ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–முதல் ஆழ்வார்கள் வைபவம் –

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————–

பொய்கையாழ்வார் வைஙகவம்
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதங்கா சார யோகி நம்
கலயே யஸ் ஸ்ரீ யபத்யே ரவிந்தீபம கல்பயத்
முகுந்தஸ்ய முகோல்ல சமூல வாக் ஜால மூர்ச்சிதம்
முநி முக்யம் சரோஜா தம் முக்தி மூலம் உபாஸ்மஹே
ஆஜ்ஞாதி ஸ்ரீ சந்த நேத்வா பராக்யே சித்தார்த் யாக்யே வத்ஸ ரேமா சி சேஷ ஸூக் ல அஷ்டம்யாம் பவ்மவாரே
ஸூபர்ஷே விஷ்ணோர் ஜென்ம பிரபகா சாரயோகீ
முதல் ஆழ்வார்கள் மூவரிலும் வைத்துக் கொண்டு ப்ரதமம் பொய்கை ஆழ்வார்
க இதி ப்ரஹ்மணோ நாமதேன தத்ராஞ்சி தோ ஹரி -தத காஞ்சீதி விக்யாதா புரீ புண்ய விவர்த நீ -என்கிறபடியே
ககார வாச்யனான ப்ரஹ்மாவினால் சர்வேஸ்வரன் அஸ்வ மேதத்தால் ஆராதிதனான ஸ்தலமாகையால் காஞ்சீ புரம் என்று
ப்ரக்யாதமாய்ப் புண்ய விவர்த்தகமான -கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சியிலே –
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாவில் பொற்றாமரைப் பொய்கையில் காஞ்சந பத்ம கர்ப்பத்தில்
ஐப்பசி மாசத்தில் விஷ்ணு நக்ஷத்ரமான ஸ்ரவண நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சமாய் அவதரித்து அருளினார்
ஹேமாப்ஜி நீஹேம சரோஜ கர்பாத் ஸ்ரீ பாஞ்ச ஜந்யோஸ் ஜனி தத்ர திவ்ய யோகீ தாரா ஹரேராஸ்வயுஜாக்ய மாஸே
ஸமஸ்த ஜீவாவந கர்ம ஹேதோ –என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

பூதத்தாழ்வார் வைபவம்
மல்லா புரா வராதீசம் மாதவீ குஸூமோத் பவம்
பூதந் நமாமியோ விஷ்ணோ ஞான தீபம கல்பயத்
வந்தே பூதாக்ய யோகீந்த்ரம் வரேண்ய குண சம்பதம்
லஷ்மீ ஸஹாய கருணா ப்ராப்த ப்ரமிதி வைபவம்
அநந்தரம் -மாதவன் பூதங்கள் -என்று சொல்லலாம்படியான பூதத்தாழ்வார் –
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தலை சயனம் என்று அனுசந்தேயமான திருக் கடல் மல்லையில்
பரிமள பிரசுரமாய் திவ்யமாய் இருபத்தொரு மாதவிப் பூவிலே அந்த ஐப்பசி மாசத்தில் அவிட்ட நக்ஷத்ரத்திலே
ஸ்ரீ கௌமோதகீ கத அம்சராய் அவதரித்து அருளினார்
மாஸே ததஸ்மிந் வஸூபே ஜநிஷ்ட பாரே சமுத்ரம் புரி மல்லநாம்ந்யாம் -லதா க்ருஹாந் தாத்புவி பூத நாமா
கௌமோதகீ சக்தி மாயோ முனீந்திர-என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லப் பட்டது இறே

பேயாழ்வார் வைபவம்
தந்மாசி ஜாதம் சத தார காயம் மயூர புர்யாம் மணி கைரவாந் தாத் பக்த்யா
மஹாந்தம் மஹதாஹ் வயந்தம் ஸ்ரீ நந்தகாம் சம் ஸ்ரீத பக்தி ரூபம்
த்ருஷ்ட்வா – நிதி ஹோவாச -ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா
மயிலாதிபம் கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹத்வயம் ஆஸ்ரயே
பத்மா ரமண பாதாப்ஜ ப்ரேம ப்ராந்த்யா மநோஜ்ஞயா
ப்ராந்த யோகீதி விக்யாதம் முனிம் வந்தே குணாம்புதிம்
அநந்தரம் பேயாழ்வார் -தேனமர் சோலை மாட மா மயிலையில் ஆதி கேசவப் பெருமாள் கோயில் திருக் கிணற்றில்
உண்டானதொரு செவ்வல்லிப் பூவிலே அந்த ஐப்பசி மாசத்தில் சதய நக்ஷத்ரத்திலே ஸ்ரீ நந்தக அம்சராய் அவதரித்து அருளி
நியத புலகி தாங்க நிர்ப்பர ஆனந்த பாஷ்பா களித நிகில சங்கா கத் கத ஸ்தோத்ர கீதி அம்ருத லஹரி வர்ணா ஹர்ஷ
ந்ருத்தோப பன்னா விகத நரக பீதிர் விஷ்ணு பக்திர் விபாதி – என்கிறபடியே
விஷ்ணு பக்தியை உடையராய் -பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -என்கிறபடியே பகவத் அனுபவ அதிசயத்தாலே
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் -என்றும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அனுபவ பாரவஸ்யம் அல்லாத ஆழ்வார்களைக் காட்டில் இவர்க்கு மிக்கு இருக்கையாலே
பேயாழ்வார் என்றத்தை நிரூபகமாக உடையராய் இருப்பர்
தன்மாச ஏவ ஆவிரபூத் விபஸ்சித் ப்ராசேதா சர்ஷேத மயூர புர்யாம்-மஹா பிதா நோ மணி கைரவாந்தாத்
ஸ்ரீ நந்தகாத்மாஸ்ரீத பக்தி ரூப -என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே

முதல் ஆழ்வார்கள் வைபவம்
இப்படி இம்மூவரும் யோனி ஜாதர் அன்றிக்கே புஷ்ப ஜாதராய் வந்து அவதரித்து எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தால்
முக்குணத்து இரண்டு அவை அகற்றி என்கிறபடியே ராஜஸ தாமச ரஹிதராய்
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பயாபயே -பந்தம் மோக்ஷஞ்சயா வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –என்று
சொல்லுகிற சத்வ குணமாகிற ஒன்றிலே ஒன்றி நின்று
தாஸா வயமிதி ப்ரஹிமந் மாநி நோ லோக வர்ஜிதா -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வேஹ் யாத்மாந பரமாத்மாந நான்யதா லக்ஷணந் தேஷாம் பந்த மோஷே ததைவச-என்றும்
ஸ்வ த்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதாஸ்மர–என்றும்
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷோஹி பரமாத்மந –என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வதஸ் சித்த பகவத் தாஸ்ய ரசத்தை உடையராய் அத்தாலே உண்டான சம்யக் ஞான பக்தி வைராக்யங்களை உடையராய்
புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத-என்கிறபடி அன்ன பாநாதி வர்ஜராய்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -என்று
பால்யாத் ப்ரப்ருதி பகவத் குணைக தாரகராய் இருக்கிற இவர்கள்

சம்சாரிகள் தங்களைப் போல் அன்றியே
உண்டியே உடையே உகந்து சப்தாதி விஷயங்களிலே அதி ப்ரவணராய் தீதில் நன்னெறி நிற்க அல்லாதது செய்து
பகவத் விமுகராய் இருக்கையாலே
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது -என்கிறபடியே அவர்களொட்டை ஸஹ வாசம் தங்களுக்கு துஸ் சஹமாய்
ஒரு நாள் இருந்த இடத்திலே ஒரு நாள் இராமே க்ராம ஏக ராத்ரராய் இவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதே
தனித்தனியே வர்த்திக்கிற காலத்திலே-சர்வேஸ்வரனும்
மமாத்மா ஞானி நாம் வர -என்றும்
ஞானீத் வாத்மைவ மேமதம் -என்றும் சொல்லுகிற திரு முகப்படியே
தனக்கு ஆத்ம பூதரான இவ்வாழ்வார்களைக் கொண்டு ஜகத்தைத் திருத்த வேணும் என்று நினைத்து
அநாதி மாயயா ஸூப்த–என்கிறபடியே அநாதய விதய அபிபூதராய்ப் போருகிற சம்சாரி சேதனருக்கு
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஸ்வ விஷய ஞான பக்திகளை உண்டாக்குகைக்காக ஒரு நாள் ராத்திரியிலே
இம் மூவரையும்

சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூரிலே ஒரு இடை கழியிலே யாத்ருச்சிகமாக சங்கதராக்க இவர்களும்
வைஷ்ணவோ வைஷ்ணவந் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி -என்கிறபடியே அந்யோன்ய வந்தன பரராய்க் கொண்டு
நீர் யார் நீர் யார் என்று ஒருவரை ஒருவர் கேட்க
பகவத் சேஷ பூதம் அஹம் -அநந்யார்ஹ சித பர -என்றும்
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய –என்றும்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்றும்
ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷோஹி பரமாத்மாநி -என்றும்
இத்யாதிகளாலே
தந்தாமுடைய ஸ்வரூப நிர்த்தேச பிரசங்க வ்யாஜேந போதயந்த பரஸ்பரம் பண்ணிக் கொண்டு இரா நிற்கச் செய்தே –
அவ்வளவில் எம்பெருமான்

அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண பிரபாயதா-என்று இருக்குமவன் ஆகையால்
இறையும் அகல கில்லாத பிராட்டி ஸஹிதனாய்க் கொண்டு கூராழி வெண் சங்கு ஏந்தி
துளஸீ காந நம் யத்ர யத்ர பத்ம வநாநிச வசந்தி வைஷ்ணவா யத்ர தத்ர சந்நிஹிதோ ஹரி -என்கிறபடியே
செந்தமிழ் பாடுவார் ஆகிற இவர்கள் அருகே தழுவி முழுசிப் புகுந்து நெருக்கி நிற்க –
இவர்களும் நம்மை ஒழியவும் காமர் பூங்கோவல் இடைக் கழியைப் பற்றி நிற்கிறார்கள் உண்டோ என்று பார்க்கைக்காக
வெய்ய கதிரோன் விளக்கு ஏற்றியும்
ஞானச் சுடர் விளக்கு ஏற்றியும்
உணர்வு என்னும் ஒளி விளக்கு இன்றியும் பார்த்து அருளி
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
ஸ்ரீ மன் நாராயணனுடைய மைப்படி மேனியையும் -செந்தாமரைக் கண்ணையும் பரம வைதிகரான இவர்கள்
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே கண்டு அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி அதிசயம் உள் அடங்காமல் பாலேய் தமிழர் என்று சொல்கிற நல் தமிழர் ஆகையால்
வையம் தகளி
அன்பே தகளி
திருக் கண்டேன்
என்கிற திவ்ய பிரபந்தங்களை சம்சாரிகள் அதிகரித்து அஞ்ஞான அந்தகாரம் நீங்கி உஜ்ஜீவிக்கும் படி
ஞானத் தமிழாக அருளிச் செய்து பிரபந்தீகரித்து அபகரித்து அருளி ஜகத்தை வாழ்வித்து அருளினார்கள் –

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: