ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்-ப்ரவேசங்களின் -தொகுப்பு

உயர்வற உயர்நலம் உடையவன் -முதல் பத்து முதல் திருவாயமொழி பிரவேசம் –

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபாபந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி,
‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று
தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார் .

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்;
நீர் வஞ்சிக்கொடி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்;
அவை போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை;
அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்
அஹம் அஸ்யாவரோ பிராதா குணைர் தாஸ்யம் உபாகதா -என்னுமா போலே
ஸ்ரீ இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன,
ஸ்ரீ பெருமாளும் ஒரு படி நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார்.
‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன,
‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார்.
அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுப் பாராய் நெஞ்சே என்கிறார்.

ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில்,
தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஸ்வ அனுபவ பரமான இத்திருவாய் மொழியில் -நான் கைங்கர்யம் பண்ணுகிறேன் என்ன அமைந்து இருக்கத்
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தது -கைங்கர்யம் பக்தி மூலமாய் வருகிறது ஆகையாலே இவ்விஷயத்தில்
பக்தி பிறக்கைக்கு உறுப்பான அவனுடைய உபகார பரம்பரைகள் தோற்றுகைக்காகத் தன் திரு உள்ளத்தை அபிமுகீ கரிக்கையாலே-
என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
வாக்ய ஏக வாக்யதா யோஜன அனுகுணமாக அவதாரிகை –
தொழுது எழு என்று கைங்கர்யம் ப்ரீதி காரிதமாக வேண்டுகையாலே ப்ரீதி ஹேதுத்வேந உபகார பரம்பரையை அருளிச் செய்கிறார்
அருளினன்-என்றத்தை பிரதிவாக்யம் அன்வயித்து உபகரித்தான் என்கிறார் –
இப் பிரபந்தம் அனுபவ பரிவாக ரூபமாகையாலே உபகரித்தமை அர்த்த சித்தமாதல் என்றுமாம் –
தான் ஸமஸ்த –இத்யாதிக்கு உயர் நலம் -என்றதிலே நோக்கு

அக்குணங்களும் தன்னைப் பற்றி -என்கிற இடத்தில் குணாயத்தம் லோகே குணி ஷூ ஹி மதம் மங்கள பதம் விபர்யஸ்தம்
ஹஸ்தி ஷி தி தர பதே தத் த்வயி புந -குணாஸ் சத்ய ஞான ப்ரப்ருதய உத த்வத் கத தயா ஸூபீ பூயம்
யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதி வசாத் -என்கிற ஸ்லோகமும் –ஹேம அரவிந்த பரிமள நியாயமும் அனுசந்தேயம் –
மங்கள பதம் -மங்கள பத பிரயோக -ஸூபீ பூயம் -ஸூபத்வம்
ஜ்யோதிஷம் ஜ்யோதி -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி வசாத்
அக்குணங்களும் இத்யாதிக்கு யவன் -என்கிற விசேஷ்ய அம்சத்தில் நோக்கு
ஸ்வ ஸ்வரூபாபன்னராய்-என்றது அசாதாரண ஆகாரத்தை அடைந்தவர்கள் –பரம சாம்யா பன்னர்
இவ்விபூதியில் ஆள் இல்லாமையால் -ப்ரீதி அதிசயத்தாலே உசாவ வேண்டி முந்துற்ற நெஞ்சான தன் திரு உள்ளத்தோடு
கூட்டுகிறார் என்றது தொழுது எழுகையாகிற கிரியையில் அந்வயிக்கிறார் -தொழுகையை திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –
கூட்டுகை -உபதேசிக்கை என்றுமாம் –
கூடுகிறார் -என்ற பாடத்தில் நான் உஜ்ஜீவிக்கும்படி வாராய் -என்றபடி –

கிண்ணகம் -பிரவாஹம் –அவன் பண்ணின உபகாரங்களைச்சொல்லி தொழு என்கிறார் –
தொழ மாட்டோம் என்று இருந்தாலும் குணங்களுடைய உத்ரேகம் கண்டு தொழுது அல்லது ஜீவிக்க விரகு இல்லை –
சார்வஜ்ஞய சர்வ சக்தித்வ தண்ட தரத்வாதிகளைக் கண்டால் எதிரே நிற்க விரகு இல்லை –
சம்சார சாகரத்தில் தள்ளி விடுமாகையாலே அவன் திருவடிகளில் தலை சாய்க்கப் பாராய் என்றபடி –
ந நமேயம்-என்று இருக்க விரகு இல்லை -ஆகையால் நாமே முந்துற இசைவோம் நெஞ்சே என்கிறார் என்றபடி –
ஸ்ரீ இளைய பெருமாள்-குண க்ருத தாஸ்யஸ்ய த்ருஷ்டாந்தம் –
விருத்த தர்மங்களான ப்ராத்ருத்வ தாஸத்வங்களுக்கு ஏக ஆஸ்ரயத்தில் அனுசந்தானம் கூடாமையாலே -என்று
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்-
தாஸத்வம் – க்ரய விக்ரயார்ஹத்வம்

குணத்தை இட்டாயிற்று வணங்குவிப்பது -சாடு-தனுஸ்ஸை குணத்தை -என்று -குணம் கயிறு –
வேதம் பரிச்சேதிக்க என்று இழிகையாலே நிலம் இல்லாமல் மீண்டது –
இவர் அபரிச்சின்னம் என்று சொல்ல இழிந்தவர் ஆகையால் இவருக்கு நிலமாகப் பேசத் தட்டில்லை என்றபடி-
அன்றிக்கே ஸ்ருதி ஆனந்த குணம் ஒன்றையும் இறே விஸ்தரித்துச் சொன்னது –
இவர் அவ்வளவு அன்றிக்கே ஒரோ திருவாய் மொழியிலே ஒரோ குணமாக குணாந்தரங்களையும் விஸ்தரித்து அருளிச் செய்தார் இறே
அன்றிக்கே -ஸ்ருதி ஆனந்த குணம் ஒன்றையே யாதோ வாசோ நிவர்த்தந்தே என்று அபரிச்சின்னமாகச் சொல்லிற்று –
இவரோ உயர் நலம் -என்று எல்லா குணங்களையும் அபரிச்சின்னம் என்கிறாரே -என்று
ஸ்ரீ ஆழ்வாருடைய ஞான வைபவம் சொல்லுகிறது –

———————–—————————-

முதல் பத்து -இரண்டாம் திருவாய்மொழி-வீடுமின் முற்றவும்- பிரவேசம்

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-

இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராக ஸ்ரீ திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி
நிர்வகித்துக்கொண்டு போந்து -ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்து கொண்டு போந்து,
ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார்,
பின்னர் ஸ்ரீ எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.
இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ,
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பத்தி ரூபா பன்ன ஞானமாய் இருந்தது;
தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே ஆவரே.
ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும்.
ஆயின், பத்தி என்பது உபய கர்மிதஸ் வாந்தஸ்ய (‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’)
என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும்-சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு- தூய்மை செய்யப்பட்ட மனத்தினை யுடையவனுக்கு
உண்டாவது அன்றோ? பர பக்தி –
அந்த ஞான கர்மங்களினுடைய-ஸ்தாநேந – இடத்தில் பகவத் பிரசாதமாய் நிற்க,
அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே!இவருடைய பக்தி தான் –
‘இதுதான் வேதாந்த விஹிதையான பத்தி தானே ஆனாலோ?’ என்னில்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்;
அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்;
ஆன பின்பு தான் பெற்றத்தையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்துவத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்து –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே?
தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ,
அன்றி, தாம் அப்பொருளில் விரக்தராகியோ?’ என்னில், விஷயமோ என்றால்,
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –
‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே?

இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,
‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் அபிநிவேசம் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் -காலாந்தரத்தில் –
விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;
அப்படியே, சில காலம் அனுபவித்துப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது;
‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’
என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்-

இனி, ஆசாரிய பதம் -நிர்வஹிக்கைக்காக மேற்கொள்ளுகைக்காக அன்று; க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று;
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பரதந்த்ரராய் அன்று (‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன்
அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.)
‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில்,
ஸ்வ அனுபவ பிரகர்ஷம்-இன்பப் பெருக்கு- இருக்கிறபடி –
தாம் அனுபவித்த விஷயம் தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது;
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு
ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில்,
இவர்கள்-சேதனராய் – அறிவு உள்ளவர்களாய்- இருக்கிறார்கள்; சப்தாதி விஷயங்களில் வாசியறிந்து,
தீயவை கழித்து, நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
ஆதலால், அவற்றினுடைய ஹேயதையையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபாதேயதையையும் இவர்களுக்கு அறிவித்தால்,
அவற்றை விட்டு இறைவனைப் பற்ற அடுக்கும் என்று பார்த்து, ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

——————

முதல் பத்து -மூன்றாம் -திருவாய்மொழி -பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிரவேசம்-

சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத் திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின்,
‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப் போமோ?
அப்படியே, ஸ்ரீ சர்வேஸ்வரனாய், அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை
இந்த ஷூத்ரனான- அற்பனான சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன,
‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே?
அப்படியே, இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து
தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.

‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின்,-
பாக்ய ஹீனருக்கு – நல்வினை அற்ற மக்கள் ஸ்ரீ இராமன் ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத்
தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து-சஜாதீய பிரதிபத்தி பண்ணி – கேடுறுதற்கும்,
பாக்யாதிகருக்கு- நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து-
ஆஸ்ரயிக்கலாம் படி – அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க.
ஸ்ரீ சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;
அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று?
அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று
ஸ்ரீ எம்பாரைப் பார்த்து ஸ்ரீ உடையவர் அருளிச் செய்தாராம் .

தார்மிகர் -அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்;
விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்;
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்;
சிலர், அதன் ஒளியிலே ஜீவியா நிற்பர்கள்- உய்வு பெறுவார்கள்.
‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின்,
‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.

‘ஆயின், தீ வினையாளர் கேடுற்றதும், நல் வினையாளர் உய்வு பெற்றதும் காணும் இடம் உண்டோ?’ எனின்,
அவன்தான், ‘அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும்’-இப்படி வந்து அவதரித்து
எளியனான நிலை தன்னிலே யன்றே?
அப்படியே சிசு பாலன் முதலியோர், பூதனை, சகடாசுரன், இரட்டை மருத மரங்கள் இவர்கள் எதிரிட்டு முடிவுற்றமையும்,
ஸ்ரீ அக்குரூரர் ஸ்ரீ மாலாகாரர் முதலியோர்-அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவும் ஆயிற்றே –

‘‘அவனை பஜியுங்கோள் வழிபடுமின்’ என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்;
கண்ணாலே கண்டால் அல்லது-பஜிக்க – வழிபட விரகு இல்லை;பஜித்தால் – வழிபட்டால் அல்லது காண விரகு இல்லை;
ஆன பின்னர்,ஆஸ்ரயிக்கும் படி – அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின்,
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே (‘நம்மைக் காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய
இறைவனைப் பர பத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’ )என்றும்,
விசதே தத் அநந்தரம் (‘பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்,’ )என்றும்
சொல்லுகிறபடியே, சில வருத்தங்களோடே காணக்கூடிய சாதன பத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது;
காண வேண்டும் என்னும்-ஆகா லேசம் – ஆசை சிறிதுடையார்க்கும் அவன் எளியனாம்படியைச் சொல்லுகிறது.
‘ஆயின், அறப் பெரியவன் ஆசை சிறிது உடையார்க்கு எளியனாகை கூடுமோ?’ எனின்,
சர்வாதிகன் -அறப் பெரியவன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் -தடை செய்குநர் எவருமிலர்

அறப் பெரிய அவன் இம் மண்ணுலகில் வந்து அவதரித்தான் என்பது பொய்யே அன்றோ?’ எனின்,
பஹு நி மே வியதீதாநி(‘பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன;
உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்;
அவற்றை நீ அறியாய்,’) என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன்;
அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.
அவதாரங்களில் புரை இல்லை

‘ஆயின், அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே;
இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,
ஜென்ம கர்மா ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும்
தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று?
அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.
நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?
ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.
ஆக, ஸ்ரீ இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்; நீங்களும் அவன் ஸ்ரீ கீதையில் நான்காம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவாறே
உபஜீவித்துக் கொண்டு நின்று, அவற்றை உயர்வதற்கு உரிய சிறந்த நெறியாகக் கொண்டு
அவனை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்.

‘நன்று; பிறர்க்கு உபதேசிக்கப் புக்க இவர், தாம் கலங்குதற்குக் காரணம் என்னை?’ எனின்,
அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இள மணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.
‘ஆயின், பரத்துவத்தைக் காட்டிலும் சௌலப்யம் ஈடுபடுத்துமோ?’ எனின், பரத்துவத்தை நினைந்தார்,
தெளிந்திருந்து பிறர்க்கு உபதேசம் செய்தார்;
எளிமையினை நினைந்தார், ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

சர்வ ஸ்மாத் பரன் என்று தொடங்கி அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாம் ஆயிற்று அவதாரம் தான் இருப்பது
என்னும் அளவும் ஸங்க்ரஹம் -மேல் விஸ்தாரம்-
பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன் -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி –
இரு கை முடவன் என்றது இரு கையாலும் முடவன் -எழுந்து இருக்கவும் மாட்டாதவன் –
பற்றிலன் ஈசனும் என்கிற பாட்டில் -ஆஸ்ரயித்தால் அவன் அவாப்த ஸமஸ்த காணக்காண சர்வேஸ்வரன் -நமக்கு முகம் கொடுத்து
நம்மோடு கலசி இருக்குமோ என்கிற சங்கையிலே அவன் அப்படி இருக்கும் என்றார்
இங்கே சர்வேஸ்வரனாய் இருக்கிறவனை நாம் ஆஸ்ரயிக்கக் கூடாது என்கிற சங்கையிலே
அவன் ஸூலபன்-என்று பரிஹரிக்கிறார் என்று பேதம் –

அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் பரம் பாவமஜா நந்த -என்று சிலர் அவமதி பண்ணிக் கொண்டு போகைக்கும்
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த தேவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா-பஜந்த்ய அநன்ய மனாசோ ஞாத்வா பூதாதி மவ்யயம் என்று சிலர்
அனுகூலித்து உஜ்ஜீவிக்கைக்கும் அடி எது என்கிற சங்கையிலே –
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா பிரபத்யந்தே நாரதமா-மாயயா அபஹ்ருதா ஞானா ஆஸூரம் பாவம் ஆஸ்ரிதா என்கிறபடியே
அவர்கள் பாக்ய ஹானியும்
யேஷாம் த்வந்தகதம் பாப்பம் நராணாம் புண்ய கர்மணாம் தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா-என்கிறபடியே
அவர்கள் பாக்ய அதிசயமும் அடி என்கிறார் –
இந்த அர்த்தத்தை இரண்டு த்ருஷ்டாந்தங்களாலே தர்சிப்பிக்கிறார்

வேத நல் விளக்கு என்றது வேதங்களுக்கு நிரதிசய பிரகாசகமான தீபம் என்றபடி –
ஸ்ரீ திரு வேங்கடமுடையானை சொன்னவாறு –
ஆயர் குலத்திலே ஆவிர்பவித்த மணி தீபம் –குணங்கள் இடைச்சேரியிலே அத்யுஜ்ஜ்வலமான படி —
ஆதித்யனுடைய குலத்துக்கு அத்விதீயமான விளக்கு – ஆதித்யனைப் போலே இரவு கலாசாதே அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –
பலகாலும் பஜியுங்கோள்-என்றது –
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே என்றும் இறை சேர்மினே -என்றும் அந்நலம் புக்கு -என்றும் இறை பற்றே-இத்யாதிகளைப் பற்ற-

கண்டால் அல்லது என்றது – பயபக்தி ரூப ஞானம் தரிசன சமா நா காரா பண்ணமானால் அல்லது –
காண விரகில்லை -மோக்ஷ தசையில் பகவத் அனுபவ ரூபா பலம் வர விரகில்லை-என்றபடி –
கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை -பஜித்தால் அல்லது காண விரகில்லை-என்றது
தரிசன சமானாகாரமான பக்தி உண்டானால் அல்லாதது இவன் பஜித்தானாக விரகு இல்லை –
இப்படிப்பட்ட பஜனத்தைப் பண்ணினால் அல்லது ப்ராப்ய சித்தி உண்டாகாது என்று தாத்பர்யம் –
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -பராவரே -அஸ்மதாதிகளைப் பற்ற பரர்களான ப்ரஹ்மாதிகளைத் தனக்கு சேஷ பூதர்களாக உடையவன்

பர பக்தி யாவது -சாஸ்த்ராதி முகேன அறிந்த விஷயத்தை இப்போதே பெற வேணும் என்கிற இச்சை –
பர ஞானமாவது -ப்ரத்யக்ஷ சாமானாகாரமான மானஸ அனுபவம்
பரம பக்தி யாவது -விஸ்லேஷ அஸஹத்வம் –
பயபக்திர த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷாபி நிவேசனம் -பர ஞானந்து தஸ்யைவ சாஷாத்கார பரிஸ்புட –
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்னக் கடவது இறே
இனி நித்ய ஸூரிகளுடைய பரபக்தி பர ஞான பரம பக்திகளாவது
உத்தர உத்தரம் அனுபவ இச்சை -பரபக்தி -அனுபவம் பர ஞானம் -அகலகில்லேன் என்கிறபடியே விஸ்லேஷ அஸஹத்வம் பரம பக்தி –
அவதாரம் -இச்சா ஹேது-இச்சா க்ருஹாதீபிமதோரு தேஹ -அஜோ அபிசன்-ஸ்லோகத்தை உட்கொண்டு -அருளிச் செய்கிறார் –
இவனுக்காக தான் பிறந்ததாகையாலே இறை என்கிறது
பரத்வாபேஷயா ஸுலப்யமே ஈடுபடுத்தும் ஆகையால் எத்திறம் என்று மோஹித்தார்

——————-

முதல் பத்து -நாலாம் -திருவாய்மொழி–அஞ்சிறைய மடநாராய்- பிரவேசம்-

கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலப்யத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த்
தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு ஸ்ரீ பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய்,
ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.
அயம பர ஆகாரக நியம (‘இது மற்றொரு காரகம்’ ) என்னுமாறு போன்று, மேல் போந்த நெறி வேறு;
இங்குச் செல்லும் நெறி வேறு.
முற்காலத்தில்-அல்பம் விவஷிதனாய்- சிற்றறிஞன் ஒருவன், வீதராகராய் –
‘பற்று அற்ற பரம ஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன;-தத்வ பரமாக – உண்மைப் பொருளை
உள்ளவாறு கூறுகின்றன,’ என்று
இத் திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத் திருவாய்மொழி வந்த அளவில்,
‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கை விட்டுப் போனானாம்;

ஸ்ரவணம்- மனனம்- நிதித்யாசித்வய சாஷாத்காரம் (‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன்,
பார்க்கத் தக்கவன்’ )என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.
கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.
‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்;
அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து
ஒரு ஸ்ரீ பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

‘ஆயின், ஆர்த்தோ வா யதிவா த்ருப்த (‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி,
அவன் ரஷிக்கத் தக்கவன்,’) என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப்
பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ஆமத்தில்-‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால்,
நிதானஞ்ஞரான நோயின் மூலத்தை அறியும் -பிஷக்கக்குள்- மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று,
மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;
பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.
‘ஆயின், இறைவன் மருத்துவனோ?’ எனின், ‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்’ எனப்படுதலால் மருத்துவனேயாம்.
‘நன்று; ஞான தேசிகரான இவர் கலங்கலாமோ?’ எனின், ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்;
‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.
மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது?
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று
கூறிய ஸ்ரீ பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு
நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

‘ஆயின், பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின்,
ஹம்ஸ காரண்ட வா கீர்ணம் வந்தே கோதாவரீம் நதீம் ( ‘அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற
கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்;) என்றும்
ஸ்ரீ ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ ஸ்ரீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று ஸ்ரீ பிராட்டியும்,
அசோக சோகாபநுத சோகோ பஹத சேதசம் (சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும்
எனக்கு ஸ்ரீ பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ )என்று
ஸ்ரீ பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

‘ஆயின், ஸ்ரீ பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,
விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,
அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை
ஆகிய இவ்வாறு குணங்களும் ஸ்ரீ ஆழ்வார்க்கும் உள ஆதலின், ஸ்ரீ பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

‘ஆயின், ஸ்ரீ பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க,
‘வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்கு ஸ்ரீ பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.
‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின்,
இராஜ ருஷி பிரம ருஷி யான பின்னர்-ஷத்ரியத்வம் – அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை அன்றே?
எதிர்த்தலையில் -பும்ஸத்வத்தை -ஆண் தன்மையை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியன்றோ
அவனுடைய புருஷோத்தமனாந்தன்மை இருப்பது? ஆதலால், பின் நாடாது என்றபடி –

‘நன்று; அந்தப்புரத்தில் வசிக்கும் இப்பெண்ணிற்குத் தூது விடுகைக்குப் பறவைகள் உளவோ?’ எனின்,
கூடும் இடம் குறிஞ்சி; அதற்குப் பூதம் ஆகாயம்.
பிரியும் இடம் பாலை; அதற்குப் பூதம் நெருப்பு.
ஊடும் இடம் மருதம்; அதற்குப் பூதம் வாயு.
இரங்கும் இடம் நெய்தல்; அதற்குப் பூதம் தண்ணீர்.
இவ் வகையில், பிரிந்தார் இரங்குவது நெய்தல் ஆகையாலே, ஸ்ரீ பிராட்டி, தானும் தன் தோழிகளுமாக விளையாடும்
பூஞ்சோலைக்குப் புறப்பட்டுச் செல்ல, சென்றதும் தோழிமார் பூக் கொய்கையில் கருத்தூன்றினவர்களாய்த் தனித்தனியே பிரிய,
தலைவனும் தன் நேராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர,
ஏவுண்ட விலங்கு இவனை இப் பூஞ்சோலையில் தனியே கொண்டு வந்து மூட்டி மறைய,
முற்பிறவியிற் செய்த நல்வினைப் பயனால் இருவருக்கும் புணர்ச்சி உண்டாக,
பின்னர், கூட்டின தெய்வம் பிரிக்கப் பிரிந்து,
‘இனி, இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து,
தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின்,
கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக் ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே,
இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக,
இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ஸ்ரீ ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர ஜாதி வீறு பெற்றாற்போலே காணும்,
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் ஜாதி வீறு பெற்றபடி’ என்று ஸ்ரீ பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

‘பிரிந்தவன் மீண்டு வருவான் என்று நினைந்து தூது விடுதற்குக் காரணம் யாது?’ எனின்,
தன் மேன்மையாலே இத்தலையில் தன்மை பாராதே வந்து கலந்தான்;
கலந்த பின்னர் இவளிடத்துள்ள குற்றங்களைக் கண்டான்; கண்டு பிரிந்தான்;
பிரிந்த அளவிலே ‘இது அன்றோ இருந்தபடி’ என்று அநாதரித்தான்.
கண்ட தலைவி, ‘குற்றங்களைப் பார்த்தல் மட்டுமே அன்றிச் செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கோடல் என்ற
குணவிசேடம் தம் ஒருவருக்கே அடையாளமாக இருப்பது ஒன்று உண்டு; அதனை அறிவிக்க வருவான்,’ என்று
அந்த அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

அநாதி காலம் இவ் வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

பக்தி கார்யமான யுக்தியை காமுக வாக்ய ரூபேண அருளிச் செய்தது -புருஷனை புருஷன் ஸ்நேஹிக்கும் அதிலும்
காம மஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே ஸ்த்ரீக்கு புருஷ விஷய ஸ்நேஹம் பள்ளமடையாகையாலே
தாத்ருசமான அதி மாத்ர ப்ராவண்ய ஸூசகம் ஆகையால் –
குட ஜிஹ்விகா ந்யாயத்தாலே -மருந்தை நாவுக்கு இனிய வெள்ளத்தில் வைத்துக் கொடுப்பது –
விஷய ப்ரவணரான சம்சாரிகள் பரிக்ரஹித்து உஜ்ஜீவிப்பார்கள் என்னுமத்தாலும் அருளிச் செய்வர்
மேலே விஸ்தார சங்கதி – ஸ்ரீ திரு உலகு அளந்து அருளினவன் இத்யாதியால் –
ஸ்ரீ பிள்ளான் கீழே அயர்ப்பிலன் இத்யாதி மானஸ அனுபவத்துக்கும் ஸ்ரீ நஞ்சீயர் நிர்வாகத்துக்கும் சேர வியாக்யானம் –

மருத்துவனாய் நின்ற -ஆச்சார்யாதி ரூபேண சம்சார ரோக பிஷக்காய் நின்ற நீல மணி போலே கறுத்த நிறத்தை யுடையவன்
பாஹ்ய சம்ச்லேஷம் கிடையாமையாலே -ஸித்தமான ஸ்வ அனுபவம் அசத் கல்பமாய் தோன்றி கலக்கம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்று இருக்கிற இவரை அவ்வறிவு அகார்யகரமாம் படி கலங்கப் பண்ணும் வைலக்ஷண்யம் –
ஸ்வ யத்ன சாத்தியமான ஞான பக்திகளால் வந்த கலக்கமாகில் இறே அளவு பட்டு இருக்கும் –
விலக்ஷண விஷயத்தைப் பிரிந்து பொறுக்க மாட்டாமல் வேண் யுத்க்ரதநத்திலே ஒருப்படடாள்-
கோதாவரி நதிக்குப் பக்ஷிகளைக் கொண்டு தேசாந்தரத்தே யாகிலும் அறிவிப்பிக்கைக்கு சக்தி உண்டு
என்று இருக்கிறாள் கலக்கத்தாலே –

அநந்யார்ஹ சேஷத்வம் -அனன்யா ராகவேணாகம் /
யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -என்றும் ந ச சீதா த்வயா ஹீநா -என்றும்
விஸ்லேஷத்தில் தரியாமையும் சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்-
நைஷா பஸ்யதி–தந்யா பஸ்யந்தி மே நாதம் -இத்யாதிட்டாலே தத் ஏக போகத்வமும்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா -என்கையாலே தத் ஏக நிர்வாஹயத்வமும் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –தபஸஸ் ச அநுபாவ நாத்-என்கையாலே அநந்ய சரண்யத்வமும்-
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் அப்ராக்ருதமான வடிவழகு பண்ணும் என்று சொல்ல வேண்டா இறே –

போக்கு எல்லாம் பாலை புணர்தல் நறும் குறிஞ்சி ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் நோக்குங்கால்
இல்லிருக்கை முல்லை இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
போக்கு -தனிப்போக்கு -புணர்ந்து உடன் போக்கு இரு வகை -கொடும் காற் சிலையா -திரு விருத்தம் -37-தனிப் போக்கு
நானிலம் வாய்க்க கொண்டு –திரு விருத்தம் -26-புணர்ந்து உடன் போக்கு
காடு சார்ந்த நிலம் முல்லை /நாடு சார்ந்த நிலம் மருதம் /மலைச்சார்வு -குறிஞ்சி நிலம் /
கடல் சார்வு நெய்தல் நிலம் -நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை -தெறு சம்ஹரிக்கிற

ப்ராஹ்மம் தைவம் ப்ராஜாபத்யம் ஆஸூரம் ஆர்ஷம் காந்தர்வம் ராக்ஷஸம் பைசாயம் -8-வகை விவாஹம்
உத்யானம் என்றது பின்னை யம் பொழில் சூழ் / திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு /
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் /

யாத்ருச்சிக சம்ஸ்லேஷத்துக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் –
மேன்மையாலே ஸ்வாதந்தர்யத்தாலே இத்தலையில் தண்மை பாராமல் கலந்தான் –
தோஷ தர்சனத்தைப் பண்ணவே பிரிந்தான் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

——————

முதல் பத்து -ஐந்தாம் -திருவாய்மொழி–வளவேழ் உலகின் – பிரவேசம்-

முதல் திருவாய்மொழியில்
‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால்,
அந்த ஆஸ்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால்,
பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால்
ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப்
பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

‘ஆயின், காதல் விஞ்சிக் கலங்கி மேல் திருவாய்மொழியில் தூது விட்டவர்,-இங்கு அகலுவான் என்?’ என்னில்,
கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.
‘ஆயின், இவ் விரண்டும் இவர்க்கு உண்டோ?’ எனின்,
இவர்க்கு இறைவன் திருவருள் புரிந்தது -பக்தி ரூபா பன்ன ஞானம் – பத்தியின் நிலையினை அடைந்த ஞானத்தை ஆதலின்,
இரண்டும் உண்டு; ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பது இவருடைய திருவாக்கு.

‘இத் திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
கீழ் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர்,
‘இவரை இங்ஙனம் நோவு பட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று,
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்;
அவனுடைய-வை லக்ஷண்யத்தையும் – வேறுபட்ட சிறப்பினையும் தம்முடைய -ஸ்வரூபத்தையும் -தன்மையினையும் கண்டார்;
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்திய சூரிகளுக்கு-அனுபாவ்யமான வஸ்து –
நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை- நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார்.
‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே.
‘ஆயின், அகலுவான் என்?’ என்னில்,-
சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே?

ஸ்ரீ பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், ஸ்ரீ துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன,
இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு,
யதி ப்ரீதிர் மஹா ராஜா யத் அனுக்ராஹ்யதா மயி ஜஹி மாம் நிர்விசங்கஸ்த்வம் ப்ரதிஞ்ஞா அநுபாலய ( ‘அரசர்க்கு அரசரே,
உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில்,
யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ )
என்று விடை கொண்டார் அன்றே ஸ்ரீ இளைய பெருமாள்?

த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி ( ஸ்ரீ இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல்
இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக் கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ )என்று விடை கொண்டாள் அன்றே ஸ்ரீ பிராட்டி?

அப்படியே, இவரும்-ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும்,
அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும்.
நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்.
அதனைக் கண்ட ஸ்ரீ இறைவன், ‘இவரை இழந்தோமே’ என்று நினைந்து, ‘ஆழ்வீர், அகலப் பார்த்திரோ?’ என்ன,
‘அடியேன் அகலப்பார்த்தேன்,’ என்ன,
‘நீர், எனக்குத் அவத்யம் -தாழ்வு வரும் அன்றே அகலப் பார்த்தீர்?
நீர் அகலவே, ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடைய பெரியவர்களாலேயே அடையத் தக்கவன் நான் என்று நினைத்து
என்னை ஒருவரும் சாரார்-இவ்விஷயம் அதிக்ருதாதிகாரம் ஆகாதே –
இப்படித் தண்ணியராக நினைந்திருக்கிற நீர் ஒருவரும் என்னைக் கிட்டவே,
நான், ‘இன்னார் இனியார் என்னும் வேறுபாடு இன்றி
எல்லாரும் வந்து சேரத்தக்கவன்; என்று தோற்றும்;-சர்வாதிகாரம் ஆகும்
ஆன பின்னர், நீர் அகலுமதுவே எனக்குத் தாழ்வு-அவத்யம் -.

மற்றும், ‘எனக்கு ஆகாதார் இலர் என்னுமிடம் பண்டே அடி பட்டுக் காணுங் கிடப்பது,
நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட, ‘ஆகில் கிட்டுவோம்’ என்று நினைந்தார்;
உடனே,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று
‘பின்னையும் அகலப்புக,

‘உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, ஸ்ரீ திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், ஸ்ரீ திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த ஸ்ரீ விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,
பந்து வதம் -‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற ஸ்ரீ அருச்சுனனை,
கரிஷ்யே வசனம் தவ -ஸ்ரீ கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று;
ஐயவுணர்வும் நீங்கினவன் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று
சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து
சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-
ஆதலின், சீல குணத்தை அருளிச் செய்தவாறு காணல் தகும்.

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

அனுபவ கர்ப்ப பர உபதேச ப்ரக்ரியையாலே -அவனை ஆஸ்ரயிப்பார்க்கு ஓரு குறை இல்லை என்கிறார் –
ஸ்ரீ புருஷோத்தமன் என்றது -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு என்றது பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்றதின் தாத்பர்யம் –
பலத்தோடு வ்யாப்தமாய் அல்லது இராது -என்கிறது அளவியன்ற -என்றதின் தாத்பர்யம்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகன்ற தம்மை உண்டாய் உலகு ஏழ் முன்னமே என்கிற பாட்டில்
உம்மை ஒழிய தரியோம் -என்று பொருந்த விட்டுக் கொள்ளுகையைப் பற்ற அருளிச் செய்கிறார்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் என்றதை பற்ற ஸீலவான் -என்றது
ஸ்வரூபம் என்றது ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் இருக்கிற தம்முடைய ஹேயதையை
தண்ணீர் பந்தல் என்றபோதே வைத்தவன் தார்மிகன் என்று சித்திக்கும் இறே-அப்படி இருக்கவும் தார்மிகன் என்றது
அதிக தர்மதிஷ்டன்-என்றபடி இறே
ஊருணி -ஊராக வினியிகம் கொள்ளும் தாக்கம் -இதுக்கு பிரதி கோடித்வேந-வாசத்தடம் -மரகத மணித்தடம் –
அடிபடுகை -சாடு-ப்ரஹதமாஹை -திருவடிகள் பட்டுக் கிடக்கிறது -என்றுமாம் –
சார்ந்த இரு வல்வினை -இத்யாதியைப் பற்ற ஸம்ஸ்லேஷித்துத் தலைக் கட்டினான் –
வீடு நிறுத்துவான் என்கையாலே ஸம்ஸ்லேஷித்த படி –

——————————–

முதல் பத்து -ஆறாம்-திருவாய்மொழி-பரிவதில் ஈசனை’-பிரவேசம்-

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.

‘யாங்ஙனம்?’ எனின்,
ஷூத்ரரான – மிகச் சிறியோர்களான இம் மக்களாலே -ஷூத்ர உபகரணங்களை- மிகச் சிறிய பொருள்களைக் கொண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரனான நம்மை அடைந்து தலைக் கட்டப் போகாமையாலே, கீழ் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்ற
இவரைப் பொருந்த விட்டுக் கொண்டோம்; ‘பெருந்த விட்டுக் கொண்டது தான் ஒரு பரிமாற்றத்துக்கு அன்றோ?
அதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே!’ என்று இருப்பான் ஒருவன் இறைவன்.
இனி, ‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் ஆஸ்ரயித்து – அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் –
அவாப்த ஸமஸ்த காமனாய- ஒன்றிலும் விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலும்
இவ்விரண்டற்கும் காரணமாகத் ஸ்ரீ திருமகள் கேள்வனாய் -ஸ்ரீயப்பதியாய் இருக்கையாலும்
இவன் அவ்விறைவனை ஆஸ்ரயித்து – அடைந்து ஆராதனை புரிதல் முடியாதே?’ எனின்,
அங்ஙனம் அன்று;
இவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி எல்லாம் கைப் புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும்,
இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனா யிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய் இருக்கையாலும்,
ஸ்ரீ திருமகள் கேள்வனாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்,
இப்படிகள் அனைத்தும் ஆஸ்ரயணீயத்துக்கு- அடைவதற்கு உறுப்புகளேயாகும் என்கிறார்.

ஆக, இவன், தன் ஸ்வரூப லாபத்திற்கு உறுப்பாக-கிஞ்சித்க்கரிக்கும் – தொண்டினைச் செய்வான்;
இதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி.
ஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல் போன்று, பகவானை அடைதல் -ஸமாச்ரயணம் -அருமைப் பட்டு இராது என்கிறார் என்றபடி.
மேலும், ஸ்ரீ பகவானை அடைந்த அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல்-கிலேச – துக்க ரூபமாய் இராது, –
போக ரூபமாய் -இன்ப மயமாய் இருக்கும்;
வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாக இருக்கும்;
பகவானைப் பற்றுதல் ஆகையாலே-ப்ரத்யவாய பிரசங்கம் – வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;
திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய
முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;
மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.
த்வத் அங்கரி முத்திச்ச்ய –
உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்
இறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,
இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.
மேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,
இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
கேநசித்
‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்
என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,
யதா ததா‘
எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று
விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,
ஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால்,
பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும்,
‘அஞ்சலி’என்றதனால்,
மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற
அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும்,
அசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால்,
ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
அசேஷத ‘அடியோடே’ என்றதனால்,
வாசனை கிடக்கப் போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
சுபானி ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால்
ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்,
நஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால்,
பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும்
அருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.

மற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால்,
சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,
பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,
புஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால்,
தீவினைகளைப் போக்குதலே யன்றி,
அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-

பத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,
தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.
இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;
அஸ்னாமி-
இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்;
அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட
விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

அந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி
ஸ்ரீ கிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;
அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’
என்பது ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீ சஞ்சயன் கூற்று.
நச்சேதி-
இதனால், ஒருவன் ஸ்ரீ இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே
அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.
ஏகாந்தகத புத்திபி
ஸ்ரீ இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்
தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,
சிரஸா பிரதி க்ருஹ்ணாதி-
ஸ்ரீ தேவ தேவனாகிய ஸ்ரீ பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது ஸ்ரீ மோக்ஷ தர்மம்.

இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும்,
அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ் ஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே
உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,
அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும்,
எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,
ஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், ஸ்ரீ இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.
ஆக, இப்படிகளாலே, ஸ்ரீ இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

கீழில் அஞ்சு திருவாய் மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணங்களை அனுபாஷியா நின்று கொண்டு
இதில் ப்ரதிபாத்யம் ஸ்வ ஆராததை என்னுமத்தை சங்கா பரிஹார முகேன அருளிச் செய்கிறார் –
அயோக்கியன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட ஸுசீல்ய குணத்தை அனுசந்தித்து
எல்லாரும் ஆஸ்ரயித்துப் பரிசர்யை பண்ணுகைக்கு இறே என்றபடி-
வள வேழு உலகின் முதலாய வானோர் இறையை -5-1-அவாப்த ஸமஸ்த காம்தவம் யுக்தம்
ஏத்தி வணங்கினால் -5-2-பரிபூர்ணத்வம்
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வன் -6-2-என்றதிலே அவாப்த ஸமஸ்த காமத்வமும் பூர்த்தியும் சொல்லுகிறது –
அதாவது நிரபேஷத்வமும்-அபேஷா ஸத்பாவே அபி பூர்ணன் -என்றபடி
திருமகளார் தனிக்கேள்வன் -6-9-என்றதை பற்ற ஸ்ரீ யபதியாய்-என்றது
புகை பூவே -என்றதை பற்ற அருமைப்பட்டு இராது என்றது –
கடிவார் தீய வினைகள் நொடியாருமளவைக் கண் -6-10-என்றும் -வல்வினை மாள்வித்து -6-8-என்பதையும் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது –
உள் கலந்தார்க்கு ஓர் அமுது-6-5 –அமுதிலும் ஆற்ற இனியன் -6-6-என்றதை பற்ற போக ரூபமாய் இருக்கும்
பெற்றது உபகரணமாய் இருக்கும் என்றது புரிவதுவும் புகை பூவே என்றதை பற்ற -6-1-
முதல் இரண்டு பாட்டாலே த்ரவ்ய அதிகார நியமம் இல்லை என்றும்
மூன்றாம் பாட்டால் கால நியதி இல்லை என்றும் சொல்லுகிறது-

————————–

முதல் பத்து -ஏழாம் திருவாய்மொழி–பிறவித்துயர் அற-பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்

ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணம் ஆகிறது தான்
இதுக்கு இட்டுப் பிறவாத ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே .
ஸ்ரீ யபதியாய்- திருமகள் கேள்வனாய், -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய்,
சகல ஆத்துமாக்களுக்கும் சேஷியாய்,-நிரதிசய ஆனந்த யுக்தனாய் – எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் –
ஏஷக்யேவாநந்தயாதி ( ஸ்ரீ இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ )என்கிறபடியே,
தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் ஸ்ரீ இறைவன் ஆதலின்,
அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.
‘நன்று; ஸ்ரீ இறைவனிடத்தில் அனுபவிக்கும் அனுபவம் அன்றோ இன்ப மயமாய் இருக்கும்?
அவனை ஆராதிக்கும் ஆராதனையும் இன்ப மயமாய் இருக்குமோ?’ எனின்,
மோக்ஷ தசையில் அனுபவம் இனிது ஆகிறதும் அவனைப் பற்றி வருகையாலே யன்றோ?
அப்படியே, ஆராதனையும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும்
இதனால் தான் இறைவனுடைய ஆராதனையானது இதற்கு இட்டுப் பிறவாத ஸ்ரீ சர்வேஸ்வரனும்
ஆசைப்படும்படி போக ரூபமாய் இருப்பது ஒன்று இறே -என்கிறார்

அஸ்ரத்ததாந புருஷ -விசுவாச பூர்வக த்வரா ரஹிதரானவர்கள் –
அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை உத்தர வல்லாய் நீ அன்றோ –
அப்ராப்யமாம் நிவர்த்ததந்தே–செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற்
செலுத்துகின்ற என்னை யடையாது, தாமதாமுடைய விநாசத்தை சூழ்ப்பதான
சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,’ இது தான் இருந்தபடி பாராய் என்கிறான்
ப்ரத்யஷா வகம் அஹம்-ந மாம்ச சஷூர் அபி வீக்ஷதே தம் – என்கிறானான் ப்ரத்யக்ஷ பூதனானவன்
தர்ம்யம் நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யம் ஆனாலும் மேல் விழ வேணும் –
இது அங்கன் அன்றிக்கே தர்மாதன பேதமுமாயும் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே
தான் முதல் அழியாதே கிடக்கும் – –

‘இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது;
இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது;
நேராக என்னைக் காட்ட வல்லது; மோக்ஷத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது;
என்றும் அழிவற்றது,’ என்றும் ஸ்ரீ பகவான் தானும் அருளிச் செய்தான்.

ஆக, இப்படி சாதனா சமயமே தொடங்கி, மோக்ஷத்தை அடைதல் ஈறாக,
அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்ப மயமாகவே இருக்கவும்,
அவனை விட்டு ஸூத்ர பிரயோஜனத்தை – மிகச் சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று
கேவலரை நிந்தித்துக் கொண்டு,
இதனை ஒழியில்தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தினுடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

யுக்த அனுவாத பூர்வகமாக -தூய அமுதை பருகிப் பருகி என்ற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு சங்கதி –
ஸ்ரீ வைஷ்ணவ போக்ய லிப்சயா-தாமும் இதில் போக்யத்தை அறிய வேணும் என்கிற வாஞ்சையாலேயே
திருப் பவளத்திலே வைத்து அருளிற்று –
ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சகல ஆத்மாக்களுக்கு சேஷியாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
விசேஷண சதுஷ்ட்யமும்–பின்னை நெடும் பணைத் தோள் -நிகரில் அவன் புகழ் -உய்யக்கொள்கின்ற நாதன் –
எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து -என்கிற பாசுரங்களைப் பற்ற
ஆஸ்ரயணம் போக ரூபம் என்னுமதுக்கு சப்தம் தூய அமுது —
பிரான் பெரு நிலம் கீண்டவன் -அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனங்களை -என்றது பிறவித் துயர் அற -என்றது
பின்னை யான் ஓட்டுவனோ என்றதை பற்றி தாம் உளராகாத படி இத்யாதி –

———————–

முதல் பத்து -எட்டாந்திருவாய்மொழி – ‘ஓடும் புள்’பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்;
அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத் திருவாய்மொழியில்.
‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில் ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை.
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை.
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை.

‘சௌசீல்யம்-ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப் படினும், வேறு வேறு என்பதே
நம் பெரியோர்களுடைய திருவுள்ளம்.
ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

இத் திருவாய்மொழி சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யம் கூறுகிறது என்பாரும்
ஈஸ்வரத்வ லக்ஷணம் கூறுகிறது என்பாரும் –
கீழ் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர்.
‘ஆயின்’ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே ஸ்ரீ பட்டருடைய திருவுள்ளம்.
‘யாங்ஙனம்?’ எனின், பத்தர் முத்தர் நித்தியர் என்னும் மூவகைச் சேதநரோடும் இறைவனாகிய தான் பரிமாறும் இடத்தில்,
அவர்களைத் தன் நினைவின் வண்ணம் வருமாறு செய்தல் இன்றி, நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போன்று,
தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அம் முறையிலே அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்கிறார்.

இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி
‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய்மொழியில்’ என்கிறார்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’ என்பது முதலான
திருப் பாசுரங்களை நோக்கிப்‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர்.
‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம் அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப் பாசுரங்களை நோக்கி
ஈஸ்வரத்வ லக்ஷணம் கூறுகிறது, என்பர்.
‘அம்மான் சீர் கற்பன் வைகலே என்ற திருப் பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.
ஸ்ரீ பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப் பாசுரங்களைக் கடாக்ஷித்து,
ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச் செய்வார்.

கீழில் திருவாய் மொழியில் நிரதிசய போக்யன் -என்றார் –
இப்படி போக்யனான தன்னை அனுபவிக்கும் போது போக்தாக்கள் அளவில் தன்னை அமைத்து
அனுபவிப்பிக்கும் என்று இதற்கு சங்கதி –
புள்ளேறி ஓடும் -தண் துழாய் சூடும் -நீர் புரை வண்ணன் இத்யாதி பற்ற ஆர்ஜவ குணம்
அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்கிறார் –
ஸுலப்யம் ஸுசீல்யம் ஆர்ஜவம் மூன்றுக்கும் பேதம் அருளிச் செய்கிறார் –
ஸுசீலமாவது மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்தரேண சம்ச்லேஷம் -அது தன் நெஞ்சிலும் இன்றிக்கே இருக்கை ஸுசீல்யம்
அதவா-மந்தர்களோடே புரையற கலக்கை சீலம் -அது ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை ஸுசீல்யம் -என்னுதல்
ஆர்ஜவமாவது கரண த்ரயத்தாலும் செவ்வையனாகையாய் இருக்கை யாகிலும் ஆஸ்ரிதருடைய செவ்வைக் கேடே
தனக்கு செவ்வையாய் இருக்கை என்று ஸுசீல்யத்தில் இதுக்கு உண்டான வாசி –

வசீ -வதான்யோ-குணவான் -ருஜு -ம்ருதிர்-தயாளுர் -மதுர -ஸ்திர -சம -க்ருதீ-
க்ருதஜ்ஜஸ் த்வமஸி ஸ்வ பாவத-ஸமஸ்த கல்யாண குண அம்ருதோ ததி
வசீ -சர்வத்தையும் ஸ்வ வசமாக யுடையவன் -ஆஸ்ரித பரதந்த்ரன் என்றுமாம் –
வதான்யோ-அர்த்திகளைக் கொண்டாடிக் கொடுக்குமவன் –
குணவான் -ஸுசீல்ய பரம்
ருஜு -ஆர்ஜவ குண யுக்தன்
ம்ருதிர்-ஆஸ்ரித விஸ்லேஷம் சஹியாத மார்த்வம்
தயாளுர் -பர துக்க அஸஹிஷ்ணுத்வம்
மதுர -சர்வ ஆகாயத்திலும் போக்யன்
ஸ்திர -ஆஸ்ரிதர்கள் எத்தை சொல்லினும் நத்யஜேயம் என்னுமவன்
சம -சமோஹம் சர்வ பூதேஷு -அனுகூல பிரதிகூல விபாகமற ஆஸ்ரயித்வே சர்வ சமன்
க்ருதீ-க்ருதக்ருத்யன்
க்ருதஜ்ஜஸ்-ஆஸ்ரிதருடைய அபராதங்களைக் காணாக்கண் இட்டு நன்மையைப் பார்க்குமவன்
த்வமஸி -இவற்றில் ஒன்றும் இல்லை யாகிலும் ஸ்வரூபத்தினுடைய போக்யதைச் சொல்லுகிறது
ஸ்வ பாவத-இது தான் உபாதை அடியாக இல்லாமல் ஸ்வ பாவிகம்
ஸமஸ்த கல்யாண குண அம்ருதோ ததி-இங்கனம் பிரித்துச் சொல்லுகிறது என் –
ஐஸ்வர்யத்தை என்றது -பரத்வத்தை -இது முதல் பாட்டைப் பற்ற –
அன்றிக்கே-கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றதை பற்றவாதல் –
சங்கு சக்கரம் -ஓடும் புள்ளேறி-இத்யாதியைப் பற்ற லக்ஷணம் -ஈஸ்வரத்வ வியஞ்சக லக்ஷணம் –
பாடி அனுபவிக்கிறார் என்றது -அம்மான் சீர் கற்பன்-என்றதை பற்ற
நிகமத்திலே இவை பத்துப் பாட்டும் நீர் புரை வண்ணன் சீர் நேர்தல்-நீர் போலே ருஜுவான ஸ்வ பாவம்-
ஆர்ஜவ பிரகார விசேஷங்களை பிரதானமாக சொல்லுகிறது என்று
திரு வாயோலை இடுகிறார் -என்று கடாக்ஷித்து ஸ்ரீ பட்டர் நிர்வாகம்
மநோ வாக் காயம் ஏகைக ரூபியாம் ஆர்ஜவம் -ஸ்ரீ தூப்பூல் பிள்ளை –

——————————

முதல் பத்து -ஒன்பதாந்திருவாய்மொழி – ‘இவையும் அவையும்’-பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில் ஸ்ரீ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;
ஸ்ரீ ஆழ்வாரானவர் மேற்கூறிய ஆர்ஜவ குண அநுசந்தானத்தால் இறைவன் பக்கல் பெரிய விடாயை உடையவர் ஆனார்;
ஸ்ரீ இறைவன், ‘இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று பார்த்து,
ஸ்ரீ அருச்சுனன்,‘விபூதி ஸ்ரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காண வேண்டும்’ என்று விரும்ப,
‘அதற்கு உறுப்பாக-திவ்யம் ததாமி தே சஷூ – உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே,
திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று,
இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

இத் திருப் பதிகத்தில் வருகின்ற முதல் பாசுரத்தினை நோக்கி,
ஸ்ரீ சர்வேஸ்வரனாய்த் திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய்’ என்கிறார்.
‘தனி முதல் எம்மான்,’ ‘என் அமுதம் சுவையன்,’ ‘திருவின் மணாளன்’என்பவற்றை நோக்குக.

வ்ருத்த அனுவாத பூர்வகமாக சங்கதி அருளிச் செய்கிறார் -சாத்ம்ய போகப் பிரதத்வம் அருளிச் செய்கிறார் என்றபடி –
இருதலைக் காமம் உண்டானால் போகம் இனிதாய் இருக்கும் என்று திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் இடத்தில் ஸ்ரீ ஆழ்வாருக்கும் உண்டான
அபிநிவேசத்தை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ திருவின் மணாளன் -ஸ்ரீ சர்வேஸ்வரனாய் / சுவையன் -பரம ரசிகன் /
துவக்குண்டு -ஈடுபட்டு -அன்யோன்ய பிராவண்யம்/ சர்வாங்க சம்ச்லேஷத்தை அடியிலே பண்ணாமைக்கு
திருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார் -ஸ்ரீ அர்ஜுனன் இத்யாதியால் –
விடாயைப் பிறப்பித்து -என்றது பக்தி ரூபா பன்னம் ஞானம் -தரிசன சாமானாகாரம் க்ருத்வா -தத் அனுகுண த்வாராதிசயம் –
அமலங்களாக விழிக்கும்
ஸ்ரீ பிராட்டிமாரோடு-என்றது ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என் நெஞ்சில் உளானே /
தோளிணையான் -திருவடி ஓக்க /
சூழல் உளான் என்று தொடங்கி-உச்சி உளானே -என்றது முடிவாயத் தலைக் கட்டுகையாலே
பொறுக்கப் பொறுக்க என்கிறது -சாத்மிக்க சாத்மிக்க -என்றபடி
சர்வ இந்த்ரியத்தாலும் என்றது -நெஞ்சின் உளான் -நாவின் உளான் -கண்ணின் உளான் -இத்யாதியைப் பற்ற
சர்வ காத்ரத்தாலும் -என்றது-ஓக்கலையான் -தோளிணையான் -உச்சி உளான் -நெற்றி உளான் இத்யாதியைப் பற்ற
அவனைப் பேசி என்றது அவனுடைய குணங்களை பேசி என்றபடி

—————————

முதல் பத்து -பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமா நீள்’பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் ஸ்ரீ இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள ஸ்ரீ பெரியோர்கள்.
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான்
ஒருவனும் ஸ்ரீ இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை –
அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

கருமாணிக்கம் என் கண்ணுளதாகுமே-என்ற பதங்களை நிதானமாக விவஷித்துக் கீழ்த் திருவாய் மொழியோடு இதுக்கு சங்கதி –
அனுசந்தித்து -ஆராய்ந்து பார்த்து -நிர் வ்ருத்தராகிறார் –
கண்ணுளதாகும்-கண்டாயே நெஞ்சே -இத்யாதிகளை பற்ற நிர் வ்ருத்தராகிறார் –
பேற்றுக்கு சத்ருச சாதனம் இல்லை என்று அருளிச் செய்து பலத்தினுடைய அநந்ய சாத்தியத்தை அருளிச் செய்கிறார் –
வெறிதே அருள் செய்வர் –
புத்திர் ஞான சம்மோஹ -இத்யாதிகளை போலே புத்த்யாதிகள் எல்லாம் அவன் இட்ட வழக்கே –
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -என்றதை பற்ற ஸ்ரீ பட்டர் நிரூபணம்
சர்வாங்க சம்ஸ்லேஷ அனுசந்தானத்தாலே நிர் வ்ருத்தராகிறார் -முந்தைய ஸ்ரீ பூர்வர் நிர்வாகம்
நிர்ஹேதுகத்வ அனுசந்தானமும் நிர்வ்ருத்தி ஹேது என்பது ஸ்ரீ பட்டர் யோஜனை –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: