ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.
‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும்,
அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் -என்றத்தைக் கடாக்ஷித்து அவதாரிகை –
சந்தா அனுவர்த்திகளாய் இருக்கிறவர்களுக்குச் செவ்வைக்கேடு இல்லையே –
அவர்களுடன் ருஜுவாய் பரிமாறுகை யாவது என் -சங்கைகளுக்கு உத்தரம் –
வ்ருத்தி பேதம் -கைங்கர்ய பேதம் -இதனால் உண்டான செவ்வைக் கேடு-அநார்ஜவம் –

————————-

ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-

————-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.

தைத்ய பீடிதரான தேவர்கள் வந்து தாங்களும் கடக்க நின்று சர்தி பண்ணிப் போம் பூமியிலே பிறக்க வேணும் என்ன
அப்படியே பிறக்கை ஆர்ஜவம் இறே
திரு வவதரித்த பின்பு சம்சாரிகளுடைய சந்தா அனுவ்ருத்தி பண்ணினத்துக்கு ஒரு எல்லை இல்லை இறே–

அம்மானாய்ப் பின்னும், எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட, செம்மா கண்ணனே–1-8-2-

————–

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று,
நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் -என்றதுக்கு த்ருஷ்டாந்தம் இரட்டை பிரஜை இத்யாதி-

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–1-8-3-

——————-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.

சீர் கற்பன் -இத்யத்ர ஹிருதயம் -அப்யாஸஸ்ய குண ப்ரேரிதத்வம் விவஷிதம் –
தாம் குண லுப்தராகையாலே தம்முடைய சந்தத்தை அனுவர்த்தித்திக் கொண்டு
தாம் கற்கைக்காக வெற்பு எடுத்தது என்று இவ் வழியாலே இங்கு ஆர்ஜவம் சொல்லிற்று ஆகிறது –

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

————

‘நீர் அவன் நற்குணங்களைக் கற்றீராகில்,-அப்யஸியா நின்றீர் ஆகில்
அவன் தான் செய்கிறது என்?’ என்னில்,
‘நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,
அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.

என் மெய் கலந்தானே என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பூர்வகமாக சங்கதி அருளிச் செய்கிறார் –

வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

—————-

‘இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.

என் ஆவி நலம் கொள் நாதன்’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பூர்வகமாக சங்கதி
அவதாரிகை அருளிச் செய்கிறார்.

கலந்து என் ஆவி, நலம்கொள் நாதன்
புலன் கொள் மாணாய், நிலம் கொண்டானே–1-8-6-

—————-

ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

தண் தாமம் செய்து -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார் –

கொண்டான் ஏழ் விடை, உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என், எண் தான் ஆனானே–1-8-7-

———————

‘என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.

என்னில் தானாய் சங்கே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

——————

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய, நங்கள் நாதனே–1-8-9-

——————

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ –
கடல் கிளர்ந்தாள் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்

நீர் என்று நீர்மையாய் -ஆர்ஜவத்தைச் சொல்லி -வேதத்தால் பிரதிபாதிக்கப்பட்ட
ஆர்ஜவ குணத்தை உடையவன் என்றபடி –

நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே -1-8-10–

—————-

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழிகளிலும் அவனுடைய
ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ என்கிறார்.

எல்லாத் திருவாய் மொழியிலும் ஆராய்ந்து -என்று அன்வயம் –
எல்லாத் திருவாய் மொழியில் காட்டிலும் ஆராய்ந்து சொன்ன என்றபடி-

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: