ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

‘நித்திய ஸூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை,
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

வானோர் இறையை-நினைந்து நைந்து என்பான் -என்ற பத த்ரயங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

——————–

‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;
‘யாங்ஙனம்?’ எனின்,
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.

முதல் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு வறுத்த அணுவாக பூர்வகமாக அவதாரிகை –
ப்ரஹ்மாதிகள் வணங்கினால் உன் பெருமைக்கு அவத்யமாகாதோ-என்னுமத்தைப்
பாட்டிலே பிரயோகிக்கிறவருடைய ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் -வாக்ய த்வயத்தாலே –

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

———————

‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில்,
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

கீழ் இரண்டு பாட்டில் பிரமேயத்தையும் அனுபாஷியா நின்று கொண்டு –
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவன் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
இப் பாட்டிலும் மேல் பாட்டில் போலே தம்மோடு அவனுக்கு விசேஷ சம்பந்தம் தோற்றாமையைப் பற்ற
தான் ஒருவனே என்ற ஈடுபாட்டைப் பற்ற அகல மாட்டாதே அணுகவும் மாட்டாதே -என்றது
அணாவாய்த்து -வினோதம் பண்ணிக்க கொண்டு என்றபடி -சம்சயித்து என்றுமாம் –
அவன் நீர்மையைக் காட்டுகையாலே அகல மாட்டாதே –
அடியேன் சிறிய ஞானத்தன் என்கையாலே அணுகவும் மாட்டாதே அணாவாய்த்து -என்கிறார்
ஆழ்வார் தம்மோடு சேர வேணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனைப் பற்ற இப்போது இவருடைய
அவஸ்தை ஏமாற்றம் போலே இருக்கையாலே அணாவாய்த்து -என்றது –
ஸுந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களோடே பரஸ்பர சாரஸ்யாவஹமாம் படி சேர்ந்து இருக்கிற திரு நாமங்களை சார்த்தமாக அனுசந்தித்து
அனுபவித்து அல்லது தப்ப ஒண்ணாத படி போக்கற வளைந்து கிடக்கிற பாப பலமான தரை காண ஒண்ணாத துக்கத்தைப்
போக்கிக் கொள்ளார்களாமாகில் இந்தக் காலம் தன்னை எத்தை அனுசந்தித்துப் போக்குவார்கள் -என்றபடி –
அது எப்படி என்ன சீல குண இத்யாதி-

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-

———————–

‘அவன் படி இதுவாய் இருந்தது; இனி நீர் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
‘நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ?’ என்கிறார்.
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து – (‘வேண்டுதல் என்பது மிகச் சிறிதும் இல்லாதவனாய் இருந்தும்,) –
ஸ்ருஷ்ட்டி யாதி அநேக யத்னங்களைப் பண்ணி (படைத்தல் முதலிய அநேக முயற்சிகளைச் செய்து )
என்னைத் தனக்கு ஆக்கிக் கொண்ட குணங்களாலே என்னை-விஷயீகரித்தவன் – அடிமை கொண்டவன்,
இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று –
ஸமாஹிதராகிறார்- சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்-

எம்பெருமான் என்றது சம்பந்த அபிப்ராயம் என்னும் கருத்தால் –
உடையவனாகையாலே ஸுசீல்யாதிகளைக் காட்டிச் சேர்த்துக் கொண்டான் என்றபடி
த்விதீய அவதாரிகை -எம்பெருமான் ஸுசீல்ய அபிப்ராயம் -ஸுசீல்யத்தாலே சேர்த்துக் கொண்டு
அத்தாலே பெறாப் பேறு பெற்றவனாக இருக்கிறான்
வானோர் பெருமான் என்றதை பற்ற அத்யந்த நிரபேஷனாய் -என்றது
அவன் படி இதுவாய் இருந்தது -ஸூ சீலனாகையாய் இருந்தது –
நீர் செய்யப் பார்த்தது என் -என்றது அகலப் பார்த்தீரோ -என்றபடி –

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

——————-

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம் – விரும்பி அநுகூலரான பின்னர்,
கிரியாதாமிதி மாம் வத ( ‘இவ்விடத்தில் பர்ண சாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளை யிடல் வேண்டும்,’ )என்று
இளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
அன்றி,
இவர் அநுகூலரான பின்பும் அவன் முகங்காட்டாமல்-அல்பம் விளம்பிக்க – சிறிது நேரந் தாழ்க்க,
அது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.

‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.-என்றும்
புருஷார்த்த மாகைக்காக பிரார்த்திக்கின்றார் என்றபடி-

‘கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு
அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.)

கீழ் இரண்டு பாட்டிலும் ஸமாஹிதரானவர் இப் பாட்டில் சேருமாறு அருளாய் என்று பிரார்த்திக்கிறது எது என்ன
த்விதா பரிஹரிக்கிறார்
வினையேன் உன் திருப்பாதம் சேருமாறு அருளாய் -முந்தின அர்த்தத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
இரண்டாவதில் புருஷார்த்தம் ஆகைக்காக -இவருடைய ஸ்தைர்ய நிமித்தமாக -அவன் தாழ்க்க பிரார்த்திக்கிறார் என்றபடி –
வினை என்கிறது பிரதான அவதாரிகையில் அகலுகையில் உண்டான அபிசந்தியை-தீ வினை
முந்துற கிட்டுகை பாபம் என்று இருந்தார் -இப்போது அகலுகையில் உண்டான அபிசந்தி பாபம் என்கிறார்
இங்கும் அநிஷ்டாவஹத்வமே ஹேது
த்வதீய அவதாரிகையில் பிராப்தி பிரதிபந்தக பாபம் –
ஆபிமுக்யம் பண்ணின அனந்தரம் என்றது கீழில் பாட்டில் எம்பெருமான் -என்றதைப் பற்ற

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-

——————

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.

கீழில் பாட்டில் கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறார் என்ற பஷத்தை அவலம்பித்துக் கொண்டு –
நைவன்-என்ற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி
இரண்டாம் அவதாரிகையான பக்ஷத்தில் கீழில் பாட்டுக்கு சேஷம் இப்பாட்டு –
நைவன் என்றதைக் கடாக்ஷித்து -என்னை இழந்தாய் -கிடாய் என்கிறார்

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

——————

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

இதனின் மிக்கோர் அயர்வுண்டே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
அடியேன் சிறிய ஞானத்தன் -என்று அகலும் போது இப்பாட்டில் அவன் முகம் காட்டினான் ஆக வேணும் என்றபடி –
நம்மால் வரும் குணாதிக்யம் என்றது அயோக்யரான தம்மை விஷயீ கரிக்கையாலே வரும் சர்வாதிகாரத்வ ரூப குணாதிக்யம் என்றபடி

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-

——————-

இவர் இப்படி அகலப் புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,
‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ!’ என்ன,
கேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன் தான் அருளிச் செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்
‘அடியேன் அறியேன்’ என்றார்.
‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்;
பின்பு அதனை வெளி நாடு காண உமிழ்ந்தோம்;
அதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக் கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,
‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ!
அது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,
ஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘
ஆயின், அவ் வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;
ஆன பின்னர், நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.
அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்-

நெய் யூண் மருந்தோ -என்கையாலே அவன் நெய் யூண் மருந்து -என்றான் என்று தோற்றுகையாலே
தத் அனுகுணமான அருளிச் செய்கிறார் –
விஷய வைலக்ஷண்யத்தாலும் யுக்தி வைலக்ஷண்யத்தாலும் அது கேட்க்கையில் உண்டான சிரத்தை என்கிறார் –
முன்னம் என்ற பதத்தைக் கடாக்ஷித்து சம காலத்தில் அமுது செய்யில் அன்றோ மருந்தாவது –
அவன் சொன்ன ஹேதுவை தூஷித்தால் அவன் ஹேத்வந்தரம் சொல்ல வேணும் இறே என்றது மாயோனிலே சித்தம் –
வெண்ணெய் விலக்கினார் போலே அநபிமதம் செய்தவர் ஆவீர்-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே?–1-5-8-

————————-

நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய
வெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;
‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;
‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே?’ என்றான் இறைவன்;
இவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;
‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;
என்ன, பொருந்துகிறார்.
இனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –

அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே
பூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –
கீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு
இரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் –
இதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு
தம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –
தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –
விடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப்
பொருந்துகிறார் இதில் என்கிறார்

மாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-

—————————-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.

தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
புதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-

——————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

பிரகரண அனுகுணமாக அவதாரிகை –

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: