ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ருஷ்ட்யாதி -‘படைத்தல் முதலான முத் தொழில்கட்கும்-ஹேது பூதனாய் – காரணனாய்-சர்வ அந்தராத்மாவான –
எல்லா உயிர்கட்கும் உள் உயிராய் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணனானவன் என்னுடைய-பர்யந்தத்தை – எல்லையை விட்டுப்
போக மாட்டாதபடி ஆனான்,’ என்கிறார்.
‘ஆயின், இறைவனுடைய மேன்மை உருவம் குணம் இவற்றை அனுபவிக்கின்ற இவர்,
‘இவையும் அவையும்’ என்பது முதலாக அவனுடைய செல்வங்களைப் பேசி அனுபவிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின்,
இவர்க்கு அவனுடைய குணங்களை அனுபவிப்பதோடு விபூதியை அனுபவிப்பதோடு ஒரு வேற்றுமை இல்லை.
முதல் திருவாய்மொழியிலே பரக்க அனுபவித்த இவை-விசதமாய் – வெளிப்படையாய் இருக்கையாலே
இங்குத் திரள அனுபவிக்கிறார்.
‘அவையுள் தனி முதல், கண்ணபிரான்’ என்பவற்றை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்-

அவையுள் தனி முதல் -கண்ணபிரான் -என்னுடைச் சூழல் உளான் -என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
சாத்ம்ய போக பிரதத்வ ரூப குண அனுபவம் பண்ணுகிற இவர் விபூதி அனுபவம் பண்ணுகிறது என் என்ன –
குண அனுபவ பிரகரணத்தில் ஹேயமான விபூதியைச் சொல்லுகிறது
ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களோபாதி அனுபாவ்யமாகையாலே –
ஆயின் நாம் அவன் -1-1-4-என்கிற பாட்டில் போலே பரக்க அனுபவியாது ஒழிகிறது புனருக்திக்கு பரிஹாரமாதல்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-

———————

‘என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.

சாத்மிக்க சாத்மிக்கப் பரிமாறும் என்றதையும் இங்கேயும் ஸூசிப்பியா நின்று கொண்டு –
என் அருகிலான் -என்ற பாதத்தை கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

————

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்
என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –

பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் -இத்யாதிகளைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இவர்களைச் சொன்னது ஸ்ரீ திருவனந்த ஆழ்வானுக்கும் உப லக்ஷணம்-

அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

————-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே
இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை
தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

பெருமையையும் அகடி தகடநா சாமர்த்யத்தையும் சொல்லி -என் ஓக்கலையான் -என்றது –
சர்வ பிரகாரத்தாலும் விலக்ஷணனாய் இருக்கிறவன் என் ஓக்கலையான் என்னும் பாவத்தால்
விவஷித்து அருளிச் செய்கிறார் –
ஓக்கலையானே -ஏவகாரத்தாலே -அலப்ய லாபமாக -என்பது சித்தம் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-

—————–

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,-
சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன்
என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.

உயிர் செக உண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே-பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை-

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கிச்
செக்கஞ் செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே–1-9-5-

——————–

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.

காயமும் சீவனும் தானே -என்னுடைத் தோளிணையானே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே–1-9-6-

—————–

‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.

இப் பாட்டுக்கு வாக்யார்த்தமாவது -நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து
என் நாவிலே கலந்தான் என்கிறார் -என்று –

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே–1-9-7-

————–

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-

சகல வித்யா வேத்யனான என்றது கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -என்றதைப் பற்ற –
இஸ் சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தநம்-ப்ரதிபாத்ய ப்ரதிபாதக பாவம் –
ஆவியோடே கூடின ஆக்கையினாலே ப்ரதிபாத்யன் -என்றபடி –
ஆதித்ய வர்ணம் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-இத்யாதிகள் பிரமாணங்கள்-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

————

கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார்.

———-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நெற்றியிலே -லலாடத்திலே

———————-

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் மவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி யுளானே–1-9-9-

————–

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்
என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ப்ரஹ்மாதிகள் தொழும்படி இருக்கிறவன் உச்சியுளான் -என்பதற்குத் தாத்பர்யம்
அருளிச் செய்யா நின்று கொண்டு-இப்பாட்டுக்கு சங்கதி –
தொழுவார் -என்று அவர்கள் தடுமாற்றம் –
வந்து -என்றதை பற்ற என்னைப் பெறுகைக்கு அவசரம் பார்த்து -என்றது –
வந்து -என்றது இவன் தடுமாற்றம் –

நெற்றியுள் நின்று எனை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந் தானும் நான்முகனும் மிந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சி யுளானே–1-9-10-

—————-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –

ஒரு கால் விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும் என்று அன்வயித்து
அவதாரிகை அருளிச் செய்கிறார்-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: