ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –
பிரவேசம் –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்ம விஷயம் ஆதல் ஈஸ்வர விஷயம் ஆதல் ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை-சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –
ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப் பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி–ஒரு நல் சுற்றம் -அளவும்-ஸ்ரீ உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் – என்று அனுபவித்தார் –
இப்படியே இவர் திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-
இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது -நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்-தலையாலே வணங்கியும்- நெஞ்சாலே நினைத்தும்- தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -திருக் குறும் தாண்டகத்தில்-
பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்-வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று
ஆர்த்தராய் சரணம் புக்கார்
அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –
அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்-அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும் அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –
அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –
இனி முகம் காட்டாது ஒழியில்-ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே
இவருக்கு முகம் காட்டி தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-
ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் ஸ்ரீ கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –
அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –
ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –அனுபவத்து –
அதனில் பெரிய என் அவா -என்று தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-
——————————————————————-
அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக-திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-
—————————
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான ராஹித்யம் தொடக்கமாக
பிராப்தி பர்யந்தமாக ஈஸ்வரன் தமக்கு பண்ணின உபகார பரம்பரைகளை அருளிச் செய்தார் –
இதில் – தமக்கு த்ரிமூர்த்தி சாம்ய ப்ரமத்தை அறுத்து தந்தபடியை அருளிச் செய்கிறார் –
எண்ணும் பொன்னுருவாய் -என்று ஸ்வரூப வைலஷண்யத்தை சொன்ன போதே
இதுவும் அதிலே அர்த்ததா உக்தம் அன்றோ -என்னில் –
சிம்ஹாவ லோக ந்யாயத்தாலே -கீழ்ச் சொன்ன உபகாரங்களை மறித்துப் பார்த்து அல்லாத உபகாரங்களை உண்டு அறுக்கிலும்
இந்த த்ரிமூர்த்தி சாம்ய கூழ்ப்பை அறுத்துத் தந்த உபகாரத்தை உண்டறுக்கப் போமோ -என்று –
அவற்றின் உடைய ஆதிக்யத்தாலே திரியட்டும் சொல்லுகிறார் –
கூழ்ப்பு -சம்சயம்
விஷயாந்தர ப்ராவண்யத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
கைவல்யம் ஆகிற ஆபத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –இந்த உபகாரம் -என்கிறார்-
1-இருவர் சேஷமாய் -ஒருவன் சேஷியாய்
2-இருவர் உத்பாதகராய் -ஒருவன் உத்பாதகனாய் –
3-இருவர் சரீரமாய் -ஒருவன் சரீரியாய் –இருக்கிறபடியை எனக்குக் காட்டித் தந்தான் –என்கிறார் –
பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–2-
————————
முதல் பாட்டிலே -விஷயாந்தர ப்ராவண்யா நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்வரூப பிராப்தமான சேஷ சேஷித்வ பர்யந்தமாக
ஸ்ரீ ஈஸ்வரன் தன் பேறாக சாஷாத்கரிப்பித்த உபகாரத்தைக் கண்டு விஸ்மிதர் ஆனார் –
தான் அபேஷிக்க அவன் செய்யுமது இறே பிராப்தமாய் இருப்பது –
தாம் விமுகராய் இருக்க அவன் தானே மேல் விழுந்து கார்யம் செய்கையாலே விஸ்மயமாய் இருக்கும் இறே –
இரண்டாம் பாட்டிலே –அந்ய சேஷத்வத்தை அறுத்துத் தந்தான் -என்கிறார் –
த்ரிமூர்த்தி சாம்ய பிரமத்தாலே பிரமித்தது அந்ய சேஷத்வம் இறே –
இப்பாட்டில் –
மணி வுருவில் பூதம் ஐந்தும் -என்றும் –
முகில் உருவம் -என்றும் –
ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசகமாய் –
நிரதிசய போக்யமாய் காள மேக நிபச்யாமமாய் -இருக்கிற வடிவை ஆசா லேசம் உடையாருக்கு
ருசி அனுகுணமாக அழிய மாறி -உபகரிக்கும் படியையும் –
தமக்கு ஸ்வாபாவிகமான வடிவு தன்னையே நிர்ஹேதுக கிருபையாலே காட்டித் தந்த படியையும் கண்டு
நான் கண்டாப் போலே யார் காண வல்லார் -என்கிறார் –
பதிவ்ரதையானால் பர்த்தா சம்ச்லேஷத்தில் இழியுமா போலே-சேஷத்வ சித்தி உண்டாய் –
அனன்யார்ஹதை உண்டானால் –பின்னை அனுபவத்தில் இழியும் இத்தனை -இறே –
ஸ்வரூபத்தை கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும் படி இருக்கும் குணங்கள் –
உபயத்தையும் கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும்படி இறே -வடிவின் போக்யதை இருப்பது –
இத்தால் –வடிவை -அனுபவிக்கிறார் –
திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–3-
———————
கீழ் மூன்று பாட்டாலும் ஸ்ரீ திருமந்த்ரார்தம் ஆய்த்து –
முதல் பாட்டில் –சேஷ சேஷித்வம் சாஷாத்க்ர்தம் ஆய்த்து –
இரண்டாம் பாட்டில் –அந்ய சேஷத்வம் நிவர்த்தம் ஆய்த்து –
மூன்றாம் பாட்டில் -போக்யதை குறைவற்றது –
இனி அனுபவத்துக்கு சஹகாரிகளைத் தேடும் இத்தனை இறே –
அதில் -நித்ய ஸூரிகள் தேச விப்ரக்ர்ஷ்டர் ஆகையாலும்-சம்சாரிகள் விஷய பிராவணர் ஆகையாலும் –
துணையாக மாட்டார்கள் –
இனி தமக்கு அவர்ஜநீயமாய் இருந்துள்ள திரு உள்ளம் இறே சஹகாரி யாவது –
ஆகையால் -நெஞ்சே -நாம் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பாராய் – என்கிறார் –
கீழ்ச் சொன்ன விலஷண விக்ரஹ விசிஷ்டன் உடைய ஜகத் காரண பிரயுக்தமான
வைபவத்தை ஸ்வரூப பிரகாசமான திருமந்திர முகத்தாலே அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
இவர் தாம் ஸ்ரீ திரு மந்திர முகத்தாலே அனுபவிக்கிறார் ஆகில்-அதுக்கு
உபயவிபூதி நாதத்வமும் சமஸ்த கல்யாண குணாத்மகத்வத்மமும் அன்றோ அர்த்தம் -என்னில்
அதுவும் பிரமாண ப்ராசுர்யத்தாலே காரணத்வத்திலே ஒதுங்கி இருக்கக் கடவது –
ஏகோஹவை நாராயணா ஆஸீத் -என்றும்
நராஜ்ஜாதானி தத்வானி-என்றும்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -என்றும் இத்யாதிகளாலே
ஜகத் காரணத்வத்தை ஸ்ரீ நாராயண சப்தார்த்தமாக சொல்லக் கடவது இறே –
அது தனக்கு கருத்து என் என்னில் -முறை அழிந்து கிடக்கிறது இத் தேசம் ஆகையாலே
பிரமாண அபேஷை உள்ளது இத் தேசத்துக்கு இறே –
தம் காணியைப் பிறர் ஆளும் போது இறே பிரமாணம் காட்ட வேண்டுவது –ஆகையால் சொல்லுகிறது
ஆகையால் –நெஞ்சே ஸ்ரீ ஜனகனை அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
வந்தணனை வந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-
—————————-
ஜகத் காரண பூதனாய்-ஜகத் சரீரியாய் இருக்கிற படியை அனுசந்தித்தார் –
அநந்தரம்
ஸ்ரீ நாராயண சப்தார்த்தத்தை-ஸ்ரீ நாராயண அனுவாகம் ஆகிற ஓலைப் புறத்தே கேட்டுப் போகாதே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ வாமனனாய் அவதரித்து திரு உலகு அளந்த படியை அனுபவிக்கிறார் —
சேஷ சேஷித்வ சம்பந்தம் இறே – ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –
ஜகத் காரணத்வத்தால் -ஸ்ரீ ஈஸ்வரனோடு இவ் வாத்மாவுக்கு உள்ள சம்பந்தத்தை இறே சொல்லுகிறது – –
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -என்று
சர்வ லோகமும் இவ்வர்தத்தைக் கண்ணாலே காணும்படி இறே -திரு உலகு அளந்து அருளினது –
ஆகையாலே -ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான -திரிவிக்கிரம அபதானத்தை அனுபவிக்கிறார் –
யஞ்ஞ வாடத்தே சென்றபடியையும் –அர்த்தித்த படியையும் சொல்லாதே –
எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த இவ் வம்சத்தைச் சொல்லுகையாலே –
சேஷ சேஷித்வ பாவ சம்பந்தத்தை அனுபவிக்கிறார் என்று தோற்றுகிறது இறே –
ஸ்ரீ வாமன அவதாரத்தால் சீலம் காட்டி-ஸ்ரீ திரு விக்கிரம அவதானத்தாலே சம்பந்தம் உணர்த்தி அருளினானே
ஸ்ரீ வாமனன் -உபாயம் /ஸ்ரீ திரிவிக்ரமன்-உபேயம் –ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடும் அத்தாலே
ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–5-
—————————–
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் -என்று
ஸ்ரீ திருமந்த்ரத்தை பிரமாணத்தாலே கண்டு போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து அவதரித்து எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையால் உணர்த்தின சம்பந்தத்தையும்
தத் காலத்தில் செவ்வியையும்-அதுக்கு பிற்பாடர் ஆகையாலே அனுபவிக்கப் பெற்றிலோம் என்று – விஷண்ணராக–
அவதாரத்துக்கு பிற்பட்டாரை அனுபவிப்பைக்கு உறுப்பாக அன்றோ நாம் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே
வந்து நின்றோம் என்று உகந்து அருளின தேசத்தைக் காட்டிக் கொடுக்க
நெஞ்சே -நமக்கு வாய்த்தது -அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
ஸ்ரீ திருமந்த்ரார்தத்துக்கு எல்லை உகந்து அருளின நிலங்கள் இறே –
ஸ்ரீ திரு மந்த்ரத்தை பிரதம பிரபந்தத்திலே லபித்தது-அதின் அர்த்தத்தை அனுபவிக்கிற இடத்தில்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்று அன்றே அனுபவித்தது –
ஆனால் –புலம் புரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளி பூம் கோவலூர் தொழுதும் -என்ன அமையாதோ
கீழ் எல்லாம் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உகந்து அருளின நிலங்கள் உடைய அடிப்பாடு சொல்லுகிறது –
மேன்மையும் நீர்மையும் போலே காணும் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –
அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-
———————————-
தாம் இருந்த இடம் ஸ்ரீ திருக் கோவலூராகப் பெறாமையாலும்-
அவன் தாம் இருந்த இடம் வந்து முகம் காட்டாமையாலும் –
அவன் வந்து முகம் காட்டுகைக்கு ஹேதுவான ஸ்வ பாவங்களை பற்றிக் கூப்பிட்டாராய் நின்றார் கீழ் –
இதில் –
திரு உலகு அளந்து அருளின போதை செவ்வியை அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்பட்டவருக்கு அச் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்ற படியைக் காட்டிக் கொடுத்தோம் ஆகில்
சாபேஷரான தாம் நம் பக்கலிலே வந்து அனுபவிக்கும் அத்தனை அன்றோ-என்று நினைத்து இருந்தானோ வென்றும்
நாம் அயோக்யர் என்று முகம் தாராது இருந்தானோ என்றும் சங்கித்து – அவன் படியைப் பார்த்தால்
ஆசாலேசம் உடையார் இடத்தே சென்று முகம் கொடுக்குமவன்-யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவன்
ஆகையால் அக்குறை அவனுக்கு உண்டாக மாட்டாது –
இனி இழைக்கைக்கு அடி என் பாபம் இறே-ஆகையால் யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே
கிடந்தது உழையா நிற்கும் இதுவே யாய்விட்டது என் கார்யம் என்று தம் அவஸ்தையை அனுசந்தித்து விஷண்ண்ர் ஆகிறார் –
வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-
——————————-
ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய் யோக்யதை அயோக்யதை பாராதே முகம்
கொடுக்குமவனாய் இருக்க சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது – அடியிலே –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் –
சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து
சம்பந்த ஜ்ஞாபகமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபகரணமாகக் கொண்டு –இங்கே அனுபவிப்பார்க்கு
அங்கே யாவதாத்மபாவி அனுபவிக்கலாம் என்று கால ஷேப அர்த்தமாக சொன்ன இத்தனை ஒழிய
பிராப்யம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறியில் அன்றோ –
பிராபகம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறிவது –நான் என் அறிவன் -என்கிறார்-
மந்தரத்தால் -என்கையாலே -ஒரு சாதன பாவமும்
மறவாது வாழ்தியேல் -என்கையாலே -ஒரு கர்த்தவ்யமும் –
வாழலாம் -என்கையாலே -ஒரு பலமுமாய்த் தோற்றும் இறே –
இவருடைய நோற்ற நோன்பு இருக்கிறபடி –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்று ஆகிஞ்சன்யத்தைச் சொல்லி யாகிலும்
இனி உன்னை விட்டு ஓன்று மாற்ற கிற்கின்றிலேன் -என்று ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்
அருளிச் செய்தார் இறே –
பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-
—————————-
ஆற்றாமையோடு –முதலானாய் -என்றார் –அந்த வெக்காயத்தோடே –ஆண் பெண்ணாய் –
அது தன்னிலும் தன் வாயாலே சொல்லுகைக்கு யோக்யதை இல்லாதபடி – மோஹங்கதையாய் –
வைத்து வாயாலே கூப்பிடும்படியாய்ச் செல்கிறது மேல் –
அதாகிறது-
இயற்கையிலே புணர்ந்து பிரிந்து பிரிவு ஆற்றாதாள் ஒரு ஸ்ரீபிராட்டி மோஹம் உணர்த்தியும் –
இவை முதலான தசா விசேஷங்களும் ஒருகால் பிறக்கையும் அது தானும் அக்ரமாக பிறக்கையுமாக செல்லா நிற்க
பந்து வர்க்கத்தில் உள்ளாறும் யுக்த அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே இருக்க-இந் நோவுக்கு நிதானம் அறியாதே
பேஷஜ குசலரும் மந்திர வாத குசலரும் புகுந்து பிரவர்த்தியா நிற்கும் அளவிலே
பகவத் பரையாய் இருக்குமவள் ஒரு கட்டுவிச்சி-இவளுடைய நோவுக்கு நிதானம் அறிகிலிகோள்-
இவளுக்கு ஸ்ரீ எம்பெருமான் அடியாக வந்த நோவு –இது அவனாலே பரிஹ்ர்தமாக வேணும் என்று
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட திருத் தாயார் –வினவ வந்தார்க்கு இப் பெண் பிள்ளை உடைய பிரவ்ர்த்தியையும்
கட்டுவிச்சி சொல்லுகிற வார்த்தையையும் சொல்லுகிற பாசுரத்தாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –
இவர் பிராட்டி தசையை பிராபிக்கை யாகிறது -அனுபபன்னம் அன்றோ -என்னில் –உபபன்னம் –
பிராட்டிமார்க்கும் இவருக்கும் அனன்யாரஹ சேஷத்வம் ஆகிற சம்பந்தம் ஒத்து இருக்கையாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்கிறபடிபோகம் சமானமாய் இருக்கை யாலும் –
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யாவிவோத்ர்தௌ -என்று
ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ பிராட்டியோடு ஏக பிரக்ருதியாய் தம்மைச் சொல்லுகையாலே –
வியதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும் ஸ்ரீ பிராட்டி தசையைப் பிராபிக்க தட்டில்லை –
ஆனாலும் தான் ஸ்திரீ என்கிற புத்தி பிறக்கக் கூடுமோ என்னில் –
ஸ்வாமித்வாத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா
ஸ்வேப்யோதாசத்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
ஸ்ரீ புருஷோத்தமன் உடைய பும்ஸ்த்வம் ஆவது எதிர்தலைக்கு ஸ்த்ரீத்வதயாய் இருக்கையாலே-
நான் ஸ்திரீ என்று புத்தி பிறக்க தட்டில்லை –
ஸ்திரீ என்ற புத்தி பிறக்கை யாவது -தான் ஸ்திரீகளோடே ஆகார சாம்யத்தாலே பிறக்கும் புத்தி யல்ல-
புருஷ விஷயத்தில் ஸ்திரீகளுக்குப் பிறக்கும் அனுராக விசேஷ புத்தி பிறக்கை-–
சஜாதீய விஷயத்தில் விஜாதிய புத்தி பிறக்க எங்கே கண்டோம் என்னில்
பாஞ்சால்யா பத்ம பத்ராஷாயா ச் ஸ்னாயந்த்யா ஜகனம் கனம்
யாஸ்த்ரியோ த்ரஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மானசா யயு – என்று எதிர் தலையில் வைலஷண்யத்தாலே
சஜாதிகளான ஸ்திரீகளுக்கு ஸ்திரீகளைக் கண்டால் புருஷர்க்கு பிறக்கும் அனுராக புத்தி பிறந்தது இறே
அப்படியே -புருஷோத்தம விஷயமாக இவருக்கு பிறக்கும் அனுராக விஷயம் பிறக்க தட்டில்லை –
எதிர் தலையில் வைலஷண்யம் இறே விஜாதீய புத்திக்கு உத்பாதகம் –ஆகையாலே ஒரு பிராட்டி தசையை பிராபிக்கிறார் –
இன்னமும் இயற்கையில் புணர்ச்சி என்கிற இதுவுக்கு நினைவு என் என்னில்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சேதன விஷயத்திலே ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக விஷயீ கரிக்கும்
நிர்ஹேதுக விஷயீ காரத்தை சொல்லுகை –எங்கனே என்னில்
பாஹ்ய உபவனத்தில் ஒரு ஸ்ரீ பிராட்டி புறப்பட்டு புஷ்பாபசம் பண்ணுகிற சமயத்தில்
அபிமதனான காந்தனும் ம்ர்க வியாஜத்தாலே வர
தோழிமார்களும் அந்ய பரைகளாய் இருக்கிற தசையிலே தர்மி பிரயுக்தமான ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களே ஹேதுவாக
ஜ்ஞாபகரும் இன்றிக்கே-கடகரும் இன்றிக்கேஇருக்க –சம்ச்லேஷிக்கை இறே -இயற்க்கை புணர்ச்சி ஆகிறது-
ஆசார்ய க்ர்த்ய்த்தையும் புருஷகார க்ர்த்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் –
ஸ்த்ரீத்வம் ஆகிறது ஒரு விஷயத்துக்கு அனன்யார்க சேஷமாய் இருக்கை இறே –
எதிர்தலையில் பும்ஸ்த்வம் ஆவது -வகுத்த விஷயமுமே -சர்வ வித ரஷகமுமாய் -இருக்கை இறே –
ஆகையால் நிர்ஹேதுக விஷயீகாரத்தை சொல்லுகிறது –
ஆனால் ஜ்ஞாபகராய் இருப்பார் சில ஆச்சார்யர்களும்-
பொறுப்பித்து சேர்ப்பிக்கைக்கு சில புருஷகார பூதரும் வேண்டி அன்றோ இருப்பது
ஈஸ்வர விஷயீ காரம் இருப்பது என் என்னில் –
அப்போதும் ஆசார்யன் ஜ்ஞாபகன் ஆகிறதும் -இந்த சேஷ சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேகத்தில் ஆத்மபுத்தியையும் -தத் சம்பந்த நிபந்தனமான ஸ்வாதந்த்ர்யத்தையும் நிவர்த்திப்பிக்கை இறே –
புருஷகார பூதையான ஸ்ரீ பிராட்டியும் பூர்வ வர்த்தத்தை ஷமிப்பிபதும் இஸ் சம்பந்தத்தையும்
இதன் அடியாக வரும் வாத்சல்யத்தையும் முன்னிட்டு இறே –
இன்னமும் ஸ்ரீ பிராட்டியினுடைய நோவுக்கு நிதானம் அறியாதே-மந்திர ஔஷாதிகளால் வியாபிக்கிறார் சிலரும்
அத்தை நிஷேதிக்கிறாள் ஒரு கட்டு விச்சி வார்த்தையும் ஆக செல்லுகிற இதுக்கு கருத்து யாது என்னில் –
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –சாதநாந்தர நிவ்ர்த்த்யம் –
பகவத் பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
அதுக்கு ஹேது பூதனாய் இருந்துள்ள ஈஸ்வரன் தானே வந்து முகம் காட்டிப் போக்க வேணும் –
தத் சம்ச்லேஷம் யாவதாத்மபாவி யாகையாலும்
இந்த பிரேமாதிசயம் ஸ்வரூப பிராப்தம் ஆகையாலும் -அநிவர்த்யம் –
ஸ்வ வாக்யத்தோபாதி-திருத் தாயார் வார்த்தையாலும் பேசுகிறார் தாமாய் இரா நின்றது –
இது சங்கதம் ஆகிறபடி எங்கனே என்னில் –
ஒரு ஆறு பெருகிப் போகா நின்றால் கரையைப் பற்றி போம் அளவு அன்றிக்கே –
பெருக்கு மிக்கு இருந்தால் கைவாய்க்கால்களாப் போம் போக்கும் நிரம்பிப் போகா நிற்க –
தானும் குறையாதே சென்று கடலிலே புகுமாறு போலே –
இவருடைய பிரேமாதிசயத்தாலே –
திருத் தாயார் வார்த்தையும் குறைவற்று செல்லா நிற்க செய்தே
தம் வார்த்தையும் குறைவற்று செல்லுகை யாகிறது -இது சங்கிதம் –
இன்னமும் பெண் பிள்ளை மோஹங்கதையாய் இருக்க-
பர்ச்வம் பவதி துக்கித -என்று அவளிலும் தான் அவ சன்னையாய் இருக்க –
பிராப்தமாய் இருக்க தெளிந்து வார்த்தை சொல்லுகிற இது யுக்தாமோ வென்னில்
ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்த சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாருக்கு பிறந்த அவசாதத்தில் காட்டில்
ஸ்ரீ இளைய பெருமாளும் அவருடைய அவசாதால் வந்ததும் தம்முடைய காவல் சோர்வால் வந்த அவசாததுமாய்க் கொண்டு
அவசாதம் இரட்டித்து இருக்க –அவற்றைப் பொறுத்து தெளிந்து வார்த்தை சொல்ல வேண்டும் சமயம் அறிந்து
ஸ்ரீ பெருமாளைத் தேற்றினாப் போலே இவளும் இப் பெண் பிள்ளையினுடைய உஜ்ஜீவன அர்த்தமாக தெளிந்து இருக்கையும் உக்தமே-
ரஷய பூதர் அவசன்னராய் இருக்க வமையும் –
அவசாதம் ஒத்து இருக்கச் செய்தேயும் அத்தை அறிந்து பொறுத்து தெளிந்து இருந்து வார்த்தை
சொல்ல வேண்டும் அருமை உண்டு இறே -ரஷகருக்கு
இவளுடைய வார்த்தை இவளுக்கு ஜீவன ஹேது ஆனபடி என் என்னில்
கட்டுவிச்சி வார்த்தை ஸ்ரீ பகவத் பரமாய் இருக்கையாலும்
இவள் தன்னுடைய வியாபாரம் விரக்தி பரமாய் இருக்கையாலும்
இவள் அழகில் அவன் படும் பாட்டை இவள் படுவதே -என்று அவனை பிரசங்கிக்கை யாலும் –
தீர்ப்பாரை யாமினியில் கட்டுவிச்சி போல் அன்றியே –ஸ்ரீ திருமடலில் கட்டுவிச்சி போலே-
மகா பாகவதையாள் இருப்பாள் ஒருத்தி – யாகையாலே
நோவு தீர்க்கை அன்றியே –வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சமம் அமையும் என்னும்படி இருக்கிறவனை
பிரசங்கிக்கையாலும்-ஆசுவாச ஹேதுவாகத் தட்டு இல்லை –
இன்னமும் முதல் பத்து -இவர் தம்முடைய வார்த்தை –
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை –
மூன்றாம் பத்து -ஸ்ரீ பிராட்டியார் வார்த்தை –
மச் சித்தா -மத் கத ப்ராணா – போதயந்த பரஸ்பரம் -என்றபடியே மூன்று பத்துக்கும் மூன்று வாக்யார்த்தம் –
மச் சித்தா –
விஷயாந்தரம் கலசாத படி -அனந்யார்கராய் அநந்ய போக்யராய் -இருக்கிறபடியை பேசுகையாலே முதல் பத்து -ஜ்ஞான பரம் –
இரண்டாம் பத்து -அந்த ஜ்ஞான கார்யமான –வைராக்ய பூர்வகமாக பகவத் பிராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –
பிரேம பூர்வகமானால் பிராப்தி அளவும் செல்ல நிலவரோடே கால ஷேபம் பண்ணும்படியைச் சொல்லுகிறது -மூன்றாம் பத்து –
இரண்டாம் பத்து –மத் கத ப்ராணா -என்றது இறே –
தன் மூச்சடங்க தாயார் வார்த்தையாகச் செல்லுகையாலே
போத யந்த பரஸ்பரம் -என்றது இறே தோழி யோடு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுகையாலே-
இதில் -முதல் பாட்டில் –
திருத் தாயார் இவளுடைய விரக்தியையும் கட்டுவிச்சி சொன்ன வார்த்தையையும் வினவ வந்தார்க்கு சொல்லுகிறாள் –
அவர்களுக்கு சொல்லுகிற வார்த்தை ஒன்றும் –தன்னுடைய பாவ வ்ர்த்தி என்றும் ஆய்த்து இருக்கிறது –
விச்லேஷத்தில் இப்படி அவசன்னையாம்படி –பிரணயத்தில் தேசிகை யாவதே –
என்கிற உகப்பு ஆய்த்து உள் வாயில் தனக்குச் செல்லுகிறது –
தனக்கு அபிமதமாய் இருந்தால் அது தன்னை இவர்களுக்கு சொல்ல குறை என் என்னில் –
இயற்கையில் புணர்ச்சி யாகையாலே அவர்களுக்கு சொல்ல மாட்டுகிறிலள் –
கடகர் அடியாக பிறந்த சம்பந்தம் ஆகில் இறே சொல்வது –
ஸ்ரீ ஆசார்ய உபதேச பூர்வகமாக ஸ்ரீ பகவத் சம்பந்தம் உக்தனாகில் இறே -நமக்கு கொண்டாடல் ஆவது –
ஜ்ஞான கார்யமான கலக்கம் யதா ஜ்ஞானத்தாலே நிவர்த்த்யம்
யதா அஞ்ஞான கார்யமான கலக்கம் -யாவதாத்மபாவி அநிவிர்த்யம்-என்னும் அது இறே
இப் பாட்டில் பிரகாசிக்கிறது –
பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே –11-
————————-
கடல்வண்ணர் -என்று கட்டுவிச்சி திரு நாமம் சொல்லுகையாலும்
அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும்-வினவ வந்தார்க்கு சொல்லியும்
இவள் தான் வாய் வெருவினாள் போலே –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -என்று தன் வாயாலே திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையில் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்து-அவ்வளவிலும் அபிமதன் வந்து முகம் காட்டாமையாலே
அதுவும் ஆற்றாமைக்கு உடலாய் -இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்-
அத்தை வினவ வந்தார்க்கு சொல்லி இன்னாதாகிறாள் –
இவளுடைய கிலேசம் நின்ற நிலை இது –
ஸ்வரூப ஹானி நின்ற நிலை இது –
எனக்கு அபவ்யையான படி இது –
இத்தனைக்கு அடி என் பாபம் இறே என்று -அவர்களுக்குச் சொல்லி இன்னாதாகிறாள் –
லோக அபவாதம் பரிஹரிக்க சொல்லுகிறாள் இத்தனை போக்கி
அகவாயில் இவ்விஷயத்தில் இவளுடைய அவகாஹனம்
தனக்கு அநிஷ்டமாய் இருக்கிறது அன்று இறே –
நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும்
அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்தோர் பழி படைத்தேன் ஏ பாவமே-12-
———————————
திருத் தாயார் -இவள் திரு நாமத்தை தன் வாயால் சொல்லா நின்றாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை போலே இருந்தது என்று பார்த்து -இவள் வார்த்தை கேளாதே –
உறாவிக் கிடக்கிற கிளியை இவள் கண் முகப்பே வைத்து திரு நாமத்தை சொல்லுவிக்க –
இவளுக்கு ஆஸ்வாசம் பிறக்கும் என்று நினைத்து –
இவள் முன்பே கிளியைக் கொண்டு விட்ட இடத்திலும் அது பேசாதே இருக்க-இவள் திரு நாமத்தை சொல்லீர் -என்றாள் –
இவள் தசையைக் கண்டு உறாவி இருக்கையாலும்
சேஷ பூதரான நாம் இவள் கற்பித்தவையே யாகிலும்
இவள் சந்நிதியில் சொல்லக் கடவோம் அல்லோம் -என்னும் நினைவாலும் பேசாமல் இருந்தது –
ஆச்சார்யன் போதித்தனவையே யாகிலும் தத் சந்நிதியில் சொல்லக் கடவது அல்ல என்கிற சாஸ்திர
அர்த்தம் இவ்விடத்தில் வெளிப்படுத்தப் படுகிறது –
நான் உச்சரிக்க-அநந்தரம்-உனக்கு உச்சரிக்கலாமே -என்ன-அடியிலும் கற்பித்த பிரகாரம் அது வாகையாலே அதுக்கு இசைய
தான் ஆதி க்ரஹணம் பண்ண -அநந்தரம் -சொன்னவாறே
இது ஒரு முகத்தாலே -ஆபத்சகம் முதலான வ்ர்த்த முகத்தாலே -சாத்மிகாமையாலே தளர்ந்தாள் -என்கிறாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை என்றும் சாத்மியாத தசை என்றும் ஓன்று உண்டோ -என்னில் –திருநாமம் தான்–
1- ஓர் அவஸ்தையிலே பாவனமுமாய்
2-ஓர் அவஸ்தையிலே போக்யமுமாய்-
3-ஓர் அவஸ்தையிலே சம்சார பய நிவர்தகமுமாய் –
4-ஓர் அவஸ்தையிலே சாதனமுமாய் –
5-ஓர் அவஸ்தையில் தாரகமுமாய்-
6-ஓர் அவஸ்தையில் நஞ்சுமுமாய் –இருக்கும் –
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னம் -இத்தனையும் -ஆகா நின்றது இறே –
ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்கிறபடியே
1-அன்னம் பாவனமாயும் இருக்கும் –
2-தாரகமாயும் இருக்கும்
3-போக்யமுமாயும் இருக்கும்
4-தாநாதி முகத்தாலே –புருஷார்த்த சாதனமாயுமாய் இருக்கும் –
5-அதிசயித்தவாறே நஞ்சுமுமாயும் இருக்கும் -இறே –
அப்படியே பரசேஷம் ஆத்மா என்று இருக்கிறவனுக்கு –
பவித்ரானாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே -என்கிறபடியே பிரதமத்தில் பாவனமாய் இருக்கும்
அநந்தரம்
புண்யா நாமபி புண்யோ சௌ-என்கிறபடியே உஜ்ஜீவன சாதனமாயும் இருக்கும் –
மங்களாநாஞ்ச மங்களம் -என்கிறபடியே பிராப்யமுமாய் இருக்கும் –
யன் நாம சந்கீர்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி -என்கிறபடியே
சம்சார பய நிவர்த்தகமுமாய் இருக்கும்-இது ரிஷிகள் கோஷ்டியில் பரிமாற்றம்
ஆழ்வார்கள் கோஷ்டியில் ஒன்றாய்த்து –
திருநாமம் போக்கியம் என்றும்
தாரகம் என்றும்
பாவனம் என்றும்
நஞ்சு என்றும் சொல்லுகிற இது –
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -என்று திரு நாமம் போக்யமாம் இருக்கிற படியை சொன்னார்கள்
நின்நாமம் கற்ற ஆவலிப்பு -என்று பாவனம் என்னும் இடம் சொன்னார்கள் –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் -என்று தாரகம் என்னும் இடம் சொன்னார்கள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பிழைப்பில் பெரும் பெயர் -என்றும்-நஞ்சு என்னும் இடத்தைச் சொன்னார்கள்
கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-
————————-
திருநாமம் சாத்மியாத தசையும்-சாத்மிக்குமோ என்று சங்கிக்கிகும் தசையும்
சாத்மிக்கும் தசையுமாய் இருக்கிற படியை -இறே
இம் மூன்று பாட்டிலும் சொல்கிறது –
ஆபத் சகங்களான திரு நாமங்களை தான் ஆதிக்ரஹணம் பண்ணித் தந்து சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்
அது மோஹ ஹேதுவாய்த்து என்று பார்த்து
கிளி தன்னுடைய விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்திலே தான் உஜ்ஜீவித்த பிரகாரத்தாலே கற்பித்த திரு நாமங்களை
அடைவே சொல்லக் கேட்டு தரித்து –வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -என்று கிளியைக் கொண்டாடுகிறாள் –
முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-
————————————–
கீழ் பாட்டில் –
கிளி திரு நாமத்தை சொல்லக் கேட்டு ஆச்வஸ்தையாய்
அதின் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தியும் கொண்டாடினாளாய் நின்றது –
இதில் –
அத்தசை போய் –தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி-அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள்-
அந்த வீணையோடு ஸ்பர்சம் பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே
சம்ஸ்லேஷ தசையில் தன் படிகளையும் அவன் படிகளையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படிக்கு
ஸ்மாரகமாக-அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை சாஷாத் கரித்து
அந்த வீணையை அவனாகக் கொண்டு அவனோட்டை சம்ஸ்லேஷ தசையில் பண்ணும் வியாபாரங்களை
இவ் வீணையிலே பண்ணா நின்றாள்
இவள் உணர்ந்தால் என்னாய் விழப் புகுகிறதோ என்று இன்னாதாகிறாள்
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-
—————————-
மென் கிளி போல் மிக மிழற்றும் -என்று சம்ஸ்லேஷ தசையில் தன்னுடைய ஜெயமும் அவனுடைய அபஜயமும்
தோற்ற மேலிட்டு வார்த்தை சொன்ன இடத்தில் அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள் –
அத்தாலே நின்ற நிலை குலைந்து –தன் கர்வமும் -தானும் -வீணையுமாய் -விட்டது – கூப்பிடத் தொடங்கினாள் –
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் -என்று உகந்த சமனந்தரம் –
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூ மித்ரே -என்று ஸ்ரீ பிராட்டி கூப்பிட்டாப் போலே
ஹா ராமா -என்று போக்ய வஸ்துவை நினையா
ஹா லஷ்மணா -என்று புஜிப்பாரை நினையா –
ஹா ஸூ மித்ரா –என்று நிமித்த பூதரை நினையா கூப்பிட்டாள்
அப்படியே – இறே –
வரையாதே ரஷிக்கும் படியையும்-முகம் கொடுக்கும் படியையும் சொல்லிக் கூப்பிட்டு தரைப் படா நின்றாள்
என்கிறாள் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-
——————————–
இவள் முழு மிடறு செய்து கூப்பிட்டு அத்தோடு தரைப் பட்ட படியைக் கண்ட கிளியும் வீணையும் ஆஸ்வாச ஹேதுவாம் என்று
அவற்றை முன்னே வைத்துப் பார்த்தோம் –
அவையும் அகிஞ்சித்கரமாய்த்து என்று அவற்றை ஒருங்க விட்டு நாம் ஹிதம் சொன்னால் அது ஜீவிக்கை யாமோ என்று பார்த்து –
நீ இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுகையும் மோகிக்கிகையும் ஆகிற இது
உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கு போராது -இக்குடிக்கும் அவத்யம் என்ன
அவற்றையோ நான் இப்போது பார்த்து இருக்கிறதோ என்ன-அது தான் கிடக்க –
நீ தான் ஆதரிக்கிற விஷயம் தன்னைப் பேண வேண்டாவோ
ஆசாலேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து தன்னை ஒழிய செல்லாமையாலே நோவு பட்டு கூப்பிடுகிற
பிரணயிநிக்கு முகம் காட்டாது ஒழிவதே-என்று நாட்டார் சொல்லும் அவத்யத்தை பரிஹரிக்க வேண்டாவோ என்ன
எனக்கு ஓடுகிற தசையை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாதே
பிரிந்தார் படும் நோவை அறியும் அவன் முகத்தில் விழிக்க வல்லளே என்று அவனைப் பற்றிக் கூப்பிடுகிறாள் –
பொங்கார் மென் இளம் கொங்கை பொன்னே பூப்பப்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி யாடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே–17-
——————————–
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே –என்று தான் சொன்ன-ஹிததத்தைக் கடந்த படியாலே
இனி இவளை ஹிதம் சொல்லி மீட்கை என்று நமக்கு ஓன்று இல்லை என்று கூடி உடன்பட்டு -இவள் கருத்தை கேட்போம் பார்த்து
உனக்கு ஓடுகிற கருத்து என் என்ன –
இங்கு இருந்து கூப்பிடக் கடவேன் அல்லேன் –அவன் இருந்த தேசம் ஏறப் போகக் கடவேன் என்ன –
அளவுடையாரும் குமுழி நீர் உண்ணும் விஷயத்தில் தான் மேல் விழுந்து அனுபவியா நின்றாள் –
இது அன்றோ ஸ்த்ரீத்வத்தை பாராதே விஷய வைலஷண்யத்தை பார்த்தார் படி இருக்கும் படி-வினவ வந்தாருக்கு சொல்கிறாள்
நிறை வழிந்தார் நிற்குமாறு -இது வன்றோ -என்று இவளுக்கு பிரணயத்வத்தில் உண்டான தேசிகத்வம்
தனக்கு இஷ்டம் என்னும் இடம் ஹார்த்தமாக போந்தது –அத்தை இங்கே பிரகாசிப்பிகிறாள்
இவ்விடத்தில் ஓர் அர்த்தத்தை தாயார் வார்த்தையால் பூர்வ பஷித்து-மகள் வார்த்தையாலே சித்தாந்திக்கிறது –
பிரதமத்திலே ஸ்வரூபத்தை அனுசந்தித்து
பின்னை ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் இழிய வேண்டாவோ என்று யாய்த்து தாயார் சித்தாந்தம்
அது வேண்டுகிறது என் என்னில்
சாஸ்த்ரங்களில் ஸ்வர்க்காதிகளையும் புருஷார்த்தமாக சொல்லுகையாலே
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் இது என்னும் நிர்ணயிக்கும் போது-ஸ்வரூபம் முன்னாக வேணும் என்கை –
அது ஓர் ஆர்த்தம் அன்று காண்-போக அனுரூபம் ஸ்வரூபமாம் இத்தனை ஒழிய
ஸ்வரூப அனுரூபமாயோ போகம் இருப்பது என்று ஆய்த்து மகள் சித்தாந்தம் –
———————————————————————————————–
கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-
———————————
தான் சொன்ன ஹிதம் கேளாமையாலேஇது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு – என்று தானும்
அதிலே உடன்பட்டமை தோன்ற வார்த்தை சொன்னாள் –
அவ்வளவிலே வினவ வந்தவர்கள்-ஸ்த்ரீத்வத்தை பார்த்திலளே ஆகையாலும்
ஆதரிக்கிறவன் தான் ஒரு விஷயத்திலே அந்ய பரன்-உனக்கு முகம் தர மாட்டான் என்று சொல்லா விட்டது என் -என்ன
அதுவும் சொன்னேன் -அது விபரீத பலமாய்-அதுவே ஹேதுவாக -அவன் இருந்த தேசத்து ஏறப் போனாள் -என்கிறாள் –
முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-
—————————–
பொருவற்றாள் -என்று – ஊர் தடைகள் விட்டால் -ஊர்க்கதிர் காவல் விட்டால் –
அறுப்பது -கிடா விடுவதாய் கொண்டு -ஆழி மூழையாய்ச் செல்லுமா போலே
இவளும் தாய்க்காவல் விட்டவாறே
அவனுடைய சர்வ ரஷகத்வத்தை வாய் விட்டுப் பேசி கால ஷேபம் பண்ணா நின்றாள் –
இவளை மகா பாக்யவதி -என்னுமது ஒழிய உவமை இட்டுச் சொல்லப் போமோ -என்கிறாள் –
மகிஷிக்கு உதவினபடியையும்-
பேரனுக்கு உதவினபடியையும் –
ரஷக அபேஷை உடையாரை ரஷித்த படியையும் –
அதுவும் இல்லாரை தன் கிருபையால் ரஷித்த படியையும் –
தன் பக்கல் விமுகராய் இருப்பார்க்கும் அகப்பட தூளிதானம் பண்ணின படியையும் வாய் விட்டுப் பேசா நின்றாள் -என்கிறாள் –
முதல் பத்தில் தாமான நிலையில் நின்று ஸ்ரீ திருக் கோவலூரை அனுபவிக்கப் பார்த்து –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராக பெறாமையால் வந்த ஆற்றாமையாலே
கூப்பிட்ட விடத்திலும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் –வாழலாம் -என்று தாம் கால ஷேப அர்த்தமாக அனுபவிக்க இழிந்து
அது கிட்டாமையால் வந்த ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ணி வந்து முகம் காட்டாது ஒழிந்தானோ என்று சங்கித்து
பொன்னானாய் -என்கிற பாட்டிலே ஸ்ரீ ஈஸ்வரனுடைய புத்தி சமாதானம் பண்ணினார்
இவ்விடத்க்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ண
ஸ்ரீ தாயார் நிலையில் நின்றவர்கள் உடைய ஹ்ர்தயத்தை சமாதானம் பண்ணி தலைக் கட்டுகிறார் –
இத்தால் –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
யாவதாயுஷம் பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபத்துக்கு விஷயம் என்றது -ஆய்த்து –
தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –20-
——————————-
மச்சிதா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்ற இத்தை ஸூக்ரஹமாக மூன்று பத்துக்கும்
வாக்யார்த்தமாக அருளிச் செய்வர் –பட்டர் –
மச் சித்தா
மத் ஏக சித்தாக – விஷயாந்தரம் கலசாமே அவனையே ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகை –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஒரு மிதுனைத்தை விஷயீகரித்து இருக்கும் அதுவே வேஷம்-என்று அருளிச் செய்தார்கள் இறே ஆழ்வார்கள் –
இத்தை ஒழிந்தவை எல்லாம் வியபிசாரமே -என்கை –
தேவதாந்தரங்களைப் பற்றிய ஜ்ஞானம் வ்யபிசாரம் –
பிரகிருதி பிராக்ருதங்களைப் பற்றிய ஜ்ஞானம் வியபிசாரம் –
இவ் விஷயம் தன்னை பிரிய பிரிதிபத்தி பண்ணும் ஜ்ஞானமும் வியபிசாரம் -என்கை –
மத்கத பிராணா —
ஆவியை அரங்கமாலை –என்கிறபடியே-தத்கத பிராணனை வுடையராய் இருக்கை –
பிராணன் தத்கதையாய் இருக்கை யாவது –
அவனோடு கூடின போது சத்தை உண்டாய் -பிரிந்த போது –மோஹம் கதையாய் இருக்கை –
போதயந்த பரஸ்பரம் –
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –என்று கேட்டு தரித்தல்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று சொல்லி தரித்தலாம்படியாய் இருக்கை-
தன்னுடைய வ்ருத்த கதனம் பண்ணி தரித்தும்
தோழிமார் வார்த்தை கேட்டும் தரித்தும் -இறே இப்பத்து செல்கிறது –
முதல் பத்து -ஸ்ரீ பராசர ஸ்ரீ பராசர்யாதிகளான ரிஷிகளுடைய ரீதியாய் இருக்கும் –
ஜ்ஞானப் பிரதானராய் இறே அவர்கள் இருப்பது –
நடுவில் பத்து –ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராய் இறே இவர்கள் இருப்பது –
மூன்றாம் பத்து –ஸ்ரீ பிராட்டிமார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
வ்ருத்த கீர்த்தன ரூபமாய் இறே இருக்கும்-
இதுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில்
தான் ஹிதம் கேட்கும் அவஸ்தை அல்லாமையாலே
மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -என்று கொண்டாடி கடக்க நின்றாள் திருத் தாயார் –
அவன் இவ் வாற்றாமை ஸ்வ க்ர்ஷியின் பலம் ஆகையாலே-அதிலே திருப்தனாய் கடக்க நின்றான் –
இவள் தன் ஆற்றாமையாலே அவசன்னையாய் கிடந்தாள் –
இவளுடைய தசையைக் கண்ட தோழி –
ஏவம் பஹூவிதாம் சிந்தாம் சிந்தயித்வா -என்று-ஸ்ரீ திருவடி விசாரித்தாப் போலேயும்
இவளும்-ஹிதம் சொல்லுகை அசஹ்யமாய் இருந்தது –
இனி இவளை தரிப்பிக்கும் விரகு ஏதோ என்று பல முகங்களையும் சிந்தித்து –
வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை ஸ்மரிப்பிக்கவே இவள் தரிக்குமோ என்று பார்த்து –
இயற்கையால் புணர்சியாகையாலே நானும் சந்நிஹிதை –
அவன் வந்தபடி என் –
உன்னோடு கலந்தபடி என் –
பின்பு பிரிகிற போது -உனக்கு ஆஸ்வாசமாக சொல்லிப் போன வார்த்தை தான் என்ன
வ்ருத்த கீர்த்தனம் ஆகையால் தரித்து அவற்றை இவளுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது –
முதல் பாட்டில் –
அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து-
கைப்பட்ட வஸ்துவை கடலிலே பொகட்டாப் போலே –
அந்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே -தோழி -என்கிறாள் –
அவன் வந்தபடி என் என்று தோழி கேட்க -பிரதமத்திலே வந்தபடியைச் சொல்கிறாள் –
இப்பாட்டு –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவர்த்தம் ஆகிறது –
—————
கஜ்ஜௌகார சௌகந்த்ய வஹாளக நிகும்பனம்
விவ்ர்ணோதி குரோ ப்ராப்தம் கலிவித் வேஷி கிங்கர –
ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்யும் அவதாரிகை –
நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி உபாயத்தாலே உபவனத்திலே பூக் கொய்ய என்று புறப்பட
நாயகனும் வேட்டைக்கு என்று வர-அங்கே உபாயம் பலித்து சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தமாய்
நாயகனும் போன அளவிலே இத்தைக் கடிப்பித்து தலைக் காவலாக நின்ற தோழி வந்து கிட்டி அவன் செய்தபடி என் என்று கேட்க
அவளுக்கு பிரவர்த்தமான படியை நாயகி சொல்கிறாள் –இப்பாட்டால் –
1-முதல் பத்து -ஸ்ரீ ஆழ்வார் தாமான பாசுரம்-/ இரண்டாம் பத்து -திருத் தாயார் பாசுரம்/மூன்றாம் பத்து -பெண் பிள்ளை பாசுரம்
2-முதல் பத்து மச்சிதா என்கிறது / இரண்டாம் பத்து மத்கதபிராணா என்கிறது /மூன்றாம்பத்து -போதயந்த பரஸ்பரம் -என்கிறது –
3-முதல் பத்தாலே திருமந்தார்த்தம் சொல்லிற்று -/இரண்டாம் பத்தாலே த்வயார்த்தம் -/ மூன்றாம் பத்தாலே சரம ச்லோகார்த்தம் –
4-முதல் பத்தாலே –பக்தி / இரண்டாம் பத்தாலே -பிரபத்தி / மூன்றாம் பத்தாலே –புருஷாகாரம்/
5-முதல் பத்தாலே –பிரண வார்த்தம் / இரண்டாம் பத்தாலே –நமஸ் சப்தார்த்தம் -/மூன்றாம் பத்தாலே –நாராயண சப்தார்த்தம்-
6-முதல்பத்திலே –அகாரார்தம்-/ இரண்டாம்பத்திலே – உகாரார்தம்-/மூன்றாம் பத்திலே –மகாரார்தம் –
7-முதல் பத்தாலே –அதர்சனே தர்சன மாத்ரகாமா -என்னும் அர்த்தம் /இரண்டாம் பத்தாலே –த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா -என்னும் அர்த்தம் /
மூன்றாம் பத்தாலே –ஆலிங்கதாயம் புநராய தாஷ்யா மாசாஸ் மஹே விக்ரஹ யோர பேதம் –என்னும் அர்த்தம் சொல்லிற்று –
முதல் பத்து ஸ்ரீ ஆழ்வார் பாசுரமான படி என் என்னில் –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –என்னும் பாசுரம் ஆகையாலே
இரண்டாம் பத்து –திருத்தாயார் பாசுரமான படி எங்கனே என்னில் –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்-பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள் -என்றும் சொல்லுகையாலே –
மூன்றாம் பத்து பெண் பிள்ளை பாசுரமானபடி என் என்னில் –
என் முன்னே நின்றார் -என்றும் –தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -என்றும்-
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு -என்றும் -சொல்லுகையாலே
மச் சித்தா -என்றபடி என் என்னில் –
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது -என்றும்
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல்
வாழலாம் மட நெஞ்சமே -என்றும் சொல்லுகையாலே
மத்கத பிராணா-என்றபடி என் என்னில் –
நெஞ்சுருகி கண் பணிப்ப நிற்கும் சோரும் -என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-என்றும் சொல்லுகையாலே
போதயந்த பரஸ்பரம் -என்றபடி என் என்னில்
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி -என்றும்
வரை வுருவில் மா களிற்றைத் தோழி என் தன பொன் இலங்கு
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும் சொல்லுகையாலே –
ஸ்ரீ திருமந்த்ரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
என்னுருவில் நின்ற வெந்தை -என்று சொல்லுகையாலே ஸ்ரீ பிரணாவார்த்தம் சொல்லிற்று-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்று சொல்லுகையாலே நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்று –
மின்னுருவாய் முன்னுருவில் தொடங்கி அனலுரு வறுதியாக–ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று –
ஸ்ரீ த்வயார்த்தம் சொன்னபடி என் என்னில் –
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்றும் –
திருமாலைப் பாடக் கேட்டு -என்றும் –ஸ்ரீ மத் பதார்த்தம் சொல்லுகையாலும் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் – என்று தொடங்கி-
துன்று குழல் கரு நிறத்து என் துணையே –என்கிற அளவாக ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
அடி இணையும் கமலவண்ணம் –என்று சரண சப்தார்தம் சொல்லுகையாலும் –
இது செய்தார் -என்றும்
பேர்பாடி -என்றும் சரண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்றும்
நீராடப் போனாள் -என்றும் பிரபத்யே சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாவை மாயன் மொய்யகத்து இருப்பாள் -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும்
உத்தர கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாரையுண்டு -இத்யாதியாலே உத்தர கண்டத்தில் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பேர்பாடி தண் குடந்தை நகரும் பாடி -என்று நமஸ் சப்தார்த்தம் சொல்லுகையாலும்-
ஸ்ரீ சரம ச்லோகாரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
கை வளையும் மேகலையும் காணேன் -என்றும்
இரு கையில் சங்கு இவை நில்லா -என்றும் -சொல்லுகையாலே
சர்வ தர்ம பரித்யஜ்ய -த்தின் அர்த்தம் சொல்லுகையாலும்
கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி இங்கே வந்து -என்றும்
கையும் சங்குமாய் கொண்டு சந்நிஹிதம் ஆகையாலே
மாம் ஏகம் பதார்த்தம் சொல்லுகையாலும்
என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும்
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேன் –என்றும்-
சரணம் -வ்ரஜ -என்கிற பதங்களின் உக்தமான அர்த்தத்தை அனுஷ்டான பர்யந்தமாக சொல்லுகையாலும்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே -என்றும்
அஹம் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இடத்தில் என்னை அருளாய் என்ன வேண்டுகையாலும்
த்வா -என்கிற பதார்த்தம் சொல்லுகையாலும்
தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இத்தால் மாசுச -வினர்த்தம் சொல்லுகையாலும்
பக்தி சொன்னபடி –
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -என்றும் –
காரணந்துத்யேய-என்றும்
தஜ்ஜலா நீதி சாந்த உபாசீத -என்றும்
காரண வஸ்து உபாஸ்யம் என்னும் இடம் சொல்லுகையாலும்
மந்தரத்தால் என்றும் வாழ்த்தியேல் -என்றும் த்ருவ அனு ஸ்ம்ருதி சொல்லுகையாலும் –
பிரபத்தி சொன்னபடி –
அணி யரங்கம் ஆடுதுமோ தோழி -என்று நாயக சம்ச்லேஷத்துக்கு உபாயம் சிந்தித்தாலோ என்று தோழியை கேட்கையாலும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் – என்று சிந்தித்த உபாயாத்தை அனுஷ்டிக்கையாலும்–புருஷகாரம் சொன்னபடி
பெரும்தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து புலவி தந்து –
என்று ததீயர் புருஷகாரமாக சம்ச்லேஷித்தபடி சொல்லுகையாலே –பிரணாவார்த்தம் சொன்னபடி –
என்னுருவில் நின்ற வெந்தை -என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்று
சேஷி சேஷ சீஷத்வம் மூன்றும் ஓர் அஷரமாய் நின்ற படியும் –
அகார உகார மகார இதி -என்று அஷர த்ரயமும் ஒன்றானபடி சொல்லுகையாலே –
நமஸ் சப்தார்தம் சொன்னபடி –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்
என் சிறகின் கீழே அடங்கா பெண் பெற்றேன் -என்றும் -இப்புடைகளிலே சொல்லுகையாலே
மமகார நிவர்த்தி சொல்லிற்று –ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொன்ன படி –
வண்ண -என்கிற பாட்டும்-
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று
இப்புடைகளிலே ஆயுத ஆபரண விக்ரஹம் ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான
பரத்வ சௌலப்யாதிகள்-சொல்லுகையாலே-அகார்தார்தம் சொன்னபடி –
வற்புடைய -என்கிற பாட்டில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
அவ ரஷணே-என்கிற தாத்வர்த்தமான ரஷகத்வம் சொல்லுகையாலே-உகார்த்தம் சொன்னபடி –
நெஞ்சுருகி -என்கிற பாட்டாலே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் ஏக காந்தத்வம் சொல்லுகையாலே மகாரார்த்தம் சொன்னபடி –
அவர் நிலைமை கண்டும் -என்றும்
தேவர் என்று அஞ்சினோம் -என்றும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் -இத்யாதிகளாலே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள் -சொல்லுகையாலே
அதர்சனே தர்சன மாத்திர காமா -என்கிறபடி என் என்னில்
எங்குற்றாய் எம்பெருமான் -என்று அவனை காண வேண்டும் என்று ஆசைப் படுகையாலே
த்ர்ஷ்டே பரிஷ்வங்கர சைகலோலா -என்றபடி என் என்னில் –
முற்றாரா வன முலையாள் -என்று துடங்கி ஸ்ரீ நாச்சியார் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு இருக்கிறது கண்டு
தானும் அப்படி இருக்க வேணும் என்று அறுதி இட்டாள் என்கையாலே –
ஆஸாஸ் மஹே விக்ரஹே யோர பேதம் – என்கிறபடி என் என்னில் –
யான் காண்பான் கண்ட போது புள்ளூரும் கள்வாநீ போகல் என்பன்-என்று –
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று அபேஷிக்கையாலே –
8-முதல் பத்திலே –ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்ன படி –
முதல் பாட்டு துடங்கி ஸ்பஷ்டம் –
இரண்டாம் பத்தில் –விஸ்லேஷித்து கலங்கின படி –
பட்டுடுக்கும் என்று துடங்கி -பெண் பிள்ளையினுடைய கிலேசம் சொன்ன -தாயார் பாசுரத்தாலே கண்டு கொள்வது –
மூன்றாம் பத்தில் கிலேசம் தீர்ந்து சம்ஸ்லேஷ வியாபாரம் பண்ணினபடி –
மை வண்ண நறும் குஞ்சி துடங்கி –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு —எழில் ஆலி என்றார் தாமே –என்றும்
புனல் அரங்கமூர் என்று போயினர் -என்றும் இத்யாதிகளாலே சொல்லுகையாலே –
காந்தர்வேண விவா ஹேன பாஹ்வோ ராஜர்ஷி கன்யகா
ஸ்ருயந்தே பரிணிதாஸ்தா பித்ர்ப்ச்சாபி நந்திதா -என்கிறபடியே
உபய அனுராக நிபந்தனமாக நாயக நாயகிகளுக்கு சம்ச்லேஷம் பிரவர்த்தமாக
இத்தைக் கேட்ட தாய் மார்
நங்காய் நம் குடிக்கு இது நன்மையோ என்ன -என்றும்
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் -என்றும்
அன்னை என்னோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றும் பயப்பட்டு –
நாயகன் பக்கல் செல்லாது ஒழிய
அவனும் சாசங்கனாய் –
இவள் பக்கல் நேர் -கொடு நேரே வரக் கூசி -இவள் அபிப்ராயம் அறிய வேணும் என்று
ஸ்வயந்தூத்யம் என்றும் பரதூத்யம் என்றும் இரண்டாகையாலே –
முதல் கலவி கலந்த படியாலே பர தூத்ய அபேஷை இல்லை –ஸ்வயந்தௌத்யம் பண்ணத் தேடி –
குசூமாந்யவசின்வந்தி சசார மதி ரேஷண -என்றும்
சத்யம் புரீபரி சரெபி – என்றும் ஊரைச் சூழ்ந்த உபவனத்தே புறப்பட்டு
இவள் பூ கொய்யப் போகிறாள் என்று கேட்டு –
தத ஸ்தவ வநதம் சாப மாதா யாத்ம விபூஷணம் ஆபத் த்யசகலா பௌ த்வௌ ஜகா மோதக்ர விக்கிரம – என்று
வேட்டை வித்யாதரனாக எடுத்துக் கட்டின மயிரும்
பிடரியிலே தழைந்தலைகிற குழலும் -இறுக்கின சாணமும் -கட்டின கச்சும்-
முன்னே உடுத்த உடைத் தோலும் -இடக்கையிலே கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும் -பெரு விரலிலே சாடின சரடும்
இடக்கையிலே நடுக்கொடத்தப் பிடித்த வில்லும் -வலக்கையில் தெரிந்து பெருக்கின வம்பும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்க் கொண்டு – –
வேட்டைக்கு என்று புறப்பட்டு –இவள் பூ கொய்கிற உபவனத்திலே செல்ல
அவளும்-
காமஸ் சாஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே புருஷனில் அதிசயித்த ஆசை உடையவள் ஆகையாலே
எங்கனயோ அன்னைமீர்காள் -என்கிற பாட்டை அனுசந்தித்து –
செல்கின்றது என் நெஞ்சமே -என்றும்
அன்னை என் செய்கிலென் ஊர் என் செய்கிலென் விடுமினோ –என்று கலக்கம் அற்று மன்றாடி –
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி -என்று தோழியைப் பார்த்து
சுனையாடல் என்றும் –புனல் ஆடல் என்றும் -சம்போகத்துக்கு பேராகையாலே –
பயலான பேச்சாலே கேட்க
அவளும் இவள் அபிப்ராயஜ்ஞள் ஆகையாலே
பூ கொய்ய என்று கொண்டு போக விட்ட தாய் மாரும் ஊரவரும்
வடும்பிடுகிறார் களோ என்று தலைக் காவலாக வழியிலே போய் நிற்க
போக உபோத்காதமாக உபய அபிப்ராயஜ்ஞ்ஞானம் பிறந்து-சம்ஸ்லேஷமும் பிரவர்த்தமாய்
புனல் அரங்கம் ஊரென்று போயினர் – என்று நாயகனும் போய்
இவளும் மீண்டு -உயிர் தோழியானவள் செய்த படி என் என்று கேட்க –
பிறந்த வ்ருத்தாந்தத்தை தோழிக்கு சொல்கிறாள்–இப்பாட்டில்
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-
——————————
கீழ் பாட்டில் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -என்று
அதஸ்மின் ஸ்த்த புத்தி பண்ணினோம் கண்டாயே தோழி -என்றாள்-
நீ அகன்றாய் ஆகில் -அவன் உன்னோடு சம்ச்ச்லேஷித்த படி என் என்ன –
அவன் வசீகரித்த படியும் -சம்ஸ்லேஷித்த படியும் இது தான் -என்கிறாள் –
தன்னுடைய சௌந்த்ர்யத்தையும் சீலத்தையும் காட்டின இடத்திலும் கார்யகரம் இல்லாமையாலே –
போம் இத்தனையோ என்று நினைத்தான் –
ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
நித்ய சாபேஷ்யமான விஷயத்தை குறித்து -நித்ய நிரபேஷன் ஆனவன் -கால் வாங்க மாட்டாது நிற்கையாவது என் என்ன –
சேஷி யாகையாலே சேஷ வஸ்து அகன்றால் இழவு தன்னதாய் –அத்தால் பெரும் பேறும் தன்னதாய் இருக்கையாலும்
இவளை ஒழிய செல்லாத கரமுகத்வத்தாலும்
நம் அழகு இங்கே ஜீவிக்கை யாய்த்து இல்லை என்று மீளுவோம் ஆகில்
புறம்பு நமக்கே சர்வ ஸ்வம்மாய் இருந்துள்ள அழகை தயாரிப்பார் இல்லை என்கிற அபிமானத்தாலும்
கால் வாங்க மாட்டிற்று இலன் –
உத்தம ராஜ கன்யை பக்கல் உத்தம ராஜ புத்திரன் சென்று -அழகு ஜீவிக்கை யாகாதே மீண்டான் என்றால்
புறம்பு ஜீவிக்கை யாகாது இறே –
ருசியே தொடங்கி பிறரை வசீகரிக்கும் பரிகரமாக தான் நினைத்து இருப்பது அழகை இறே –
அது நிஷ்ப்ரயோஜனம் ஆனால் அபிமானம் கால் கட்டும் இறே
சக்தி கொண்டு கார்யம் கொள்ளிலும் விஷயம் இல்லாமையாலே மேல் விழுந்து அணைக்க மாட்டிற்று இலள் –
எதிர்தசையில் இசைவின்றிகே மேல் விழுந்தால் ரசம் இல்லை இறே –
அழகும் சீலமும் கார்யகரம் ஆய்த்தில்லை –
சக்தி கொண்டு கார்யம் கொள்ளும் நிலம் அன்றியிலே இருந்தது –
இனி இவளை வசீகரிக்கும்படி என் என்று பார்த்தார்
முன்பு ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்கள் தன் குழல் ஓசையில் வசீக்ர்தரான படியைக் கண்டபடியாலே
தம்முடைய மிடற்று ஓசையாலே வசீகரிப்போம் என்று பார்த்து ஒரு பண்ணை நுணுக்கினான் –
இவனுடைய –ஏவம் பஹூவிதாம் சிந்தாம் -இருக்கிறபடி –
ம்ர்கயார்த்தமாக வந்தோம் ஆகையாலே பாடுகிறவன் ஆர் என்று கேட்பார் இல்லை
இவளை வசீகரிக்கும் பரிகரம் இது வென்று ஒரு பண்ணை நுணுக்கினான் –
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் -இது காண் செய்தபடி என்கிறாள் –
ம்க்ர்கையைக் குறித்து வந்தவர்கள் ஸ்ரமம் தீர ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்குகையும் –
முகத்திலே நீரை இட்டுக் கொள்ளுகையும்-
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுகையும்-
ஒரு பண்ணை நுணுக்குகையும் -பிராப்தம் இறே-
நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-
—————————————————————————————————
தானே கிருஷி பண்ணி வந்து கலந்தவன் பிரிகிற போது
போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ -என்ன –
அதுவும் சொன்னேன் –அது அகார்யமாய்த்து -என்கிறாள் –
உனக்கு பவ்யனாய் இருக்கிறவன் உன் வார்த்தை கேளாது ஒழியுமோ -என்ன –
நிலமல்லாத நிலத்தில் நீ இருக்கக் கடவதோ என்று ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போக போனான் -என்கிறாள் –
ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே கூடுகையும் –
ரஷகமாய் பிரிகையும் –
ரஷகமாய் இறே இருப்பது –
போகம் உன்மஸ்தகம் ஆனால் -சாத்மிப்பிவித்து அனுபவிப்பிக்க வேணும் என்று இருக்கும் இறே அவன் –
ஸ்வ ரஷணத்திலே சிந்தை இல்லாமையாலே கூடு பூரிக்கிறாள் இறே இவள் –
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-
—————————
ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போனான் ஆகில் – யச்யை தே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே
அவன் தான் உனக்கு பவ்யனாய் இருந்தானாகில் –
அவனுக்கு சேஷபூதனான ஸ்ரீ பெரிய திருவடி உனக்கும் சேஷமாய் அன்றோ இருப்பது
அது கிடக்க-மகிஷி வர்க்கத்துக்கு ஸ்வரூபேண தாஸ பூதனாய் அன்றோ அவன் இருப்பது –
இரண்டாலும் அவனை நீ போகல் என்று நீ நியமிக்க குறை என்ன -என்ன
அவன் ஒருவனுமே ஆகில் அன்றோ அது செய்யலாவது
நித்ய விபூதியில் உள்ளார் அடங்க வந்து சூழ்ந்து கொண்டார்கள்
அவர் தாம் பண்டு போல் அன்றியே
வடிவில் பௌஷ்கல்யத்தாலும் -மேன்மையினாலும் –அநபிபவ நீயராய் இருந்தார் –
அத்தாலே –
சென்று கிட்டவும்
வார்த்தை சொல்லவுமாய்
இருந்தது இல்லை காண் -என்கிறாள் –
இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–
————————-
அத்தலையில் உள்ளதை நேராகக் காட்டி-இத்தலையில் உள்ளதை நேராகக் கொண்டு போனான் என்கிறாள் –
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கையும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே
புனலரங்க மூரென்று போயினாரே–25-
—————————
அவன் இவளுடைய ஆற்றாமை ஸ்வ கிருஷியின் பலம் ஆகையாலே-அதிலே முகம் மலர்ந்து கடக்க நிற்கையாலும்
தாயும் ஹிதம் சொல்லும் அளவு அல்லாமையாலே ஸ்லாகித்துக் கடக்க நிற்க்கையாலும்
தோழி -இவ்வளவில் இவளை ஆஸ்வசிப்பிக்கும் விரகு ஏதோ –என்று பூர்வ வ்ருத்தத்தைக் கேட்க
வ்ருத்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து –
அத்தை இரண்டு பாட்டாலே இவளுக்கு சொன்னாள் –
பின்பும் அங்கே ஓர் அவகாசம் கண்டு இப்படி அவன் உனக்கு பவ்யனாய் இருந்தால் –
பிரிகிற போது போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ என்ன -அதுவும் சொன்னேன் –
அவன் பர ப்ரேரிதனாய் போகையாலே இது கார்யகர மாய்த்து இல்லை என்கிறாள் -மூன்றாம் பாட்டிலே –
கொண்டு போனவன் தன்னை நியமிக்க மாட்டிற்று இல்லையோ என்ன
ஒருவர் இருவரோ பரிகரம் எல்லாம் வந்து சூழ்ந்து கொண்டது -என்றாள் –
நாலாம் பாட்டிலே –அது தன்னை நியமித்து விட்டாள் –
ஐஞ்சாம் பாட்டிலே – சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து-அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளத்தை நேராக அபஹரித்துக் கொண்டு போகிறவர்
என் சத்தை கிடக்க வேணும் என்று ஊரின் பேரைச் சொல்லிப் போந்தான் -என்றாள் –
ஆறாம் பாட்டிலே
ப்ரஸ்னம் இல்லாமையாலே -பிரதிவசனம் இல்லையே-பழைய ஆற்றாமை தலையெடுத்து
நம்முடைய ஆற்றாமை அறியாமையாலே வாராது ஒழிகிறான் -இத்தனை
அத்தை அறிவிக்கவே சர்வதா வரும் என்று பார்த்து-சில வண்டுகளைத் தூது விடுகிறாள் –
தன்னுடைய பந்து வர்க்கம் தனக்கு முன்னே தரைப்பட்டு கிடைக்கையாலும்
சேதனர் தூது போன இடத்தில் அது கார்யகரமாகக் காணாமையாலும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் திர்யக்குகள் தூது போன விடத்தில் அது கார்யகரமாக காண்கையாலும்-
திர்யக்குகளைத் தூது போக விடுகிறாள் –
பரம சேதனன் ஸ்ரீ கிருஷ்ணன் தூது போன விடத்தில் ஊர்ப்பூசல் வந்தான் இத்தனை இறே செய்தது –
ஆனால் குரங்கைத் தூது விடாதே வண்டைத் தூது விடுவான் என் என்னில்
அங்கே பெண் தூதன் ஆகையாலே –
விரக்தனுமாய்
சமர்த்தனுமாய்
இருப்பான் ஒருவன் தூது போக வேண்டிற்று –
விஸ்லேஷத்தில் ஆற்றாமை அறிவாராய் போக விட வேண்டுகையாலும்
இவை தன்னுடைய சந்நிதியிலேயே கலந்து சுகித்து இருக்கக் காண்கையாலும்-இவற்றைத் தூது விடுகிறாள்
ஆனால் கலவியிலே பிரவணமாய் இருக்கிற இவை போகக் கூடுமோ என்னில் –ஆத்ம சாம்யத்தாலே சொல்லுகிறாள் –
தானும் அவனும் சம்ஸ்லேஷிக்கும் அளவில் சில துக்கிகள் கூடினால்
அவர்கள் கார்யத்தை முடித்த பின்பு இறே தங்கள் போகத்தில் இழிவது –
பிரதமத்தில் வண்டுகளைக் கொண்டாடுகிறாள் -தனக்கு இரங்கி கார்யம் செய்கைக்காக –
கடகரை ஸ்துத்யராகச் சொல்லக் கடவது இறே –
தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-
——————————
கீழ் பாட்டில்-வண்டுகளைத் தூது விட்டாள் –
அது சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் அளவும் தரித்து இருக்க சக்தி இல்லாமையாலே
ஒரு நாரையைத் தூது விடுகிறாள் –
திஷூ சர்வா ஸூ மார்க்கம் தே -என்றும் பிராட்டியைத் தேடுகைக்காக
ஸ்ரீ வானர வீரரை அடைய ஏவினால் போலே இவரும் கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
ஸ்ரீ ராமாவதாரத்தில் வானர ஜாதி ஸ்லாக்கியமானால் போலே
காணும் ஸ்ரீ ஆழ்வார்களைத் தோற்றி பஷி ஜாதி ஸ்லாக்கியமானபடி –
செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-
————————
ஸ்ரீ நம் ஆழ்வார் -வைகல் பூம் கழிவாயில் -தூத ப்ரேஷணம் பண்ணி
அநந்தரம்-அவன் முகம் காட்டக் காணாமையாலே-பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடினால் போலே
இவளும் தூது விட்டு-இதிலே ஊடுகிறாள் –
தூத ப்ரேஷணம் பண்ணும்படியான ஆற்றாமைக்கு அவ்வருகே ஒரு தசா விசேஷம் இறே பிரணய ரோஷம் ஆகிறது –
அப்படியே அத் தசையிலே வெள்ளிடி விழுந்தால் போலே-மன பிரசாதம் பிறந்து தெளிந்து –
நம் ஆற்றாமை இருந்தபடியாலும்
தூத ப்ரேஷணம் பண்ணுகையாலும் –
ஸூப நிமித்தங்கள் செய்கையாலும் –
அவன் வரவு தப்பாது என்று நிர்ணயித்து –
அவன் வந்தால் முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் –என்று அத்யவசித்தாள்-
அதுக்கு ஹேது என் என்னில் –
அவனுடைய சம்ஸ்லேஷம் விஸ்லேஷாந்தமாய் இல்லாது இராமையாலே
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்காய் இருந்து கிலேசப்படுமதில் காட்டில்
அவன் வந்தால் முகம் கொடாதே-அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்க கடவோம் -என்று பார்த்தாள் –
தாம் தாம் முடிய நினைப்பார்-வெற்றிலை தின்பது பூ சூடுவது சிரிப்பதாமா போலே
அகவாய் அழியா நிற்கச் செய்தே -இவள் தெளிந்து இருக்க
அத்தைக் கண்ட தோழி யானவள் –
பிரணய ரோஷம் தலை எடுக்கும் படியான ஆற்றாமை செல்லா நிற்கச் செய்தே
நிஸ் சங்ககமாக இவள் தெளிந்து இருந்தாள் –
இதுக்கு ஹேது என் என்று பார்த்து –நெஞ்சில் ஓடுகிறது என் என்று கேட்க –
அவன் வந்தால் பண்டு போலே முகம் கொடுக்க கடவேன் அல்லேன் –
அவன் சந்நிதியிலே முடியக் கடவதாக அத்யவசித்தேன் -என்ன
கெடுவாய் -மலையோடு மலை பொராத மல்லர் உண்டோ –
உபய விபூதி நாயகனாய்
சர்வ சக்தியாய் இருக்கிறவர் உடன்
அபலையான நீ எதிர் இடுகை யாவது என் என்று –
தோழிக்கு இவள் தன்னிலும் காட்டில் ரோஷம் கனத்து இருக்கையாலே
பிரணயிநிகள் உடன் செய்யும் அத்தை பிரபுக்களோடு செய்யக் கடவையோ -என்ன
அவர் பிரபுத்வமும் நாடாளும்படி என் கையில் படும் பாடு பாராய் –என்ன
இவள் அத்வாசாயம் இருந்தபடியால் முடியும் போல் இருந்தது –
பிரணய ரோஷத்தின் அளவிலேயாவது முடியாதபடி நோக்க வேணும் என்று பார்த்து
ஆஸ்ரிதர்க்கு அவன் முகம் கொடுக்கும் படி இது காண் என்று சொல்ல அமையும் -எல்லாம் பகட்டு காண் –
நான் முடிகை தவிரேன் -என்கிறாள் –
பிரணியிநியான இவளை ஒழிய தோழிக்கு ரோஷம் தலை எடுக்க கூடுமோ என்னில்
வீத ராகனாய் சருகு இல்லை தின்று போந்த ஸ்ரீ வால்மீகி பகவான் பிராட்டியைக் கண்டு
ஹீநோயாத நயா பிரபு -என்று
ஸ்ரீ பெருமாள் நாடாளவும் ஆனை குதிரை கட்டவும் கற்றார் இத்தனை போக்கி
பிரணயித்வத்தில் புதியதுண்டிலர் ஆகாதே -என்றான் இறே –
முற்படத் தோழி-அவன் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுத்த பிரகாரத்தை சொல்ல
அத்தை அனுபாஷித்து அவை எல்லாம் பகட்டுக் காண் என்கிறாள்
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரைவுருவின் மா களிற்றைத் தோழீ எந்தன்
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே–28–
———————————-
முதல் பத்தில் –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களை நிர்ணயித்து –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை நிர்ணயித்து –
தத் விரோதியையும் நிர்ணயித்து –
விரோதி நிவ்ருத்திக்கும் -புருஷார்த்த சித்திக்கும் அனுரூபமான உபாயத்தையும் நிர்ணயித்து –
இத்தனைக்கும் வாசகமான -ஸ்ரீ திரு மந்த்ரத்தை -வாக் இந்த்ரியத்துக்கு விஷயமாக்கி —
இவ் வர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயமாக்கி –தெளிந்து கால ஷேபம் பண்ணினார் –
நடுவில் பத்தில் —
கால ஷேப அர்த்தமாக அனுசந்தித்த அனுசந்தானத்து அளவிலே பர்யவசியாதே
கண்ணான் சுழலை இட்டு-கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படியான ஆற்றாமை விளைந்து –
தான் நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே-அப்ரக்ர்திங்கராய் -பிறர் வாயாலே வார்த்தை
சொல்ல வேண்டும்படியான மோஹமாயச் சென்றது –
மூன்றம் பத்திலே –
இவள் தசையைக் கண்ட தோழி இவளை ஆஸ்வசிப்பிக்க வேணும் என்று பூர்வ சம்ஸ்லேஷத்தை முன்னிட
வ்ர்த்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து நின்று பேசினாள்-
பின்னை
ப்ரஸ்ன பிரதி வசனங்கள் இல்லாமையாலே-பழைய ஆற்றாமையே மேலிட்டு தூத ப்ரேஷணத்தில் அன்வயித்தாள் –
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டாமையாலே ப்ரணய ரோஷம் தலை எடுத்தது –
ஸ்ரீ நம் ஆழ்வாரைப் போலே ப்ரணய ரோஷம் நிலை நிற்கில் இறே -அவன் வந்து முகம் காட்டுவது –
அது செய்யாதே நடுவே எளிமைப் பட்டு பழைய ப்ரக்ருதியிலே இழிந்தார் –
விழுந்த இடத்திலும் தரித்து இருக்கலாவது அவன் முகம் காட்டினால் இறே –
அது இல்லாமையாலே
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -முனியே நான்முகனில் -பிறந்த பரம பக்தி -இவருக்கு பிறந்து –
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
ஸ்வ தோஷ பூயஸ்வத்தையும்-முன்னிட்டு
பிரணயியான நீ -எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்று கூப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் பரத்வத்தையும் அவதாரத்தையும் பற்றிக் கூப்பிட்டார் –
இவருக்கு பராவஸ்தையும் அவதாரம் ஆகையாலே
அவதாரத்தையும் அர்ச்சாவதாரத்தையும் பற்றிக் கூப்பிடுகிறார் –
அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-
—————————–
நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு-இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் – என்கிறார் –
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –