ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி-பிரவேசம்-

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -ஸ்ரீமத் அனந்த முக நித்ய ஸூரி பரிஷந் நிஷேவ்யமாணனாய் –
அவாப்த ஸமஸ்த காமனாய்-அகில மங்கள குண ஸ்வரூபனான சர்வேஸ்வரன்

ஷயந் தமஸ்யா ரஜஸ்ய பராகே-என்றும்
த்ரிபாத் ஸ்யாம்ருதந்திவி -என்றும்
தத் அக்ஷரே பரமே வ்யோமன் -என்றும்
யோ அஸ்ய அக்ஷரா பரமே வ்யோமன் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -என்றும்
சகல ஜகத்தித அனுசாசன ப்ரவ்ருத்தங்களான நிகில நிகமாந்த சஹஸ்ரங்களிலும்

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா சார்த்தஞ்ச ஜகத்பதி –ஆஸ்தே விஷ்ணுர் சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -என்றும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்றும்
அத்யர்க்க அநல தீப்தந்தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந ஸ்வயைவ பிரபா பாராஜன் துஷ் ப்ரேஷந்தேவதா நைவ -என்றும்
ஆக்ரீடா விவிதா ராஜன் பத்மின் யஸ்சாமலோதகா -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந-என்றும்
காலம்சபசேத யத்ர நகாலஸ் தத்ரவை பிரபு -என்றும்
கலா முஹுர்த்தாதி மயஸ் சஹாலோ நயத் விபூதி பரிணாம வேது –என்றும்
அண்டகோஸாத் சாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்திதோ அஹம் பரமே வ்யோமன் அப்ராக்ருத சரீரவான் -என்றும்
யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமந்த்ருவம் -யத் பதம் ப்ராப்ய தத்வஞ்ஞா முச்யந்தே சர்வ கில்பிஷை -என்றும்
அணடேப்ய பரதோ நித்யம் த்ரிபாதேந விராஜதே –இதரேணது பாதேந பிராக்ருதே அண்டே விராஜதே –என்றும்
இத்யாதியான யோக யாஞ்ஜ வல்க்ய பஞ்சம வேத புராண ரத்ன சமுதஞ்சித ப்ராமாண்ய பாஞ்சராத்ராதி வசன சஞ்சயங்களிலும்

மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்களாலே
நலம் அந்தமில் நாடு -என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு திரு நாடு -என்றும்
மாக வைகுந்தம் -என்றும்
தெளிதாகிய சேண் விசும்பு -என்றும்
இத்யாதி வாக்ய சதங்களிலும் அறுதியிடப்பட்ட அளவிறந்த ஏற்றத்தை உடையதாய்

குணா பிரதானம் புருஷ பரம் பதம் பராத்பரம் ப்ரஹ்ம ச தேவி பூதய–என்றும்
பரம யோகி வாங் மனசா அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ -என்றும்
நிரதிசய வைகுண்ட நாதா -என்றும்
காலாதி காதவ பரா மஹதீ விபூதி –என்றும்
யத்தூரே மனசோ யதேவ தாமஸ பாரே யதத் யத்புதம் -என்றும்
சர்வ பூர்வ தேசிக ஸ்தோம ப்ரசஸ்தமாய்

இப்படி வேதாந்தங்களாலும் -ருஷிகளாலும் -ஆழ்வார்களாலும் -ஆச்சார்யர்களாலும் –
ஏக கண்டமாகப் ப்ரதிபாதிக்கப் பட்ட பிரபா அதிசயத்தை உடைய பரம பதத்திலே

பிரகாரைஸ் ச விமநைஸ் ச சவ்தை ரத்ன மயைர் வ்ருதா-என்றும்
மணி தோரண சித்ராட்யா விசித்திர த்வஜ சாலிநீ (மாலு நீ –பாட பேதம்)-என்றும்
கோடி வைஸ்வாநர ப்ரயக்ருஹ் பங்க்தி பிரா வ்ருதா –என்றும் சொல்லுகிறபடியே
கொடி யணி நெடு மதிள்களையும் கோபுரங்களையும் உடைத்தான திருப் படை வீட்டிலே
மணி மாட மாளிகைகளாலே சூழப் பட்ட செம்பொன் செய் கோயிலிலே

சஹஸ்ர தூணே விசித்ரே த்ருட உக்ரே யத்ர தேவாநா மதி தேவ ஆஸ்தே -என்றும்
மத்யேது மண்டபே திவ்யே ராஜா ஸ்தானம் மஹோச்ச்ரயம் –மாணிக்ய ஸ்தம்ப சாஹஸ்ர ஜுஷ்டம் ரத்ன மயம் ஸூபம் —
நித்ய முக்தைஸ் சமா கீர்ணம் சாம கான உபஸோபிதம் அதீவ -தத் சதா பூர்ணம் ( பதம் புண்யம் -பாட பேதம் )-என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து -என்றும் சொல்லப்பட்ட
ஆனந்த ஏக ஆர்ணவமான திரு மா மணி மண்டபத்திலே
பர்யங்க வித்யாதி ப்ரத்யோதித அநவத்யா மஹாத்ம்யத்தை உடைய திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே

உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -கோப்புடைய சீரிய சிங்காசனத்தில்
ஹிரண்மயே பரே கோசே விரஜம் ப்ரஹ்ம நிஷ்களம் தச்சுப்ரம் ஜ்யோதிஷாஞ் ஜ்யோதிஸ் தத்யதாத்ம விதோ விது-என்றும்
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோபாந் திகுதோயம் அக்னி –
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி -என்றும்
தீவி ஸூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பத் உத்திதா யதிபாஸ் சத்ருசீ சாஸ்யாத் பாசஸ் தஸ்ய மஹாத்மந-என்றும்
ஸ்ரக் வஸ்திர ஆபரணைர் யுக்தம் ஸ்வ அநு ரூபைர் அநூபமை -சிந்மயைஸ் ஸ்வ பிரகாஸைஸ் ச அந்யோந்ய ருசி ரஞ்ஜிதை -என்றும்
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம் -என்றும்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்றும் சொல்லுகிறபடி
நிரவதிக தேஜோ ரூபமாய் –சதைக ரூபமாய் நித்ய சித்த பரமேஷ்ட்யாதி பஞ்ச உபநிஷந் மயமாய்
ஸ்வ அனுரூபமாய்ச் சிந் மயமாய் விளங்குகிற கிரீடாதி நூபுர அந்தமான
திவ்ய ஸ்ரக் வஸ்திர ஆபரண பூஷிதனாய்
ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் மெய்க்காட்டுகிற திவ்ய ஆயுதங்களால் தீப்யமானனாய்

நிரதிசய ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனாதி அபரிமித உதார குண கண நிதியான
திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய்
இவ்வடிவு அழகு அடங்க காட்டில் எரித்த நிலா வாகாமே
பிருஹச் சரீரோபிவிமாந தேஹோ யுவா குமாரத்வம் உபேயிவான் ஹரி ரேமே ஸ்ரீயாஸ்ஸு
ஜெகதாஞ் ஜநந்யா ஸூஜ்யோத்ஸ் நயா சந்த்ர இவாம்ருதம் ஸூ -என்றும்
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள் என்றும் சொல்லுகிறபடி இரண்டு அட்டத்திலும் இருந்து அனுபவிக்கிற
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல வாயாற் கொழுந்துக்கும் கேள்வனாய்க் கொண்டு
ஸ்ரீ பூமி நீளா தேவிமாருடன் வீற்று இருந்து
இப்படி கண்ணன் விண்ணூரான வைகுண்ட மா நகரிலே திவ்ய போகம் நடவா நிற்க

அச்சேர்த்தி அழகைத் தலை நீர்ப்பாட்டிலே கண்டு அனுபவித்து நிர்ப்பர ஸ்துதி பண்ணி
நம-என்பது
ஜிதம் -என்பது
பல்லாண்டு -என்பதாய் -அக்ரமமாகப் பிணங்கி அமரர் பிதற்றுமது கண்டு
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை என்கிறபடியே
அஸ்தாந ரஷா வயசனிகளாய் -தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரராய்
ஸூரயோ நித்ய சம்சித்தாஸ் ஸர்வதா சர்வ தர்சின -என்கிறபடியே
முடியுடை வானவரான அயர்வறும் அமரர்களாலும் –
ஸூர்ய கோடி பிரதீ காசா பூர்ணேந்த்வ யுத சந்நிபா யஸ்மின் பதே விராஜந்தே
முக்தாஸ் சம்சார பந்த நாத் -என்னும்படி -கரை கண்டோராய்
அனந்த வைனதேயாதிவத் அத்யந்த அந்தரங்கரான அனந்த முக்த ப்ருந்தங்களாலும்
அனவரத பரிச்சர்யமான சரண நளினனாயக் கொண்டு

ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான் ஈஸ்வரந்தம் விஜா நீமஸ் ச சம்புஸ் ச பிரஜாபதி –
என்கிற வேண்டற்பாடு தோன்ற
ஏழு உலகும் தனிக் கோல் வீற்று இருந்து -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய
திருவரங்கச் செல்வனார் -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதி நிர்வாஹனாய்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் என்கிறபடியே கண்ட காட்சியில் தான் உபய விபூதி நிர்வாஹனானமை தோற்ற எழுந்து அருளி இருந்து
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஆனந்த ஞானானந்த ஏக ஸ்வரூப -என்கிறபடியே தானும் நிரதிசய ஆனந்த உக்தனாய்
அயர்வறும் அமரர்கள் என்கிறபடியே நித்ய அசங்குசித ஞானராய் இருந்துள்ள அனந்த கருட விஷ்வக்ஸேன பிரமுகரான நித்ய ஸூரி களையும்
இயக்கெலாம் அறுத்து -என்கிறபடியே நிவ்ருத்த சம்சாரருமாய் அசங்குசித ஞானருமாய் அந்த நித்யரோபாதி லப்த கைங்கர்யருமான முக்தரையும்
அந்தமில் பேர் இன்பத்து அடியர்-என்னும்படி ஆனந்திப்பித்துக் கொண்டு இருக்க போரா நிற்க

இவர்களோபாதி சம்சாரிகளும் நம்மை அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதி காரித அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷதைக ரதி ரூப நித்ய நிரவத்ய நிரதிசய ஆனந்த ரூபமத் கைங்கர்யம் ஆகிற மஹா சம்பத்தைப் பெற்று
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து இருப்பதே என்று
மிகவும் வியாகுல அந்தக்கரணனாய் அங்குத்தை அனுபவங்கள் ஒன்றும் உண்டது உருக்காட்டாதே
ச ஏகாகீ ந ரமேத-என்கிறபடியே அவன் தனியரைப் போலே போர நொந்து இவர்கள் கரண களேபர ஸூந்யராய்
லூந பஷ இவாண்டஜ-என்கிறபடியே இறகு ஒடிந்த பஷி போலே இருக்கிறபடியைக் கண்டு
கரண களேபரைர் கடாயிதுந் தயமாந மநா -என்றும்
பல்லுயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே -என்றும் சொல்லுகிறபடி பரம தயாளுவாய்க் கொண்டு
அகில ஆத்மாக்களுக்கும் கரண களேபர பிரதானம் பண்ணி அருள-இவர்களும்

விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும்–பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா -என்றும்
நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று -என்றும்
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை -என்றும்
தேனேய் மலரும் திருப்பாதம் என்றும்
துயரறு சுடரடி என்றும் சொல்லுகிறபடி
ஸ்வ சரண கமல ஸமாச்ரயணத்துக்கு உறுப்பாகக் கொடுத்த கர சரண த்வய சங்கா தாத்மகமான சரீரத்தைக் கொண்டு
அவன் நினைவின் படி செய்யாதே
சமித்தை தறிக்கக் கொடுத்த கத்தியைக் கொண்டு பசுவின் வாலைத் தறிப்பாரைப் போலேயும்
களை எடுக்கக் கொடுத்த கோலைக் கொண்டு கண்ணைக் கலக்கிக் கொள்வாரைப் போலேயும்
ஆறு நீந்தக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க அது செய்யாதே
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவார் போலேயும்
ஆக்கையின் வழி உழன்று சப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கர்ம ப்ரவாஹத்தாலே
பிறவி என்னும் பெரும் கடலிலே புக்கு அநர்த்தப் படுகிறபடியைக் கண்டு

நல் வழி கண்டு நடக்கைக்கு உடலாக
சாஸநாச் சாஸ்திரம் -என்றும்
ஹர்த்துந் தமஸ் சத சதீச விவேக்து மீ சோமாநம் ப்ரதீபமிவ காருணி கோததாதி–என்றும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள் செய்து -என்றும்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகப் பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றும்
சொல்லுகிறபடியே தன் கிருபையாலே ஸாஸ்த்ர பிரதானம் பண்ணின இடத்திலும் அதன் படி செய்யாதே

ஈஸ்வரோஹம் அஹம் போகீ ஸித்தோ அஹம் பலவான் ஸூகி ஆட்யோ அபி ஜனவா நஸ்மிகோ அந்யோ அஸ்தி சத்ருஸோமயா -என்றும்
யோ அந்யதா சந்தமாத்மாந மந்யதா பிரதிபத்யதே –கிந்தேந ந க்ருதம் பாப்பம் சோரேண ஆத்ம அபஹாரிணா-என்றும்
கொல்வன முதலா வல்லன முயலும் –என்றும் சொல்லுகிறபடியே அகில பாப ஹேதுவாய் ஸ்வ ஸ்வாதந்தர்ய ரூபமான
ஆத்ம அபஹாரத்தைப் பண்ணி அநாதி கர்ம வாசனா தோஷ தூஷித்த அந்தக்கரணாய் அபேத ப்ரவ்ருத்தராய்
இருக்கிற படியைக் கண்டு ஓலைப் புறத்துச் செல்லாத நாட்டை எடுத்து விட்டுக் குறும்பு அறுக்கும் ராஜாக்களைப் போலே
சர்வேஸ்வரனும் நாமே போய் இவர்களை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வர வேணும் என்று
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திவ்ய அவதாரமாக அவதரித்துப் படாதன பட்டுத் திருத்தப் பார்த்த இடத்திலும்

ஆஸூரிம் யோநிமா பந்நா மூடா ஜென்மநி ஜென்மநி மாம் அப்ராப்யது கௌந்தேய ததோ யாந்த்யத மாங்கதிம் -என்றும்
அவஜா நந்தி மாம் மூடாம் மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஸ்வரம் -என்றும்
சொல்லுகிறபடியே சஜாதீய பிரதிபத்தியாலே அவிஞ்ஜை பண்ணி எதிர் அம்பு கோப்பாராய்ப்
பல பல நாழம் சொல்லிக் கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வைது
வல்லவா பழித்து வாக் துருத்தங்கள் பண்ணுவாராய் ஆஸூர ப்ரக்ருதிகளாய்த் தன்னை வந்து கிட்டாமை அன்றிக்கே
அஹம் மே என்று எதிரிட்டுக் கொண்டு அதமமான கதிகளிலே விழுகிறபடியைக் கண்டு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த தனியனாகையாலே விசஜாதீயரான நமக்கு இது சாத்தியம் அன்று என்று பார்த்து
பார்வை வைத்து மிருகம் பிடிப்பாரைப் போலே மனுஷ்ய சஜாதீயரான ஆழ்வார்களை இடுவித்து

ஜகத்தை திருத்தி அருள வேண்டும் என்று பார்த்து அருளி ஸ்ரீ வத்ஸா ஸ்ரீ கௌஸ்துப ஸ்ரீ வைஜெயந்தி வனமாலைகளையும் —
ஸ்ரீ பூமி நீளை களையும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களும் அனந்த கருட விஷ்வக் சேந ப்ரப்ருதிகளையும் பார்த்து
நீங்கள் போய் லீலா விபூதியில் நாநா வர்ணங்களிலும் அவதரித்து அகில ஆத்ம உத்தாரணம் பண்ணுங்கோள் என்று நியமித்து அருள –
அவர்களும்
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிச–என்றும்
தாம்ரபரணீ நதி யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவிரி ச மஹா பாகா பிரதீஸீச ஸரஸ்வதீ-என்றும் சொல்லுகிறபடியே
இந்நதிகளின் சமீபங்களான த்ரமிட பூ பாகத்திலே நிமக்நரை உயர்த்த நாநா வர்ணங்களில் வந்து அவதரிக்க
சர்வேஸ்வரனும் அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி அவர்கள் முகேன
சர்வாதிகாரமான த்ரமிட வேத ரூப திவ்ய பிரபந்தங்களை பிரகாசிப்பித்து அருளினான்
எங்கனே என்னில்-

பிரவேசம் முற்றிற்று–

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: