இப்படி நிரதிசய போக்யனானவனை -எல்லை இல்லாத இனியனான இறைவனை விட்டு, –
பிரயோஜனாந்தரத்தை -வேறு பயன்களைக்-கொண்டு அகலுவதே!’
என்று கேவலரை நிந்திக்கிறார்.
‘அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால், பிற ஆழி நீந்தல் அரிது’ திருக் குறள்
பாவா வலம்பநேந -ஆழிப் படை அந்தணனை -என்ற பதத்தையும் -மனத்து வைப்பாரே-என்ற
பதத்தையும் கடாக்ஷித்து அவதாரிகை –
ஸம்ஸாரிணாம் காலாந்தரே பகவத் ஸமாச்ரயண யோக்யதா அஸ்தி –
கேவலா நாம் ஸாபி நாஸ்தீதி தான் ப்ரதமம் நிந்ததி-
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே–1-7-1-
————————
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர – சிறிய பயனைக் கொண்டு போவதே!’ என்று கேவலனை நிந்தித்தார்;
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப் பாசுரத்தில்-
கீழில் பாட்டில் பிரமேயத்தை அனுவதித்துக் கொண்டு -வைப்பாம் மருந்தாம் அடியவரை வல்வினைத் துப்பாம்
புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-
——————-
ப்ரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார் முதற்பாசுரத்தில்;
இரண்டாம் பாசுரத்தில், அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படியை அருளிச் செய்தார்.
‘இவ் விரு திறத்தாரில் நீவிர் யாவிர்?’ என்ன,
‘நான் ப்ரயோஜனாந்தர பரன் அல்லேன்; அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன்,’ என்று
நேர் கொடு நேரே சொல்லவும் மாட்டாரே; ஆதலால்,
‘அவனை அனுபவியா நிற்க,விரோதி தன்னடையே போய்க் கொண்டு நின்றவன் நான்,’ என்கிறார் இப் பாசுரத்தில்.
இரண்டு பாட்டில் பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு உத்தரார்த்தத்தைக் கடாக்ஷித்து
சங்கா பரிகார ரூப சங்கதி –
நேர் கொடு நேர் -சாஷாத் – சொல்லவும் மாட்டாரே -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
ஆத்ம பிரசம்ஸையாம் என்று சொல்லவும் மாட்டாரே என்றபடி –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-
————————-
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று அடியிலே நீர் அபேக்ஷித்தபடியே இறைவன் திருவருள் செய்ய,
‘மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்’ என்று பிறவி அற்ற தன்மையினை நீரே கூறினீரே!
இனி, இறைவனை விட்டுப் பிடித்தல் பொருத்தம் உடைத்து அன்றோ?’ என்ன,
‘நான் என்ன ஹேதுவால் – காரணத்தால் விடுவேன்?’ என்கிறார்.
விடுவேனோ -என்றதும் பிரசங்கம் அருளிச் செய்யா நின்று கொண்டு –
என் இசைவினை ஏஎன் சொல்லி யான் விடுவேனோ -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அபேக்ஷிதம் தலைக்கட்டிற்றே என்றது -மாயப்பிறவி மயர்வறுத்தேன் -என்றதை பற்ற
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-
——————————–
திருவாய்ப்பாடியில் பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ
நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்
கீழில் பாட்டுக்கு சேஷம் இது -ஆனாலும் வள வேழ் உலகில் ஆழ்வார் அன்றோ நீர் –
அவ் விஷயத்தைக் கண்டவாறே அகல்வீரே என்ன -அவதாரிகை சாதிக்கிறார் –
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனைத்
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே–1-7-5-
————————–
இப்போது ‘விடோம்’ என்கிறீர் இத்தனை போக்கிப் பின்னையும் நீர் அல்லீரோ?
உம்முடைய வார்த்தையை-விஸ்வசிக்கப் போமோ நம்புதற்கு உளதோ?’ என்ன,
‘அவனாலே அங்கீகரிக்கப்பட்ட நான் அவனை விடுவேனோ?’ என்றார் மேல் பாசுரத்தில்:
‘உம்மை அவன் தான் விடில் செய்வது என்?’ என்ன,
‘தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும் என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை விட
நான் -சம்வதிப்பேனோ – உடன் படுவேனோ?’ என்கிறார் இப் பாசுரத்தில்.
கீழில் பாட்டில் அர்த்தத்தை அனுவதிக்கிறார்-
வள வேழ் உலகில் ஆழ்வார் அன்றோ என்பதாலே பின்னையும் நீர் அல்லீரோ -என்று அருளிச் செய்வார் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-
———————-
குண த்ரய வஸ்யராய் -‘முக் குணத்தின் வசப் பட்டவராய்ப் போந்தீர்;
காதாசித்கமாக- ஒரு சமயத்தில் ‘அவனை விடேன்’, என்கிறீர்;
உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்க நம்பப் போமோ?’ என்ன,
‘நான் அவனை விட்டாலும், அவன் தான் என்னை விடான்’ என்கிறார்.
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கா பரிஹார ரூபேண
சங்கதி அருளிச் செய்கிறார் –
காதாசித்கமாக என்றது சத்வம் தலை எடுத்த காலத்திலே -என்றபடி –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரிற் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?–1-7-7-
—————————-
‘நான் விடேன், அவன் விடான்’ என்பன போன்று கூறுதல் எற்றிற்கு?
இனி, அவன் தான் ‘பிரிப்பன்’ என்னிலும் அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட
என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார்-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-
————————–
‘தானும் கில்லான்’ என்ற -பிரசங்கம் – கூறுதல் தான் என்? –
ஏக த்ரவ்யம் -ஒரே பொருள்- என்னலாம்படியான இவ்வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்.
அமரத் தழுவிற்று இனி அகலுமோ -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார் –
அமரர் முழு முதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?–1-7-9-
—————————
என்னோடு கலந்த ஸ்ரீ எம்பெருமானுடைய குணங்களைக் கால தத்வம் உள்ளதனையும்
அனுபவியா நின்றாலும் திருப்தன் ஆகிறிலேன் என்கிறார்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு வல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-7-10—
———————–
நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி தானே இதனைக் கற்றவர்களுடைய -பிராப்தி பிரதிபந்தகங்களை –
பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும், என்கிறார்.
உன்மூலிதம் ஆக்கும் என்றது வேரோடு போக்கும் என்றபடி –
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-
—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply