ஸ்ரீ திரு விருத்தம்- அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எங்கும் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-
மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்/
மாறன் விண்ணப்பம் செய்த -ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈனச் சொல் ஆகிலும் 99 சொல்லி-
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்

——————————-

ஸ்ரீ ஆளவந்தாரும்  -ஸ்ரீ நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநயே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த  அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –

————————–

பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வாரை முக்தர் என்பார்கள் சிலர் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆச்ரயித்தார் ஒருவர் முத்த ப்ராயர் என்பர் –
அங்கு உள்ளார் ஒருவரை நீர் போய் பிறவும் என்னப் பிறந்தார் -என்பார்கள் சிலர் –
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி -ஸ்ரீ எம்பெருமான் தான் இப்படி வந்து அவதரித்தான் -என்பர்
இப்படிச் சொல்லுகைக்கு அடி ஸ்ரீ ஆழ்வார் உடைய பிரபாவத்தாலே –
முக்தரிலே ஒருவரை இங்கே போர விட்டதாகில்
நாம் போந்த கார்யம் முடிந்த வாறே போகிறோம் என்று ஆறி இருக்கக் கூடும்
அங்கன் இன்றியிலே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ
மாறி மாறி பல பிறப்பும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ –
என்று எல்லாம் கூப்பிடுகையாலே இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –
அராஜகமான தேசத்திலே ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால்
ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
ஸ்ரீ எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை –

ஒருங்கே மறிந்து கிடந்தது அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன -திரு விருத்தம் -42-என்றும்
பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -திருவிருத்தம் -45-என்றும்-
நிர்ஹேதுகமாக கடாஷித்து அருளினான்-

இந் நின்ற நீர்மை -என்கையாலே முக்தர்
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்கையாலே -முத்த ப்ராயர் -என்றும்
மாறி மாறி -என்கையாலே -நித்யர் என்றும்
அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்கையாலே ஸ்ரீ எம்பெருமான் என்றும் சங்கை வருமே

சிர காலம் சாத்யமான கர்மத்தை உடையார் ஒருத்தருக்கு கடாஷித்த அநந்தரம் இங்கனே ஆகக் கூடுமோ என்னில்
பிருந்தாவனம் பகவதா கிருஷ்னே நரக்லிஷ்ட கர்மணா சுபே கமன சாத்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -என்கிறபடியே
நெருஞ்சிக் காடாய் கிடந்த ஸ்ரீ பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய வீஷணத்தாலே
உத்பன்னதவ சஷ்பாட்யம் -என்கிறபடியே
சாணரைப் புல்லாய் பசுக்கு பசுகு என்று அறுக்க அறுக்க தொலையாதே கிடந்தால் போலே இவர்க்கும் இது கூடும் –

ஜரா மரண மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தியே -ஸ்ரீ கீதை -என்று கேவலரைப் போலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்பான் என் என்னில்
காந்தன் சந்நிதியில் காமினி அழுக்கு கழற்றுமா போலேயும்
ராஜ குமாரன் அபிஷேகம் என்றவாறே ஷய வியாதிகளைப் போக்க நினைக்குமா போலேயும்
தத் அனுபவ விரோதி என்று கழிக்க நினைக்கிறார்
இது தான் ப்ரீதியோ அப்ரீதியோ என்னில் -இரண்டும் ஸ்ரீ மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும்
ஸ்ரீ வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும் பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும் ஸ்ரீ எம்பெருமானைக் கண்ட பிரியமும் –

ஸ்ரீ வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுவான் என் என்னில்
இமையோர் தலைவா -என்றும்
அடியார் அடியார் தம் அடியார் -என்றும்
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும்
சொல்லுகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-
அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்
அழுந்தார் பிறப்பாம் -என்றும்
உபக்ரமமும் உபசம்ஹாரமும் ஏகார்த்தம் ஆகையாலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –

———————————————————————

முதல் பாசுரம் அவதாரிகை –

சர்வேஸ்வரன் தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
கண்டு
அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்த்தையும் வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

ஸ்ரீ எம்பெருமானை சாஷாத்கரித்த ஸ்ரீ ஆழ்வார்-த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –

வியாக்யானம் –

பொய் நின்ற ஞானமும் –
அச்வேச்ய புத்தியையும் -பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே
சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று
மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று
ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே ஆத்மா ஏக ரூபமாய் இருக்கும் இறே
அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது -ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்

நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –

பொல்லா ஒழுக்கும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி
குருஷ்வமாம் அநு சரம்
என்று இருக்கும் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே
கண்டது அடைய அஹம் என்று இருக்கை
பொய் நின்ற ஞான அனுகுணமான
பர த்ரவ்ய அபஹாராதி சாரித்ரமும் –

அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்
மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்

இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக் கூறை காட்டுகிறார் -என்று ஸ்ரீ அம்மாள்
ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் ஸ்ரீ பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஸ்ரீ ஆளவந்தார்

ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-ஸ்ரீ அம்மாள் நிர்வாஹம்
தம் படியைக் காட்டுகிறார் -ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்
இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்
இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம்
இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு
ஸ்ரீ ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே
பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே
இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை
தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –

இனி –
ஸ்ரீ ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே
உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு
குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு

யாம் உறாமை –
பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்
நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்
ஆத்மனி பஹூ வசனம்வா –

உயிர் அளிப்பான் –
உயிர்
ஸ்ரீ பிராட்டிமார் ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே-
சகல ஆத்மாக்களையும் சம் ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –

அளிப்பான்-
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –
சிலர் அபேஷித்தது உண்டோ -உன் கிருபை இறே
தான் சொல்லும் போதும் பஹூநிம் என்றான் இறே

உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிறபடியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில்
அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன
சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் –
நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-

பிறந்தாய் –
தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து –
பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே
அகர்ம வச்யனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு
எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-
இதுக்குக் கருத்து
உம்முடைய கார்யம் நீரே நிர்வஹித்துக் கொள்ளும் -என்ன
அங்கனே யாகில்
தேவரீர் உடைய அவதாரங்களுக்கு வேறு பிரயோஜனம் என்ன -என்று –

இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –

மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் -கிட்டினவாறே மடி எற்ப்பர்கள் என்ன -மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம்
மங்க வொட்டு உன் மா மாயை -என்னும் அளவும் செல்ல
உபக்ரமத்திலே இங்கனே காணும் எல்லாரும் சொல்லுவது
நீரும் அவ்வோபாதி இறே-என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கன் அன்று
என்னுடைய விஞ்ஞாபனம் சத்யம் -என்கிறார்-

நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது –
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை
ஸ்ரீ எம்பெருமான் பேரா நிற்கப் புக
இத்தை நின்று கேட்டு அருள வேணும்
என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –

அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று -நீர் ஆர் -என்றான் அடியேன் -என்கிறார்
இவருடைய நான் -இருக்கிறபடி –

நான் என்றாகில் இறே -சொன்ன வார்த்தை -என்பது
அடியேன் -என்கையாலே -செய்யும் விண்ணப்பம் -என்கிறார்

அடியேன் உடைய விஞ்ஞாபனம்
இவருடைய உக்தியிலே
இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள
அடியேன் -என்று
தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்

செய்யும் –
இவ்வபேஷைக்கு மேல் இல்லை –

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –

—————————-

அவதாரிகை –
நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் –
இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய் இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் –
உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய் பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் –
நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல -அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –
நூல் பயன்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் –துறையடைவு–முனியே நான்முகன் -10-10-

வியாக்யானம் –
நல்லார் நவில் –
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –
ராமோ ராமோ ராம -இதிவத் -சர்வதாபி கதஸ் சத்பி -ஸ்ரீ பெருமாள் சிரமம் செய்து விட்டு
ஒரு-நிழலிலே இருந்த அளவிலே -பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிறப்புக்கைக்கு அன்றிக்கே
ஆறுகள் வந்து புகுருகிறது -நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

திரு மால் இத்யாதி –
அவர்கள் அடைய ஸ்ரீ ஆழ்வார் என்னா நிற்க செய்தே -இவர் தாம் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் —என்னை யாளும் பரமரே –என்கிறார் –
திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய –தைப் பற்றி -பெரும் பேறு பெற்றீர் -என்கிறார் –
ஸ்ரீயபதி உடைய திரு நாமங்களைச் சொல்லுக்கைக்கு அதிகாரம் உடையவர்கள் உடைய திருவடிகள் ஆகிற
மாலையை சூடுகையே நிரூபகமாக உடைய ஆழ்வார் –
விண்ணப்பம் செய்த -அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி -விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –
சொல்லார் தொடையல் –
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா -பாட்யேகேயேச மதுரம் -என்கிறபடியே இதில் சாரஸ்யத்துக்கும் ஆக ஆதரிக்க வேணும் –

இந்நூறும் –
மகா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே –
நூறு பாட்டாய் -ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –

வல்லார் அழுந்தார் –
பலத்தை முற்பட சொல்லுகிறார் -எதில் அழுந்தார் என்கிறது என்னில் –
பிறப்பாம் பொல்லா -ஜன்மமாகிற பொல்லா -ஜ்ஞாநானந்த லஷணமாய் -ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –
அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –

அருவினை –
கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து பூண் கட்டுமதாய் இருக்கை –
மாய -ருசி வாசனைகளை பிறப்பிப்பதாய்
வன் சேறு -தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை
அள்ளல் -கால் இட்டால் கீழே கரிக்கும்படியாய் இருக்கை
பொய் நிலம் -அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –
இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் –
பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் -என்று அந்வயம்
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று அருளிய
ஞான தேசிகர் -ஸ்ரீ ஆழ்வாரை அல்லால் தொழா ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகள் –
அனந்தன் மேல் கிடந்த புண்ணியனை பாகவத பர்யந்தமாக பற்றுகை –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ சூக்தியாலே இத்தை அருளி -ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

———————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: