஆக்கி
ஆயிற்று ஸ்ரீ சீயர் அருளிச் செய்ததும் -9000 படி வியாக்யானம் செய்ததும்
அன்றிக்கே –
கீழ் ஸ்ரீ திருவாய்மொழிகளுக்கு சொன்ன பலம் இதற்கு பலம் என்கிறது ஆகவுமாம்
அன்றிக்கே
அவை -என்கிறது-மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை -என்கிறவற்றையாய்-இவையும் அவற்றோடு ஒக்கும் என்னுதல் -என்றது
அதனுடைய பலமே இதற்கும் பலம்-அது பலத்தோடு கூடியதாயின் இதற்கு பேறு உண்டாம் -என்றபடியாம் –
அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே
இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -என்றவாறு –

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம் என்கிறார்-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

இந்தப் பத்தும் கற்றார்க்கு –ஸ்ரீ தாமோதரன் தாள்கள் தவ நெறிக்கே சார்வே -என்கிறபடியே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே –
இனி அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

————————

நிகமத்தில்
இப்பத்தும் அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஸ்ரீ ஆழ்வார் தம்மைப் போலே பகவான் உடைய
விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும் என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

இப்பத்து தானே இதனைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்
ஸ்ரீ ஈஸ்வரன் கொடுத்த பேறு-சாதர்மயம் – ஸ்ரீ ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை இறே-

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

கேட்ட போதே இன்பம் பயப்பது -என்றபடியே
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகா கபி சம்ச்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யஜஹார ஹா -சுந்தர-91-1-என்கிறபடியே
செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே
அதற்க்குக் காரணம் என் என்னில் –நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கையாலே
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே -8-5-11- என்னா செந்தமிழ் பத்தும் -என்றார் அன்றோ இவர் தாமே –

——————–

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி
திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மகத்து முதலானவற்றின் உருவமான ப்ரக்ருதி நிரசனமான -இச் சரீரத்தினை
ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு-பெரிய செருக்கோடு சொன்ன இப் பத்தும் -என்னுதல் –
ஸ்ரீ திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
ஸ்ரீ அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று
ஸ்ரீ திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ
ஸ்ரீ எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 -என்றும் சொன்னார்கள் அன்றோ –

———————

நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

இப் பத்தினை அப்யஸிக்க கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
நிரதிசய -எல்லை இல்லாத தேஜோ மயமான ஸ்ரீ பரம பதத்தை ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் – கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

——————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – நித்ய ஸூரிகளோடு ஒப்பர் என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

இப் பத்தினை அப்யஸிக்க -கற்க வல்லார்
அப் பரம பதத்திலே ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய்
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

——————-

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -இவற்றையே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்
ஸுவ்ந்தர்யாதி விசிஷ்டமான -வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்
அபரிமித -அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
ஸ்ரீ லஷ்மீ பூமா நீளா -ஸ்ரீ திருமகள் ஸ்ரீ மணமகள் ஸ்ரீ ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைனதேயாதிகள் -ஸ்ரீ நித்ய ஸூரிகள் -ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் –
ஸ்ரீ பெரிய திருவடி-அனவரத பரிசர்யமான – எப்பொழுதும் அடிமை செய்யும் –
சரண நளினனாய் -திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்-ஸ்ரீ சர்வேஸ்வரனாய்
ஸ்வ விபூதி பூதரான -தன்னாலே ஏவப்படும் பிரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற ஆஸ்ரயிக்கும் -அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று நீர்த்துக்கராய் -துக்கம் அற்றவராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான – எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஸ்ரீ ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-பக்தி பலாத்கார பூர்வகமாக – ஆயிரம் ஸ்ரீ திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரம பக்தியால் பிறந்த அந்தாதியான இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –
கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –
இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ
ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்பது என் எண்ணம் –
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-

ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு -அப்யஸிக்கைக்கு ஈடான -தகுதியான அதிகாரத்தை
உடையராய் இருப்பார்கள் ஆகில்-அவர்கள் பண்டே நமக்கு ஸ்ரீ நாத பூதர் -தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே
இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு ஸ்ரீ நாதர்

படிக்கிறவன் – நிகழ் காலத்தில் சொல்லாமல்–படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-

—————————

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்
இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று

இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம்
மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஸ்ரீ ஜிதந்தா ஸ்தோத்ரம்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –

———————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார் ஸ்ரீ பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே –என்கிறார் –

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்
பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்-அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –
ஸ்ரீ பரம பதத்தில் செல்லுதல் பிராப்தம் -இயல்பாகவே இருக்கும் –-யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப் பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே இருக்கும் அன்றோ –

————————–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

இத் திருவாய்மொழி ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே-ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு ஏறான ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

———————-

நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-

என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு
பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-

———————-

நிகமத்தில்
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து
அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –வசனத்தை லபித்து –பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்
கானல் –ம்ருக த்ருஷ்ணிகை –பேய்த் தேர்
இங்கும் – இங்கே பிறக்க இருக்காமல்- ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –

————————

நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

இப் பாசுரத்தை கேட்டார்க்கு-சம -அக் காலத்தில் போலே
எல்லாக் காலங்களிலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று இருப்பது -என்றபடி –
ஸ்ரீ பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது
கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

———————

நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

இஹ -இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மல்லிகை மணம் கமழ்வர் –
மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்
இவருடைய மநோ ரதம் -எண்ணம் அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

——————-

நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

இப்பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

————————–

நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு
அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

ப்ரீதி பூர்வகமாக முன்னாகப் பாடி இருந்த இடத்தில் இராதே ஆடி
ப்ரீதியினால் பிரேரிதராய் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு அவன் திருவடிகளில் விளுங்கோள்
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி எட்டாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய் மொழியில் சொன்ன அர்த்தத்தை ஸங்க்ரஹேண- சுருக்கமாக சொல்லி
இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

அநாதி காலம் ஸ்ரீ பகவான் இடம் விமுகராய் -விருப்பு இல்லாதவர்களாய் –
விஷயாந்தர ப்ரவணராய் -வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -–
அசத் சமராய் -இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே
இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு – சந்தமேனம் -இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்-

———————–

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய
எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

அவித்யாதி தோஷங்களும் -அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும்
இவர்களுக்கு இல்லை –
இஹ -இவ் உலகத்தோடு பர -மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –-இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை
செய்து முடித்தவர்கள்-யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
பர -மேல் உலகத்தில் –
பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள்
அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

இப் பூமிப் பரப்பை அடைய அனுசந்தித்தால் -நினைத்தால் பரப்பேயாய்
ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

———————

நிகமத்தில்-இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில்
ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே
இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

இந்த உலகத்திலே இப் பிறப்பிலே திவா ராத்திரி விபாகம் – பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட வந்து முகம் காட்டாத அவத்யத்தை -தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஸ்ரீ ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல் முகம் பெறுகைக்காக பிரஜைகளை ஸ்லாகிப்பாரை –
குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

—————————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-

சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் –

————————–

நிகமத்தில்
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

சன்ம மானது விட்டுப் போம்படியாக நோக்கும்-அது செய்யும் இடத்தில்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் – அதாவது
இப் பிறவிக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை-என்றது
இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –

————————

நிகமத்தில்
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் -என்கிறார்

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

சர்வ -எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-ஸ்ப்ருஹணீயமான -விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் –
முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான -ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

———————–

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய வ்ருத்தியிலே -கைங்கர்யத்திலே அந்வயிக்க -சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் வை லக்ஷண்யத்தையும் -சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் அப்யசித்தார்களுடைய ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் -பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —

———————

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

தாங்கள் ஒன்றனை நினைக்க-பரிகரம்-தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை
அன்றிக்கே ச பரிகரமாக குடும்பத்தோடு ஸ்ரீ பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –

ஸ்ரீ திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே ஸ்ரீ செல்வ நம்பி திரு மாளிகையிலே போய்ப் புக்கார்களாக
ஸ்ரீ நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க-ஸ்ரீ நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் ஸ்ரீ நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –ஸ்ரீ பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –

ஸ்ரீ தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
ஸ்ரீ பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்-அவர்கள் படியே யாகப் பெறுவர்கள்-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால்
ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-

இவருடைய தசையை -நிலையை -அனுசந்தித்தால் -நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?
கண்டு –நமக்குத் தஞ்சம் என்று அனுசந்தித்து -நினைத்து.
இரவு பகலில் வினை போம். இராப் பகல் மோதுவித்திட்டு’ என்ற துரிதம் -துயரம் போம்.

——————-

இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல்
ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-

இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே
மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-

அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;
அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

——————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே
விஜயத்தைக் கொடுக்கும் என்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

சாதாரமாக -ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு விஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
ஐஸ்வர்யார்த்திக்கு -செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை வென்று கொடுக்கும்;
கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;
ஸ்ரீ பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
இந்திரிய ஜயாதிகளை -ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;
பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

(இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-
ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-
கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-
பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

——————

நிகமத்தில் -இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்’ என்கிறார்.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-

இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவ் வாழ்வார் தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர்.
அப்படித் தெளிவது தேச விசேஷத்திலே போனாலோ?’ என்னில்,
பாபத்தை பா என்று கடைக் குறைத்தலாய்-பாபம் நிறைந்திருக்கிற-பூயிஷ்டமான – தேசத்திலே’ என்றபடி.
அவ்வருகே ஒரு தேச விசேஷத்தே போனால் பெறக் கடவ தெளிவை அதற்கு எதிர்த் தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல
இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

—————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித்
ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-

கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண பரிசர்யைகளை கைங்கரியங்களை யடைய இப் பத்தை அப்யசித்தவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதி முக மடந்தையர்.
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.
தொக்கு -திரண்டு /கவரி -சாமரம் /ஏழையர் -ஸ்ரீ பாகவத கிஞ்சித்கார சபலைகளான மதி முக மடந்தையர் –

————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-

நித்யானுபவம் பண்ணா நின்றாலும் மேன்மேலென ஸ்ரீ பகவத் குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான
யோக்கிதையை யுடைய ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல் ஸ்ரீ அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவர்.
மாய்கையும் உருவு வெளிப்பாடும் பர்யாயம் என்று இருக்கிறார் காணும்.
அன்றிக்கே,
‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல்.
ஸ்ரீ பகவத் அபசாரம் ஸ்ரீ பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே,
ஸ்ரீ பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்?
பிரளயம் கோத்தால் போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது?

———————–

அங்குத்தைக்குத் தகுதியாக ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-

இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று
அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில்,
அத் தேவை எல்லாம் ஸ்ரீ ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.
அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;
ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.
என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்,’ என்கிறார்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-

ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம்.
இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது?
இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய்
அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை
ஏஷஹ்யேவ ஆநந்தயாதி’ தைத். ஆன.-இந்த ஸ்ரீ இறைவனே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே,
எப்பொழுதும் ஸ்ரீ பகவானுடைய அனுபவத்தால் பிறக்கும் ஆனந்தமானது உண்டாம்.

—————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,’ என்கிறார்.

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

இந்தப் பத்தைக் கற்க வல்லவர்களை–ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வான், ஸ்ரீ சேனை முதலியார் தொடக்கமானார், இவர்களை
நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து.
தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.
மனைவிமார்களும் தாங்களுமாக ஸ்ரீ வைகுண்டநாதனுக்கு அடிமை செய்து,
மனைவிமார்கள் எடுத்துக் கை நீட்டின பிரீதியின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே ஓடம் ஏற்றிக்
கூலி கொள்ளுமளவானவாறே, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கனக்கத் தங்கள்
பிரபாவத்தைச் சொல்லும்படியாகப் பெறுவர்.
ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் தசையாகிறது, ஸ்ரீ பகவத் விஷயத்தில் கைங்கரியம் செய்யும் போது
எடுத்துக் கை நீட்டுகை அன்றோ?’
ஸ்ரீ சரம ஸ்லோகம் ரஷித்துக்கொண்ட அளவு போலே இருக்கும் அளவுகளிலே,’ என்றபடி
அதாவது ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி தமக்கு அத்யந்த ரஹஸ்யமாக உபதேசித்த
ஸ்ரீ சரம ஸ்லோக அர்த்தத்தை ஸ்ரீ தெற்கு ஆழ்வார் திரு முன்பே எடுத்துக் கை நீட்டினவர்களுக்கு
அவர்கள் விஷயத்திலே உகப்பாலே அருளிச் செய்தார் இறே அத்தைச் சொல்கிறது
அபர்வணி ‘பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றால் போலே,
அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து என்கிறார். வைகல் – காலம்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ –திருவாய். 3. 3 : 1.-என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை
இது கற்ற ஸ்ரீ அடியார் விஷயத்திலே நித்ய ஸூரிகள் அடிமை செய்வார்கள்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் -இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –
இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –
விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-

இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்;-இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.
மின்னிடை மடவார்க்கு மதனர் – காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு,
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க-அதிகரிக்க – வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில்,
பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்,-பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே.
ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.
ஸ்ரீ திருவடியைச் சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லா நின்ற தன்றோ. தாவி வையம்கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம் -எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக்கடவது.
அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.

————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய
அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.வறுமை இல்லை; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை -தாரித்ரயம் -இல்லை என்கிறது.
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக -ஐஸ்வர்யமாக -நினையார்களே.
சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே
அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.

———————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும்
கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-

ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குக் காலம் என்னும் தத்வம் – ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை – ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு,
நித்ய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலை யுள்ளது
முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று
கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

ஸ்ரீ தரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- திருக்குறள்-

————————–

நிகமத்தில் -ஸ்ரீ கிருஷ்ணனுடைய சேஷ்டிதங்களை -செயல்களைப் பேசின இப் பத்தும் கற்றார்,
தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர் என்கிறார்.

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

இப் பத்தினையும் அப்யசித்தவர்கள் -கற்றவர்கள் ஸ்ரீ ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப் பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையை யுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே
தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது, அவதாராந்தரங்களில் -வேறு அவதாரங்களில் போகாமல்
ஸ்ரீ கிருஷ்ணனுடைய விருத்தாந்தத்திலே -செயல்களிலே -கால் தாழ்வர்.

————————-

நிகமத்தில் இத் திருவாய் மொழியின் கருத்தை வியக்தமாக்கா நின்று -விளக்கிக் கூறுவதாய்க் -கொண்டு,
இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-

இதனைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு அடிமை செய்யப் பெறுவர்.
ஸ்ரீ திருமாலுக்கு அடிமை செய்வார்-
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –

————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற
இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள் என்கிறார்.

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-

நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;
மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.

—————–

நிகமத்தில் இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து.
அவன் பொருந்தி வாழ்கின்ற ஸ்ரீ திருக் கோளூர்க்கே நெஞ்சை வைத்து.சொல்லுவார்.
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

———————-

நிகமத்தில் இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –
அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-

இப் பாசுரம் நித்ய மாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
உருகுகின்ற அந்தக் கரணராய்- மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.
இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
ஸ்ரீ பகவானுடைய குணங் களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும்
பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.

———————

நிகமத்தில் இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-

சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.
குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,

————————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில்
அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

மஹாகம்” என்றும், “பரமா காசம்” என்றும் சொல்லப் படுகிற ஸ்ரீ பரம பதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் ப்ராப்திக்கு -பேற்றுக்கு-
பிரபத்தி – சரணம் புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த ப்ரபத்தியே -சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப் பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார்
பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீ விபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்கு மத்தனையே வேண்டுவது.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

பூர்ணமாக -நிறைவாக என்னுதல்./ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே,
பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.

———————–

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான
மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
தேவதாந்த்ரங்கள் -வேறு தேவர்கள் பக்கல் பரத்வ சங்கை பண்ணுதல்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,
அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,
ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷித்தல் வேறு பிரயோஜனங்களை விரும்புதல்–ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.

(இத் திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து-‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.)

(கறுத்த மனம் வேண்டா” என்றதனால், ஸ்ரீ பிரணவத்தின் அர்த்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தையும்,
அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்” என்றதனால், நமஸ் சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும்,
“சிந்தையைச் செந்நிறுத்தி” என்றதனால், ஸ்ரீ நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே,
‘மாசு அறுக்கும்’ என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப் படுகின்றன)

————————

நிகமத்தில் இந்தத் திருவாய் மொழி அப்யஸிக்க -கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-

மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.அவர்களுக்கு உத்தேசிய பூமி ஸ்ரீ பரம பதமாம்.
அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப் பாசுரங்களில் சொல்லுகிற ஸ்ரீ பகவானுடைய குணங்களைப் பார்த்தால்,
இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், ஸ்ரீ புருஷோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.

———————-

நிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

இப் பத்தையும் சொன்னவர்களுக்கு ஸ்ரீ பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்
புகும் தேசம் ஸ்ரீ பரம பதம் ஆகையாலே ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,
பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-
ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
ஸ்ரீ பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே
ஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,
அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.
நீள் இரவாய் நீண்டதால்”,
ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்
அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

————————

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார்.

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-

இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே இருக்கிற
இருப்பைக் காட்டிலும், ஸ்ரீ திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை
அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உத்கர்ஷம் -உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

———————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-

ஸ்ரீமத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள்.
ஸ்ரீ யபதி- திருமால் அடியாரை ஆராதிக்கையாவது,
இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியகரர் -பிரியமுள்ளவராக ஆனால் போலே,
இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி –
கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது,
இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”-திருவாய்மொழி, 9. 4 : 9. என்னக் கடவது இறே-

————————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –
கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது,இவருடைய உபாய சூந்யதையை அனுசந்தித்து -நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்ய ஸூரிகளுக்கு இனிய பொருளாகப் பெறுவர்.
தேவ ஜாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாப் போலே,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
பிரபாகந்தர நிரபேஷமான -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய அவர்கள்,
ப்ரபாகாந்தர -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
ப்ரபாகாந்தர நிரபேஷராய் -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள்
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு போக்யராவார் -அமுதாவர்.

—————————–

இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-

‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.-இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே.
பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக் கட்டி இருப்பதும்.-
அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
திருஷ்டாந்தம் –உவமை புக்க இடத்தே —தார்ஷாட்ந்திகம்-உபமேயமும் வரக்கடவது.-
தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.

—————————

நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே
ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-

ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே ஸ்ரீ பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.
பிறந்தே சிறந்தார் என்று அந்வயம்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று,
இவர்களும் ஸ்ரீ பகவதநுபவம் பண்ணுகையாலே ஸ்லாக்கியராயிருப்பார்கள்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.
இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு,
பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே ஸ்ரீ உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே
முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –

———————-

நிகமத்தில் இப் பத்தும் கற்றார் ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-

ஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே.
காலம் என்னும் தத்துவம் -ஒரு பொருள் உள்ளவரையிலும் நித்ய அநுபவம் பண்ணப் பெறுவர்.
அநுசந்தானத்துக்குத் விச்சேதம் -தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான
சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத
ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை.
கம்’ என்றது ஆகாசம்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நாலாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற
ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –
புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-

கவிக்குச் சொல்லுகிற அலங்காரத்தால் குறைவற்ற ஆயிரம். செய் – செய்த கவி என்னுதல்;
குற்றேவல் செய்’ என்று மேலே கூட்டி, ‘வாசிகமான அடிமை’ என்னுதல்.
அவன் குணங்களைத் தொடுத்துப் பாடின இவற்றில் ஒன்றும் குறையாமல் கற்றவர்கள் ஸ்ரீ பகவானுக்கு-
வ்யதிரிக்த – வேறுபட்ட பலன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களாகிற-அனர்த்தங்கள் – கேடுகள் நீங்கி
உய்யும் தன்மையர் ஆவர். அஃகல் – சுருங்கல்.
உஜ்ஜீவனமே – ‘உய்தலே தன்மையாக-ஸ்வபாவமாக – உடையர் ஆவர்,’ என்பார், ‘உய்யற்பாலர்’ என்கிறார்.
‘காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

——————–

இத் திருவாய்மொழியைக் கற்க-அப்யசிக்க வல்லவர் ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’ என்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-

இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ் விடாய் போன இடம் தெரியாதபடி
நீக்க வல்லன் என்கிற கல்யாண குணங்களை-வியக்தமாக – விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.
வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர்.
‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும்.
ஸ்ரீ பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சம்சாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனால் போலே ஆயிற்று,
ஸ்ரீ பகவானோடு நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.

————————

நிகமத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள்
இட்ட வழக்கு,’ என்கிறார் .

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-

பூமியிலே ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து.
இங்கே இருக்கச் செய்தே ஸ்ரீ பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது,
அங்கே போனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே,
இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.
‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் ‘நம்மைப் போலே வாய் புகு சோறாகப் பறி கொடாதே,
பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று ஸ்ரீ சீயர் உருத்தோறும் அருளிச் செய்வர்.
பால்யத்திலே -இளமையிலே ஸ்ரீ பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ அவர்?
(இத்தால் ஸ்ரீ நஞ்சீயருடைய ஆசார்ய பிரதிபத்தி விளங்கும்.
தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதுதான்
இந்நாடு தன்னில் இருக்கும்நாள் – அந்நேர்
அறிந்துமதில் ஆசையின்றி ஆசா ரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்மனமே! பேசு.’- ஸ்ரீ உபதேசரத்தினமாலை, 64. )

—————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழி கற்றார், சம்சார துரிதமும் போய்,
ஸ்ரீ பகவத் விஸ்லேஷம் கந்தம் இல்லாத திருநாட்டிலே எல்லாரும்-சிரஸா வஹிக்கும் –
தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’ என்கிறார்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-

இப்படிப் பிச்சு ஏறின இது எல்லார்க்கும் கூடுவது ஒன்றா? அன்றே அன்றோ?
ஆன பின்னர், இது பாவனம் என்றாகிலும் கற்க வல்லவர்கள்.
அன்றிக்கே, ‘இது விலக்ஷண கிருத்யம் என்று கற்குமவர்கள்’ என்னுதல்.
விஸ்லேஷ கந்தமும் – பிரிவு என்பது சிறிதும் இல்லாத பரமபதத்தைக் கிட்டி.
அநாதியாய் வருகின்ற அவித்தியை முதலானவைகள் தீர்ந்து.
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான ஸ்ரீ நித்ய ஸூரிகளும் தொழுது ஆதரிக்க. என்றது,
‘பணியா அமரருங்கூட, பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்’ என்கிறபடியே,
அவர்கள் வழிபாடு செய்து ஆதரிக்கும்படி ஆவர்கள்,’ என்றபடி.
‘தொழுது எழு என் மனனே’ என்று, அநாதிகாலம் அசன்நேவ ‘ஸ்ரீ பரம்பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன்,
இல்லாதவன் போலே ஆகிறான்,’ என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உஜ்ஜீவித்தால் – உய்வு பெற்றால் போலே காணும்,
இவர் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது ஸ்ரீ நித்ய ஸூரிகள் உய்வு பெறும்படி.
அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்
ச ஸ்வராட் பவதி ‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,
‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.

—————–

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே -எப்பொழுதும் மழை பெய்கையாலே -ஸ்ரமஹரமாய்– சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க்-
தர்ச நீயமான – காட்சிக்கு இனியதான திருமலையையுடைய சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று;
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்ய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே
நித்ய சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே,
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய், மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மாமலை’-திருவிருத்தம், 50-
ஆகையாலே, -அறற்றலையாய்-தர்ச நீயமாய் – காட்சிக்கு இனியதாய் இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
(‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத் தலையிலேயுடையது’ என்பதும், ‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும் பொருள்.)

வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய் தர்ச நீயமாய் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே
திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑
சொன்ன அர்த்தத்தில் -பொருளில்- அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.

வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் – ‘
இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது.
திருமலை மாரி மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது;
ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய -ஆசன பத்மம் -ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
வேரி -பரிமளம் –
இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில்,
தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த சம்சாரியை விரும்பும் சீல குணத்தை யாயிற்று இதில் சொல்லிற்று;
இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று;
தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று;
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,
‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
வினை தீர்க்கும்
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான சகல பிரதிபந்தகங்களையும் –
எல்லாத் தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது.
தீர்க்கும் –
போக்குவாள். ‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.

—————–

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த –
இதற்கு, ‘மோஹித்தவள் அல்பம் ஆஸ்வசித்தவாறே சிறிது தெளிந்தவாறே,
மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’
அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய் மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடையபெருமையை.
அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே,
தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இதுதானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை-பிரபாவம் – புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று,
உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.

வழுவாத தொல்புகழ் –
வழுவாத தொல் புகழாவது, -அஞ்ஞான திசையிலும் -மயங்கிக் கிடக்கிற நிலையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சமும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் -ததீய ஸ்பர்சமும் -அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் –
சத்தயா அவ்வப்பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது.
‘சர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
தேவதாந்த்ர ஸ்பர்சமும் -வேறு தெய்வங்களின் சம்பந்தமும்-அபாகவதர் ஸ்பர்சமும் – பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமேயானால்,
வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
பூர்வார்த்தத்தை -முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும்தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
உத்தரார்த்தை -பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;

கர்மம் கைங்கரியத்திலே புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ ஸூக்தி.

கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர்
குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியானே! அடியேன் நான் முயற்சி யின்றி
நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே.’– திவ்விய கவி-

கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’-திருவிருத்தம், 97- என்றே அன்றோ இருப்பது?
சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக்கொள்ளுமதுவும் இல்லையாகில்,ஞானம் பிறந்தது இல்லையாமித்தனையே அன்றோ?
இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’-நான்முகன் திருவந். 68.- என்றும்,
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’-நான்முகன் திருவந். 53.- என்றும்,
எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’-பெரிய திருமொழி, 11. 6 : 7- என்றும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’-பெரிய திருமொழி, 7. 4 : 4.- என்றும் அன்றோ இவர்கள்படி?
அநாதி -பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும்,
நித்ய கைங்கரியம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் –
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும்.
வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது,
விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக,
தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று
அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.

தொழுது அடிப்பாட வல்லார் –
பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’
என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.

துக்க சீலம் இலர்களே –
மோஹித்தவிடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,
பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர். சீலம் – ஸ்வபாவம் -தன்மை.

——————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் –
நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அதிமாத்ரமான -அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ரபூதரைச் சொல்லுகிறார்.

குழுவு மாடம் தென்குருகூர் –
ஆழ்வார்க்குத் துக்கம்-ஆர்த்தி – மிக மிகச் சர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று
திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை சரவஞ்ச குசலம் க்ருஹே -ஸ்ரீராமா. யுத். 127 : 5. (ஸ்ரீ பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று
பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.-)
வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போலே

மாறன் –
சம்சாரத்தை மாற்றினவர்.

சடகோபன் –
பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் -விமுகருக்கு சத்ரு -பகைவர்.

சொல் வழு இலாத –
பகவானைப் பிரிந்த பிரிவாலே -விஸ்லேஷத்திலே -கூப்பிடுகிற இந் நன்மையில் ஒன்றும் தப்பாதபடி

சொன்ன. ஆயிரத்துள் இப்பத்தும்
ஸூ போதமுமாய் சர்வாதிகாரமுமாம் படி –

தழுவப்பாடி ஆட வல்லார் –
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ?
அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் –

வைகுந்தம் ஏறுவரே –
காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து,
எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.

குழுவு மாடம் –
நெருங்கின மாடம்.

தென்குருகூர் –
ஆதலால், ஆழகிய திருநகரி.

———————

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-

உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.

தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

செயிர் இல்சொல் இசை மாலை –
செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது,
ஆத்மாத்மீயங்கள்- ‘ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற
வார்த்தையில் புரையற்று -குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

வயிரம் சேர் பிறப்பு அறுத்து –
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.

வைகுந்தம் நண்ணுவரே –
ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு,
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே,
அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்
அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்-
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே
போய்ப் புகப்பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி.
(பல படிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’ )
அவன் விரும்பின படி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது-
(‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத் தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின திருமேனி’ என்பதும்)

———————

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?

செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.

திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமின் –
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;
நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.
அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.
சாயுஜ்யம் பிரதிபன்னாயா -சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும்
என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும், ‘
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி – பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,
அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்,
இவர் அருளிச்செய்த இத் திருவாய்மொழியைச் சொல்லவே-அனுசந்திக்கவே –
தன்னடையே சப்தாதிகளில் -ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து
அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய்மொழிதானே,’ என்க.

———————

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
விசித்ரா தேஹ ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் –வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு
அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உபகரணங்களை -உறுப்புகளைக் கொண்டு-
அப்ராப்த – உலக விஷயங்களிலே போகாமல்,‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே,
வகுத்த விஷயத்துக்கே சேஷமாக்கி -உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி.
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், காயிக- சரீரத்தால் செய்தல் என
அவ்வடிமைதான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம் பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’ பெரிய திருவந். 34’
என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமே யானால்.
(நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான் செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப் பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு)
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று;
அப்படியாமன்று இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், சர்வ ஸங்க்ரஹமான -எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலே யாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.
ஆனால்,தேவதாந்த்ர பரத்வ நிரசன பூர்வகமாக –மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று
மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
ஆனால், பரத்வ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலே யாதல்,
அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலே யாதல் அமையும்.
ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்;
அவற்றிலும் ஆகப் பெற்றதில்லை.

ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
திருக் குருகூரதனுள் பரன் திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப் பெரியவன் என்று இவர் அருளிச் செய்யக் கேட்டு,
கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)

மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.

வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும்
இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது.
மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.
இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘
மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும்
இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

July 30, 2019

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘ஸ்ரீ பரம்பொருள் உளன் என்று அறிவானாகில்
அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,-உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

———————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-

இப்பத்தும் செய்வது என்?’ என்னில்–ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று,
நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்-ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

———————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்க வல்லவர்கள்,
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட
அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்.
இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு அனுரூபமான கைங்கரியத்தை
மனோ ரதித்த பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை.
‘ஸ்ரீ இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாக
அன்றிக்கே –
கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.
இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி,
கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி ஏத்துவார்களே அன்றோ?
அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று
பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.
‘விசேஞ்ஞர்கள் ஏத்துதலே யன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே த்வேஷமும் கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

‘திரு வரை சுற்றிய சீரை ஆடையன்
பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ! இவர்க்கு இவ்வூர் உறவென்றார் சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவிலாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக் கெல்லை உண்டே? அழகி தென்னடிமை’ என்றான்.’- என்ற ஸ்ரீ கம்ப ராமாயணச் செய்யுள்கள்

———————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் நித்ய கைங்கரியத்தைப் பெற்று,
ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-

புஷ்பம் -மலர்கள் பரிமளத்தோடே -மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும்
வைத்துக்கொண்டு இப்பத்தையும்-அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.
விச்சேத சங்கை -பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.ஸ்ரீ அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை-ததீயத்வ ஆகாரத்தாலே – அநுசந்திப்பார் ஸ்ரீ நித்ய ஸூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம்
பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே,
அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள்
ஸ்ரீ நித்தியசூரிகள் ஆதலின்,‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.

—————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி கற்றார், ஸ்ரீ பகவத் குண அநுசந்தானம் பண்ணினால்,-
அவிக்ருதராய் – விகாரம் இல்லாதவராய் -இருக்கைக்கு அடியான மஹாபாவத்தை
இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்,’ என்கிறார்.

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து.
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
ஸ்ரீ பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராய்க் கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.
ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய்
இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

——————-

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்கவே பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்கு ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி;
இத் திருவாய் மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும் ஸ்ரீ பத்தராகக் கூடும் பயிலுமின்
ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –
இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி
உண்டாகக் கூடும் என்கிறார்.
அவாப்த ஸமஸ்த காமனான ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி,
‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’
என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன,
அவ்விடத்தைத் தோண்டுவார்களே -கல்லுவர்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள்-அப்யசிப்பார்கள் – என்று அருளிச் செய்கிறார்.

——————–

நிகமத்தில் ‘பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள்,
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’ என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-

நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.
ததீய சேஷத்வ -அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல்-ஜென்ம அந்வயம் – அறும்.

———————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியில் -சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே
அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர் என்கிறார் –
( சொன்னாலே -–ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –)

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

பிரதிபாத்யத்தை விளாக்குலை கொண்ட -என்னுதல்
ப்ரதிபாதந சாமர்த்யத்தை உடைய என்னுதல் -அத்விதீயமான இப்பத்து
இன்னார் இனையார் இல்லாத ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வைலக்ஷண்யத்தை யுடைய
ஸ்ரீ பரமபதத்தை பிராபிக்கப் பெறுவார்
ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து
அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் – என்றபடி –

—————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

யதோ வாசோ நிவர்த்தந்தே -அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான
ஸ்ரீ பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும் புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்குச் அநனுரூபமாக -சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியாக -ப்ராப்தமான -அனுரூபமாக -அடையத்தக்க ஸ்ரீ பரம் பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும்
சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

————————

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால்
தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.
சொல்ல வல்லார்க்கு -பயிற்ற என்பதை -பயில என்று கொண்டு -அப்யஸிக்க கற்க வல்லவர்கட்கு.
‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று அந்வயம்
நாடு –த்ரவ்ய -பொருளின் விசேஷத்தை அறியாத சாதாரண மக்கள். -அவிசேஷஞ்ஞர்
நகரம் –த்ரவ்ய பொருளின் விசேஷம் அறிந்திருக்கும் பெரியோர்கள். -விசேஷஞ்ஞர்
நன்கு உடன் காண –நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.
நலன் இடை ஊர்தி பண்ணி –நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையாவது, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.
வீடும் பெறுத்தி –ஸ்ரீ பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
தன்னதான த்ரிவித -மூன்று விதமான-ஆத்மவர்க்கத்துக்கும் – உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான்-
அத்விதீய – ஒப்பு அற்ற தலைவன்-நாயகன் – ஆம்படி பண்ணிக் கொடுக்கும்.
ஆயின், ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போன்றவனோ இவனும்?’ எனின்,
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது,
இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-