ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்-

ஈசனை -பரமபதத்தில் இருக்கும் இருப்பை முந்துறச் சொல்லி அனந்தரம் –
புரிவதுவும் புகை பூவே -அவனுடைய ஸ்வாராததையைச் சொல்லுகையாலே
அவனுடைய பூர்த்தி என்று விவஷித்து பரிபூர்ணன் ஆகையால் என்கிறார்
புரிவதுவும் புகை பூவே -என்று த்ரவ்ய நியதி இல்லாமையைச் சொல்லுகிறது-

பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

———————–

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –
நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

கீழ்ப் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
எது வேது என் பனி என்னாது -என்றதைக் காடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார்

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-

———————–

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி
தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -காதற் பெருக்கினை
அருளிச் செய்கிறார்-

கீழும் மேலும் பரோபதேசமாய் இருக்க இப்பாட்டும் மேற்பாட்டும் ஸ்வ அனுபவமாய் இருக்கிறதுக்கு சங்கதி –
இஸ் ஸ்வபாவம் -என்றது கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன ஸ்வாராதந ஸ்வ பாவத்தை என்றபடி
தாம் அதிகரித்த கார்யம் -பரோபதேசம் –

ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே–1-6-3-

——————–

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் – காதற்பெருக்கு-
காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.

ஆடும் என் அங்கம் அணங்கே-என்றதை விவரிக்கிறதாய் அன்றோ இருக்கிறது –
இப் பாட்டுக்கு ஓரு வைஷம்யம் கண்டிலோமே என்கிற சங்கையிலே பிணங்கி அமரர் பிதற்றும் -என்கிற
விசேஷணத்தை கடாக்ஷித்து இது தானே யாத்திரையாக -என்று அருளிச் செய்கிறார்

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே–1-6-4-

—————————–

திரியட்டும் -மீண்டும்- தாம் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்திலே போந்து,
ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால்
‘இவர்கள்-ப்ரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவர்களோ,
நம்மையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றுவார்களோ?’ என்று ஆராய்ந்து,
தன்னையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றினவர்களுக்குத்
தானும் -நிரதிசய போக்யனாய் -எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்-

விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை
அம்பரீஷனைப் பரீஷித்த பிரகாரத்தை அனுசந்திப்பது
ஆராய்ந்து -விரும்பி என்றதிலே நோக்கு –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான்
விள்கல் விளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே–1-6-5-

————————

‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-
ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.

கௌபீ நாச்சாத ந பிராயவாஞ்சா கல்பத்ருமாதபி-ஜாயதே யாத புண்யானாம் சோ அபராத ஸ்வ தோஷஜ-என்றது அனுசந்தேயம்
தேவராய மஹா ராயனை ஆஸ்ரயித்தவன் படிக்கல்லுக்கு ராயசம் கேட்க
கிராமத்துக்கும் படிக்கல்லுக்கும் ராயசம் கொடுத்த கதையையும் நினைப்பது-

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

——————–

அவன்-நிரதிசய போக்யன் – எல்லை அற்ற இனியன் என்றீர்;
அவனை பிராபிக்கும்- அடைகின்ற வரையில் -நடுவு கால ஷேபம் -இடையிலே உள்ள காலத்தைப்
போக்கும் விதம் எப்படி?’ என்ன,
அதற்கு அன்றே, ‘மனத்துக்கு இனியானுடைய குணங்களிருக்கின்றன’ என்கிறார்?

நாள் கடலைக் கழிமின்-என்றதைக் கடாக்ஷித்து ப்ரஸ்ன உத்தர ரூபேண சங்கதி அருளிச் செய்கிறார் –

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே–1-6-7-

——————-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்திரத்தை அனுசந்தித்து – நினைத்து, –
இதர விஷய ப்ராவண்யத்தை தவிரவே -மற்றைப் பொருள்களின் ஆசையை நீக்கவே,
அவன் தானே பிரதிபந்தகங்களை- தடைகளை எல்லாம் போக்கி
நித்தியமான கைங்கரியத்தைத் தந்தருளும் -என்கிறார் –

கழித்து வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவிற்று ஆக்கம் தரும் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இரு வ்யக்தியை நிர்த்தேசியாமலே கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனே
இப் பாட்டுக்கும் பிரதிபாத்யன் -என்கிறார் –

கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே–1-6-8-

————————-

தன்னைப் பற்றின் அளவில் இப்படி விரோதிகளைப் போக்கி இப் பேற்றினைத் தரக் கூடுமோ?’ என்னில்,
‘வெறும் அவன் படியையோ பார்ப்பது!
அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ?
ந கச்சின் ந அபராத்யதி ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்பவர் அன்றோ
அருகில் இருக்கிறார்?’ என்கிறார்

ஸ்ரீ திருமகளார் -என்றதைக் கடாக்ஷித்து -அருகே இருக்கிறார் படியையும் என்கிறது –
பாபாநாம் வா ஸூபா நாம் வா வாதாரஹானாம் பிலவங்கம் கார்யம் கருணமார்யேண
ந கஸ்சின் ந அபராத்யதி -யுத்த காண்டம் –

தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-

——————–

இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,
‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார்.

நொடியாரும் அளவைக்கண் என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை

கடிவார் தீய வினைகள் நொடி யாரு மளவைக் கண்
கொடியா அடு புள் உயர்த்த வடிவார் மாதவனாரே–1-6-10-

——————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர் -அப்யஸிக்க வல்லார்கள் –
சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: