ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி –பிரவேசங்கள் தொகுப்பு –

ஸ்ரீ யபதியாய்-தனக்கு சந்நிகிதன் ஆன அளவிலே -பிரணவத்திலே சொல்லுகிறபடியே
அவனை தமக்கு ரஷகனாகவும் -தம்மை அவனுக்கு ரஷக பூதனாகவும் -அனுசந்தித்து –
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான விருத்தி விசேஷங்களை அவன் திருவடிகளிலே செய்ய அமைந்து இருக்க –
அவனுடைய சர்வ ரஷகத்வாதிகளை அநு சந்திக்கும் முன்னே –முகப்பிலுண்டான சௌந்தர்யாதிகளிலே ஆழம் கால் பட்டு –
அவனை குழைச் சரக்காக நினைக்கையாலும் -காலம் அதீதமான வஸ்து காலம் சாம்ராஜ்யம் பண்ணும் தேசத்தில் வந்து
சந்நிஹிதம் ஆவதே -இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ -என்னும் பயத்தாலும் –
அவனை ரஷ்ய பூதனாக நினைத்து -தாம் ரஷகராய் நின்று மங்களா சாசனம் பண்ணும் அளவில் –
உபய விபூதி யூதனான நிலையிலே மங்களாசாசனம் பண்ணின அளவு அன்றிக்கே –
அவன் சம்சாரி சம்ரஷண அர்த்தமாக -பிரதிகூல பூயிஷ்டமான இத் தேசத்தில் வந்து அவதரித்து செய்து அருளின சேஷ்டிதங்களை அநு சந்தித்து –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரியும் பிரேம ஸ்வரூபர் ஆகையாலே –
திரு அவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணி அருளினார் -திரு பல்லாண்டிலே-

அது தன்னிலும் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதும் -என்றும் –
இராக்கதர் வாழ் இலங்கை பாழாலாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும் –
ஸ்ரீ நரசிம்க ப்ராதுர்பாவதுக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களாசாசனம் பண்ணின அளவு அன்றிகே –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வித் திரு காப்பு -என்றும்
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்றும்-
திரு மதுரையுள் சிலை குனித்து ஐம் தலைய பைந்நாக தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதும் -என்றும் –
இவர் ப்ராசுர்யேன மங்களாசாசனம் பண்ணிற்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு இறே–

ஆழ்வார்கள் எல்லாரும் -கிருஷ்ண அவதாரம் -என்றவாறே போர மண்டி இருப்பார்கள் –
அதுக்கடி-அல்லாத அவதாரம் போல் அன்றிக்கே –
சமகாலம் ஆகையாலே -ஒரு செவ்வாய் கிழைமை முற்பட பெற்றிலோமே -பாவியேன் -பல்லில் பட்டு தெறிப்பதே -என்னும் இழவும் –
பரிவர் தேட்டமான அவதாரம் ஆகையாலே அத்தை அநு சந்திக்கையால் வந்த வயிறு எரிச்சலும் –
ராம அவதாரத்தில் -தகப்பனார் -சம்பராந்தகனாய் -ஏக வீரனாய் இருப்பான் ஒருவன் –
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகள் –
குடிதானே வன்னிய மறுத்து இருப்பதொரு குடி –
இவை எல்லாம் மிகை ஆகும் படி குணத்தாலே நாட்டை எல்லாம் ஒரு மார்பு எழுத்தாக்கி கொண்டு இருப்பார்கள் –
ஆகையால் எதிரிகள் என்கிற சப்தம் இல்லை -இங்கன் அன்றிக்கே –
தமப்பன் ஒரு சாது வர்த்தன்-
பிறந்ததும் கம்சன் சிறைக் கூடத்திலே –
வளர்ந்ததும் அவன் அகத்தருகே –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே எழும் பூண்டுகள் அகப்பட அசூர மயமாய் இருக்கும் –
ரஷகரானவர்கள் ஓரடி தாழ நிற்கில் -பாம்பின் வாயிலே விழும்படியாய் ஆய்த்து அவன்படி இருப்பது –
இப்படியானால் வயிறு எரியாது இரார்களே இவர்கள்-

அவர்கள் எல்லாரையும் போல் அல்ல விறே கிருஷ்ணா அவதாரத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –
அதாவது –
விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன் -என்கிறபடியே
தான் பிறந்த படியும் வளர்ந்தபடியும் இவரை கொண்டு கொள்கைக்காக –
அவன் இவர் திரு உள்ளத்திலே குடி கொண்டு இருக்க –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்னும்படி அவதார அனுபவமாகிற
போகத்தில் ஒன்றும் நழுவாதபடி-
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று அவதார சமயமே தொடங்கி-
அதிலுண்டான ரசம் எல்லாம் தாமே முற்றூட்டாக அனுபவித்தார் இறே –
இனி -இவ்விவ்ஷயத்தில் பரிவிலும் வந்தால் -அவர்களுக்கு அது காதாசித்தமாய் -இவருக்கு நித்தியமாய் இறே இருப்பது –

ஆக -இப்படி கிருஷ்ண அவதார அனுபவாதிகளிலே ப்ரவர்தரான இவர் –
இவ்வதாரத்துக்கடி சொல்லுகிற இடத்தில் திரு கோட்டியூர்யின் நின்றும் வந்து பிறந்தான் என்பான் என்-
ஷீராப்தி நாதன் தேவர்கள் கோஷ்டியில் எழுந்து அருளி இவர்களுடைய ரஷண சிந்தனை பண்ணினமை தோற்றும் படி –
உரகல் மெல்லணையனாய்-பள்ளி கொண்டு அருளின ஸ்தலம் ஆகையாலே அந்த ஐக்யத்தை பற்றவும் –
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் -என்றும் தமக்கு மங்களா சாசனத்துக்கு
சஹாகாரியான செல்வ நம்பியோடே திரு கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலே
அவ்வுகப்பை பற்றவும் -திரு கோட்டியூரை திரு அவதார கந்தமாக அருளி செய்தஇதில் விரோதம் இல்லை-

இப்படி கிருஷ்ண அவதார ரசத்தை அனுபவிக்கிற அளவில் -ருஷிகளை போலே கரையில் நின்று -அவதார குண சேஷ்டிதங்களை
சொல்லிப் போகை அன்றிக்கே –பாவன பிரகர்ஷத்தாலே -கோப ஜென்மத்தை -ஆஸ்தானம் பண்ணி –
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை -தாம் அவர்களாக பேசி அனுபவித்து சொல்லுகிறார் –

திருவவதரித்து அருளின அளவில் திரு வாய்ப்பாடியில் உள்ளோர் பண்ணின உபலாளநாதிகளை
அனுசந்தித்து இனியராகிறார் முதல் திரு மொழியில் –வண்ண மாடங்கள் –

கீழில் திரு மொழியில் –
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலை கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –
இனிமேல் இப்படி திருவவதரித்து அருளினவனுடைய திவ்ய விக்ரக்ஹ வை லஷண்யத்தை
தத் தத் காலத்தில் யசோதை பிராட்டி அனுபவித்தாப் போலே –தத் பாவ யுக்தராய் கொண்டு –
திருவடிகளில் நின்றும் -திருமுடி அளவாக –அனுபவித்த பிரகாரத்தை –
அப்போது அவள் பேசின பாசுரத்தாலே ஆதாரம் தோற்ற அருளி செய்கிறார் –சீதக் கடலுள் அமுதன்ன தேவகி-பதிகத்தாலே –

கீழில் திரு மொழியிலே திருவடிகள் தொடங்கி-திரு முடி அளவு உண்டான திவ்ய அவயவங்களை
யசோதை பிராட்டி அனுபவித்த பிரகாரத்தை -தத் காலம் போலே மிகவும் விரும்பி அனுபவித்தாராய் நின்றார் –
இனி மேல் வளர் பிள்ளையை தொட்டிலே வளர்த்தி தாலாட்டின பிரகாரத்தை -தற் காலம் போலே விரும்பி அனுபவித்து பேசுகிறார் –

சர்வஸ் பரத் பரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் -சர்வ பிரகார நிர பேஷனாய் -நாராயண சப்த வாச்யனான சர்வேஸ்வரன் –
யாதொரு இடத்திலே யாதொரு திரு மேனியோடு –அவதரித்தாலும் -அவனுடைய ஸ்திதி கமன சயநாதிகளை கண்டால் மிகவும் விரும்பி
தங்களால் ஆன அளவும் கிஞ்சித் கரித்தன்றி நிற்க ஒண்ணாது இறே-ப்ரஹ்மே சநாதிகளுக்கும்-
இத்தை -யசோதை பிராட்டி மனோ ரதித்து கண்டாளாக சொல்லி தாலாட்டின பிரகாரத்தை -தாம் –மயர்வற மதி நலம் அருள பெற்றவர்
ஆகையாலே -தத் காலம் போலே -ப்ரத்யஷமாக கொண்டு – மிகவும் உகந்து -அவனுடைய
மேன்மையையும் -நீர்மையையும் -அருளிச் செய்து தாலாட்டுகிறார் –

கீழில் திரு மொழியில் -யசோதை பிராட்டி அவனுடைய சைசவ அனுகுணமாக –அழுகையை மாற்றி -கண் வளர பண்ணுகைகாக
சீராட்டிக் கொண்டு தாலாட்டின -பிரகாரத்தை –தத் பாவ யுக்தராய் கொண்டு -தாமும் அப்படி அருளி செய்தார் –
இனிமேல் தொட்டில் பருவம் போய் -தவழ்ந்து விளையாடத் தக்க பருவமான பின்பு அவன் –
நீணிலா முற்றத்தே போந்து –தவழ்ந்து புழுதி அழைவது –
சந்த்ரனை அழைப்பதான -பிரகாரத்தை -அவள் அனுபவித்து –
அவனுக்கு உகப்பாக சந்த்ரனை வர சொல்லி தான் பல காலும் அழைத்த பிரகாரத்தை தாமும் அனுபவ பூர்வகமாக பேசி இனியர் ஆகிறார் –

பரம பதத்தில் -அவாக்யன் அநாதர-என்கிறபடியே பெரு மதிப்பனாய்-ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே -தன்னோடு ஒக்க முகம் பார்த்து
வார்த்தை சொல்லுகைக்கு ஒரு தத்வாந்தரம் இல்லாமையாலே -அநாதாரித்து இருக்கும் அவன் –
லீலா விபூதியில் -சம்சாரி சம்ரஷண அர்த்தமாக -தன் இச்சையாலே –இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து -அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற –
சைசவ வாத்ய அவஸ்தைகளை அடைந்து -தத்தத் அவஸ்த அனுகுணமாக செய்த சேஷடிதாதிகளை அனுசந்தித்தால் –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-அவன் மேன்மையையும் -நீர்மையையும் -தெளிய கண்டவர்கள்-
அதிலே வித்தராய் -அனுபவிக்க சொல்ல வேண்டா விறே-

மற்று உள்ள ஆழ்வார்களையும் போல அன்றிக்கே -இவ் அவதார விசேஷத்தில் –அதி பிரேம அதிசயத்தாலே -கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
இவ் அவதார ரசம் எல்லாம் அனுபவிப்பதாக இழிந்த இவர் – அவனுடைய பால சேஷ்டிதங்களில் ஒன்றும் நழுவ விடார் இறே-
ஆகையாலே –-அவன் புழுதி அளைவது –சந்தரனை அழைப்பது -ஆகிய
சேஷ்டிதங்களை-தத் காலத்தில் யசோதை பிராட்டி அனுபவித்தாப் போலே தாமும் அனுபவித்து பேசுகிறார் –

இனி மேல்-1-5- அவனுடைய பருவத்துக்கு ஈடாக அவன் செங்கீரை ஆடுகிறது -காண வேணும் என்று ஆசைப் பட்டு –
அவனைப் பல படியாக புகழ்ந்து -எனக்கு ஒருகால் செங்கீரை ஆட வேணும் -என்று பல காலும் அபேஷித்து-
அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்த படியை -தாமும் தத் காலம் போலே அனுபவித்து –
அவள் பேசினாப் போலே பேசி இனியர் ஆகிறார் –

அவனை ஸ்தோத்தர பூர்வகமாக செங்கீரை ஆட வேணும் என்று பல காலம் அபேஷிக்கிறதும் –
அந்த சேஷ்டித அனுபவம் பண்ணுகிறதுமே அவளோடு இவருக்கு சாம்யம் –
மயர்வற மதிநலம் பெற்றவர் ஆகையாலே -அவன் படிகள் அடங்கலும் பிரகாசிக்கையாலே –
தர்ம ஐக்யத்தாலே -அவதாந்தர சேஷ்டிதங்களையும் இவ் அவதாரம் தன்னில்-உத்தர கால சேஷ்டித விசேஷங்களையும் –
பரத்வாதிகளில் உண்டான படிகளையும் –உகந்து அருளின நிலங்களில் நிலையால் தோற்றுகிற குண விசேஷங்களை எல்லாம் –
தம்முடைய பிரேம அதிசயத்தாலே -இவ் வஸ்துவுக்கு விசேஷமாக்கி கொண்டு புகழ்ந்து –
அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கிறது இவருக்கு விசேஷம் –

இனி–1-6- -சப்பாணி கொட்டுகையாகிற பால சேஷ்டிதத்தை செய்து அருள வேணும் என்று
அவனை பிரார்த்தித்து -அந்த சேஷ்டித ரசத்தை அவள் அனுபவித்தால் போலே –
ஒரு சேஷ்டிதத்தை அனுபவித்த அளவிலே பர்யாப்தி பிறவாத அபிநிவேச அதிசயத்தாலே –
அந்த சேஷ்டித ரசத்தையும் அனுபவிக்க ஆசைப் பட்டு -அவள் பேசினால் போலே பேசி -தாமும் அனுபவிக்கிறார்

அவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் -1-7-

இனிமேல் –1-8-அவனுடைய சைசவ அநு குணமாக -ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும்படியை –
யசோதை பிராட்டி அனுபவிக்க ஆசைப் பட்டு -அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து –
அவன் வந்து தன்னை அணைக்கை யாகிற ரசத்தை -அவள் அனுபவித்த பிரகாரத்தை –அப்படியே தாமும் அனுபவித்து ஹ்ருஷ்டராகிறார் –
அச்சோ என்று அவன் வந்து அணைத்து கொள்கையை அபேஷிக்கையும் –அந்த சேஷ்டித ரசத்தை அனுபவிக்கையுமே அவளோடு இவருக்கு சாம்யம் –
மயர்வற மதிநலம் பெற்று -பரத்வாதிகளை எல்லாம் தெளியக் கண்டவர் ஆகையாலே –
அவதாராந்தர சேஷ்டிதங்களையும்-இவ் அவதாரம் தன்னில் உத்தர காலத்தில் உள்ள சேஷ்டிதங்களையும் –தர்ம ஐக்யத்தாலே –
வஸ்து விசேஷணம் ஆக்கிக் கொண்டு -அவனைப் புகழ்ந்து –அந்த பால சேஷ்டித ரசத்தை அனுபவித்தது இவருக்கு விசேஷம்-

அவ்வளவு அன்றிக்கே –அவன் தன் உகப்பாலே ஓடி வந்து முதுகிலே ஓடி வந்து அணைத்து கொள்ளும் –சேஷ்டித ரசத்தையும் -அனுபவிக்க
ஆசைப்பட்டு -புறம் புல்குவான் -என்று –அது தன்னை அவனைக் குறித்து அபேஷித்து -அவனும் அப்படி செய்ய –
அவள் அனுபவித்த பிரகாரத்தை –
அவ்வளவும் அல்லாத பிரேமத்தை உடைய தாம் அந்த சேஷ்டிதத்தை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே –
அவனுடைய மேன்மையையும் நீர்மையையும் சொல்லிப் புகழ்ந்து கொண்டு -புறம் புல்குவான் புறம் புல்குவான் -என்று
பலகாலும் அபேஷித்து –தத்காலம் போலே தர்சித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் இத் திருமொழியில்–1-9-

சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடும் அத்தையும் -அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற அவன் ஆஸ்ரிதத்தை
தத்காலத்தில் உள்ளார் அனுபவித்து ஹ்ர்ஷ்டராய் பேசினால் போலே – பிற்காலமாய் இருக்கச் செய்தேயும் –
தத்காலம் போலே -தாமும் அனுபவித்து பேசி –ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-2-1-

ஸ்ரீ மா முனிகள் கீழே பத்து பத்துக்களிலும் அருளிச் செய்தவற்றைத் தொகுத்து -2-2-திருமொழி பிரவேசத்தில்
அருளிச் செய்கிறார்

ஆழ்வார்கள் எல்லாரும் கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் -அவர்கள் எல்லாரையும்
போல் அன்றிக்கே -கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் -அவ்வதார ரச அனுபவத்துக்காக கோப
ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி -போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே அவ்வதார ரசம்
உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –
முதல் திருமொழி யிலே அவன் அவதரித்த சமயத்தில் –
அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –
அநந்தரம்-1-2-
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக தான் அனுபவித்து -அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –
அநந்தரம் –1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு -தாம் அனுபவித்து –
அநந்தரம் –
அவன் அம்புலியை அழைக்கை–1-4-
செங்கீரை ஆடுகை–1-5-
சப்பாணி கொட்டுகை–1-6-
தளர் நடை நடைக்கை–1-7-

அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க-முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் -தத் காலத்திலேயே
அவள் அனுபவித்து பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் -முலை உண்கையும் மறந்து -நெடும் போதாக கிடந்தது உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று
அவனை எழுப்பி – நெடும்போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து
முலை ஊட்டின பிரகாரத்தை தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு -தத் பாவ யுக்தராய் கொண்டு –
அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –2-2-

அவள் அவனுக்கு காது குத்தி -காது பெருக்கி -காது பணிகளும் இட்டு -அனுபவிக்க ஆசைப்பட்டு –காது குத்துகையாகிற உத்சவத்துக்கு –
ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க-அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
அவன் அஞ்சாதபடியான வசனங்களை சொல்லியும் –அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்தி கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை -தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத்காலம் போலே அவனை குறித்து அப்பாசுரங்களை பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –2-3-

காது குத்தி -பெருக்கி தலைக் கட்டின அநந்தரம்- பிள்ளைகளை காது பெருக்கினால் -அந்த செடி நீங்க குளிப்பாட்டும் கிரமத்திலே-
இவனை மஞ்சனமாட்ட வேணும் என்று உத்யோகித்து – அதுக்கு வேண்டும் உபகரணங்களையும் சம்பாதித்து வைத்து –
நீராட வா -என்று அழைத்து -அவன் இசையாத அளவிலும் விடாதே நிர்பந்தித்து -அவசியம் இன்று திரு மஞ்சனம் செய்ய வேண்டின ஹேதுவையும்
அவனுக்கு அறிவித்து – திருமஞ்சனம் செய்தால் பின்பு திரு மேனிக்கு அலங்காராமாக சாத்துகைக்கு உருப்பானவை பாகத் தான் தேடி வைத்த –
அங்க ராகாதிகளையும் காட்ட இசைந்து வருகைக்கு உடலாக அவனுக்கு அபிமதமான அபூபபலாதிகளையும் முன்னிட்டு –
அவன் பக்கல் தனக்கு உண்டான ச்நேஹாதிகளையும் சொல்லி – புழுதி அளைந்த பொன் மேனி காண நான் மிகவும் விரும்பி இருப்பேன் –
ஆனாலும் கண்டவர்கள் – ஒருத்தி பிள்ளை வளர்த்தபடி என் -என்று பழிப்பார்கள் –அவ்வளவுமேயும் அன்றி –
நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிறபடியை காணில் உனக்கு அபிமதையான நப்பின்னை பிராட்டி சிரிக்கும் -என்றால் போலே சிலவற்றையும் சொல்லி –
அவனை வருந்தி உடன்படுத்தி மஞ்சனமாட்டிய பிரகாரத்தையும் – தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு பாவன பிரகர்ஷத்தாலே –
தத் அவஸ்தாபன்னராய் கொண்டு அவள் அப்போது பேசின பாசுரங்களை எல்லாம் -தத்காலம் போலே அவனைக் குறித்து பேசி –
அவனை மஞ்சனம் ஆட்டுகையாகிற ரசத்தை தாமும் அனுபவித்து ஹ்ருஷ்டராகிறார் இத்திருமொழியில்–2-4-

அநந்தரம் அவனுக்கு திருக் குழல் வாருவதாக உத்யோகித்து -அவன் பிணங்கி ஓடாமல் இசைந்து நிற்க்கைக்காக லோகத்தில்
சிறுப் பிள்ளைகளை குழல் வாருவார் -அவர்களை வசப் படுதுக்கைகாக மருட்டி சொல்லுமா போலே இவனுடைய பால்ய அனுகுணமாக –
அக்காக்காய் குழல் வார வா -என்று பலகாலும் இவன் செவி கேட்க சொல்லி சீராட்டிக் கொண்டு இருந்து –
திருக் குழல் வாரின பிரகாரத்தையும் -தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –பாவன பிரகர்ஷத்தாலே தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தத்காலம் போலே தாம் அவனைக் குறித்து அப் பாசுரங்களைச் சொல்லி -திருக் குழல் வாருகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –2-5-

திருக் குழல் வாரின அநந்தரம் பூ சூட்டுவதாக தேடுகிற அளவிலே ஜாதி உசிதமாக கன்று மேய்க்கப் போகிற பிள்ளைகளோடு
தானும் போவானாக உத்யோகித்து – கன்றுகள் மேய்த்து மறிக்கிற கோலைத் தா வென்ன அவள் இசைந்து கோலைக் கொடாமல் –
இவனை ஒப்பித்து காண வேணும் -என்னும் கருத்தாலே கோலை வாங்கித் தருகிறேன் என்று இவனை அழுகை மருட்டி –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று பலகாலும் சொன்ன பிரகாரத்தை தத்பாவ யுக்தராய் கொண்டு
அவளைப் போலே தாமும் அவனைக் குறித்து பேசி அந்த ரசத்தை அனுபவிக்கிறார் – இத் திரு மொழியில் –2-6-

அக்காக்காய் கோல் கொண்டு வா -என்று பலகாலும் சொல்லி அவன் அழுகுகையை மாற்றி உகப்பித்த பின்பு –
அவனுக்கு பூ சூட்டுவதாக கோலி-செண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி -தொடக்கமாய் –
நிறத்தாலும் மணத்தாலும் ஓன்று போல் ஓன்று அன்றிகே விலஷணமாய் இருக்கும் புஷ்பங்களை உண்டாக்கி -அவற்றை தனி தனியே சொல்லி –
உனக்கு இன்ன இன்ன பூ சூட்டும்படி வா என்று அனுவர்த்தித்து அழைத்து பூ சூட்டின பிரகாரத்தை தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு – அவனை குறித்து அவள் பேசினால் போலே பேசி அந்த ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில்-2-7-

அவனை பல காலம் அழைத்து பூ சூட்டின அநந்தரம்-அவன் அழகுக்கு திருஷ்டி தோஷம் வாராதபடி காப்பிட வேணும் -என்று நினைத்து
சாயம் காலத்திலே உன்னை சேவிபபதாக தேவ ஜாதி எல்லாம் வந்து நில்லா நின்றது-காலமும் சந்த்யை ஆயிற்று-
இக்காலத்தில் உக்ர தேவதைகள் சஞ்சரிக்கும்- மன்று முதலான ஸ்தலங்களில் நில்லாதே
உனக்கு அந்திக் காப்பு இடும்படி வர வேணும் -என்று பலகாலும் அனுவர்த்தித்து அழைத்து காப்பிட்ட பிரகாரத்தை
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு உகந்து அருளின நிலமான திரு வெள்ளறையிலே-அவன் நிற்கிற நிலையில் -அவனைக் குறித்து
யசோதை பிராட்டி உடைய சிநேகத்தையும் -பரிவையும் உடையராய் கொண்டு – அவள் பேசினால் போல் பேசி
அவனுக்கு திரு அந்திக்காப்பு இடுகை யாகிற ரசத்தை அனுபவிக்கிறார் –-இத் திருமொழியில்–2-8-

கீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி -தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –
மாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி -உணர்ந்து -தன்னுடைய கரஹகார்யா பரவசையாய் வ்யாபரியா நிற்க
இவனும் உணர்ந்து போய் -ஊரில் இல்லங்களிலே புக்கு –அங்குண்டான வெண்ணெய்களை விழுங்கி –
அவை இருந்த பாத்ரங்களை உருட்டி -உடைத்து –காய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –
அவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச்சேஷமாக எடுத்து ஜீவித்து –
சிறு பெண்ணை அழைத்து -அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –அத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –
இப்படி தீம்புகள் செய்கையாலே -அவ்வவ க்ரஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பாட்டு –
உன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –
இவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்து கொள்கைக்காக பல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –
உன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-இப்புடைகளிலே
பலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும் தத் அவஸ்தா பன்னராய் கொண்டு பேசி
முன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்–2-9-

ப்ராப்த யௌவநைகளான பெண்களொடே அவன் இட்டீடு கொண்டு -ஓன்று கொடுத்து
ஓன்று வாங்குகை-இது தானும் வார்த்த விஷயத்தில் -என கொள்க –
விளையாடுகையாலே அவனால் ஈடுபட்ட பெண்கள் -மாதாவான யசோதை பிராட்டி பக்கலிலே வந்து –
தங்கள் திறத்திலே அவன் செய்த தீம்புகள் சிலவற்றை சொல்லி –
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித ரஷகனாய் –ஆஸ்ரிதர் கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
ஆஸ்ரிதர்க்கு நல் சீவனான தன்னை – பூதனை கையில் அகப்படாமல் நோக்கி கொடுத்தவனாய்–
ஆஸ்ரிதர்க்கு தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவனாய்-ஆஸ்ரிதர் ஆர்த்தி அறிந்து சென்று உதவுமவனாய் –
நித்ய ஆஸ்ரிதையான பூமிப் பிராட்டிகாக நிமக்னையான பூமியை உத்தரித்தவனாய் –
இப்படி சர்வ விஷயமாக உபகாரங்களை பண்ணினவன் -எங்கள் திறத்தில் அபகாரங்களை செய்யா நின்றான் –
ஆன பின்பு இவன் கீழ் ஜீவிக்க போகாது -இவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் என்று பல காலும் சொல்லி
முறைப்பட்ட பிரகாரத்தை தாமும் அப்படியே பேசி -அவனுடைய அந்த லீலா வியாபார ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –2-10-

மாதர் ஸ்நேஹத்தாலே பலகாலும் அவனை அம்மம் உண்ண அழைத்தும் -அம்மமூட்டியும் போரும் யசோதை பிராட்டி –
அவனுடைய பருவத்தின் இளமையையும் – அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான – அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு –
அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –
அநியாம்யனாய் அப்ரதிஹத லீலாரசபரனான சர்வேஸ்வரன் -என்று அனுசநதித்து – அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி –
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –தாமும் அப்படி பேசி –அந்த ரசத்தை அனுபவிக்கிறார் -இத் திருமொழியில் –3-1-

அவள் அத்தை அப்போதே மறந்து -முன் போலே தன்னுடைய புத்ரனாக இவனை பிரதிபத்தி பண்ணி -அபிமானித்து –
பிராமணர்க்கு பால்யத்திலே பிராமசார்யம் அனுஷ்டித்து பின்பு கார்ஹச்த்யம் அனுஷ்டிக்கை தர்மமாய் இருக்குமா போலே –
இடையருக்கும் இளம் பருவத்தில் கன்றுகள் மேய்த்து – பக்வரான பின்பு பசு நிரை மேய்க்கை ஜாத் உசிதம் ஆகையாலே –
சர்வச்ய ஜகாத பாலள வத்ச பாலள பபூவது -என்கிறபடியே –கன்றுகள் மேய்க்க தகுதியான பருவத்தை ப்ராப்தனான இவனை –
சிறுகாலே ஊட்டி யோருப்படுத்தி –கன்றுகள் மேய்க்கும்படி போக விட்டு – அவன் போன அநந்தரம்-ஷண கால விஸ்லேஷம்
பொறுக்க மாட்டாதவள் ஆகையாலே – அவன் ஊரிலே நின்று செய்யும் ஸ்வைர விஹாரங்கள் எல்லாம் பரக்கச் சொல்லி –
இப்படி செய்து திரியாமல் – கன்றுகளின் பின்னே இவனை என் செய்யப் போக விட்டேன் -என்று -இவனுடைய மார்த்வத்தையும் –
போகிற இடத்தின் காடின்யதை ஷன்யங்களையும் அனுசந்தித்து – சுகுமாரனான இவனை இப்படி இருக்கிற காட்டிலே போக விட்டேனே -என்றும்
அவ்வளவும் அன்றிக்கே குடையும் செருப்பும் கொடாமல் -வெய்யிலும் கல்லும் முள்ளுமான தேசத்திலே போக விட்டேனே –
என்றும் பகுமுகமாக க்லேசித்து சொன்ன பிரகாரத்தை –தத் அவஸ்த்தா பன்னராய் கொண்டு –தாமும் அப்படியே பேசி –
அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –3-2-

கன்றுகளை மேய்த்து மீண்டு வருகிற போது -அவள் எதிரே சென்று –அவனுடைய திரு மேனியையும் -அலங்காரத்தையும் -கண்டு ப்ரீதையாய் –
தான் அனுபவித்து -பலருக்கும் அழைத்துக் காட்டி –லோகத்தில் என்னைப் போல் பிள்ளை பெற்றார் இல்லை -என்பது
நான் வாழ்வை உகந்து -உன்னை கன்று மேய்க்க போக விட்டேன் -என்னைப் போலே கடின சித்தையாய் இருப்பாள் ஒரு ஸ்த்ரி இல்லை -என்பது –
உன்னுடைய திரு மேனி எல்லாம் கற்றுத் துளியாய் இருக்கிறது காண் நீராடத் தக்கவை சேமித்து வைத்தேன் -நீராடி அமுது செய் -என்பது –
குடையும் செருப்பும் கொடாமையாலே -திருவடிகளும் வெதும்பி -திருக் கண்களும் சிவந்து – திருமேனியும் அலசுதலை அடைந்தாய் காண் -என்பதாய்
பின்னையும் பலவற்றையும் -அவனைக் குறித்து சொல்லிக் கொண்டு சென்று –
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின்னே போகல் கோலம் செய்து இங்கே இரு – என்னும் அதளவாக அவன் செய்யும் அவையும் தவிரும் அவையும்
கற்பித்த பாசுரங்களை எல்லாம் தத் அவஸ்தா பன்னராய் கொண்டு தன்னுடைய பிரேம அதிசயத்தாலே தாமும் அவனைக் குறித்து
அப்படியே பேசி -அந்த ரசத்தை அனுபவிக்கிறார இத் திரு மொழியில் –3-3-

நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்கையாலே ஏழு நாள் எழுந்து அருளி இருந்து –
திருவோணத் திரு நஷத்ரமும் கொண்டாடி விட்ட பின்பு – பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கப் போய் -அவை மேய்ந்த ப்ரீதியாலே தன்னை
நாநா பிரகாரமாக அலங்கரித்து – குழலூதுவது –இசை பாடுவதாக கொண்டு
தானும் தன்னேராயிரம் திருத் தோழன்மாருமாக பெரிய மேணானிப்போடே எழுந்து அருளி வருகிற -பிரகாரத்தை கண்டு –
திரு ஆய்ப்பாடியிலே பெண்கள் பல கணி வழியே நுழைந்து -பார்ப்பாரும் நிற்பாரும் –
அவன் வரும் போதாக எதிரே நின்று உங்கள் வளையை இழவாதே -கொள்ளும் கோள் -என்பாரும்
வருகிற அவன் வடிவை என் பெண் அருகே நின்று கண்டாள் இத்தனை –
அது கண்டு இவ்வூர் ஓன்று புணரா நின்றது என்பாரும்
அவன் வருகிற படியை தெருவில் கண்டு -அவன் பக்கல் சிநேகத்தால் -தாங்கள் விகர்தைகளாய் –
காணாதாரையும் அழைத்து காட்டுவாரும் அவன் சேஷ்டிதத்தில் ஈடுபட்டு தாங்கள் அநன்யார்ஹை ஆனமை சொல்லுவாரும் –
அவன் அத் தெருவே வருமாகில் – எங்கள் பந்தை பறித்து கொண்டு போனவன் -என்று வளைத்து -அவனுடைய பவளவாய் முறுவலைக் காண்பாரும் –
அவன் வரவைக் கண்டு தாம் தாம் ஈடுபட்டமை யைத் தாய்மார்க்கு சொல்லும்படி விகர்தைகள் ஆவாருமாய் –
இப்படி அவன் பக்கல் காமுற்ற பிரகாரத்தை அவர்கள் எல்லாருடைய பாவ வ்ருத்தியை உடையராய் கொண்டு
தாம் அவனைக் குறித்து பேசி ப்ரீதர் ஆகிறார் -இத் திருமொழியில் –3-4-

கீழ் சொன்னபடியே -தான் விரும்பி மேய்த்து கொண்டு போகிற -கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் –
தனக்கு அபிமத விஷயங்களான கோப கோபீ ஜனங்களுக்கும் பாதகமாம்படி இந்த்ரன் பசிக் கோபத்தாலே
கல் வர்ஷத்தை வர்ஷிப்பிக்க – குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் -என்கிறபடியே
மலையை எடுத்து -ரஷ்ய வர்க்கம் ஆனவற்றுக்கு ஒரு நலிவு வாராதபடி நோக்கின உபகாரம் திரு உள்ளத்திலே பின்னாட்டி –
மலை எடுக்க வேண்டின ஹேதுக்களையும் –மலை தன்னில் உண்டான வளப்பங்களையும் –
மலையினுடைய பரப்பையும் –அதனுடைய கனப்பாட்டையும் – அத்தை அநாயாசேன எடுத்துப் பிடிங்கின படியையும் –
அது தன்னை ஏழுநாள் ஒருபடிப்பட தரித்து கொண்டு நின்ற படியையும் –
அத்தால் திருக்கைக்கு ஒரு வாட்டம் இன்றிக்கே இருந்த படியையும் -எல்லாம் – தத் காலம் போலே தர்சிப்பித்து பேசி
அவனுடைய ஆபத் சகத்வம் ஆகிற மகா குணத்துக்கு பிரகாசமான அந்த திவ்ய சேஷ்டிததினுடைய ரசத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் — இத் திருமொழியில் –3-5-

குழல் கோவலர் -என்கிறபடியே கோபர்க்கு குழலூதுகை ஜாதி உசித விருத்தி ஆகையாலே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மகன் ஆகையாலே -தாமும் அந்த விருத்தியிலே அதிகரித்து -பலகாலும் குழலூதிக் கொண்டு போருமவன் ஆகையாலே –
ஒருநாள் ஸ்ரீ பிருந்தாவனத்தில் நின்று குழலூத அந்த குழலோசை வழியே யுவதிகளான ஸ்ரீ கோபிமாரிலே சிலர் -தங்கள் பந்துக்கள்
பண்ணி வைத்த காவல்களையும் கடந்து -இவன் நின்ற இடத்தே வந்து சூழ்ந்து கொண்டு -நின்ற படியையும்
வேறே சிலர் அரை குலைய தலை குலைய வோடிவந்து ஸ்த்ரீத்வம் பின்னாட்டின படியாலே
ஒடுங்கி -நெகிழ்ந்த உடையை ஒரு கையாலே தாங்கி -இவன் அளவிலே கண்ணோடே நின்ற படியையும் –
உபரிதன லோக வர்த்திகளான ஸ்திரீகள் -இக்குழல் ஓசையை கேட்டு வந்து திரண்டு
நெஞ்சு உருகி -கண்கள் பனிக்கை -முதலான விகர்த்திகளோடே-இதிலே செவி மடுத்திக் கொண்டு – நின்ற படியையும் –
மேனகை திலோத்தமை முதலான நர்த்த கீதை பரைகளாய் திரியும் அப்சரசூகள் உலாவி உலாவி குழலூதுகிற இவனுடைய வடிவையும் –
குழலோசையும் கண்டு – நாமும் சிலராய் ஆடிப் பாடி -திரிகிறோமே -என்று லஜ்ஜித்து -அறிவு அழிந்து –
தம் தாமுடைய ஆடல் பாடல்களை -தாங்களே மாறின படியையும் –
சதத கீத பரராய் திரியும் தும்புரு நாரதரும் கின்னர மிதுனங்களும் இந்த குழலோசையினுடைய
ரசத்திலே ஈடுபட்டு -தம் தாமுடைய வீணையை மறப்பார் -கின்னரம் தொடோம் -என்பாரான படியையும் –
ஆகாசசாரிகளான-கந்தர்வர்கள் -எல்லாரும் அம்ர்தம் போலே இருக்கிற இக்கீத வலையிலே அகப்பட்டு -சிதிலராய் கை மறித்து நின்ற படியையும்
தேவர்கள் எல்லோரும் தங்கள் ஹவிர் போஜனத்தை மறந்து -திரு ஆய்ப்பாடி நிறைய வந்து
திரண்டு இக் குழலோசை யினுடைய ரசத்தை புசித்து இவனை விடாதே பின் பற்றின படியையும் –
பஷி ஜாலங்கள் தம் தாம் கூட்டை விட்டு வந்து சூழ்ந்து படுகாடு போலே கிடந்த படியையும் –
பசுத் திரள்கள் இக்குழல் ஓசை கேட்டு -பரவசமாய் -கால்களைப் பரப்பி
தலைகளை நாற்றிக் கொண்டு -செவியை அசைக்கவும் மாட்டாமல் -நின்ற படியையும்
மான் திரள்கள் ஆனவை -மேய்கை முதலானவற்றை மறந்து -நிச்சலமய்க் கொண்டு சித்ரார்ப்பிதங்கள் போலே நின்ற படியையும் –
அசேதனமான மரங்கள் ஆனவை -சேதனங்களிலும் காட்டிலும் அத்ய ஆச்சர்யமாம் படி ஈடுபட்ட படியையும்
தனித் தனியே பேசி -அவனுடைய திருக் குழலோசை யினுடைய வைசித்ரியை அனுபவிக்கிறார் -இத் திருமொழியில்–3-6-

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -என்கிற படியே -திரு அவதார சமயமே தொடங்கி-
ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்களை ஓன்று ஒழியாமல் அனுபவித்துக் கொண்டு போந்தார் -கீழ்

மற்று உள்ள ஆழ்வார்களை குமிழ் நீர் பண்ணும் அவனுடைய சௌந்தர்யம் ஆகிற
ஆழங்கால் தானே மேடாய் தரித்து நின்ற மங்களா சாசனம் பண்ணிப் போரும் ஸ்வபாவர் ஆன இவர் –
இப்போது அவர்களைப் போலே அவனை அனுபவிக்க வேணும் என்னும் ஆசை கிளர்ந்து –
அவ்வாசா அனுரூபமாக கிட்டி -அனுபவிக்கப் பெறாமையாலே -தாமான தன்மை அழிந்து –
ஒரு கோப கன்யக அவஸ்தையை ப்ராப்தராய் -ஸ்வ தசையை அன்யாப தேசத்தாலே பேசுகிறார் –
அதாவது –
பருவம் நிரம்புவதற்கு முன்னே ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே பிரவணையாய் நின்ற தன் மகளுடைய தசையை கண்ட திருத் தாயார் –
இவள் பருவத்தின் இளமையையும்
இப்படி இருக்க செய்தே அவன் விஷயத்திலே ப்ரவனையாய் அவனோடு இவள் கலந்து வருகிற படியையும் –
இதுக்கடி சஜாதிகளாய்-தத் விஷயத்தில் ப்ரவனைகளாய் இருக்கும் பாலைகளோடு உண்டான சம்சர்க்கம் என்னும் அத்தையும் –
இவள் லீலா வியாபாரத்தில் அன்வயிக்கையிலும்
அவனுடைய சிஹ்னங்கள் ஒழிய வேறு ஓன்று அறியாளான படியையும் –
இவை எல்லாவற்றுக்கும் மூலமாக தோழிமார் இவளை வசீகரித்துக் கொண்டு போய் அவன் பக்கலில் அகப்படுத்தின படியையும்
இவள் தன்னுடைய ப்ராவண்ய பிரகாரங்களையும் –
இத்தைக் கண்ட பந்து வர்க்கமும் அந்ய வர்க்கமும் சொல்லுகிற வார்த்தைகளை எல்லாம்
சந்நிஹிதரைக் குறித்தும் -தன்னிலேயும் பேசின பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –3-7-

கீழில் திரு மொழியிலே -தன் பிள்ளைக்கு அவன் பக்கலிலே செல்லுகிற ப்ராவண்யத்தைக் கண்ட திருத் தாயார் –
கோவிந்தனோடி வளை சங்கையாகி – என்று அவனோடு இவளுக்கு கலவி உண்டாய்த்தோ என்று முந்துற சங்கித்து
பின்பு பல ஹேதுக்களாலும் சம்ச்லேஷம் ப்ரவர்த்தம் ஆனமையை தானும் அறிந்து –
இவளுடைய ப்ராவண்யத்திலே -முறுகுதலை-முதிர்ச்சி – -கண்ட பந்துக்களும் மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை
படுவதன் முன் ஒருப்படுத்திடும் இனி இவளை உலகு அளந்தான் இடைக்கே -என்று சொல்லி இருக்கச் செய்தேயும் –
சடக்கென விரைந்து கொடாது ஒழிகையாலே அவன் முற்பாடனாய் வந்து -கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி
பரகால நாயகி திருத் தாயார் அருளியது போல் – பிராட்டியைக் கொண்டு போனால் போலே –
இவளை அத்தவாளத் தலையாலே -முந்தானையாலே -மறைத்துக் கொண்டு
தன்னுடைய திவ்ய நகரியான திரு ஆய்ப்பாடியிலே கொண்டு போக –
அந்தரங்கமாக காத்துக் கொண்டு கிடந்த திருத் தாயார் -படுக்கையிலே பெண் பிள்ளையை காணாமையாலே –
இவனை ஒழிய கொண்டு போவார் இலை -என்றும்
இவன் கொண்டு போவது தான் திரு ஆய்ப்பாடியிலே -என்றும் அறுதி இட்டு
இவள் போகையாலே தன் திரு மாளிகை எல்லாம் அழகு அழிந்து வெறியோடிற்று என்றும் –
இவள் இப்படி அடைவு கேடாகக் கொண்டு போன இது இக்குடிக்கு ஏச்சாமோ குணமோ -என்றும்
இவளுக்கு பாணி க்ரகண அர்த்தமான உத்சவம் இப்படி நடக்குமோ -என்றும்
மாமியாரான யசோதை பிராட்டி -இவளைக் கண்டு உகந்து -மணவாட்டுப் பெண் பிள்ளை என்று சத்கரிக்கிமோ -என்றும்
மாமனாரான ஸ்ரீ நந்தகோபர் உகந்து அணைத்து கொண்டு இவள் வை லஷண்யத்தை கண்டு
இவளைப் பெற்ற தாயார் இனி தரிக்க மாட்டார் என்பரோ என்றும்
அவன் தான் நிஹீன குலத்தில் உள்ளாரைப் போலே என் மகளை புணர்ந்து உடன் போகைக்கு
ஹேதுவாகக் கொண்டு குடி வாழுமோ -என்றும்
நாடு எல்லாம் அறியும் படி நன்றாக கண்ணாலம் செய்து கை பிடிக்குமோ -என்றும் –
தன் பெருமையாலே அவன் இவளுக்கு -ரூப குண தோஷங்களை சொல்லி வரிசை அறுத்து ஆண்டிடுமோ -என்றும்
தனக்கு ஜாதி உசிதமான மகிஷியாக பட்டம் கட்டி -பூர்வ மகிஷிகள் முன்னே -வைபவம் தோற்ற வைக்குமோ -என்றும்
இவள் தான் தயிர் கடைகை முதலான வன் தொழில்கள் செய்து குடி வாழ்க்கை வாழ வல்லளோ-என்றும்
இப்படி க்லேசித்தும் மநோரதித்தும் சென்ற பிரகாரத்தை சொல்லுகிறது -இத்திருமொழியில் –3-8-

ஸ்ரீ கிருஷ்ண அவதார ஏக ப்ரவணராய் தத் குண சேஷ்டிதங்களையே அனுபவித்துக் கொண்டு போந்தார் -கீழே-

இப்போது அந்த ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் உடன் -ஏதத் பூர்வ காலிகமான – ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களையும்
ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்னும் அபிநிவேசம் பிறந்து அதுக்கு உடலாக இரண்டு ஸ்ரீ கோபிமார் அவஸ்தையை ப்ராபதராய்
அதிலே ஒருத்தி ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதமும் ஒருத்தி ஸ்ரீ ராமாவதார சேஷ்டிதமுமாகக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் எதிராய் கொண்டு சொல்லி
யுக்தி பிற்ந்த பாசுரத்தாலே உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியில்-3-9-

இரண்டு கோபிமார் அவஸ்தையை ஏக காலத்தில் அடையக் கூடுமோ -என்னில்-பகவத் பிரசாத விசேஷத்தாலே
ஞானத்தில் தடை அற்றால் எல்லாம் சொல்லலாம் இறே
மானமரு மென்னோக்கி -என்கிற திரு மொழியில் – இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும் படி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க
தேச விசேஷத்தில் அநேக சரீர பரிக்ரகம் ஏக காலத்தில் கூடுகிற படி எங்கனே அப்படியே இவரையும் பார்த்து அருளினால் கூடும் –
என்று அருளிச் செய்தார் – என்று பிரசித்தம் இறே-

கீழில் திரு மொழியில் -ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்த இவர் -ராக்வத்வே பவத் ஸீதா-என்கிறபடியே
அவ்வவதார அநு குணமாக ஓக்க வந்து அவதரித்த பிராட்டி தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான -கிருபா -பாரதந்தர்ய -அநந்யார்ஹத்வங்களை
சேதனர் எல்லாரும் அறிந்து விஸ்வஸித்துத் தன்னைப் பற்றுகைக்கு உடலாக நம்முடைய அனுஷ்டானத்தாலே வெளியிடக் கடவோம்-என்று திரு உள்ளம் பற்றி
அதில் பிரதமத்தில் தன்னுடைய கிருபையை வெளியிடுகைக்காக -தாண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ராவணன் பிரித்தான் என்ற ஒரு வ்யாஜத்தாலே லங்கையில் எழுந்து அருள -ஆத்மாநம் மானுஷம் மந்யே-என்கிற அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே
பெருமாள் இவள் போன இடம் அறியாமல் திருத் தம்பியாரும் தாமுமாய்க் கொண்டு தேடித் திரியா நிற்கச் செய்தே
பம்பா தீரத்திலே எழுந்து அருளின அளவிலே மஹா ராஜருடைய நியோகத்தாலே ஸ்வ வேஷத்தை மறைத்து பரிவ்ராஜக வேஷ பரிக்ரஹம் பண்ணி
வந்து முகம் காட்டின திருவடியோடே முந்துற உறவு செய்து -பின்பு அவர் கொடு போய்ச் சேர்க்க
ராஜ்ய தாரங்களை இழந்து சுரம் அடைந்து கிடக்கிற மஹாராஜரைக் கண்டு அவரோடே சக்யம் பண்ணி –
அனந்தரம் அவருக்கு விரோதியான வாலியை நிரசித்து -அவரை ராஜ்ய தாரங்களோடே சேர்த்து வானர அதிபதி ஆக்கி கிஷ்கிந்தை ஏறப் போக விட்டு
திருத் தம்பியாரும் தாமுமாகப் பெருமாள் வர்ஷா காலம் அத்தனையும் மால்யா வானிலே எழுந்து அருளி இருக்க –
படை வீட்டிலே போன இவர் பெருமாள் செய்த உபகாரத்தையும் அவருடைய தனிமையையும் மறந்து
விஷய ப்ரவணராய் தார போக சக்தராய் இருந்து விட வர்ஷா காலத்துக்கு பின்பு அவர் வரக் காணாமையாலே
காம வர்த்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம் புத்வா காலம் அதீ தஞ்ச முமோஹபர மாதுர -என்கிறபடியே கனக்க கிலேசித்து அருளி
இளைய பெருமாளைப் பார்த்து -நீர் போய் வெதுப்பி ஆகிலும் மஹா ராஜரை அழைத்துக் கொண்டு வாரும் -என்று விட
அவர் கிஷ்கிந்தா த்வாரத்திலே எழுந்து அருளி ஜ்யா கோஷத்தைப் பண்ணி -அத்தைக் கேட்டு -மஹா ராஜர் நடுங்கி
கழுத்தில் மாலையையும் அறுத்துப் பொகட்டு காபேயமாகச் சில வியாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து
இவ்வளவில் நமக்கு செய்ய அடுத்து என் என்ன
க்ருத்த அபராதஸ்ய ஹிதே நாந்யத் பஸ்யாம் யஹம் ஷமம்-அந்தரேணாஞ்ச லிம்ப்த்வா லஷ்மணஸ்ய பிரசாதநாத் -என்று
அபராத காலத்தில் அநு தாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம் –
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன -அவ்வளவிலும் தாம் முந்துறப் புறப்பட பயப்பட்டு
இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கை -தாரையை விட்டு ஆற்ற வேணும் -என்று தாரையைப் புறப்பட விட
அவள் சா ப்ரஸ்கலந்தீ -இத்யாதிப்படியே இளைய பெருமாள் சந்நிதியில் இளைய பெருமாள் திரு உள்ளத்தில் சிவிட்கு ஆறும் படி
வார்த்தைகள் விண்ணப்பம் செய்த பின்பு மஹா ராஜர் தாமும் புறப்பட்டு வந்து இளைய பெருமாளைப் பொறை கொண்டு-
அவர் தம்மையே முன்னிட்டுக் கொண்டு பெருமாளை சேவித்த அநந்தரம்-தம்முடைய சர்வ பரிகரத்தையும் திரட்டி
யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹூந்யயுதா நிச-தி ஷூ சர்வா ஸூ மார்கந்தே-என்கிறபடியே
திக்குகள் தோறும் திரள் திரளாகப் பிராட்டியைத் தேடிப் போக விடுகிற அளவிலே –
தக்ஷிண திக்கில் போகிற முதலிகளுக்கு எல்லாம் பிரதானராகப் போருகிற அங்கதப் பெருமாள் -ஜாம்பவான் -மஹா ராஜர் -திருவடி
இவர்களில் வைத்துக் கொண்டு திருவடி கையில் ஒழிய இக்காரியம் அறாது என்று திரு உள்ளம் பற்றி பிராட்டியைக் கண்டால்
விசுவாச ஜனகமாக விண்ணப்பம் செய்யத் தக்க அடையாளங்களையும் அருளிச் செய்து திருவாழி மோதிரத்தையும் கொடுத்து விட
எல்லாரும் கூடப் போய் தக்ஷிண திக்கில் ஓர் இடத்திலும் காணாமல் கிலேசப்பட்டு -அநசநத்தில் தீஷிதராய் முடிய நினைக்கிற அளவிலே
சம்பாதி வார்த்தையால் -ராவணன் இருப்பு சமுத்ரத்துக்கு உள்ளே லங்கை என்பொதொரு படை வீடு -என்று கேட்டு எல்லாரும் ப்ரீதராய்
இக்கரையில் இருந்து திருவடியைப் போக விட -அவரும் சமுத்திர தரணம் பண்ணி அக்கரை ஏறி ப்ர்ஷதம்சக மாத்ரமாக வடிவைச் சுருக்கிக் கொண்டு
ராத்திரியில் ராவண அந்தப்புர பர்யந்தமாக சர்வ பிரதேசத்திலும் பிராட்டியைத் தேடிக் காணாமையாலே கிலேசப்பட்டுக் கொண்டு இரா நிற்கச் செய்தே
அசோகவநிகா பிரதேசத்தில் சில ஆள் இயக்கத்தைக் கண்டு அங்கே சென்று
ப்ரியஞ்ஜ நம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸீ கணம் -ஸ்வ கணே நம்ர்கீம் ஹீ நாம்ஸ்வ கணை ராவ்ர்தா மிவ -என்கிறபடியே விகர்த்த வேஷைகளான
எழு நூறு ராக்ஷஸிகளின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நோவு பட்டு இருக்கிற
ஸூஷ்ம ரூபேண சிம்சுபா வ்ருஷத்துக்கு உள்ளே மறைந்து இருக்க – அவ்வளவில் ராவணன் காம மோஹிதனாய் வந்து
பிராட்டி சந்நிதியில் சிலவற்றை ஜல்பிக்க -அவள் இவனை முகம் பாராமல் இருந்து திஸ்கரித்து வார்த்தை சொல்லி விடுகையாலே
மீண்டு போகிறவன் ராக்ஷஸிகளைப் பார்த்து -இவள் பயப்பட்டு நம் வசம் ஆகும்படி குரூரமாக நலியுங்கோள் -என்று சொல்லிப் போகையாலே
அவர்கள் இதுக்கு முன்பு ஒரு காலமும் இப்படி நலிந்திலர்கள் -என்னும்படி தர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணி நலிய –
இனி நமக்கு இருந்து ஜீவிக்கப் போகாது -முடிந்து விடும் அத்தனை -என்று வ்யவசிதையாய்
அந்த ராக்ஷஸிகள் நித்ரா பரவசைகளான அளவிலே அங்கு நின்றும் போந்து
வேண்யுத்க்ரதந உத்யுக்தையாய் வ்ருக்ஷத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிற அளவிலே இனி நாம் பார்த்து இருக்க ஒண்ணாது
இவ்வளவிலே இவளை நாம் நோக்க வேணும் -என்று
ஏவம் பஹூ விதாஞ் சிந்தஞ் சிந்தயித்வா மஹா கபி ஸம்ஸரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யாஜஹாரஹ-என்கிறபடியே
செவிப்பட்ட போதே ரசிக்கும் படி ஸ்ரீ ராம குண சேஷ்டித விஷயமான வாக்கியங்களைச் சொல்லி -இத்தனை காலமும் இல்லாத ஓன்று இப்போது
யுண்டாகைக்கு அடி என் -என்று சொல் வந்த வழியே சிம்சுபா வர்ஷத்தை எங்கும் ஓக்கப் பார்த்து அதின் மேலே இருக்கிற வானர ரூபியான இவனைக் கண்டு
இது ஏதோ என்று ஏங்கி மோஹித்து விழுந்து நெடும் போதொடு உணர்த்தி யுண்டாய் பின்னையும் இது ஏதோ என்று –
கிந்நுஸ் யாச் சித்த மோஹோயம் -இத்யாதிப்படியே -விசாரிக்கிற அளவிலே இவள் முன்னே வந்து
கையும் அஞ்சலியுமாய் நின்று அநு வர்த்தக பூர்வகமாகச் சில வார்த்தைகளைச் சொல்ல
அவள் பீதையாய் இவனை ராவணன் என்று அதி சங்கை பண்ணி -இப்படி நலியல் ஆகாது காண் -என்று தைன்யமாகப் பல வார்த்தைகளையும் சொல்ல –
இவளுடைய அதி சங்கையைத் தீர்க்கைக்காக பெருமாள் அருளிச் செய்து விட்ட அடையாளங்களை எல்லாம்
ஸூ ஸ்பஷ்டமாக இவள் திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து தான் ஸ்ரீ ராம தூதன் என்னும் இடத்தை அறிவித்து பின்பு
திருவாழி மோதிரத்தையும் கொடுத்து அவள் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்த பிரகாரத்தை அநு சந்தித்து -அதில் தமக்கு யுண்டான
ஆதார அதிசயத்தாலே அவன் அப்போது விண்ணப்பம் செய்த அடையாளங்களையும் -திருவாழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு அவள் ப்ரீதியான படியையும் எல்லாம் அடைவே பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியிலே-3-10-

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களோடு-அவதாராந்தரங்களோடு – அபதானந்தரங்களோடு வாசி அற -தர்ம ஐக்யத்தாலே
எல்லாம் ஏக ஆஸ்ரயம் ஆகையாலே இப்படி இருக்கிற விஷயத்தை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேண்டும் -என்று
தேடுகையாகிற இது -தமக்கு ஒரு புடை செல்லுகிறபடியும் மானச அனுபவத்தின் உடைய கரை புரட்சியாலே அவ்விஷயம் தன்னை
ஸூ ஸ்பஷ்டமாக கண்டதாலே ஒரு புடை தோற்று இருக்கும் படியையும் அனுசந்தித்து –அவை இரண்டையும்
அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –4-1-

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும் சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

அவதாரங்கள் தன்னை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்னும் ஆசை பிறந்தாலும் பெருக்காறு போலே அவை தத் காலத்தில்
உள்ளார்க்கு அனுபாவ்யமாய் பிற் காலத்தில் உள்ளார்க்கு கிடையாததாய் இருக்கிற படியையும் –
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடி -அவதாரத்தில் பிற் பாடனார் ஆனவர்களுக்கும் இழக்க வேண்டாதபடி சர்வேஸ்வரன் அர்ச்சாவதாரமாய் கொண்டு –
உகந்து அருளின நிலங்களிலே -அந்த அவதார குண சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி யாக எழுந்து அருளி நிற்கிற படியும் அனுசந்தித்து –
உகந்து அருளின நிலங்களிலே அவை அனுபவிக்க கோலி – அவை எல்லாவற்றிலும் -தென்னன் உயர் பொறுப்பும் தெய்வ வட மலையும் என்னும்
இவையே முலையா வடிவமைந்த -என்கிறபடியே -ஸ்ரீ பூமி பிராட்டிக்கு திரு முலைத் தடங்கள் ஆம்படி இருக்கையாலே -அவனுக்கு அத்யந்த அபிமத
ஸ்தலங்களாய் இருக்கிற திருமலைகள் இரண்டிலும் வைத்து கொண்டு தெற்குத் திரு மலையிலே நிற்கிற நிலையிலே அனுபவிப்பதாக முந்துற இழிந்து
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார சேஷ்டிதங்கள் எல்லாம் அந்நிலையிலே பிரகாசிக்கிறபடியை அனுபவியா நிற்கச் செய்தே
தத் விஷயத்திலும்-ததீய விஷயமே பிரப்யத்துக்கு சரம அவதியாக அறுதி இட்டு இருக்கும் அவர் ஆகையாலே –
கிளர் ஒளி இளைமையில் ஆழ்வார் அனுபவித்தால் போலே அங்கே எழுந்து அருளி நிற்கிற அழகரிலும் காட்டிலும்
அவர் விரும்பி எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஸ்தலமான திருமலையே ப்ராப்யம் -என்று அனுசந்தித்து –
அத் திருமலையினுடைய வைபவத்தை பஹூ முகமாக பேசி அனுபவிக்கிறார் -இத் திரு மொழியில்–4-2-

திரு மலை ஆழ்வாருடைய வைபவத்தை பஹுமுகமாக பேசி அனுபவித்தார்
அப்படி அனுபவித்த அளவால் தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே மீளவும் அவதார குண சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகாசிக்கும் படியாய்
அழகர் திரு மலையில் நின்று அருளுகிற நிலையை கீழ் சொன்ன க்ரமம் அன்றிக்கே முக பேதேன பேசி திருமலை வைபவத்தையும்
கீழ் உக்த பிரகாரம் அன்றியே -முக பேதேன பல படியாக பேசி அனுபவிக்கிறார் இத் திரு மொழியில்-4-3-

கீழ் ஸ்ரீ ராம அவதார குண சேஷ்டிதம் முன்னாக ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களையும் அழகர் பக்கலிலே அனுபவித்தார்
இதில் ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதம் முன்னாக ஸ்ரீ ராம அவதார குண சேஷ்டிதங்களையும்
அவதாரந்தர சேஷ்டிதங்களையும் எல்லாம் அழகர் பக்கலிலே தர்சித்து அனுபவிக்கிறார்
முத்து கோக்க வல்லவன் -முகம் மாறிக் கோத்த வாறே -அது விலை பெறுமா போலே
அவதார குண சேஷ்டிதங்களும் -விசேஷ ஞ்ஞனரான இவர் சேர்த்து அனுபவிக்கிற வாசியாலே நிறமும் ரசமும் உண்டாய் இருக்கும் இறே
ததீய விஷயத்திலும் விசேஷண பேதத்தாலே விசேஷ்யத்துக்கு ரச விசேஷம் உண்டாக கடவது இறே
ஆக இது கீழில் திரு மொழிக்கும் இத் திரு மொழிக்கும் உண்டான விசேஷம் –

திருமலை ஆழ்வாருடைய வைபவத்தை விஸ்தரேண பேசி அனுபவித்து ப்ரீதர் ஆனார்
அவ்வளவிலே சர்வேஸ்வரன் திரு மலையிலே நிற்கிற நிலையிலும் காட்டிலும்
பள்ளியிலோதி வந்த தன் சிறுவன் ஆன பிரகலாதன் திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக
பிதாவானவன் சத்ருவாய்க் கொண்டு பஹூமுகமாக நலிய -நலிவு படுகிற ஆபத் தசையிலே
நிரூபதிக பிதாவான பந்தாசக்தியாலே -அடுத்ததோருருவாய்-என்கிறபடியே இரண்டு வடிவைச் சேர்த்து கொண்டு வந்து தோன்றி
பிரதிகூலனான ஹிரண்யனை நிரசித்து-பாலனான பிரகலாதனை ரஷித்து அருளின மகா குணம் தோன்ற
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை இவருக்கு பிரகாசிக்க-அத்தைக் காண்கையாலும் –
திருப்பல்லாண்டிலும்-வண்ண மாடத்திலும்-ஸ்ரீ செல்வ நம்பி யோட்டை சம்பந்தத்தை இட்டும் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமானது கொண்டும்
தாம் விரும்பி அருளிச் செய்த தேசம் ஆகையாலும் திருக் கோட்டியூரிலே திரு உள்ளம் சென்று
அங்கே எழுந்து அருளி நிற்கிறவன் படிகளை அனுபவிக்கிறவர்-அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே
அவன் கொடுத்த கரணங்களைக் கொண்டு அவனை அனுபவித்து வாழலாய் இருக்க
த்ரிவித கரணங்களாலும் அவனோடு ஓட்டற்று திரிகிற பாப காரிகளானவர்களை நிந்தித்தும்
ஆத்ம குண உபேதராய்- ஆசார்ய பிரேம யுக்தராய் – அவ் ஆசார்யன் உகக்கும் விஷயம் என்று திரிதந்தாகிலும் -என்கிறபடியே
அவன் பக்கலிலே ப்ரவணராய் அவனை அனுபவியா நின்று உள்ள மகாத்மாக்களை ஸ்லாகித்தும் சொல்லுகிறார் –
இத் திரு மொழியில்-4-4-

திரு மங்கை ஆழ்வாரும் பெரிய திரு மொழியில்
திருமலையில் எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுபவித்த -அநந்தரம் – திருக் கோட்டியூரில் எழுந்து அருளி நிற்கிற நிலையை இறே அனுபவித்தது –
பெரிய திரு மடலிலும் – மன்னனை மால் இரும் சோலை மணாளனை -என்று திருமலையில் நிற்கிற நிலையை அருளிச் செய்த அநந்தரம்
கொன்னவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் அன்ன வுருவின் அரியை -என்று திருக் கோட்டியூரில் நிற்கிற நிலையை இறே அருளிச் செய்தது –
அப்படியே இவரும் திருமலையில் எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுபவித்த அநந்தரம் –
திருக் கோட்டியூரில் எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுபவிக்கிறார்
இவர்கள் இருவரும் இறே-திருக் கோட்டியூர் விஷயமாக-ஒரொரு திரு மொழி அருளி செய்தவர்களும்-

மேல் நான்கு திரு மொழி அளவும் ஆச்சான் பிள்ளை வ்யாக்யனமாய் இருக்கும்
அது தான் பூரணமாக கிடைக்காமையாலே ஒரோ இடங்களில் ஒரு பாட்டுக்கோ – அரைப் பாட்டுக்கோ -ஓர் அடிக்கோ -அரை அடிக்கோ -கிடைத்த
வியாக்யான பந்திகளை -ஸ்ரீ ஸூக்தி கௌ ரவத்தாலே -ஸ்ரீ மணவாள மா முனிகள் சேர்த்து கொண்டு வ்யாக்யாநித்து அருளுகிறார்
என்று சம்ப்ரதாயார்த்தம் -பெரிய அரும்பத விளக்கம்-

கீழில் திரு மொழியில்-ஆதியான் அடியாரையும் -அடிமை இன்றித் திரிவாரையும் -என்று
சம்சாரிகள் பொல்லாங்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் -இறே சொல்லிற்று
சம்சாரிகளுக்கும் பகவத் சம்பந்தம் ஒத்து இருக்க -அவர்களை கழிக்கைக்கு அடி -சம்பந்த ஞானம் இல்லாமை -இறே
வணக்கொடு மாள்வது வலமே -என்று சரம சமயத்திலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்–இத் திரு மொழியில்-4-5-

இப்படி இதர விஷய சங்கம் அற்று -பகவத் ப்ரேம பூர்வகமாக அவன் திரு நாமங்களைப் பேசத் தக்க பரிபாகம் இல்லாதாரையும் –
ஒரு வழியால் அவன் திரு நாமத்தில் அன்வயித்து -உஜ்ஜீவிப்பிக வேணும் என்று திரு உள்ளம் பற்றி
த்ரஷ்ட பிரயோஜனங்களை நச்சி பெற்ற பிள்ளைக்கு ப்ராக்ருத விஷயங்களின் பேரை இடுபவர்களைக் குறித்து
நீங்கள் இப்படி ப்ராக்ருத விஷயங்களின் பேர் இட்டால் இம்மையில் நீங்கள் ஆசைப் படுகிற சூத்திர பிரயோஜனங்களும் தானும் சித்திப்பது பணி இல்லை –
மறுமைக்கு தானே ஒன்றுக்கும் உறுப்பன்று –ஆன பின்பு அத்தை விட்டு -பிஷையை புகுந்தாலும் ஜீவித்து தன் திரு நாமத்திலே அன்வயித்தாருடைய
சகல க்லேசங்களையும் சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை -நீங்கள் பெற்ற பிள்ளைக்கு இட்டு –
வாயார வாழ்த்தி ப்ரீதராய் இருங்கோள்
இவ்வளவே பற்றாசாக -அந்த பிள்ளை யினுடைய மாதா வானவள் –ஜநநீ க்ர்த்தார்த்தா -என்கிறபடியே நரகத்தில் புகாமல் உஜ்ஜீவித்து போம் என்று
ஒரு கால் போலே ஒன்பதின் கால் உபதேசித்து பகவன் நாமங்களே இடும்படியாக அவர்கள் நெஞ்சைத் தெளிவிக்கிறார் இத் திரு மொழி யில் –4-6-

பகவத் வைமுக்யாதி தோஷம் அடியாக தம்மாலே நிந்திதரான சம்சாரி சேதனரையும் விட மாட்டாத -தம்முடைய பரம கிருபையாலே –
அவர்களைத் திருத்தி யாகிலும் -உஜ்ஜீவிப்பிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி –
அவர்கள் திருந்துகைக்கு உறுப்பான ஹிதத்தை உபதேசித்து அருளினார் -கீழ் இரண்டு திரு மொழி யாலே –
அது செய்து தலைக் கட்டின அநந்தரம் – முன்பு திரு மலை -திருக் கோட்டியூரில் – அனுபவித்தால் போல் இன்னமும்
அவன் உகந்து அருளின நிலங்களிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுபவிக்க வேணும் -என்னும் ஆசை கிளர்ந்து
ஸ்ரீ வடதிசை மதுரை சாளக்க்ராமம்-இத்யாதிப்படியே தனக்கு அபிமதமான தேசங்களில் பல வற்றிலும் உள்ள விருப்பத்தை எல்லாவற்றையும்
ஒரு மடை கொள்ள பண்ண வர்த்திக்கிற ஸ்தலமாய் திரு உலகு அளந்து அருளின போது-தன் திருவடிகளில் பிறந்த ஏற்றத்தாலே
சகல லோக பாவன பூதையாய் கொண்டு சர்வ காலமும் ப்ரவஹியா நிற்கிற கங்கையினுடைய கரையிலே உள்ளதான –
திருக் கண்டங்கடி நகரிலே
அநேக அவதார குண சேஷ்டிதங்கள்-எல்லாம் பிரகாசிக்கும்படி எழுந்து அருளி நிற்கிற – புருஷோத்தம சப்த வாச்யமான சர்வேஸ்வரனை
அனுபவியா நின்று கொண்டு அவனிலும் காட்டிலும் அவன் வர்த்திக்கிற தேசமே ப்ராப்யத்தில் சரம அவதி ஆகையாலே
அத் தேசத்தின் உடைய வைபவத்தையும் –பஹூ முகமாக பேசி அனுபவிக்கிறார் –இத் திருமொழியில்-4-7-

அவதாரிகை-மீண்டும் தொகுத்து அருளிச் செய்கிறார் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -என்கிறபடியே
திரு அவதாரமே தொடங்கி-ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்கள் எல்லாம் முற்றூட்டாக அனுபவித்து கொண்டு வந்த இவர் –
என்னாதன் தேவியிலே -அந்த ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்கள் உடன் ஸ்ரீ ராம அவதார குண சேஷ்டிதங்களையும் அனுபவிக்கையில்
உண்டான ஆசையாலே இரண்டையும் ஒன்றுக்கு ஓன்று எதிர் எதிராக பேசி நின்று அனுபவித்து -பின்பு
கதிர் ஆயிரம் இரவியிலே -ஸ்ரீ ராம ஸ்ரீகிருஷ்ணா அவதார குண சேஷ்டிதங்களையும் அவதாராந்தர குண சேஷ்டிதங்களையும் கலப்பிலே
அனுபவித்த அநந்தரம் – இவ் அவதார குண சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி உகந்து அருளின நிலங்களிலே எழுந்து அருளி நிற்கிற
நிலைகளை அனுபவிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து
ப்ரதமம்-ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்கள் பிரகாசிக்கும்படி திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற அழகரையும் –
அவரிலும் காட்டிலும் ப்ராப்யத்தில் சரம அவதியான திருமலை ஆழ்வாரையும் அனுபவித்து -பின்பு
திருக் கோட்டியூரில் நிற்கிற நிலையையும் அனுபவிக்கையில் ப்ரவர்தரான இவர்
அங்கே எழுந்து அருளி நிற்கிற நிலையில் தங்களுக்கு ஆதரணீயம் இன்றிக்கே அந்ய பரராய் திரிகிற சம்சாரிகளை நிந்தித்தும்
அந் நிலையின் வாசி அறிந்து ப்ரவணராய் அனுபவிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்லாகித்தும்-இப்படி இருந்துள்ள செருக்கோடே கூடி அனுபவித்து –
தாம் நிந்தித்தவர்களையும் விட மாட்டாத பரம கிருபையால் -அவர்களை குறித்து இரண்டு திரு மொழி யாலே பரோ உபதேசத்தை பண்ணி
மீளவும் உகந்து அருளின நிலங்களிலே நிற்கிற நிலையை அனுபவிக்கையில் உள்ள ஆசையாலே -ஸ்ரீ வட திசை மதுரை – இத்யாதிப் படியே
அநேக தேசத்தில் உண்டான விருப்பத்தை எல்லாம் பண்ணிக் கொண்டு திருக் கண்டம் கடி நகரிலே அவதார குண சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி
எழுந்து அருளி நிற்கிற படியையும் அத்தேச வைபவம் தன்னையும் – அனுபவித்து இனியராய் நின்றார் -கீழ்-

அவை எல்லாம் போல் இன்றிக்கே –
வடிவுடை வானோர் தலைவனே –என்றும் – கடலிடம் கொண்ட கடல் வண்ணா -என்றும் –கட்கிலீ -என்றும் – காகுத்தா கண்ணனே -என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதிகளில் உண்டான குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும் படி வர்த்திக்கிற ஸ்தலமாய் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் -இத்யாதிப் படியே
உபய விபூதியும் தனிக் கோல் செலுத்துகிறதும் – இங்கே இருந்தே என்று தோற்றும்படி இருப்பதாய் –
மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் -என்றும்
பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவன் -திரு மால் இரும் சோலை நின்றான் -என்றும்
பயின்றது அரங்கம் திருக்கோட்டி –தேனார் திருவரங்கம் தென் கோட்டி- என்றும் சொல்லுகிறபடி முன்பு அனுபவித்த
திருமலை திருக் கோட்டியூரில் நிலைகளுக்கு வேர் பற்றான இடமுமாய் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் பகல் இருக்கை -என்னும்படி –
ஆஸ்ரித ரஷனத்துக்கு ஏகாந்த இடம் என்று நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலமான திருவரங்க திருப்பதியிலே
வன் பெரு வானகம் -இத்யாதிப்படியே -சகல தேசத்தில் உள்ளாறும் உஜ்ஜீவிக்கும்படியாகவும்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற -என்றும்
யாவரும் வந்து அடி வணங்க -என்றும்- சொல்லுகிறபடி சகல தேசத்திலும் ருசி பிறந்தவர்கள் எல்லாரும் வந்து அனுபவிக்கும் படியாகவும்
ஆஸ்ரயிக்கும் படியாகவும் அன்போடு தென் திசை நோக்கி -என்கிறபடியே
மன்னுடை விபீடணருக்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்து –
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற -என்கிறபடி
ஸ்ரீயபதி யாகையால் வந்த பெருமை தோற்ற திரு உள்ளத்தில் உகப்புடனே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கலிலே
விசேஷித்து ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்களும்-ஸ்ரீ ராம அவதார குண சேஷ்டிதங்களும் ஒரு மடை கொள்ள பிரகாசிக்கிற படிகளை
திருவரங்கம் அதனைச் சென்று -அனுபவியா நின்று கொண்டு அவர் தம்மிலும் காட்டிலும் அவர் விரும்பி கண் வளர்ந்து அருளுகிற தேசமே
பரம ப்ராப்யம் ஆகையாலே அத் தேசத்தினுடைய வைபவத்தையும் பஹுமுகமாக பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திரு மொழியில் —4-8-

கீழில் திரு மொழியில் -ஸ்ரீ கிருஷ்ண அவதார குண சேஷ்டிதங்களும் ஸ்ரீ ராம அவதார குண சேஷ்டிதங்களும் அவதாராந்தர குண சேஷ்டிதங்களும் –
எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கலிலே பிரகாசிக்கையாலே அவற்றை தனித் தனியே பேசி அனுபவியா நின்று கொண்டு
தத் விஷயத்திலும் ததீய விஷயமே உத்தேச்யம் என்னும் பிரதிபத்தியாலே
அவர் விரும்பி வர்த்திக்கிற திவ்ய தேசமான திருவரங்கம் திருப்பதியினுடைய வைபவத்தை பஹுமுகமாக பேசி அனுபவித்தார்
இப்படி அனுபவித்து இருக்கச் செய்தேயும் -இவ்வளவில் தமக்கு ப்ர்யாப்தி பிறவாமையாலே மீளவும் தத் உபய விஷய அனுபவ தத் பரராய்-
முன்பு அவதரித்த பிரகாரம் அன்றிக்கே முக பேதேன ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய சேஷ்டித ரச விசேஷங்களை அத்ய ஆதரேண அனுபவித்து
வித்தகராய் நின்று கொண்டு தத் சம்பந்தி தயா பரம ப்ராப்யமான திருவரங்கம் திருப்பதியினுடைய வைபவ விசேஷங்களையும்
முன்பு உக்தமான பிரகாரம் அன்றிக்கே பிரகாராந்தரேண பேசி அனுபவித்து ப்ரீதராய் செல்லுகிறார் இத் திருமொழியில்–4-9-

கீழ் இரண்டு திருமொழியில் -பெரிய பெருமாளுடைய திவ்ய வைபவத்தையும் –
பெரிய கோயிலான திருவரங்க திருப்பதியினுடைய வைபவத்தையும் -பெரிய அபிநிவேசத்தோடே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆனார் –

தன்னடியார் -இத்யாதிலே சொன்னபடியே புருஷகார பூதையான பிராட்டி தானே சிதைகுரைக்கிலும் –
அவளோடு மறுதலித்து-ஆஸ்ரித ரஷணம் பண்ணும் -வாத்சல்ய அதிசய யுக்தராய் –
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலதூடேற்றி -இத்யாதிப் படியே
அநந்ய ப்ரயோஜனராய் -திருவடிகளை ஆஸ்ரயித்தவித்தவர்களை அர்ச்சிராதி மார்க்கத்திலே
அபுநராவர்த்தி லஷணமான பரம பதத்திலே கொடு பொய் -அருள் கொடுத்திட்டு அடிமை கொள்ளும் –
ஸ்வபாவரான பெரிய பெருமாளுடைய திவ்ய குணத்தை அனுசந்தித்தவர் ஆகையாலே –
அவர்க்கும் திருந்தின சேதனரை இங்கு நின்றும் கொடுபோய் அடிமை கொள்ளுகை திரு உள்ளம் ஆகையாலே –
நாம் இனி அங்கே போய் அடிமை செய்ய வேணும் -என்னும் அபேஷை பிறந்து -அதற்க்கு தேக சம்பந்தம் அற்று போக வேண்டும் படியை அனுசந்தித்து –
இந்த பிரசங்கத்திலே சரீர விஸ்லேஷ சமயத்தில் -சம்சாரிகள் ஆனவர்கள் எல்லாம் யமபடரால் வரும் நலிவை நினைத்து –
அது நமக்கு வாராது ஒழியும் போது சர்வேஸ்வரன் ஆனவன் தானே போக்கி தந்து அருள வேணும் -என்று அத்யவசித்து
அது தன்னை ஏற்கவே -அவன் திருவடிகளில் விழுந்து அர்த்தித்து செய்வித்துக் கொள்வோம் -என்று ஒருப்பட்டு –
சரம தசையில் கர்ம அனுகுணமாக யம படர் வந்து நலியும்போது -அந்த கிலேசத்தாலே
தேவரீருடைய திருவடிகளை ஒருபடியாலும் நினைக்கவும் ஓன்று சொல்லவும் ஷமன் அல்லேன் என்று அத்தை பற்ற –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ஆன பின்பு -அக்காலத்தில் என்னை அவர்கள் நலியாதபடி தேவரீர் ரஷித்து அருள வேணும் -என்று
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புக்கு -விண்ணப்பம் செய்து கொள்கிறார் -இத் திரு மொழியில் –4-10-

இது தான் இருந்த படியேன் –
நகலுபாகவதாய மவிஷயம் கச்சந்தி -என்று சாஸ்திரம் சொல்லுகையாலும்
வேண்டாமை நமன் தமர் என்றமரை வினவப் பெறுவார் அலர்-என்கிற பகவத் யுக்தியாலும்
உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என்று அபியுக்தர் சொல்லுகையாலும்
பரிஹர மதுசூதன ப்ரபன்னான்-என்று எமன் தானே சொல்லுகையாலும் –
பாகவதர் ஆனவர்களுக்கு யம வச்யத்தை வரக் கூடாது என்னும் இடம் பிரசித்தமாய் இருக்க –
சரம தசையில் யம படர் வந்து நலிவர்கள் என்று பயப்பட்டு திருவடிகளில் சரணம் புகுந்து -அத்தசையிலே என்னை ரஷித்து அருள வேணும் -என்று
இவர் அர்திக்கிற இது -கீழ் சொன்ன வசனங்களோடு விருத்தம் அன்றோ என்னில் –
ஆழ்வார்கள் தாங்கள் -மயர்வற மதிநலம் அருளப் பெற்று -அவனை உள்ள படி அறிந்து – அனுபவியா நிற்கச் செய்தே –
ஒரோ தசைகளில் வந்தவாறே -அநாதிகாலம் சமசரண ஹேதுவாய் கொண்டு – போந்த கர்ம பலத்தையும் –
அந்த கர்ம அனுகுணமாகவே நிர்வகித்துக் கொண்டு போந்தவனாய்-பந்த மோஷ பய நிர்வாகனாய் இருக்கிற ஈஸ்வரனுடைய
ஸ்வா தந்த்ர்ய பலத்தையும் அனுசந்தித்து – நிரந்குச ஸ்வ தந்த்ரனானவன் இன்னம் நம்மை சம்ஸ்ரிப்பிக்கில் செய்வது என்-என்று
மக்கள் தோற்ற குழி தோற்றுவிப்பாய் கொல் -என்றும்-
இன்னம் ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்றும் –
வைத்த சிந்தை வாங்குவித்து -நீங்குவிக்க நீ இன்னம் மெய்த்தனன் வல்லை –உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே -என்றும்
அவனை குறித்து விண்ணப்பம் செய்யும் பிரகாரத்திலே –
இவரும்
ஈஸ்வர ஸ்வா தந்த்ரத்தையும் –அநாதி காலம் அவன் திருவடிகளை கிட்டாதபடி அகலடித்த கர்ம பலத்தையும் அனுசந்தித்து –
ஸ்வ தந்த்ரனான நம்முடைய கர்ம அனுகுணமாக விட்டு உபேஷித்து இருக்குமாகில்
முன்பு போலே யமபடரால் நலிவு நமக்கு வரில் செய்வது என் -என்று அஞ்சி அவன் திருவடிகளில் சரணம் புகுந்து
அத்தசையில் என்னை ரஷித்து அருள வேணும் -என்று அர்த்திக்கிறார் –
ஆகையால் -இந்த பயமும் பிரார்த்தனையும் இவருடைய அதிசங்கா மூலமான கலக்கம் அடியாக வந்தது ஆகையாலே –
கீழ் சொன்ன வசனங்களோடு விரோதம் இல்லை

கீழில் திரு மொழியில் –சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் -என்று திரு நாமத்தின் போக்யதையை அனுபவித்து
இத்தை அநாதி காலம் இழைக்கைக்கு அடி என் -என்று நிரூபித்தவாறே -அதுக்கு ஹேது
இதர விஷயங்களிலே -ஆவியே அமுதே -என்று திரிகையாலே இழந்தது -என்று வெறுத்து –
இப்போது–5-1-
ஆவியை அரங்க மாலை -என்றும் –
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் -என்றும் தப்பைப் பொறுத்து அருள வேணும் என்று
பெரிய பெருமாள் போக்யதையில் -தம்முடைய கரண த்ரயமும் மேல் விழுகிற படியைச் சொல்லுகிறது –

கீழே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்று அந்திம காலத்திலே யமபடர் நலியும் போது -ஸ்தோத்ரம் பண்ண ஒண்ணாது என்று –
ஏற்கனவே சொல்லி வைத்தேன் -என்ற இவர் –சழக்கு நாக்கோடு புன்கவி சொன்னேன் -என்று தம்முடைய அயோக்தையை அனுசந்தித்து அகல –
அவர் கரணங்கள் மேல் விழுந்த படி -கண்டு ஷமை கொள்ள -இவர் தோஷம் பார்த்து ஷமை கொள்ள வேண்டுவது –
நாம் கடக்க நிற்கில் அன்றோ -என்று தான் மேல் விழுந்து வந்து புகுந்து கிடந்த படி -சொல்கிறார்-இத் திருமொழியில் –5-2-

கீழில் திரு மொழியிலே
திரு மால் இரும் சோலை மலையிலும் – சூழ் விசும்பு அணி முகிலும் -சொன்ன அர்த்தத்தை சொல்லிற்று –
இத் திரு மொழியிலே –5-3-
முனியே நான்முகனில் ஒன்பது பாட்டில் சொல்லுகிற அர்த்தத்தை சொல்லுகிறது –
சென்னி யோங்கில் -பத்தாம் பாட்டில் அர்த்தத்தை சொல்லும் –
பரவுகின்றான் விட்டு சித்தன் -என்று -சத்தைக்கும் போகத்துக்கும் அன்றிக்கே -ரஷைக்கும் உறுப்பாக சொல்லுகை பலம் என்றீர் –
அரவத் தமளியினோடும் -என்று நாம் உம்முடைய உடம்பிலே புகுந்து -அனுபவித்தோம் ஆகில்
இனிப் போக அமையாதோ என்ன -இனி போக ஒட்டோம் என்கிறார்
கீழில் திரு மொழியில் –
நெய் குடத்தை பற்றி -என்று தொடங்கி-நோய்காள் -என்று அநிஷ்ட நிவ்ருதியை சொல்லி –
இதில் இஷ்டப் ப்ராப்தியை பண்ணி தர வேணும் என்று திரு ஆணை இட்டுத் தடுக்கிறார் -என்றுமாம் –

பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்கள் ஆன இடங்களிலே எழுந்து அருளி நின்றது –
சேதனரை திருத்துகைக்கும் -திருந்தினாரை அடிமை கொள்ளுகைக்கும் இறே –
அது பூரணமாக காணலாவது -திருமலையில் இழுந்து அருளி நிற்கிற நிலை யிலே இறே –
பிரதம ஸூஹ்ருதமும் இவர்க்குத் தானே இறே
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
என்றால் போலே -வெற்பு என்று வேம்கடம் பாடினேன் வீடாகி நிற்கின்றேன் -என்று
இவர் அஹ்ர்தயமாக சொல்லிலும் சஹ்ர்தயமாக சொன்னார் என்று இறே அவன் புகுந்தது –
வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ்விரண்டும் -இத்யாதி –
ஆகையால் ஈஸ்வரன்
ஸௌஹார்த்தம் முதலான ஆத்ம குணங்களை பிறப்பித்து
ஆசார்யனோடே சேர்த்து –
விரோதியில் அருசியையும்
ப்ராப்யத்தில் ருசியையும் -பிறப்பித்து -கார்யம் செய்யும் –
ஆழ்வார்களுக்கு பிரதம காலத்திலேயே இவை அத்தனையும் பிறப்பித்து கார்யம் செய்யும் –
இவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே இறே –
நமக்கு சரீர அவசாநத்திலே இவை இத்தனையும் பிறப்பித்து- கார்யம் செய்யும் –
எல்லார்க்கும் பிறக்கும் க்ரமம் ஒழிய பிறப்பியான்
ஊரவர்-இத்யாதி
ஊரவர் -நித்ய சூரிகள்
கவ்வை எரு இட்டு -அவர்கள் கவ்வி மேல் விழுந்து அனுபவிக்கிற அனுபவம் ஆகிற எருவை இட்டு
ஆசார்ய உபதேசம் ஆகிற நீரைத் தேக்கி –
சங்கமாகிற நெல்லை வித்தி இறே பிறப்பிப்பது
இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகபுக்கு மேல் இனி வேறு ஒரு பேறும் இல்லை என்று இவர் இருக்க –
இவர் கார்யத்திலே நாம் முதலடி இட்டிலோம் -என்று அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு –
விரோதிகள் அடைய போச்சுதாகில் – அபேஷிதங்கள் பெற வேண்டும் அம்சங்கள் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று அவன் பதற்றத்தை அமைக்கிறார் –5-4-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: