திருப்பாவை அருளிச் செயல்களில் உபக்ரமும் உப சம்ஹாரமும் -மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

—————————————

இந் நோன்புக்கு ஒரு காலம் நேர் படுவதே -என்று காலத்தை கொண்டாடுகிறார்கள்
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்–
மேல் பிராபகம் –
பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-
இப்பாட்டில்–அதிகாரி ஸ்வரூபத்தையும்–உபாய ஸ்வரூபத்தையும்–உபேய ஸ்வரூபத்தையும் ஸங்க்ரஹித்து-
இந் நோன்புக்கு காலம் நேர்பட்ட படியைக் கொண்டாடுகிறார்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்–1-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்-
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும்-
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் – இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை-
தனுர் ராசி –சூர்யன் -ராசிக்குள் புகுவதை பொறுத்தே மாசங்களின் பெயர் –

ஒரு நல் விடிவு உண்டாகப் பெறுவதே -என்றான் இறே அக்ரூரன்
மாசத்தை கொண்டாடுகிறது–பஷத்தை கொண்டாடுகிறது–நாளை கொண்டாடுகிறது
தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று–மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்-

மதி நிறைந்த நன்னாளால்-
ஒருவரை ஒருவர் முகம் கண்டு அனுபவிக்கைக்கும்-
எல்லாரும் கூடிச் சென்று கிருஷ்ணனை எழுப்புக்கைக்கும்-நிலா உண்டாகப் பெற்றதே-
நள் இருள் கண் -என்ன வேண்டா விறே இவர்களுக்கு-
விரோதிக்கக் கடவ அவ் ஊராரே இசைந்து மேல் எழுத்து இடப் பற்றது இறே-
தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –
த்வதீய கம்பீர மனோ அனுசாரீன–வைதிக விதிகளும் அடியார் மனம் பின் செல்லும்-
விமுகன் -பகவத் லாபம் உண்டானதே நல்ல நாள்–
அன்று நான் பிறந்திலேன்–பிறந்த பின் மறந்திலேன் –பிராணன் இல்லாதவர் பிராணன் பெற்ற படி–
சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாளும் நாளாகும் என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -பேயாழ்வார் -17-
சென்ற நாள் செல்லாத –கழிந்த நாள்–மூன்றுமே நல்ல நாள் -என்றார்

எம்பெருமானார் விலஷண சந்தரன் –யதிராஜ சந்தரன் -என்றபடி-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –

மார்க்கம் சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற மதி நிறைந்த நன்னாள் –
ஆழ்வாராதிகள் -ஆச்சார்யாதிகள் -திருவதரித்த நக்ஷத்ரம் –

நீராட
கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை
இத்தால் இவர்கள் நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்
தமிழரும் கலவியை -சுனையாடல் -என்றார்கள்
மாசி பவுர்ணமி -கடல் நீராட்டம் – மாசி மகம் உத்சவம் உண்டே இன்றும்
மார்கழி பவுர்ணமி தொடங்கி தை பவுர்ணமி சுனை யாடல் -தமிழர்கள் –

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சஸீதே மிவ ஹ்ருதம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே
பர ப்ரஹ்மத்தை அடைந்தவன் ஆகின்றேன் -என்கிறபடியே
க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –க்ரீஷ்ம காலத்தில் -வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
என்று பகவத் சம்ஸ்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

தாங்கள் நினைத்த படி சொல்லுகைக்கு ஈடான முறை உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை தவிர்ந்து பகவத் சம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து-நீராட என்கிறார்கள்
புத்ரர்கள் ஆகவுமாம்-சிஷ்யர்கள் ஆகவுமாம்-பகவத் சம்பந்தம் உடையாரை கௌரவ்யர் என்கிறது-
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-என்னக் கடவது இறே
இத்தால் பிராப்யத்தை சொல்லுகிறது–வாசத் தடம் போல் வருவானே
மறை பாற்கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து–துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்தருத்த–நிறைப்பான் கழல் அன்றி சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே-

போதுவீர் போதுமினோ
அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகார அர்த்தமாக வேண்டும் தேவதைகளுக்கு ஓர் எல்லை இல்லை
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் -என்னில்––இச்சையே அதிகாரம்–
அது அப்ராப்த விஷயம் ஆகையாலே அதிகாரி சம்பத்தி உண்டாக்கிக் கொண்டு இழிய வேணும்
இது வகுத்த விஷயம் ஆகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமையே —ஆகையால் இந்த இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத்தலையில் பூர்ணம் ஆகையாலே–இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்–கூடும் மனம் உடையீர் -மர்ம ஸ்பர்சி –
போதுமினோ –
அவர்கள் முன்னே போக-அந்நடை அழகு கண்டு நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது —
சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை -சொல்லுகிறார்கள்-போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீபவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள் அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ
ஏவ மற்றமரர் ஆட் செய்வார்–காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் ஸ்தப்தராய் கிடக்கும் பாகவதர்களை எழுப்ப வேண்டுமே

நேரிழையீர்
விலஷணமான ஆபரணத்தை யுடையீர்–
இவர்கள் போதுமினோ -என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பு இருந்தபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய -என்கிறபடியே–
கிருஷ்ணனுடைய வரவை கடாஷித்து–அவன் எப்பொழுது வந்து மேல் விழும்
என்று அறியாத படியாலே–தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்-
இதுக்குத் தகுதியான–ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –

திங்கள் திரு முகத்து சேயிழையார்—தாப த்ரயங்கள் கழிந்து அழகிய திருமுகம்- ஆத்ம குணங்கள் பூஷணம்-

சீர் மல்கு ஆய்ப் பாடி –
இவ்வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறு ஊருக்கு வெள்ளமிடப் போந்து இருக்கை –
அதாவது கிருஷ்ணன் உடைய இங்குத்தை நீர்மை பரம பதத்திலும் சென்று அலை எறியும் படியாய் இருக்கை –
வஸ்துவுக்கு குணத்தால் இறே உத்கர்ஷம்
அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கே யாகையாலே ஐஸ்வர்யம் பூர்ணம் ஆய்த்து இங்கே இறே
த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து தன்னை நியாம்யம் ஆக்கி வர்த்திக்கிற ஊர் இறே
பண்டே கோ சம்ருத்தி உண்டாய் இருக்கச் செய்தே
பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவன வற்றால் குறைவற்று இருக்கை
நாழிப் பால் நாழி நெய் போருகை என்றுமாம் –
கிருஷ்ணன் தீம்பு செய்து மூலை படியே நடக்கிலும்-அதுவே அமையும் என்று இருக்குமூர் –

ஆய்ப் பாடி
பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று–அனுபவிக்க வேண்டாத ஊர்-
ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே–
இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்
பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே–கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்

செல்வச் சிறுமீர் காள்
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் ஆவது–பகவத் பிரத்யாசத்தி இறே
ராஜ்யத்தை விட்டு வெறும் கையோடு பெருமாள் பின்னே போன-இளைய பெருமாளை
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –என்றது இறே
ராவண பவனத்தின் நின்றும் கால் வாங்கி பெருமாள் இருந்த தேசத்தைக் குறித்து-வருவதாக –
பரித்யக்தா மயா லங்கா மித்ரா நிசதநா நிச -என்று
சர்வத்தையும் விட்டு ஆகாஸ் ஸ்தானனான–விபீஷண ஆழ்வானை-அந்தரி ஷக்த ஸ்ரீ மான் – என்றது இறே
அவனை ரஷகனாக அத்யவசித்து தன் பக்கல் முதல் அற்று–கை வாங்கின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை —
சாது நாகவர ஸ்ரீ மான் -என்றது இறே

முக்த ஐஸ்வர்யம் -செல்வம் -பகவத் ஞான விசேஷமும் ப்ரீதி காரித கைங்கர்யம் –
பரிபூர்ண ஞானமும் அனுபவமும் –
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனனை -சர்வ சரீரத்வம் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் –
சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாத படி சாஷாத்காரம் –
தினைத்தளவும் விடாதவள் -அல்பமும் விடாமல் அனுபவித்து -கைங்கர்யம் அன்றோ
நித்ய கிங்கரோ பவ-அனுபவ கைங்கர்யங்கள் இரண்டும் உள்ள செல்வம் –
நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் -என்றபடி –

அப்படியே இவர்களும்
இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை–
ஆயர்
என்னும் காட்டில் ஜ்ஞான ஜன்மாக்களைக் காட்டுமோ -என்னில்-
லோகத்தில் பகவத் ஏக பரராய் இருக்குமா போலே-ஜ்ஞான ஜன்மம் உடையவர்களும் பகவத் ஏக பரராகையாலே

சிறுமீர்காள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாய் இருக்கை-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற படியே
எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாய் இருக்கை
பருவம் நிரம்பின ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டால்–தேவதாந்தர பஜனம் பண்ணினாரையும்–
தம் தமுக்காக நினைத்து இருப்பாரைப் போலே நினைத்து இருக்கும்
தனக்கு அனன்யார்ஹைகளாக நினைத்து இருப்பது இவர்களை–இத்தால் அவனுக்கேயாய் இருக்கிற
யோக்யதைச் சொன்ன படி
அதாவது–கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகாது இருக்கை-

சீர் மல்கும் -இத்யாதி –எம்பெருமானுடைய க்ருபா ஷமாதி கல்யாண குணங்கள்
தம் தம் விஷயங்களிலே சேர்ந்து பொங்கி-பரம பதத்தளவும் சென்று அலை எறியும்படி

கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் –
ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து -நம் சிறியாத்தானைப் போலே
ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –
பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே —அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி
வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –
அதிசயித மங்களா சாசனை பரராய்–பகவ லாபத்தாலே களித்து–பகவத் விஷயத்தை அசல் அறியாதபடி
ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்–தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்

கொடும் தொழிலன் –
தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே–சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-
ந ஹிம்ச்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி–அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-
ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது–
அத்தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –
மன் நிமித்தம் க்ருதம் பாபம் -இத்யாதி–
நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் –ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -என்றது இறே

நந்த கோபன் –
பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்—நாமதேயமாதல் –
இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில்–உத்தேச்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று
எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே–இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –

தசரதன் மகனுக்கு அன்றி தஞ்சம் இல்லேன் -சக்கரவர்த்தி திரு மகன் வீர தீர ஏக தேசம்
பெருமாளுக்கு நஞ்சீயர் சொல்ல
அங்காளராயன் அரசன் ஆபேஷிக்க
இவன் பெருமாள் திரு உள்ளம் அறியாதவன்
எல்லாம் நம் ஐயர் -என்று பெருமாள் அபிப்ராயம் –
பிராட்டியும் திருவடிக்கு முதலில் சக்கரவர்த்தி மருமகள் என்று தம்மை அறிமுகம்

குமரன் –
வெண்ணெய் களவு கண்டான்–பெண்களை களவு கண்டான்–ஊரை மூலையடி ஆக்கினான்–
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று
பெரிய உத்யோகத்தோடு இருந்தால் அவர் முன்னே தோற்றும் போது–ச விநயமாக தோற்றுகையாலே
கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று–அவர்களையே பொடியும் படியாய் இருக்கை-
யசோதை பிராட்டி பொடியும் போதும் -உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது —
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே –கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –
என்று இறே இவள் இருப்பது

நந்த கோபன்
கூர் வேல் நுண்ணிய மதி -நந்த கோபன்-ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கும் -ஆச்சார்ய பதம் –
குமரன் –
பவ்யதை -சிஷ்யன் -லக்ஷணம் -தானே அனுஷ்ட்டித்து காட்டுவான் –

