ஸ்ரீ தென் புதுவைப் பிராட்டி –திவ்ய தேச பிராட்டிமார் பதின்மரையும் திருப்பள்ளி எழுச்சி உணர்த்துவது -ஸ்ரீ உ .வே -குமாண்டூர் இளையவல்லி பாஷ்யம் ரெங்கராஜன் ஸ்வாமிகள் —

ஸ்ரீ தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதவ் கோதாம் உபாஸ்மஹே
யன் மவ்லி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் பிரபு –

மத் தர்சனார்த்தம் தே பாலா ஹ்ருதாஸ்தேந மஹாத்மநா விப்ரார்த மா கதே கிருஷ்னே
மா கச்சே தன்ய தே திஹ–ஸ்ரீ ஹரிவம்சம் –ஸ்லோகம் -8-
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –திருவாய் -3-10-5 —
வேத வாய் மொழி அந்தணன் -ஸ்ரீ பெரிய திருமொழி -5-8-8-
இத்தால் ஸ்ரீ பரமபதத்திலும் திரு௭த்தேவிமார் -ஸ்ரீ கண்ணன் திவ்ய மங்கள விக்ரஹ சேவை காணப் பாரித்து இருந்தமை அறிவோம் –

ஸ்ரீ நாச்சியார் திருமொழியில் மங்களா சாசனம் செய்யப்பட -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி –ஸ்ரீ வடமதுரை -ஸ்ரீ துவாரகை —
ஸ்ரீ திருப்பாற் கடல் -ஸ்ரீ திருக்கண்ண புரம் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திருவேங்கடம் -ஸ்ரீ திருக்குடந்தை –
ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை-

புள்ளும் சிலம்பின் காண்-

திருவாய்ப்பாடி பிராட்டி -துயில் எழுப்பப்படுகிறாள் -பேய் முலை நஞ்சுண்ட -சகடம் உத்தரித்த -வ்ருத்தாந்தங்கள் -உண்டே
புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறின-ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக் திகள் அடி ஒற்றி இதிலும் – -புள்ளும் சிலம்பின
கிளிக்கும் -ஸ்ரீ ஆண்டாளுக்கு சாம்யம் -த்விஜாதிப ஸூதாம்-ஸ்ரீ பெரிய திருவடி பெண்ணாக மதிக்கப்படும் ஸ்ரீ பைம் கிளி –
ஸ்ரீ பெரியாழ்வார் பெண் பிள்ளை ஸ்ரீ ஆண்டாள்
முட்டை வடிவில் தோன்றி குஞ்சு வருவதால் பறவைகள் த்விஜம்-
பிள்ளாய் -அஸ்மத் குருப்யோ நம-வாசகம் –
ஸ்ரீ பெரியாழ்வாரை திருப்பள்ளி உணர்த்தி அவருடன் ஸ்ரீ திருவாய்ப்பாடி பிராட்டியை திருப்பள்ளி உணர்த்தி அருளுகிறாள்
புள்ளரையரனை புருஷகாரமாகப் பற்றி பிள்ளாய் -என்று கொண்டாடுகிறாள்-
புள்ளரையன் கோ -இல் -தாச ச சஹா வாஹனம் -எம்பெருமானின் இன் துணை –
கோ இல் இல் -பிராட்டியின் இல்லமாகத் திகழும் திருவாய்ப்பாடி –
இந்தப் புள்ளரையன் கோயிலில் ஒலிக்கும் ஸ்ரீ திருச்சங்கம்-ஆ நிரை மீளக் குறித்த சங்கம்
மற்றை நாள் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை திருமணம் முடிக்க வந்து இருப்பதை -பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலி
இங்கோ அத்தாணிச் சேவகத்துக்கு அழைக்கும் சங்கு ஒலி -மங்கள தீப ரேகை கொண்டு அவனையும் நம்மையும் சேர்ப்பிக்கிறாள்

———————————-

கீசு கீசு என்று

ஸ்ரீ திரு வடமதுரை திவ்ய தேசப்பிராட்டி-ஸ்ரீ ஹரி -ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரிபிராட்டியை திருப்பள்ளி உணர்த்தி –
அனைவரும் சேர்ந்து இங்கே ஸ்ரீ திரு வடமதுரை கேசவனை திருப் பள்ளி உணர்த்துகிறார்கள் –
இவளே பேய்ப்பெண் -நாயகப்பெண் பிள்ளாய் –
நெடுமால் அழகு தன்னில் நீள் குணத்தில் ஈடுபடுமா நிலையுடைய பக்தியால் -ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -80-
கம்சனுக்கு அறிய முடியாதபடி ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண என்னாமல் கீசு கீசு என்னுமாம் ஆனைச்சாத்தன்
ஆச்ரித வாத்சல்ய திவ்ய மூர்த்தியாய் ஸ்ரீ ஹரி -ஸ்ரீ கேசவன்-அர்ச்சா சேவை இங்கு
ஓஜஸ் -தேஜஸ் -த்யுதிதர -பலம் -பராபி பவன சாமர்த்தியம் -உஜ்ஜ்வல்யம் –
ஒளி மணி வண்ணன் -ப்ரகாசாத்மா -தேஜோ வ்ருஷ-
யஸ்ய விஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம் -என்றபடி –

——————————

கீழ்வானம்

திருத் துவாரகை திவ்ய தேசப் பிராட்டிமார்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை கோதுகலமுடைய பாவாய் –
இவனோ கோதுகலமுடைய தேவாதி தேவன் -தேவ ஸ்ரீ கர்ப்ப -இன்புறும் அலகிலா விளையாட்டுடையவன்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே–மிதுனமாய் எழுந்து அருளுவதால்
நாம் சென்று சேவித்தால் ஆ ஆ என்று அருளும்

—————–

தூ மணி மாடம்

திருப் பாற்கடல் திவ்ய தேசப் பிராட்டி
ஸ்ரீ வண் த்வாராபதி -ஸ்ரீ தக்ஷிண த்வாராபதி -ஸ்ரீ கோபால சமுத்திரம் –
ஸ்ரீ திருப் பாற் கடல் வீதியும் புஷ்கரணியும் உண்டே இங்கும்
திருப் பாற் கடல் அரசனும் ஸ்ரீ பெரியாழ்வாரும் மாமனார்கள் அன்றோ-எனவே மாமீர் -மாமான் மக்களே என்ற விளிச் சொற்கள்
யோக நித்திரை -மாதவ -மா -மவ்னம்-தா -த்யானம் -வ -யோகம் -ஸ்ரீ வ்யூஹ வாஸு தேவன் சேவை –
ஸூ முக -மநோ ஹர -ஸ்வாபன-ஏமப் பெரும் துயில்-ஸ்ரீ சஹஸ்ரநாமம் நவின்று திருப்பள்ளி உணர்த்த பிரார்த்திக்கிறாள்

———————————-

நோற்றுச் சுவர்க்கம்

திருக் கண்ண புர நாயகி-அம்மனாய் -அருங்கலமே –
ஸ்தலம் -வனம் -நதி -கடல் -நகரம் -தீர்த்தம் விமானம் -சப்த புண்ய க்ஷேத்ரம் –
ஸ்ரீ நீல மேகப்பெருமாள் -ஸ்ரீ சவுரி ராஜன் -நாற்றத்துழாய் முடி நாராயணன் அன்றோ
ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ திருவேங்கடம் -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ வான மா மலை -ஸ்ரீ சாளக்கிராமம் -ஸ்ரீ புஷ்கரம் –
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ நமிசாரண்யம் -ஆகிய அஷ்ட திவ்ய ஷேத்ரங்களும் திரு அஷ்டாக்ஷரம் ஒவ் ஒரு அக்ஷரம் –
இங்கோ பரிபூர்ணம் -கைங்கர்ய சித்தி அருளவே சேவை –

—————————-

கற்றுக் கறவை

ஸ்ரீ பெரிய பிராட்டியார் –ஸ்ரீ திருவரங்கம் –பொற் கொடி– புன மயில் -ஸ்ரீ லஷ்மீ கல்ப லதா –ஸ்ரீ லஷ்மீ கல்ப வல்லீ —
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியான் –திருவாய் -9-3-9–குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன்
சிகீ யான ஸ்ரீ அரங்கன் ஆண் மயில் இந்த புனமயிலை மகிழ்விக்க தோகை விரித்து-
இவளைத் திருப்பள்ளி உணர்த்துவது முகில் வண்ணனைப் பேர் பாட அன்றோ –
இவளது இங்கித பராதீனன் -ஆகையால் இவளே செல்வப் பெண்டாட்டி -ஸ்ரீ செல்வ நாராயணனின் இணை பிரியா இன் துணை அன்றோ
ஆராமம் சூழ்ந்த அரங்கம் என்பதால் பகல் வேட்டைக்கு சென்று தங்கும் திவ்ய தேச பிராட்டிமார்களே சுற்றத்து தோழிமார் ஆவார்கள்

———————————

கனைத்து இளம் கற்று எருமை

ஸ்ரீ பத்மாவதி தாயார் -ஸ்ரீ திருவேங்கடம் -முகிலிடை மின்னே போலே திகழ்கின்ற திருமார்பில்
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் –
குளிர் அருவி வேங்கடம் என்பதால் -பனிவரையின் உச்சி அன்றோ -பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி-
நற்செல்வன் -சர்வ யோக விநிஸ்ருத–கைங்கர்ய செல்வம் அருளவே இங்கே சந்நிதி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு / வேங்கடம் மேவிய வேத நல் விளக்கு /மின்னார் முகில் சேர் வேங்கடம் –
அனைத்து இல்லத்தாரும் அறிந்து கொண்டாட எழுந்து அருள வேண்டுகிறாள் –

———————————-

புள்ளின் வாய்

திருக் குடந்தை திவ்ய மஹிஷி ஸ்ரீ கோமள வல்லித் தாயார்–போதரிக் கண்ணினாய் –பாவாய்
காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்று –தூவியம் பேடை அன்னாள் கண்களாய் துணை மலரே –திருவிருத்தம் -67-
அஸி தேஷ்ணை அன்றோ
மரகத மணித்தடத்தே எம்மையும் சேர்த்துக் கொண்டு குள்ளக் குளிர நீராட்ட வேண்டும்-
உத்யோக சயனம் -திருவடிவாரத்தில் சப்த நதிகளும் ஸ்ரீ பூமிப்பிராட்டியும் ஸ்ரீ த்வயம் முற்கூற்று அனுசந்தானம் –
திருமுடியின் வலப்பக்கம் ஸ்ரீ பெரிய பிராட்டி பிற்கூற்று அனுசந்தானம் –
இருவருமாக சேர்த்தியில் கைங்கர்ய ரசம்

———————————

உங்கள் புழக்கடை —

ஸ்ரீ பரம பத திவ்ய தேசப் பிராட்டி –

ஸ்ரீ மாக வைகுந்தத்தே -குடந்தை எம் கோவலன் குடி குடியார் என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வாழ்த்தி வரவேற்பது
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு உள்ளத்தே நிழலாட இதில் நங்காய்-என்று விளிச்சொல் –
ஸ்ரீ பர வாஸூ தேவ நம்பிக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை அன்றோ –
லீலா விபூதி ஸ்ரீ பரமபதத்துக்கு புழக்கடைத் தோட்டம்
நாணாதாய் -பர்யங்க வித்யை படி அபிமத பிள்ளைகள் திருப் பள்ளிப் படுக்கையில் துகைக்கவும் நாணாதவள் அன்றோ –
நாவுடையாய் -ஸ்ரீ சேனை முதலியாருக்கு ஸ்ரீ த்வய மந்த்ரம் உபதேசித்த திரு நா அன்றோ
பங்கயப்பூவில் பிறந்த உன்னையே நாளும் பார்த்து அனுபவிக்கும் பங்கயக் கண்ணன் அன்றோ –
அவனைப் பாட திருப்பள்ளி உணர்த்துகிறாள்

————————————–

எல்லே இளம் கிளியே —

ஸ்ரீ கல்யாண சுந்தர வல்லித்தாயார் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை -தென் ஆனை-ஸ்ரீ சுந்தர ராஜன் -ஸ்ரீ கள்ளழகர் -ஸ்ரீ பரம ஸ்வாமி –
எழுப்பும் பெண் பிள்ளை -ஸ்ரீ ஆண்டாள் -மதிப்புடைய சோலைக்கிளி
எழுப்பப்படும் பெண் பிள்ளையோ பெரு மதிப்புடைய திருமாலிருஞ்சோலை திருமலையில் துயிலும் இளங்கிளி
வாக்ய குருபரம்பரை படியே ஸ்வாப தேசத்தில் -ஸ்ரீ மதே சடகோபாயா நம -அர்த்தம் அன்றோ
தனிச்சிறையில் விளப்புற்ற கிளி மொழியாளான சுந்தர காண்டத்து சுடர்க் கொடியும்
அணி மழலைக் கிளி மொழியாளான ஸ்ரீ பராங்குச நாயகியும் ஒரு சேர வைத்து திருப்பள்ளி உணர்த்துகிறாள்–
ஸ்ரீ சடகோபரை எழுந்து அருளப்பண்ணி எங்கள் சிரம் தொட்டு எண்ணிப் பார்க்க பிரார்த்திக்கிறாள் –

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே -குமாண்டூர் இளையவல்லி பாஷ்யம் ரெங்கராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: