ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம்
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யானாம் ஸூலப ஸ்ரீதரஸ் சதா
அவதாரிகை –
1–இதர தர்சனங்களில் பதார்த்தங்கள் ஆறு என்பார் -பதினாறு என்பார் -இருப்பத்தஞ்சு என்பார் –
இப்படி பஹு .பிரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்
2– நம் தரிசனத்துக்கு தத்வம் மூன்று
3–அவையாவன–சித் என்றும் அசித் என்றும் ஈஸ்வரன் என்றும்
———————
அசித் பிரகரணம் –
4-அசித்தாகிறது –
குண த்ரயாத்மகமாய்-
நித்தியமாய் –
ஜடமாய் –
விபுவாய்-
எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய்-
இவனுக்கு லீலா உபகரணமாய்-
மஹதாதி சர்வ விகாரங்களுக்கும் ப்ரக்ருதியாய் –
தன்னோடே சம்பந்தித்த சேதனனுக்கு பகவத் ஸ்வரூபத்தை மறைத்து –
தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கும் தன்மையை யுடைத்தாய்
சதத பரிணாமிமாய் இருக்கும் –
5–இதில் ஸூஷ்ம பரிணாமம் அவிசதமாய் இருக்கும் –
6–ஸூதூல பரிணாமம் விசதமாய் இருக்கும் –
அதாகிறது மஹதாதி விகாரங்கள் –
7–இந்த மூல ப்ரக்ருதி மஹதாதிகளாய்ப் பரிணமிக்கும் படி
எங்கனே என்னில்
8–குண த்ரயங்களினுடைய சாம்யா அவஸ்தையான மூலப்ரக்ருதியில் நின்றும் மஹான் பிறக்கும்
9–இதில் நின்றும் அஹங்காரம் பிறக்கும்
10–இது தான்
சாத்விகமாயும் –
ராஜஸமாயும் –
தாமஸமாயும் –
மூன்று படியாய் இருக்கும் –
11—இதில் சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்கள் பிறக்கும் –
12–இந்திரியங்கள் தான் எவை என்னில் –
ஸ்ரோத்ர-த்வக் -சஷூர் -ஜிஹ்வா -க்ராணங்கள்-என்கிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் -பாணி -பாத -பாயூபஸ்தங்கள் -என்கிற கர்மா இந்திரியங்கள் ஐந்தும்
இவற்றுக்கு பிரதானமான மனஸ்ஸூமாக இந்திரியங்கள் பதினொன்று
13–தாமச அஹங்காரத்தில் நின்றும் சப்த தந் மாத்ரை பிறக்கும் –
14–இதில் நின்றும் இத்தினுடைய ஸ்தூல அவஸ்தையாய் சப்த குணகமான ஆகாசம் பிறக்கும் –
15–இதில் நின்றும் ஸ்பர்ஸ தந் மாத்ரை பிறக்கும்
16–இதில் நின்றும் ஸ்பர்ஸ குணகமான வாயு பிறக்கும்
17–இதில் நின்றும் ரூப தந் மாத்ரை பிறக்கும் –
18–இதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும் –
19–இதில் நின்றும் ரஸ தந் மாத்ரை பிறக்கும்
20–இதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் –
21–இதில் நின்றும் கந்த தந் மாத்ரை பிறக்கும் –
22–இதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வீ பிறக்கும் –
23 — ராஜஸ அஹங்காரம் -இரண்டிற்கும் அனுக்ரஹகமாய் இருக்கும் –
24–ஆக –
இந்த மஹதாதி சகல பதார்த்தங்களும் கூட அண்டமாய் பரிணமிக்கும் –
25–இவ் வண்டத்தில் பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்
26–இதுக்கு கீழ் ஸ்வ சங்கல்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும் –
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும் –
27–இவ்வண்டம் தான் பத்தாத்மாக்களுக்கு
போக்ய
போக உபகரண
போக ஸ்தானமாய்க் கொண்டு பரிணமிக்கும் –
28–போக்யங்களாவன -சப்தாதிகள்
29–போக உபகரணங்கள் ஆவன இந்திரியங்கள் –
30–போக ஸ்தானம் ஆவன –
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீரங்களும் –
பூமி முதலான மேல் ஏழு லோகங்களும் பாதாளாதி லோகங்கள் எழும்
31–இந்திரியங்களும் இச் சரீரங்களும் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதகமாய் இருக்கும்
32–இது வ்யக்த அவ்யக்த ரூபமான அசித் தத்வம்
33–காலமாகிறது –
அசித் விசேஷமாய் –
நித்தியமாய் –
ஏக ரூபமாய் –
கீழ்ச் சொன்ன பிரகிருதி பரிணாமாதிகளுக்கு சஹகாரியாய்க் கொண்டு நிமேஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய் –
எம்பெருமானுக்கு ப்ரகாரதயா சேஷமாய்-
லீலா பரிகரமாய் இருப்பது ஓன்று –
அசித் பிரகரணம் முற்றிற்று –
—————————–
சித் பிரகரணம் –
34–ஆத்ம தத்வம் மூன்று வர்க்கமாய் –
அஸங்யாதமாய் இருக்கும் –
35–இதில் பகவத் சேஷத்தை ஏக ரசரான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகள் நித்ய வர்க்கம் –
36–சம்சாரிகளாய் ஒரு நாளிலே பகவத் ஞானம் பிறந்து –
அதனாலே பகவத் ப்ராப்தி பண்ணினவர்கள் விமுக்த வர்க்கம் –
37–அநாதியான கர்ம ப்ரபாவத்தாலே சதுர்வித சரீரங்களையும் பிரவேசித்து –
அதனாலே சப்தாதி விஷய ப்ரவணரான சம்சாரிகள் பத்த வர்க்கம் –
38–ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –
நித்தியமாய் –
அசித்தில் காட்டில் ஸூஷ்மமாய்-
ஞான குணகமாய் –
அணு பரிமாணமாய்-
பகவதாயத்த கர்த்ருத்வகமாய் –
ஈஸ்வரனுக்கு பிரகாரதயா-சேஷமாய் இருக்கும் –
40–நித்ய முக்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அநர்ஹமாய் இருக்கும்
சித் பிரகரணம் முற்றிற்று –
———————-
ஈஸ்வர பிரகரணம் –
41–ஈஸ்வரன் சேதன அசேதனாத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் –
42–எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம்
ஹேயபிரத்ய நீகமாய்-
கல்யாணைகதாநமாய் –
சகல இதர விலக்ஷணமாய் –
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாய் உள்ள ஞான ஆனந்தமாய் இருக்கும்
43–திவ்ய மங்கள விக்ரஹம்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய்-
எம்பெருமானுக்கு ஸர்வதா அபிமதமாய் –
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் அத்தை ஆஸ்ரயித்து இருக்கும் கல்யாண குணங்களுக்கும் ப்ரகாசகமாய் –
ஏக ரூபமாய் –
சர்வ விஸஜாதீயமாய்-
அப்ராக்ருதமாய் –
அளவிறந்த தேஜஸ்ஸை யுடைத்தாய் –
நித்ய யவ்வன ஸ்வ பாவமாய் –
சர்வ கந்த ஸ்வ பாவமாய் –
ஸுந்தர்யாதி கல்யாண குண யுக்தமாய் –
அதி மநோ ஹரமாய்-
நித்யர்க்கும் முக்தர்க்கும் அநு பாவ்யமாய் –
முமுஷுக்களுக்கும் ஸூப ஆஸ்ரயமாய் இருக்கும் –
44–பரமபதமும் அங்குள்ள பதார்த்தங்களும்
முக்தருடைய விக்ரஹங்களும் –
நித்ய சித்தருடைய விக்ரஹங்களும்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய் இருக்கும் –
45–எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன –
ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் –
அதிலே பிறந்த ஸுசீல்யாதிகளும்-
46–இவை தான் ஒரோ குணங்களுக்கு அவதி இன்றியிலே –
இவற்றுக்குத் தொகை இன்றியிலே இருக்கும்
47–இப்படிப்பட்ட ஸ்வரூபாதிகளை யுடைய ஈஸ்வரன்
பர வ்யூஹாதிகளினாலே
உபய விபூதியையும் நிர்வகித்து அருளும் –
48–எங்கனே என்னில்
49–கீழ்ச சொன்ன ஷாட் குண்யாதி ஸமஸ்த கல்யாண குணங்களோடும்
திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
பரம பதத்தில் நித்யரும் முக்தரும் தன்னை அனுபவிக்க
அவர்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பு பர அவஸ்தை –
50–வ்யூஹ அவஸ்தை யாவது –
லீலா விபூதியை நிர்வஹிக்கைக்காக இவ்விரண்டு இரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
சங்கர்ஷண ப்ரத்யும்னாதி ரூபேண வந்து அவதரிக்கை –
51–இந்த வ்யூஹங்கள் தான்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும்
திரு வவதாரங்களுக்கும் அடியாய் இருக்கும் –
52–விபவமாவது-
திவ்ய மங்கள விக்ரஹத்தை
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களோடே சஜாதீயமாக்கிக் கொண்டு –
தன் படிகளை ஒன்றும் விடாதே -அவ்வோ ஜாதிகளில் வந்து அவதரிக்கை -சாஷாத் விபவமாவது –
சேதனர் பக்கல் ஸ்வரூபேண ஆவேசித்து அவதரிக்கை -ஸ்வரூப ஆவேச அவதாரம் –
சில சேதனர் பக்கலிலே சக்தியினாலே கார்ய காலத்திலே ஆவேசித்து ரஷிக்கை-சக்தி ஆவேச அவதாரம் –
53–அர்ச்சாவதாரமாவது –
ஆஸ்ரிதர் உகந்தது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை அதிஷ்டித்து –
அதிலே திவ்ய மங்கள விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு
ஆஸ்ரித பராதீனனாயக் கோயில்களிலும்
க்ருஹங்களிலும்
கால அவதி இன்றிக்கே திரு வவதரிக்கை-
54–உபாசிப்பவருடைய ஹ்ருதயங்களிலே விக்ரஹ ஸஹிதனாயக் கொண்டு
அவர்களுக்கு ஸூபாஸ்ரயமாய் இருபத்தொரு பிரகாரம் உண்டு –
சித் பிரகரணம் முற்றிற்று
———————-
55–இப்படி சித் அசித் ஈஸ்வர தத்துவங்களும்
ஸங்க்ரஹேண சொல்லப் பட்டது
56–சகல சேதன அசேதனங்களையும் ஈஸ்வரன் பிரகாரமாக யுடையனாய்
தான் அவற்றுக்கு பிரகாரியாய்
வேறு சேதனர்க்கு பிரகாரி இல்லாமையால்
நம் தர்சனத்துக்குத் தத்வம் ஒன்றே என்னவுமாம் –
—————-
தத்வ த்ரய ஸங்க்ரஹம் முற்றிற்று
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply