Archive for February, 2019

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ உய்யக் கொண்டார் / ஸ்ரீ மணக்கால் நம்பி /ஸ்ரீ யமுனைத் துறைவர் வைபவங்கள் –

February 13, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ உய்யக் கொண்டார் / ஸ்ரீ மணக்கால் நம்பி வைபவங்கள் –

அநந்தரம் ஸ்ரீ உய்யக் கொண்டாரும் ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகளையும் கூட்டிக் கொண்டு
தர்சனார்த்தங்களையும் -திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்து கொண்டு இருக்கும் காலத்தில்
இவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள்
ஸ்ரீ மணக்கால் நம்பி –ஸ்ரீ திருவல்லிக் கேணி பாண் பெருமாள் அரையர் -ஸ்ரீ செட்டைப் பூசிச் சண்டலங்காரர் ( ஸ்ரீ செட்டலூர் சசெண்டலங்காரர் )-
ஸ்ரீ புண்டரீக தாசர் -ஸ்ரீ உலகு பெருமாள் நங்கை-என்கிற இவ் வைகர்கள்
இவர்களில் ஸ்ரீ மணக்கால் நம்பி பன்னிரண்டு சம்வத்சரம் ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ உய்யக் கொண்டார் திருவடிகளிலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்ற இளைய பெருமாளை போலே சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு இருக்கையில்

ஸ்ரீ உய்யக் கொண்டார் திருத் தேவிகள் ஆகிய ஸ்ரீ ஆண்டாள் திரு நாட்டுக்கு எழுந்து அருள திரு மாளிகைக் கைங்கர்யம் எல்லாம்
தமக்கே பரமாய் நடத்திக் கொண்டு போகா நிற்கச் செய்தே ஸ்ரீ உய்யக் கொண்டார் திருப் பெண் பிள்ளைகள் இருவரையும் நீராட்டி
அழைத்துக் கொண்டு வருகிற வழியில் வாய்க்கால் சேறாய் இருக்கக் கண்டு அவர்கள் திகைத்து நிற்க
தாம் படியாய்க் கிடந்து அவர்களைத் தம் முதுகில் அடியிட்டு எழுந்து அருளுவித்துக் கொண்டு போக
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் இச் செய்தியைக் கேட்டருளி இவர் இப்படிச் செய்வதே என்று போர ப்ரீதராய் –
இவர் உத்தம அங்கத்தைத் தம் திருவடித் தாமரைகளாலே அலங்கரித்து பொன்னடிப் பூ முடி சூடி -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என்
என்று கேட்டு அருள ஸ்ரீ நம்பியும் -உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -என்று
தேவரீர் திருவடிகளில் சேவையே வேண்டுவது என்ன ஸ்ரீ உய்யக் கொண்டாரும் உகந்து அந்த உகப்பின் மிகுதியால்
அதீதாநா கத ஜ்ஞான மாத்ம தத்வ பிரகாசம் -சர்வ வேதார்த்த விஞ்ஞானம் சர்வ சாஸ்த்ரார்த்த தர்சனம் –
மாந சம்வாசிகம் பாபம் காயிகந்த த்ரிதாக்ருதம் த்வய ஸ்மரண மாத்ரேண நா சம்யாதி ஸூ நிச்சிதம் –என்கிற
வைபவத்தை உடைய பரமார்த்தமான த்வயத்தையே மீளவும் பிரசாதித்து அருளினார்

பின்பு சில நாள் கழிந்தவாறே ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
இனி தர்சன ப்ரவர்த்தகராவார் யார் என்று ஸ்ரீ மணக்கால் நம்பி விண்ணப்பம் செய்ய அவரும் இங்குள்ள முதலிகளையும் கூட்டிக் கொண்டு
நீரே தர்சனம் நிர்வஹிக்கக் கடவீர் -பின்பு சொட்டைக் குலத்தினரான ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திரு வயிற்றிலே
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு ஒரு திரு பேரனார் திரு அவதரிப்பர் –
அவருக்கு யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்துவித்துத் தர்சன ப்ரவர்த்தகர் ஆகும்படி
சகல தர்சன ரஹஸ்யார்த்த விசேஷங்களையும் உபதேசியும் –
அவர் தர்சன ப்ரவர்த்தகராவார் -இந்தக் கைங்கர்யத்தை ஸ்ரீ மன் நாதமுனிகள் தம் அந்திம தசையில் அடியேனுக்கு நியமித்து அருளினார் –
நான் செய்யப் பெற்றிலேன் -நீர் அவரை அனுவர்த்தித்தாகிலும் ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும் என்று நியமித்
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -இத்தால் ஆச்சார்ய ஆஞ்ஞா பரிபாலனம் அவசிய கரணீயம் என்றபடி –

ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நாட்டுக்கு எழுந்து அருளின படியைக் கண்டு ஸ்ரீ மணக்கால் நம்பி உள்ளிட்ட முதலிகள் எல்லாரும்
மிகவும் சோகார்த்தராய் ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்க் கோஷித்துக் கொண்டு விழுந்து போரக் கிலேசித்துத்
தங்களிலே தேறி நிற்க ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ உய்யக் கொண்டாரை ப்ரஹ்ம மேதத்தால் சம்ஸ்ஹரித்துப் பள்ளிப் படுத்து
மேலும் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் எல்லாம் செய்து அருளினார்

ஸ்ரீ உய்யக் கொண்டார் திரு நக்ஷத்ரம் சித்திரையில் கார்த்திகை
அவர் தனியன் -நம பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீ பாத பங்கஜே ந்யஸ்த சர்வ பராயாஸ் மத் குல நாதாயா தீ மதே

————————————-

ஸ்ரீ யமுனைத் துறைவர் வைபவம்–

அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பி முதலிகளைக் கூட்டிக் கொண்டு தர்சனம் நிர்வகித்து அருளா நிற்கச் செய்தே
பின்பு சில காலம் கழிந்த வாறே ஸ்ரீ ஈஸ்வர முனிகளுக்கு ஆடி மாசத்தில் உத்தராட திரு நக்ஷத்ரத்திலே
ஒரு திருக் குமாரர் திரு அவதரித்து அருள அது கேட்டு அதி ஸந்துஷ்டராய் ஸ்ரீ நம்பியும் அங்கு ஏற வந்து அவருக்கு
ஜாத கர்மண்ய லாபேது (ஜாத கர்மண்ய வாப்தேது )விஷ்ணோஸ் சக்ரஸ்ய தாரணம் சவ்ள உபநயநே சாபி தன் மந்த்ர
அத்யயநேபிவா -விதிநா வைஷ்ணவஞ் சக்ரந் தாரயித்வாத் விஜோத்தம -என்றும்
வைஷ்ணவைஸ் சைவ ஸூக்தைஸ் ச குர்யாத் சம்மார்ஜனம் சிசோ –தஸ்ய தக்ஷிண கர்ணேது ஜபேதஷ்டாக்ஷரந்
த்வயம் மூர்த்நி ஹஸ்தம் விநிஷிப்ய ஜ்பேச் சத்வா தசாக்ஷரம் நாம குர்யாத் ததபஸ் ஸாத் வைஷ்ணவம் பாப நாசனம் -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ ஈஸ்வர முனிகளைக் கொண்டு ஜாத கர்மத்தையும் செய்வித்து
பத்து நாளும் கடந்த இரண்டா நாள் ஸ்ரீ மன் நாத முனிகள் நியமன பிரகாரத்தில் திரு இலச்சினை முன்னாக
ஸ்ரீ யமுனைத் துறைவன் என்ற திரு நாமத்தையும் சாத்தி ப்ரீதராய் அருளினார்

பின்பு ஸ்ரீ ஈஸ்வர முனிகளும் ஸ்ரீ யமுனைத் துறைவருக்கு அன்ன ப்ராசன சவ்ள உபநயநாதி களையும் தத் தத் காலங்களிலே செய்து
அருளி அத்யயனம் பண்ணுவிக்கிற காலத்தில் இரண்டாம் சந்தை சொல்லும் போது இவர் ஸஹ அத்தியாயிகளைப் பார்த்து
ஓதின இடத்தையே ஓதுகிறீர்கள் என்று அருளிச் செய்து சந்தை தவிர்ந்து இருப்பர் -ஓதப் போகிறீர் என்றால்
ஓதின இடத்தையே ஓதா நின்றார்கள் என்பர் – இப்படி அதி மேதாவியாய் இருக்கிற இவர் அங்க உபாங்கங்களோடே
பத க்ரம ஸஹிதமாக அத்யயனம் பண்ணித் திருக் கல்யாணமும் செய்து அருளினார்
பின்பு ஸ்ரீ ஈஸ்வர முனிகளும் திரு நாட்டுக்கு எழுந்து அருள – ஸ்ரீ யமுனைத் துறைவரும் அவரை ப்ரஹமேதத்தால் சமஸ்கரித்துப்
பள்ளிப் படுத்தி செய்ய வேண்டிய க்ருத்யங்களையும் செய்து அருளினார் –

அநந்தரம் யமுனைத் துறைவரும் மஹா பாஷ்ய பட்டருடனே ஸாஸ்த்ர அப்யாஸம் பண்ணுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தில்
ராஜ புரோஹிதனாய்ப் பெரிய வித்வானான ஆக்கி ஆழ்வானுக்கு அந்தத் தேசத்தில் வித்வான்கள் எல்லாரும்
தச பந்தம் இறுத்துப் போருகையாலே மஹா பாஷ்ய பட்டர் பக்கலிலும் தச பந்தத்துக்கு உத்தரவு வர அத்தைப் பார்த்து
மஹா பாஷ்ய பட்டரும் முசித்துக் கிடக்க ஸ்ரீ யமுனைத் துறைவர் அவரை நீர் இப்படி முசித்துக் கிடக்கிறது என் என்று கேட்க
அவரும் இச் செய்தியை இவருக்குச் சொல்ல அத்தைக் கேட்டருளி இவரும் வந்த தரவைக் கிழித்து விட –
ஆக்கி ஆழ்வானும் இத்தைக் கேட்டு வெறும் கவியோ தந்த்ர பாரகனோ-என்று கேட்டு வரவிட ஸ்ரீ யமுனைத் துறைவரும்
நவயம் கவயஸ்து கேவலம் நவயம் கேவல தந்த்ர பாரகா அபி துப்ர திவாதி வாரண பிரகடாடோப விபாட ந ஷமா -என்ற
இஸ் ஸ்லோகத்தை அருளிச் செய்து எழுதி போக விட்டருள ஆக்கி ஆழ்வானும் அத்தை வாசித்து இப்படி ஒரு வித்வான் உண்டோ என்று
ஆச்சர்யப்பட்டு இத்தை ராஜாவுக்கு அறிவிக்க ராஜாவும் ஸ்ரீ யமுனைத்துறைவரை சடக்கென வருவது என்று ஸ்வ சாசனம் வரவிட
அந்த ராஜ சாசனத்தையும் கிழித்து விட இச் செய்தியை ராஜாவும் கேட்டு -ஆகில் இவர் சாமான்யர் அல்லராய் இருந்தது என்று
இவருக்கு தண்டிகையும் சிவிகையாரும் கொடுத்து வரவிட -இவரும் அந்த கனக தண்டிகையிலே ராஜ ஸ்தானத்து ஏற எழுந்து அருளி

ஆசை லாத த்ரி கன்யா சரணகி சலய ந்யாஸ தந்யோப கண்டா தாரஷோ நீத சீதா முக கமல ச முல்லா சஹே தோஸ் ச சேதோ
ஆச பிராஸ்ய பிரதீஸ்ய ஷிதி தர யுகளா தர்க்க சந்த்ராவ தம்சான் மீமாம்ஸா ஸாஸ்த்ர யுஸ்ம ஸ்ரம விமல
(ஸ்ரம முதித -என்றும் ஸ்ரமம் ருதித-என்றும் பாட பேதங்கள் ) மநாம் ருக்யதாம் மாத்ரு சோ அந்ய-
என்கிற ஸ்லோகத்தில் எழுதிப் போக விட்டருள -ஆக்கி ஆழ்வானும் இத்தைக் கண்டு மிகவும் குபிதனாய்-
இவருடனே நான் தர்க்கிக்கக் கடவேன் என்ன ராஜாவும் ஸ்ரீ யமுனைத் துறைவரைப் பார்த்து இவருடனே தர்க்கியும் என்ன
ஸ்ரீ யமுனைத்துறைவரும் ராஜாவைக் குறித்து நானும் இவரும் தர்க்கித்தால் வெற்றியும் தோல்வியும் உங்களுக்குத் தெரியாது –
நாங்கள் இருவரும் தோற்றோம் என்றும் சொல்லுவது இல்லை -ஆகையால் ஜெய அபஜெயம் அறியும் படிக்கு மத்யஸ்தரான
வித்வான்களை அழைப்பிக்க வேணும் என்ன ராஜாவும் அப்படியேயாம் என்று வித்வான்களை அழைப்பித்துக் கொண்டு
வித்யா ஸ்தான மண்டபத்திலே தன் மஹிஷியையும் கூட்டிக் கொண்டு இருக்க ராஜ மஹிஷியும் ராஜாவுடன்
ஸ்ரீ யமுனைத்துறைவரைக் காட்டி -இவர் தோலார்–தோற்றார் ஆகில் நான் நாய்க்கு எரித்திடக் கடவேன் -என்ன
ராஜாவும் தன் மஹிஷியுடன் -ஆக்கியாழ்வான் தோற்றானாகில் இவர்க்கு அர்த்த ராஜ்யம் தரக் கடவேன் -என்ன –

அவ்வளவிலே ஆக்கி யாழ்வானும் ஸ்ரீ யமுனைத் துறைவரைப் பார்த்து -லௌகிகங்களிலே நீர் அன்று என்றத்தை
நான் ஆம் என்னக் கடவேன் -ஆம் என்றத்தை அன்று என்னக் கடவேன் -வென்றவன் தோற்றவன் தலையிலே தாடனம் பண்ணக் கடவேன் -என்ன
ஸ்ரீ யமுனைத் துறைவரும் அவனைப் பார்த்து
த்வன் மாதா ந வந்த்யா ராஜா ஸார்வ பவ்ம ராஜ பத்நீ பதிவிரதா -என்று இப்படி லௌகிகத்தில் மூன்று வார்த்தை அருளிச் செய்ய
ஆக்கி ஆழ்வானும் நிருத்தனாய் இருந்தான் -பின்பு சாஸ்திரத்தில் புகுந்தவாறே
உத்தமம் மத்யமம் அதமம் -என்று மூன்று -இதில் மூன்று வார்த்தையிலே யாதல் -ஐந்து வார்த்தையிலே யாதல் -ஏழு வார்த்தையிலே யாதல் –
ஜெயித்தாயாகில் உன்னது ஜெயம் -என்று ஸ்ரீ யமுனைத்துறைவர் ப்ரதிஜ்ஜை பண்ணி அருள
அவனும் மூன்று வார்த்தையிலும் ஐந்து வார்த்தையிலும் ஏழு வார்த்தையிலும் முழுக்கத் தோற்றான் –
வென்றவன் தோற்றவன் தலையிலே தாடனம் பண்ணக் கடவன் என்று முன்பே ப்ரதிஜ்ஜை பண்ணின அதுக்கு –
நீ ராஜ புரோஹிதனுமாய் வாயோ வ்ருத்தனுமாகையாலே நான் அது செய்யேன் என்று ஸ்ரீ யமுனைத் துறைவர் அருளிச் செய்ய –
இத்தைக் கேட்டு இருந்த வித்வான்கள் எல்லாரும் சந்தோஷித்து இவரை ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொண்டு வர
ராஜ மஹிஷியும் -என்னை ஆளவந்தீரோ -என்று ஸ்ரீ யமுனைத்துறைவரை எடுத்து அணைத்துக் கொண்டு
தன் பர்த்தாவுடன் மணி மாட மாளிகைக்கு உள்ளே புகுந்தாள்-ராஜாவும் இவர்க்கு அர்த்த ராஜ்யம் கொடுத்து
இவர் தேவிகளையும் அழைப்பிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் பத்நீ ஸஹிதராய்க் கொண்டு ராஜ போகத்தில் ஸூ கமே எழுந்து அருளி இருந்தார் –

அநந்தரம் ஸ்ரீ மணக்கால் நம்பியும் இது கேட்டுக் கொண்டைக் கோல் கொண்டு கூத்தாடி அருளி ஸ்ரீ ஆளவந்தாரைக் காண வேணும்
என்று போர ஆசையோடு அங்கு ஏற எழுந்து அருள -அவ்விடம் ராஜபதமாய் கட்டும் காவலுமாய் இருக்கையாலே
ஸ்ரீ ஆளவந்தாரைக் காணப் போகாமல் திரு மடைப் பள்ளியிலே புகுந்து அவருக்கு திருப் போனகம் சமைக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து -ஸ்ரீ ஆளவந்தார் விரும்பி அமுது செய்யும் கறி அமுது என் என்று கேட்டருள –
அவர்கள் தூ துளை -என்று சொல்ல
ஸ்ரீ நம்பியும் அன்று முதல் ஆறு மாசம் மடைப்பள்ளிக்கு தூதுளை இட்டு நடத்தி அருளினார் –
இப்படி நடத்தின இடத்திலும் ஒரு விசாரம் அற்று இருக்கையாலே இவரும் முசித்து நாலு நாள் தவிர்ந்து இருக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் அமுது செய்யும் போது நாலு நாளாக தூதுளை இன்றிக்கே இருப்பான் என் என்று தளிகைக்கு செய்கிறவர்களை
கேட்டு அருள -அவர்களும் ஒரு வ்ருத்த ப்ராஹ்மணர் ஆறு மாசம் உண்டு நாள் தோறும் நடத்திப் போருகிறது –
நாலு மூன்று நாள் உண்டு தவிர்ந்து என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஆளவந்தாரும் கேட்டருளி விஸ்மயப்பட்டு
இனி அவர் வந்தவாறே நமக்கு அறிவியுங்கோள் என்று அருளிச் செய்ய –

மற்றை நாள் ஸ்ரீ நம்பியும் இன்னமும் பார்ப்போம் என்று தூதுளை கொண்டு எழுந்து அருளினவாறே அவர்களும்
ஸ்ரீ ஆளவந்தாருக்கு அறிவிக்க அவரும் அழையும் என்று அருள்பாடிட்டவாறே இவரை எழுந்து அருளப் பண்ணுவித்துக் கொண்டு போய்
அவர்களும் ஸ்ரீ ஆளவந்தாருக்குக் காண்பிக்க ஸ்ரீ ஆளவந்தாரும் இவரைக்கண்டு ப்ரத்யுத்தான அபிவாதன பூர்வகமாக ஆசனமிட்டு –
நீர் இத்தனை நாளும் நமக்கு இந்தத் தூதுளை கொண்டு வந்து இடுகிறது எதுக்காக -உமக்கு அர்த்தம் வேணுமோ க்ஷேத்ரம் வேணுமோ என்று
ஸ்ரீ மணக்கால் நம்பியைக் கேட்டருள -ஸ்ரீ நம்பியும் -நமக்கு இவை ஒன்றும் உண்டோ -உங்கள் பூர்வர்கள் தேடின அர்த்தம் இருக்கிறது –
அந் நிதி கிடக்கிற இடமும் நான் அறிவேன் -அத்தை நீர் கைக் கொண்டு அருளும் தனையும் நித்தியமாக நான் தேவரீர் பக்கல் வந்து
போம்படி வாசலில் தகையாது இருக்க அப்பணை இட வேண்டும் என்று அருளிச் செய்ய –
ஆளவந்தாரும் அப்படியே வாசல் தகையாதபடி கட்டளை இட –

ஸ்ரீ நம்பியும் அன்று முதல் ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருள் தெரியும்படி பதினெட்டு அத்யாயமும் அருளிச் செய்ய
ஸ்ரீ ஆளவந்தாரும் ஆரண சாரமான கீதையின் உட் பொருளைக் கேட்டருளி ஒரு நாளைக்கு ஒரு நாள் ஆர்த்தி பிறந்து –
அவ்வஸ்துவை சாஷாத் கரிக்கலாம் உபாயம் இல்லையோ என்று ஸ்ரீ நம்பியைக் கேட்க
ஸ்ரீ நம்பியும் சாஷாத்கரிக்கலாம் உபாயம் உண்டு என்று ஏகாந்தத்தில் எழுந்து அருளி இருந்து
மெய்ம்மைப் பெரு வார்த்தையான சரம ஸ்லோகார்த்தத்தை ப்ரசாதித்து அருள அத்தைக் கேட்ட ஸ்ரீ ஆளவந்தாருக்கு
நெல்லுக்கு பால் கட்டக் கட்டத் தலை வணங்குமா போலே சரணாகதி நெஞ்சிலே பட பட ஆனுகூல்யம் மிகுந்து
சரண்ய விஷய ப்ராவண்ய அதிசயத்தாலே இஸ் சம்சாரத்தில் அருசி பிறந்தபடி கண்டு அவரைக் கூட்டிக் கொண்டு

ந சஞ்ஞானஸ்யா சங்கோச ந சைவ யம கோசர தஸ்மாத் ரங்கம் மஹா புண்யம் கோந சேவேத புத்தி மாந் -என்கிறபடியே
ஞான வர்த்தகமுமாய் -நமன் தமரால் ஆராயப்பட்டு அறியாததுமாய்ப் புண்ய வர்த்தகமுமான திருவரங்கன் திருப்பதியில்
அழைத்துக் கொண்டு போய் பெரிய பெருமாளை திருவடி தொழப் பண்ணி -நிதிர் அவ்யய -என்கிறபடியே
உங்கள் பூர்வர்கள் தேடி வைத்த மஹா நிதி இது காணும் -என்று காட்ட ஸ்ரீ ஆளவந்தாரும் பெரிய பெருமாளுடைய
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியை சேவித்து –
பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன் -என்கிறபடியே
கீழ் இழந்த நாளைக்கு கூப்பிட்டுக் கண்ணும் கண்ணீருமாய் அரங்கத்து அம்மானை அனுபவித்து –
பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆரத் தோள் -என்றும்
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாணி த்வத் பாத பத்ம பிரவணாத் மவ்ருத்தேர் பவந்தி
சர்வே பிரதிகூல ரூபா -என்றும் சொல்லுகிற பிரதிகூலங்களை எல்லாம் பரித்யஜித்து
சர்வ சங்காந் பரித்யஜ்ய -என்கிறபடியே சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஆஸ்ரம பிராப்தி பண்ணி யருளி
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறபடியே
வேறே ஒரு விஷயம் அறியாதே
பரமாத்மிநி யோரக்தோ விரக்தோ அபரமாத்மநி என்கிறபடியே -அபரமாத்மநி வைராக்யம் உடையராய்ப்
பரமாத்ம சக்த சித்தராய்ப் பெரிய பெருமாளை சேவித்துக் கொண்டு எழுந்து இருக்கிற காலத்திலே

ஸ்ரீ பெரிய நம்பி -ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ மாறனேர் நம்பி
ஸ்ரீ திருக் கச்சி நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் ஆழ்வார் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் -ஸ்ரீ வன மா மலை ஆண்டான்
ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டான் -ஸ்ரீ ஈசான் ஆண்டான் –ஸ்ரீ சீயர் ஆண்டான் -ஸ்ரீ திருக் கூரப்பன்
ஸ்ரீ திரு மோகூர் அப்பன் -ஸ்ரீ திரு மோகூர் நின்றான் -ஸ்ரீ தெய்வப் பெருமாள் -ஸ்ரீ வகுளாபரண சோமயாஜியார் –
ஸ்ரீ திருக் குருகூர் தாசர் -ஸ்ரீ திருமாலிருஞ்சோலை தாசர் -ஸ்ரீ வடமதுரைப் பிறந்தான் -ஸ்ரீ ஆட் கொண்டி அம்மங்கி
என்ற இவ்விருப்பது முதலிகளும் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தார்கள்

இவர்கள் எல்லாரும் வித்வான்களுமாய்த் தர்சன ப்ரவர்த்தகருமாய் இருக்கிற காலத்தில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து -இன்னம் ஒரு ரஹஸ்ய விசேஷம் ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் பக்கலிலே உண்டு
அங்கே போய்க் கேளும் என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆளவந்தாரும் அது என் தேவரீருக்கு அந்த ரஹஸ்ய விசேஷம் இன்றிக்கே போவான் என் என்ன –
ஸ்ரீ நம்பியும் உங்கள் திருப் பாட்டனாரான ஸ்ரீ மன் நாதமுனிகள் எங்கள் ஆச்சார்யரான ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு அந்த ரஹஸ்ய விசேஷத்தை
அருளிச் செய்யத் தேட -அவரும் பிணம் கிடக்க மணம் புணரலாமோ -சரீர அவசான தசையில் அப்யஸிக்க அமையும் -என்று விண்ணப்பம் செய்தார் –
ஆகையால் அந்த ரஹஸ்ய விசேஷம் இல்லை யாய்த்து என்ன –
ஆனால் அங்கே கேட்ப்போம் என்று ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி இருந்து ஸ்ரீ ஆளவந்தார் தர்சனம் நிர்வகிக்க

கண்டு செய்தது வாய்த்து ஸ்ரீ மானாய் ஹர்ஷ பிரகர்ஷத்துடனே வாழ்கிற காலத்தில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகள்
ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ தெய்வத்துக்கு அரசு நம்பி -ஸ்ரீ கோ மடத்துத் திரு விண்ணகர் அப்பன் –
ஸ்ரீ சிறுப்புள்ளூருடைய பிள்ளை -சிறுப்புள்ளுடை பிள்ளை என்றும் சொல்வர் -ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி என்ற இவர்கள் ஐவர்
இவர்களுக்கு ஸ்ரீ நம்பி தர்சன தாத்பர்ய விசேஷங்களை அருளிச் செய்து கொண்டு சில காலம் எழுந்து அருளி இருந்து
தம் அந்திம தசையில் ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து ஸ்ரீ நாதமுனிகளோடே உபய சம்பந்தம் உடையரான நீர்
அவர் திருவடிகளே உமக்குப் ப்ராப்யமும் பிராபகமும் என்று விஸ்வசித்து உம்மைப் போலே ஒரு தர்சன ப்ரவர்த்தகரையும் உண்டாக்கி அருளிக்
கோயிலை விடாதே இரும் என்று அருளிச் செய்து
ஸ்ரீ உய்யக் கொண்டார் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

இத்தால் ஆச்சார்ய பரமாச்சார்யர்களுடைய திவ்ய ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணி உபயருடைய யுக்தி பலித்தபடி
கண்டு உகந்தார் இவர் ஒருவருமே இறே
ஸ்ரீ மணக்கால் நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளின படி கண்டு ஸ்ரீ ஆளவந்தார் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும்
மிகவும் அவசன்னராய் சோகித்துத் தங்களிலே தரித்து நிற்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் அவரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்துத் திருப் பள்ளி படுத்துச் செய்ய வேண்டிய க்ருத்யம் எல்லாம் செய்து அருளினார்

ஸ்ரீ மணக்கால் நம்பி திரு நக்ஷத்ரம் மாசி -மகம்
அவர் தனியன் -அயத்ன தோயா முந மாத்ம தாச மளர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண ய க்ரீதவா நாஸ்தி
தயவ்வ ராஜ்யம் நமாமிதம் ராம மமேய சத்வம்

அநந்தரம் ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் ஸ்ரீ அப்பன் யோகத்தில் எழுந்து அருளி இருக்கும் இடத்து ஏற எழுந்து அருளி –
இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று தும்முதல் இருமுதல் அடியோசைப் படுத்தல் செய்யாதே மவ்வனத்தோடே
சுவர்ப்புறத்தே பின்னே தெரியாதே நிற்க
ஸ்ரீ அப்பனும் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிறவர் பின்னே திரும்பிப் பார்த்து அருளி இங்கே சொட்டைக் குலத்தவர் யாரேனும்
வந்தார் உண்டோ என்று கேட்டருள
ஸ்ரீ ஆளவந்தாரும் அடியேன் யமுனைத்துறைவன் விடை கொண்டு இருக்கிறேன் என்று எழுந்து இருந்து வந்து
ஸ்ரீ அப்பன் ஸ்ரீ பாதத்தில் சேவித்து -அடியோங்கள் சுவர்ப் புறத்தே பின்னே தெரியாதபடி நிற்கத் தேவரீர்
இங்கன் அருளிச் செய்கைக்கு ஹேது என் என்று கேட்டருள
ஸ்ரீ அப்பனும் அருளிச் செய்த படி -அடியேனும் தானுமாய் அனுபவியா நின்றால் பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி
அணைத்தாலும் அவள் முகம் கூடப் பாராத சர்வேஸ்வரன் என் தோள்களை அமுக்கி நாலு மூன்று தரம் சுவர்ப்புறத்து எட்டிப் பார்த்தான் –
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் உள்ளார் யாரேனும் வந்தார் உண்டாக வேணும்
என்று இருந்தேன் காணும் என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தாரும் இத்தைக் கேட்டுப் போர வித்தராய் அருளி அடியேனுக்கு இந்த யோக ரஹஸ்யத்தை அருளிச் செய்ய வேணும்
என்று ஸ்ரீ அப்பன் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டுக் கொண்டு விழுந்து கிடக்க ஸ்ரீ அப்பனும் உகந்து அப்படியே செய்கிறோம் -என்று
முடி பிடித்து எடுத்து நம்முடைய சரீர அவசானத்திலே சொல்லுகிறோம் -வருகிற புஷ்ய மாசத்தில் குரு புஷ்ய யோகத்தில்
அபிஜின் முஹூர்த்தத்திலே நமக்கு சரீர அவசானமாய் இருக்கும் -அதுக்கு முன்னாக எழுந்து அருள வேணும் -என்று
திருமுகம் எழுதிக் கொடுத்து அருள
ஸ்ரீ ஆளவந்தாரும் திரு முகத்தைக் கொண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார்

பின்பு ஸ்ரீ நம்பெருமாள் திரு அத்யயன திரு நாளிலே திரு அத்யயனம் கேட்டு அருளும் போது
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் -கெடும் இடர் -என்கிற திருவாய் மொழியை அபிநயித்துப் பாடி அருளுகிறவர்
ஸ்ரீ ஆளவந்தார் திரு முகத்தைப் பார்த்து அருளி -நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்குச் சொன்னோம் -என்று பலகாலும் பாடி அருள –
ஸ்ரீ ஆளவந்தாரும் இத்தைக் கேட்டு அருளி -ஸ்ரீ ஆழ்வாருடைய தமர்களிலே அந்தர் பூதமாம் போது திருவனந்த புரம் புக்கு
சேவிக்க வேண்டி இருந்தது -என்று அப்போதே திரு ஓலக்கத்தின் நின்றும் எழுந்து இருந்து ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு தண்டன் சமர்ப்பித்து
அவர் அனுமதி கொண்டு புறப்பட்டு அருளி திரு மடத்துக்கு காவலாக ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானை வைத்துத்
திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளிப் படமுடை யரவில் பள்ளி பயின்ற திரு அனந்த புரத்தம்மானையும் த்வார த்ரயேண திருவடி தொழுது
அங்கே எழுந்து அருளி இருந்த அளவிலே திரு சந்நிதி முதலிகளைப் பார்த்து
ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தைக் கொண்டு வாருங்கோள் -என்று அருளிச் செய்ய
முதலிகளும் கொண்டு வந்து சமர்ப்பிக்க பார்த்து அருளி மாசமும் திவசமும் நன்றாய் இருந்த படியால்
ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே-என்று போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க

ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானுக்கு ஸ்ரீ ஆளவந்தார் விஸ்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க இங்கு இருந்த முதலிகள்
இவர்க்கு வைத்தியர்கள் பலரையும் அழைத்துப் பார்ப்பித்த இடத்தில் அவர்கள் இவர்க்கு விஷய ஸ்ப்ருஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்ன
உமக்கு எந்த விஷயத்திலே ஸ்ப்ருஹை இருக்கிறது என்று முதலிகள் கேட்க அவரும் அடியேனுக்கு ஸ்ரீ ஆளவந்தார் விஷயம் ஒழிய
வேறே ஒரு விஷயம் உண்டோ என்று அருளிச் செய்ய -ஆகில் இவரை அங்கே ஏறக் கொண்டு போங்கோள்-என்று வைத்தியர்கள்
பலரும் சொல்ல முதலிகள் இவரைக் கட்டணத்தில் கொண்டு போக
ஒரு நாளைக்கு ஒரு நாள் திருமேனியில் வாட்டம் தீர்ந்து பின்பு நடக்க வல்லராய் வருகிற அளவிலே
ஸ்ரீ ஆளவந்தாரும் திருவனந்த புரத்தின் நின்றும் மீண்டு எழுந்து அருளுகிற வழியிலே திருவனந்த புரத்துக்கு அரைக்காதம் வழியிலே
கரைமனை ஆற்றங்கரையில் விட்டு எழுந்து அருளி இருக்க ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் ஸ்ரீ ஆளவந்தாரை சேவித்து
அவர் ஸ்ரீ பாதத்தில் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டு விழுந்து கிடக்க
ஸ்ரீ ஆளவந்தாரும் இவர் எழுந்து இருக்க மாட்டாமல் கிடக்கிற படியைக் கண்டு
பெருமாள் ஸ்வ தந்திரருமாய் ஸூரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரத்தாழ்வான் வைத்த இடத்தே இருந்தார் –
அடியேன் ஸ்வ தந்த்ரனும் இன்றிக்கே ஸூரனும் இன்றிக்கே இருக்கையாலே
நீர் வைத்த இடத்திலே இராமல் வந்தது -என்று அருளிச் செய்ய

இத்தைக் கேட்ட ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் -வந்து ஸ்வரூப ஹானி பட்டேன்-என்று மிகவும் சத்தை குலைந்து கிடக்க –
இவர் எழுந்து இராதபடியைக் கண்டு -என்னை ஸ்வ தந்திரனாயும் ஸூரனாயும் ஆக்கினால் ஒழிய எழுந்திரேன் என்று கிடக்கிறாயோ என்று
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ய -ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானும் இவ்வார்த்தையைக் கேட்டு வந்து ஸ்வரூப ஹானி பட்டதோபாதி
இதுவும் ஒரு ஸ்வரூப ஹானி ஆயிற்றோ என்று பர பர என்று எழுந்து இருந்து நிற்க
ஸ்ரீ பாதத்து முதலிகளும் -ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதவ் -என்ற ஸ்ரீ இளைய பெருமாள் நிலை இவருக்கு உண்டாய்த்தே என்ன
ஸ்ரீ ஆளவந்தாரும் ஈது ஒரு அதிகார விசேஷம் இருந்தபடி என் தான் என்று போர உகந்து அருளி –
மிகவும் மெலிந்தீரே என்று முதுகு தடவி அதி கிருபார்த்த சித்தராய் -திருவனந்தத் திருக் கோபுரம் அதோ தோன்றுகிறது –
அங்கே போய் ஆயிரம் பைந்தலை அனந்த சயநனை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய –
இவரும் என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்தது என்று ஸ்ரீ ஆளவந்தாரைக் காட்டி ஆள ஸ்ரீ ஆளவந்தாரும்

யேநைவ குருணா யசய ந்யாஸ வித்யா பிரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவச-என்றும்
வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்ற முதல் செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோடு
மத்தகத்து தந்தாள் அருளாலே வைத்தவர் -என்றும்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற் கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த் தாள் என் தனக்கும் அது இராமானுசர் இவை ஈந்து அருளே -என்றும்
சொல்லுகிறபடியே விசேஷ அதிகாரியான ஸ்ரீ தெய்வ வாரி ஆண்டானைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பெருமாளையும் சேவித்துக் கொண்டு அங்கே தாமும் ஸ்ரீ பாதத்து முதலிகளுமாக இருந்து தர்சனம் நிர்வஹித்து அருளுகிற போது –
இனி மேல் தர்சன பிரவர்த்தகர் ஆவார் யார் என்று விசாரம் உண்டாய் ஒருவரையும் காணாதே முசித்துச் சிந்தித்து இருந்த காலத்திலே –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ மன் நாதமுனிகள் வைபவம் –

February 12, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ மன் நாதமுனிகள் வைபவம்

ஆழ்வார்கள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளி நெடும் காலம் கழிந்தவாறே –
ஸ்ரீ வீர நாராயண புரத்திலே திரு மன்னனார் திருவடிகளிலே சர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு போருகிற
ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வாரும் -அவர் திருக் குமாரர் ஸ்ரீ நாத முனிகளும் –
அவர் திருக் குமாரர் ஈஸ்வர முனிகளும் ஒரு நாள் அளவிலே திரு மன்னனார் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து –
தேவரீர் -பரித்ராணாயா ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே
திரு முகப்படியே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன அர்த்தமாக திருவவதரித்து விளையாடின அளவிலே
ஸ்ரீ வடமதுரை ஸ்ரீ திருவாய்ப்பாடி -ஸ்ரீ பிருந்தாவனம் -ஸ்ரீ யமுனா தீரம் -ஸ்ரீ கோவர்த்தன கிரி -ஸ்ரீ மத் துவாரகை –
ஸ்ரீ அயோத்தியை -ஸ்ரீ சாளக்கிராமம் -ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ நரஸிம்ஹ கிரி -முதலான வடதிசையில்
உள்ள திவ்ய தேசங்கள் எங்கும் திருவடி தொழுது வர வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ மன்னனாரும் அப்படியே செய்யுங்கோள் என்று அர்ச்சா முகேன விடை கொடுத்து அருள

இவர்களும் ச குடும்பமாகப் புறப்பட்டுப் போய் உத்தர தேசத்தில் உண்டான
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தியை இடமுடை வதரி முதலான திவ்ய தேசங்களைத் திருவடி தொழுது –
யமுனாஞ்சாதி கம்பீராம் நாநா வர்த்தச ஷா குலாம் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லுகிறபடியே
அதி கம்பீரமாய்ப் பல சுழிகளை உடைத்தாய்ப் பெருகா நிற்கிற யமுனா தீரத்தில் –
ஸ்ரீ கோவர்த்தன புரம் என்கிற கிராமத்திலே -தூய பெரு நீர் யமுனைத் துறைவன் – என்கிற எம்பெருமானைத் திருவடி தொழுது
மிகவும் ப்ரீதராய் இவ்விடத்தில் நித்ய வாசம் பண்ணக் கடவோம் என்று நிச்சயித்துக் கொண்டு அவர் திருவடிகளிலே
சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு சேவித்து இருக்கிற காலத்தில்
ஸ்ரீ மன்னாரும் நம்முடைய ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற வாரும் என்று ஸ்ரீ நாதமுனிகளுக்கு ஸ்வப்னம் காட்டி அருள –
ஈது ஒரு ஸ்வப்னம் இருந்த படி என் -என்று இவர்களும் தங்களிலே விசாரித்து -இனி நமக்குச் செய்ய அடுப்பது என் -என்று
யமுனைத் துறைவர் திரு முன்பே சென்று தண்டன் சமர்ப்பித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய
அவரும் அர்ச்சக முகேன -அப்படியே செய்யுங்கோள்-என்று தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து விடை கொடுத்து அருளினார்

இவர்களும் அங்கு நின்றும் குடும்ப ஸஹிதமாகப் புறப்பட்டு வாரணாசீ வழியாக எழுந்து அருளி
சப்த சப்தஸூ லோகேஷு லோகா லோகேசராசரே –நாஸ்தி நாஸ்தி சமம் க்ஷேத்ரம் உத்தமம் புருஷோத்தமம் – என்று
சதுர்தச புவனங்களிலும் ஸ்வ சத்ருச ரஹிதமாகச் சொல்லப்படுகிற ஸ்ரீ புருஷோத்தமத்து ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஜெகந்நாதனையும் திருவடி தொழுது -அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ ஸிம்ஹாத்ரி ஏற எழுந்து அருளி
ஸ்ரீ ஸிம்ஹகிரி அப்பனையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
அஹோ வீர்ய மஹோ சவ்ர்யம் அஹோ பாஹு பராக்ரம நாரஸிம்ஹ பரந்தெய்வம் அஹோ பலம் அஹோ பிலம்–என்று
சொல்லப்பட்ட அஹோ பில ஸ்ரீ நரஸிம்ஹனையும் திருவடி தொழுது -அங்கு நின்றும் போந்து
பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை -என்கிற திருமலை ஆழ்வாரையும் சேவித்து திருமலை ஏற எழுந்து அருளி

மாயாவீ பரமாநந்தந் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் –ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே -என்கிறபடியே
ஜகந் நாடக ஸூத்ர தாரியான ஸ்ரீ வைகுண்ட நாதன் பரம ஆகாசமான பரமபதத்தையும் உபேக்ஷித்து
இவ்விபூதில் உள்ளாரை ரஷிக்கையில் உள்ள நசையாலே திருக் கோனேரிக் கரையிலே திரு மா மகளுடனே சர்வ ஸூலபனாய்
எழுந்து அருளி இருக்கிற திரு வேங்கடத்து அப்பனையும் திருவடி தொழுது
அவ்விடத்தே நித்ய வாசம் பண்ணுவோம் என்று பார்க்க
ஸ்ரீ மன்னனார் திரு உள்ளம் ஆகையால் அதி ஸீக்ரமாக அங்கு நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கடிகாசலத்து ஏற எழுந்து அருளிக்
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கன்னியான ஸ்ரீ அழகிய ஸிம்ஹரையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
நகரீணாஞ்ச ஸர்வாசாம் புரீ காஞ்சீ விசீஷ்யதே-கிரீணாஞ்சாபி ஸர்வேஷாம் ஸ்ரேஷ்டோ ஹஸ்திகிரிஸ் ஸ்ம்ருத —
வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் –வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே -என்று
சொல்லப்படுகிற வேகவதியின் வடகரையில் உத்தமமான கச்சி மா நகரத்திலே கிரிகளில் வைத்துக் கொண்டு
ஸ்ரேஷ்டமான ஹஸ்தி கிரியின் மேலே புண்ய கோடி என்கிற திவ்ய விமானத்தின் மத்யத்திலே எழுந்து அருளி நின்று
சர்வ சேதனராலும் ஸேவ்யமாநராய் சர்வ பல பிரதரான பேர் அருளாளரையும் சேவித்து –
அவ்விடத்தில் மற்றும் உண்டான திருப்பதிகளையும் சேவித்து அங்கு நின்றும் போந்து
திரு அயிந்திர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனையும் திருவடி தொழுது –
அங்கு நின்றும் எழுந்து அருளி திருக் கோவலூரிலே ஆழ்வார்கள் நாயனாரையும் திருவடி தொழுது –

அங்கு நின்றும் போந்து – ரங்கம் அரங்கம் இதி ப்ரூயாத ஷூதப்ரஸ்கல நாதிஷு –விஷ்ணு லோக மவாப்நோதி
ஸத்ய பாப ஷயான் நர –என்று சொல்லுகையாலே தும்மல் இருமல் தொடக்கமான கலக்கங்கள் வந்தால்
தத் தோஷ நிவ்ருத்யர்த்தமாக திருவரங்கம் பெரிய கோயில் என்று அனுசந்தேயமாய்ப் பாப ஹரமாய் மோக்ஷ பிரதமுமான
திருவரங்கப் பெரு நகரிலே எழுந்து அருளி நம் பெருமாளையும் சேவித்து -அங்கு நின்றும் எழுந்து அருளி
திருக் குடந்தையில் ஆராவமுதாழ்வாரையும் சேவித்து அங்கு நின்றும் மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்திலே
ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே எழுந்து அருள அங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் எதிர் கொள்ள புகுந்து
ஸ்ரீ மன்னனாரைத் திருவடி தொழுது அதி ப்ரீதராய் நிற்க

ஸ்ரீ மன்னனாரும் திரு உள்ளம் போர யுகந்து அருளி அங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரையும் அழைத்து அருளி
நமக்குப் பிரியமாக இருக்கும் இவர்களை போர ஆதரித்துப் போருங்கோள்-என்று அருளிச் செய்ய
அவர்களும் அதுக்கு ஈடாகத் திரு மாளிகை கட்டிக் கொடுத்து அமுதுபடி முதல் மற்றும் திரு மாளிகைக்கு வேண்டுமவை எல்லாம்
நடத்திக் கொண்டு போருகிற காலத்திலே இவர்களும் ஸ்ரீ மன்னனாருக்குத் திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டிச் சாத்தி
அமுதபடி சாத்துப்படி திரு விளக்கு முதலானவைகள் எல்லாம் குறைவற நடத்திக் கொண்டு
வித்வத் கோஷ்டிகளும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களும் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே

மேல் நாட்டில் நின்றும் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் எழுந்து அருளி ஸ்ரீ மன்னனாரைச் சேவித்து அவர் திரு முன்பே
ஆராவமுதே என்கிற திருவாய் மொழியை அனுசந்தித்து அருள -அத்தை ஸ்ரீ நாதமுனிகள் கேட்டு அருளி அதி ப்ரீதராய்
அவர்களை பார்த்து ஆயிரத்துள் இப்பத்தும் -என்று இருந்தது -இப்பிரபந்தம் உங்களுக்கு முற்றாய் போமோ -என்று கேட்டருள-
அவர்களும் இப்பத்து பாட்டுமே வருவது -என்று விண்ணப்பம் செய்ய –
இவரும் உங்கள் நாட்டிலே ஸ்ரீ கோசம் உண்டோ -பாடம் போவார் உண்டோ என்று கேட்டருள –
எங்களுக்கு இவ்வளவு பாடம் வருவது -மற்றோர் இடத்தும் இல்லை -என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய –
இவரும் அவர்களுக்கு மன்னனாருடைய தீர்த்த பிரசாதமும் பிரசாதிப்பித்து சத்கரித்துப் போக விட்டருளி
இப்பிரபந்தம் ஸ்ரீ சடகோபர் திரு அவதரித்து அருளின திருக் குருகூர் பிரதேசத்தில் யுண்டாக வேணும் என்று
திருநகரிக்கு எழுந்து அருளி ஸ்ரீ நம்மாழ்வாரையும் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் சேவித்து
அங்கே ஸ்ரீ மதுரகவிகளுடைய சிஷ்யரான ஸ்ரீ பராங்குச தாசரை சேவித்து
இவ்விடத்தில் திருவாய் மொழி ஓதினவர்கள் உண்டோ -ஸ்ரீ கோசங்கள் உண்டோ -என்று கேட்டருள –
அவரும் திருவாய் மொழியும் மற்றும் உண்டான திவ்ய பிரபந்தங்களும் நெடும் காலம் உண்டு -பிரமுஷிதமாய்த்து-

இப்போது எங்கள் ஆச்சார்யரான ஸ்ரீ மதுர கவிகள் அடியேனுக்கு கண்ணி நுண் சிறுத் தாம்பு என்கிற திவ்ய பிரபந்தத்தை
பிரசாதித்து அருளி இக் கண்ணி நுண் சிறுத் தாம்பு பிரபந்தத்தை ஸ்ரீ நம்மாழ்வார் திரு முன்பே ஏக ஆசனத்தில் இருந்து
ஏகாக்ர சித்தராய் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் உரு அனுசந்திக்க
ஸ்ரீ நம்மாழ்வார் பிரசன்னராவார் என்று அருளிச் செய்தார் என்ன –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் அந்த திவ்ய பிரபந்தத்தை அடியேனுக்கு ப்ரசாதித்து அருள வேணும் -என்று தண்டம் சமர்ப்பித்து
விநயத்துடன் விண்ணப்பம் செய்ய அவரும் மிகவும் உகப்புடனே இவருக்கு அந்தத் திவ்ய பிரபந்தத்தை ஓதுவித்து அருள –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஓதித் திருப் புளி ஆழ்வார் அடியிலே ஸ்ரீ நம்மாழ்வார் திரு முன்பே பன்னீராயிரம் உரு
ஸ்ரீ கண்ணி நுண் சிறு தாம்பு பிரபந்தத்தை நியமத்தோடே அனுசந்திக்க –

ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச ஸீலவான் வைஷ்ணவஸ் ஸூசி -கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்யபீதியதே —
என்று சொல்லப்படுகிற சிஷ்ய லக்ஷணமான ஆஸ்திக்யாதி குணங்களை யுடையரான ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் நியோகேந மிகவும் பிரசன்னராய் அருளி இந்த ஸ்ரீ மன் நாதமுனிகளைக் குறித்து
அசரீரி வாணீ சொல்லுமா போலே திருவாய் மலர்ந்து -ஏன் காணும் நம்மைக் குறித்து பஹு ச உபாசியா நின்றீர் என்று கேட்டருள
ஸ்ரீ மன் நாதமுனிகளும் திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்மாழ்வாரும் ப்ரீதியுடனே சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு திவ்யம் ததாமிதே ஸஷுஸ் என்கிறபடியே திவ்ய ஞான சஷுஸ்ஸை பிரசாதித்து அருளி

ஸ்ரீ ரஹஸ்ய த்ரயத்தையும் திருவாய் மொழியையும் மற்றுமுள்ள மூவாயிர திவ்ய பாசுரங்களையும் –
அகில தர்சன தாத்பர்யங்களையும் அஷ்டாங்க யோக ரஹஸ்த்தையும் ப்ரசாதித்து அருளினார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று சொல்லுகிறபடியே
ஸ்ரீ மன் நாதமுனிகளும் க்ருதார்த்தராய்ப் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் ஸ்ரீ நம்மாழ்வாரையும் சேவித்து இருக்கிற அளவிலே
ஸ்ரீ மன்னனார்-இத் திவ்யப் பிரபந்தங்களை நம்முடைய முன்பே ஒரு உருச் சொல்ல வாரும் என்று
ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய இவரும் மற்றை நாள்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானையும் ஸ்ரீ நம்மாழ்வாரையும் சேவித்து இச்செய்தியை விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்மாழ்வாரும் அர்ச்சக முகேன -ஆகில் நீர் ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏறப் போய் இத் திவ்ய பிரபந்தங்களை
சம தம ஆத்ம குணங்களை யுடையரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அறியக் கற்று வல்லராம்படி ஓதுவியும் என்று நியமித்து
தீர்த்த பிரசாதங்களை பிரசாதித்து விடை கொடுத்து அருளினார் –

ஸ்ரீ மன் நாதமுனிகளும் மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற எழுந்து அருளும் போதே
வழியில் உள்ள திருப்பதிகளையும் அந்தத் திருப்பதி வைபவமான திவ்ய பிரபந்தங்களையும் அனுசந்தானம்
பண்ணிக் கொண்டு சேவித்து மீண்டு ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற வந்து புகுந்து
ஸ்ரீ மன்னனாரைத் திருவடி தொழுது நின்று தம்மை ஆழ்வார் விசேஷ கடாக்ஷம் பண்ணித் திவ்ய பிரபந்தங்களையும்
ப்ரசாதித்து அருளின செய்தியை ஸ்ரீ மன்னனாருக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ மன்னனாரும் மிகவும் உகப்புடனே ஸ்வப்ன முகேனே ஓர் உரு இவர் உடனே அருளிச் செய்து –
சம்சாரிகளை உஜ்ஜீவிப்பைக்காக கரண களேபரங்களைக் கொடுத்தும் -சாஸ்திரங்களைத் தந்தும் -நாமே வந்து பிறந்தும்
இவை இத்தனையும் செய்த இடத்திலும் கார்யகரம் ஆயிற்று இல்லை –

ஆனபின்பு ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்த முகேன வாய்த்து திருத்திற்று -இப்படிப்பட்ட திவ்ய பிரபந்தங்கள்
பிரமுஷிதமாய்க் கிடக்க ஒண்ணாது -என்று பார்த்து அருளி -இவரைக் கொண்டு இவற்றைப் பிரகாசிப்பிக்க வேணும் –
என்று நினைத்து -நீர் இவற்றை இயலும் இசையும் ஆக்கும் -என்று அர்ச்சக முகேன நியமித்து அருள –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் தம்முடைய மருமக்களான கீழை அகத்து ஆழ்வாரையும் மேலை அகத்து ஆழ்வாரையும் அழைத்து அருளி
ஆழ்வார் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி ப்ரசாதித்து அருளின இத் திவ்ய பிரபந்தங்களை இயலும் இசையும் ஆக்க வேணும் –
அது செய்யும் இடத்து இன்கவி பாடும் பரம கவிகள் அருளிச் செய்ததாய் –
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலையான திவ்ய பிரபந்தங்கள் ஆகையால் இத்தை
திவ்ய கானத்திலே சேர்த்துப் பாட வேண்டும் -என்று அவர்களையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதங்களை உதாத்த அநுதாத்த சவரித பிரசய யுக்தங்களாக உச்சரிக்கலாம் படி பண்ணினால் போலே
ஸ்ரீ மன் நாதமுனிகளும் இத் திவ்ய பிரபந்தங்களைத் திவ்ய கானத்திலே அடைத்து
இயலும் இசையும் ஆக்கிப் பாடுவித்து அருள இதி லோகத்தில் எங்கும் ப்ரஸித்தமாயிற்று

அநந்தரம் கங்கை கொண்ட சோழ புரத்திலே அந்த ராஜ்யத்துக்கு ராஜாவான சோழன் வாசலிலே தேவ கானம் பாடுவாள் ஒருத்தியும்
மனுஷ்ய கானம் பாடுவாளுமாய் ஒருத்தி இரண்டு வார ஸ்த்ரீகள் தங்களில் விவாதமாய் வந்து ராஜ சந்நிதியில்
வித்வான்களைத் திரட்டிப் பாட ராஜாவும் அங்கு உள்ள வித்வான்களும் மனுஷ்ய கானம் பண்ணுகிறவளைக் கொண்டாடி
அவளுக்கு மணியும் மாலையும் தியாகமும் கொடுத்துப் போக விட்டுத் தேவ கானம் பாடினவளை அநாதரித்துத் தள்ளி விட
அவளும் நான் பாடுகிற கானம் தேவதைகள் அறியும் அத்தனை –என்று தேவாலயங்கள் தோறும் புக்குப் பாடிக் கொண்டு வந்து
ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே அவர் திரு முன்பே பாட ஸ்ரீ மன் நாதமுனிகளும் அத்தைக் கேட்டு உகந்து கொண்டாடி
அவளுக்கு ஸ்ரீ மன்னனாருடைய தீர்த்த பிரசாதமும் திருப் பரியட்டமும் பிரசாதிப்பித்து அருள அவளும் இவரைத் தெண்டன் இட்டுப் போய்
இந்த ராஜாவுடன் -நான் பாடுகிற தேவ கானம் அறிவாராய் ஸ்ரீ மன் நாத முனிகள் என்னும் திரு நாமம் உடையார் ஒருவர்
ஸ்ரீ வீர நாராயண புரத்திலே ஸ்ரீ மன்னனார் திருக் கோயிலிலே இருக்கிறார் என்ன –
ராஜாவும் ஸ்ரீ மன் நாதமுனிகளை எழுந்து அருள வேணும் என்று அழைத்து விட
இவரும் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை திவ்ய கானத்திலே அடைத்தோம் -நாட்டார் இதன் வைபவம் அறியார்கள்
இத்தை நாம் அறிவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ராஜ கோஷ்ட்டி ஏற எழுந்து அருள
ராஜாவும் எழுந்து இருந்து தண்டன் சமர்ப்பித்து ஆசனம் இட

இவரும் எழுந்து அருளி இருந்து ஆசீர்வதிக்க -ராஜாவும் அதி ஆதாரத்துடன் இவள் பாடுகிற தேவ கானம் தேவரீர் அறிவீரோ -என்று கேட்க –
இவரும் மானுஷ்ய கானம் பாடுகிறவளையும் தேவ கானம் பாடிகிறவளையும் பாடச் சொல்லி கேட்டருளி – ராஜாவைக் குறித்து –
இவள் பாடுகிற மானுஷ்ய கானம் உங்களுக்குத் தெரியும் இவள் பாடுகிற தேவ கானம் தேவர்களுக்குத் தெரியுமது போக்கி
உங்களுக்குத் தெரியாது என்ன -ராஜாவும் தேவரீர் அறியும் என்னும்படி நாங்கள் அறியும்படி எங்கனே என்ன —
நாற்பது நூறு தளத்தைச் சேர ஒற்றிச் சொல்லு இது எத்தனை எடை இது எத்தனை இடை -என்று ஸ்ரீ மன் நாதமுனிகள் அருளிச் செய்ய
அவற்றை ராஜாவும் தனித் தனியே நிறுத்திச் சோதித்துப் பார்க்க -அவை எல்லாம் முந்தரை ஏறாமல் குறையாமல் இருந்தபடியைக் கண்டு
மிகவும் ஆச்சர்யப்பட்டு ஸ்ரீ மன் நாத முனிகளுடைய ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு பஹு த்ரவ்யத்தை சமர்ப்பிக்கத் தேட இவரும்
சதுர்முக பசுபதி சதமக ப்ரப்ருதி பதங்களை நிராகரித்து இருக்கும் நிஸ்ப்ருஹராகையாலே -நமக்கு இவை ஒன்றும் வேண்டா என்று
ராஜாவை ஆசீர்வதித்து -மீண்டும் ஸ்ரீ வீர நாராயண புரத்து எழுந்து அருளி ஸ்ரீ மன்னனார் திருவடிகளில் கைங்கர்ய ஏக நிரதராய்
வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்திலே இவர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தவர்களாய்

சரீரம் வஸூ விஞ்ஞானம் வாச கர்ம குணாந ஸூந் குரவர்த்தந்தா சயேத்யஸ்து ச சிஷ்யோ நேதரஸ் ஸ்ம்ருத -என்று
சொல்லப்படுகிற குணங்களை உடையரான
ஸ்ரீ உய்யக் கொண்டார் – ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் -ஸ்ரீ நம்பி கருணாகர தாசர் -ஸ்ரீ ஏறு திருவுடையார் –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை ஆண்டான் -ஸ்ரீ வான மா மலை தேவி ஆண்டான் -ஸ்ரீ உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை –
ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான் -ஆகிய எண்மருக்கும்
அஹோ க்வயஸ்ய மஹாத்ம்யம் அஹோ வீர்ய மஹோ பலம் -மந்த்ர ரத்னம் ஸூ பகரம் வேத சாரம் சனாதனம் -என்கிறபடியே
மந்த்ர ரத்னம் என்று சிலாகித்துச் சொல்லப்படுகிற த்வயார்த்தத்தையும் பிரசாதித்து –
திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் ஓதுவித்து -வேத சாஸ்திரங்களையும் அதிகரிப்பித்து –
ரஹஸ்ய த்ரய சாரார்த்தமாய் -சகல ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயமான ஸ்ரீ புருஷ நிர்ணயத்தையும்
ந்யாஸ தத்துவத்தையும் அருளிச் செய்து -கரிய கோலத் திரு உருவை தியானித்துக் கொண்டு யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

ராஜா இவருடைய யோக வைபவத்தைக் கேட்டு அங்கு ஏறப் போய் ஸ்ரீ மன்னனாரையும் சேவித்து –
தானும் ஸ்த்ரீகளுமாய் இவர் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிறபடியைக் கண்டு ஆச்சர்யப்பட்டு மீண்டு போகிற அளவில் –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் -என்கிறபடியே அவர்களை ஸ்ரீ கிருஷ்ணனும் கோபிமாருமாக நினைத்து
அவர்கள் பின்னே கங்கை கொண்ட சோழ புரத்துக்கு ஏற எழுந்து அருளா நிற்க இது கேட்டு
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ குருகை காவல் அப்பன் உள்ளிட்ட முதலிகள் அடையப் பின் தொடர்ந்து எழுந்து அருளிக்
கங்கை கொண்ட சோழ புரத்தே கண்டு தேவரீர் இப்படி செய்யலாமோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்டுகளுமாக நினைத்து அவர்கள் உடனே வந்தேன் என்று அருளிச் செய்து
மீண்டு எழுந்து அருளினார்
சில நாள் கழிந்தவாறே பின்னையும் ஒரு கால் ராஜா வந்து ஸ்ரீ மன்னனாரை சேவித்து மீண்டு போகிறவன்
தன் சாமந்தன் தலையிலே அடி இட்டு யானைக் கழுத்தில் ஏற இத்தை ஸ்ரீ மன் நாதமுனிகளைக் கண்டு
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகள் தலையிலே அடி இட்டு பெரிய திருவடியை மேற்கொள்ளும்படி இது வாகாதே என்று
மோஹித்தார்-என்று பிரசித்தம் இறே

பின்னையும் சிறிது காலம் யோகத்தில் எழுந்து அருளி இருந்து ஸ்ரீ குருகைக் காவல் அப்பனைப் பார்த்து –
நீர் யோக ரஹஸ்யத்தை அப்யசியும் -என்று அஷ்டாங்க யோக க்ரமத்தை அவருக்கு அருளிச் செய்து அருளினார் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரைப் பார்த்து -நீரும் யோக ரஹஸ்யத்தை அப்யசியும் என்ன
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் -பிணம் கிடக்க மணம் புணரலாமோ–இந்த சரீர அவசானத்திலே அப்யஸிக்க அமையும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் நீர் சாஸ்திரங்களையும் திருவாய் மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் ப்ரவர்த்திப்பியும் -என்று அருளிச் செய்து –
தர்ம புத்ரராகிய ஸ்ரீ ஈஸ்வர முனிகளைப் பார்த்து -உமக்கு ஒரு குமாரர் உண்டாக்கப் போகிறார் -அவனுக்கு யமுனைத் துறைவன் -என்று
திரு நாமம் சாத்தும் என்று அருளிச் செய்து –
ஸ்ரீ உய்யக் கொண்டாரையும் ஸ்ரீ குருகைக் காவல் அப்பனையும் குறித்து உங்களுக்கு நாம் சொன்ன தர்சன தாத்பர்யங்களையும்
யோக ரஹஸ்யார்த்த விசேஷங்களையும் யமுனைத் துறைவனுக்கு உபதேசியுங்கோள்-என்று நியமித்து அருளி
முன்பு போலே யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

அநந்தரம் அந்த ராஜா ச பரிகரனாய் வேட்டைக்கு வந்து மீண்டு போகா நிற்கச் செய்தே இவருடைய பெண் பிள்ளைகள் வந்து
ஐயா நம் அகத்தில் ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண் பிள்ளையாக வந்து ஸ்ரீ மன் நாதமுனிகள் எங்கே என்று
தேடித் போனார்கள் என்றவாறே ஸ்ரீ மன் நாதமுனிகளும் அவர்கள்
அக்ரத பிரயவ் ராமஸ் சீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்துத நுஷ் பாணீர் லஷ்மனோ அநுஜகா மஹா -என்று சொல்லப்பட்ட
பெருமாளும் பிராட்டியும் இளைய பெருமாளும் ஐந்தர வ்யாக்ரண பண்டிதனுமாக அடுக்கும் என்று திரு உள்ளம் பற்றிப் பின் தொடர்ந்து
எழுந்து அருளி வழியில் எதிர்ப்பட்ட பலரையும் -இப்படி போகிறவர்களைக் கண்டீர்களா என்று கேட்டு அருள
அவர்களும் போகிறார்கள் போகிறார்கள் என்று சொல்ல கடுநடையிட்டு நெடும் தூரம் எழுந்து அருளிக் கங்கை கொண்ட சோழ புரத்திலே
கீழ் வாசல் அளவாக எழுந்து அருளி அங்கு உள்ளவர்களை இப்படி போகிறவர்களைக் கண்டீர்களோ என்று கேட்டருள –
அவர்களும் கண்டிலோம் என்ன போகிற வில்லிகளும் காணக் காண மறைந்திட யவரும் ஏங்கி அடித்துக் கொண்டு விழுந்து மோஹித்து
அதுவே ஹேதுவாக
பரந்து வைஷ்ணவ லோகம் நித்ய அநந்தம் -ஆனந்தம் -ஸூகாவஹம் தத்ர சம்வாஹி நீந்திவ்யாம் விரஜாம் வேத சம்பவாம் சர்வே
ஹிரண்மயாஸ் தத்ர சர்வே வேத மயாஸ் ஸூபா அப்ராக்ருத மயா நித்யா புநரா வ்ருத்தி வர்ஜிதா –
ஏகாந்தி நஸ் சதா ப்ரஹ்ம த்யாநிநோ யோகிநோ ஹியே தேஷான் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
பிணை கொடுக்கிலும் போக ஒட்டாத -அடியார் நிலாகின்ற ஸ்ரீ வைகுந்த மஹா நகரை பிராபித்து அருளினார்

இச் செய்தியை ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் ஸ்ரீ ஈஸ்வர முனிகள் முதலானோர் கேட்டு வ்யாகுலப்பட்டு-
அங்கு ஏறப் போய் -அவருடைய விமல சரம விக்ரஹத்தை சேவித்து -தங்கள் கண்ணிலும் நெஞ்சிலும் தேக்கிக் கொண்டு
சோகார்த்தமாகக் கிடந்து துடித்துத் தங்களிலே தேறித் தரித்து நின்று சரம கைங்கர்யத்தை ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திருக் கையாலே
ப்ரஹ்ம மேதா ஸம்ஸ்கார விதி அடங்கச் செய்வித்துப் பள்ளிப் படுத்து ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏற எழுந்து அருளி
மற்றும் செய்ய வேண்டும் க்ருத்யங்கள் எல்லாம் செய்வித்தார்கள் –
ஸ்ரீ குருகைக் காவல் அப்பனும் ஸ்ரீ மன் நாத முனிகள் எப்போதும் யோகத்தில் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கு
அருகே யோகத்தில் எழுந்து அருளி இருந்தார் –

ஸ்ரீ மன் நாதமுனிகள் திரு நக்ஷத்ரம் ஆனி மாசம் அனுராதை

அவர் தனியன் –
வ்யோம் ந பரஸ்தாத் ஸவிதம் ச மேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதிராஜ சமந்தர ரத்னந் த்வயமாஹ
யஸ்மை நாதாய தஸ்மை முநயே நமோஸ்து –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் வைபவம் –

February 12, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

———————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் வைபவம்

சோள ஷிதவ் தநுஷி மாசி மஹேந்திர தாரே
ய ப்ராதுரா சமுரஜித் வநமாலிக அம்ச
ரங்கேச கேளி ஸஹ மூர்த்வசி கந்த் விஜேந்த்ரம்
பக்தாங்க்ரிரேணு மநகாத்ம குணம் ப்ரபத்யே
ரெங்கேச கேளி ரதம் /ப்ராதுர் பபூவ / பாட பேதங்கள்

தேஹ ஸ்ரீ சர துத்தரே ப்ரபவ நாம்ந்யப் தேகலவ் பாஸ்கர
சாபக்ராஹிணி பூமி ஸூநு திவசே ஜ்யேஷ்டா பிதே ஸ்ரீ மதி
ருஷே க்ருஷ்ண சதுர்த்தஸீ திதி யுதே பக்தாங்க்ரிரேணுஸ் ஸூதீ
ரங்கே சாங்க்ரீ சரோருஹைக ஹ்ருதய பிரபாவதாரம் புவி

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு மண்டங்குடி என்னும் கிராமத்திலே -மாஸானாம் மார்க்க சீர்ஷோ அஹம் -என்று
எம்பெருமான் தானாகச் சொல்லப்பட்ட மார்கழி மாசத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில் ஸ்ரீ வைஜயந்தி வனமாலிகா அம்சராய்
ப்ராஹ்மண வர்ணத்தில் திரு அவதரித்து அருளினார் –
தத் ரோத பூத் பாகவதரத் த்விஜேந்த்ராத் மாஹேந்த்ரபே மாஸிச மார்க்க சீர்ஷே ஸ்ரீ விப்ர நாராயண நாமதேய முராரி வஷோ
வனமாலிக அம்ச –என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே
பாகவதோத்வி ஜேந்த்ர என்பதும் ஸ்ரீ ரெங்க பக்தோ என்பதும் பாடாந்தரங்கள்

நம்பெருமாள் அவரை ஜாயமான காலத்திலே -அமலங்களாக விழித்துக் கடாக்ஷித்து அருள –
அத்தாலே சுத்த சத்வ நிஷ்டரான இவருக்கு விப்ர நாராயணர் என்று திரு நாமம் சாத்திக் காலம் தப்பாமல்
சவ்ள உபநய நாதிகளையும் பண்ணுவித்து நால் வேதம் ஆறு அங்கம் முதலான அகில வித்யைகளையும் அதிகரிப்பிக்க
அகில வித்யா பாரங்கதராய் -அதி விரக்தராய் அக்ருதோத் வாஹருமான இவர்
மருத் வ்ருதாயா மத்யஸ்தம் சந்த்ர புஷ்கரணீ தடே ஸ்ரீ ரெங்க மதுலம் க்ஷேத்ரம் ஸ்ரீ யா ஜுஷ்டம் ஸூபாஸ்தம்-என்கிறபடியே
சமாப்யதிக ரஹிதமாய் ஸ்லாகிக்கப் படுகிற ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்திலே புகுந்து
விமாநப்யேத்ய சது ப்ரதக்ஷிணஞ் சதுர்த்தி சம் தஸ்ய க்ருத பிராணாம ததந்தரா விஸ்ய விதிர் ததர்சத மிந்த்ர
நீலாசல சன்னிகாசம் பிரசன்ன வக்த்ரம் நளிநாயதே க்ஷணம் க்ருபா மயம் காந்தி நிகேத ரூபம் -என்கிற விக்ரஹத்தை
சதுரா நநன் சேவித்தால் போலே சதுரரில் அக்ர கண்யரான இவரும் –
அரவரச பெரும் ஜோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையின் மேலே பள்ளி கொண்டு அருளும்
பர வாஸூ தேவரான அழகிய மணவாளரை சேவிக்க
இவர் விஷய வாசி அறிந்து பற்றுகிறதே பற்றாசாகப் பெரிய பெருமாளும் தம்முடைய கிருபையாலே –
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் என்று சொல்லப்பட்டு இருப்பதாய் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-என்கிற
தம்முடைய வடிவு அழகைக் காட்டி இவரைத் தம் பக்கலிலே நிரதிசய பக்தி உக்தராம்படி கடாக்ஷித்து அருள

ஸ்ரீ விப்ர நாராயணரும் அபார காருணிகரான-அரங்கனார்க்கு ஆட்ச்செய்ய வேணும் என்று துளபத் தொண்டிலே தத் பரராய் –
புண்டரீகஸ் ச புண்ய க்ருத் -என்று புண்ய க்ருத்தாகச் சொல்லப் பட்ட ஸ்ரீ புண்டரீகரைப் போலேயும் –
தன்யோஹம் என்று -நன்மாலைகள் சாத்தி ஸந்துஷ்டரான ஸ்ரீ மாலா காரரைப் போலேயும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண-என்கிற கைங்கர்ய ஸ்ரீ யை யுடையராகையாலே ஸ்ரீ மான் என்று
சொல்லப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் போலேயும்
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் -என்று அஷ்ட வித புஷ்ப மயமான -அலம் கலன் தொடையல் கொண்டு
அடியிணை பணிந்த பெரியாழ்வாரைப் போலேயும்
இவரும் தம்மை ஏமாற்றம் தவிர்த்துத் திரு வரங்கத்தே கிடந்த திரு உடையாள் மணவாளர்க்குத் திரு நந்தவனம் செய்து
நித்யம் திருமாலை கட்டி சமர்ப்பித்து போருகிற காலத்திலே

திருக் கரம்பனூரிலே திவ்ய அங்கந அம்சையாய் அதி ஸூந்தரியையாய் வர்த்திக்கிற தேவ தேவி என்கிற வேஸ்யை
ஒரு கால் நிசுளா புரீசனான சோழனை சேவித்து மீண்டு வருகிற போது ஸ்வ சகிகளோடே கூட
மார்க்ககே தவ்யப நோதன அர்த்தமாக ஸ்ரீ விப்ர நாராயணர் செய்கிற திரு நந்தவனத்தில் திருச் சோலை நிழலிலே
ஒரு மரத்தடியில் இருந்து அத் திருச் சோலையின் ஸ்ரீ யைச் சுற்றிச் சுழன்று பார்த்துப் பரவசையாய்
பநச ஆம்ர பாடல நாளிகேர நாரங்க ஜம்பீர லிகுச கதளீ குரவக வகுள அசோக புந்நாக பூகீ ப்ரப்ருதி வ்ருஷ ஷண்ட
விடபாரூட சுகபிக சாரிகா திச குநைர் மதுர கூஜிதமாய் -நிரந்தர வசந்தமாய் மதுஸ்ரவ குஸூ மாந்த ராளத்திலே
மஜ்ஜூ கூஜந் மது வ்ரத யுக்தமாய்
கேதகீ மாலதீ ஜாதி மல்லிகா அரவிந்த கல்ஹார இந்தீவர சம்பகா மோத பந்துர கந்தவ ஹோப சேவிதமாய் இருக்கக் கண்டு
ஸ்வ அக்ரஜையைக் குறித்து -இப் பொழிலின் நிழல் ஸ்ரமஹரமாய் நந்தவனத்தையும் சைத்ரரதத்தையும்
பரிஹஸியா நின்றதீ -என்ன -அவளும் ஸ்மேராந நாப்ஜையான தேவ தேவியைக் குறித்து -ஸ்வ ப்ரஸூந ப்ரகர்ஷத்தாலே
நம்பெருமாள் திரு முடியைப் பூஷித்து வருமதாய் அவர் ம்ருகயா விஹார ஸ்ராந்தி பிரசமனம் பண்ணுமது
அஸ்மதாதிகளுக்கு அத்வ கேத ஹரணம் பண்ணாது ஒழியுமோ என்று ப்ரியாலாபம் பண்ணிக் கொண்டு
ஆராம லஷ்மீ நிஷீதேஷணர் ஆனவர்கள் அங்கே ஸ்ரீ விப்ர நாராயணரைக் கண்டார்கள்

இவரும் வளர்ந்த கேசஸ்மஸ் ருக்களைக் யுடையராய் ப்ரவ்ருத்த ரோம பிரகாசி தாங்கராய் பரிதவ்த தந்தவ ஸ்த்ரோர்த்வ
புண்டரங்களையும் உடையராய் -தரிக்கப்பட்ட துளஸீ பத்மாஷ மாலையையும் த்வாதசோத்வ புண்டரங்களையும் உடையராய்-
திவ்ய உத்யானஸ்த தருகுல் மலதாதிகளுக்கு ஆலவால கரண ஜலசேச நாதி கைங்கர்ய நிரதராய் நிற்க –
அத்தை அவர்கள் இருவரும் விஸ்மயத்துடனே ஆலோகித்துக் கொண்டு இருக்க
இவரும் தன் கைங்கர்யா சாக்த சித்தரராய் அவர்களைக் கண் எடுத்துக் பாராமல் திரஸ்கரித்து இருக்கிற அவ்வளவில்
தேவ தேவியும் தன் தமக்கையுடனே இவன் க்லீபனோ உன்மத்தனோ -நாம் வந்து முன்னே நிற்க நிரீஷியாது இருக்கிறானே என்ன
ததக்ரஜையும் அவளைக் குறித்து -இவர் க்லீபரும் அன்று -உன்மத்தரும் அன்று -ரெங்கேச கைங்கர்யாசக்த சித்தராய்
மஹா விரக்தரான இவர் த்வத் ரூப சம்பத்தியைக் காறி உமிழ்ந்திருப்பர் –
இவரை உன் விப்ரம விலாசஹா சேஷணாதிகளாலே மோஹிப்பித்தாயாகில் நீயே வார ஸ்த்ரீ ஜன முக்யை –
உனக்கு நான் ஆறு மாசம் தாசியாய் இருப்பேன் என்ன –
தேவதேவியும் அத்தைக் கேட்டு -இவரை நான் வஹி கரியா விட்டால் உனக்கு ஆறு மாசம் வெள்ளாட்டி யாவேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்வ அலங்காரத்தையும் கழற்றிக் கொடுத்து ஸ்வ சகிகளோடே கூட ஸ்வ அக்ரஜையையும் அனுப்பி சாத்விக வேஷ யுக்தையாய்
இவர் திருவடிகளிலே விழுந்து சேவிக்க
இவரும் இது என் பெண்ணே -என்று கேட்டு அருள –
அவளும் ஸ்வாமின் அடியேன் வார ஸ்த்ரீ வம்சத்தில் பாப வசாத் பிறந்தேன் –
என்னை என் தாயானவள் -சர்வரையும் பஜித்து அர்த்தார்ஜனம் பண்ணு-என்ன –
அடியேன் பூர்வம் பாபங்களைப் பண்ணி இஜ் ஜென்மத்தில் பிறந்ததும் அன்றியே இன்னம் பாபார்ஜனம் பண்ணிப் படு குழியில்
விழ வேணுமோ என்று சொல்லி அர்த்த லுப்தையான இவளைப் பரித்யஜித்துப் பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்ய நிரதரான தேவரீர்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேணும் என்று வந்தேன் –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வமுடைய அடியேனை இரங்கி அருளி ஆராமர க்ஷண க்ருத்யே நியோகித்தால்
தேவரீர் பெருமாளுக்குத் திருமாலை சமர்ப்பித்து மாதுகரம் பண்ணி எழுந்து அருளும் தனையும் காத்து இருக்கிறேன் என்ன
இவரும் இரங்கி அருளித் தம்முடைய திருவாராதனமான எம்பெருமானுக்குப் பைஷத்தை அமுது செய்யப் பண்ணித்
தாமும் அமுது செய்து நிஜபுக்த சேஷத்தையும் இரங்கி அருளினார்

பின்பு அவளும் திருநந்தவனத்தில் திருத் துழாய் முதலான பூம் செடிகளுக்குக் குழி கட்டிச் சோதித்துக் கொத்தித்
திரு மஞ்சனம் பரிமாறிக் கொண்டு இப்படியே ஆறு மாசம் அனுவர்த்தித்து இருந்தாள்-
பின்னையும் குழி கட்டிச் சோதித்துத் திருமஞ்சனம் பரிமாறிக் கொண்டு இருக்கச் செய்தே வர்ஷா காலமானவாறே
ஒரு நாள் பெரு வர்ஷம் வர்ஷிக்க ஸ்ரீ விப்ர நாராயணரும் பர்ணசாலையிலே பிரவேசித்து இருக்க அவளும் அப்பாலே இருந்து
நனையா நிற்கக் கண்டு உள்ளே வா என்று அழைக்க -அவளும் உள்ளே புகுந்த அளவில் ஈரப்புடைவையுடன் இருப்பதைக் கண்டு
தம்முடைய உத்தரீயத்தைப் பிரகாசிக்க -அவளும் தரித்துக் கொண்டு அவரைப் பார்த்து திருவடிகளை பிடிக்கிறேன் என்ன
இவரும் அனுகூலிக்க அவளும் திருவடிகளைப் பிடியா நிற்கச் செய்தே
அங்கார சத்ருசீ நாரீ க்ருத கும்ப சம புமான்-என்கிறபடியே நெருப்பைச் சேர்ந்த நெய்யைப் போலே இவர் மனம் உருகச் செய்தே
அவளும் ஸ்வாமி அடியேனுக்கு ஹிதமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று மந்த ஸ்மிதம் செய்து
அபாங்க வீக்ஷணம் பண்ண -இவரும் விகரித்து அவள் கையைப் பிடிக்க அவளும் தந்யை யானேன் என்று
இவரைக் காடா லிங்கனம் பண்ணிக் கொண்டு ரமித்து

ஒருகாலும் காந்தா விஷயா நபிஜ்ஞரான இவரை மநோ பவாயோதந வைபவத்தால் ஸ்வ விஷயே மக்நமநா வாக்கினாள்-
அதன் மற்றை நாள் ஸ்வ க்ருஹத்தின் நின்றும் ஸ்வ ஆபரணத்தை அழைப்பித்துக் கொண்டு சர்வ ஆபரண பூஷிதையாய்
இவரைத் தன் ஆபி ரூப்யத்தாலே மயக்கி அவயவ ஏக தேசத்திலே ஆழங்கால் படுத்தி திரு நந்தவனத்தில்
மல்லிகா லதா க்ருஹத்தையும் மாதவீ குஸூமோத்கர குஞ்சத்தையும் விசித்ர நிர்ப்பர மன்மத உத்சவ ரசத்தையும் அனுபவிப்பித்து
த்ருட அநுகாரத்தாலே ஒருவரை ஒருவர் ஒரு க்ஷணமும் பிரிய ஷமர் இன்றிக்கே இருந்து இவரை
ஸ்வ வச வர்த்தியாம் படி பண்ணி ஸ்வ சம்பந்தத்தை சஹிப்பிக்க தன் சகிகளும் தமக்கையும் கண்டு ஸ்லாகிக்க
தீர்ண ப்ரதிஜ்ஜையாய் ஸ்வ க்ருஹமே வந்து இவருடைய வர்ணாஸ்ரம தர்மங்களையும் குலைத்துக்
காமுக வேஷ யுக்தராம் படி பண்ணி பிரகிருதி பரவசராக்கி அதி ஸ்நிக்தை போலே சில காலம் ரமியா நிற்க

இவரும் சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனால் அறத்தையே மறந்து -என்கிறபடியே விஷய ப்ரவணராய்
ஸ்வ தர்ம அனுஷ்டான சந்த்யா சாவித்ர்யாதிகளையும் மறந்து ஸ்த்ரீ போகமே கால ஷேபமாக வர்த்திக்க
இவரை சர்வ ஸ்வ அபஹாரம் பண்ணி ஸூந்ய தநர் ஆனவாறே தானும் அநுராக ஸூந்யையாய்த் தள்ளி விட
இவரும் அவள் க்ருஹ த்வாரத்திலே கின்னராய் முசித்துக் கொண்டு கிடக்க
அவ்வளவில் பெருமாளும் பிராட்டியும் அவ்வீதியிலே ச விலாச சஞ்சாரம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளா நிற்க
அவ்வளவில் பிராட்டி இவரைக் கண்டு மந்தஹாசம் பண்ணி -வேஸியா க்ருஹ த்வாரத்திலே முசித்துக் கொண்டு கிடக்கிறார்
யார் என்று கேட்க -பெருமாளும் -நமக்குப் பூ மாலை தரும் விப்ர நாராயணன் வேஸியா சக்தனாய்
அவளாலே அர்த்த லோபத்தாலே நிராக்ருதனாய் துக்கிதனாய் தத்வாரி முசித்துக் கொண்டு கிடக்கிறான் என்று அருளிச் செய்ய

பிராட்டியும் பெருமாளுடனே-நமக்கு அந்தரங்கரானவர் இங்கனே விஷயா சக்தரானாலும் விஸ்வ மோஹன ஹேதுவான தேவரீர்
மாயைக்கு விஷயம் ஆக்கலாமோ -இவரை விஷயாசக்தியால் உண்டான பாபத்தை நிஸ் சேஷமாக நிவர்த்திப்பித்துத்
தேவரீர் திருவடிகளுக்கு அந்தரங்கராம் படி கடாக்ஷித்து அருள வேணும் என்ன
பெருமாளும் பிராட்டி வார்த்தைக்கு இசைந்து தம் பஞ்ச பாத்ரத்திலே ஒரு தபநீயமான ஸூத்தா உதக பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
வந்து வேஸியா க்ருஹ த்வாரி நின்று -தேவ தேவீ கவாடோத் காடநம் பண்ணு என்ன –
அவளும் நீர் யார் என்று கேட்க -நான் அழகிய மணவாளன் என்பவன் -விப்ர நாராயணருடைய தூதன் -அவர் அனுப்ப வந்தேன் என்ன –
அவளும் சடக்கென கதவைத் திறந்து என் என்று வினவ
பெருமாளும் ஸ்ரீ விப்ர நாராயணன் உனக்கு இந்த ஸ்வர்ண பாத்ரத்தைத் தந்தான் என்ன
அவளும் ப்ரஹ்ருஷ்டையாய்த் தய நீய பாத்ரத்தை வாங்கிக் கொண்டு -அவரை உள்ளே வரச் சொல்லும் என்ன –
அழகிய மணவாளனும் விப்ர நாராயணர் அண்டையிலே சென்று -தேவதேவி உம்மை உள்ளே வரச் சொன்னாள்-என்ன
இவரும் கர்ணாம்ருதமான வார்த்தையைக் கேட்டு ஸந்துஷ்டராய் உள்ளே புகுந்து அவளுடனே க்ரீடா பரராக –
அவ்வளவில் பெருமாளும் உரக மெல்லணையிலே சாய்ந்து அருளினார்

அநந்தரம் பொழுது விடிந்தவாறே திருக்காப்பை நீக்கின அளவிலே சந்நதியில் இருந்த தபநீய சுத்த உதக பாத்ரத்தைக் காணாமல்
கோயில் பரிகரத்தார் அடையப் பயப்பட்டு ராஜ கர்த்தருக்கு அறிவிக்க நிசுளா புரீந்த்ரனான ராஜாவும் கேட்டு
நம்பியார் பரிசாரகர் முதலானோரைப் பிடித்துத் தண்டிக்க -அவ்வளவில் ஜாலஹரண அர்த்தமாக வந்த தேவதேவி அகத்துக் கட சேடி
தன்னோடு சம்பந்தம் உடையான் ஒருவனைப் பாதிக்கக் கண்டு இது என் என்று கேட்க
அந்தப் பாதைப் படா நிற்கிறவர்கள் தபநீயா பாத்ரம் காணாமல் போனத்தை அவளுக்குச் சொல்ல அவளும் கேட்டு
ஸ்ரீ விப்ர நாராயணன் எங்கள் தேவிக்கு ஒரு ஸ்வர்ண பாத்ரம் கொடுத்து இருக்கிறான் –
அவள் மெத்தை தலையணை கீழே வைத்து இருக்கிறது என்ன அவர்களும் கர்ணாம்ருதமான இவ்வார்த்தையைக் கேட்டு
ராஜ கர்த்தருக்குச் சொல்ல அவர்களும் வந்து இவர்களைப் பிடித்துக் கொண்டு அவள் க்ருஹத்தைச் சோதித்து
அந்த வட்டியையும் எடுத்துக் கொண்டு தேவ தேவியையும் விப்ர நாராயணரையும் பிடித்துக் கொண்டு வந்து
ராஜா முன் விட அரசனும் வேசியைக் குறித்து -இப்படி பெருமாளுடைய பாத்ரத்தை நீ வாங்கலாமா என்ன –
நாயந்தே நான் பெருமாளது என்று அறியேன் -இவன் தன் வட்டில் என்று தன் தூதன் அழகிய மணவாளன் என்பான் ஒருவன்
கையிலே வர விட்டான் -அறியாமல் வாங்கினேன் என்ன
இவரும் நமக்கு ஒரு தூதனும் இல்லை நான் வட்டியையும் அறியேன் என்ன அவளும் உண்டு என்ன இவரும் இல்லை என்ன
இப்படி உபயருடைய விவாதமும் கேட்டு அரசனும் அந்த வேசியையை அபராத தண்டம் வாங்கி
வட்டியையும் பெருமாளுக்கு சமர்ப்பித்து இவரையும் ஸ்வர்ணஸ் தேயயுக்த தண்டம் பரீக்ஷித்துப் பண்ணக் கடவோம் என்று
காவலில் வைத்து ஸ்வ க்ருஹமே போந்தான் –

அவ்வளவில் பிராட்டியும் பெருமாளுடனே ஸ்ரீ விப்ர நாராயணரை இனி லீலைக்கு விஷயம் ஆக்காதே
இரக்கத்துக்கு விஷயம் ஆக்கிக் கொள்ள வேணும் என்ன பெருமாளும் ராஜாவின் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி
ஸ்ரீ விப்ர நாராயணர்க்கு பிராரப்த கர்மத்தை இங்கே கழிக்கைக்காக நாமே தபநீய பாத்ரத்தைக் கொடுத்துத் தண்டிப்போம்
அத்தனை அல்லது அவர் தண்டயர் அன்று நிர்த்தோஷர்-அந்த வேஸ்யா தனமும் நமக்கு வேண்டா –
அவரை விட்டுப் பூர்வம் போலே திருமாலை கைங்கர்யத்தில் நிறுத்த வேணும் என்று நியமித்து அருள
சோழ பூ பதியும் விடியற்காலத்திலே எழுந்து இருந்து நம்பெருமாள் தனக்கு ஸ்வப்னத்திலே நியமித்து அருளின படியைச் சொல்லி
விஸ்மயப்பட்டு ஸ்ரீ விப்ர நாராயணரை அழைப்பித்து அநேகமாக சத்கரித்துத் தண்டன் இட்டு விட
இவரும் தம் நிஹீன க்ருத்யத்தை நினைத்து நினைத்து அனுதாபித்து –
அன்ன மென்னடையார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் என்கிறபடியே விஷயாசத்தி ருசியை காறி உமிழ்ந்து
அகம்யா கமந பிராயச்சித்த அர்த்தமாக –
ஏதத் ஸமஸ்த பாபா நாம் ப்ராயஸ் சித்தம் மநீஷிபி நீர்ணீதம் பகவத் பக்த பாதோதக நிஷேவணம் -என்று சொல்லுகிறபடியே
சர்வ பாப ப்ராயச்சித்தமான பகவத் பக்த பாதோதக நிஷேவணம் பண்ணிப் பூதராய் அருளினார்

அநந்தரம் இவருக்கு க்ராம குலாதிகளால் வரும் அனர்த்தப் பேர் அன்றிக்கே நிலை நின்ற திருநாமம் ஆவது –
யஸ்ய மூர்திநஸ்தி தம்யாவத் வைஷ்ண வாங்க்ரி ரஜஸ் ஸூபம் -கங்காதி சர்வ தீர்த்தாநி தாவத் திஷ்டந்த்ய ஸம்சயம் -என்றும்
நிரபேஷம் முனிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சினம் அநு வ்ரஜாம் யஹன் நித்யம் பூயேயேத் யங்க்ரி ரேணுபி -என்றும்
மாறன் தமர் அடி நீர் கொண்டு அணிய முயலில் மற்று இல்லை கண்டீர் இவ் வணங்குக்கே -என்றும்
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்யம் செய்ததே -என்றும்
தொண்டர் அடிப் பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவுதே -என்றும்
இவ்வார்த்தை விஷயம் தத்வ வித்துக்கள் பலராலும் உத்தேச்ய தமமாக ஆதரிக்கப் பட்டு இருக்கையாலே

துளவத் தொண்டிலே நிஷ்டராய்ப் போரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ பாத தூளி என்றே தமக்கு உஜ்ஜீவந கரமான
நிலை நின்ற திரு நாமத்தை உடையராய்
பாவோ நான்யத்ர கச்சதி -என்ற திருவடியைப் போலேயும்
ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமயே நத்வயா விநா-என்ற இளைய பெருமாளை போலேயும்
மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்ளுவது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு –
என்ற நம்மாழ்வாரைப் போலேயும்

இவரும் இந்திர லோகம் ஆழும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றும் தத் வ்யதிரிக்தமான
இதர புருஷார்த்தங்களில் செல்லாத திரு உள்ளத்தை யுடையராய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்கிறபடியே இவரும்
மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லுப் புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் என்று அனுசந்தித்து க்ருதஞ்ஞராய் -அதுவும் அன்றிக்கே

நாகத்தணை குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத்தணை அரங்கம் பேர் அன்பில் -என்றும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை -என்றும் இப்படி பல இடங்களிலும் மண்டித் திரிகிற
மற்றைய ஆழ்வார்களைப் போலே அன்றிக்கே
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்ற அழகிய மணவாளர் அல்லது அறியாத பாதி வ்ரத்யத்தை யுடையராக
அவ்வளவில் நம்பெருமாளை இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தம்முடைய பரத்வாதி பஞ்ச பிரகார ஸ்வரூப ரூப குண விபூதி
சேஷ்டிதங்களை எல்லாம் நிஸ் சந்தேகமாகக் கரதல அமலகமாக்கித் தெளியக் காட்டிக் கொடுக்க இவரும்
தெளிவுற்ற சிந்தையராய் நிரவதிக பக்தியைப் பெற்று வர்த்திக்கும் படியைத்

தேவ தேவியும் கண்டு இவரைப் போலே உஜ்ஜீவிக்க வேணும் என்று நினைத்துத் தன் சர்வத்தையும் நம்பெருமாளுக்கும்
சமர்ப்பித்துப் பரம சாத்விகையாய் சத் சங்கதி சதா பஸ்யந்தியிலே வைக்கும் என்னுமா போலே நம்பெருமாள் கோயிலிலே
சம்மார்ஜனாதி கைங்கர்ய நிரதையாய் உஜ்ஜீவித்தாள்

இவ்வாழ்வாருக்குப் பரபக்தி பரஞான பரமபக்திகள் தலை மண்டி இட்டு -பிதா புத்ரஸ் ச நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் முற்றுமாய் மற்றுமாய்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வவித உத்தாரக பந்துவாய்ப் பெரிய பெருமாளைத் திரு மந்த்ர அனுசந்தானத்தாலே அனுபவித்து அருளி
அத் திரு நாம உச்சாரணத்தாலே தமக்கு உண்டான ராஜ குல மஹாத்ம்யத்தாலே –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தரை திறம்பேன் மின் கண்டீர் -என்று
யமன் பாச ஹஸ்தரான ஸ்வ புருஷரைப் பார்த்து கர்ண மூலத்திலே உபதேசிக்கத் தக்கதாக
நமன் தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று அம் மந்த்ர வைபவத்தைச் சொல்லுகிற இவர்

ஸ்ரீ ஸுவ்ன பகவான் வக்தாவாக ஸ்ரீ சதா நந்தர் ஸ்ரோதாவாகத் திரு நாமங்களைக் கேட்டால் போலே
பெரிய பெருமாள் ஸ்ரோதாவாகத் தாம் வக்தாவாய்க் கொண்டு பிரகாசிப்பித்து அருளி
பூதா நிச கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச டவர்க்கேண தவர்க்கேண ஞான கந்தா தயஸ் ததா
மன பகாரனைவோக்தம் சகா ரேணத்வ ஹங்க்ருதி வகாரேண பகாரேண மஹான் ப்ரக்ருதி ருச்யதே -என்றும்
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் யேய் ப்ரக்ருதி மானாங்கார மனங்கள் -என்றும்
சொல்லப்படுகிற சதுர் விம்சதி தத்வாத்மகமான இஸ் சரீரத்தில் ஆத்ம புத்தியை புறம் சுவர் ஓட்டை மாடம் -என்று நிவர்த்திப்பித்தும்
ஆத்மாது சம காரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்று சொல்லப்படுகிற இருபத்தஞ்சாம் அக்ஷரமான மகார வாச்யனாகையாலே
ப்ரக்ருதே பரனான ஆத்ம ஸ்வரூபத்தை -அடியயோர்க்கு என்று ஸ்வரூப நிர்த்தேசம் பண்ணியும்
திருமந்திர நிஷ்டராய் மெய்ம்மையை மிக உணர்ந்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர் பெரிய பெருமாளுக்கு
அபிமதர் என்று அவர்கள் தமக்கு உத்தேசியர் ஆகையால் உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் என்று
தமக்குப் பெருமாள் உண்டாக்கின ததீய சேஷத்வத்தைப் பேசியும்
இப்படி இவ்வார்த்தை விசேஷங்களை அகிலரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி திருமாலை -திருப்பள்ளி எழுச்சி என்கிற
திவ்ய பிரபந்தங்களிலே விசத தமமாக அருளிச் செய்து லோகத்தை வாழ்வித்து அருளினார்

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பராத்பரன் -ஆதி பகவன் -பர ப்ரஹ்மம்-ஸ்ரீ மன் நாராயணனே -பிரமாணங்கள் —

February 12, 2019

அமலன் ஆதி -உபய லிங்கத்தவம்–மோக்ஷ பிரதத்வம் -ஜகத் காரணத்வம் -சத்ர சாமரம் ராஜாவுக்கு போலே –
வீறு கொண்டு -பக்த முக்த நித்ய -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ப்ரக்ருதி -அபுருஷ -புருஷ – உத் புருஷ உத்தர- புருஷ -உத்தம புருஷ -விலக்ஷணன் புருஷோத்தமன்-
சத்யம் -ஞானம் -அநந்தம்- ஆனந்தம் அமலத்வம் -பாஞ்சமும் உண்டே

சமாசம் -சேர்த்து -வியாசம் பிரித்து -அருளியதால் -வியாசர் —
பரமாத்மா -எவரைக் காட்டிலும் மேம்பட்ட வஸ்து இல்லாதவன் –
ப ரமா ஆத்மா -ரஷிக்கிறான் -ஸ்ரீ யபதி-/ பரா மா ஆத்மா -பெரிய பிராட்டியாருக்கு ஆத்மா –என்று மாதவ பாஷ்யம்

அழகிய காது அப்பன் ஆனான் புண்டரீ காஷன் -கண்ணன் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் கேட்டதும் -ரிஷிகள் நடுவில் இருந்து கேட்டான் –
தேவ ஸ்தானர் -ரிஷி பெயர் -பல ரிஷிகளும் கேட்க -/கோபிமார் கொய்சகத்தில் அலையும் தத்வம் -/
குசலவர்கள் சொல்ல ராமன் கேட்டருளி /

———————————————————-

அருளிச் செயல்களில் பரத்வ நிர்ணயம் –

தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் விளைத்த உந்தி -என்றும்
பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -என்றும்
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படி என்று முதல் படைத்தாய் -என்றும்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கு -என்றும்
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து -என்றும்
இரும் தண் கமலத்து இரு மலரினுள்ளே திருந்து திசை முகனைத் தந்தாய் -என்றும்
நின் உந்திவா அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் என்றும்
உந்தியில் ஏற்றினாய் நான்முகனை -என்றும்
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் -என்றும்
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் -என்றும்
இப்படி ஆழ்வார்கள் எல்லாரும் ப்ரஹ்ம ருத்ராதிகளை சர்வேஸ்வரன் தானே ஸ்ருஷ்ட்டித்தான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழு திசை முகன் -என்றும்
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழ தன்னுள் வைத்து -என்றும்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒரு விடமும் பெருமாற்கு அரன் -என்றும்
எறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்-என்றும்
சிவனொடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் -என்றும்
மலர் மகள் நின்னாகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான நின் ஆகத்து இறை -என்றும்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்துக்
கறை தங்கு வேல் தடம் கண் திருவாய் மார்பில் கலந்தவன் -என்றும்
விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயிநீ-என்றும் சொல்லப்படுமவளாய்
இறையும் அகலகில்லாத நித்ய சித்த மங்களாவஹையாய்ப் பரம மஹிஷியான பெரிய பிராட்டியாருடனே
ரஜஸ் தாமஸ் குண மிஸ்ராரான ப்ரஹ்ம ருத்ரர்களுடன் வாசி அறத் தன் திரு மேனியில்
இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும்
இந்திரனும் மற்றை அமரர் எல்லாம் -என்றும்
கள்வா எம்மையும் எழு உலகையும் நின் உள்ளே தோற்றிய இறைவன் என்று வெள்ளேறன் நான்முகன்
இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவார் -என்றும்
நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் என்றும்
நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே -என்றும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை -என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் என்றும்
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு மற்றுமுள்ள
வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத -என்றும்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மால் -என்றும்
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் செழும் கதிரோன்
ஒண் மலரோன் கண் நுதலோன் என்றே தொழும் தகையார் நாளும் தொடர்ந்து என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணித் திரிவார்கள் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ -என்றும்
சிவனாய் அயனானாய் -என்றும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான் மூகக் கடவுளே -என்றும்
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் சடையாய் வாய்த்த என் நான்முகன் -என்றும்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான் முகனை -என்றும்
முனியே நான்முகன் முக்கண் அப்பா -என்றும்
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று -என்றும்
இப்படி இத்திவ்ய பிரபந்தங்களிலே ஆதி மத்ய அவசானமாக ப்ரஹ்ம ருத்ராதிகளிலே சர்வேஸ்வரன் தானாக அருளிச் செய்தும்

ஆக இப்படி ஒரு கால் அருளிச் செய்தது ஒரு கால் அருளிச் செய்யாது இருக்கையாலே
இவற்றை முக்கிய தமமான பிரமாணம் என்று விஸ்வசிக்கலாய் இருந்தது இல்லையே என்னில்-விஸ்வசிக்கக் கூடும்
எங்கனே என்னில் –
இவ் வாழ்வார்கள் தாங்கள் தங்களுக்கு தேவதாந்த்ர விஷய வைராக்யம் உண்டு என்று தோற்ற
ஓ ஓ உலகினது இயல்வே -ஈன்றோள் இருக்க மணை நீராட்டிப் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்பப் புடைப்பல தானறி தெய்வம் பேணுதல்
தான் புல்லறிவாண்மை பொருந்தக்காட்டி -என்றும்
எம்பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமே யாமே -என்றும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -என்றும்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்-என்றும்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -என்றும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே என்றும்
அவ்வளவும் அன்றிக்கே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் சுடர் மிகு ஸ்ருதியும் இவை உண்ட சுரனே -என்றும்
போதின் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொலின்
மாது தங்கு கூறன் ஏற தூர்தி என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசிக் கிடந்ததே என்றும்
கபால நன் மோக்கத்துக்குக் கண்டு கொண்மின் -என்றும்
மார்க்கண்டேயனும் கரியே கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
சத்தியம் காண்மின் இனைய சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
இப்படி பிரமாணத்தாலும் பிரத்யஷத்தாலும் சாக்ஷியாலும்

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீரமான படியை
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்-என்றும்
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே என்றும் அருளிச் செய்தார்கள்
இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீர பூதராக-அவன் தான் ஆத்மாவாக -இவர்களை அவன் தானாகச் சொல்லும்படி
எங்கனே என்னில்
சரீர வாச சப்தம் சரீர பர்யந்த ஸ்வார்த்த அபிதானம் பண்ணக் கடவது இறே
ஒரு சரீரீ யானவன் ஸ்தூலோஹம் க்ரூசோஹம் -என்று தானும் சொல்லி-
பிறரும் நீ தடித்தாய் இளைத்தாய் என்று சொல்லுமோபாதி இவர்களையும் சர்வேஸ்வரன் தானாகச் சொல்லக் குறையில்லை –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றும்
தேவராய் நிற்கும் அத்தேவு மத்தேவரின் மூவராய் நிற்கு முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
முதலாவார் மூவரே யம்மூவர் உள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –என்றும்
இத்யாதிகளாலே அவனை ஒழிந்த சகல சேதன அசேதனங்களும் அவன் தானாகவே அருளிச் செய்தார்கள்

இவன் திரு மேனியில் சர்வ காலமும் இருப்பர்களோ என்னில் –
ஆபத்காலத்தில் எம்பெருமான் திருமேனியில் ஒதுங்க அவர்களுக்கும் இடம் கொடுக்கும் அத்தனை அல்லது
எப்போதும் இரார்கள்-
இது தான் சர்வேஸ்வரனுக்கு மஹத்தான சீல குணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதும் அத்தையே
அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
தாள தாமரையான் உனது உந்தியான் வாள் கொள் ஈண் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ் கோ யுன சீலமே-என்றும்
அக்கும் புலியின தளுமும் உடையாராவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்-என்றும் சொல்லக் கடவது இறே
கலகங்களானால் அடைய வளைந்தானுக்கு உள்ளே இன்ன ஜாதி என்னாமல் எல்லாரும் கூடி இருந்து
கலஹம் தெளிந்தவாறே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னான் பற்று இவ்விடம் இன்னான் பற்று என்று சொல்லுமா போலே
என்று நஞ்சீயருக்குப் பட்டர் அருளிச் செய்தார் இறே

————————————

திரு வள்ளுவர் -வல்லபாச்சார்யர் -கருமாத்யக்ஷர் -வடமொழி நாமம் -என்பர்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு -1-
மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தா அயதெல்லாம் ஒருங்கு -610-
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு -1103-

——————————-

சுத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி சப்த்யதே மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகா ரோர்த்தத் வ்யான்வித நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் தத ஸ்ம்ருத
ஐஸ்வரஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யஸ ஸ்ரீய ஞான வைராக்ய யோஸ்ஸைவ ஷண்ணாம் பக இதீரனா
வசந்தி தத்ர பூதாநி பூதாத்மன் யகிலாத்மநி ச ச பூதேஷ்வசே ஷேஷு வகாரத்தஸ் ததோவ்யய
ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மஹா சப்தோ மைத்ரேய பகவாநிதி பரம ப்ரஹ்ம ரூபஸ்ய வாஸூ தேவஸ்ய நாக்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷ சமன்வித சப்தோயம் நோப சாரேண அந் யத்ர ஹ்யுப சாரத–ஸ்ரீ விஷ்ணு புராணம்

ப காரம் -பிரகிருதி -கார்ய தசையை அடையச் செய்யும் ஸ்வாமி
க காரம் -ரக்ஷித்து சம்ஹரித்து ஸ்ருஷ்டித்து அருளுபவர்
வ காரம் -பூதங்களில் வசித்து -பூதங்களும் வாசிக்கப்படுபவன் -அந்தர் பஹு வியாப்தி
பக–சம்பூர்ணமான ஞான பல சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் வீர்யம்

——————————

த்யாயீத புருஷம் விஷ்ணும் நிர்க்குணம் பஞ்ச விம்சகம் புரமாக்ரம்ய சகலம் சேதே யஸ்மான் மஹா பிரபு
தஸ்மாத் புருஷ இத்யேவ ப்ரோச்யதே தத்வ சிந்தகை –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி

பூஸ் சம்ஜேஸ்மின் சரீரே வை சயநாத் புருஷோ ஹரி
சகாராஸ்ய ஷகாரோயம் வ்யத்யாசேந ப்ரயுஜ்யதே
யதி வா பூர்வ மேவா ஹமிஹேதி புருஷம் விது
யதி வா பஹு தாநாத் வை விஷ்ணு புருஷ உச்யதே
பூர்ணத்வாத் புருஷோ விஷ்ணு புராண த்வாச்ச சார்ங்கிண
பத்வா புருஷ சப்தோயம் ரூட்யா பக்தி ஜனார்த்தனம் –ஸ்ரீ பாத்ம புராணம்

புரு — சநோதீதி புருஷ -வ்யுத்பத்தி

பூதைர் மஹத்பிர் ய இமா புரோ விபு நிர்மாய சேதே யத மூஷு பூருஷ
ஸ்வாம் சேந விஷ்ட புருஷாபிதாநம் அபாவ நாராயண ஆதி தேவ
பூதைர் யதா பஞ்பி ராத்ம ஸ்ருஷ்டை புரம் விராஜம் விரசய்ய தஸ்மின்
ஸ்ருஷ்ட்வா ஸ்வ சக்த்யேத மனு ப்ரவிஷ்ட சதுர்விதம் பரமாத்மாம் சகேந அதோ விதுஸ் த்வாம் புருஷம் –ஸ்ரீ மத் பாகவதம்

ய ஏவ வாஸூ தேவோயம் புருஷ ப்ரோச்யதே புதை
ப்ரப்ருதி ஸ்பர்ச ராஹித்யாத் ஸ்வா தந்தர்யாத் வைபவாதபி
ச ஏவ வாஸூ தேவோயம் சாஷாத் புருஷ உச்யதே
ஸ்த்ரீ ப்ராயமிதரத் சர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் சரம்
ப்ரஹ்மாத்யா தேவதாஸ் சர்வா யஷதும் புரு மானுஷா
தே சர்வே புருஷாம் சத்வாத் விச்ருதா புருஷா இதி –ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்

தஸ்யை கஸ்ய மஹத்த்வம் ஹி ச சைக புருஷ ஸ்ம்ருத மஹா புருஷ சப்தம் ஹி பிபர்த்யேக சனாதன
ச ஹி நாராயணா ஜ்ஜேய சர்வாத்மா புருஷோ ஹி ச –ஸ்ரீ மஹா பாரதம்

அந்யநாம் நாம் கதிர் விஷ்ணு ரேக ஏவ ப்ரகீர்த்தித ருதே நாராயணா தீநி நாமாநி புருஷோத்தம ப்ராதான் யத்ர பகவான் —
–ததேவ பகவத் வாஸ்யம் ஸ்வரூபம் பரமாத்மந வாசகோ பகவச் சப்தஸ் தஸ் யாத்யஸ்யா ஷயாத்மந –ஸ்ரீ விஷ்ணு புராணம்

பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி நிரூபாதீ ச வரத்தேதே வாஸூ தேவே ஸநாதநே–ஸ்ரீ வராஹ புராணம்

ப்ருஹத்வம் ச ஸ்வ ரூபேண குணை ச யத்ர அநவதி காதி சயம்
ச அஸ்ய முக்ய அர்த்த சச சர்வேஸ்வர ஏவ
அதோ ப்ரஹ்ம சப்த தத்ரைவ முக்ய வ்ருத்த
தஸ்மாத் அந் யத்ர தத் குண லேச யோகாத் ஒவ்பசாரிக பகவச் சப்த வைத்த –ஸ்ரீ பாஷ்யம்

பகவான் -563-திரு நாமம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்
ஹரி வம்சத்தில் சொல்லியபடி பகம் எண்ணப்படும் பூரணமான ஐஸ்வர்யம் தர்மம் கீர்த்தி லஷ்மி வைராக்யம் மோக்ஷம் –
ஆகிய ஆறு குணங்களும் பொருந்தினவர்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லியபடி பிராணிகள் உண்டாவதையும் அழிவதையும் வளர்வதையும் தெய்வத்தையும்
ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் அறிபவர் -ஸ்ரீ சங்கர பாஷ்யம்

குற்றங்கள் அனைத்தையும் ஒழித்துக் கல்யாண குணங்களே நிரம்பின ஸ்வரூபம் ஆதலால்
பூஜிக்கத் தக்கவர் -ஸ்ரீ பட்டர் பாஷ்யம்

————————————-

அந்தம் இலா ஆதி யம் பகவன் –திருவாய் மொழி -1-3-5–

தனக்கு அந்தம் இன்றி -எல்லார்க்கும் தான் ஆதியாய் ஸ்வா பாவிகமாய்
ஹேயபிரத்ய நீகமான ஞானாதி கல்யாண குண பரிபூர்ணன் — ஒன்பதினாயிரப்படி

அந்தமில் -முடிவில்லாத / ஆதி முதல் /ஆகையால் நித்யனாய் -/அம் ஹேயபிரதி படனாய் /
பகவன் -கல்யாண ரூபமான ஞான சக்த்யாதி குண விசிஷ்டனான பகவானுடைய –பன்னீராயிரப்படி

அந்தமிலாதி -ஆப்த தமன் -எல்லாருக்கும் உத்பத்தி விநாசங்களால் இறே ஞான சங்கோசம் பிறப்பது –
இவனுக்கு அவை இல்லாமையால் அகர்ம வஸ்யன் என்கிறது
அம் பகவன் -ஞானாதிகளால் ஆல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச் சப்தம் வர்த்தியா நின்றது இறே
அந் யத்ர ஹ்யுபசாரத–பகவச் சப்தம் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே
அல்லாதார் பக்கலிலே ஒவ்பசாரிகம் –ஈடு

அமலனாதிபிரான் -என்பதில் ஆதி -ஏஷ கர்த்தா நக்ரியதே -இத்யாதிகள் படியே சர்வ ஜகத் ஏக காரண பூதன்
இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுக்கு சரணமாகப் பற்றப்படுமவன் என்று பலிதம்
இக்காரணத்வமும் மோக்ஷப்ரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே
சர்வ லோக சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள் –ஸ்ரீ தேசிகன் -முனி வாகன போகம்

——————————–

இப்படி ஸ்வ அதீன சர்வ சத்தாதிகளை உடையவன் -ஸ்வரூபம் –
ஸத்யமாய் -ஞானமாய் -அநந்தமாய்–ஆனந்தமாய் –அமலத்வமாய் -இருக்கும்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
உணர் முழு நலம்
சூழ்ந்த அதனுள் பெரிய சுடர் ஞான இன்பம்
அமலன்

ஞானதிகள் ஸ்வரூப நிரூபண குணங்கள்–இவை பரத்வ உப யுக்தங்கள்
மற்றவை நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்கள்
குணங்கள் எல்லாம் சர்வ காலத்திலும் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக இருக்கும் –
உபநிஷத்தில் வித்யா விசேஷங்கள் தோறும் அனுசந்தேய குண விசேஷங்கள் நியதமாய் இருக்கும்
ஸாஸ்த்ர ஸித்தமான ரூப அனுசந்தானத்துக்கும் குண விசேஷங்கள் நியதமாய் இருக்கும் –
பர ரூபத்தில் ஞானத்து குணங்கள் ஆறும் வேத்யங்கள் –ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் -தத்வ த்ரய சிந்தனை அதிகாரம்

நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க வ்யூஹ வாஸூதேவன் பர வ்யூஹ வாஸூதேவன் –
குண பேதம் இல்லாமையால் நாலு வ்யூஹம் த்ரி வ்யூஹம் என்றும் சொல்லும்
குணைஸ் ஷட் ப்ஸ்த் வேதை பிரதம தர மூர்த்தி ஸ்தவ பபவ்
ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரி பிரபு –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

ஷாட் குண்யாத் வாஸூ தேவ பர இதி சபவான் முக்த போக்யோ
பலாட்யாத் போதாத் சங்கர்ஷண ஸ்த்வம் ஹரசி விதநுஷே
ஸாஸ்த்ரம் ஐஸ்வர்ய வீர்யாத் ப்ரத்யும்னஸ் சர்க்க தர்மவ்
நயஸிச பகவந் சக்தி தேஜோ நிருத்த பிப்ராண பாசி தத்வம்
கமயசி ச சதா வ்யூஹ்ய ரங்காதி ராக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –

ஜாக்ரத் ஸ்வப்நாத்ய லஸதுரீய ப்ரயாத் யாத்ரு க்ரமவ து பாஸ்ய ஸ்வாமிந் தத் தத் ஸஹ
பரி பர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-20–

———————————–

அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோகோ விஜிகத்ச அபிபாச ஸத்ய காமோ ஸத்ய சங்கல்பம் –
ஆகிய அஷ்ட குணங்கள்

கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை –எண் குணத்தான்-அஷ்ட குணங்கள்

கற்றதனாலாய பயன் என் கொல் வால் அறிவன்
நல் தாள் தொழாராயின் –நல் தாள் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் –மாண் அடி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல–பாபம் இன்மை

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு -ஸத்ய காமம் ஸத்ய சங்கல்பம் -மெய்மை சேர்ந்த இறைவன் புகழ்

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் –பசி தாகம்-சோகம் -மரணம் இன்மைகள்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லான்
மனக்கவலை மாற்றல் அரிது –இவ்வாறு ஆறு எட்டு குணங்கள் இருப்பதால் அத்விதீயன்

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது -தர்மக்கடல் அன்றோ அவன்

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் –

தயை- ஷாந்தி -அநஸூயை -சவ்சம் -அநாயாசம் -மங்களம் -அகார்ப்பண்யம் -அஸ்ப்ருஹை –
அஷ்ட ஆத்மகுணங்களுடன் சேதனன் அஷ்ட குணாத்மகனான பகவானை
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதே ஸ்வரூபம்
கண்ணன் கழலிணையே நமக்குத் தஞ்சம்

ஆதியாகி யாதி நீ ஓர் அண்ட மாதி யாதலால்
சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே–

——————————————————-

ஸ்ரீ பெரியாழ்வார் நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே சகல வேத சாரார்த்தங்களையும்
தத் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்களையும் சாஷாத் கரித்து
ஸமஸ்த சப்த மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபாவத -என்று சர்வ சப்த மூலமாய் இருந்துள்ள அகாரத்தை –
அக்ஷராணாம் அகாரோ அஸ்மி -என்று கீதா உபநிஷதச்சார்யன் தானே அருளிச் செய்கையாலே
அகாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே அகார வாச்யனான ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று கொண்டு
பரத்வ சிஹ்னங்களான ஜெகஜ் ஜென்ம ஸ்திதி லய வாசகங்களான

யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்ய அபி சம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி-
இத்யாதி வாக்யங்களை
ஜகத் காரணத்வ -முமுஷு உபாஸ்யத்வ -மோக்ஷ பிரதத்வ -ப்ரதிபாதங்களான -நாராயண அனுவாத ஸ்ருதிகளாலும்
விஷ்ணோஸ் சகாஸா துத்பூதம் ஜகத் தத்ரைவ வச ஸ்திதம் –ஸ்திதி சம்யம கர்த்தா அசவ் ஜகதோ அஸ்யா ஜகச் சஸ-என்றும்
நாராயணாத் பாரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதத் ரஹஸ்யம் வேதா நாம் புராணா நாஞ்ச சம்மதம் -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே -வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம் -என்றும்
இத்யாதிகளான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி வசன சஹஸ்ரங்களாலும் பஹு முகமாக ப்ரசாதித்து அருளிச் செய்கையாலே
வித்யா ஸூல்கமாகத் தோரணத்தில் கிழியாகக் கட்டி வைத்த தனம் இவர் முன்னே தானே தாழ வளைய
ஆழ்வாரும் அதி ப்ரீதியுடன் விரைந்து கிழி யறுத்தான் -என்கிறபடியே அக் கிழியை அறுத்து அருளினார்

கமலா -ககாரம் -பரனுக்கும் -மகாரம் -ஜீவனுக்கும் லாகாரம் -பாலமாக பிராட்டி / உறையூர் -பிராட்டி மன்னி நித்ய வாசம்
திருப்பாண் ஆழ்வார் திரு அவதாரம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ஸ்ரீ பொன்னாச்சியார்
கோழியும்-என்றே மங்களா சாசனம் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திவ்ய பிரபந்த ப்ராமாண்ய சமர்த்தநம் –

February 11, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திவ்ய பிரபந்த ப்ராமாண்ய சமர்த்தநம் –

இப்படி தத்வ தர்சிகளாக அவதரித்து அருளின இவ்வாழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள்
முக்கிய தமமான ப்ரமாணங்களாய் இருக்க -தேவதாந்த்ர விஷயமாக
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் விளைத்த உந்தி -என்றும்
பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -என்றும்
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படி என்று முதல் படைத்தாய் -என்றும்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கு -என்றும்
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து -என்றும்
இரும் தண் கமலத்து இரு மலரினுள்ளே திருந்து திசை முகனைத் தந்தாய் -என்றும்
நின் உந்திவா அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் என்றும்
உந்தியில் ஏற்றினாய் நான்முகனை -என்றும்
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் -என்றும்
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் -என்றும்
இப்படி ஆழ்வார்கள் எல்லாரும் ப்ரஹ்ம ருத்ராதிகளை சர்வேஸ்வரன் தானே ஸ்ருஷ்ட்டித்தான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழு திசை முகன் -என்றும்
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழ தன்னுள் வைத்து -என்றும்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒரு விடமும் பெருமாற்கு அரன் -என்றும்
எறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்-என்றும்
சிவனொடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் -என்றும்
மலர் மகள் நின்னாகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான நின் ஆகத்து இறை -என்றும்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்துக்
கறை தங்கு வேல் தடம் கண் திருவாய் மார்பில் கலந்தவன் -என்றும்
விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயிநீ-என்றும் சொல்லப்படுமவளாய்
இறையும் அகலகில்லாத நித்ய சித்த மங்களாவஹையாய்ப் பரம மஹிஷியான பெரிய பிராட்டியாருடனே
ரஜஸ் தாமஸ் குண மிஸ்ராரான ப்ரஹ்ம ருத்ரர்களுடன் வாசி அறத் தன் திரு மேனியில்
இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும்
இந்திரனும் மற்றை அமரர் எல்லாம் -என்றும்
கள்வா எம்மையும் எழு உலகையும் நின் உள்ளே தோற்றிய இறைவன் என்று வெள்ளேறன் நான்முகன்
இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவார் -என்றும்
நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் என்றும்
நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே -என்றும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை -என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் என்றும்
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு மற்றுமுள்ள
வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத -என்றும்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மால் -என்றும்
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் செழும் கதிரோன்
ஒண் மலரோன் கண் நுதலோன் என்றே தொழும் தகையார் நாளும் தொடர்ந்து என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணித் திரிவார்கள் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
கேழ்த்த சீரான் முதலாகக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே -என்றும்
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு
ஏந்தி வணங்கினால் –உன் பெருமை மாசூணாதோ மாயோவே –என்றும்
மாசூணா யுன மலர்ச்சோதி மழுங்காதே -என்றும்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாது அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே -என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதிகள் சத்வ குணோத்தரான போது எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணினால்
எம்பெருமானுக்கு அவத்யாவஹம் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ -என்றும்
சிவனாய் அயனானாய் -என்றும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான் மூகக் கடவுளே -என்றும்
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் சடையாய் வாய்த்த என் நான்முகன் -என்றும்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான் முகனை -என்றும்
முனியே நான்முகன் முக்கண் அப்பா -என்றும்
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று -என்றும்
இப்படி இத்திவ்ய பிரபந்தங்களிலே ஆதி மத்ய அவசானமாக ப்ரஹ்ம ருத்ராதிகளிலே சர்வேஸ்வரன் தானாக அருளிச் செய்தும்
ஆக இப்படி ஒரு கால் அருளிச் செய்தது ஒரு கால் அருளிச் செய்யாது இருக்கையாலே
இவற்றை முக்கிய தமமான பிரமாணம் என்று விஸ்வசிக்கலாய் இருந்தது இல்லையே என்னில்-விஸ்வசிக்கக் கூடும்

எங்கனே என்னில் –
இவ்வாழ்வார்கள் தாங்கள் தங்களுக்கு தேவதாந்த்ர விஷய வைராக்யம் உண்டு என்று தோற்ற
ஓ ஓ உலகினது இயல்வே -ஈன்றோள் இருக்க மணை நீராட்டிப் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்பப் புடைப்பல தானறி தெய்வம் பேணுதல்
தான் புல்லறிவாண்மை பொருந்தக்காட்டி -என்றும்
எம்பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமே யாமே -என்றும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -என்றும்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்-என்றும்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -என்றும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே என்றும்
அவ்வளவும் அன்றிக்கே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் சுடர் மிகு ஸ்ருதியும் இவை உண்ட சுரனே -என்றும்
போதின் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொலின்
மாது தங்கு கூறன் ஏற தூர்தி என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசிக் கிடந்ததே என்றும்
கபால நன் மோக்கத்துக்குக் கண்டு கொண்மின் -என்றும்
மார்க்கண்டேயனும் கரியே கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
சத்தியம் காண்மின் இனைய சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
இப்படி பிரமாணத்தாலும் பிரத்யஷத்தாலும் சாக்ஷியாலும்

யதே தத் பரமம் ப்ரஹ்ம லோகே வேதேஷு பட்யதே -சதேவ புண்டரீகாஷஸ் ஸ்வயம் நாராயணா பர -என்று
சொல்லப்படுகிற ஸ்ரீமன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று சாதித்தும்
அதுவும் அன்றியே
பெரியாழ்வார் பர பராணாம் புருஷோ யஸ்ய துஷிடோ ஜநார்த்தன ச ப்ராப்னோத்யஷயம் ஸ்தான மேதத் சத்யம் மயோதிதம் -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதேந சத்ய வாக்யேந சார்வார்த்தான் சாதயாம் யஹம் -என்றும்
சொல்லுகிற ரிஷிகள் வாக்கியங்களையும் -அவற்றுக்கு அடியான சுருதி வாக்கியங்களையும் கொண்டு
வித்வத் கோஷ்டியான ராஜ ஸ்தானத்தில் பரதத்வ நிர்ணயம் பண்ணி விரைந்து கிழி அறுத்தும்
இப்படி நிச்சயம் பண்ணின ஆழ்வார்கள் ஒருகால் அருளிச் செய்தது ஒருகால் அருளிச் செய்திலர்கள் என்ன ஒண்ணாது –
ஆனால் இவற்றுக்கு கருத்து என் என்னில்
அந்த தேவதாந்தரங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களுக்கு ஈடாக அருளிச் செய்தார்கள் இத்தனை

எங்கனே என்னில்
இவர்கள் கர்ம வஸ்யரில் பிரதான ஆகையால் –
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ -புநஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி ஸூஸ்ரும -என்றும்
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா ஹூத்வா ஆத்மாநம் தேவதேவோப பூவ–என்றும்
சொல்லுகிறபடியே பூர்வ ஜென்மங்களில் ப்ரஹ்ம பதம் ருத்ர பதம் பெறுகைக்காக தபஸ் ஸூ பண்ணுகையாலே
தத்பல போகார்த்தமாக எம்பெருமானாலே ஹ்ருஷ்டரானார்கள் என்றும்
இவர்கள் எம்பெருமான் திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபராய் இராத போது இவர்களுக்கு சத்தை குலையும் என்றும்
இவர்கள் சத்வ உத்ரிக்தரான போது பகவத் ஸ்தோத்ராதிகளுக்கு யோக்யராய் இருப்பர்கள் என்றும்
இவர்கள் ராஜஸ தாமச பிரசுரரான போது அஹங்காரத்தாலே பண்ணும் துர்மானம் கனத்து இருக்கையாலே
இவர்கள் எம்பெருமானைக் கிட்டி
இவர்களுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் சரீரவச் சேஷமாய் இருக்கையாலும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமான் அச்யுத பிரபு ததம் ஸாத் சக்திமந்தோ அந்யே ப்ரஹ்ம ஈஸா நாதாயோ அமரா -என்கையாலும்
அவன் தானாகவே அருளிச் செய்தும் போருகையாலே இத்திவ்ய பிரபந்தங்களை முக்கிய தமமான பிரமாணங்கள் என்னக் குறை இல்லை

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீரமான படியை
ச ஏவ ஸ்ருஜ்யஸ் ச சர்வ கர்த்தா ச ஏவ பாத்யத்தி ச பால்ய தேச ப்ரஹ்மாத்ய வஸ்தாபிர சேஷ மூர்த்திர்
விஷ்ணுர் வரிஷ்டோ வரதோ வரண்ய -என்றும்
கல்பாந்தே ருத்ர ரூபீ யோக்ர சதே சகலம் ஜகத் -தமாத்யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோ அஸ்மி ஜனார்த்தனம் -என்றும்
ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ச சம்ஞ்ஞாம்யாதி பகவாநேக ஏவ ஜநார்த்தன -என்றும்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்-என்றும்
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே என்றும் அருளிச் செய்தார்கள்

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீர பூதராக-அவன் தான் ஆத்மாவாக -இவர்களை அவன் தானாகச் சொல்லும்படி
எங்கனே என்னில்
சரீர வாச சப்தம் சரீர பர்யந்த ஸ்வார்த்த அபிதானம் பண்ணக் கடவது இறே
ஒரு சரீரீ யானவன் ஸ்தூலோஹம் க்ரூசோஹம் -என்று தானும் சொல்லி-
பிறரும் நீ தடித்தாய் இளைத்தாய் என்று சொல்லுமோபாதி இவர்களையும் சர்வேஸ்வரன் தானாகச் சொல்லக் குறையில்லை –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றும்
தேவராய் நிற்கும் அத்தேவு மத்தேவரின் மூவராய் நிற்கு முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
முதலாவார் மூவரே யம்மூவர் உள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –என்றும்
இத்யாதிகளாலே அவனை ஒழிந்த சகல சேதன அசேதனங்களும் அவன் தானாகவே அருளிச் செய்தார்கள்

இப்படி அருளிச் செய்கைக்கு அடி
யஸ்ய ஆத்மா யஸ்ய ப்ருத்வீ சரீரம் -என்கிறபடியே சர்வேஸ்வரனுக்கு ஆத்மாவும் சரீரம் அசித்தும் சரீரம் என்று
வேதத்திலே சொல்லுகையாலும்
விஸ்வ ரூபஞ்ச மாமஜம் -என்று அவன் தானே அருளிச் செய்கையாலும்
திருத் தேர் தட்டிலே அர்ஜுனனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டுகையாலும் அவன் தானாகச் சொல்லக் குறை இல்லை
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் சர்வ தேஹி நாம் -ஆவாந்த வாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே
நாராயணன் பக்கலிலே ப்ரஹ்ம ருத்ராதிகள் ஜாதரானார்கள் என்றும்
இவர்கள் திரு நாபீ கமலத்தையும் தக்ஷிண பார்ஸ்வத்தையும் பற்றி லப்த ஸ்வரூபராய் இருப்பர்கள் -என்றும்
பாதேந கமலாபேந ப்ரஹ்ம ருத்ரார்ச்சிதேந ச -என்று இவர்கள் சேஷ பூதராய் எம்பெருமானை அர்ச்சிப்பவர்கள் என்றும்
இவர்கள் ததீனமான சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையவர் ஆகையால்
எம்பெருமான் தானே என்றும் ஸ்ருதி இதிஹாச புராணங்களும் சொல்லிற்றின

பரமாத்மா பரோயோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ சக்திர் தேவீ தத் தர்ம தர்மிநீ-என்கிறபடியே
எத்தனையேனும் பிரிவு ஆற்றகில்லாத பெரிய பிராட்டியாரோபாதி ப்ரஹ்மருத்ராதிகளும்
இவன் திரு மேனியில் சர்வ காலமும் இருப்பர்களோ என்னில் –
ஆபத்காலத்தில் எம்பெருமான் திருமேனியில் ஒதுங்க அவர்களுக்கும் இடம் கொடுக்கும் அத்தனை அல்லது
எப்போதும் இரார்கள்-
இது தான் சர்வேஸ்வரனுக்கு மஹத்தான சீல குணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதும் அத்தையே
அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
தாள தாமரையான் உனது உந்தியான் வாள் கொள் ஈண் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ் கோ யுன சீலமே-என்றும்
அக்கும் புலியின தளுமும் உடையாராவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்-என்றும் சொல்லக் கடவது இறே
கலகங்களானால் அடைய வளைந்தானுக்கு உள்ளே இன்ன ஜாதி என்னாமல் எல்லாரும் கூடி இருந்து
கலஹம் தெளிந்தவாறே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னான் பற்று இவ்விடம் இன்னான் பற்று என்று சொல்லுமா போலே
என்று நஞ்சீயருக்குப் பட்டர் அருளிச் செய்தார் இறே

கீழ் இவர்களுக்கு சொன்ன இத்தனையும் நமக்கும் ஒக்கும் என்று அருளிச் செய்தார்கள் -எங்கனே என்னில்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -என்றும்
என்னை ஆக்கிக் கொண்டு -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -இவ்வளவும் அன்றியே
என்னைத் தன் பொன்னடிக் கீழ் இருத்தி என்றும்
இங்கன் அன்றிக்கே
குல தொல் அடியேன் என்றும் -குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் என்றும்
அடியோம் போற்றி என்றும் -லிங்கன் அன்றிக்கே
அரு வினையேன் களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்-என்றும் -இவ்வளவும் அன்றியே
உயிர் வேறு இன்றி ஒன்றாகவே என்றும் தமக்கு ஒன்றும் பிறர்க்கு ஒன்றுமாகாமல் அருளிச் செய்தார் இறே

இனி இவர்களோடு சமரோ இவ்வாழ்வார்கள் என்னில் -அன்று –
கர்மத்தை இட்டு ஸ்ருஷ்ட்டித்தான் என்றது அவர்களை –
ஸ்வ இச்சையால் அவதரிப்பித்தான் என்றது இவர்களை –
ஆபத் காலத்தில் ஆபன் நிவாரண அர்த்தமாகக் காதாசித்கமாகத் தன் திரு மேனியில் இடம் கொடுத்து வைத்தான் என்றது அவர்களை
நீக்கமில்லா அடியார் -என்னக் கடவது இறே இவர்களை
ராஜஸ தாமச மிஸ்ர சத்வம் தலை எடுத்த போது பகவத் விஷய ப்ரவ்ருத்தி கனத்து இருக்கையாலே சேஷ பூதர் என்கிறது அவர்களை
முக்குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று என்றும்
நிலை நின்ற தொண்டரான அறம் திகழ் மனத்தவர் என்றும் சொல்லுகிற ஸூத்த சத்வ நிஷ்டராகையாலே
தெளிவுற்ற சிந்தையரான சேஷ பூதர் என்கிறது இவர்களை
அவர்கள் சத்வ குணம் குலைந்து ராஜஸ தாமச பிரசுரரான போது அஹங்கரித்து கோயம் விஷ்ணு என்றும்
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த என்றும் இப்படி பாணாசூர யுத்தாதிகளிலே
ஈஸ்வரனோடே எதிர் அம்பு கோக்கையாலே ஈஸ்வரனைக் கிட்டுகை அவத்யம் என்றும்
பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு உண்டான ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே பொல்லாங்குகளை அனுசந்தித்தும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடும் எதிர்வன் அவன் எனக்கு நேரான் என்று தாமும் அருளிச் செய்தார் இறே –
ஆகையால் சமர் என்ன ஒண்ணாது

ஆனால் உத்க்ருஷ்ட வர்ண ஜாதர் அன்றிக்கே நிக்ருஷ்ட வர்ண ஜாதரான இவ்வாழ்வார்கள் செய்து அருளினதாய்
பாஷா கான ரூபமாய் பவ்ருஷேயமாய் அநித்யமாய் இருக்கிற இவற்றை அபவ்ருஷேயமாய் நித்யமாய்
நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தோடே ஓக்க த்ருட தர பிரமாணம் என்னும்படி எங்கனே என்னில்
இவர்கள் உத்க்ருஷ்ட ஜென்மத்தில் அவதரித்தால் உத்க்ருஷ்ட ஜென்ம ஜாதர்க்கு ஒழிய அபக்ருஷ்ட ஜென்ம ஜாதர்க்கு
ஈடேற வழி இல்லை என்றதாம் ஆகையாலும்-பிரபத்தி சர்வாதிகாரம் ஆகையாலும் –
இவர்கள் சம்சார நிமக்நரையும் யுயர்த்தத் தாழ இழிந்தார்கள் இறே

ஹரிகீர்த்திம விநைவாந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம -பாஷா காநம் நகா தவ்யம் தஸ்மாத் பா பந்த்வயா க்ருதம் –
என்கையாலே பகவந் நாம சங்கீர்த்தனத்துக்கு பாஷா கான ரூப தோஷம் இல்லாமையாலும்
வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்தாகையாலும்
செந்நிறத்த தமிழ் ஓசை வட சொல்லாகி -என்றும்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் -என்றும்
பொய்யில் பாடல் -என்றும்
பொய்ம்மொழி ஓன்று இல்லா மெய்மையாளன் -என்றும்
ஆகஸ்த்யமும் அநாதி -என்று சடத்வேஷி கலிஜித் வசன சித்தம் ஆகையாலும்
பாஷா கான ரூப தோஷமே இல்லை

இனி புருஷ புத்தி மூலமான தோஷத்துக்கு -யானாய்த் தன்னை தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் -என்கிறபடியே
இவ்வாழ்வார்கள் நாவில் இருந்து இன்கவி பாடும் பரம கவிகளாய் நன்கு வந்து -உவந்து -பரம சேதனான
பர வா ஸூ தேவன் தானே நன்றாகக் பாடி பிரகாசிப்பததாகையாலும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த என்றும்
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -என்றும் சொல்லுகிறபடியே ஹம்ஸாவதாரமாய்
ப்ரஹ்மாவுக்கு வேதத்தை உபதேசித்தால் போலேயும்
வ்யாஸ பகவானை ஆவேசித்து வேதங்களை விஸ்தரிப்பித்தால் போலேயும் இவர்களைக் கொண்டு
பிரகாசிப்பித்ததாகையாலே இப்பிரபந்தங்களுக்கு புருஷ புத்தி ஜெனித தோஷம் இல்லை

ஸூப்த ப்ரபுக்தரான சிஷ்யர்களை உபாத்தியாயர் ஓதுவிக்குமா போலேயும் பிரளய அவஸ்தையிலும்
தன் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருந்து ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே வேதத்தை பிரகாசித்தால் போலேயும்
பிரகாசிப்பித்த தாகையாலே அநித்ய தோஷ பிரசங்கமே இல்லை
ஆகையால் வேதத்துக்கு உண்டான பிராமண்யம் இதுக்கும் ஒக்கும் இறே
யோ வேத வர்ணேஷுது வர்ண புத்திம் சாமான்ய தோவை விததாதி மர்த்ய-சயாதி கோராந் நரகா ந சங்க்யாந்
பிசாச தாமேதி மஹா வநேஷு -என்கிறபடியே த்ரை குண்யா விஷயா வேதா -என்று த்ரி குணாத்ம புருஷர்களை
விஷயீ கரிக்கும் வேதத்துக்கு இப்படியானால் மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
த்ரமிட உபநிஷத் சாரத்துக்குச் சொல்ல வேண்டா இறே
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ருயோநி பரிஷாயாஸ் துல்யம் ஆஹுர் மநீஷிண-என்கிற இவ்வர்த்தத்தை –
வீட்டு இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம் இன்மை மாரியில் ஆராய்ச்சி -என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார் இறே
ஆகையால் அருளிச் செயலில் அப்ராமண்ய புத்தி மாத்ரு கமன தோஷத்தோடே ஒக்கும் இறே –
ஆனபின்பு இவையே முக்கிய தம பிரமாணங்கள் என்னா நின்றது –

ஆழ்வார்களுக்கு எம்பெருமான் ப்ரத்யக்ஷ சாஷாத்காரமோ -ஞான சாஷாத்காரமோ என்னில் –
ஞான சாஷாத்காரம் அல்லது ப்ரத்யக்ஷ சாஷாத்காரம் இல்லை –
ஆகில் கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் காண்பன் என்றும்
நம்பியை நான் கண்ட பின் -என்றும்
கண்ணுள் நீங்கா -என்றும் சொல்லுகிறவை சேரும்படி எங்கனே என்னில் அவையும் பிரத்யக்ஷ சாமானாகாரமான
ஞான சாஷாத்காரமாகக் கடவது –
நல்லுறவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டால் கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே -என்றும்
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -என்றும் மற்றும் இப்படி பாட்டுக்கள் தோறும் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்டு
காண வந்து என் கண் முகப்பே என்கிற பாட்டின்படியே ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட கூப்பிட்டாலும் காண ஒண்ணாத வஸ்துவை –
நடை அழகு -நிலை அழகு -கண் அழகுகளை ப்ரத்யக்ஷமாக அனுபவிக்க வேணும் என்று கூப்பிடுகிற இதுக்கு பிரயோஜனம் இல்லை
என்று நிராசராவது -பின்னையும் அவனை சாபல அதிசயத்தாலே அப்பனே அடல் ஆழியானே-என்கிற பாட்டின் படியே
பிரதம பரிஸ்பந்தம் தொடங்கி காண வேணும் என்கிற அசோஷ்யமான ஆத்ம வஸ்து குருத்து வற்றாக உலரும்படி பார்த்துக்
கண் மறைந்து காண்கின்றிலேன் -என்றும் -ந மாம்ச ச ஷூர் அபி வீக்ஷதேதம் என்றும் பிரத்யக்ஷமாக மாம்ச சஷூஸ்ஸூக்கு
காண ஒண்ணாது என்று நிராசராய்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவன் என்று தர்சன சமமான ஞான சாஷாத்காரம் ஒழியக் கட் கண்ணாலே காண விரகு இல்லை
என்று நிர்த்தரிக்கையாலே கீழ் கண்டேன் என்று பல இடங்களில் அருளிச் செய்ததும் ஞான சாஷாத்காரமாகக் கடவது
கண்டேன் என்ற பத்தும் உட் கண்ணாலே என்று ஆச்சார்ய ஹிருதயத்தில் அழகிய மணவாள பெருமாள் நாயனாரும் அருளிச் செய்தார் இறே –
ஆகையால் இவ்வர்த்தம் ஸூத்த சம்பிரதாய சித்தம் –

உள்ளதனைக் காலம் யத்தனித்தாலும் மாம்ச த்ருக்கோசரன் அன்று என்னும் இடத்தை
என்றேனும் -என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுரு -என்றும் –
ஞான சஷூஸ்சாலே காணும் அத்தனை என்னும் இடத்தை –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து -என்றும் பிறருக்கும் உபதேசித்தார் இறே –
ஞான சாஷாத்காரமே உள்ளது என்னும் இடத்தை தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனும்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் என்றும்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழு நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம்
எண்ணுங்கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் -என்றும்
சிறிதும் திரு மேனி இன்ன வண்ணம் என்று கேட்டீர் -என்றும் அருளிச் செய்தார் இறே திருமங்கை ஆழ்வாரும்
முதல் ஆழ்வார்களும் ஞானச் சுடர் விளக்கு ஏற்றி இறே திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றும் அருளிச் செய்ததும் –
இனி ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாவது அர்ச்சாவதார ஒன்றுமே இறே

ஆகையால் அவதார விசேஷங்களாய் ஸ்ரேஷ்ட தம ஜென்ம ஜாதராய் அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி அவதரித்தவர்களாய்
அகஸ்திய பாஷா ரூபமான திராவிட வேத பிரபந்தங்களைப் பெண்ணும் பேதையும் அதிகரிக்கும் படி உபகரித்து அருளின
ஆழ்வார்கள் பக்கலிலும் அருளிச் செயல்களிலும் விசுவாச பாஹுள்யம் உடையவர்கள் ஜீவன் முக்தர் என்கிறது –
ந சப்த சாஸ்த்ரா ப்ரதஸ்ய மோஷோ நசைவரம் யாவசத ப்ரியஸ்ய -ந போஜனாச் சாதன தத் பரஸ்ய ந லோக வ்ருத்தி க்ரஹனே ரதஸ்ய-
ஏகாந்த சீலஸ்ய த்ருட வ்ரதஸ்ய பஞ்சேந்திரிய ப்ரீதி நிவர்த்த கஸ்ய அத்யாத்ம வித்யாரத மாந ஸஸ்ய மோஷோ த்ருவோ
நித்ய மஹிம்ஸ கஸ்ய -சம தம நியதாத்மா சர்வ பூதா நுகம்பீ விஷய ஸூக விரக்தி ஞான திருப்த பிரசாந்த அநியத நியதான்நோ
நைவ ஹ்ருஷ்டோ நருஷ்ட ப்ரவஸித இவகே ஹே வர்த்த தேயஸ் ச முக்த –என்கிறபடியே அசஸ் சாஸ்த்ராபி ருசியையும்
லோக யாத்திரையும் கை விட்டு ஏகாந்த சீலராய் சிரஸ்சேத பட்டாபிஷேக பர்யந்தமான மஹா ஆபத் சம்பத்துக்கள் சம்பவித்தாலும்
ஸ்வாசார பிரஸ்யுதி வராதபடி த்ருட அத்யாவசாய யுக்தராய் இந்திரிய கிங்கரர் அன்றிக்கே விஷ்ணு கிங்கரராய்
ஆத்ம யாதாம்ய ஞான பரிஸீலந பரராய் பூத ஹிம்சையை விட்டு சம தமாத் யாத்ம குணங்களை உடையராய்
சர்வ பூத தயா பரராய் -அர்த்த காமன்களை அருவருத்து விட்டாராய் -ஞான பூர்த்தியை உடையராய் பாஹ்ய கரண சாந்தி உக்தராய்
நியதா ஹாரராய்-அத்யுத்ருத்தரும் அன்றியே அதி கோபிகளும் இன்றியே -பார்யா புத்ராதிகள் பக்கல் மமதா புத்தி க்ருத
ஆசா பாஸா ரஹிதராய் ஆச்சார்ய விசுவாசம் உடையவரானவர்கள்
அறியக் கற்று வல்லவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்டணவர்–என்கிறபடியே ஜீவன் முக்தர் என்கிறது
இவ்வாழ்வார்கள் தம் பரம கிருபையால் இத்திவ்ய பிரபந்தங்களை உய்பவர்க்கு உய்யும் வண்ணமாக அருளிச் செய்து
லோகத்தை வாழ்வித்து அருளித் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினார்கள் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ நம்மாழ்வார் / ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் வைபவம்-

February 10, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் –

தத கலி யுகஸ் யாதவ் வைசாக்யாம் விஸ்வ பாவன
விஷ்ணு பக்தி ப்ரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி

சேநேச கருணா லப்த திவ்ய மந்த்ர த்வயம் முதா
த்ராவிடாம் நாய வக்தாரம் சடகோப குரும் பஜே

வகுளாபரணம் வந்தே ஜெகதாபரணம் முநிம்
யஸ் ஸ்ருதேர் உத்தரம் பாவஞ் சக்ரே திராவிட பாஷயா

வகுளா லங்க்ருதம் ஸ்ரீமச் சடகோப பத த்வயம்
அஸ்மத் குல தநம் போக்யம் அஸ்து மே மூர்த்தன பூஷணம் –( மூர்த்திநி சந்ததம் )

லாபேக லேர் வாஸர ஏவ ராதே மாஸே விசாகே மஹ நீய தாரே —
ஸூக்ரஸ்ய வாரேஸ் ஜனி விஸ்வதித்யாம் பராங்குசோயம் பகவான் குளீரே –

ஸ்ரீ விஞ்ஞா நதி நோத்தரே அஹ நிகலவ் வர்ஷே ப்ரமாத்யாஹ்வயே
மாஸே மாதவனாம் நி பார்க்கவதி நேருஷே விசாகாபிதே
லக்நே ஸூத்த சதுர்த்தே ஸீதிதியுதே ஸ்ரீமத் குளீரே அபி ச
ஷித்யாம் ப்ராதூரபூத் பராங்குச கவிர் பாக்யோதயோ அஸ்மாத் ருசரம்–

ஆழ்வார்கள் எல்லாரையும் அவயவ புதராக யுடைய நம்மாழ்வார் திருவவதார க்ரமம் இருக்கும்படி எங்கனே என்னில்
அஸ்தி பாண்ட்யேஷு தேதே ஷுகாசிச் ஸ்ரீ நகரீ திஹி -தாம்ர பரணீ நதீ தீரே சாஷாத் திருஷ்டோஹ் யதோஷஜ-என்கிறபடியே
வண்டலம்பும் சோலை வழுதி வள நாட்டிலே –
கங்கா ச யமுனா சைவ ததா கோதா ஸரஸ்வதீ நர்மதா சிந்து காவேரீ தாம்ர பரணீ சரித்வாரா -என்று சொல்லுகிறபடியே
கங்காதி சகல நதிகளிலும் உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப் பட்டு இருப்பதான தாமிரபரணி என்கிற பொருநல் ஆற்றங்கரையில்
ஸ்ரீ நகரி என்று ப்ரயாக்தமான -நல்லார் நாவில் குருகூருக்கு நிர்வாஹகரான இவ்வாழ்வார் தாமே –
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை -என்று அருளிச் செய்த படியே
ஏழாட் காலமும் புறம் தொழாமே-குடி குடி வழி வந்து ஆட் செய்யும் -தொண்டக் குலத்திலே பிறந்து
ஏழாட் காலமும் பழிப்பு இலாராய் இருப்பர் -எங்கனே என்னில்
திரு வழுதி வள நாடர் என்று ஒருவர் -அவர் பிள்ளை -அறம் தாங்கியார் – அவர் பிள்ளை சக்ர பாணியார் -அவர் பிள்ளை அச்யுதர் –
அவர் பிள்ளை செந்தாமரைக் கண்ணர் -அவர் பிள்ளை செங்கண்ணர் -அவர் பிள்ளை பொற் காரியார் -அவர் பிள்ளை காரியார் –
அவர் திருக் குமாரர் நம் மாறன் -என்று இவர்கள் தாம் –

இக் க்ரமம் தன்னில் சந்தான பரம்பரையாய்ப் பழைய அடியாரான இவர்கள் திரு வம்சத்தில் பொற் காரியார் என்கிறவர்
உலகு எல்லாம் வாழும்படி தம்முடைய புத்திரரான காரியாருக்கு விவாஹம் பண்ணுவிப்பதாகத் திரு வண் பரிசாரத்திலே
காரியாரைக் கொண்டு போய் தம் சம்பந்தம் செய்கைக்கு யோக்யராய் வைஷ்ணவ ஸாந்தானிகரான திரு வாழ் மார்பர்
திரு மாளிகையில் எழுந்து அருளி அவரைப் பார்த்து -உம்முடைய புத்ரியான உடைய நங்கையாரை
நம்முடைய புத்திரரான காரியாருக்கு விவாஹம் பண்ணித் தர வேணும் என்று தர்மரும் பிறரும் அறிய பிரசங்கித்துக் கேட்க –
திரு வாழ் மார்பரும் மிகவும் ஸந்துஷ்டராய்
கண்ணாலம் கோடித்து–மத்தளம் கொட்ட -வரி சங்கம் நின்றூத முத்துடைத்தாம நிரை தாழ்ந்த பந்தல் கீழ் -என்கிறபடியே
உபலாளித்துப் பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து உதக பூர்வகமாக உடைய நங்கையாரைக் காரியாருக்கு சமர்ப்பிக்க –
காரியாரும் வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே பாணி கிரஹணம் பண்ணி –
மற்றும் உண்டான கிரியா விசேஷங்களையும் செய்து –
திரு வண் பரிசாரத்தில் திரு வாழ் மார்பரான எம்பெருமானையும் திருவடி தொழுது மீண்டு
பெரிய வண் குருகூரிலே எழுந்து அருளா நிற்க

பதாகாத்வஜி நீம் ரம்யம் தூர்யோத் குஷ்டநி நாதிதாம் –சிக்த ராஜ பதாம் ரம்யாம் ப்ர கீர்ண குஸூ மோத் கராம் –
பவ்ரை ப்ரத்யுக்தோ தூரம் த்விஜை ஸ் ச புர வாசிபி -என்று சொல்லுகிறபடியே பெருமாள்
ஸ்ரீ மிதிலையில் எழுந்து அருளித் திக்கு நிறை புகழாளனான ஸ்ரீ ஜனக ராஜன் மகளைத் திருமணம் புரிந்து மீண்டு
எழுந்து அருளும் போது திரு அயோத்யையில் உள்ள ப்ராஹ்மணாதி பவ்ர ஜனங்கள் பட்டணத்தை அலங்கரித்து
மங்கள வாத்ய கோஷத்துடன் வந்து எதிர் கொண்டால் போலே –
செம் பொன் மாடத் திரு குருகூரில் உள்ளாரும்-
பூர்ண பொற் குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டித் துமிலம் எழப் பறை கொட்டி உபலாளித்து எதிர் கொள்ள —
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் புகுந்து இல்லறம் என்று சிலாக்யமாகச் சொல்லப் பட்டு இருப்பதான
கிருஹஸ்த ஆஸ்ரமத்தில் நியதரான காரியார் சில நாளைக்குப் பின்பு தம்முடைய பத்னியாரான
உடைய நங்கையாரைத் திரு குருகூரில் நின்றும்
பிறந்தகமான திரு வண் பரிசாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய் மீண்டு வாரா நிற்கச் செய்தே –

தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடியிலே சென்று -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும்
திரு மூர்த்தியையும் சேவித்து -அடியோங்களுக்கு ஒரு சந்தானம் தந்து அருள வேணும் என்று பிரார்த்திக்க
நம்பியும் – நாமே வந்து பிறக்கிறோம் -என்று அர்ச்சக முகேன வர பிரதானம் பண்ணி அருள –
அவ் வசனம் கேட்டு ப்ரீதராய் நிற்கச் செய்தே -நம்பியும் பூம் தண் மாலைத் தண் துழாயை கிருபையுடனே பிரசாதித்து அருள –
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று கொண்டு
துணையோடும் பிரியாதே ஸ்வீ கரித்து மிகவும் உகப்போடே தங்களுக்கு ஆவாஸ ஸ்தானமான நல்லார் பலர் வாழ் குருகூரிலே
வந்து புகுந்து நித்ய வாசம் பண்ணிக் கொண்டு போருகிற அளவிலே உடைய நங்கையார் கர்ப்பவதியாக-
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் என்னலாம் படி எம்பெருமான்
பார் எல்லாம் உய்யும் படி சேனை முதலியாரை நம்மாழ்வாராக அவதரிக்கும் படி நியோகிக்க
கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாளான வர்த்தமான பஹுதான்ய வர்ஷத்தில்–
( கர்ப்பத்துக்குள் புகுந்த வருஷம் இது என்றும் அவதரித்த வருஷம் ப்ரமாதி என்றும் கொள்க )
வசந்த ருதுவில் வைகாசி மாதம் சுக்ல பக்ஷம் பவ்ர்ணமி கூடின திரு வைசாக நக்ஷத்திரத்தில்
காவ்யவாசகர கர்க்கட லக்னத்தில் திவ்ய யோக திவ்ய கரணங்களிலே

ஆதித்ய ராம திவாகர அச்யுத பாணுக்கள் உதயத்தில் நீங்காத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் சோஷித்து
விகசியாத போதில் கமலம் மலரும் படி வகுள பூஷண பாஸ்கரன் உதயம் உண்டாய்த்து
உடைய நங்கையர் ஆகிற பூர்வ ஸந்த்யையிலே

ராதேக லிதிநே லாபே வைசாகே காவ்ய வாஸரே -லக்நே கர்க்கடகே ஸூத தநயம் நாத நாயிகா -என்று
திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

திருவனந்த ஆழ்வானும் வர்ஷாதப நிவாரண அர்த்தமாக இவருக்கு முன்னே
திருப் புளி ஆழ்வாராக வந்து அவதரித்து அருளினார் –

—————————————

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் வைபவம்

பாண்ட்ய ஷமாயாம் பிரதிதாவதாரம் சைத்ரஸ்த ஸித்தோடுஜ மூர்த்வ (மூர்த்நி) சூடம் –
ககரம் ச பாஜம் மதுரங்க வீந்த்ரம் சடாரி பக்தம் சரணம் ப்ரபத்யே —

ஹஸ்த ஸ்ததாளத் விதயம் ப்ரபத்யே சடாரி வாக் வ்யாஸ முதார கீர்த்திதம் —
மாதுர்ய ஸம்ஸ்லிஷ்ட கவித்வ யுக்தம் மஹத்வ சம்பாவித புத்தி தத்வம்

யாதே சம்வத்சரவ்கே ஹசதபத ஜநேத்வா பரஸ்யேஸ் வராப்தே சைத்ரே மாசேத் வி சப்தோத்தாதி வசவரே ஸூப்ரபஷே சருஸ்யே —
சித்ராக்யே பார்க்கவீயே குணவதி சதிநே ப்ராதுரா ஸீச் சடாரே ரந்தே வாஸீத் விஜேந்த்ரோ மதுர கவி ரசவ் மாத்ரு குஜ்ஜீவநாய–

மதுர கவிகள் -செல்வம் மல்கி யவன் கிடைத்த திருக் கோளூரிலே —
சைத்ரஸ் ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந -என்று ஸ்ரீ மத்தாகச் சொல்லப்படுகிற
சித்திரை மாசத்தில் சித்ரா நக்ஷத்ரத்திலே ஸ்ரீ குமுதகணேச அம்சராய்
ஸ்ரீ வகுள பூஷண பாஸ்கர உதயத்துக்கு அருண உதயம் போலே முன்னே திரு வவதரித்து அருளினார்
வேதாத்மகமான பெரிய திருவடி அம்சமாய் என்றும் பாடம்-மேலோர் ஸ்லோகங்களில்
ககாம் ச பாஜம் -என்றும் கணேச குமுதோ நாம்நா -என்றும் இருப்பதால்
இவரை கருட பகவான் -குமுதர் என்ற கணேசர் இருவர் அம்சமாக சொல்வர்

கணேச குமுதோ நாம்நா கவிர் மதுர சம்ஜ்ஞக –சைத்ர மாசி ஸூபே சித்த தாரகாயா மஜாயத –என்று
திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

சாம சாக அத்யயன பூர்வ சிகாவைத்த ப்ராஹ்மண வர்ணே அவதரிக்கையாலே இவருக்கு தத் தத் காலங்களிலே
ஜாத கர்ம -நாம கரண -அன்ன ப்ராசன – சவ்ள உபநயனாதிகளையும் செய்து
அங்கா நிவேதாஸ் ஸத்வாரோ மீமாம்சா நியாய விஸ்தர-புராணான் தர்ம சாஸ்த்ராஞ்ச வித்யாஹ்யேதாஸ் சதுர்த்தச -என்று
சொல்லப்பட்ட சதுர்த்தச வித்யைகளையும் அதிகரிப்பிக்க -அதீத வேத வேதாங்கருமாய் மஹா விரக்தருமான இவர் –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ ஹயவந்திகா புரீ த்வாரவதீ சைவ சப்தைதே முக்திதாயகா -என்று
முக்தி பிரதமாகச் சொல்லப்பட்ட திரு அயோத்தியை முதலான திவ்ய தேசங்களை சேவிக்க எழுந்து அருளினார்

இப்படி இவர் முன்னாக அவதரித்து அருளின ஆழ்வார் -முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாதே
மவ்வனத்தோடே எழுந்து அருளி இருக்கச் செய்தேயும் வாட்டம் இன்றிக்கே பரிபூர்ணராய் இருக்கிற இந்த ஆச்சர்யத்தை
காரியாரும் -இவரைப் பெற்ற வயிறு உடையாளான உடைய நங்கையாரும் கண்டு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே எம்பெருமான் பக்கலிலே ந்யஸ்த பரராய்க் கொண்டு இருந்து
பத்து நாளும் கடந்த இரண்டா நாள் -சங்க தீர்த்த சமீபேது தாம்ராய தஷிணே தடே -ஸூஸ்திதம் புண்டரீகாக்ஷம்
சங்க சக்ர தரம் ஹரிம் -வரதாபயஹஸ் தஞ்ச ரமயா தரயா ஸஹ நவ நீரதநீ லாபம் பீதவாச ஸம்ஸ்யுதம் -என்று
சொல்லுகிறபடியே திருச் சங்கணித் துறையை உடைத்தான பொருநல் ஆற்றின் தென் கரையிலே
திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் சங்க சக்ர தரனாய்ப் புண்டரீகாக்ஷனாய் வரத அபய ஹஸ்தனாய்
ஸ்ரீ பூமி நீளா ஸஹிதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற பொலிந்து நின்ற பிரான் திரு முன்பே எடுத்துக் கொண்டு போய்
அப்படிப்பட்ட விக்ரஹத்தை சேவிக்கப் பண்ணி -இவருக்கு மாறன் -என்று திரு நாமம் சாத்தி
திருப் புளி ஆழ்வார் அடியிலே ஆணி பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டிலிலே வளர்த்தி இவரை
புத்ர பிரதிபத்தி பண்ணாமல் எங்கள் குடிக்கு அரசே என்ற விசேஷ பிரதிபத்தி பண்ணி சேவித்துக் கொண்டு போர
அப்போது பரமபத நாதனும் சேனாதிபதியை அழைத்து நீர் போய் நம்மாழ்வாருக்கு திரு மந்த்ர மந்த்ரார்த்தங்களையும்
த்ரவிட வேதத்தையும் உபதேசித்து வாரும் -என்ன விஷ்வக் சேனரும் எழுந்து அருளி ஆழ்வாருக்கு
நிகில புருஷார்த்தங்களையும் த்ரவிட வேதங்களையும் உபதேசித்து அருளி திவ்ய ஞான சம்பன்னராக்கி எழுந்து அருளினார் –

இவ்வாழ்வார் தாம் -ஸூ ஞான கந பூர்ணத்வாத் திந்த்ரீணீ மூல ஸம்ஸ்ரய -பால ஆஷோட சாப்தாத்து மூக பாவங்கமிஷ்யதி –
என்று சொல்லுகிறபடியே திருப் புளி ஆழ்வார் அடியிலே பதினாறு திரு நக்ஷத்ரம் அளவாக –
அவன் முகத்து அன்றி விழியேன் -என்று முகிளித நயனருமாய் -ஆருக்கு என் சொல்கேன் என்று மவ்னியுமாய் எழுந்து அருளி இருக்க
இத்தை உடைய நங்கையாரும் காரியாரும் கண்டு இவர் தம்மைப் போன்ற அதிகாரிகளைக் காணாமையாலே
லௌகிகரோடு வார்த்தை சொல்லாது இருக்கிறார் என்று அறியாதே –
திருக் குறுங்குடி நம்பிக்கு நாம் செய்தது என் -என்று சிந்தை கலங்கி இருக்க –
இப்பிரபாவங்களை திரு அயோத்தியை சேவிக்க எழுந்து அருளின ஸ்ரீ மதுர கவிகளும் கேட்டு அருளி இருக்கச் செய்தே
ராத்திரி ஜல சங்கா நிவ்ருத்யர்த்தமாகப் புறப்பட்டவர்
தென் திசையிலே ஸூர்ய உதயம் ஆனால் போலே ஒரு அப்ராக்ருத திவ்ய தேஜஸ்ஸைக் கண்டு இது என் என்று திகைத்து நின்று
ஏதேனும் க்ராம நகரங்கள் வேகிறதோ-காட்டுத் தீயோ -என்று தம்மிலே விசாரித்து அற்றைக்குக் கண் வளர்ந்து அருளினார் –

பின்னையும் இரண்டு மூன்று நாள் இப்படியே கண்டு இது பிராகிருத தேஜஸ் அன்று -அப்ராக்ருத திவ்ய தேஜஸ்ஸாக இருந்தது –
இக்காரணத்தை நாம் பரீஷிப்போம் -என்று பகல் எல்லாம் கண் வளர்ந்து அருளி ராத்ரிகளில் அந்த தேஜஸே குறியாக
அதி த்வரையுடனே மீண்டு எழுந்து அருளி புண்ய க்ஷேத்ரம் தோறும் சோதித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ ரங்க மதுலம் க்ஷேத்ரம் -என்கிற திருவரங்க பெரு நகரிலே சோதிக்க -அதுக்கும் அப்பாலே தென் திசையிலேயாய் இருக்க
பின்னையும் பூர்வம் போலே த்வரித்து எழுந்து அருளி-மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூரிலே சென்று
அப்பால் பார்த்து காணாமையாலே -இது இங்கேயாய் இருக்கும் -என்று சோதித்துப் பார்க்க
பத்மாஸ நோப விஷ்டம் பரபத யுகளே நிவிஷ்ட சைதன்யம் பரதத்வ போதமுத்ரம் பரமாசார்யம் பராங்குசம் வந்தே -என்கிறபடியே
ஸூ ஞான கந பூர்ணராய் உறங்காப் புளி நிழல் தன்னிலே முகுளித நயனராய் ஷோடச வார்ஷிகராய்
ஷோடச கலா பூர்ணரான சந்திரனைப் போலே பத்மாசன உபவிஷ்டராய் பரதத்வ போத முத்ரா யுக்தராய்
பராமாச்சார்யரான ஸ்ரீ பராங்குசரைப் பார்த்து

பகவத் அனுபவம் பண்ணிக் கொண்டு -தம்மைக் கடாக்ஷித்தல் -ஒரு ஸ்ரீ ஸூக்தி அருளிச் செய்தல் செய்யக் காணாமையாலே –
இவருக்குச் சைதன்யம் உண்டோ செவி கேட்க்குமோ என்று பரீஷிக்கைக்காக ஒரு குண்டுக்கல்லை எடுத்து அவர் முன்னே திடீர் என்று போட-
இவரும் அது கேட்டு திடுக்கென்று திருக்கண்களை மலர விழித்துப் பார்த்த அளவிலே
ஸ்ரீ மதுர கவிகளும் இவருக்கு வாக்கு உண்டோ இல்லையோ என்று அறியக் கடவோம் என்று அவரைக் குறித்து –
செத்தத்தின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -என்ன
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய -ஸ்ரீ மதுர கவிகளும் கேட்டு அருளி –
(செத்தது என்று அசித்து -அது எங்கனே என்னில் அப்ராணவத்தாய் ஜடமாய் இருக்கையாலே அசித்தைச் சொல்கிறது –
அதின் வயிற்றில் சிறியது பிறக்கையாவது சரீரத்தோடு ஆத்மாவுக்கு உண்டான சம்பந்தம்
சிறிதாவது அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவைச் சொல்லுகிறது –
சரீரத்தோடு ஆத்மாவுக்கு சம்பந்தம் உண்டால் அதுக்கு பாக்கியமும் அசித் கதமாய் இருக்கிற ஸூக துக்கங்கள் –
அத்தைத் தின்று அங்கே கிடக்கையாவது சரீரகதமாய் இருக்கிற ஸூக துக்காதிகளைப் புஜித்துக் கொண்டு
சரீரத்தையே ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கை -)
இவர் சர்வஞ்ஞராய் இருந்தார் -இம் மஹாநுபாவரை நாம் அனுவர்த்தித்து உஜ்ஜீவிக்க வேணும் -என்று நினைத்து
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆழ்வார் திருவடிகளிலே சாஷ்டாங்க ப்ரணாமமாக தாளும் தடக்கையுமாக விழுந்து சேவித்து –
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்று ஆஸ்ரயித்து க்ருதரார்த்தராய் –

பணிந்து அடியேனை அங்கீ கரித்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -ஆழ்வாரும் இவரை விசேஷ கடாக்ஷம்
பண்ணி அருளிப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பிரசாதித்து அருளி நாம் பாகவத அனுபவத்துக்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை
நீர் பட்டோலை கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் -அவ்வளவில்
குரு பாதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே த்ரிவித காரணங்களால் உண்டான
தத் பாதாம்புஜ தியாக -தன் நாம கீர்த்தன-தத் கிங்கர வ்ருத்திகளுமாகவே ஆழ்வாரை சதா அனுபவம் பண்ணிக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற அளவிலே
ஆதி தேவோ ஜெகன்நாதோ வாஸூ தேவோ ஜகத் பதி சதுர் புஜஸ் ஸ்யாமளாங்க பரமே வ்யோம்நி திஷ்டதி -என்று
சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனுமாய் -சர்வ ஸ்வாமியுமாய் -சர்வ நியாந்தாவுமாய் -சர்வ அந்தர்யாமியாய் –
நீல மேனியும் நான்கு தோளும் உடையனுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணனானவன்

ஆழ்வாருக்கு எதிர் விழி கொடுக்க வேணும் என்று திரு உள்ளமான அளவிலே
பெரிய திருவடியும் தம்முடைய பக்ஷபாதம் தோன்ற முன்னே வந்து நிற்க
அதாகதங் கருடமும் புரஸ்ஸ்திதம் மஹா கிரிம் ஜலத இவாருரோஹச -என்றும்
பொலிந்த இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்த திரு இருந்த மார்பன் -பொலிந்த கருடன் மேல்
கொண்ட கரியான் -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அநபாயினியான பிராட்டி ஸஹிதனாய்ப் பெரிய திருவடி மேல் கொண்டு தோன்றி தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் யுகபத் ஏவ சாஷாத் கரித்து அனுபவிக்கலாம் படி
ஆழ்வாருக்கு மயர்வற மதி நலம் அருள

ஆழ்வாரும் பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி -என்கிறபடியே
எம்பெருமானுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும்
தத் ஸ்வரூப பிரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
ததாதேயமான திவ்ய குணங்களையும் அனுபவித்து -அவ்வனுப ஜெனித ப்ரீதி உள் அடங்காமல்
ருசோ யஜும் ஷி சாமா நிததை வாதர்வணா நிச -என்கிற வேத த்ரய சாரார்த்தத்தை
திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி–என்கிற திவ்ய பிரபந்தங்களாலே அருளிச் செய்தும்
வேதா நாம் சாம வேதோ அஸ்மி -என்று கீத உபநிஷத் ஆச்சார்யன் தானாகச் சொல்லப்பட்ட சாம வேத சாரார்த்தத்தை
சரம ப்ரபந்தமான திருவாய்மொழியாலே அருளிச் செய்தும் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்கிறபடியே
தேவு மற்று அறியாத ஸ்ரீ மதுரகவி பிரப்ருதிகளான சஜ் ஜனங்கள் அறியக் கற்று வல்லராம்படி ப்ரதிஷ்டிப்பித்து
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே யாக்கி புஷ்ப்ப தியாக போக மண்டபம் தொடக்கமான
திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திருப் புளி ஆழ்வார் அடியிலே எழுந்து அருளி இவருக்குத் திரு முக பிரதானம்
பண்ணித் தாங்களும் எம்பெருமான் உளனாகவே -என்கிறபடியே சத்தை பெற்று நிற்க

நித்ய ஸூரிகளும் ஸ்வேத த்வீப வாசிகளும் இவ்வாழ்வார் வைபவத்தைக் காண்கைக்காக வந்து நிற்க அவர்களை சேவித்து
பொலிக பொலிக என்று மங்களா சாசனம் பண்ணி அவர்கள் வைபவத்தை அறிந்து அனுபவித்த தமக்கு
மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
யான் பெரியன் நீ பெரிய என்பதனை யார் அறிவார் -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி உபய விபூதியிலும் தமக்கு சத்ருசர் இல்லாதவராய்
ஒருவராலும் அறிய அறியதான ப்ரபாவத்தை உடையராய்

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று
பால்யாத் ப்ரப்ருதி -என்று பகவத் குண ஏக தாரகராய்
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந ப்ராப்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச –
வதந்தி சகலா வேதாஸ் ச இதிஹாச புராணகா -என்று சகல வேத சாஸ்திரங்களிலும்
சார தமமாகச் சொல்லப்படுகிற அர்த்த பஞ்சகத்தையும்
த்வயாத் பரதரம் நாஸ்தி மந்த்ரம் வேதேஷ் வபித்விஜ-என்று மந்த்ர ஸ்ரேஷ்டமாகச் சொல்லப்படுகிற
சர்வ வேத ஸாஸ்த்ர சார பூத சரணாகதி மந்த்ரார்த்தையும்
சரம திவ்ய பிரபந்தமான திருவாய் மொழியால் ஸூ வ்யக்தமாம் படி அருளிச் செய்து
தர்சனம் பரபக்திஸ் ஸ்யாத் பரஞானந்து சங்கமம் புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்கிறபடியே
பரபக்தி பரஞான பரம பக்தியை யுடையராய்க் கொண்டு தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள்
அருளிச் செய்து அவா அற்று வீடு பெற்று அருளினார் –

அநந்தரம் -திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் என்கிற திருக் குருகூர் நம்பிக்கு பிரதம சிஷ்யரான
மதுர கவிகள் ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஸ்வ ஆச்சார்ய வைபவத்தை -கண்ணி நுண் சிறுத்த தாம்பு -என்கிற
திவ்ய பிரபந்தத்தாலே அருளிச் செய்து பஞ்சம உபாய நிஷ்டரான முமுஷுக்களுக்கு உபகரித்து அருளி
அர்ச்சா ரூபமான ஆழ்வார் விக்ரஹத்தையும் எறி அருள பண்ணி அவருக்கு நித்ய பக்ஷ மாச அயன சம்வத்சர உத்சவங்களை
எல்லாம் மஹா உத்சவமாகத் தாழ்வற நடத்திக் கொண்டு
வேதம் தமிழ் செய்த பெருமாள் வந்தார்
திருவாய் மொழிப் பெருமாள் வந்தார்
திரு நகரிப் பெருமாள் வந்தார்
திரு வழுதி வள நாடர் வந்தார்
திருக் குருகூர் நகர் நம்பி வந்தார்
திருக் காரி மாறர் வந்தார்
ஸ்ரீ சடகோபர் வந்தார்

ஸ்ரீ பராங்குசர் வந்தார் என்று பல சிஹ்னங்கள் பரிமாற-
அவ்வளவில் சங்கத்தார் சிஷ்யர்கள் வந்து எங்கள் சங்கத்தாரோடே தர்க்கித்து
ஜெயித்துச் சங்கப் பலகை ஏறினால் ஒழிய -வேதம் தமிழ் செய்த பெருமாள் -என்று விருது பிடிக்க ஒட்டோம் என்று தடுக்க
ஸ்ரீ மதுரகவிகளும் அதுந்யாயமாம் -எங்கள் ஆழ்வார் எங்கும் எழுந்து அருளார் –
அவர் திவ்ய ஸூக்திக்குச் சங்கப்பலகை இடம் கொடுத்ததாகில் அவருக்கு இடம் கொடுத்ததாம்-என்று சொல்லி
ஒரு சிறு முறியிலே-கண்ணன் கழலிணை -என்று எழுதி இச் சிறு முறியை சங்கப் பலகையின் மேல் வையுங்கோள்-என்று
அவர்கள் கையிலே கொடுக்க அவர்களும் போய் இவ்விசேஷத்தைச் சங்கத்தாருக்குச் சொல்லி அச் சிறு முறியை
சங்கப் பலகையின் மேல் வைக்க அக்காலத்திலே தென் மதுரையிலே சங்கத்தாரோடே சேர் முன்னூறு தமிழ்ப் புலவர்
சங்கப் பலகை ஏறி இருக்க அப்பலகை அவர்கள் எல்லாரையும் எடுத்துக் கவிழ்த்துப் போட்டு
ஆழ்வார் திவ்ய ஸூக்திச் சிறு முறி ஒன்றையுமே தரித்துக் கொண்டு நிற்க இத்தைக் கண்டு சங்கத் தலைவனும் பயப்பட்டு
ஈ யாடுவதோ கருடற்கு எதிரே
இரவிக்கு எதிரே மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ வுறும் இப் புலி முன்
நரி கேசரி முன் நடை யாடுவதோ
பேய் ஆடுவதோ எழில் அழகு ஊர்வசி முன்
பெருமான் அடி சேர் வகுளாபரணன் ஓர் ஆயிர மா மறையின் தமிழில் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே
(பெருமான் வகுளா பரணன் தரு சொல் ஓர் ஆயிர மா மறையின் பொருளின் இந்த ஒரு சொல் பொருமோ-பாடாந்தரம் )
என்று ஆழ்வார் விஷயமாக கவி சொல்லி அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டான் –
பின்னையும் அங்குக் கிடந்த தமிழ் புலவர் அடைய ப்ரத்யேகம் கவி சொல்லி அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டார்கள்
இப்படி குரும் பிரகாசயேத் தீமாந் என்கிறபடியே ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ பராங்குசருடைய வைபவத்தை
ஊரும் நாடும் உலகும் எல்லாம் அறியும்படி பிரகாசிப்பித்துக் கொண்டு
ஸ்ரீ மதுரகவிகள் சிலகாலம் எழுந்து அருளி இருந்து லோகத்தை வாழ்வித்து அருளினார் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வைபவம்-

February 10, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வைபவம்

பர கால ஹரிம் வந்தே ஹரி பாத குஹா சயம் -உன்னத பிரதிகூலே ப கும்ப சம்பேத விப்ரமம்
நாத பிரசப சந்த்ரஸ்த சைவ சாக்யாதி துர் த்வீபம்-பர காலம் ரு கேந்த்ரத்வாம் ப்ரபத்யே அச்யுத வந்திநம்

ஸூதா பாநாப்தாநாம் கலியுக பவாநாம பகமே
நளே வர்ஷே மாசே சரதி சரமே தைவத குரோ
திநேதாரேவஹ் நேஸ் சிசிரா கிரனே பூர்ணி மஜுஷி
ஷிதாவர விர்ப்பூத கலிரி புரமேயாத்ம மஹிமா

திருமங்கை ஆழ்வார் திருவாலி திருநகரியிலே திருக் குறையலூரிலே -நள வருஷம் கார்த்திகை மாசம் கிருத்திகா நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ கார்முக -ஸ்ரீ சார்ங்கம் -அம்சராய் அவதரித்து அருளினார் -மிலேச்ச வம்சத்தில் அவதரிக்கையாலே
இவருக்கு -நீலன் -நீல நிறத்தர்-என்று திரு நாமம் சாத்தினார்கள்
சம ஜாயத தத்ர சாபர ப்ரமுக கஸ்சந நீல நாமக புருஷோத்தம கார்முகாம் சஜஸ் ஸ்புரிதே கார்த்திக க்ருத்தி கோடுநி -என்று
திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

தெரியேன் பாலகனாய் -என்கிறபடியே பால்ய அவஸ்தா அநந்தரம் ப்ராப்த யவ்வனராய் –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்து -தெரிவைமார் உருவமே மருவி மிகவும் விஷய ப்ரவணராய் –
ஸ்வ கர த்ருத சஸ்த்ர பிரகாண்டராய் சோழ பூபதியை சேவித்து யுத்தே ப்ராக்ராந்தராய்-பிரவீரராய்
தமக்கு ஸஹாய பூதராக -நீர் மேல் நடப்பான் -நிழல் ஒதுங்குவான் -தாளூதுவான் -தோலா வழக்கன் -என்ற
நாலு மந்திரிகளும் -ஆடல் மா -என்கிற குதிரை நம்பிரானும் -அமரில் கட மா களி யானை -என்கிற யானை நம்பிரானுமாக –
இப்படி இருக்கிற இவரை -அவனும் ஒரு தேசாதிபதியுமாய் -சேநா நாயகனும் ஆக்கி வைத்துப் போருகிற காலத்திலே

திருவாலி நாட்டிலே நன்றாய் இருபத்தொரு தடத்தவிழ் தாமரைப் பொய்கையில் –
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் -என்கிறபடியே -சில அப்சரஸ்ஸூக்கள் வந்து நாளும் ஜல க்ரீடை பண்ணிப் போக
அவர்களிலே திரு மா மகள் என்பாள் ஒரு அப்சரஸ்ஸூ குமுத மலர் கொய்யப் பிற்படுகையாலே அவர்களும் இவளை விட்டுப் போக
இவளும் மானுஷமான சரீரத்தைப் பரிக்ரஹித்து தனித்து நிற்க
அவ்வளவில் திரு நாங்கூரில் எம்பெருமானை சேவித்து இருப்பான் ஒரு பிஷக்வரனான பாகவத உத்தமன் அனுஷ்டான அர்த்தமாக
வந்த அளவிலே இப் பெண் பிள்ளையைக் கண்டு நீ யார் தனித்து இருப்பான் என் -என்று கேட்க –
அவளும் கூட வந்த பெண் பிள்ளைகள் என்னை விட்டுப் போனார்கள்
ஸ்ரீ மன் நாராயண அம்சஜரான கபிலாச்சாருடைய கோப உக்தியாலே மானுஷ வேஷத்தைத் தரித்து பாலகையாய்
ஸ்வர்க்கத்துப் போக சக்தி இல்லாமல் இருக்கிறேன் என்ன

அந்த வ்ருத்தாந்தத்தைச் சொல் -என்று வைத்தியர் கேட்க -ஸ்வாமி அடியேன் ஸூ மங்களை-என்கிற நாமம் உடையளாய் –
ஸ்வ சகிகளான அப்சரஸ்ஸூக்களோடே கூட அவர்களுக்கு எல்லாம் நாயகியாய்த் திவ்ய ரூபத்தோடே சஞ்சரிக்கும் போது
ஒரு நாள் ஹிமவத் கிரியில் உள்ள வைபவங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு வரும் அளவில் ஒரு சித்தாஸ்ரமத்தில்
கபிலாச்சார்யார் மஹர்ஷிகளுக்கு பகவத் வைபவம் சொல்ல –
நான் அதில் ஒரு குரூபியான சித்த புருஷனைக் கண்டு பரிஹாஸம் பண்ண கபிலர்
நீ மனுஷ்யையாய் நீசனுக்கு பார்யையாகக் கடவாய் -என்று சபிக்க -நான் அதி சோகத்தோடு பிரார்த்திக்க –
அவரும் பிரசன்னராய் -பெண்ணே ஜகத் ரக்ஷண அர்த்தமாக என்னுடைய சாரங்க அம்சஜராய்ப் பரகாலன் அவதரித்து
ராஜ்ய அதிபதியாய் இருக்கிறார் -அவருக்குப் பத்னியாய் அவரை பாகவத உத்தமராகப் பண்ணினால் உன் குறைவு
அற்றுப் போகும் என்று சொல்ல -இப்படி வந்தேன் -என்று தான் வந்த க்ரமத்தை அவருக்குச் சொல்ல –
அவரும் புத்ர ஹீனர் ஆகையால் -மிகவும் உகந்து நம்மூரே வா -என்று அழைத்துக் கொண்டு போய்
ஸ்வ பத்னி கையிலே குமாரி வந்த வரத்தைச் கொல்லிப் போஷிக்கும் படி காட்டிக் கொடுக்க
அவளும் வந்த்யை யாகையாலே அதி சந்தோஷத்துடன் அங்கீ கரித்து
இவள் குமுத மலர் கொண்டு நின்றதுவே நிரூபகமாக குமுத வல்லியார் -என்ற திரு நாமம் சாத்தி
தம்பதிகள் இருவரும் தங்களுக்குப் புத்ரியாக வளர்த்துக் கொண்டு போருகிற காலத்தில் –

சிலர் போய் இவருக்கு இப் பெண் பிள்ளையினுடைய ரூப லாவண்யாதிகளை மிகவும் ஸ்லாகித்துச் சொல்ல
இவரும் அத்தைக் கேட்டு நின்றவா நில்லா நெஞ்சினராய் -அவர் தரும் கலவையே கருதி ஓடித் திரு நாங்கூரிலே சென்று
மருத்துவனான பாகவதன் அகத்தில் புகுந்து அவனுடனே சம்பாஷணம் பண்ணிக் கொண்டு இருக்கச் செய்தே –
இப் பெண் பிள்ளை புறப்படக் கண்டு விஸ்மயப் பட்டுப் பாகவத பிஷக் வரரைக் குறித்து
ஸூர ஸூதோபமையான ஸூதை அநபத்யரான உமக்கு எங்கனே உண்டாய்த்து என்று கேட்க –
அவரும் இவருடனே அப் பெண்ணின் வரத்தைச் சொல்லி -இப் பெண்ணினால் அநபத்யதா சோகம் தீர்ந்தேன் –
விவாஹ உசித வாயஸ்கையாய் அஞ்ஞாத குல கோத்ரையான இவளை யாருக்கு வாழ்க்கைப் படுத்துவேன் என்று
வியாகுல அந்தக்கரணன் ஆகா நின்றேன் -என்ன
இவரும் இப் பெண்ணை நமக்குப் பத்நியாகத் தர வேணும் என்று வஸ்திர பூஷணாதி த்ரவ்யங்களை சங்கோசம் அறக் கொடுத்து
மிகவும் அநு வர்த்தித்து விரும்பிக் கேட்க தம்பதிகளும் அப் பெண் பிள்ளையை இவருக்கு கொடுப்பதாக உத்யோகிக்க –

அப் பெண் பிள்ளையும்
தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம -என்று சொல்லப்பட்ட திரு இலச்சினை திரு நாமம் பின்னாகப்
பஞ்ச சம்ஸ்காரம் உள்ளவர்க்கு ஒழிய மற்று ஒருவருக்கு பேசல் ஓட்டேன் -என்று தன் நெஞ்சில் அத்யவசாயத்தைச் சொல்ல
இவரும் அவ் வசனத்தைக் கேட்டு -ஸூபஸ்ய சீக்ரம் -என்கிறபடியே அதி த்வரையோடே திரு நறையூரில் சென்று –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்கிறபடியே நம்பி திரு முன்பே வந்து
திரு நறையூர் நம்பி திருவடிகளிலே தாளும் தடக் கையும் கூப்பி தண்டன் சமர்ப்பித்து -தேவரீர் அடியேனை இரங்கி அருளி
கிருபை பண்ண வேணும் என்று ஒரு காரணத்தினாலே தேவரீர் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணும் என்று வந்தேன் என்ன –
நம்பியும் இவருக்கு
அக்னி தப்தேந சக்ரேண பாஹு மூலேது லாஞ்சித -என்றும்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று -என்றும்
சொல்லுகிறபடியே திரு இலச்சினையும் தரித்து
சர்வைஸ் ஸ்வேதம் ருதாதார்யம் ஊர்த்வ புண்ட்ரம் யதா விதி ருஜுநி சாந்தராளாநி ஹ்யங்கே ஷூ த்வாதச அபி என்றும்
திரு இலச்சினையையும் கேசவாதி ச ஊர்த்வ புண்ட்ரங்களையும் ப்ரசாதித்து அருளி திரு மங்கை ஆழ்வார் என்ற திரு நாமமும்
ப்ரசாதித்து விடை கொடுத்து அனுப்ப இவரும் எழுந்து அருளி நின்ற அளவிலே

குமுத வல்லியாரும் ஆழ்வாரைப் பார்த்து -மஹா சந்தோஷமாய்த்து -இன்னம் ஒரு விரதம் எனக்கு உண்டு என்று
ஒரு சம்வத்சரம் நித்தியமாக ஆயிரத்து எட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தமும்
தளிகைப் பிரசாதமும் ஸ்வீ கரித்து நிறைவேறினால் ஒழிய உன்னை நான் பர்த்தாவாக அங்கீ கரிப்பது இல்லை
என்று ஒரு நியமம் பண்ண அவரும் அதுக்கு இசைந்து ப்ராவண்ய அதிசயத்தாலே ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொடுக்க
அதின் பின்பு குமுத வல்லியாரை நீல நிறத்தற்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து உதக பூர்வகமாக சமர்ப்பித்தார்கள்-

அநந்தரம் ஆழ்வாரும் -ஆராதாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் -தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீய ஆராதனம் ந்ரூப-
என்கிறபடியே அதி ப்ரீதியுடனே -திருமால் அடியார்களைப் பூசிக்க ஒருப்பட்டு அதுக்கு தம்முடைய சர்வ ஸ்வத்தையும் இட்டுத்
ததீய ஆராதனம் செய்து கொண்டு போருகிற காலத்தில் –
பரகாலன் பகுதி த்ரவ்யத்தை எல்லாம் ஸ்வயம் பண்ணி பிரதி தினம் ததீயாராதனம் பண்ணுகிறான் என்று சிலர் போய்
சோழ ராஜாவுக்குச் சொல்ல அவனும் கேட்டுக் குபிதனாய் பகுதிக்கு இவர் பக்கல் தரவு வரக் காட்ட இவரும்
அந்தத் தரவுக்கு வந்த ராஜ மனுஷ்யருக்கு
தத்யாமேவ நிசா முகேதி நமுகே மத்யாஹ் ந சாயாஹ்நயோ -பஸ்ஸாதா வ்ரஜகம் யதாமவ சரோ நை வாஸ்தி –என்னுமா போலே
சில பர்யாயங்களைச் சொல்ல கேட்டுச் சலித்து ராஜ மனுஷ்யர் பகுதி த்ரவ்யம் தர வேணும் என்று நிர்பந்தித்துக் கேட்க
இவரும் குபிதராய் அவர்களைத் தள்ளி விட அவர்களும் போய் இவ் விஷயத்தை சோழ ராஜாவுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய
இவர் ஆஜ்ஞா பங்கம் பண்ணினத்துக்கு மிகவும் சீறித் தன் சேனாதிபதியை அழைத்து பர காலனை இங்கே பிடித்துக் கொண்டு வா என்று
ஆஜ்ஞாபிக்க அவனும் ரத கஜ துரக பதாதி களோடு சென்று இவரை வளைத்துப் பிடித்துத் தேட இவரும்
துரகா ரூடராய் ஸ்வ பல சகிதராய் ஆலித்துக் கொண்டு அவன் படை மேலே விழுந்து ரத கஜ துரக பதாதி களைக் கண்டித்து
பராஜிதனாக்கி ஒட்டி விட

சேனாதிபதியும் காந்தி சீகனாய் ஓடி வந்து பராஜயத்தை சோழனுக்கு அறிவிக்க சோழ பூபன் கேட்டு
கோபாத் சம்ரக்த லோசனாய் அப்போதே தன் சதுரங்க பலத்தோடு புறப்பட்டு வர –
அவனுடைய சேனா சமுத்திரம் இவரை வளைய இவரும் பூர்வம் போல த்ருட கர வாள பயங்கர ஹஸ்தராய்
ஆலித்துக் கொண்டு வந்து அவன் சேனா சமுத்திரத்தை மந்த ராத்திரி போல் மதிக்க சர்வரும் பராஜிதராய் ஓடி வந்து
ராஜா மேல் விழ ராஜாவும் அதி ரௌரத்துடனே ஓடுகிற பலத்தை நிறுத்தி ஜகத் ஏக துர்த்தரானான பெருமையோடு இவரை
சேநா சமுத்திர மத்யஸ்தராம் படி வளைய இவரும் அதி வீரராய் ஸ்வ கர த்ருத சஸ்த்ர பலத்தால் சேனையை மதியாமல்
சம்ஹரிக்குமது கண்டு அதி ஸந்துஷ்டனாய் இவரை நீர் ஒன்றுக்கும் பயப்பட வேண்டா –
உம்முடைய தைர்ய ஸுர்ய பராக்ரமங்களைக் கண்டு மிகவும் சந்தோஷித்தோம் -நீர் செய்த அபகாரங்களை எல்லாம் மறந்தோம் –
அஞ்சாதே நம்மை நம்பி வருவது என்று தன் குரு தைவங்களைத் தொட்டு சபதம் பண்ணிக் கொடுக்க இவரும் நம்பி
அவன் அண்டையிலே சென்ற அளவிலே இவருடைய பராக்கிரமத்தை மிகவும் சிலாகித்து –
நீர் செய்த த்ரோஹம் எல்லாம் பொறுத்தோம் நம் பகுதி த்ரவ்யங்களை மாத்திரம் தந்து விடும் என்று
இவரைத் தன் மந்திரி வசமாக்கி ஊரே மீண்டான்

அந்த ச சிவனும் படை வீட்டிலே சென்று இவரைப் பிடித்துக் கொண்டு வந்து -ஒரு தேவாலயத்தில் சிறை வைக்க –
திரு நறையூர் நம்பி திருக் கோயிலிலே என்றும் -பாட பேதம் –
இவரும் அந்த கோயிலிலே மூன்று நாள் அமுது செய்யாமல் உபவசித்து இருக்க –
நம்பியுடனே நாச்சியாரும் நம்முடைய புத்ரன் உபவாசம் இருக்கலாமோ -என்ன பெருமாளும் நாச்சியார் வார்த்தைக்கு இசைய
திரு உற்ற பிரசாதமும் குழம்புப்பாலும் நாச்சியார் கொண்டு போய் ப்ரசாதிக்க இப்படி பல நாளும் ஆனபின்பு
ஆழ்வாரும் முசித்து -பெரிய பெருமாளையும் திருவேங்கடமுடையானையும் பேர் அருளாளரையும் பிரபத்தி பண்ணிக் கொண்டு
காவலுடன் கிடப்போம் என்று வியாகுல அந்தக்கரணராய் நிற்க இப்படி ஆர்த்தராய் இருக்கிற இவர் ஸ்வப்னத்திலே
பேர் அருளாளர் எழுந்து அருளி உமக்குப் பகுதிக்கு வேண்டிய த்ரவ்யம் தருகிறோம்
ஸ்ரீ காஞ்சீபுரத்து ஏற வாரும் என்று அருளிச் செய்ய

இவரும் நிச்சிதார்த்தராய் இருக்க பொழுது விடிந்த அளவிலே கர தனம் தர வேணும் என்று வந்த அமாத்யனுடனே
ஸ்ரீ காஞ்சீ புரத்தே ஆபத்தனமாகச் சில தனம் சேமித்துக் கிடக்கிறது -அங்கே வந்தால் உங்கள் தனம் தருகிறோம் என்ன –
அவனும் ராஜாவுக்கு அறிவிக்க -அவன் அத்தையும் பார்ப்போம் ஜாக ரூகராய்க் காவலிட்டுக் கொண்டு போங்கோள் என்று
ஆஞ்ஞாபிக்க -இவரும் காவலுடன் ஸ்ரீ காஞ்சீ நகரி ஏறச் சென்று நிஷேப தனம் சோதித்துக் காணாமையாலே
முசித்துக் கிடக்க -அவ்வளவில் கருணாகரராய் அர்த்திதார்த்த பரிதான தீஷிதரான ஸ்ரீ வரதராஜரும் அஞ்சாதே கொள்ளும்
என்று வேகவதீ தீரத்தில் தனம் இருக்கிற இடத்தை அடையாளத்துடன் ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய –
இவரும் அங்கே தனம் கண்டு எடுத்து ந்ருப தனம் கொடுத்து சேஷித்த தனத்தை ததீயாராதன அர்த்தமாக வைத்துக் கொள்ள –
மீளவும் ராஜ மனுஷ்யர் சில தான்யாதிகள் தர வேணும் என்று நிர்பந்திக்க -இவரும் முசித்துக் கண் வளர்ந்து அருள
முன்பு போலே ஸ்ரீ வரதராஜரும் -வேகவதி மணலைத் திரட்டி அளவும் -என்ன இவரும் அப்படியே மணலைக் கூட்டி அளக்க
அவர்கள் கண்ணுக்கு அநர்க ஸ்லாக்ய நெல்லாய் இருந்தபடியால் அவர்களும் அளந்து கொண்டு போக –
அமாத்யனும் அந்தத் தனத்தை ந்ருபதி முன்னே வைத்து ஸ்ரீ வராத ராஜர் பிரசன்னராய் த்ரவ்யம் தந்தபடி சொல்ல –
கேட்டு விஸ்மிதனாய் -இவர் சாமான்யர் அன்று மஹா பாகவதர் -இது திரௌபதிக்கு புடவை சுரந்தால் போலே இருந்தது –
இந்த தனத்தை நம் கோசத்தில் வைக்க ஒண்ணாது என்று பார்த்து ஆழ்வாரை அழைத்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு
பஹு முகமாக பஹு மானம் பண்ணிப் போக விட இவரை உபவசிப்பித்த தோஷம் போம்படி
அந்த த்ரவ்யத்தை தேவ ப்ராஹ்மண சந்தர்ப்பணம் பண்ணித் தோஷம் தீர்த்துக் கொண்டான்

பின்பு இவரும் சேஷித்த த்ரவ்யம் கொண்டு ததீயாராதனம் நடத்தித் தனம் எல்லாம் தீர்ந்து கையில் ஒன்றும் இல்லாமையால்
வழி பறித்தாகிலும் தன ஆர்ஜனம் பண்ணித் ததீயாராதனம் அவிச்சின்னமாக நடத்த வேணும் என்று வழி பறித்துத்
தனம் கொண்டு வந்து ததீயாராதனம் பக்தி புரஸ்சரமாக நடத்திக் கொண்டு போரா நிற்க
பின்னையும் ததீயாராதன நிமித்தமாக தன ஆர்ஜனம் பண்ண வேணும் என்று
நீர் மேல் நடப்பான் நிழல் ஒதுங்குவான் தாளூதுவான் தோலா வழக்கன் என்ற இந்த நான்கு மந்திரிகளையும்
ராத்திரி காலத்தில் சில வழியில் திரட்டிக் கொண்டு வாருங்கோள் என்று ஆஞ்ஞாபித்து
இப்படி ததீயாராதனம் பண்ணிக் கொண்டு போரா நிற்க
சர்வேஸ்வரனும் -வழி பறித்ததும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்காகவே ஆகையால் இவர் சரம புருஷார்த்தத்திலே நிஷ்ணாதர்
என்று கொண்டு அந்த ஸூஹ்ருதமே பற்றாசாக இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அங்கீ கரிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி இவர் வழி பறிக்கைக்கு உசிதமான பரிகரத்தையும் கூட்டிக் கொண்டு
திரு மணம் கொல்லையில் திருவரசின் மேலே கொடி வைத்துப் பதுங்கி இருக்கிற வழியிலே

சாஷான் நாராயணா தேவ க்ருத்வா மர்த்யமயீந் தநும் மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாச் ஸாஸ்த்ர பாணிநா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் சொல்லுகிறபடியே
வயலாலி மணவாளன் திரு மணம் புணர்ந்து வருகிற மணவாளக் கோலமும் தாமுமாய் ப்ராஹ்மண வேஷத்தைப் பரிக்ரஹித்துப்
பத்னீ ஸஹிதனாய் சர்வ ஆபரண பூஷிதனாய் பஹு த்ரவ்யம் கொண்டு அநேகம் திரளோடு வந்து தோற்ற
இத்திரளைக் கண்டு ஆலித்துக் கொண்டு சா யுதராய் ச பரிகரராய் பெரிய ஆராவாரம் பண்ணிக் கொண்டு
அவர்களை வளைத்து சூழ்ந்து வஸ்திர ஆபரணங்களையும் அபஹரித்துக் கொண்டு அறுகாழியையும் திரு முத்தாலே கடித்து
வாங்க எம்பெருமானும் இத்தைக் கண்டு -நம் கலியனோ -என்று அருளிச் செய்தார் –

பின்பு அவை அத்தனையும் சுமை சுமையாகக் கட்டி எடுக்கப் பார்க்க -அவை பேர்க்கவும் பேராத படியால்
மணவாளனான ப்ராஹ்மணனைப் பார்த்து -நீ மந்த்ர வாதம் பண்ணினாய் -என்று நெருக்க –
எம்பெருமானும் -அம்மந்திரத்தை உமக்குச் சொல்கிறோம் வாரும் என்று கழுத்தை அணைக்க
இவரும் ஓமறைந்து ஹடாத் கரித்து வாள் வலியால் கேட்க
நீ என் செவியின் வழி புகுந்து -என்கிறபடியே செவிக்கு இனிய செஞ்சொல்லாய்
ருசோய ஜூம்ஷி சாமாநி ததைவா தர்வாணா நிச சர்வம் அஷ்டாக்ஷராந்தஸ் ஸ்தம் யச்சாந் யதபி வாங்மயம் -என்றும்
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாக்ஷர அந்ரூணாம் அபுநர் பவ காங்ஷீணாம்-என்றும்
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்–கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோ
அயம் சாதயிஷ்யதி-என்றும் சொல்லுகிறபடியே -சகல வேத ஸங்க்ரஹமாய் அனந்த கிலேச பாஜனமான
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் கரையேற்ற வற்றாய்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய கைவல்ய அபுநரா வ்ருத்தி லக்ஷண பரம புருஷார்த்தம் முதலான அகிலார்த்த பிரதமாய்
ஓமித் யக்ரே வ்யாஹரேத் நம இதி பஸ்சாத் நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் நமே இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி -என்கிறபடியே
அவன் பெயர் எட்டு எழுத்தும் -என்று எட்டுத் திரு அக்ஷரமாய் -உபநிஷத் படி பத த்ரயாத்மகமாய்
அவற்றால் ஸ்வரூப உபாய புருஷார்த்த ப்ரகாசகமுமாய் -மற்றை வியாபக மந்த்ர த்வயம் போல் அன்றிக்கே
இதிலே நார சப்தம் உண்டாகையாலே சப்த பூர்த்தியும் உடைத்தாய்
பேராளன் பேர் ஓதும் பெரியோர் என்கிறபடியே சிஷ்ட பரிக்ரஹ யுக்தமாய்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராமாம் மூல மந்த்ரஸ் சனாதன -என்கிறபடியே
உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்படுகிற மூல மந்திரமான பெரிய திரு மந்த்ரத்தை
நர நாராயணனாய்த் தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட இழவு தீர
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்று தம் வாயாரச் சொல்லும்படி
ஆழ்வாருடைய வலத் திருச் செவியில் உபதேசித்து அருள அநந்தரம்

லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேசா தேவ்யா காருண்ய ரூபயா–என்கிறபடியே கிருபையே தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
காருண்ய ரூபையான ஸ்ரீ ஸஹாயனாய்க் கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்நது பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல் -என்றும்
ஸூபர்ண ப்ருஷ்டே ப்ரபபவ் ஸ்யாம பீதாம்பரோ ஹரி காஞ்ச நஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ச தடித்தோய தோயதா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான பெரிய திருவடி மேல் கொண்டு வந்து நீல மேக நிபமாய் கனக கிரி மீதில் கார் முகில் படிந்து உலாவுமா போலே
விளங்குகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை இவ் வாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளி சாஷாத் கரிப்பித்து அருள

இவ்வாழ்வாரும் தமக்கு நிர்ஹேதுக லப்தமான திருமந்த்ரத்தையும்
அதுக்கு உள்ளீடான ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களையும் எல்லாம்
திரு மா மகளால் அருள் மாரி -என்னும்படி பெரிய பிராட்டியார் அருளால் உண்டான தக்க ஞானங்களால் கண்டு அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வாக் பிரவாஹ ரூபேண பெரு வெள்ளமிட்டு
பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் -திரு எழு கூற்று இருக்கை -சிறிய திரு மடல் –
பெரிய திரு மடல் -என்கிற இவ்வாறு திவ்ய பிரபந்தங்களையும் ஸ்ரீ சடகோப வாக் மயமான
த்ராமிட வேத சதுஷ்ட்யத்துக்கு ஷட் அங்கமாக
ஆசு மதுரம் சித்ரம் விஸ்தரம் என்கிற சதுர்வித கவிகளாலே அருளிச் செய்து -லோகத்தில் நாலு கவிப் பெருமாள் -என்று
ப்ரஸித்தமாம்படி உபகரித்து அருளினார்

முன்பு பெருமாளும் பர காலனைப் பார்த்து கலியனே நீர் உம்முடைய பரிவரத்துடனே திவ்ய தேசங்களுக்கு எல்லாம் போய்
மங்களா சாசனம் பண்ணும் என்று ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகளுடனே கருட வாகன ரூடனாகத் தோன்றி அந்தரத்தானனாய்ப் போக –
பின்பு திருமங்கை ஆழ்வாரும் பத்னீ ஸஹிதராய் மந்திரிகளோடே புறப்பட்டு
(பிநாகிநீ கிருஷ்ணா கோதாவரி நதிகளில் தீர்த்தமாடி ஸ்ரீ பத்ராச்சலத்தையும் சிம்ஹாசலத்தையும் ஸ்ரீ கூர்ம நாதனையும்
ஸ்ரீ புருஷோத்தமனையும் சேவித்து கயையிலே தீர்த்தமாடி ஸ்ரீ விஷ்ணு பாதத்தையும் தொழுது கோவர்த்தனம் கோகுலம்
பிருந்தாவனம் மதுரை த்வாராவதீ திரு அயோத்தியை பத்ரிகாஸ்ரமம் சாளக்கிராமம் நைமிசாரண்யம் முதலிய திவ்ய தேசங்களை
மங்களா சாசனம் செய்து காஞ்சீ புரத்துக்கு ஏகி ஹஸ்தி கிரீஸ்வரனையும் மங்களா சாசனம் செய்து திருமலைக்கு எழுந்து அருளி
சஹஸ்ர ஆபரணங்களோடு வர்த்திக்கிற சேஷாசலத்தைச் சேவித்து ஸ்ரீ நிவாஸன் அனுமதி கொண்டு புறப்பட்டு இப்படி —
இவை குண்டலித கிரந்தம் -சில பிரதிகளில் உள்ளவை )

இப்படி திருமொழி அருளிச் செய்து கொண்டு திவ்ய தேசங்கள் தோறும் சேவித்துக் கொண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
சோழ மண்டலத்தில் எழுந்து அருளின அளவிலே
நாலு கவிப் பெருமாள் வந்தார் -நம் கலியர் வந்தார் -ஆலி நாடர் வந்தார் -அருள் மாரி வந்தார் -கொங்கு மலர்க் குழலியர் வேள் வந்தார் –
மங்கை வேந்தர் வந்தார் -பர காலர் வந்தார் -பர வாதி மத்த கஜ கண்டீர் அவர் வந்தார் -என்று விருதூதிச் செல்லா நிற்க
அங்கே சம்பந்தன் சிஷ்யர்கள் வந்து ஆழ்வாரை -எங்கள் சம்பந்தப் பெருமாள் இருக்கிற இடத்தில் நீர் நாலு கவிப் பெருமாள் என்று
விருதூதிச் செல்லத் தகாது -என்று தடுக்க -ஆழ்வாரும் உங்கள் சம்பந்தப் பெருமாளுடன் தர்க்கிக்க கடவோம் என்று அருளிச் செய்ய –
ஆகில் நம்மூரே வாரும் என்று அழைத்துக் கொண்டு போய் இவ்விசேஷத்தைச் சம்பந்தனுக்கு அறிவிக்க
அவனும் இவருடனே தர்க்கிக்க கடவோம் என்று வர ஊரடைய சைவராய் அவ்வூரில் ஒரு திரு முற்றமும் இன்றியே –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் இன்றியே வீர பாஷண்ட பூயிஷ்டமாய் இருக்கக் கண்ட இவ்வாழ்வாருக்கு பகவத் விக்ரஹம் இன்றியே
வாக்குக் கிளம்பாது இருக்க -இதுக்கு என் செய்யக் கடவோம் என்று சிந்தித்து இருக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவியாய் இருப்பாள் ஒரு அம்மையாரைக் கண்டு இப்படி இருக்கிறது ஆகையால் உன் திருவாராதனமான எம்பெருமானை
எனக்கு ஒரு க்ஷணம் தர வேணும் என்று கேட்க அவரும் ஆழ்வாருக்கு தன் திருவாராதனமான வெண்ணெய் உண்ட தாடாளனை
எழுந்து அருளுவித்துக் கொடுக்க ஆழ்வாரும் அவரைக் கொண்டு சம்பந்தன் இருந்த இடத்தே ஏறச் சென்று இருக்க –
அவனும் இவரைக் குறித்து ஒரு கவி சொல்ல -இவரும் அத்தைக் கேட்டு அந்தக் கவியை தூஷிக்க –
ஆகில் நீர் ஒரு கவி -ஒரு குறள்- சொல்லும் என்ன ஆழ்வாரும் ஒரு குறளாய் இரு நிலம் என்கிற திரு மொழியை அருளிச் செய்து
தன் பெருமை எல்லாம் தோற்ற -ஆலி நாடன் அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம் கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பர காலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ் மாலை -என்ன அவனும் இத்தைக் கேட்டு
ப்ரத்யுத்தரம் சொல்லிக் கவி சொல்ல ஷமன் இன்றியே இப்படியும் ஒருவர் உண்டோ என்று ஆச்சர்யப்பட்டு –
நாலு கவிப்பெருமாள் என்னும் விருது உமக்குச் செல்லும் -விருதூதிக் கொண்டு சொல்லீர் என்று கும்பிட்டுப் போனான்

அநந்தரம் -விமானம் பிரணவா காரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம் -ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவான் ப்ரணவார்த்த பிரதாசக -என்கிறபடியே
மன்னனுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்தவராய் பிராணாவாகர விமான மத்யஸ்தரான
பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வனாரான அழகிய மணவாளர்க்கும் விமான மண்டப கோபுர பிரசாத பிரகாராதி ரூபமான
கைங்கர்யங்கள் செய்து அருள வேணும் என்று திரு உள்ளமாய் அதுக்குத் தம்முடைய பரிஜனங்களை அழைத்து
நம்பெருமாளுக்குத் திரு மதிள் முதலான கைங்கர்யம் பண்ணுகைக்குத் தன ஆர்ஜனம் செய்யும் விரகு என் என்று கேட்டு அருள
அவர்களும் நாகப் பட்டணத்தில் புலை அறமாய் இருபத்தொரு புத்த பிரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாய் இருக்கும் –
அத்தைக் கொண்டு வந்து சின்ன பின்னமாக்கி இருப்பதே கருமம் கண்டாய் என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வாரும் சம்மதித்து நாகப் பட்டணத்தில் போய் பரம பாகவதையான ஓர் அம்மையார் க்ருஹமே எழுந்து அருளி

இங்கு நடக்கும் தேவ ரஹஸ்யம் ஏது என்ன -அவளும் எங்கள் மாமியார் கோயில் விமானத்துக்கு உள்ளே ஹிரண்ய மயமான
புத்த விக்ரஹம் உண்டு -இந்த விக்ரஹமும் விமானமும் உண்டாக்கின கம்மாளன் த்வீபாந்தரத்திலே இருக்கிறான் என்று சொல்வர் என்ன
ஆழ்வாரும் ஸூபஸ்ய சீக்ரம் என்று பரிஜனங்களையும் கூட்டிக் கொண்டு அதி தவரையோடு த்வீபாந்த்ரத்திலே எழுந்து அருளித்
தெருவிலே நின்று -விஸ்வகர்மாவுக்கு சமனான கம்மாளனுடைய கிருஹம் ஏது என்று கேட்க அவர்களும்
மாட கூட பிரசாதமான க்ருஹம் அது என்ன -இவர்களும் அந்த க்ருஹத்தின் இடை கழியிலே எழுந்து அருளி
ஒருவருக்கு ஒருவர் சம்பாஷணம் பண்ணிக் கொண்டு இருக்க -அவ்வளவில் அந்தக் கம்மாளனும் வெளியிலே இருந்து வந்து
ஸ்நானம் பண்ணி பிரசாதப்பட்டு பாக்கும் வெற்றிலையும் பிரசாதப்பட்டு இருக்கிற வேளையில் இவ் வாழ்வார் தம்முடைய
பரிஜனங்களைக் குறித்துத் துக்கத்தோடு நாக பட்டணம் கிலமாய்க் கோயிலையும் விமானத்தையும் உடைத்து
விக்ரஹத்தையும் எடுத்துக் கொண்டு அநேகம் துருஷ்கர் கொண்டு போனார்கள் –
இத்தைக் கண்டும் நாம் சரீரத்தை விட மாட்டாமல் போனோம் -என்ன அந்தக் கம்மாளனும் கேட்டு நடுங்கி இவர்கள் முன்னே வந்து நிற்க
இவர்களும் விக்ரஹம் கொண்டு போனத்தை ச விஸ்தரமாகச் சொல்லி

அவனும் முசித்து எப்படிப்பட்ட த்ரோஹியான கம்மாளனோ விமான மகுட ஸூத்ரத்தைக் காட்டிக் கொடுத்தான் –
நான் மஹா விசித்திரமாக கூட சிகரத்தில் இருந்து ஒருவருக்கும் தெரியாதே கோமுகை விழுகிற ஜல தாரையின் கீழே
கல்லுக்கு உள்ளே இரு இரும்பு ஆணியில் சங்கிலி ஸூத்ரம் பண்ணினேன் -இதை எப்படி அறிந்து கொண்டு போனார்களோ
என்று விழுந்து அழத் தொடங்கினான் -இவ் வாழ்வாரும் பரிஜனங்களைக் குறித்து -ஸூத்ரம் வெளியாச்சுது -என்று
அங்கு நின்றும் புறப்பட்டு சமுத்திரக் கரையிலே வந்து தர்மவானான ஒரு வர்த்தகன் பாக்குக் கப்பல் கொண்டு வருமவனைக் கண்டு
ஆசீர்வாதம் பண்ணி நாங்கள் உபவாசமாய் இருக்கிறோம் -எங்களையும் கப்பலில் கொண்டு போம் என்ன –
அவனும் சம்மதித்து வாருங்கோள் என்று கப்பலில் ஏற்றுக் கொண்டு போகிற அளவிலே ஆழ்வாரும் ஒரு கொட்டைப் பாக்கைச் சீவிப்
பாதிப் பாக்கை அவனுக்குக் காட்டிப் பொகட்டு -எனக்குப் பாக்கு அவசியம் என் கப்பலில் பாதிப்பாக்கு உமது -என்று சிறு முறி தாரும் என்ன
அவனும் சம்மதித்துத் தன் கை சீட்டு கொடுக்க இவரும் சீட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு
கப்பல் துறை சேர்ந்த உடன் அவனைக் குறித்து பாதிச் சரக்கு எண்ணித் தா என்ன வர்த்தகமும் திடுக்கிட்டுக் கப்பலில்
துழாவிப் பொகட்ட பாக்கை எடுத்து இதோ காணும் உமது என்ன இவரும் அத்தைக் கண்டு அரைப் பாக்கோ நாம் கொடுத்தது –
உன் சிறு முறியைக் கொண்டு உன் வர்த்தக கரண்டையிலே வழக்குக்குப் போவோம் என்ன அவனும் சம்மதிக்க
இவரும் வர்த்தகர்கள் அநேகம் பேரைக் கூட்டிக் கொண்டு கப்பலில் பாதிச் சரக்கான பாக்கு என்னது என்று இவன் கைச் சீட்டுக்
கொடுத்தான் இப்பொழுது அரைப் பாக்கு கொடுக்கிறான் என்ன
அவர்களும் துர்வழக்கு உண்டோ என்று பாதிப் பாக்குகளையும் எண்ணிக் கொடுக்கச் சொல்லி விட்டார்கள்
வர்க்கனும் இதுவும் ஒரு கடனோ என்று பாக்குக்கு உண்டான கிரய த்ரவ்யங்கள் கொடுத்து அனுப்பி விட்டான்

இவர்களும் அந்தக் கோயிலிலே வந்து ஒரு மூலையிலே பதுங்கி இருந்து மத்திய ராத்திரியிலே அந்த கோமுகையின் கீழே
இரும்பு ஆணிச் சங்கிலியைப் பிடுங்கி விமானம் எறி ஸீகரமான மகுடத்தை இடம் புரி வலம் புரி திருப்பிச் ஸீகரத்தைத் திறந்து
கோடி ஸூர்யர் உதயமானால் போல் இருக்கும் ஸ்வர்ண விக்ரஹத்தைக் கண்டு –
ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ தேயத்தேய் பித்தளை நல்
செம்புகளால் ஆகாதோ மாயப் பொன் வேணுமோ மதித்து என்னைப் பண்ணுகைக்கே -என்று தத் பிம்பம் ஊளை இடும்படி
தம்முடைய மைத்துனரை இறங்க விட்டு அபஹரித்து-அவர் விக்ரஹம் எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டு வந்து
பங்கப்படுத்திக் கொண்டு போனார்கள்

பின்பு ஆழ்வாரும் மந்திரிகளும் பொழுது விடிவு காலத்திலே ஒரு அக்ரஹாரத்தினுடைய செய் உழுது சேறாய் இருக்க
அந்தச் சேற்றுக்கு உள்ளே விக்ரஹத்தைப் புதைத்து அருகே இருந்த உறங்கா புளியின் கீழே வைத்தார்கள் –
செய்யுடையவனும் நாற்றுச் சுமை கொண்டு உழ வரக் கண்டு இவரும் எங்கள் பாட்டன் தேடின செய் என்ன –
அவனும் திடுக்கிட -ஒருவருக்கு ஒருவர் விவாதமாய் -நாளை உதயத்துக்குப் பத்ரம் கொண்டு வருகிறேன் –
இல்லாவிடில் நீ உழுது கொண்டு போ என்ன அவனும் சம்மதித்து மீண்டு போனான் –
அங்கே நாக பட்டணத்தில் விபரீதங்கள் உண்டாய் தலையாரிகளும் மணியக்காரரும் கூடி விமானம் எறிச் சோதித்து
உத்தமர் கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற ஆழ்வார் திருவடிகளின் கீழே கொண்டு விட –
இவரும் நாம் விக்ரஹம் அறியோம் என்ன -அவர்களும் பிரமாணம் பண்ணும் என்ன ஆழ்வாரும்
ஆகில் மேலை வர்ஷத்தில் பங்குனி மாசத்தில் ரோஹிணீ நக்ஷத்திரத்தில் உங்கள் விக்ரஹம் சிறு விரலுக்கு குறையாமல்
ஒப்பிக்கக் கடவோம் என்ன அவர்களும் கை எழுத்துச் சீட்டு வாங்கிக் கொண்டு போனார்கள் –

அநந்தரம் ஆழ்வார் சங்கை இல்லாமல் விக்ரஹத்தை திரு மதிள் கைங்கர்யத்துக்கு அர்ஹமாம் படி
சுட்டுரைத்த நன் பொன் ஆக்கிக் கொண்டு கல் படிக்கு ஏற்க ஒரு துலைப்படுத்தி விற்றுத் தத் த்ரவ்யத்தை இட்டுத்
திரு மதிள் முதல் சிகர பர்யந்தமாகப் பண்ண வேணும் என்று உபக்ரமித்துத் திரு மதிள் கட்டுவிக்கிற செவ்வையிலே
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பெரிய பெருமாளுக்கு திருமாலை சேர்க்கிற இடம் நேர்பட அவ்விடத்தைத் தப்பி
ஒதுங்கத் திரு மதிள் கட்டுவித்து அருள
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பார்த்து அருளித் திரு உள்ளம் உகந்து அருளி தாம் திருமாலை கொய்கிற ஆயுதத்துக்கு
அருள் மாரி என்று இவருடைய திரு நாமம் சாத்தி ப்ரீதராய் அருளினார்
திருமங்கை ஆழ்வாரும் திரு மதிள் திரு மண்டபம் முதலான கைங்கர்யங்களையும் பண்ணுவித்து க்ருதார்த்தராய் அருளினார்

அநந்தரம் அந்த வர்ஷ மாத தவணைக்கு அவர்களும் வர இவரும் அவர்களைச் சீட்டு வாசிக்கச் சொல்லிச் சிறு விரலைக் கொடுத்தார் –
அவர்களும் எங்கள் விக்ரஹம் முழுதும் தர வேணும் என்ன இவரும் வழக்கிலே போய் அனைவரையும் பார்த்து சிறு விரலுக்குக்
குறையாமல் ஒப்பிக்கக் கட வேன்-என்ற இவர்கள் கையில் சீட்டுப்படி சிறு விரலைக் கொடுத்தேன் என்ன-
அவர்களும் அப்படியே வாங்கிக் கொண்டு போங்கள்-என்ன இவர்களும் ஒரு தோலா வழக்கோ என்று
சிறு விறல் வேண்டா என்று தெளிந்து போனார்கள் –

பின்னையும் கோயில் கட்டின நிமந்தக்கார கம்மாளர்கட்க்குச் சிறிது த்ரவ்யம் கொடுக்க வேண்டி அவர்கள் எல்லாரையும்
ஒரு தீவிலே த்ரவ்யம் இருக்கிறது -என்று ஓடம் ஏற்றிக் கொண்டு போய் நட்டாற்றில் ஓடக்காரனுக்கு சம்ஜ்ஜை பண்ண
அவனும் வேறே தெப்பம் கொண்டு வந்து இவரை எடுத்து தெப்பத்தில் வைத்துக் கொண்டு தானும் எறி ஓடத்தை கவிழ்த்து
அவனும் இவரும் கோயிலிலே வந்து சேர்ந்தார்கள் -அந்த நிமந்தக்காரக் கம்மாளாருடைய பேரன்மார் கண்டு
எங்கள் பெரியோர்கள் எங்கே என்று கேட்க
ஆழ்வாரும் ஒரு தீவிலே நிஷேப தனம் காட்டி விட்டோம் -அந்த தனங்களை எல்லாம் சுமை சுமையாகக் கட்டுகிறார்கள் என்ன –
இவர்களும் எங்கள் தகப்பன் பாட்டன் முதலான இத்தனை போரையும் ஆற்றுக்கு உள்ளே தள்ளிக் கொன்று போட்டீரே –
அவர்களுக்கு அந்தப்படி சரீரமாகத் தந்தால் ஒழியப் போகல் ஒட்டோம் என்ன -என்று ஆழ்வாரை மறிக்க
ஆழ்வாரும் முசித்துக் கிடக்க ஆழ்வார் ஸ்வப்னத்திலே ஸ்ரீ ரெங்க நாதன் எழுந்து அருளி நீர் முசிப்பான் என் என்று
அவர் அவர்களை அழைத்துக் காவேரீ ஸ்நாநம் பண்ணச் சொல்லித் திரு நாமமும் தரிப்பித்து நம்முடைய அழகிய மணவாளன்
திரு மண்டபத்திலே நின்று அவர் அவர்கள் பேரைச் சொல்லி அழைக்கச் சொல்ல அவர்களும் அப்படியே அழைத்தார்கள் –
அவர் அவர்களுடைய பித்ரு தேவதைகள் அடையப் பெருமாள் பின்னே இருந்து அவர் அவர்களுக்கு என்று ஆழ்வாருடைய
நிர்ஹேதுக பரம கிருபை உண்டான படியால் பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்தோம் –
நீங்களும் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப் படாதே சில காலம் சம்சாரத்திலே இருந்து
ஆழ்வாரை முன்னிட்டுக் கொண்டு உஜ்ஜீவியுங்கோள்-என்று அனுப்பித் தாங்களும் மீண்டு போனார்கள் –

அநந்தரம் பெரிய பெருமாளும் ஆழ்வாரைக் குறித்து -உம் அபீஷ்டத்தைச் சொல்லும் காண்-என்ன –
ஆழ்வாரும் தேவரீர் தசாவதாரங்களை சேவிக்க வேணும் என்ன
ஆகில் இனி நீர் அர்ச்சா ரூபமான என் தசாவதார ஸ்வரூபங்களை சேவித்துக் கொண்டு இரும் என்ன –
அப்போதே ஆழ்வார் அர்ச்சாரூபமாய் எழுந்து அருள பண்ணினார்
அநந்தரம் பெரிய பெருமாள் பர காலன் மைத்துனரைப் பார்த்து உமக்கு ஆச்சார்யரான இவ்வாழ்வாரை விக்ரஹமாக
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போய்த் திரு அவதார ஸ்தலமான திருக் குறையலூரில்
கோபுர பிரகார மண்டபாதிகளை நிரமித்து அதிலே பர காலனை நிறுத்தி மஹா உத்ஸவாதிகளைச்
செய்து கொண்டு ஸூகமே இரும் என்ன
அவரும் ஆழ்வாரைப் போலே அர்ச்சா ரூபமாய் இருப்பதொரு விக்ரஹத்தை குமுதவல்லி யாருடனே எழுந்து அருளப் பண்ணி
மந்திரிகளும் நம்பெருமாள் பரிவாரமும் கூட வர ஆழ்வார் திரு அவதார ஸ்தலத்துக்குப் போய்
அங்கே கோயில் பிரகார மண்டபாதிகளைக் கட்டுவித்து அதிலே ஆழ்வாரை எழுந்து அருளப் பண்ணி
மஹா உத்ஸவாதிகளை நடப்பித்துக் கொண்டு வந்தார் –

ஆழ்வாரும் அர்ச்சா ரூபமாய் இருந்தாலும் குமுதவல்லியார் முதலானவர்களோடே கலந்து பரிமாறிக் கொண்டு
ஸமஸ்த ஆத்ம கோடிகளையும் ரஷித்துக் கொண்டு
பெரிய பெருமாள் திருவடிகளையே உபாய உபேயமாக சேவித்துக் கொண்டு வாழ்ந்து அருளினார் –

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ திருப் பாணாழ்வார்- வைபவம் –

February 10, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————

ஸ்ரீ திருப் பாணாழ்வார் வைபவம்

ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திர ஸ்கந்தா திரூடங் கலயாமி நித்யம்
களங்க ஹீநங்க மநீய பக்தம் கவீஸ்வரம் காயக ஸார்வ பவ்மம்

ஸ்ரீ வேலாப்த வி நிர்க்கமே கலியுகே சம்வத்சரே துர்மதவ்
பாநவ் வ்ருச்சிக பாஜி பஞ்சம திநே வாரே புதஸ் யோத்தமே
ரோஹிண்யா சஹிதேல சத்யுடுபதவ் கிருஷ்னே த்விதீய திதவ்
சஞ்சே முநி வாஹநஸ் சரணயோர் யோரங்கிண அந்தர்த்ததே

திருப் பாணாழ்வார் திரு அவதார கிரமம் இருக்கும்படி எங்கனே என்னில்
காவேரீ தோயமா ஸ்ரீத்ய வாதோ யத்ர ப்ரவர்த்ததே –தத் தேச வாசி நாம் முக்தி கிமுதத்தீர வாஸீ நாம் -என்று சொல்லுகிறபடியே
ஸ்வ ப்ரவாஹ ஸ்பர்ஸ மருத் சம்பந்தத்தால் முக்தி தர வல்ல நீர்மையை உடைத்தான திருக் காவேரி கரையிலே நிசுளா புரி என்று
சொல்லப்பட்டு இருப்பதாய் -மாட கூட பிரசாத உப சோபிதமான உறையூரிலே-
ஸூர்ய வம்ச ப்ரதீபனான சோழ பூபதி தர்மமாக ப்ருத்வீ பரிபாலநம் பண்ணா நிற்கச் செய்தே ஷீரார்ணவ ராஜன் இடத்தே
பிராட்டி ப்ராதுர்ப்பவித்து அருளினால் போலே நம் பெருமாள் இடத்தே ஏகாக்ர சித்தனான தர்மவர்மா வாகிற சோழனுக்கு கன்யகையாய்
நீளாம் ஸஜையான உறையூர் நாச்சியார் திருவாவதரித்து அருள சோழ ராஜாவும் ஸ்ரீ ஜனகராஜன் பிராட்டியை ப்ரீதியோடே எடுத்து
வளர்த்தால் போலே உவப்போடே வளர்க்க வளர்ந்து அருளுகிற நாச்சியார் பால க்ரீடையிலும் நம்பெருமாளை அல்லது வேறொரு
விளையாட்டு அறியாதவளாய் சகிகளோடே கூடி விஹரித்து வளர்ந்தவள் ப்ராப்த யவ்நையான பின்பு ஒரு நாள் உத்யாவனத்திலே
சகிகளோடே கூட டோலா லீலையாக விஹரியா நிற்க வேட்டையாடி வருவானை வ்ருந்தாவனத்தே கண்டோமே என்கிறபடியே
நம்பெருமாள் அங்கே ம்ருகயா விஹார பரராய் எழுந்து அருள கண்டு மையல் ஏறி மோஹித்து ஊரே வந்து
ஸ்வ பிதாவான சோழ ராஜாவைக் குறித்து -நம்பெருமாளை அல்லது வேறொரு புருஷனுக்கு வாழ்க்கைப் படேன்-
என்னை அவருக்கே உதகம் பண்ணிக் கொடும் என்ன -சோழ ராஜாவும் அதி ஸந்துஷ்டனாய்
நம்பெருமாள் சந்நிதியில் சென்று அச் செய்தியை விண்ணப்பம் செய்ய

பெருமாளும் -நாமே பாணி கிரஹணம் பண்ணுகிறோம் நமக்கே உதகம் பண்ணிக் கொடும் என்று நியமிக்க ராஜாவும் ஸந்துஷ்டனாய்த்
துமிலம் எழப் பறை கொட்டித் தோரணம் நாட்டி அரங்க மா நகரை அலங்கரித்துப் பெரிய ப்ரீதியுடன் பெருப் பெருத்த கண்ணாலம் செய்து
நாச்சியாரை உதகம் பண்ணிக் கொடுக்க -பெருமாளும் ஜனகராஜன் திருமகளை உத் வாஹம் பண்ணினால் போலே
உவப்போடே திருமணம் புணர ராஜாவும் பொன்னரிசி முந்நூற்று அறுபது பாரமும் அதுக்குத் தக்க முத்து மாணிக்க மயமான
நவரத்ன உப ஹாரமும் நிரவதிக வஸ்திர ஆபரணங்களும் போகஜாஸ்வ தாசீ வர்க்கங்களும் குறைவறக் கொடுத்தும்-
சர்வத்திலும் பர்யாப்தி பிறவாமையாலும் தஸ் சர்வத்தையும் நம்பெருமாளுக்கே சமர்ப்பித்து வாழும் காலத்தில்
உறந்தை -என்கிற அந்த உறையூரிலே கார்த்திகை மாசத்தில் ரோஹிணீ நக்ஷத்ரத்திலே குலம் தங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து –
என்று சொல்லப்பட்ட பஞ்சம வர்ணத்தில் ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்த பாகவதரைப் போலே
ஸ்ரீ வத்ஸ அம்சராக திருப் பாணாழ்வார் அவதரித்து அருளினார்
அத தத்ர குலே அந்திமே ரமாரமனோரஸ் ஸ்தித லாஞ்ச நாம்ஸஜ-
சம ஜாயதபாண சம்ஜ்ஞகஸ் ஸூகவி கார்த்திக மாசி வைதபே -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

ஜயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஜேயஸ் சவை மோஷார்த்தக சிந்தக–என்கிறபடியே
எம்பெருமான் இவருக்கு ஜாயமான கடாக்ஷத்தைப் பண்ணுகையாலே கேவல சத்வ குண பிரசுரராய் –
சேமமுடை நாரதரைப் போலேயும் –
நிக்ரஹாத் தார யாஸ்மாத் வைதேந கீதபலே நமாம் –ஏவ முக்த்வாது சண்டாளம் ராக்ஷஸஸ் சரணங்கத -என்கிறபடியே
சரணாகதனான ப்ரஹ்ம ரக்ஷசைக் குறித்து
யன்மயா பஸ்ஸிம சங்கீதம் ஸ்வரம் கைசிகம் உத்தமம் -பலேந தஸ்ய பத்ரந்தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்-என்று
கைசிக புராணத்தில் யாக தோஷம் பரிஹரித்த பாகவதரைப் போலேயும்
பகவத் கான வித்யைக்கு ஸார்வ பவ்மராய் பரமாத்மாவை சூழ்ந்து இருந்து சாம கானம் பண்ணும் நித்ய ஸூரிகளிலே
ஒருவர் வந்து அவதரித்தாரோ என்று சொல்லலாம்படியான திவ்ய சரித்திரங்களை உடையராய்
மோஷார்த்தியான இப் பாண் பெருமாள் ஸ்வவர்ண அனுகூலமாக இரண்டு ஆற்றுக்கும் நடுவே தாம் மிதியாமே
தென் ஆற்றின் தென் கரையில் திரு முகத் துறைக்கு எதிரே தொழும் அத்திசை உற்று நோக்கியே என்கிறபடியே
திருவரங்க மேயான் திசையை நோக்கித் தூர நின்று வலம் தங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று
உள் கலந்து வீணையும் கையுமாய் திருப் புகழ்கள் பலவும் பாடிக் கொண்டு –
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் என்கிறபடியே பெரிய பெருமாளை அநவரத பாவனை பண்ணிப் போருகையாலே

ததோ மேதத் கதம் மந -என்கிறபடியே பெரிய பெருமாளும் இவர் பக்கல் உவந்த திரு உள்ளத்தராக அவ்வளவில்
நாச்சியாரும் பெருமாளுடனே நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கப் பெறுமோ -என்று விண்ணப்பம் செய்ய
பெரிய பெருமாளும் இவரைப் பலகால் அருள் பாடிட்டு போகவிட்ட இடத்திலும் இவர் ஸ்வரூபத்தால் வந்த நைச்யத்தாலும்-
ஸ்வ வர்ணத்தால் வந்த நைச்யத்தாலும் பிற்காலித்துக் கடு நடையிட்டு அகல்கிற அளவிலே
பெரிய பெருமாள் பின்னையும் இவர் பக்கல் உள்ள கிருபா அதிசயத்தாலும்
இப் பாண் பெருமாள் திரு முகத் துறைக்கு அருகே பெரிய பெருமாள் இடத்தே பரபக்தி பரஞான பரமபக்திகளை உடையராய்
மிகவும் பரவசராய்க் கண்களை மூடிக் கொண்டு திருப் புகழ்கள் பலவும் பாடிக் கொண்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்தரரும் விடிவுகாலத்தே பெரிய பெருமாளுக்குத் திரு மஞ்சனக் குடம் எடுத்துக் கொண்டு போய் நின்று
இவரைக் கண்டு தூரப் போ என்று சொல்ல இவரும் திருமேனி தெரியாமல் இருக்க
அவரும் ஒரு கல்லை எடுத்து வீசி எறிய இவருடைய முகத்தில் பட்டு ருதிர வர்ஷமாக வர்ஷிக்க –
இவரும் கண்களை விழித்துப் பார்த்து கலங்கி மஹா பாகவத அபசாரப் பட்டோம் என்று தூரப் போய் நிற்க

அவரும் நீராடி நித்ய கர்ம அனுஷ்டானங்களை செய்து திரு மஞ்சனம் எடுத்துக் கொண்டு
சத்ர சாமர தால வ்ருந்தாதிகளோடே சகல வாத்ய கோஷத்துடன் பெருமாள் சந்நிதியில் செல்லா நிற்க
பெருமாளும் திரு உள்ளம் கலங்கி -நம்முடைய பக்தனை இவர் இப்படிச் செய்யவோ என்று கனக்க நொந்து இருக்க –
அவ்வளவில் நாச்சியாரும் பெரிய பெருமாளுடனே நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ என்று
விண்ணப்பம் செய்ய பெரிய பெருமாளும் திருக் காப்புச் சேர்த்துக் கொண்டு லோக சாரங்க முனீந்திரரை கனக்கக் கோபித்து –
நம்முடைய பக்தரை நீர் இப்படிச் செய்யலாமோ என்று இவருக்கு திருக் காப்பு நீக்காமல் இருக்க
இவரும் வியாகுல அந்தக்கரணராய் -அடியேன் மஹா பாகவத அபசாரப் பட்டு விட்டேன் அடியேனுக்கு இனி ஈடேற வழி ஏது என்று கேட்க
பெருமாள் பின்னையும் இப் பாண் பெருமாள் பக்கல் உள்ள கிருபா அதிசயத்தாலும் தன் நிரங்குச ஸ்வாதந்தர்யத்தாலும்
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திரரைப் பார்த்து -நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை நீர் நெகிழ நினையாதே அவரை
உம்முடைய தோளிலே கொண்டு நம் பக்கல் அழைத்துக் கொண்டு வாரும் என்று ஸ்வப்ந முகேன நியமித்து அருள

அவரும் விடிவோரை எழுந்து அருளி
அத்யமே சபலம் ஜென்ம ஸூ பிரசாத மே நிசா -என்கிறபடியே இற்றை விடிவு எனக்கு நல் விடிவாச்சுது என்று
ஸ்வப்னத்தை நிச்சயித்து மிகவும் ஹ்ருஷ்டராய் -தோதவத்தித் தூய் மறையோருடனே திரு முகத் துறையிலே –
நாட் காலே நீராடி -நித்ய அனுஷ்டானம் செய்து அருளி ஸூ தூரம் அபி கந்தவ்யம் யத்ர பாகவதஸ் ஸ்தித-என்கையாலே
இவ்வாழ்வார் அதி தூரத்திலே நின்று யாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கத்தை நோக்கி நித்தியமாக சேவித்து
ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு நிற்கிற இடத்தே எழுந்து அருளி
இப் பாண் பெருமாள் திருவடிகளிலே தாளும் தடக்கையும் கூப்பித் தண்டன் சமர்ப்பித்து –
நம்பெருமாள் தேவரீரை எழுந்து அருள பண்ணுவித்துக் கொண்டு வர வேண்டும் என்று அடியேனை
நியமித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய ஆழ்வாரும்
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து -என்றும்
குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும் சொல்லுகிறபடியே ஸ்வ நைச்யத்தை முன்னிட்டுப் பிற்காலித்து
திருவரங்கப் பெரு நகரை நான் மிதிப்பேனோ -என்ன
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனிகளும் -ஆகில் அடியேனுடைய தோளில் மேலே எழுந்து அருளும் –
பெருமாள் அருள் பாடிட்டு அருளின படியே எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிறேன் என்ன

ஆழ்வாரும் -செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -என்கிறபடியே
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று ந்யஸ்த பரராய் நிற்க –
ஸ்ரீ லோக சாரங்க மஹா முனீந்திரரும் முக்தனாய்ப் போமவனை ஆதி வாஹிகர் எழுந்து அருளுவித்துக் கொண்டு
திரு மா மணி மண்டபத்து ஏறப் போமாப் போலே ஆழ்வாரை தம் திருத் தோளின் மேலே எழுந்து அருளுவித்துக் கொண்டு
அழகிய மணவாளன் திரு மண்டபத்துக்கு அவ்வருகே புகுர-
பெரிய பெருமாளும் தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நித்ய தரித்ரனுக்கு நிதி காட்டுவரைப் போலே
இவருக்குக் காட்டிக் கொடுக்க

கிரீட கேயூரக ரத்ன குண்டல ப்ரலம்ப முக்தா மணி ஹார பூஷிதம் -விசால வக்ஷஸ்தல ஸ அபி கௌஸ்துபம்
ஸ்ரீ யாச தேவயாத் யூஷிதோரு வக்ஷஸம் ப்ரதப்த சாமீகர சாரு வாஸஸம் ஸூ மேகலம் நூபுர ஸோபி தாங்க்ரிகம்-
ஸூ வர்த்து நீ ஜாதம் ருணாள கோமளம் ததா நமச்சச்ச வ்யஞ்ஜ ஸூத்ரகம்-புஜோ பதாநம் பிரஸ்ருதான்ய ஹஸ்தம்
நிகுஞ்சி தோத்த நித பாத யுக்தம் ஸூ தீர்க்கம் உத்பாஹு முதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷந்த தர்ச –
என்று சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாதி சகல சேதனராலும் ஸேவ்யமானரான அரங்கத்து அரவிணைப் பள்ளியானை சேவிக்கப் புகுந்த ஆழ்வார்
மாதாவினுடைய சர்வ அவயவங்களும் கிடக்கச் செய்தே ஸ்தந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை திருவடிகள் ஆகையால்
அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் என் கண்ணின் உள்ளன ஒக்கின்றனவே என்கிறபடியே
சேஷித்வ போக்யத்வ உபாயத்வங்கள் குறைவற்ற திருவடிகளை இறே முந்துறப் பற்றிற்று
அரங்கத்தம்மான் -என்கையாலே சேஷித்வமும்
கமலம் -என்கையாலே -போக்யத்வமும்
பாதம் -என்கையாலே உபாயத்வமும் சொல்லிற்று –

பெரியாழ்வாரும் இப்படி இருந்துள்ள திருவடித் தாமரைகள் முதலாகத் திருப் பாத கேசத்தை
விருப்பால் உரைத்து அனுபவித்தால் போலே இவரும்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை
ஆட் கொள்வானான பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பாதாதி கேசாந்தமாக அனுபவித்து –
அவ் வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே தாம் பத்தும் பத்துமாக அனுபவித்த படிக்கு
அமலனாதி பிரான் -என்கிற திவ்ய பிரபந்தத்தை பிற்பாடாரும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி உபகரித்து அருளி
லோகத்தை வாழ்வித்து அருளி மிகவும் உகப்போடே நிற்க
பெரிய பெருமாளும் வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றாதாப் போலே அத் திருமேனியோடே அங்கீ கரித்து அருள
ஆழ்வாரும் அகிலரும் காணும்படி அணியரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து அருளினார் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–ஸ்ரீ குலசேகர பெருமாள் / ஸ்ரீ பெரியாழ்வார்/ ஸ்ரீ ஆண்டாள்/ வைபவங்கள் –

February 8, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

———————————-

இங்கே அவதார க்ரமம் பார்க்கில் நம்மாழ்வார் திரு அவதார வைபவம் சொல்லலாய் இருக்க
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திரு அவதார வைபவம் சொல்லுகிறது
அவயவ நிரூபணம் பண்ணியே அவயவியை நிரூபிக்க வேண்டுகையாலே

குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ராதி நேதிநே
தமஹம் சிரஸா வந்தே ராஜா நங்குல சேகரம் –
கல்யப்தே ஸூக சங்க்யயா வ்யபகதேமா சே சமா காபிதே
வர்ஷே சாபிபராபவே ஸூர குரோர் வாரேச பக்ஷே ஸூசவ்
த்வாதஸ் யாக்யதிதவ் புநர் வஸூதிநே ப்ரீத் யாக்ய யோ அன்வித
த்ராதுந்ந குலசேகர ஷிதிபதிஸ் ஸ்ரீ கௌஸ்துப ஆத்மபாவத் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் கொல்லி நகர் என்கிற திருப் படை வீட்டிலே சேரன் குலசேகரராய்க் கொண்டு
ஷத்ரிய வர்ணத்தில் மாசி மாசத்தில் புனர் பூச திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கௌஸ்துப அம்சராய் திரு அவதரித்து அருளினார்

தஸ்யாம் பூச் சேர குல ப்ரதீபஸ் ஸ்ரீ கௌஸ்துபாத்மா குலசேகராக்ய
மஹீ பதிர்மாக புநர்வஸூத்யத்திநே ஹரே பூர்ண கடாக்ஷ லஷ்ய -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

மாற்றலரை வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன் சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணி -என்று
சொல்லப்படுகிற இவர் -ரத கஜ துரகபதாதி என்கிற சதுரங்க பலத்தை உடையராய்
பிரதிபக்ஷங்களை எல்லாம் காந்திசீகராம்பாடி காடேற ஓட்டி
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்றும்
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் -என்றும் சொல்லுகிறபடியே
தம்முடைய செங்கோல் செங்கோலாகப் படை வீடுகளில் இருந்து சிறியதை பெரியது நலியாத படியும்
துர்ப்பலரைப் பலவான்கள் பாதியாத படியும்
கோ சஹஸ்ர பிரதா தாரம்-என்கிற பெருமாளை போலே ஸ்ரீ குலசேகர பெருமாளும்
அத்யுதாரராய் ச விநயராய் ராஜ்யம் பண்ணிக்க கொண்டு போரா நிற்க

தம்மை ஸ்வ தந்தரராகவும் நியாந்தாகவும் அபிமானித்துக் கொண்டு இருக்கிற இவரை
உபய விபூதி நிர்வாஹகனாய் சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக பரம கிருபையாலே
ராஜஸ தாமச ரஹிதராய் சத்வ குண பிரசுரராராம் படி கடாக்ஷித்து இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தம்முடைய
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் விசத தமமாகக் காட்டிக் கொடுக்க அவற்றை எல்லாம்
பகவத் பக்தி ரூபா பன்ன ஞானத்தை உடையராய்க் கொண்டு இவ்வாழ்வார் கண்ட அநந்தரம்
சம்சாரிகளான இத்தேசியர் தேஹாத்ம அபிமானத்தைப் பண்ணி
அக்ருத்ய கரணாதாவப் யத் யந்தோத் பட வ்ருத்திக அர்த்த காமாபி பூதோய முந் மத்த இவ வர்த்ததே -என்கிறபடியே
தேஹ வஸ்யராய் தேஹ போகத்தை அனுபவித்து பகவத் விமுகராய் தேஹாத்ம அபிமானிகளாய் சப்தாதி விஷய ப்ரவணரான
இஸ் சம்சாரிகள் நடுவே தாம் இருக்கிற இருப்பு உயிர்க் கழுவிலே இருந்தால் போலேயும்
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு என்கிறபடியே
யானைக் கழுத்தில் தாம் இருந்து ராஜ்யம் பண்ணி ஸூக ரூபமாக ராஜ போகத்தைப் புஜிக்கிற ராஜத்வமும்
அல்லெனத் தோற்றி எரி தீயில் சுடும் -என்கிறபடியே அக்னி கல்பமாயும் இருக்கையாலே மிகவும் அஸஹ்யமாய்
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநிச -என்றும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணங்கத-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சகல போகங்களையும் ச வாசனமாக த்யஜித்து சர்வ லோக சரண்யரான பெருமாளை ஆஸ்ரயித்தால் போலே
இவரும் இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் என்று பிரதிகூலங்களான பிராகிருத போகங்களில் நசை அற்று

திருவரங்கத்தில் அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு
உகக்கும் காதலை உடையராய்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கத்தில் தாமும் அற்ற பற்றறாய் அவ்விடத்திலே நித்ய வாசம் பண்ணி
விண்ணுளாரிலும் சீரியராய்
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் -என்கிற இதுவே நிரூபகமாக உடையராய்
சாது கோட்டியரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய இன்பமிகு பெரும் குழுவு கண்டு அனுபவிப்பது எப்போதோ என்று
ஸ்ரீ ரெங்க யாத்ரா ஸ்ரீ ரெங்கயியாஸா சைவ நாரத உத்தாரயதி சம்சாரம் நித்ய வாஸஸ்து கிம்புந -என்கிறபடியே
ஸ்ரீ ரெங்க யாத்ரையையும் ஸ்ரீ ரெங்கயியாசையும் விடியா வெந்நகரைப் போக்கி வைகுந்தம் தரவற்றாய் இருக்க
அங்கே நித்ய வாசம் பண்ணில் சொல்ல வேண்டா இறே -என்கிற அர்த்தத்தை அறிந்தவர் ஆகையால்
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் நித்ய பத்த ஸ்ரத்தராய்

த்ரை லோக்ய விஸ்ருதா புண்யா ஸ்வாமி புஷ்கரிணீ அதீவை -கங்காத் யைஸ் சகலைஸ் தீரத்தை சாஸமாவிம லோதகா –
தத்ர தேவர்ஷி கந்தர்வாஸ் சித்தாஸ்ச பரமாஷய வசந்தி நியதா ஹாரா வேங்கடாஹ்வய பூதரே -என்று
கங்காதி சகல தீர்த்தங்களிலும் உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்பட்ட ஸ்வாமி புஷ்கரணியை யுடைத்தாய் –
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்று சொல்லுகிறபடியே பரம ரிஷிகள் தொடக்கமான மஹாத்மாக்களால்
நித்ய வாசம் பண்ணப் படுகிற திரு வேங்கட மா மலையிலே இவரும்
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களைப் பரிக்ரஹித்து நித்ய வாசம் பண்ண ஆசைப்பட்டும்

இப்படி மற்றும் உண்டான திவ்ய தேசங்கள் எங்கும் சென்று அங்குள்ள எம்பெருமான்களையும் சேவித்து
அங்கே நித்ய வாசம் பண்ண வேணும் என்னும் ஆசையையும் வுடையராயும்
அஷ்டாதச புராண உப புராண இதிஹாசா திகளை நிரீக்ஷித்துத் தத் சார பூதமான முகுந்த மாலையை
அருளிச் செய்து கால ஷேப அர்த்தமாக
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே வேத பிராசேதே சாதாஸீத் சாஷாத் ராமாயணாத்மநா -என்கிறபடியே
வேத வேத்யனான பரம புருஷன் தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து அருளினால் போலே
அந்த வேதங்கள் தாமும் ஸ்ரீ வாலமீகி பகவான் முகேன இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணமாய்க் கொண்டு
பிரகாசித்ததாகையாலே அதுவே தமக்கு செவிக்கு இனிய செஞ்சொல்லாக -இன்னமுதம் மதியோம் என்கிறபடியே
ஸ்ரவித்துக் கொண்டு போரா நிற்க

சதுர்த்தச சஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமா கர்மணாம் ஏகஸ் சராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யஸி -என்கிற
ஸ்லோகார்த்தத்தை கேட்டு அருளுகிற தறுவாயிலே
பெருமாளும் இளைய பெருமாளைப் பிராட்டிக்குத் திரு மேனிக்கு காவலாக வைத்து
கர த்ரி சிரோ தூஷணாதி களாகிற-14000-துஷ்ட ராக்ஷஸருடனே தர்மாத்மாவான பெருமாள்
ஒருவரே யுத்த உன்முகரானார்
எங்கு இளைகிறாரோ என்று ருஷி வயிறு பிடிக்கிறான் என்று கேட்க்கையாலே இவ்வாழ்வாரும் ப்ரேம பரவசராய்க் கொண்டு
அவத்தங்கள் விளையும் என்னும் அதி சங்கையாலே-வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை -என்றும்
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -என்றும் சொல்லுகிறபடியே
சதுரங்க பலத்தோடு பெருமாளுக்குப் படைத்துணையாகப் புறப்பட்டு எழுந்து அருளா நிற்க
இவருடைய அதி ப்ரவ்ருத்தமான இந்த யாத்ரையைக் கண்டு இத்தைத் தவிர்க்கைக்காக மந்திரிகள்
உபாயேந சிலரை எதிரே வரவிட்டு அந்த -14000-ராக்ஷஸர்களையும் பெருமாள் ஒருவரே நிரசித்து
மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹரிஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பார்த்தாராம் பரிஷஸ் வஜே-என்கிறபடியே
பிராட்டி பெருமாள் திருமேனியில் வ்ரணங்கள் எல்லாம் மாறும்படி திரு முலைத் தடங்களாலே வேது கொண்டு அணைத்து
ஆஸ்வசிப்பித்த சோக நிவர்த்தகமான இந்த ஸ்லோகத்தைச் சொல்லுகையாலே
இவரும் அத்தைக்கு கேட்டு ஸந்துஷ்டராய் மீண்டு எழுந்து அருளின அளவிலே

மந்திரிகள் நம்முடைய ராஜாவான இவர்க்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசத்தாலே இத்தனை கலக்கங்களும் தேற்றங்களும் வந்தன
என்று அவர்களுடைய ஸஹ வாசத்தைத் தவிர்ப்பிக்க வேணும் என்று இவருடைய க்ருஹ அர்ச்சனா எம்பெருமானுடைய
திரு ஆபரணப் பெட்டியிலே நவ ரத்ன சோபிதமாய் இருபத்தொரு ஹாரத்தை எடுப்பித்து மறைய வைத்து
இவருக்கு அந்தரங்கராய உத்தேஸ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எடுத்தார்கள் என்று ஆரோபிக்க –
அதுக்கு அவரும் பரண் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்காக தாம் பாம்புக் குடத்தில் கை விட்டு அருளி ஜெயிக்க
இத்தைக் கண்ட மந்திரிகள் தங்கள் செய்த அக்ருத்யத்தை விண்ணப்பம் செய்து
அந்த ஹாரத்தை அவர் திரு முன்பே வைத்துத் தண்டம் சமர்ப்பித்தார்கள்

பின்பு ஆழ்வாருக்கு இவர்கள் நடுவே ராஜ்யம் பண்ணி இருக்கும் இருப்பு –
ந சவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச வைசசம் -வரம் ஹுதாவஹஜ் வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி-என்கிறபடியே
பகவத் வைபவம் சொல்லப் பொறாதர் நடுவில் இருக்கும் இருப்பைக் காட்டில் அக்னி ஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி
பகவத் பரர்க்கு உத்க்ருஷ்ட தமம் ஆகையால் இவர்க்கு அக்னி ஜ்வாலையிலே அகப்பட்டால் போலே
அதி துஸ் சஹமாய் இருக்கையாலே தம் குமாரர்க்கு யுவராஜ அபிஷேகம் பண்ணி ராஜ்ய பாரத்தை அவர் இடத்திலே வைத்து
ஆனாத செல்வத்து அரம்பையர் கழல் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் -என்று கொண்டு
ஐஹிக ஆமுஷ்மிக திவ்ய மானுஷ போகங்களில் நசை அற்று தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசத்துடன்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கத்தை நோக்கி எழுந்து அருளி தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே –
உறங்குவான் போல் யோகு செய்கிற -அணி யரங்கத்து அம்மானை நித்ய தரித்ரன் நிதியைக் கண்டால் போலே
கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி அனுபவித்து அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
பகவத் பாகவத வைபவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி -பெருமாள் திரு மொழி -என்கிற திவ்ய பிரபந்தத்தை
அருளிச் செய்து ஸஜ்ஜனங்களுக்கு உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார் –

——————————————

ஸ்ரீ பெரியாழ்வார் வைபவம் –

தாதாத்விக பிரதி பலத்-பிரதி பயத் – பகவத் பரத்வம் விஸ்தீர்ய பாண்ட்ய கத கேந்திர ஜயீ கஜேந —
கச்சந் பிரியாதுபகதேக கருடேந நாதே ப்ரேம்ணா அசிஷம் ரசயதிஸ் மநமோ அஸ்து தஸ்மை

தத்வாப்தா பகமேகலவ் யுபவரே சம்வத்சரே க்ரோதனே
சண்டாம் சவ் மிது நங்கதே அஹ்னி நவமே பக்ஷே வளர் ஷேஅபி ச
ஸ்வாத்யாம் பாஸ்கர வாஸரே ஸூ பதி தா வேகா தசீ நாம நி
ஸ்ரீ மான் ஆவீரபூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தோ அநக

பெரியாழ்வார் -வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி புத்தூர்-என்கிறபடியே -செய்த வேள்வியரான
வையத்தேவர் நித்ய வாசம் பண்ணி வாழா நிற்கிற ஸ்ரீ வில்லி புத்தூரில் ப்ராஹ்மண உத்தமரான
வேயர் தம் குலத்திலே ஆனி மாசத்தில் திருச் சுவாதியிலே கருத்ம அம்சராய் திரு அவதரித்து
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தை உடையராய் இருப்பர் –
ஜ்யேஷ்டே தமாஸே பவமாநதாரே ஸ்ரேஷ்டோ குணே நாஜநி பட்ட நாத தத் ரத்ர யீரூப கருத்ம தாத்மா
கடாக்ஷ லஷ்யங் கமலா பதேர்ய-என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

பின்பு வட பெரும் கோயில் உடையானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே –
ப்ரஹ்லாதோ ஜென்ம வைஷ்ணவ -என்னும்படி சஹஜ தாஸ்யத்தை உடையராய் இருக்குமவர் –
நா கிஞ்சித் குர்வதஸ் சேஷத்வம் -என்கிறபடியே சேஷத்வ முறையை உணர்ந்து பகவத் விஷயத்தில் கிஞ்சித் கரித்து
ஸ்வரூபம் நிறம் பெற வேணும் என்று பார்த்து அது செய்யும் இடத்து –
தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்கிறபடியே அவன் உகந்த அடிமை செய்கையே
நமக்கு கர்தவ்யம் என்று அனுசந்தித்து அது அறிகைக்காக அவதாரங்களை ஆராய்ந்து பார்த்த இடத்தில்

சர்வேஸ்வரன் -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -என்றும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்றும்
புண்யா த்வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது ஸூதந -சாஷாத் தேவ புராணோ அசவ் சஹி தர்மஸ் சநாதந -என்றும் சொல்லுகிறபடியே
சாது பரித்ராணாதி த்ரயத்துக்காக -திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெறப் பிறந்து –
மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்க வளர்ந்து அருளுகிற -உருவு கரிய ஒளி மணி வண்ணனா ஸ்ரீ கிருஷ்ணன்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தவன் ஆகையால் அந்த வாசனை பின்னாட்டி கம்சனுக்குப் பணி செய்து போந்த
ஸ்ரீ மாலா காரர் திரு மாளிகையில் எழுந்து அருளி பூ இரக்க
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாதாதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி -என்று உகந்து சூட்டினை படியைக் கண்டு
இவ்விஷயத்துக்குப் பூ இடுகையே உகப்பு என்று அறுதியிட்டு
வட தள புட சாயியாகிய வட பெரும் கோயிலுடையானுக்கு
நாள் கமழ் பூம் பொழிலாகத் திரு நந்தவனம் செய்து திருமாலை கட்டிச் சாத்திப் போருகிற காலத்திலே

பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலத்திலே ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையால்
சிறியதைப் பெரியது நலியாதபடி திருக் கூடல் என்கிற தென் மதுரையிலே இருந்து ராஜ்யம் பண்ணிக் கொண்டு
போருகிற காலத்திலே அந்த ராஜா ஒரு நாள் ராத்திரியிலே நகர சோதன அர்த்தமாக வருகிற அளவிலே
ஒரு ப்ராஹ்மணன் அங்கே ஒரு திண்ணையிலே கிடக்கக் கண்டு ராஜா அவனை எழுப்பி நீ யார் என்று கேட்க –
அவனும் நான் ஒரு ப்ராஹ்மணன் -கங்கையாடி வருகிறேன் -என்ன –
ஆனால் உனக்குப் போமது உண்டாகில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் காணாய் என்ன -அந்தப் ப்ராஹ்மணனும்
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான் நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத-வார்த்தக்ய ஹேதோர் வயசா நவேந
பரத்ரஹேதோர் இஹ ஜென்ம நாச-என்கிற ஸ்லோகத்தைச் சொல்ல
ராஜாவும் இத்தைக் கேட்டு வ்யுத் பன்னனாகையாலே -த்ருஷ்டத்தில் நமக்கு ஒரு குறைவும் இல்லை –
இனி அத்ருஷ்ட யத்னம் பண்ணும்படி எங்கனே என்று வியாகுல அந்தக்கரணனாய் தன்னுடைய புரோகிதரான
செல்வ நம்பியைப் பார்த்து புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ருஷ்ட சித்திக்கு விரகு என் என்று கேட்க அவரும்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்கையாலே வித்வான்களைத் திரட்டி வேதாந்த ஸித்தமான பர தத்வ நிர்ணயம்
பண்ணுவித்து அவ்வழியாலே பெற வேணும் என்று அருளிச் செய்ய
ராஜாவும் அப்படியே ஆகிறது என்று பஹு த்ரவ்யத்தை கிழிச் சீரையிலே வித்யா ஸூல்கமாக ஒரு தோரணத்திலே
கட்டுவித்து வித்வான்களை ஆஹ்வானம் பண்ணச் சொல்லுகிற அளவிலே

வட பெரும் கோயிலுடையான்
சம்சாரிகள் பூண்ட வத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூல் அன்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாமே இவ்வாழ்வாரைக் கொண்டு லோகத்தில் வேதாந்த ஸித்தமான பர தத்துவத்தை
பிரகாசிப்பைக்காக-மெய்யடியாரான இவ்வாழ்வாருடைய ஸ்வப்னத்திலே எழுந்து அருளி
நீர் போய் கிழியை அறுத்துக் கொண்டு வாரும் – என்று அருளிச் செய்ய –
அது வித்யா ஸூல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
நலங்களாய நற் கலைகள் நாவினும் நவின்றிலாத நான் என் கையில் கொட்டுத் தழும்பைக் காட்டிக்
கிழியை அறுக்கலாமோ-என்ன
அது உமக்குப் பரமோ
நாம் அன்றோ வேதார்த்த ப்ரதிபாதனத்துக்குக் கடவோம் என்று ஆழ்வாரை நிர்ப்பந்தித்து அருள –
ஆழ்வாரும்

ப்ரஹ்ம முஹுர்த்தே சோத்தாய-என்கிறபடியே -சிற்றம் சிறு காலை எழுந்து இருந்து இது ஒரு ஸ்வப்னம் இருந்தபடி என்
என்று விஸ்மிதராய் விஸ்வசித்து பாண்டியனுடைய வித்வத் கோஷ்ட்டி ஏற எழுந்து அருளின அளவில்
செல்வ நம்பியும் ராஜாவும் த்விஜ குல திலகரான இவ்வாழ்வாரைக் கண்டு அவ்வளவில்
அப்யுத்தாந பிரணாம பூர்வகமாக மிகவும் ஆதரிக்க இத்தைக் கண்ட வித்வான்கள்
இவருக்கு வித்யா அப்யாஸம் சிறிதும் இல்லை என்னும் புத்தியால் ராஜாவை அதி க்ஷேபிக்க அவ்வளவில்
அபிமான துங்கனான செல்வ நம்பியும் ஆழ்வாரைத் தெண்டனிட்டு வேதாந்த ப்ரதிபாத்யமான பர தத்துவத்தை
நிச்சயித்து அருளிச் செய்ய வேணும் என்று விஞ்ஞாபித்த அளவிலே

ஹஸிதம் பாஷிதஞ்சைவ கதிர் யாயச்ச சேஷ்டிதம் தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸமப்ரபஸ்யதி-என்கிறபடியே
ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்மாவின் பிரசாதத்தாலே சகலார்த்தங்களையும் சாஷாத் கரித்தால் போலேயும்
சங்க ப்ராந்தேன கோவிந்தஸ் தம்பஸ்பர் சக்ரு தாஞ்சலிம் -உத்தான பாத தனயம் முனி வர்யம் ஜகத் பதி
தத பிரசன்ன வதனஸ் தத் ஷணான் ந்ருப நந்தன துஷ்டாவ ப்ரணதோ பூத்வா பூத தாதாரம் அச்யுதம் -என்கிறபடியே
ராஜ குமாரனான தருவான் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்சத்தாலே சர்வஞ்ஞன் ஆனால் போலேயும்
இவ்வாழ்வார் நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே சகல வேத சாரார்த்தங்களையும்
தத் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்களையும் சாஷாத் கரித்து
ஸமஸ்த சப்த மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபாவத -என்று சர்வ சப்த மூலமாய் இருந்துள்ள அகாரத்தை –
அக்ஷராணாம் அகாரோ அஸ்மி -என்று கீதா உபநிஷதச்சார்யன் தானே அருளிச் செய்கையாலே
அகாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே அகார வாச்யனான ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று கொண்டு
பரத்வ சிஹ்னங்களான ஜெகஜ் ஜென்ம ஸ்திதி லய வாசகங்களான

யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்ய அபி சம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி-
இத்யாதி வாக்யங்களை
ஜகத் காரணத்வ -முமுஷு உபாஸ்யத்வ -மோக்ஷ பிரதத்வ -ப்ரதிபாதங்களான -நாராயண அனுவாத ஸ்ருதிகளாலும்
விஷ்ணோஸ் சகாஸா துத்பூதம் ஜகத் தத்ரைவ வச ஸ்திதம் –ஸ்திதி சம்யம கர்த்தா அசவ் ஜகதோ அஸ்யா ஜகச் சஸ-என்றும்
நாராயணாத் பாரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதத் ரஹஸ்யம் வேதா நாம் புராணா நாஞ்ச சம்மதம் -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே -வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம் -என்றும்
இத்யாதிகளான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி வசன சஹஸ்ரங்களாலும் பஹு முகமாக ப்ரசாதித்து அருளிச் செய்கையாலே
வித்யா ஸூல்கமாகத் தோரணத்தில் கிழியாகக் கட்டி வைத்த தனம் இவர் முன்னே தானே தாழ வளைய
ஆழ்வாரும் அதி ப்ரீதியுடன் விரைந்து கிழி யறுத்தான் -என்கிறபடியே அக் கிழியை அறுத்து அருளினார்

இத்தைக் கண்டு அதி ஷேபித்த வித்வான்களோடு -அனுவர்த்தித்த ராஜாவோடு -வாசி அற -சர்வரும்
விஸ்மிதராய்க் கொண்டு ஆழ்வார் திருவடிகளிலே தண்டன் சமர்ப்பித்து
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் என்று மிகவும் ப்ரீதீயோடு
அவரை யானைக் கழுத்தின் மேலே ஏறி அருளப் பண்ணி அந்த வித்வான்கள் சத்ர சாமர தால வ்ருந்தாதிகள் தரித்து சேவிக்க
வேதப்பயன் கொள்ள வல்லனான மெய்ந்நாவன் வந்தான் -என்று விருதூதித் திருச் சின்னம் பணிமாற
ஈண்டிய சங்கம் எடுத்தூத ராஜா இவருக்குப் பட்டர் பிரான் என்று திரு நாமம் சாத்தி
தானும் ச பரிகரனாய் சேவித்துக் கொண்டு நகரி வலம் வருகிற மஹோத்சவத்தைக் காண்கைக்காக
புத்ரர்களை ப்ரஹ்ம ரதம் பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள் கான ஆதரித்து வருமா போலே
சர்வேஸ்வரனும் தனக்கு நிரூபக பூதையான பிராட்டி ஸஹிதனாய்க் கொண்டு

மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்ற வடிவுடனே பெரிய திருவடி மேல் கொண்டு –
திருச் சக்கரம் சங்கினொடும் -என்கிறபடியே திவ்ய ஆயுத தரனாய் –
கிளர்ந்த பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே -என்கிறபடியே –
ஆகாசத்தில் ஸ்வ பரிகர பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஸேவ்யமானனாய்த் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய்க் கொண்டு
நெருங்கி நிற்கிற இத்திரளோடே ஸந்நிஹிதனாக-இத்தை சாஷாத் கரித்து அருளின ஆழ்வார்
பகவத் பிரசாதத்தாலே நிரவதிக பக்தியைப் பெற்றவராகையாலே ஸ்வ ஸம்ருத்தியைக் கண்டு இறுமாறாதே
அவனுடைய ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ -சர்வ ரக்ஷகத்வாதிகளை அனுசந்திப்பதற்கு முன்பே முகப்பில்
நீலமுண்ட மின்னன்ன மேனியில் உண்டான ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதிகளைக் கண்டு
அப்ராக்ருத ஸூரைர் வந்த்ய மயுதார்க்க ஸமப்ரபம் -என்றும்
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ்ப்ரேஷன் தேவதாநவை -என்றும்
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி -என்றும் சொல்லப்பட்டு இருப்பதாய்க்

காலக் க்ருத பரிணாமம் இன்றிக்கே சதைக ரூபமாய் நித்ய ஸித்தமாய் பஞ்ச உபநிஷன் மயமான பரமபதத்தில் –
சதா பஸ்யந்தி ஸூரயா -என்கிறபடியே நித்ய ஸூரி களாலே சதா தர்சனம் பண்ணப் படுகிற வஸ்து
கால க்ருத பரிணாமமாய் க்ஷண ஷரண ஸ்வ பாவமாய்ப் பரமாத்மா ஸ்தானமான பரம பதத்தைப் பற்ற நரக உபமமாய் –
அரக்கர் அசுரர்க்கு ஆவாஸ பூமியாய்த் துர்விதக்தர் துரபிஸந்தி பண்ணும் ஸ்தலமாய் கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற
இருள் தரும் மா ஞாலமான இத்தேசத்திலே வந்து சஷுர் விஷயமாவதே -இவ்விஷயத்துக்கு என்ன தீங்கு வருகிறதோ என்னும்
அதி சங்கையாலே யானைக் கழுத்திலே கிடக்கிற மணிகளைத் தாளமாகக் கொண்டு –
இந்த ஸுந்தர் யாதிகளுக்கு ஒரு தீங்கும் வாராதே நித்யமாய்ச் செல்ல வேணும் என்று தம் ஸ்வரூபத்தை மறந்து
ப்ரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அருளி
இவ் விஷயத்துக்கு தாம் ஒருவரும் மங்களா சாசனம் பண்ணுகை போதாது என்று தமக்குத் தோள் தீண்டிகளான
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளையும் மங்களா சாசன யோக்யராம் படி திருத்திச் சேர்த்துக் கொண்டு
பல் வகையாலும் திருப் பல்லாண்டு பாடி அருளினார்

அநந்தரம் அந்த ராஜாவையும் விசேஷ கடாக்ஷம் செய்து அருளி அவனாலே ஸத் க்ருதரராய்
வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் மீண்டும் ஸ்ரீ வில்லி புத்தூர் எழுந்து அருளி
அக் கிழியில் தனத்தை -யஸ்யைதே தஸ்ய தத் தனம் -என்கிறபடியே
வட பெரும் கோயிலுடையான் திரு முன்பே வைத்து தேவரீராலே யுண்டான தனம் தேவரீருக்கே -என்று தண்டன் சமர்ப்பித்து –
ப்ராசங்கிகம் பரிசமாப்ய பிரகிருதம் அநு சரதி -என்கிற நியாயத்தாலே தாம் முதலில் உபக்ரமித்து அருளின –
கானார் நறும் துழாய்க் கை செய்த கண்ணியும் -செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சியுமான திருமாலை கட்டி
வட பெரும் கோயிலுடையானுக்கு நித்தியமாகச் சாத்தி சேவித்துக் கொண்டு இருக்கிற இவ்வாழ்வார்
தாம் அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீ மாலாகாரர் திரு மாளிகையில் எழுந்து அருளிப் பூ இரக்க
அவர் உகந்து சாத்தினார் என்று இ றே முந்துறத் திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கத் தொடங்கிற்று –
ஸ்ரீ மாலாகாரர் திருமாலை சாத்தின அநந்தரம் மல்லரோடு பொருது வெற்றி கொண்ட தோளுக்குப் பல்லாண்டு பாடுகையாலே
ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே ப்ரவணராய் –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்தது முதலாக
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்-என்கிற அதி மானுஷ சேஷ்டிதமான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை இவரும்
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி அநு கரித்து அவனுடைய ஸுசீல்ய ஸுலப்யாதி குணங்களில் ஆழங்கால் பட்டுக்
குமிழி நீர் உண்ணாமல் நன்றாக அனுபவித்து –
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே -பெரியாழ்வார் திருமொழி -என்கிற திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் நின்ற சிந்தையராய்க் கொண்டு
சாயை போலப் பாட வல்ல சஜ் ஜனங்களுக்கு உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார்

———————————————————-

ஸ்ரீ ஆண்டாள் வைபவம்-

தேவஸ்ய மஹிஷீம் திவ்யா மாதவ் கோதாம் உபாஸ்மஹே
யந் மவ்லி மாலிகாம் பிரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் பிரபு

ஸூசி மாசி பாண்ட்ய புவி பூர்வ பல்குநீ கநபே நவீ துளஸீ வநாந் தராத்
உதிதா முதாரா குண ரங்க நாயக்க ப்ரிய வல்லபம் வஸூ மதீம் உபாஸ்மஹே

சித்தாநாம் சரதாம் கலா வபபமேவர்ஷே நளாக் யேரவவ்
யாதே கர்க்கடகம் விதாவு பசிதே ஷஷ்டே அஹநி ஸ்ரீ மதி
நக்ஷத்ரே யமதைவ தேஷிதி புவோவாரே சதுர்த்யாந்திதவ்
கோதா ப்ராதுர பூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தாத்மஜா

அன்ன வயல் புதுவை ஆண்டாள் உடைய திருவவதார க்ரமம் இருக்கும்படி எங்கனே என்னில்,
அதமே க்ருஷத க்ஷேத்ரம் லங்கலா துத்தி தாமயா–க்ஷேத்ரம் சோதயதா லப்த்தா நாம் நாஸீ தேதி விஸ்ருதா –
பூதலா துத்தி தாஸாது வ்யவர்த்தத மமாத்மஜா-என்கிறபடியே
ஸ்ரீ ஜனக ராஜன் யாக சாலைக்கு ஸ்தலம் உழுது பண்ணா நிற்க அந்தப் படைச் சாலிலே பிராட்டி ப்ராதுர்பவித்து அருள —
தா லாங்கல பத்ததி -என்கிறது தானே நிரூபகமாக சீதை என்று திரு நாமம் சாத்தி உகைப்போடே ஸ்ரீ ஜனக ராஜன்
புத்ரியாக வளர்த்துக் கொண்டாப் போலே
மெய்யடியாரான விஷ்ணு சித்தர் தம் திரு நந்தவனத்தில் திருத் துழாய்க்கு கொத்தா நிற்க அத் திருத் துழாய் மண்ணின் கீழே
திருவாடிப் பூரத்திலே -பார் வண்ண மடமங்கை -என்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி ஆவிர்ப்பவித்து அருள அநந்தரம் –
வில்லி புதுவை நகர் நம்பி விஷ்ணு சித்தர் கண்டு விஸ்மிதராய்
மின்னனைய நுண் இடையாளான இக்கன்னிகையை எடுத்து ப்ரீதியோடே -சுருப்பார் குழல் கோதை -என்று திரு நாமம் சாத்தி
திருமகள் போலே வளர்த்து அருளினார்
ச விஷ்ணு சித்தஸ் துளஸீ வநா வநிம் க நித்ர வக்த்ரேண நிகாத யந் கலவ் –ஸூபே முஹுர்த்தே ஸூசி மாசி பல்குநீ பிரதீ ததாரே
துளஸீ வநாந்த்ரே புவோ பவத் காசந பால கந்யகா (சதாம் ததா ப்ரேஷ்ய) பூம் அம்சகாம் வீஷ்ய விசிஷ்மியேமுதா –
என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

இங்கனம் போருகிற காலத்திலே -விட்டு சித்தர் தங்கள் தேவரான வட பெரும் கோயிலுடையானுக்குச் சாத்தக் கட்டி வைத்த
திருமலையை ஆழ்வார் இல்லாத அவசரத்தில் இப்பெண் இல்லை தானே சூட்டிக் கொண்டு –
அவனுக்கு நேர் ஒவ்வாது இருக்குகிறேனோ -ஒத்து இருக்கிறேனோ என்று –
காறை பூண்டு கூறை உடுத்துக் கை வளை குலுக்கிக் கோவைச் செவ்வாய் திருத்தி அவ்வொப்பனை அழகைக் கண்ணாடியில் கண்டு
இப்படி பல நாளும் பந்து பந்தாகச் சுருட்டி வைக்க இத்தை ஆழ்வார் ஒரு நாள் கண்டு அருளி
பெண்ணே எப்போதும் இப்படியே செய்கிறாய் என்று மிகவும் கோபித்து அந்தத் திரு மாலையை அற்றைக்கு
வட பெரும் கோயிலுடையானுக்குச் சாத்தாமல் இருக்க அன்று ராத்திரியிலே ஆழ்வார் ஸ்வப்னத்திலே எம்பெருமான் எழுந்து
அருளி இற்றைக்கு நமக்கு மாலை கொண்டு வராது இருப்பது என் யென்ன –
தம் புத்ரி கோதை குழலிலே முடித்த க்ருத்யத்தை விண்ணப்பம் செய்ய எம்பெருமானும் அப்போது காணும் வாசனையாய் பிரியமாய்
இருப்பது என்று அருளிச் செய்ய ஆழ்வாரும் அன்று முதல் இவ் வாண்டாளை –
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-என்று விசேஷ பிரதிபத்தி பண்ணிப் போருவர் –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் தொண்டரான ஆழ்வார் திருமகளார் தாம் சூடிக் கொடுத்ததுவே
நிரூபகமாகச் சூடிக் கொடுத்த நாச்சியராய் இருப்பர்

திருத் துழாய் பரிமளத்தோடே கூடியே முளைக்குமா போலே இந் நாச்சியாரும்
ஆ ஜென்ம பால்ய யவ்வன அவஸ்தைகள் தோறும் வளருகிற பரபக்தி பரஞான பரம பக்தி களை உடையவள் ஆகையால்
பகவத் விஷய ப்ராவண்யம் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும் இவளுக்கு அதிசயித்து இருக்கும் –
புருஷனை புருஷன் காமிக்குமதுவும் ஸ்திரீயை ஸ்திரி காமிக்குமதுவும் மேட்டு மடையாய் இருக்கும்
புருஷன் ஸ்த்ரீகைக் காமிக்குமதுவும் ஸ்த்ரீ புருஷனைக் காமிக்குமதுவும் பள்ளமடையாகயிலே
இது சேர்ந்து இருக்கும் இறே ஆகையால் அதிசயித்து இருக்கும்

அந்த ப்ராவண்யம் அடியாக -அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்னும் நிலையை உடையாளாய்
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோ அஹமிதி சாபரா -என்று ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தை ஸஹிக்க மாட்டாத
கோப கன்னிகைகள் ஸ்ரீ கிருஷ்ணனை அநுகரித்துத் தரித்தால் போலே இவளும் மார்கழி நீராடி நோன்பு நோற்றுக்
காம பஜ நாதிகளைப் பண்ணித் தரிப்போம் என்று பார்த்து -சங்கத் தமிழ் மாலையாக –
திருப் பாவை –நாச்சியார் திருமொழி -என்கிற திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்து
ஜகத்துக்கு உபகரித்து அருளி வாழும் காலத்தில்

பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா –சிந்தார்ணவ பத பாரம் நாச சாதாப் லவோ யதா -என்கிறபடியே
ஸ்ரீ ஜனக ராஜன் பிராட்டி பருவம் கண்டு சிந்தார்ணவ கதனானாப் போலே இவ்வாழ்வாரும்
இந் நாச்சியாருடைய விவாஹ யோக்யமான பருவத்தைக் கண்டு வியாகுல அந்தக்கரணராக –
இவ் வாண்டாளும்-மானிடர்வர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்-என்ன ஆழ்வாரும் -பின்னை எங்கனே -என்ன –
இவரும் -மற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மால் இருஞ்சோலை மாயற்கு அல்லால் -என்கிறபடியே
அவன் முகத்து அன்றி விழியேன்-என்ன -ஆழ்வாரும் -ஆகில் நூற்று எட்டுத் திருப்பதி எம்பெருமான்களில்
யாருக்கு வாழ்க்கைப் படுகிறாய் என்ன -ஆண்டாளும் ஆழ்வாரைக் குறித்து –
அவ்வவருடைய குண அபதானங்களைக் கீர்த்தித்து அருள வேணும் என்ன
ஆழ்வாரும் வட பெரும் கோயிலுடையான் வைபவம் அடியாக பாண்டி மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும் –
மலை நாட்டுத் திருப்பதியில் எம்பெருமான்கள் வைபவமும் –
வடதிசைத் திருப்பதியில் எம்பெருமான்கள் வைபவமும் –
வட திருவேங்கடவன் வைபவமும் தொடங்கி
தொண்டை மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும் –
அழகிய மணவாளன் முதலான சோழ மண்டலத்தில் எம்பெருமான்கள் வைபவமும்
அழகர் வைபவமும் அருளிச் செய்ய ஆண்டாளும் அது கேட்டு ஆனந்த அஸ்ருக்கள் துளிக்கப் புளகீக்ருத காத்ரையாய்

என் அரங்கத்தின் இன்னமுதருடைய குழல் அழகு வாய் அழகு கண் அழகுகளைக் கேட்டு அதி வ்யாமுக்தையாய் மோஹித்து-
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்று வளையும் சோரும்-என்கிறபடியே
மனம் உருகி மலர்க் கண்கள் பனிப்ப அழகிய மணவாளரைக் காமித்து -மந்திரக் கோடி உடுத்து மண மாலை சூட்டி –
மைத்துனன் நம்பி மது சூதன் வந்து கைத்தலம் பற்றி -மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத முத்துடைத் தாம நிரை
தாழ்ந்த பந்தல் கீழ் -பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்யக் கனாக் கண்டு -திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளாரானே —
அணி அரங்கத்து அம்மானுக்கே அற்றுத் தீர்ந்த காதலை உடையவளாக -அவ்வளவில் ஆழ்வாரும் –
கோதைக்குத் தக்க வரன் கோயில் பிள்ளை -என்று கருதி இது கூடும்படி எங்கனே -என்று வியாகுல அந்தக்கரணராய் கண் வளர்ந்து அருள –
திருவரங்கச் செல்வனார் ஆழ்வார் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி -உம் புத்ரி கோதையைக் கொண்டு –
அணி அரங்கன் திரு முற்றத்தே ஏற வாரீர் -அவளுக்குத் தகுதியாக நாமே பாணி கிரஹணம் பண்ணுகிறோம் -என்று அருளிச் செய்ய
ஆழ்வாரும் உகந்து நிர்ப்பரராய் இருக்கிற அளவிலே

நம் சத்ர சாமர தால வ்ருந்தாதி சகல பரிஜன பரிச்சதங்களோடே ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏறப் போய்
ஆண்டாளை அழைத்துக் கொண்டு வாருங்கோள்-என்று திருப் பவளச் செவ்வாய் திறந்து அருளிச் செய்து விட
அனைத்துப் பரிகரத்தாரும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏறச் சென்று ஆழ்வாரைக் கண்டு நம்பெருமாள் அருள் பாடிட்டு
அருளின படியை விண்ணப்பம் செய்ய ஆழ்வாரும் ப்ரீதராய் ஆச்சர்யப் பட்டு வட பெரும் கோயிலுடையானுக்கு விண்ணப்பம் செய்து
அவருடைய அனுமதி கொண்டு ஆண்டாளை மணிப் பல்லக்கில் எழுந்து அருளுவித்துக் கொண்டு
அழகிய மணவாளர் அல்லது அறியாத பாதிவ்ரதமுடைய ஆண்டாளைப் பிறர் கண் படாமல் தட்டுப் பாயிட்டு மூடிக் கொண்டு
அகில வாத்யத்துடனே அனைவரும் சேவிக்க எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு திருவரங்கம் திருப்பதி ஏறச் சென்று –
ஆண்டாள் வந்தாள்-
சூடிக் கொடுத்தாள் வந்தாள் –
சுரும்பார் குழல் கோதை வந்தாள்
திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்
தென்னரங்கம் தொழும் தேசியள் வந்தாள்
என்று பல சின்னங்கள் பணிமாற வந்து அழகிய மணவாளன் திரு மண்டபத்தே சென்று தட்டுப்பாயை வாங்க

சூடிக் கொடுத்த நாச்சியாரும் அகிலரும் காணும்படி உதறியுடுத்த பட்டுச் சேலையும் சுற்றிய செங்கழு நீர் மாலையும் –
திரு நுதல் கஸ்தூரித் திரு நாமமும் -காது அளவும் ஓடிக் கயல் போல் மிளிரும் கடைக் கண் விழியும் –
கொடியேர் இடையும் கோக நகத்த கொங்கை குலுங்கச் சிலம்பு ஆர்க்கச் சீரார் வளை ஒலிப்ப –
அன்ன மென்னடை கொண்டு அழகிய மணவாளன் திரு முன்பே சென்று உள்ளே புகுந்து கண்களாரக் கண்டு –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்றும் பேறு பெற்று -நாக பர்யங்கத்தை மிதித்து ஏறித்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கரைச் சேர்ந்து திருவரங்கன் திருவடி வருடும்படி அந்தர்பவித்து அருள

இத்தைக் கண்ட ஆழ்வார் சிஷ்யரான வல்லப தேவன் உள்ளிட்டார் அகிலரும் விஸ்மயப்பட –
திருவரங்கச் செல்வனார் ஆழ்வாருக்கு அருள்பாடிட்டு அருளி –
ஷீர சமுத்திர ராஜனைப் போலே நீரும் நமக்கு ஸூவ ஸூரராய் விட்டீர் -என்று மிகவும் உகந்து அருளி
இவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டத்துடன் ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து –
வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி பூண்டு கொண்டு வாழும் என்று விடை கொடுத்து அருள
ஆழ்வாரும் ப்ரீதி விஷாதத்துடனே ஸ்ரீ வில்லி புத்தூர் ஏறச் சென்று பூர்வம் போலே
ஸ்ரீ வட பெரும் கோயிலுடையான் கைங்கர்ய நிரதராய் வாழ்ந்து அருளினார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–திரு மழிசை ஆழ்வார்கள் வைபவம் –

February 8, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

திரு மழிசைப் பிரான் வைபவம் –
சக்தி பஞ்சமய விக்ரஹதாத்மநே – சக்தி காரஜத சித்த ஹாரிணே (சக்தி ஹார ஜித்தா சித்த ஹாரிணே -பாட பேதம் )
முக்தி தாயக முராரி பாதயோர் பக்தி சார முநயே நமோ நம —
சித்தார்த்திந் யுஷ்ண ரஸ்மவ் மகர மதிகதேத்வா பரே ஜ்ஞான தாராஷோதே சம்வத்சரவ் கேகதவதிசதிநே
சப்த விம்சேம காக்யே நக்ஷத்ரே பாநு வாரே முனி வரத நயோ பக்தி சாரோ முனீந்திர
ஸ்ரீ மான் பிரபாவதாரம் ஜகதுப க்ருதயே பர்வனோ அன்யேத்யு ரத்ர
ஆழ்வார் திரு மழிசைப் பிரான் ஆகிறார்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து அருளின ஸ்ரீ கிருஷ்ணனைப் போலே யாய்த்து
திரு வவதரித்து அருளின படியும் வளர்ந்து அருளின படியும் –
எங்கனே என்னில்
ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பாநு நா -தேவகி பூர்வ ஸந்த்யாம் ஆவிர்ப் பூதம் மஹாத்மநா –என்கிறபடியே
யது குலத்திலே பிறந்து
அநார்த்ர மார்தரம் விரசம் ரசாட்யம பல்லவம் பல்லவிதந்ததா ஆஸீத் பாவோ பஹுஷீரதுகாப பூவர் நாராயணே
நந்த குலம் ப்ரவிஷ்டே-என்கிறபடியே
நந்தன் குல மதலையாய் கோப குலத்திலே வளர்ந்து அருளினால் போலேயே
இவ்வாழ்வாருடைய திரு அவதாரமும் ஒரு பிறவியிலே இரு பிறவியாய் இறே இருப்பது –
அது எங்கனே என்னில்

அத்ரி ப்ருகு வசிஷ்ட பார்க்கவ ஆங்கீரஸாதிகளான மஹரிஷிகள் எல்லாம் ப்ரஹ்மாவின் பக்கலிலே சென்று
பூ லோகத்தில் உத்க்ருஷ்ட தமமான ஷேத்ரத்திலே எங்களுக்கு நித்ய வாசம் பண்ண வேணும் –
அத்தை நிச்சயித்துச் சொல்ல வேணும் என்று கேட்க -ப்ரஹ்மாவும்
உலகும் மழிசையும் உள் உணர்ந்து விஸ்வகர்மாவைக் கொண்டு பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணையாய்
ச சைலாம்புதிகாநநையான பூமி எல்லாம் ஒரு தட்டும் விதேஹ பவந க்ஷேத்ரமான திரு மழிசை ஒன்றும் ஒரு தட்டுமாகத்
துலையிலே வைத்து நிறுக்க
தாத்ரா துலிதாச லகுர் மஹீ -என்கிறபடியே பூமியை வைத்த பக்கம் நொய்தாக மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம்
கனத்து இருக்கக் கண்டு -அதுக்கு மஹீ சார க்ஷேத்ரம் என்று பேர் இட்டு நிரூபிக்கையாலே
அந்த ரிஷிகளும் அவ்விடத்தை விடாதே நித்ய வாசம் பண்ணிக் கொண்டு இரா நிற்க

அவர்களில் பார்க்கவ மஹர்ஷியானவர் -பஸ்சிமே யோஜ நார்த்தேச விதேஹா திஷ்டி தம் வனம் -பார்க்கவோ தீர்க்க சத்ரேண
வாஸூ தேவம் சநாதநம் அபி பூஜ்யயாதா ந்யாய மிதி நித்யம கல்பயத் -என்று ப்ரஹ்மாண்ட புராணத்திலே சொல்லுகிறபடியே
தீர்க்க சத்ரம் என்கிற யாகத்தாலே சர்வ அந்தர்யாமியான ஸ்ரீமன் நாராயணனனை ச க்ரமமாக யஜீத்துக் கொண்டு போருகிற காலத்திலே
பார்க்கருடைய பத்னி கர்ப்பிணியாய்-பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்கிறபடியே
பன்னிரண்டு மாசத்துக்கு பின்பு தை மாசத்தில் திரு மக நஷத்த்ரத்தில் பிண்டாக்ருதியாக பிரசவிக்க
ஸூ தர்சன அம்சநேந திரு மழிசைப் பிரான் அவதரித்தார்
சா கர்ப்பமா தத்தமு நே ஸ் ச பத்நீ ஸூதர்சநாம் சேகததா அநு விஷ்டம் பபாத கர்ப்போபு விதைஷ்யமாஸே
மகாபிதேந மஹநீயா தாரே -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

அநந்தரம் உல்ப சம்வேஷ்டிதமாய் ஒன்றும் ரூபீ கரையாமல் அவதரிக்கையாலே பார்க்கவரும் தத் பத்னியும் அநாதரித்து
ஒரு பிரப்பந்தூற்று கீழே வைத்துப் போக
அந்த உல்பா வ்ருத பிண்டாக்ருதியானது அகில ஜெகன் மாதாவான பெரிய பிராட்டியார் அனுக்ரஹத்தாலே
பூமிப்பிராட்டி ஸூ ரஷிதமாக வைத்துக் கொண்டு இருக்கச் செய்தே –
சிக்கென்று சென்னிக்கால் சீரிடைப்பின் கண்ணுயிராய் ஓக்க உருப்பாய்ந்து அறிவால் உள் நிறைந்து -என்கிறபடியே
சர்வ அவயவங்களும் பரிபூரணமாய் அதிலே ஜீவன் ஸ்புரித்துத் தோற்றி-பேதைக்குழவி என்கிறபடியே
அத்யந்தம் சிசுவாய் பசும் குழந்தையான ஆழ்வார் பசி தாஹங்களாலே ஈடுபட்டு ஸ்தந்யார்த்தியாய் விஜனமான வனத்திலே
ஒரு பிரப்பந்தூற்றிலே ரோதனம் பண்ண
அவ்வளவில் மஹீ சார ஷேத்ராபதியான பெருமாள் அங்கே எழுந்து அருளி கருணா அமிர்தவ் நிஷ்கந்தியான
கடாக்ஷ பாதங்களால் இவர் பசி தாக்கம் தீர்க்கும்படி குளிரக் கடாக்ஷித்து
ஆராவமுதமான ஸ்வ விக்ரஹத்தைக் காட்டி ஆஸ்வாசிப்பித்து மறைய
இவரும் தத் விக்ரஹ அஸஹிஷ்ணுவாய் மீளவும் அழத் தொடங்கினார்

அங்கே திருவாளன் என்கிற ஒருத்தன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் இவருடைய ஆர்த்த நாதம் கேட்டுக் கூட
வந்தவர்களுடன் சோதித்து இவரைக் கண்ட ஹர்ஷ பிரகர்ஷத்துடனே எடுத்துக் கொண்டு வந்து தன்னுடைய
பத்தினியான பங்கயச் செல்வியார் கையிலே கொடுக்க அவளும் வந்த்யையாலே மிகவும் ப்ரீதையாய்-
உத்தானம் செய்து -என்கிறபடியே எடுத்துக் கொண்டு புத்ர பிரதிபத்தியைப் பண்ணி –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -என்று விகல்பிக்கலாம் படி ஆதரத்துடன்
ஸ்நேஹ பூர்வகமாக வளர்க்க வளர்ந்து அருளுகிற காலத்திலே -வனமுலைகள் சோர்ந்து பாய -என்கிறபடியே
முலைப்பால் சுரக்க -இவளும் நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
என்னும்படியே முலை கொடுக்கத் தேட –
இவரும் ஸ்தந்யாதி போஜ்யங்களிலே நிராசராய் பகவத் குண ஏக தாரகராய்
வாக் வ்யாவஹார ரோதநாதிகள் ஒன்றும் இன்றியே மாலா மூத்ர ரஹிதராய்ப் பரிபூர்ணமாக
சர்வ அவயவங்களும் வர்த்திக்க எழுந்து அருளி இருக்க
இந்த ஆச்சர்யத்தை அபுத்ரவானுமாய் திரு மழிசையிலே வாசம் பண்ணும் சதுர்த்த வர்ணத்தில் ஜாதனுமாய்
மஹா ப்ராஞ்ஞனுமான ஒரு வ்ருத்தன் கேட்டு பங்காகப் பால் அமுது காய்ச்சிக் கொண்டு
ஸ்வ பார்யா ஸஹிதனாய் இவர் இருக்கிற இடத்திலே விடியற்காலத்திலே வந்து பஞ்ச சக்தி மயமான சிசுவினுடைய
அப்ராக்ருத திவ்ய தேஜஸ்ஸைக் கண்டு அத்யாச்சர்யப்பட்டு தான் கொண்டு வந்த பால் அமுதை சமர்ப்பித்து பிரார்த்தித்து
அமுது செய்யப் பண்ண வேணும் என்று இத்தைக் கொண்டு வந்தேன் அமுது செய்து அருள வேணும் என்று
பஹுசம் வேண்டிக் கொள்ள ஆழ்வாரும் அவன் இடத்தில்

க்ருபா அதிசயத்தாலே அவன் கொண்டு வந்த பால் அமுதை அமுது செய்து போக விட
அவர்களும் அப்படியே பல நாளும் போர ப்ரீதியுடன் பால் அமுதை செய்வியா நிற்க
ஒரு நாள் ஆழ்வார் வ்ருத்த தம்பதிகளுடைய மநோ பாவம் அறிந்து அற்றைக்கு அவர்கள் கொண்டு வந்த
பால் அமுதை அமுது செய்து சேஷித்த பாலை நீங்கள் ஸ்வீ கரியுங்கோள் உங்களுக்கு நல்ல புத்ரன் உண்டாவான் என்று பிரசாதிக்க
அவர்களும் அப்படியே ஸ்வீ கரித்து யவ்வன அவஸ்தையை அடைந்து தத் பத்னியும் கர்ப்பவதியாய்
ஒன்பது மாசம் சென்று பத்தாம் மாசம் நிறைந்தவராய் -கேசவன் தமராய் -நாக் கொண்டு மானிடம் பாடாத மஹா ப்ராஞ்ஞரான
ஒரு குமாரனை பிரசவிக்க ஸ்ரீ விதுரரைப் போலே விளங்குகிற அந்தப் புத்ரனைக் கண்டு பத்து நாளும் கடந்த இரண்டா நாள்
அவருக்கு கணி கண்ணன் என்று திரு நாமம் சாத்தி அகில வித்யைகளையும் அதிகரிப்பித்தார்கள்

பின்பு பகவத் தயா ஸூதா ஸ்வாதந திருப்த சேதனராய் -விடப்பட்ட அன்ன பான பய அபிலாஷையை உடையராய்
பைத்ருக வேஸ்மத்திலே வளர்ந்து அருளுகிற ஆழ்வாரும் ருஷி புத்திரர் ஆகையால் ஏழு திரு நஷத்தரத்துக்கு பின்பு –
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பில் ஐம்புலனை அடக்கி என்கிறபடி –
யம நியமாதியான அஷ்டாங்க யோக அப்யாஸத்திலே திரு உள்ளமாய் -அதுக்கு ஜகத் காரண வஸ்துவை
தியானத்துக்கு விஷயமாகச் சொல்லுகையாலே அந்த வஸ்துவை அறிய என்றால்
பிணங்கும் சமயம் பல பல ஆகையால் அவை அவை தோறும் புக்கு ஆராய்வோம் என்று –
சாக்கிய உலுக்கிய அக்ஷபாத ஷபண கபில பதஞ்சலிகள் ஆகிற பாஹ்ய சமயங்களை –
சைவ மாயாவாத நியாய வைசேஷிக பாட்ட ப்ரபாகாதிகள் ஆகிற குத்ருஷ்ட்டி சமயங்களையும் புக்கு
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து ஆராய்ந்து பார்த்த இடத்தில் -இறை நிலை உணர்வு அரிது -என்கிறபடியே
அவற்றிலே ஒரு பசை இல்லாமையால் அங்கு நசை அற்று
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் -என்று கொண்டு
ஈனமான இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைந்து
கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தான் என்று இதர சித்தங்களை நஸ்வரம் என்று கை விட்டு
இப்படி ஏழு நூறு திரு நக்ஷத்ரம் சென்றவாறே

ஸ்ரீ வைஷ்ணவராய் -பரம வைதிக சித்தாந்த நிஷ்டராய் -இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் -என்று
அறுதியிட்டுக் கொண்டு வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை அறிந்து தத் ப்ரவணராக –
சர்வேஸ்வரனும் அதுவே பற்றாசாக இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும்
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் உபயத்தையும் பிரகாசிக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
தத் ஆதாரமான க்ரீடாடிதி நூபுராந்தமான திவ்ய பூஷண வர்க்கத்தையும் அவற்றோடு விகல்பிக்கலாம்படியான
சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும்
இது அடங்க காட்டில் எரிந்த நிலாவாகாமல் அனுபவிக்கிற ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ருதி மஹீஷீ வர்க்கத்தையும்
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்றும்
அடிமை செய்வார் திரு மாலுக்கு என்றும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் என்றும்
ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்றும் சொல்லுகிறபடியே அச்சேர்த்தியிலே அடிமை செய்கையே தங்களுக்கு
தாரகாதிகளாக யுடையரான திவ்ய பரிஜன வர்க்கத்தையும்
அந்த போகத்துக்கு வர்த்தகமாக-நலம் அந்தமில்லதோர் நாடாய்ப் போக விபூதியான பரம பாதத்தையும் சாஷாத்கரிப்பித்து
பின்னையும் பிரகிருதி புருஷ காலாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்களை
சத்வாரகமாகவும் அத்வாரகமாகவும் நின்று இன்புறும் இவ்விளையாட்டுடையான் என்கிறபடி
தனக்கு லீலையாக உடையனாக இருக்கிற படுதியையும் காட்டிக் கொடுக்க

இப்படி உபய விபூதி நாதனான தான்
யந் நாபி பத்மா தபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வ ஸ்ருக் -என்கிறபடியே
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படைக்கும்படி முதலிலே தனக்கு ஜ்யேஷ்ட புத்ரனாய் ப்ரஹ்மாவை தன் நாபீ கமலத்திலே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் என்னும்படி முந்துற உத்பன்னன் ஆக்கின படியையும்
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா ஷ்ரேஷ்டாயா என்கிறபடியே அந்த ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்திரனான ருத்ரன்
உத்பன்னனான படியையும் பிரகாசிப்பித்து அருள இவரும்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்று
தன் வாக்காலே சொல்லும்படி இவற்றை எல்லாம் இவர் சம்சயம் விபர்யயம் அற அறிந்து
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் பாக்கியத்தால்
செங்கண் கரியானைச் சேர்ந்தோம் யாம் தீதிலமே எங்கட்க்கு அரியது ஓன்று இல் -என்று அனுசந்தித்து அருளி
இதர சித்தாந்த நிவ்ருத்தி பூர்வகமாக திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓர்ந்து

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யச புந புந இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயா நாராயணஸ் சதா -என்றும்
யோகேஸ்வரம் ஜெகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸ்ரீ யபதிம் பத்ம நாதம் விசாலாக்ஷம் சிந்தயாமி ஜகத்பதிம் -என்றும் சொல்லுகிறபடியே
ஜகத் காரண பூதனாய் சர்வ அந்தர்யாமியாய்ப் புண்டரீகாக்ஷனாய் ஜெகந்நாதனான ஸ்ரீ யபதியைத் தியானம் பண்ணிக் கொண்டு
க்ருதரார்த்தராய்-( திரு மழிசையிலே ) திரு வல்லிக்கேணியில் கஜேந்திர சரஸ்ஸின் கரையில்
ஏழு நூறு சம்வத்சரம் பகவத் அனுபவம் பண்ணிக் கொண்டு யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற நாளையில்

ஒரு நாள் இவர் நிரந்தர பகவத் அனுபவத்துடன் கந்தா சீவனம் செய்யா நிற்க அவ்வளவில் ருத்ரனும்
அத்ரிகன்யா ஸஹிதனாய் ருஷபா ரூடனாய் திரிசூல பாணியாய் வ்யோம மார்க்கத்தில் செல்லா நிற்க
ஆழ்வாரும் அவர்களைக் கண்டு அவன் நிழல் தன் மேல் படாமல் ஒதுங்க இதைத் தம்பதிகள் இருவரும் கண்டு நிற்க
அவ்வளவில் ருத்ரனைக் குறித்து பார்வதி இவராவரோ என்று அறிந்து போவோம் என்ன ருத்ரனும் தத் பத்னியுடனே
இவர் மஹாநுபாவர் நம்மைக் கணிசியார் என்ன ஆகிலும் அவரைக் கண்டு போவோம் என்ன
அவனும் சம்மதித்து இவர் அண்டையில் வந்து நிற்க இவரும் அவனைக் கண் எடுத்துக் பாராமல் உதாஸீனித்து இருக்க

அவனும் நாம் வந்து நிற்க நீர் அலஷ்யம் பண்ணலாமா என்ன –
இவரும் உன்னைக் கொண்டு என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு -என்ன
அவனும் நாம் உனக்கு ஓன்று தரக் கடவதாக வந்தோம் என்ன
இவரும் நமக்கு ஒன்றும் வேண்டாம் என்ன –
அவனும் நம் வரவு வ்யர்த்தம் ஆகாமல் உம் அபீஷ்டத்தைக் கேட்டுக் கொள்வீர் என்ன
ஆழ்வாரும் புன்முறுவல் செய்து ஆகில் மோக்ஷம் தர வல்லையாகில் தா என்ன
அது என்னால் தரக் கடவது அன்று ஸ்ரீ மன் நாராயணனாலே என்ன
ஆனால் இன்று சாவாரை நாளை சாகும்படி பண்ண வில்லையோ என்ன
அதுவும் கர்ம அனுகுணம் அன்றோ என்ன
ஆனால் இவ் ஊசியின் பின்னே நூல் வரும் படி வர பிரதானம் பண்ணாய் என்று அபஹசித்துச் சொல்ல
அவனும் இவ்வார்த்தையைக் கேட்டு மிகவும் குபிதனாய் இவரை அநங்கனைப் போலே ஆக்கக் கடவேன் என்று
பொறியும் புகையும் கிளம்புகிற தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விட அக்கண்ணில் நின்றும்
ஜ்வாலா ஜாஜ்வல்யமானமாய் சம்வர்த்த அக்னி போலே சுட்டுக் கொண்டு எரிகிற ஜ்வலந ப்ரரோகத்தைக் கண்டு
ஆழ்வாரும் தமது வலது திருவடியின் பெரு விரலில் ஒரு கண்ணைத் திறந்து விட அக்கண்ணின் நின்றும்
அக்னி பிரளய ஹூதவஹ கோடி கல்பமாய் ஜ்வலித்துக் கொண்டு கிளம்ப கோடி வைச்வாநர ப்ரக்யமாய்
அத்யக்நி கோடி நிப தீர்க்க ஜ்வாலா ஜாஜ்வல்யமான அக்னியில் சம்புவின் லோசனை அக்னி த்யோத பிராயமாய் அடங்க

பின்னும் அந்த மஹத் அக்னியானது உலகங்களை ஆக்ரமித்து ம்ருத்யுஞ்ஜயனைச் சுற்றிக் கொள்ள
சம்புவும் அந்த அங்குஷ்ட லோசன அக்னி ஜ்வாலையைப் பொறுக்க மாட்டாமல் கேவலம் பரிதபித்து
அந்யதா சரணம நாஸ்தி த்வமேவ சரணம் மாமா தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ ஜனார்த்தன என்று முறையிட
அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் -41000-ரிஷிகளும் சதுர்முக ப்ரஹ்மாவும் ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று
பிரபத்தி பண்ணி முறையிட எம்பெருமானும் புஷ்கலா வர்த்தகம் என்னும் பிரளய மேகங்களை அக்னி சமிக்கும்படி
ஆஞ்ஞாபிக்க மேகங்கள் தண்டனை சமர்ப்பித்து ஸ்வாமி ஸூ தர்சன அம்சஜரான பார்க்கவ மகரிஷி பாத அங்குஷ்ட
நேத்ர அக்னியை சமீபிக்கவும் பார்க்கவும் எங்களுக்கு சக்தியும் உண்டோ என்ன
ஸ்வாமியும் என்னுடைய கிருபையாலே உங்களுக்கு பலமுண்டாம் என்ன
அம்மேகங்களும் மின்னி முழங்கி விழித்து அகில தாபங்களும் அடங்கும்படி ஆகாச அவகாசம் அடைய நிறைந்து
அபி வர்ஷிக்க அவ் வர்க்ஷத்தாலே எரிகிற அக்னியும் அணைந்து பெரு வெள்ளம் கோக்க-ஆழ்வாரும்
கிரயோ வர்ஷ தாரா அபிர் ஹன்யமாநாந விவ்யது -என்கிறபடியே அத்ரி ராஜனைப் போலே
வர்ஷ தாரைக்கு இறாயாமல் பகவத் அனுபவ தத் பரராய் இருக்கிறபடியைக் கண்டு அவனும் விஸ்மயப்பட்டு
இவருக்கு பக்தி சாரார் என்ற திரு நாமத்தையும் சாத்தி இவர் வைபவத்தைக் கொண்டாடி சிரஸ் கம்பனம் பண்ணி
அம்பரீஷனாலே துர்வாசர் அவமானப் பட்டான் இறே
ஆகையால் பாகவதர்கள் ஸூ துர்ஐயர் என்று ஸ்வ பத்னிக்கு உரைத்துக் கொண்டு யதா ஸ்தானமே போந்தான்

பின்னையும் ஆழ்வார் பூர்வம் போலே யோகத்தில் எழுந்து அருளி இருக்க யாத்ருச்சிகமாக
வயாக்ரா ரூடனாய் சுக்திஹாரன் என்பான் ஒரு கேஸரந் ஆகாச மார்க்கத்தில் செல்லா நிற்க
ஆழ்வாருடைய யோக பிரபாவத்தாலே இவர் மேலே போக ஷமர் அன்றிக்கே வ்யாக்ரமும் திமிர்த்து நிற்க
அவனும் இது ஏதோ என்று பார்த்துக் கொண்டு வரும் அளவில் கீழே மவ்வ்நியாய் யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற
ஆழ்வாரைக் கண்டு விஸ்மயப்பட்டுத் தத் க்ஷணத்தில் ஆகாசத்தினின்றும் பூமியில் வந்து
வ்யாக்ர வாஹனத்தின் நின்றும் இறங்கி இவர் அண்டையிலே வந்து -பார்க்கவ முனீந்திரரே இக்கந்த ஆவரணத்தைப்
பொகட்டு நான் தருகிற திவ்ய பட நிர்மிதமான இந்தக் கவசத்தைத் திரியும் என்று ஒரு கவசத்தைக் கொடுக்க
இவரும் அத்தை நிஷேதித்து ஸ்வ சங்கல்பத்தாலே மணி ஸ்வரூபமாய் த்யு மணி ப்ரபோ பமமான கவசத்தை அவனுக்குக் காட்ட
அவனும் லஜ்ஜாவிஷ்டனாய் தன் கழுத்திலே ஹாரத்தை வாங்கி -இத்தை அக்ஷமாலையாகத் தரியும் என்று கொடுக்கத் தேட
இவரும் தம் கழுத்தில் துளஸீ பத்மாஷ மாலையை வாங்கி இத்தைப் பாராய் என்ன
அது நவரத்ன ஹாரமாய் விளங்கக் கண்டு அவனும் இவர் மஹாநுபாவர் மஹா பரிபூர்ணர் என்று தண்டன் இட்டு
இவர் வைபவத்தைக் கொண்டாடி யதா ஸ்தானமே போந்தான்

பின்னையும் அங்கே இவர் யோக நிஷ்டராய் எழுந்து அருளி நிற்கச் செய்தே கொங்கண சித்தன் என்கிற பெயரை உடையனாய்
ரஸவாதியாய் இருப்பான் ஒருவன் வந்து இவ் வாழ்வாருடைய வைபவத்தைக் கண்டு இவருக்குக் காணி கோடியைப் பேதிப்பதான
ரஸா குளிகையை சமர்ப்பிக்க -இவரும் அத்தை அநா தரித்து -நமக்கு வேண்டாம் என்று அவனுக்குத் தம்முடைய பொன்னொத்த மேனியின்
புழுதியோடே தம் காதில் குறும்பியை உருட்டு இந்தக் காணி குளிகை கோடா கோடியைப் பேதிக்கும் என்று கொடுத்து அருள –
அவனும் அப்படியே பரீஷிக்க -அது சொன்னபடிக்கு ஒத்து இருக்கையாலே அதி ப்ரீதியுடன் ஆழ்வாரைத் தெண்டன் இட்டு
தன்யோஹம் என்று க்ருதார்த்தனாய்ப் போந்தான் –

அநந்தரம் திரு மழிசைப் பிரானும் ஒரு குஹாந்தரவிஷ்டராய் நிப்ருதாஷ விருத்தியை யுடையராய் யோகத்தில் எழுந்து அருளி இருக்க
பொய்கை பூதம் பேயாழ்வார் ஆகிய முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டராய்
சஞ்சரித்து வருகிறவர்கள் ஸூ தூரத்திலே அப்ராக்ருத திவ்ய தேஜஸ் ஸைக் கண்டு அத்யாச்சர்யத்தைப் பட்டு
இத்தை ஆராயக் கடவோம் என்று எங்கும் திரிந்து சோதித்து வைத்து குஹநாதரவிஷ்டரான பக்தி சாரரரை –
இம்மஹானுபாவர் யாரோ என்று திவ்யமான நெஞ்சு என்னும் உட்கண்ணால் கண்டு பார்க்கவ முநீந்தரரே ஸூகமே இருக்கிறீரோ என்று
குசலப் ப்ரச்னம் பண்ண அவரும்
பத்ம மாதவீ குஸூமகைர வோத்பவ முனிகள் நன்றாய் இருக்கிறீர்களோ என்று வினவி அருள
அந்யோந்வ வந்தன பரராய் ஆஹ்லாத சீதா நேத்ராம்புகள் பனிப்பப் புளகீக்ருத காத்ரராய் ஒருவரை ஒருவர் ஆலிங்கித்துக் கொண்டு
மிகவும் ப்ரீதியுடனே எல்லாரும் சதா பர குணா ஆவிஷ்டராய் யோகத்தில் எழுந்து அருளி இருந்தார்

இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் பாலும் பாலும் சேர்ந்தால் போலவும் தேனும் தேனும் கூடினால் போலவும்
பகவச் சரணாரவிந்த த்யான அம்ருத ஸ்வாதனம் தேனூறி எப்பொழுதும் தித்தித்து ஐக ரஸ்யத்தாலே எல்லாருக்கும்
ப்ரணய ரசம் உந்மஸ்தகமாம்படி பகவத் அனுபவ ரசம் பண்ணி இருந்தார்கள்
பின்பு எல்லாரும் உகந்த திரு உள்ளத்தை யுடையராய் மயிலை நகரி ஏற எழுந்து அருளி அங்கே
பேயாழ்வார் திரு அவதரித்து அருளின கைரவ தீர்த்தத்தையும் ப்ரீதியுடன் ஆலோகித்துக் கொண்டு தத்தீரத்திலே சிலகாலம்
யோகத்தில் எழுந்து அருளின பின்பு ஓடித் திரியும் யோகிகள் என்னும்படியே பூர்வம் போலவே
பார்க்கவ முனீந்திரரை அனுவர்த்தித்து அனுமதி போன்று பூசஞ் சரணார்த்தமாக முதல் ஆழ்வார்கள் மூவரும் எழுந்து அருளினார்கள்

அநந்தரம் பார்க்கவ முனீந்திரரும் தம்முடைய திரு அவதார ஸ்தலமான திரு மழிசையிலே எழுந்து அருளி சாத்துகைக்குத்
திரு மண் வேண்டிக் கல்லி சோதித்த இடத்தில் திரு மண் அகப்படாமல் முசித்துக் கிடக்க அப்போது
திரு வேங்கடத்து எந்தை இவர் ஸ்வப்னத்திலே எழுந்து அருளித் திரு மண் இருக்கும் இடம் அடையாளமாகக் காட்டி அருள
அங்கே திரு மண் கண்டு எடுத்து பன்னிரண்டு திரு நாமம் சாத்தி அருளிப் பெரிய ப்ரீதியுடனே
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை என்கிறபடியே ஷூத்ர புருஷார்த்தங்களிலே நசை அற்றுப் பகவத் அனுபவம்
பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இவரும் பொய்கைப் பிரான் அவதரித்து அருளின
பொய்கைப் பிரதேசத்திலே சிலகாலம் சேவித்து இருக்க திரு உள்ளமாய்

யத்து சத்யவ்ரதம் நாம க்ஷேத்ரம் பாப விநாசனம் புண்ய க்ஷேத்ரேஷு சர்வேஷு தஸ்யை வஸ்ரைஷ்ட்யமீரிதம் -என்று
சொல்லுகிறபடியே புண்ய க்ஷேத்ரங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரேஷ்டமுமாய் பாப ஹரமுமாய் சத்யவ்ரத க்ஷேத்ரம் என்று பேரை
உடையதுமான திருக் கச்சி வெஃகாவில் எழுந்து அருளி
சயாநஸ் சேஷ பர்யங்கே குந்தேந்து தவள ப்ரபே பணா ரத்ன சஹஸ்ராம் ஸூ நவாஸ் தரண விஸ்த்ருதே-
நீல ஜீமூத ஸங்காச பத்ம பத்ர நிபேஷண ஸேவ்ய மாநோ விசாலாஷ்யா ஸ்ரீ யாக கமல ஹஸ்தாய தரண்யா
சஸூ தந் வங்க்யா தாதா விஸ்வஸ்ய விஸ்ய புக் -என்றும்
தேவி மாராவார் திரு மகள் பூமி -என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரீ பூமி நீளை களாலே ஸேவ்யமானானாயக் கொண்டு
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா -என்கிறபடியே பெரிய திருவனந்த ஆழ்வானான திரு அணையில்
திரு வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை சேவித்து பொய்கையாழ்வார் அவதரித்து அருளின அந்தத் திரு பொய்கைக் கரையிலே
அவரை த்யானம் பண்ணிக் கொண்டு யோகத்தில் ஏழு நூறு சம்வத்சரம் எழுந்து அருளி இருக்கிற காலத்திலே

இவர் திருவடிகளிலே கணி கண்ணர் வந்து ஆஸ்ரயித்துப் பகவத் ப்ரவணராய் இருக்க அவ்வளவில் அங்குள்ள ஒரு ஸ்தவிரையானவள்
வந்து ஆழ்வாரை சேவித்து அவர் திருவடிகளிலே பக்தி உக்தையாய் அவர் எழுந்து அருளி இருக்கிற இடத்தை
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாம்-என்கிறபடியே சம்மார்ஜன கோமயாநு லேப நரங்கவல்யாத் அலங்காரங்களாலே
அநு தினம் சுச்ருஷிக்க யோகத்தில் எழுந்து அருளி இருக்கிற இவ்வாழ்வார் ஒரு நாள் திருக் கண்களை விழித்துப் பார்த்து
இவள் செய்கிற கிங்கர விருத்திக்கு மிகவும் உகந்த திரு உள்ளத்தராய் அந்த வ்ருத்தையைப் பார்த்து –
உன் அபீஷ்டத்தை சொல்லிக் காணாய் -உனக்கு ஒரு வர பிரதானம் பண்ணுகிறோம் என்று அருளிச் செய்ய அவளும் அப்படியே
ஆழ்வாரைக் குறித்து -அடியேன் இடத்தில் கிருபா அதிசயம் உண்டாகில் அடியேனுக்கு இந்த வார்த்தகம் போம்படி கடாக்ஷித்து அருள வேணும் என்ன
ஆழ்வாரும் அப்படியே ஆகக் கடவது -என்று அவளைக் குளிரக் கடாக்ஷித்து அருள அவளும் இவர் கடாக்ஷத்தாலே
ப்ராப்த யவ்வனையாய்த் தேவ ஸ்த்ரீயைப் போலே அதி ஸூந்தரையாக
அவ்வளவில் தத் ராஜ்ய அதிபதியான பல்லவராயனும் இவளைக் கண்டு மன்மத பாண பாதிதனாய்த் தனக்குப் பத்நியாக வேணும்
என்று பிரார்த்திக்க அவளும் அனுகூலித்து அவனுடனே அதி மானுஷ போகங்களை அனுபவியா நிற்க

ஒரு நாள் பல்லவ ராயன் தனக்கு ஒரு நாளைக்கு ஒரு நாள் சரீரம் ஜரித்து வரக் கொண்டு அவளைக் குறித்து
உனக்கு அதி மானுஷமான இந்த யவ்வனம் எங்கனே உண்டாயிற்று என்று கேட்க -அவளும் அவனைக் குறித்து
ஆழ்வார் கடாக்ஷத்தாலே தனக்கு உண்டான படியைச் சொல்லு நீயும் உன்னகத்திலே அநு தினம் உபாதானம் பண்ண வருகிற
கணிகண்ணரை அனுவர்த்தித்து அவர் புருஷகாரமாகத் தத் தேசிகரான பக்தி சாராரை அனுவர்த்தித்தாயாகில் உனக்கும்
இப்படிப்பட்ட யவ்வனம் உண்டாம் என்று சொல்ல அப்போது ராஜாவும் கணிகண்ணரை அழைத்து உம்முடைய ஆச்சார்யரை
நாம் சேவிக்க வேணும் -அவரை நம் பாக்கள் அழைத்துக் கொண்டு வர வேணும் என்று சொல்ல கணிகண்ணரும் –
நம் ஆச்சார்யரும் ஒருவர் அகத்துக்கும் எழுந்து அருளார் -ஒரு ராஜாவையும் கணிசித்துப் பாரார் என்ன
பின்னையும் ராஜாவான பல்லவராயன் தன்னைக் கவி பாட வேணும் என்று கணிகண்ணரை அபேக்ஷிக்க
வைகுந்தச் செல்வனார் சேவடியைப் பாடுகை ஒழிய
நாக் கொண்டு பாடேன் -என்றும்
வாய்க் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் என்றும்
இப்படி தம்முடைய அத்யாவஸ்ய ஹேதுவான சிஷ்டாசார வசனங்களைச் சொல்லி
பகவத் பாகவத விஷயம் ஒழிய நான் நர ஸ்துதி பண்ணுவது இல்லை -என்ன
ஆகிலும் நீர் நம்மைப் பாட வேணும் என்று அவன் இவரை நிர்பந்திக்க கணிகண்ணரும்

ஆடவர்கள் எங்கன் அகல்வார்-(எவ்வாறு அகன்று ஒழிவார் )- அருள் சுரந்து பாடகமும் ஊரகமும் பாம்பணையும் –
(பஞ்சரமும் -)நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ மன்றார் பொழில்-(மதிள் )- கச்சி மாண்பு என்று சொல்ல
அவனும் நம்மைப் பாடு என்றால் இங்கனம் சொல்லலாமோ என்று மிகவும் குபிதனாய்க் கொண்டு
ஆகில் நம்முடைய ராஜ்யத்தின் நின்று போம் என்ன -ஆஜகாம முஹுர்த்தேன -என்கிறபடியே சடக்கென
ஸ்வா சார்யரான பக்தி சார முனிகள் திரு முன்பே வந்து தண்டன் சமர்ப்பித்து அச்செய்தியை விண்ணப்பம் செய்து
அடியேன் இவ்விடத்தில் நீண்டும் விடை கொள்கிறேன் என்ன
ஆழ்வாரும் நீர் போகீறீராகில் நாம் இங்கு இருக்கப் போகிறோமோ –
நாம் புறப்பட்டாள் எம்பெருமான் இங்கே கண் வளரப் போகிறானோ -அவன் எழுந்து அருளும் போது
தத் பரிகர பூதரான ப்ரஹ்மாதிகள் இங்கு இருக்கப் போகிறார்களோ என்று அருளிச் செய்து
வெஃகாவில் உன்னிய யோகத்து உறக்கமானவனையும் எழுப்பிக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி
திரு வெக்கா நாயனார் திரு முன்பே எழுந்து அருளி அவரைப் பார்த்து
கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய
அவர் சொன்ன வண்ணம் செய்து இவருடைய பின்னே எழுத்து அருள

சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர என்கிறபடியே அத்தேசத்தில் ஆலயங்களில் தேவதைகளும்
பின் தொடர எழுந்து அருளுகையாலே
அபி வ்ருஷா பரிம்லாநா ச புஷ் பாங்குர கோரகா-உபதப்தோத காநத்யா பல்வலா நிசராம்ஸிச -என்று சொல்லுகிறபடியே
திரு அயோத்தியை ராம விஸ்லேஷத்தாலே பொலிவு அழிந்தால் போலே திரு காஞ்சீ நகரத்திலே
தரு குல்மாலாதிகளும் நதீ தடாகங்களும் மிகவும் வாடி அழகு அழிந்து தத் ராஜ்யத்தில் கோயில்களில் எம்பெருமான்களிலும்
இல்லாத ஆலயங்களிலே தேவதைகள் ஒருவரும் இன்றியே அந்தகாரம் கவிந்து உதய அஸ்தமனம் தெரியாதே
நீள் இரவாய் நீண்டதால் -என்கிறபடியே கந திமிர பூயிஷ்டமான படியை ராஜாவும் மந்திரிகளும் கண்டு போர கிலேசித்து
இவர்களை பின் தொடர்ந்து ஓரிரவிருக்கை -ஓரிக்கை -என்கிற ஊரில் இவர்களைக் கண்டு
கப்படத்தைக் கட்டிக் காலிலே விழுந்து கணிகண்ணரை வேண்டிக் கொள்ள
கணிகண்ணரும் மீண்டு எழுந்து அருளும் படி ஆழ்வாரை வேண்டிக் கொள்ள –
ஆழ்வாரும் மீண்டு எழுந்து அருள திரு உள்ளமாய் ஆஸ்ரித பரதந்த்ரரான சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து

கணி கண்ணன் போக்கு ஒழிந்தான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேணும் துணிவுடைய செந்நாப் புலவனும்
போக்கு ஒழிந்தேன் நீயும் உன் தன் பைந்நாகப் பாய் படுத்துக் கொள் -என்று விண்ணப்பம் செய்ய
எம்பெருமானும் மீண்டு எழுந்து அருளி ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்தது எல்லாருக்கும் பிரத்யக்ஷமாக வேணும் என்று
இடத் திருக்கைக் கீழ்ப்பட கண் வளர்ந்து அருளினார்
இப்படி விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை என்கிறபடியே சேர்ந்து நாகத்தணையைப் படுக்கையாகப் படுத்திக் கொண்டு
கண் வளர்ந்து அருளின இந்த ஸுலபயத்தை அனுசந்தித்து இ றே வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று ப்ரீதராய் அருளினார்
அந்த நகரி தானும் நிறைந்த சீர் நீள் கச்சி என்னும்படி பொலிவை உடைத்தாய் இருக்கையாலே அவ்விடத்திலே
வெள்ளத்து இரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு யோகத்தில் பின்னையும் சிலகாலம்
எழுந்து அருளி இருந்து

அநந்தரம் கும்பகோண யாத்ரை அபேக்ஷையை உடையராய் யோ நர கும்ப கோணே அஸ்மின் க்ஷணார்த்தம் அபிதிஷ்டதி
கரஸ் தந்தஸ்ய வைகுண்டங்கி முதாந்யா விபூதய-என்கிறபடியே
வைகுந்த மா நகர் மற்றது கையதுவாகத் தக்க பிரபாவாதிசயத்தை யுடைத்தான திருக்குடந்தையிலே நித்ய வாசம் பண்ணி
ஆராவமுத ஆழ்வாருடைய ஏரார் கோலத்தை யோகத்தில் கொண்டு எழுந்து அருளி இருக்கத் திரு உள்ளமாய் –
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் யுன்னைக் காண்பான் நான் அலப்பாய்-என்கிறபடியே
அதி த்வரையோடே எழுந்து அருளா நிற்கச் செய்தே பெரும் புலியூர் என்கிற கிராமத்திலே சென்று
ஒரு திண்ணையிலே அவசரித்து எழுந்து அருளி இருக்க அத்திண்ணையிலே இருந்து அத்யயனம் பண்ணுகிற
ப்ராஹ்மணர்கள் இவரைக் கண்டு விப்ரதி பத்தி பண்ணி வேத அத்யயனத்தைத் தவிர்ந்து இருக்க பின்னை
அவர்களுக்கு விட்டதறுவாய் தோன்றாமல் தடுமாற ஆழ்வாரும் அத்தைக் கண்டு கறுப்பு நெல்லை உகிராலே இடந்து
சமஜ்ஜையாலே அந்த வாக்கியத்தை ஸூ சிப்பித்து அருள பின்பு அவர்களுக்கு
கிருஷ்ணா நாம் வரீஹீனாம் நக நிரப்பின்னம் –என்கிற வாக்கியம் தோற்ற
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா -இத்யாதிப்படியே
அவர்கள் தெளிந்து தண்டன் சமர்ப்பித்து க்ருதார்த்தரானார்கள்

பின்னையும் அந்த க்ராமார்ச்சனையான எம்பெருமானும் இவ்வாழ்வார் உபாதான
அர்த்தமாக சஞ்சரித்து அருளுகிற திரு வீதிகள் தோறும் அபிமுகமாய்த் திரும்பி அருள இந்த ஆச்சர்யத்தை நம்பியார் கண்டு
சில ப்ராஹ்மணருக்குக் காட்ட அவர்கள் அந்த கிராமத்தில் யாகம் பண்ணுகிற பெரும் புலியூர் அடிகளுடைய யாக சாலையிலே சென்று
கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் என்று இவருடைய பிரபாவத்தைச் சொல்ல தீக்ஷிதரும் கேட்டு
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கசிந்திடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே என்று கொண்டு
அஷனோபலந் த்வாத்ருச தர்சனம் -என்று சொல்லுகிறபடியே அதி ஹர்ஷத்தடுனே யாகசாலையில் நின்றும் புறப்பட்டு
ஆழ்வார் எழுந்து அருளி இருக்கும் இடத்து ஏற வந்து இவருடைய சக்தி பஞ்சமயமான விக்ரஹத்தைக் கண்டு சேவித்து –
போதுமின் எமதிடம் புகுதுக -என்கிறபடியே நம்முடைய யாக சாலைக்கு எழுந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் இவ்வாழ்வாருக்கு அக்ர பூஜை பண்ண

அத்தைக் கண்டு அங்குள்ள அத்வர்யு தொடக்கமான சடங்கிகள் அடைய இவரைக் கொண்டு புகுந்து
யாகத்தை உபஹதி யாக்கிற்றே என்று
தர்மபுத்ரன் ராஜ ஸூய யாகத்தில் கிருஷ்ணனுக்கு அக்ர பூஜை பண்ணின போது சிசுபாலன் பஹு முகமாகப்
புருஷ யுக்திகளைப் பண்ணினாப் போலே இவர்களும் ஆழ்வாரை பொறுப்பரியனகள் பேசி அதி க்ஷேபிக்க
தீக்ஷிதரும் வியாகுல அந்தக்கரணராய் ஆழ்வாரைப் பார்த்து இவர்கள் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வாரும் இனி நம்மை வெளியிடாது இருக்க ஒண்ணாது என்று பார்த்து
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருத்யாக நிரதாத்ம நாம் யோகிநாமதிகாரஸ்ஸ்யா தேகஸ்மிந் ஹ்ருதயே சயே-என்கிறபடியே
தனக்கு அந்தர்யாமியாய் -அற்புதனான அனந்த சயனனைக் குறித்து
அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என் கொலோ இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள்கையனே சடங்கார் வாய் அடக்கிட உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே–
என்று விண்ணப்பம் செய்து அருள

ஒண் சங்கதை வாள் ஆழியானும் –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் -என்கிறபடியே
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தனுமாய்ப் பெரிய திரு வனந்த ஆழ்வான் மேல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் மெல்லடி பிடிக்கும் படி கண் வளர்ந்து அருளும் படியை அனைவரும் கண்டு
அனுபவிக்கும் படி ஆழ்வாருடைய திருமேனியில் ப்ரத்யக்ஷமாக்கி இவருக்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணி அருள
இவரும் ஸாரூப்யத்தைப் பெற்று எல்லாரும் காணலாம் படி எழுந்து அருளி இருக்க
முன்பு கர்ஹித்த சடங்கிகள் அடைய ஆழ்வாருடைய ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிற எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
இவர் உரஸ்ஸிலே ப்ரத்யக்ஷமாக சேவித்துத் திருவடிகளிலே சாதாரமாக சாஷ்டாங்க ப்ரமாணத்தைப் பண்ணி ஷமை கொண்டு
ஆழ்வாரை ப்ரஹ்ம ரதம் பண்ணி உபலாளித்து ஷமாமிக்கு லஷ்யம் ஆகாமல் திருமால் அடியார்களைப் பூசிக்க
நோற்று க்ருதார்த்தரானார்கள் –
தத் அநந்தரம் இவரும் அவர்களுக்கு பஹு பிரகாரமாக ஞான பிரதானம் பண்ணி
பஹு வித கிருபை செய்து அருளி வாழ்வித்து செழு மா மணிகள் சேரும் திருக் குடந்தையை நோக்கி எழுந்து அருளினார்

அநந்தரம் நிஜ ஸம்புட ஸதங்களைத் திருக் காவேரீ பய ப்ரவாஹத்திலே ப்ரஷேபிக்க –
நிரவ க்ரஹ ப்ரவாஹத்தாலே நிஜ ஸம்புட ஸதங்கள் நீயமானங்களாய் உள்ள அளவிலே
நான்முகன் திருவந்தாதியும் திருச் சந்த விருத்தமும் என்கிற திவ்ய பிரபந்தங்கள் எதிர்த்து வந்து
ஆழ்வார் திருவடிகள் அண்டையிலே இருக்க
அவற்றை எடுத்துக் கொண்டு ஆராவமுதாழ்வாருடைய ஏரார் கோலத்தையும் கண்டு
அவ்வனுப ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்று
விண்ணப்பம் செய்ய ஆராவமுதாழ்வாரும் அப்படியே உத்யோகிக்க
அந்த ஸுலப்ய குணத்துக்குத் தோற்று வாழி கேசனே என்று மங்களா சாசனம் பண்ண
எம்பெருமானும் அப்படியே உத்தான சாயியாய் அருள
அப்படியான விக்ரஹத்தை த்யானம் பண்ணிக்க கொண்டு யோகத்தில் -2300-சம்வத்சரம் எழுந்து அருளி இருந்தார் –
இப்படி திரு மேனியுடன் அன்ன ஆஹார வர்ஜிதராய் ஷீர ஆஹார தாரகராய் -4700-சம்வத்சரம் பகவத் அனுபவம்
பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்து
ஆழ் பொருளைச் சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து -என்று நான்முகன் திருவந்தாதி -திருச் சந்த விருத்தம் -என்கிற
திவ்ய பிரபந்தங்களைப் பரம சாத்விகராய் நாராயண ஏக பரரான முமுஷுக்களுக்குத்
தம்முடைய பரம கிருபையாலே உபகரித்து அருளி லோகத்தை வாழ்வித்து அருளினார்

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-