ஏரார்ந்த கண்ணி யசோதை-
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே–அவ் வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே–அம்பன்ன கண்ணாள் யசோதை –
விலாசாட்சி -சஹ பத்ன்யா -கிண்ணகம்-அனுபவிக்க தேசிகர் சீதா பிராட்டி -அர்ச்சாவதார அழகு விபவம் விட ஏற்றம் –

யசோதை
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி–இறே இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி

இளஞ் சிங்கம்
ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று–இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்—இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –
இளஞ் சிங்கம் —சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை–சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-

யாதவ ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் – நர ஸிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்திர ஸிம்ஹம் –

கார்மேனி –
நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான வடிவு–
தூ நீர் முகில் போல் தோன்றாய் -என்று பிரார்த்தித்த வஸ்து இறே-
இவர்களுக்கு பிரத்யஷித்து நிற்கிறது–மாதா பிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

செங்கண்
அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் –
அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே-வடிவாலே அணைத்து–கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-
கண்
என்று ஜ்ஞானமாய் -அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜ்யாதி சகல அதிசயப்ரதமான–திரு மந்த்ரத்திலே
தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் —மந்த்ரோ மாதா -என்னக் கடவது இறே
இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான–எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே
வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை–
ஆஸ்ரித சகல தாப நிவர்த்தகமாய்–பரம உதாரமான திரு மேனியை உடையனாய்
இத்தால் உபாய க்ருத்யம் சொல்லுகிறது–
அன்றிக்கே கார்மேனி -என்று மேகம் போலே-தர்சநீயமான திருமேனியை உடையவன் என்று
அழகை சொல்லுகையாலே-உபேயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யன் உடைய புகரை-ஊட்டின சந்தரனைப் போல் ஆய்த்து–திரு முகம் இருக்கும் படி
பிரதிகூலருக்கு அநபிபவ நீயானாய்–அனுகூலருக்கு கிட்டி நின்று–அனுபவிக்கலாம்படி இருக்கை –
கதிர் மதியம் போல் -ஆஸ்ரியர் அணுகும் படியும் நாஸ்திகர் ஒழியும் படியும் –

கதிர் மதியம் போல் முகத்தான் –
அபூத உவமை -குளிர்ந்த பிரகாசமுடைய ஆதித்யன் போலேயும் தேய்த்தால் வருதல் இல்லாத சந்திரன் போன்ற தன்றோ

முகத்தான் –
அவ் வளவிலும் உபமானம் நேர் நிற்க மாட்டாமையாலே–உபமேயம் தன்னையே சொல்லுகிறது-
அத் திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்–வாத்சல்ய பிரகாசகமாயும்–பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள
சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்-
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்–
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே–ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து-
இப்படி குணங்களை உடையனான நாராயணனே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே–சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய்
இறே இவ் வவதாரம் தான் இருப்பது –
தேவ தாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்–மந்த்ரமாக உபதேசிக்கையாலே
சொல்லுகிறார்கள் என்னவுமாம் –
இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –
வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபி முக்யம் பண்ணிப் போருமவன்-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ்வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயண சப்தார்த்தம் -என்றும்–ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்-நாராயண பரம் பரமம் -என்றும்–பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே–நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் —
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்
அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே–
தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற–சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
நாரயணத்வம் சர்வ சாதாரணம் அன்றோ என்னில் –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி —அகிஞ்சநராய்–அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் —
சஹாயாந்தர நிரபேஷமாக அவனாலே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கே-
நமக்கே -என்கிற இடத்தில் ஏவகாரத்தால்–உபாயாந்தரங்களையும்–தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-
அவதாரணம் -அகிஞ்சனமான நமக்கே —ஸ்வரூபம் அந்தர்கதம் உபாய பாவம்
அத் தலையால் நிறைவாலும் அவனே உபாயம்–இத்தலையால் குறையாலும் அவனே உபாயம்–
உள்ளபடி உணர்வில் நமக்கு ஓன்று உண்டு என்ன உள்ள விரகு இல்லை–
கொள்ளக் குறை இல்லை-அறிவொன்றும் இல்லாத ஆய குலம்–
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-இவர்கள் தாங்களே இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண – என்று -மேலே சொன்னார்கள் –

பறை தருவான் –
நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்–தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது–
இத்தை சாதித்துத் தருவர் ஆர் என்னில் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்-இரண்டிலும் –

நாராயணனே நமக்கே பறை தருவான் –
ப்ரபத்திக்கு வாசகம்
வசனம் -வாசகம் -வாஸ்யம் மூன்றும் உண்டே -சொல்லும் பொருளும் சொல்லப்படுபவனும் என்றவாறு
ரஹஸ்ய த்ரயம் –
சரணாகதன் -சரண்யன் -சரணாகதி மூன்றும் -சரணம் புகல் என்று பற்ற –
போதுமினோ -படிந்து -இரண்டும் வினை சொற்கள் -மட்டுமே உண்டு –
யமுனையில் படிந்து நீராடுவதே -நம் கர்தவ்யம்
அவனது கர்தவ்யம் தருவான் -ஒரே வினைச் சொல்
பரித்யஜ்ய -விட்டு -வ்ரஜ -பற்று -இரண்டு உண்டே / மோக்ஷயிஷ்யாமி -ஒரே வினைச் சொல் அங்கும் –
மாஸூச -சோகப்படாதே -வினைச் சொல்லும் உண்டே -செய்யாதன செய்வதும் செயலே
உய்யுமாறு எண்ணி உகந்து-அடுத்த பாசுரம் -ஆனந்தப்பட்டு பகவதீ கீதை -ஆனந்த மயன்-தானே
வெறும் துக்கப்படாதே பகவத் கீதை
ப்ரக்ருதி சம்பந்தம் நினைக்க துக்கம் / ப்ரஹ்ம சம்பந்தம் அனுசந்திக்க ஆனந்தம் –
அது வந்தேறி இது ஸ்வாபாவிகம்-கர்மம் தொலைந்தால் சரீரம் கழியும் -கர்மத்தால் சரீரம் –
மாஸூச -விதி / எண்ணி உகந்து ராக பிராப்தம் –
நாராயணனே பறை –ப்ராப்யம்
நாராயணனே தருவான் -ப்ராபகம்
நமக்கே பறை /நமக்கே தருவான்—அதிகார விசேஷணம் -அநந்யார்ஹத்வம் –
பிரயோஜனாந்தர / உபாயாந்தர பரர்கள் இல்லையே
அன்வய வ்யதிரேக இரண்டையும் அருளிச் செய்ய வேண்டுமே –
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் -நமக்கே விளக்கம் -ருசி விஸ்வாசங்களே செல்வம் –
நீராடி போதுவீர் -படிந்து இரண்டாலும் இத்தை சொல்லி –
சரணாகதிக்கு காலம் -சரணாகதி எப்படி -சரணாகதி யார் இடம் -சரணாகதி பண்ணுவார் யார் –
சரணாகதி -அனைத்தையும் அருளிச் செய்து –
விபீஷணன் -வந்த காலமும் இடமும் வகுத்த காலமும் வகுத்த தேசமும் -ஹனுமான் -வாதம் அபயப்ரதானத்தில் –
சீதை இருந்த இடம் அறிந்த பின்பே பெருமாள் இலங்கைக்கு –
அதே போலே ராமர் இருக்கும் இடம் அறிந்த பின்பே விபீஷணன் வர முடியும் –
ராம தூதன் அருளிச் செய்த செய்திக்கு விஷயமானானே இவன் –
சம்சாரி வெட்டி விட செய்யும் காலத்துக்கு நாள் பார்க்க வேண்டாம்
சம்சாரம் வளர்க்கும் கர்தவ்யம் கல்யாணாதிகள் இதுக்கு நாள் பார்க்க வேண்டுமே –
நந்த கோபன் குமரன் தருவான் –
ஆச்சார்யர்க்கு வசப்பட்ட சர்வேஸ்வரனே பிராப்யம் பிராபகம் என்றவாறு

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

எம்பெருமானார் விஷயமாகவே –
ஸ்ரீ பாஷ்யாதிகள் சாதிக்கும் பொழுது கதிர் போலேயும்
பகவத் விஷயாதிகள் சாதிக்கும் பொழுது ஆஹ்லாத சீதா நேத்ராம்பு -மதியம் போலேயும் இருப்பாரே
நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

பாரோர் புகழ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள்–தாங்களே கொண்டாடும்படி
கிருஷ்ணன் வேண்டும் உபகரணங்களைக் கொடுக்க
பெண்கள் நோன்பிலே உபக்ரமித்தார்கள்–
பாருக்கு எல்லாம் அநாவ்ருஷ்டி இல்லாமையால்–வர்ஷித்தால் பார் எல்லாம் கொண்டாட ப்ரசக்தி இல்லாமையாலும்
சேர ஒட்டாதவர்கள் புகழ்கையே இவர்களுக்கு பரம உத்தேச்யமாய் இருக்கையாலும்
பாரோர் –
என்றதுக்கு கோப வ்ருத்தர் பரமாக அர்த்தம்-நாடு அடங்க அநாவ்ருஷ்டி தீர்ந்து சக்ருத்தமாய்த்து
என்று கொண்டாடும்படி-

பறை தருவான் -இத்யாதி
புருஷார்த்தத்தைக் கொடுப்பான் -ஆகையால் பூமிப் பரப்பில் உள்ள லௌகிக வைதிக பரம வைதிகர்
எல்லாரும் கொண்டாடும்படி
இந் நோன்பிலே அவஹாகித்து நீராடப் போதுமினோ என்று அந்வயம்-
காமனாதிகாரிகளுக்கு சாதனமாயும்
நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும்
போருகிற இந் நோன்பிலே-பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து
ஸ்ரத்தா பூர்வகமாதயதா விதானம் அனுஷ்டித்தால்-லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-
தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

சமஸ்த கல்யாண குணாத் மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு
அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

படிந்து–இந் நோன்பிலே அவஹாகித்து–நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

ஏல் ஓர்
பாதத்தை பூரித்துக் கிடக்கிறது–
எம் பாவாய்–
எங்கள் நோன்பு -என்னுதல்–
எங்கள் சந்தஸ் -என்னுதல்
ஏல் –
இப்படி ஆகில்–சம்போதனம் ஆகவுமாம்–
ஓர் -புத்தி பண்ணுங்கோள் -என்னவுமாம்-
அத்விதீயம்
ஏலோரெம்பாவாய்–
சொல் தொடர் என்றே கொள்ள வேண்டும் தடம் பொங்கத் தம் போங்கோ போலே
ஏல் — இயலுமா –ஆகுமா
ஏல் –
எமது கிரிசைகளை ஏற்றுக் கொள்–
ஓர் –
பேறு பெருவிக்கும் வகையை ஆராய்வாக
எம் பாவாய் –
எங்கள் விரதமே -நோன்பே –
பாவாய்
என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-நாயனார்–
காம சமாஸ்ரயணம் அடுத்து செய்வதால்

நந்தகோபன் இளம் குமரன் நாராயணனே தருவான் -சுலபனானவன் —நாராயணனே –
ஒவ் ஒன்றிலும் சேர்த்து அன்வயித்து-இளம் சிங்கம்-ஐஸ்வர்யம் மேனானிப்பு சிங்க குருகு-

இப்பாட்டில் -ஏஷ ப்ரஹ்மபிரவிஷ்டோ ச்ம்க்ரீஷ் மே சீதமிவ ஹ்ருதம் -என்கிறபடியே
கிரீஷ்ம காலத்தில் சூர்ய கிரண தப்தனானவன் தன தாபம் ஆறும்படி குளிர்ந்த மடுவிலே
நாம ரூப விபாக அர்ஹனாம் படி-பிரவேசிக்குமா போலே
சம்சார தாபார்த்தனான தான் அந்த தாபம் ஆறும்படி
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து
ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று ப்ரஹ்ம அனுபவத்துக்கு
நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-

நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக–அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து–

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் –
என்கிற இடத்தில் முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் –
என்கிற இடத்திலே பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று
கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது
நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்
கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்
நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும் நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும் நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும் சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும்
இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய பிராப்பகங்களைச் சொல்லுகிறது

கூர் வேல் –நாராயணன் -அகாரார்த்தம்
பாரோர் புகழப் படித்தால் உகாரார்த்தம்-நமஸ் -அகண்ட நமஸ் அர்த்தமும்
நேரிழையீர் -மகாரார்த்தம்
ஆக திருமந்த்ரார்த்தமும்

குமரன் இளம் சிங்கம்- நாராயணன் -பர ஸ்வரூபம்
நேரிழையீர் -ஜீவ ஸ்வரூபம்
படிந்து -தக்க நெறி
கூர் வேல் கொடும் தொழிலன்- ஊழ் வினை
வாழ் வினை பறை புருஷார்த்தம்
ஆக அர்த்த பஞ்சகமும் -சொல்லிற்று ஆயிற்று

பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது வேதார்த்தம் –
அதாவது சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-
ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-

————————

நிகமத்தில் –
இப் பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்-பலத்தை சொல்கிறார்கள்-
இப் பிரபந்தம் கற்றார் —பிராட்டியாலும் எம்பெருமானாலும்–சர்வ காலமும்–விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –
கற்றாருக்கு–அனுஷ்டித்தாரோபாதியும்–அனுகரித்தாரோபாதியும்–பலம் சித்திக்கும் -என்கை
கன்று இழந்த தலை நாகு–தோற்கன்றுக்கும் இரங்குமா போலே–
இப்பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –என்று பட்டர் அருளிச் செய்வர்-

வேதம் அனைத்துக்கும் வித்து –
சகல வேதார்தங்களும் அடங்கிய வித்து —நட்டு பரிஷ்காரம் செய்தால் சாகை சாகையாக பணைக்கும்-
சகல அர்த்தங்களும் உண்டே
வட பெரும் கோயில் உடையானை கண்ணன் சம காலம் போலே நினைத்து-ஆண்டாள் –
நம்முடைய பாவ விருத்தி இல்லை யாகிலும்
இப்பிரபந்தம் அனுசந்தானம் செய்தால் அதே பலன்-
சம காலம் அநுஷ்டித்தார்-அனுகரிதவர் அனு சந்திப்பார் மூவரும் பெறுவார்
பட்டர் -கன்று இழந்த தலை நாகு தோல் கன்றுக்கு இரங்குமா போலே –

ஆண்டாள் பாவம் இல்லா விடிலும் திருப்பாவை சொல்லி அதே பலன் பெறுவோம்-
கோபிமார் விஷயம் ஆச்ரயநீய விஷயம் கிருஷ்ணன் –
ஆஸ்ரயணீயம் பல பர்யந்தம் ஆவது பிராட்டி-அவளை பெற அவன் செய்த வியாபாரம்
அமுதம் கடைந்த-அத்தை சொல்லுகிறார்கள் -இதில்
தயிர் கடைய வ்யாஜ்யமாய் கன்னிகை அடைவான்–செவ்வாய் துடிப்ப ஒல்லை நானும் கடையவன் என்று
அமரர்க்கு அமுது ஈன்ற ஆயர் கொழுந்தே–கண்ணன் தானே அமுதம்–
ஷீராப்தி நாதன் கடைந்தால் அமுதம் வாராதே–கடைகிற குலம்-ஆய்க்குலம் தானே
பாற்கடலில் பைய துயின்றான் ஆரம்பித்து நிகமிக்கிறார்
கடல் கிடந்தது கடைந்த —கடல் கிடைந்த மாதவனை–அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன்–அமுதினில் வரும் பெண் அமுது
ஆஸ்ரயணீயம் ஸ்ரீ–கைங்கர்யம் மாதா–ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து–மாதா முன்பு பிரஜைகள் குற்றம்

ஓங்கி உலகு அளந்த–வங்க கடல் -இரண்டும் பல சுருதி பாசுரங்கள்–
நோன்புக்கு பலம் ஓங்கி -அருளி–உரைப்பார் பலம் இதில் -அருளி –
தேவதை -கோவிந்தன்- நாராயணன் இல்லை–ஆசமனம் -அச்சுதா அனந்த கோவிந்தா நம
கேவவாதி -கோவிந்தா மீண்டும் –
நாராயணன் -சௌலப்யம் பரத்வம் -நாரங்களுக்கு அயனம் நாரங்களில் உள்ளே —
கோவிந்தா -பட்டாபிஷேகம் -இந்த்ரன் –
நாராயணன் சிறு பெயர் —கோவிந்தா கேட்டு ஆனந்தம் —சமுத்திர விருத்தாந்தம் இதில் தான் ஆண்டாள் –

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க–மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் —
கடைந்த போது சுழன்று வருகையாலே-கடலடைய மரக் கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து–அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –
கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று–
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று-
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –
ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி-பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த-
கிருஷ்ணன் உடைய-ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்–லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து–அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –
வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி–பாற்கடலை–மந்தரத்தை மத்தாக நாட்டி–
வாசுகியால் சுற்றி–தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே–சேதனர் பரிக்ரகித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்–சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி–கிருபையாகிற கயிற்றாலே சுற்றி–கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

வங்கக் கடல் கடைந்த மாதவனை –
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –
கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் –
இங்கு-இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்-தாங்கள் அபேஷித்த படியே –அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீகார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீகாரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப்பறை கொண்டவாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

தண் தெரியல் –
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே
கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே–திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே–உபநிஷத் தமிழ் ஆன படி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே–போக்யமுமாய் இருக்கையும்–தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –
மாலை–பாவனம் போக்யத்வம்–தலையால் சுமக்க வேண்டும் சிரோ பூஷணம்
கோதை மாலை–மாலை கட்டின மாலை–மாலைக்கட்டின மாலை
செவிப்பூ – இவள் செவிக்கு பூ அவன் கொடுக்க-கர்ண புஷ்பம் ஓன்று
இவள் மாலையே கொடுத்து-ஸ்லாக்கியமான மாலை-குழலில் மல்லிகை மாலை விலங்கிட்டு ஓதுவித்த மாலை

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே–விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகா வளியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்

இப்பரிசு உரைப்பார்-
இப்பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்–
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்–
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே–அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்–இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –
ஈர் இரண்டு மால் வரைத் தோள்–அணைத்த பின்பு பணைத்த–
உகவாதார் இரண்டாய் தோற்றும்–ஆசைப்பாட்டர் நாலையும் சேவிப்பார்
திருவடி-தோள்கள் நாலையும் கண்டிடப் பெற்றார்-
சுந்தர தோள்-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோள் உடையான்

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் -பிரிந்தால் ஜலம் இல்லா தாமரை செங்கண் திரு முகம்
நீரார் கமலம் போல் செங்கண்–கதிர் மதியம்
திங்கள் திருமுகத்து –
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம்
அங்கு கதிர் மதியம் போல் முகம்
ஜகத் வியாபார வர்ஜம் என்று இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர் இறே

முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி
இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல்
ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –

செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீயபதியாலே —இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே–த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

மாதவனை திருமாலால் –
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீயபதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி–பிரசாதத்தைப் பெற்று

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் —விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் —
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

அனுஷ்டித்தது-காகிகம் கோபிகள் – – -அநுகரித்தது -மானஸம்-ஆண்டாள் -அப்யசித்தது வாசிகம் —
பலன் இப்படி நான்கு பகுதிகள் இந்த பாசுரம் –மூவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -அனுக்ரஹம் -துல்யம் –
அப்பறை கொண்டது -எங்கும் -எல்லாருக்கும் எப்பொழுதும் -திருமால் திருவருள் பெற்று இன்புறுவர்
சொல் பணி செய் ஆயிரம் -சொற்கள் ஆழ்வாருக்கு பணி செய்ததே –
முதல் ஆழ்வார் திரு மழிசை -மானஸ / நம்மாழ்வார் -வாசிக / மற்றவர் -காயிகம் பிரதானம் /
பஃதாஞ்சலி ஸ்புட- ஹ்ருஷ்டா-நம இத்யேன வாயிக -மூன்றும் உண்டே /

சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான–திருமுக மண்டலம் உடையவர்களாய்–
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்-ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று–பூஜித்து
த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்-
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற–
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய–பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த-
சங்காநுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் —தமிழாலே செய்யப் பட்ட–மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்–ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை–ஒரு பாட்டு குறையாதே–பிற்பட்ட காலத்திலே
இப்பிரபந்த ரூபமான பாசுரத்தை அனுசந்திக்கும் அவர்கள்–இப்பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்–விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான–ஸ்ரீயபதியாலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி–
கிருபையை லபித்து–ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

த்வயார்தம்
பூர்வ கண்டம் ஆச்ரயநீய வஸ்து ஸ்ரீ மன நாராயண சரனௌ சரணம் பிரபத்யே
மாதவன்
கடல் கடைந்த வாத்சல்யம் -–அண்ணல் செய்து ஸ்வாமித்வம்–அசுரர் தானும் சௌசீல்யம்
பெண்ணாகிய அமுதூட்டி சௌலப்யம்–ஆழ கடல் கடைந்த துப்பன் சாமர்த்தியம்
உபகரணங்கள் தேடி -ஞான சக்திகள்–நாராயண சப்தார்தம் சூசகம்–
கேசவனை
பிரசச்த கேசம் திரு மேனி திருவடி பர்யந்தம் விக்ரக யோகம்
சரணம் கேசவம் பிரணியி குடுமி பிடிக்கலாம் அடியையும் பிடிக்கலாம்–
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–
திருப் பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து
திங்கள் திரு முகத்து –
அதிகாரி ஸ்வரூபம் வை லஷண்யம்–குளிர்ந்து மலர்ந்து–கதிர்மதியம் அவன் முகம்
இவர்கள் குளிர்த்தியே அமையும்–ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் கலந்த–நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் பிராட்டி
திவளும் வெண் முகத்து போலே திரு முகத்து அரிவை–மதி முக மடந்தையர்–
சகல கலா பூர்த்தி இவர்கள் திரு முகம்–குழையும் வான் முகம்
ஆசார்யர் சிஷ்யர் அக்னி ஆராதிக்க சொல்லி போனார் கதை–
ப்ரஹ்ம உபதேசம் செய்யாமல் போக அக்னி ஆராதிக்க
ஸ்ரத்தை பார்த்து அக்னி தேவனே உபதேசம் செய்ய–தேஜஸ் ப்ரஹ்ம வித்து ஆனதே–பிரகாசிக்க–
அது போலே திங்கள் திரு முகத்து சேய் இழையார்
கிருஷ்ண விஷயீகார யோக்யதையால் தேஜஸ் மிக்கு–

தூ மலர் தூவி–அடி போற்று–சென்று சேவித்து–செய்வது எல்லாம்–அங்கு
திருவாராதனீய ஸ்தலம்–திவ்ய ஆஸ்தானம்–நப்பின்னை பிராட்டி கட்டிலே–திவ்ய சிம்ஹாசனத்திலே
அப்பறை-
நாட்டுக்கு சொன்ன பறை இல்லை –நீ தாராய்–அவன் தர இவர்கள் கொண்டவாற்றை-
தப்புக்கு பொறை வளைப்பித்து–ஆஸ்ரணீய க்ரமம் தப்பாமல் பலம் பெற்ற–

பட்டர் பிரான் கோதை–
அணி புதுவை-சீர் மல்கும் ஆய்ப்பாடி நந்த கோபர் -கண்ணன் பற்றி
தனக்கு பெரியாழ்வார் உத்தேச்யம்-அவர் அபிமானம் ஸ்ரீ வில்லிபுத்தூர்-நந்த கோபன் கிருஷ்ணன் மட்டும்
இங்கு வடபெரும் கோயில் உடையான் -பெரியாழ்வார்-பிராட்டிக்கு மிதலை அயோதியை-
பிறவியும் புக்க இடம் ஒரே இடம்
மதுரையார் மன்னனார் -அடி தொட்டு மன்னார் -ரெங்க மன்னர்-
துவாராபதி மன்னனார் மன்னர்-அர்ச்சை ரெங்கன் விபவம் மன்னார் ஆசை பட்டாள்
கலந்து
சேவை —அரங்கர்க்கு -இன்னிசையால் பாடி கொடுத்தாள்–பொன்னும் முத்தும் மணியும் மாணிக்கமும் ஆபரணம் போலே
அணி புதுவை —
பிரணவம் போலே–அகாரவாச்யன் உகாரவாச்யன் பிராட்டி மகார வாச்யன் பெரியாழ்வார் திருவடி –
மூவரும் ஒரே சிம்காசனம்
மூவருக்கும் பிரதான்யம்–முப்புரி ஊட்டிய திவ்ய தேசம் அணி புதுவை
தண் அம் துழாய் அழல் போல் சக்கரத்து அண்ணல் -பராங்குச நாயகிக்கு கொதிக்கும்–
திருத் துழாய் சூடு -தாமச குணம் பஸ்மம் ஆக்கும்
தாமரை குளிர்ச்சி–ஸ்வாதந்த்ர்யம் இல்லை–பிரிந்தவன் மாலை போலே இல்லையே சேர்ப்பவர் மாலை–
பட்டர் பிரான் பிராமணருக்கு உபகாரகன்
வேதப்பயன்-தாத்பர்யம் அருளி-மறை நான்கும் முன் ஓதிய பட்டனுக்கு
அரங்கமேய அந்தணன் -உபகாரம் -பட்டர் பிரான்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி-18-

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும் அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்–சாத்தி இருப்பார் ஆகிறார் – வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் அனுபவம் -ஸூ சகம்-அணி புதுவை –
மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர்
ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –

பராசாரய வசிஷ்ட நப்தாரம் -வியாசர் சொல்லுமா போலே–பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு உத்கர்ஷ ஹேது
நந்தகோபன் மகன்–ஆழ்வார் சம்பந்தம் இவளுக்கு ஏற்றம்–விட்டு சித்தர் தங்கள் தேவர் –
இவருக்கு தேவராய் நிறம் பெற்றான் அவனும்
இவர் மகளாய் ஒரு மகள் தன்னை உடையேன் -தமக்கு உத்கர்ஷம்–அவளை இட்டு இவருக்கு பெருமை –
சொன்ன–அனுகாரத்தால் அனுபவம் புற வெள்ளம் இட்டு–கோபிமார்–பாவனை ஆழ்வார்–பும்ச்த்வம் பெண்ணாக ஏறிட்டு
சுருதி சதசிரஸ்–மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயினவால் திருந்தி-வேதம் தான் தோன்றி
பிறப்பால் பெற்ற ஏற்றம்–ஷீராப்தி நாதன் விட ஒருத்தி மகனாய் வந்தவன் ஏற்றம்

பெரியாழ்வார்–ஆசார்ய சம்பந்தமே பிரதானம்
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–ஆசார்யர் சம்பந்தம் ஒன்றே ஏற்றம்
ராமானுஜ தாசன் –
சரம ஸ்லோகங்களை சொல் – பேச்சு -வார்த்தை என்று சொல்லி அருளி தள்ளி –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -மெய்ம்மைப் பெரு வார்த்தை -என்பதை காட்டி அருளினாள்
பந்த மோஷ ஹேது அவன்–ஆசார்யர்-நீ விட்டாலும் உன்னை நாம் விடோம் –
அச்சுத சேவிதாம் கிணற்றின் மேல் பூனை போலே-
ஆசார்யர் -மோஷ ஏக ஹேதுவானவர்-ஆசார்ய அபிமானமே உத்தாராகம்
நல்ல என் தோழி –வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –விஷ்ணு சித்தன் கோதை -என்றே

தண் தெறியல் பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆழ்வார் பிராட்டி பெருமாள் -வட பெரும் கோயில் ஆழ்வார் நாச்சியார் ஆழ்வார் -மூவரையும் சேவிக்கும் படி அணி புதுவை
ஹம்சம் போலே -வேத -அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் —
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் தனது திருத் தகப்பனாரை –ஆண்டாள் அருளி
விளையாட்டாகிய க்ரீடார்த்தம் சாஸ்திரமே தரமோ பரமோ மதக
மின்னனைய நுண் இடையாள் விரிகுழல் –மேல் நுழைந்த வண்டு -பெரியாழ்வார் ஆண்டாள் பற்றி அருளி ––
கமல தண் தெரியல் –
துளசி மாலை -ஊர்த்த்வ புண்டர -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்—
திருஅருள்
லஷ்மி கடாஷம் பெற்று இன்புறுவர்
இன்பக்கடலில் அழுந்துவார்–அம்ருத சாகரம் -கதய த்ரயம் கடைசியில் –

சங்கத் தமிழ் மாலை முப்பத்தையும் நிகமித்து அருளுகிறாள்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரேயோ நஹ்ய ரவிந்த லோசன மன காந்தா பிரசாதத்ருதே சமஸ்ருத்யஷர வைஷ்ணவாத்
வஸூ நருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஸ்தோத்ர ரத்னம்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு-
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் -அமுதனார்
ஓங்கி -நோன்பு அனுஷ்டிப்பதால் பலன் சொல்லும்
இது -திருப்பாவை கற்றாருக்கு பலம் சொல்லும்
நாமாக பலனை விரும்பினால் சூத்திர பலன் விரும்புவோம்
நித்ய தம்பதி உடைய கிருபா லாபம் பிராட்டியே அருளிச் செய்த பிரபந்தம் –
அந்தமில் பேர் இன்பம் நிஸ் சந்தேஹம் -தேறி இருக்கலாம்
திருவின் அருள்
திரு -சிறந்த அருள் என்றுமாம்
செல்வத் திருமாலால் -பிராட்டி சம்பந்தம் அங்கேயே அனுசந்தேயம்

இன்புறுவர் எம்பாவாய்-
பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம் படி பிரசாதத்தைப் பெற்று -பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் / திருமாலால் அருளப் பட்ட சடகோபன் / திரு மா மகளால் அருள் மாரி/
நிரூபக தர்மம் / இசலி இசலி இருவரும் பரியக் கடவர் –

கடல் கடைந்த
ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் கடைந்து –
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்த்ரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தில் சுவை அமிழ்தம்
கறைப் பாம்பணை பள்ளி யன்பன் ஈட்டம் களித்து இருந்த
நிறைப் பான் கழல் அன்றி ஜன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மாதவன் -மஹா தபஸ்வீ
கேசவன் இந்த்ரியங்களாகிற பல குதிரைகளை நிரசித்த ஜிதேந்த்ரியர்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பத ஆஸ்ரிதாம் ராமானுஜம்
திங்கள் திரு முகத்து சேயிழையார் –தாபத்ரயங்கள் நீங்கிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸும்ய-சவ்ம்ய- திருமுக மண்டலங்கள்
கோபிகள் கண்ணைப் பெற்றால் போலே சிஷ்யர்கள் ஆச்சார்யர் சந்நிதியாலே பேறு பெற்று –
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்யர் திருவடிகளை அடைந்து மகிழ்வர் என்றவாறு

சர்வ ஸ்வாமிநியாய்-சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதி அதிசயத்தாலும்
அத்தலையில் வாலப்தி அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு இஜ் ஜீவர்களுக்கு தஞ்சம் ஆகிறாள் –
புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஏக ஆஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டி அருளுகிறோம் –

இப்பிரபந்தம் கற்றார் நாய்ச்சியாராலும் சர்வேஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான
விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று நித்ய ஸூகிகளாகப் பெறுவர்
இத்தால் யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள் பேற்றைத் தரும் -என்று
இப்பாசுரத்தின் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –11-வைகுந்தன் -13-புண்ணியன் –
14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் –
18-மணி வண்ணன்19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்-30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இறே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இறே -இவனே ஸ்ரீயபதி என்றபடி –

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும் சொல்லிற்று ஆயிற்று –

அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம்-இதற்கு நம் ஸ்வாமி
சம்சார மக்நான் -உத்தாரண அர்த்தமாக சஸ்த்ரா பாணிநா -தசம அவதாரம்-குரு பரம்பரையில் –
பத்தாவது திரு அவதாரம் -நம் உடையவர் -கத்யத்தில் –
பரபக்தி பரஞ்ஞான பரம பக்தி க்ருத பரி பூர்ண -அனவரத -நித்ய -விசத தம -அநந்ய ப்ரயோஜன –
அனவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவஹோஹம்
தாதாவித பகவத் அனுபவ ஜெனித அனவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவானி –
என்று அன்றோ அருளிச் செய்கிறார் -பரம பக்தி பரமபதத்தில் தானே சித்திக்கும் –
இருந்தாலும் அதனால் விளையும் அனுபவ பிரீதி கார்ய கைங்கர்யம் இங்கேயே அவன் அருளக் குறை இல்லையே –
இத்தை அன்றோ ஸ்வாமி நமக்காக பிரார்த்தித்து பெற்றுக் கொடுத்து அருளுகிறார் –
பர பக்தி -வர பக்தியில் -தொடங்கி -மூன்று அவஸ்தைகள் –
1-அவனுக்கு பிரியமாகவும் -2-அவனுக்கு தாரகமாகவும் –
3–நமக்கு உண்ணும் சோறு சர்வமும் வாஸூ தேவம் என்ற அவஸ்தை -மூன்றும் முதலில் வர வேண்டுமே –
இத்தை ஸ்தான த்ரய பக்தி என்று ஸ்ரீ கீதையிலும் கத்யத்திலும் உண்டே –
இவை வந்த பின்பு நம் காதலையும் ஆழ்வார் அபிநிவேசம் போலே ஆயிரம் குணங்களையும் காட்டி வளர்த்து
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகளை விளைவிப்பானே –
ஸ்வாமி திரு வருளால் இந்த நிலைகளை நாமும் பெற்று -அதனால்
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

——————————————————–

நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்- -அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள்-

ஸ்ரீ ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை /
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
இது போல் 3-27-/4 -26  -இதே போலே உண்டே

மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –

——————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: