ஸ்ரீ ரஹஸ்ய த்ரயார்த்தங்கள் /பொன்றாத நல் நெறி – சரணாகதி- மஹிமை–

ஸ்ரீ ரஹஸ்ய த்ரயார்த்தங்கள்
ஆச்சார்யர்கள் க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் ஆத்ம உஜ்ஜீவநார்த்தமாகவே அருளிச் செய்கிறார்கள்
இலவசம் -இலை வசம் -வெற்றிலை மேல் வைத்து தானம்

ஞான மயம் -அத்வயம்-ஒப்பார் மிக்கு இல்லா அத்விதீயம் –
பரமாத்மா -பல ஆத்மாக்கள் –
இரண்டாம் தத்வம் உண்டு தனக்கு நிகர் இல்லை —
ப்ரஹ்மம் -பெரியவர் பெரியவர் ஆக்குபவர் –
பகவான் ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -இத்யாதி குண விசிஷ்டன் –
இப்படி ஐந்து விசேஷணங்கள் -பாகவதம் விலக்கும்

அவதார பிரயோஜனங்கள்
கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார் ஆதலின், ‘என் கோவிந்தன்’ என்கிறார்.
‘ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோ’ இறே

நடுவில் விசேஷண பூஷணம் தாமோதர பந்தம் -நம பதம் -அவளும் -உகாரார்த்தம் –
தன்னடியார் சிதகுரைக்குமேல் என்று அவள் விலக்கினாலும் விடாத திருட தீக்ஷணம் –
மத்யமாம் பதார்த்தம் -சீர்மை அனுஷ்ட்டித்து ஏறிட்டுக் கொண்ட -ஆஸ்ரித பாரதந்தர்யம்

தந்தை கால் விலங்கு அற

———————————-

ஏக ந ஏக -சஹஸ்ர நாமம் /ப்ரஹ்மம் விபு -காற்று விபு -நம்முடன் கூடி இருக்கும் -விசிஷ்டம் –
கூடி இருந்தும் அறிந்து கொள்ள முடியாதபடி திரோதானம் மாயா
அந்தர்யாத்மா ப்ராஹ்மணம் -சரீராத்மா பாவம் -விசிஷ்டாத்துவை பிரதிதந்தரம்
கர்ம உபாதி ஆத்ம சரீரத்துக்கு உள்ளே -போலே அன்றே கருணையால் ப்ரஹ்மம் இருப்பது -வ்யாப்யக தோஷம் தட்டாதே
ச விசேஷ ப்ரஹ்மம் -நிர் விசேஷ ப்ரஹ்மம் -அப்ருதக் ஸித்தம் -பிரகாரம் பிரகாரி பாவம்
அஹம் ஹரி சர்வாமிதம் ஜனார்த்தன -இத்யாதிகளின் படியே
நிற்கின்றது எல்லாம் நெடுமால்-நான்முகன் திருவந்தாதி -54- -என்று
ப்ராஹ்மாத்மகமாய் தோன்றும் பிரகாரத்தைச் சொன்னபடி –

மூன்று எழுத்து -அதனை -மூன்று பதம் -மூன்று எழுத்து அதனால் ந்ருத்த சாஸ்த்ரத்தால் – –
மூன்று எழுத்தை ஏன்று கொண்டு -அர்த்தம் அறிந்தவர் –
நிருத்தம் -நிர் உக்தம் -யுக்தமான அர்த்தம் சொல்லும் – மூன்று எழுத்தின் அர்த்த பொருள் -விளக்கும் அங்கம் –
காரணத்வம்- ரக்ஷகத்வம் -சேஷி -ஸ்ரீ யபதி -நான்கும் அகரார்த்தம்
உகாரம் -அவதாரணம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அவனுக்கே சேஷன் –
உகாரம் -அவனுக்கே -என்றும் பிராட்டி என்றும் -அர்த்தம் -பொய்யோ என்னும் இடையாளுடன் இளையாளுடன் போனான்

அகாரம் மூன்று அர்த்தம் / பிரணவம் மூன்று அர்த்தம் / திருவந்தார்த்தம் மூன்று அர்த்தம் –
எவ்வாறு நடந்தனை-நடந்து காட்டிக் காட்டுகிறார்கள்
முதலியாண்டான் -லஷ்மணன் போலே கூட சென்று கைங்கர்யம் /
கூரத்தாழ்வான் பரத்தாழ்வான் போலே வைத்த இடத்தில் இருந்து கைங்கர்யம் –
வடுக நம்பி -சத்ருக்ன ஆழ்வான் போலே தேவு மற்று அறியேன் என்று இருந்து கைங்கர்யம் –
வேடன் வேடுவிச்சி வழி காட்டி -ராமனுக்கும் ராமானுஜருக்கும் –

நம்பியும் எம்பியும் -பூர்ணன் எம்பிரான் -எம்பெருமானார் என்றபடி

ரஹஸ்ய த்ரயமும் நமக்கு தாரக போஷக போக்யங்கள்-
இவை மூன்றும் நமக்கு ஞான அனுஷ்டான பல நிதாநங்களாய்க் கொண்டு -தாரக போஷாக போக்யங்கள் –
வ்யக்தம் ஹி பகவான் தேவ சாஷான் நாராயண ஸ்வயம்
அஷ்டாஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்த்ததே –என்கிறபடியே
தேசிக ஜிஹ்வையில் இருந்து சிஷ்ய ஹ்ருதய குஹாந்தகாரத்தைக் கழித்து பர சேஷ தைகரசமான பரிசுத்த ஸ்வரூபத்தை வெளியிட்டு
சத்தா லாபத்தை பண்ணுகையாலே திருமந்தரம் தாரகம் –
சரம உபாயத்தில் ப்ரவர்த்திக்கும் படியான ஞான விசேஷ உபசய ஹேதுவாகையாலே ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி
உபாய உபதேச பர்யவசானமான சரம ஸ்லோஹம் போஷகம் –
சக்ருத் உச்சாரணத்தாலே பரம புருஷ ஹேதுவாய்க் கொண்டு சதா அனுசந்தானத்தாலே க்ருதார்த்தன் ஆக்குகையாலே த்வயம் போக்யம் –
அஷ்டாஷர சரீராங்க பிரணவாத்யஷரேண து -அகாரேண அகிலா தாரா பரமாத்மா அபிகீயதே –
சமஸ்த சப்த மூலத்வான் அகாரஸ்ய ஸ்வ பாவத-சமஸ்த வாச்ய மூலத்வாத் ப்ரஹ்மணே அபி ஸ்வ பாவத –
வாச்ய வாசக சம்பந்த தயோரார்த்தாத் ப்ரதீயதே –என்று
ஸ்ரீ வாமன புராண வசனத்தாலே சர்வ வாசக ஜாத பிரக்ருதியான பிரதம அஷரத்துக்கு
சர்வ வாச்ய ஜாத பிரக்ருதியான நாராயணன் வாச்யன் என்ற பிரசித்தமான அர்த்தத்தை வேதார்த்த சங்க்ரஹத்தில் அருளிச் செய்தார் –
நாராயண–நா–ந் +ஆ /ரா -ர் +ஆ / ய -ய் +அ / ணா-ண் +ஆ / அஷ்டாஷரம் -என்றபடி
இச் சப்தத்துக்கு நம்மாழ்வார் –
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்றும்
நாரணன் மூ வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் பூர்வாபரங்களிலே சமாச த்வயத்தில் அர்த்தத்தை பிரதர்சிப்பித்தார் –

த்ரி தண்டம் -வேதங்களுக்கு -தீப ஸ்தம்பம் -தத்வ த்ரயம் -ரஹஸ்ய த்ரயம் -பத த்ரயம் – அக்ஷர த்ரயம் -அர்த்த த்ரயம் -காட்டி அருளி –

எட்டு மா மூர்த்தி என் கண்ணன் எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டுஎனும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டிரத மேலனவும் எட்டினவே –

——————————————–

“ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”
இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால் சொல்லப்பட்ட சேஷத்துவமும், -அநந்யார்ஹ சேஷ பூதன்
நமஸ்தே’ என்றதனால், நமஸ் சப்தத்தால் சொல்லப்பட்ட பாரதந்திரியமும், -மத்யமாம் பதம் போலே
விஸ்வ பாவந’ என்றதனால், நாராயண சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும்,-விஸ்வம் நார அர்த்தம்
பாவன பவிப்பிக்குமவன் -என்றவாறு
நமஸ்தேஸ்து’ என்றதனால், கைங்கர்யப் பிரார்த்தனையும், -வ்யக்த சதுர்த்தி ஆய -அர்த்தம்
ஹ்ருஷீ கேச’ என்றதனால், ‘உனக்கே நாமாட் செய்வோம்’ -ஸ்வார்த்தத்தா நிவ்ருத்தி –
த்வயத்தில் உத்தரார்த்த நமஸ் அர்த்தம் -நம் இந்திரியங்கள் வசம் உள்ளவர் என்றதால் என்கிறபடியே,
கைங்கர்யத்தால் தனக்குப் பலன் இல்லாமையும் சொல்லுகிறது.
பூர்வஜ -பக்தி உழவன் -ஆதி மூர்த்தி

——————————————————

பொன்றாத நல் நெறி சரணாகதி

தத்வம் -தன்மை -இயல்பு -உண்மைப் பொருள் –
உண்மைப் பொருளில் இருந்து உண்டாகும் காரியங்களிலும் உண்மைப்பொருள் வியாபித்து நிற்பதால்
அக்காரியங்களையும் தத்வம் எண்ணலாமே -ஆகவே தத்வ த்ரயம்
உண்மை பொருள் -என்றும் உள்ளவை -சத் -தத்வ ஞானம் -பிரபஞ்சம் -தத்வ சிந்தனை –
மெய் உணர்வு -இறை உணர்வு -இறை தர்சனம் -வேறு பாடு அற்ற ஒருமை -விசிஷ்ட ப்ரஹ்மம்
வைதிக சமயங்கள் –
சைவம் -சிவன் / வைணவம் -விஷ்ணு /சாக்தம் -சக்தி /கௌமாரம் -முருகன் /காணபத்யம் / சவ்ரம்-ஸூர்யன்

தொல்காப்பியம் -முல்லை நில தெய்வம் -மாயோன் மேய காடுறை உலகம் என்றும்
மாயோன் மேய மன் பெரும் சிறப்பில் தாவா விழுப் பொருள் பூவை நிலை –
பாம்பு படப் புடைக்கும் வல் வரிக் கொடுஞ்சிறை புள்ளணி நீள் கொடிச் செல்வன் -திரு முருகாற்றுப் படை
காந்தளம் சிலம்பில் களிறு படிந்தாங்கும் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன் -திரு முருகாற்றுப் படை
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித் திரு மறு மார்பன் போற்றிறல் சான்ற-கலித்தொகை –
ஞாலம் மூன்று அடித்தாய முதல்வன் -கலித்தொகை

சரீர சரீரீ சம்பந்தம் -இயற்கை இறைவனுள் அடங்கும் -இறைவன் இயற்கையுள் அடங்கான்-
சித் -ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஓன்று -நம்மாழ்வார்
ஈஸ்வரன் -தீதறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பு அவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் -கலியன்
பதங்கள் எல்லாமும் பிறப்பொடு இறப்பில் பரத்வமும்
ஹிதங்கள் மற்றி யாவும் நன்கு ஆராயில் வேறு இல்லை எட்டு எழுத்தால்
நிதங்களி கூர் பெருமான் நெஞ்சில் மேவி நிருதர் தம்மேல்
கதங்களும் செய்யும் பெரும் தேவியார் திருக்கண் அருளே –புருஷகாரம் -ஸ்ரீ வைஷ்ணவம் –
மத்வர் திருமாலை அடுத்து வாயுவை கொள்வர் -சத் வைஷ்ணவம்
பக்தி -அன்பின் செழுமை -பேர் அன்பு -அருளால் கொள்ளும் பித்து -அளவிலா இன்பம் தருமே –

எம நியம ஆசனங்களில் இயலாவி புலன் அடக்கம் தமது அறியும் தாரணை கடாரை யறா நினைவு ஒழுக்கம்
சமமுடை சமாதி நலம் சாதிப்பார்க்கு இலக்காகும் அமரர் தொழு அத்தி கிரி அம்புயத்தாள் ஆரமுதே —

யமம் -தீயன கைக் கொள்ளாமை / நியமம் ஒழுக்கம் இறை நம்பிக்கை உடன் நடத்தல்
ஆசனம் /பிராணாயாமம் -புலன்களை ஒருமுகப்படுத்துதல் /பிரத்யாகாரம் -புலன் அடக்கம்
தாரணை -இறை வடிவை மனசிலே பதித்தல் /த்யானம் -இடைவிடா சிந்தனை /சமாதி -இறை அனுபத்தில் மூழ்கி இன்புறுதல்

நாட்டிலும் நின் அடியே நாடுவன் நாள் தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன் சூழலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு –நிஷ்காமிய -கர்ம யோக விளக்கம் –
ஸ்தித ப்ரஜ்ஞதை -ஞான யோகம் –
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள் தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் –
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவருக்கு வானம் கொடுப்பது மாதவன்

பிரபத்தி -பிர -சிறப்பு / பத்தி -அடைதல் /எளிதான வழி -சேஷி சேஷ சம்பந்த ஞானம் ஒன்றே வேண்டுவது
ஸூவ நிஷ்டை /யுக்தி நிஷ்டை /ஆச்சார்ய நிஷ்டை /பாகவத நிஷ்டை

ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம்
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என் பால் வைத்த
காதலால் இனி வேறு எண்ணக் கடவது என் கதிரோன் மைந்த
கோதிலாதவனை நீயே என் வயில் கொணர்தி –
காரியமாக அன்றே யாகுக கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கினால் இதற்கு மேல் சிறப்புண்டோ
பூரிய ரேரும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார் எண்ணிலா அரசர் அம்மா –கம்பர் -யுத்த காண்டம்

துகில் உரிவான் அடர்ந்த ஓதில் இரு கை நறு மலர் குவிய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் வைத்தாள் –
ஆறாகி இரும் தடம் கண் அஞ்சன வெம் புனல் சோர வளகஞ் சோர வேறான துகிறகைந்த கை சோர
மெய் சோர சோர வேறோர் சொல்லும் கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அலற்றி குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ் தூற உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகினாளே –
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரைத்து அழைக்க அமரர் போற்றும்
திரு மலர் செஞ்சீர் அடியோன் திருச் செவியில் வண் மொழி சென்று இசைத்த காலை
மரு மலர் மென் குழல் மானின் மனம் நடுங்கா வகை மனத்தே வந்து தோன்றிக்
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் –வில்லி புத்தூரார் –

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினேன்

விண் தலையில் வீற்று இருந்து ஆள்வராம் மா வீடே –

வைகுந்தம் உண்மை வீடு எனத் தேறிட வல்லவர்க்குப்
பொய் குன்றும் மெய் வலிவாம் தனி வீரம் பொருந்தும் அப்பால்
செய் குன்றம் அன்ன களிற்றாளர் அஞ்சும் திறமை யுண்டாம்
பெய் குங்குமக் கொங்கை மானார் விளைக்கும் பிணக்கு அறுமே

————————-

கிடாம்பி அப்புள்ளார் -தமக்கையார் -தோதாரம்மை -என்பவரை அநந்த ஸூ ரி -என்பவர் -இவர் புண்டரீகாக்ஷ சோமயாதி என்பார் மகன் –
இவர்கள் திருக்குமாரர் -தேசிகன் -தூப்பூல் அனந்தாரியனார் தொல் புகழ் சேர் மைந்தன் -சோர்வில் தோதாரம்மை மைந்தன் –
உய்யும் வகையில் உத்தர வேதியுள் வந்து உதித்த ஐயன் இலங்கு தூப்புல் பிள்ளை –
வேங்கட மலையில் மன்னிய மணியின் கூறு என வந்து
புரட்டாசி திருவோணம் -1268-/ திருநாடு -1368-
திரு மங்கை -இவர் தர்ம பத்னி -48-வயதில் திருக் குமாரர் -வரதாச்சார்யர்
குமார வரதாச்சார்யர் -நயினாச்சார்யர் என்றும் வழங்கப் படுகிறார் –
வெள்ளைப் பரி முகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம்

—————————-

உத்தி திகழும் உரை மூன்றின் மும்மூன்றும் சித்தம் உணரத் தெளிவித்தார்
முத்தி தரு மூல மறையின் முடி சேர் முகில் வண்ணன் சீலம் அறிவார் சிலர்
உரை மூன்றின் மும்மூன்றும் -ரஹஸ்ய த்ரயார்த்த ஒன்பது பொருளும்
திருமந்த்ரத்தால் -ஸ்வரூபம் -ரக்ஷண பரம் -ரக்ஷண பலம் -மூன்றையும் சமர்ப்பித்தல் –
த்வயத்தில் -உபாயம் -பலன் -அவித்யாதி விரோதி ஒழிகை
சரம ஸ்லோகத்தால் -சரணாகதன் க்ருத்தவ்யம் -சரண்யன் க்ருத்தவ்யம் -சரணாகதனின் உத்தர க்ருத்த்யம்

வேதத் திரளின் விதி உணர்ந்தோர் விரித்து உரைத்த காதல் கதியையும்
ஞானத்தையும் கருமங்களையும் சாதிக்க வல்ல சரணா கதி தனி நின்ற நிலை

1-ஆனுகூல்ய சங்கல்பம் -சமய நெறிகளில் பிறழாமல் –இத்தால் அஹங்காரம் அழியும்
தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
உன் அருளுக்கு இனிதான நிலை யுகந்தேன்
2-ப்ராதிகூல்ய வர்ஜனம் -நெடும் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
அவை தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
3-மகா விச்வாஸம் -உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
4-கார்ப்பண்யம் -உபாயாந்தரங்களை பற்றாமல் -விநய புத்தி பிறப்பிக்கும்
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி —நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே –
5-கோப்த்ருத்வ வரணம் -அவன் தயை ஒன்றையே பிரார்த்தித்து
பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே –
மன்னிருளாய் நின்ற நிலைமை எனக்குத் தீர்த்து வானவர் தம் வாழ்ச்சி தர விரித்தேன் உன்னை –
6-ஆத்ம நிஷேபம் -தன்னை ஒப்படைத்தல் -திருப்த ப்ரபன்னர் -ஆர்த்த பிரபன்னர் இரண்டு வகை

தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணம் சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கொள்

உகக்குமவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து உறவு குணம்
மிகத் துணிவு பெற உணர்ந்து வியன் காவல் என வரித்துச்
சகத்தில் ஒரு புகல் இல்லாத் தவம் அறியேன் மதிள் கச்சி
நகர்க் கருணை நாதனை நல் அடைக்கலமாய் அடைந்தேனே

1-உகக்குமவை உகந்து -அனுகூல்ய சங்கல்பம்
2-உகவா அனைத்தும் ஒழிந்து -ப்ராதிகூல்ய வர்ஜனம்
3-உறவு குணம் மிகத் துணிவு பெற உணர்ந்து -மஹா விச்வாஸம்
4-வியன் காவல் என வரித்துச் -கோப்த்ருத்வ வரணம்
5-சகத்தில் ஒரு புகல் இல்லாத் தவம் அறியேன் -கார்ப்பண்யம்
6-மதிள் கச்சி நகர்க் கருணை நாதனை நல் அடைக்கலமாய் அடைந்தேனே-ஆத்ம நிஷேபம்

திரு மகளும் திரு வடிவும் திருவருளும் தெள்ளறிவும்
அருமை யிலாமையும் உறவும் அளப்பரிய அடியரசும்
கருமம் அழிப்பு அளிப்பமையும் கலக்கமிலா வகை நின்ற
அருள் வரதர் நிலை யிலக்கில் அம்பு என நாண் அமிழ்ந்தேனே –என்று ஆத்ம நிஷேப விளக்கம் –

முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றில் நிலையுடையார் –
1-ஆன்ம சமர்ப்பணம் -ஸூவ ஸ்வரூபத்தை ஒப்படைத்தல்
2-பர சமர்ப்பணம் -ரக்ஷணத்தை ஒப்படைத்தல்
3-பல சமர்ப்பணம் -புருஷார்த்தத்தில் கவலை அற்று இருத்தல்
இவற்றையே
எனது என்பதும் யான் என்பதும் இன்றித்
தனது என்று தன்னையும் காணாது -உனது என்று
மாதவத்தான் மாதவற்கே வன் பரமாய் மாய்ப்பதனில்
வைதவத்தான் கை வளரான் சரண் –
நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே –
ஆத்ம நிஷேபம் ஆகிற பிரபத்திக்கு இவை ஐந்தும் அங்கங்கள் -தேசிக சம்ப்ரதாயம் –
மர்கட நியாயம் -குரங்குக்கு குட்டி தாயைப் பற்றுமா போலே சிறிய முயற்சி தேவை
கோப்த்ருவ வாரணம் ஆகிற ப்ரபத்திக்கு மற்ற ஐந்தும் சம்பாவித ஸ்வபாவங்கள் -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் –
பூனை தன் குட்டியை கவ்விக் கொண்டு போவது போலே

பரமபத சோபானத்தில் பிரபன்னன் –
1-விவேகம் கொள்ளுதல்-விஷயாந்தர இன்பங்கள் சிற்றின்பம் -திருமாலின் கல்யாண குணங்களை
உணர்வதே வாழ்வின் பயன் என்று விவேகித்தல்
2-வீண் காலத்துக்கு வருந்துதல் -நெடு நாள் உழன்றமை கண்டதனால் வெறுத்து ஆரண நெறியே வெள்கி ஓட விரைவார்களே
3-ஆசை அறுத்தல் -தேன் பட்ட விஷம் போல் தித்திக்கின்ற சிறு பயன்
4-வினைகட்கு அஞ்சுதல் -கர்ம வினைகள் பிறவி சூழலில் அழுத்தும் என்கிற பய உணர்வு
5-முக்திக்கு உரிய வழிகளில் ஈடுபடுதல் -நம் திருமால் அடி இணை தின் சரணாகும் என வரித்தல் –
கடி மலராள் பிரியாத கச்சி நகர் அத்திகிரி இடமுடைய அருளாளர் இணை அடிகள் அடைந்தேனே –

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து —முகுந்தன் அடி பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இலை என நின்றனர் –
பிறருக்கு தீமை செய்யாமை -புலன் அடக்கம் -தயை -மன்னித்தல் -அறிவு -த்யானம் -உண்மை –
அஷ்ட குணங்களும் சரணாகதனுக்கு அவன் அருளால் ஏற்படும் –

உத்தர க்ருத்யம்
மாளாத வினை அனைத்தும் மாள நாம் போய் வானேறி மலர் மகளார் அன்பு பூணும்
தோளாத மா மணிக்குத் தொண்டு பூண்டு தொழுது உகந்து ஸ்தோத்திரங்கள் பாடி யாடிக்
கேளாத பழ மறையின் கீதம் கேட்டுக் கிடையாத பேரின்பம் பெறுக நாளும்
மீளாத பேர் அடிமைக்கு அன்பு பெற்றோம் மேதினியில் இருக்கின்றோம் விதியினாலே –

அளவுடையார் அடைந்தார்க்கும் அதன் உரையே கொண்டவர்க்கு
வளவுரைத் தந்தவன் அருளே மன்னிய மா தவத்தோர்க்கும்
களவு ஒழிவார் எமர் என்ன இசைந்தவர்க்கும் காவலராம்
துவள முடி அருள் வரதர் துவக்கில் என வைத்தேனே —

1-அளவுடையார் அடைந்தார்க்கும் -இத்தால் ஸூ வ நிஷ்டை -த்வயார்த்தம் அறிந்தார் நிஷ்டை

2-அதன் உரையே கொண்டவர்க்கு -யுக்தி நிஷ்டை -ஆனுகூல சங்கல்பாதி அன்னை ஒழிய போக்கற்று நிற்கிற அதிகாரமும்
அபேக்ஷித்தால் ரஷிக்கும் என்கிற விசுவாசமும் உடையராய்க் கொண்டு சரண்யன் அறியப் பூரணை பிரபத்தி கர்ப்பமான
ஆச்சார்யர் உபதேசித்த வாக்யத்தாலே தாதிமார் சொன்ன பாசுரத்தைச் சொல்லி ஸார்வ ப்வமனை சரணம் புகும் முக்தரான
சாமந்த குமாரர்களை போலே என்னுடைய ரக்ஷை எனக்கே பாரமாக ஏறி இட்டுக் கொள்ள வேண்டும் என்கை
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் எனும் விச்வாஸம்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதி மூலமே என்றால் போலே

3-அங்கங்களில் வைஸத்யம் இல்லாதார் -வளவுரைத் தந்தவன் அருளே மன்னிய மா தவத்தோர்க்கும் -இது ஆச்சார்ய நிஷ்டை –
வளவுரை தந்தவன் என்றது ஆச்சார்யரையும்
தந்தவன் அருளே மன்னிய மா தவத்தோர்-என்றது அந்த அருளையே கருதி நிற்றல் ஆகிய மா தவம் புரியும் சீடர்

4-களவு ஒழிவார் எமர் என்ன இசைந்தவர்க்கும் -பாகவத நிஷ்டையில் உள்ளவர்
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன் –என்றும்
வன்மையாவது நின் கோயிலில் வாழும் வைட்டணன் என்றும்
வன்மை என்றும் சொல்லுகிற பாகவத அபிமான -பகவத் விஷய வாசாதிகளுக்கும் தன் பக்கலிலே யாதல் -பிறர் பக்கலிலே யாதல் –
முன்பே யாதல் -பின்பே யாதல் -ஓர் உபாயத்துக்கு உண்டு -எங்கனே என்னில் இவை
உபாசனத்திலே யாதல் -ப்ரபத்தியிலே யாதல் மூட்டியும் -என்றவாறு
களவு ஒழிவார்-ஆத்துமா தன்னது என்று நினையாதார் பாகவதர்
எமர் என இசைந்தவர் -ததீய நிஷ்டர்
ஆச்சார்ய நிஷ்டனுக்கு கைமுதிக நியாயத்தாலே பல சித்தியில் சந்தேகம் இல்லை –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலையில் தாவும் ஸிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களை போலே
பாஷ்யகாரர் சம்சார லங்கனம் பண்ண அவரோடு உண்டான குடல் துவக்காலே நாமும் உத்தீரணர் ஆவோம்

———————–

ஸ்ரீ யதே -ஸ்ரீ யதே -அடையப் படுகின்றாள் -அடைகின்றாள்-
ஸ்ருனோதி -ஸ்ராவயதி -கேட்க்கிறாள்-கேட்க்கச் செய்கிறாள் -இறை கழலில் சேர்ந்திடுக -அடியார் அபயக்குரலை கேட்பிக்கிறாள்
ஸ்ருணாதி -ஸ்ரீணாதி -நீக்குகின்றாள் -பக்குவ நிலை ஆக்குகின்றாள்
தைத்ரியத்தில் ஸ்ரீ யபதித்தவ சிஹ்னத்தாலே மஹா புருஷனுக்கு வியாவருத்தி ஆதின படியை நினைத்து
திருக்கண்டேன் என்று உபக்ரமித்து சார்வு திருவே என்று உபஸம்ஹாரம்
பிரதிபுத்தரான நமக்கு பெரிய பிராட்டியாருடன் இருந்து என்றும் ஓக்க பரிமாறுகிற இவனை ஒழிய
ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமும் இல்லை -இத்தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும் என்று நியமனம்

அன்னை என அடைக்கலம் நல்கி -அவன் அறுத்து -பற்று அறுத்து- -வீடு நல்கி அருளுகிறான்
யான் எனது என்னும் செருக்கு அறுத்து -இரு வகைப் பற்றையும் அறுத்தார்க்கே வீடு வான் உலகு உளது –
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் -திருக்குறள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு -திருக்குறள்
பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் -திருக்குறள்

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆளன்றி ஆவாரோ
போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இருப்பவை
பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இயக்கம் போலே
நேமியும் வளையும் ஏந்திய கையால்
கருவி மின்னவிர் இலங்கும் பொலம் பூண்
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின்
திருவரை அகலம் தொழுவார்க்கு
உரிதமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து-பரிபாடல்

புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவருக்கும்
அகலகிலா அன்பர்க்கு அன்றே கொடுத்துப்
பகலதனால் பழம் கங்குல் விடுவிக்கும் பங்கயத்தாள்
அகலகில்லேன் என்று உரைக்கும் அத்திகிரி அருள் முகிலே

புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவர் -திருப்த ப்ரபன்னர்
அகலகிலா அன்பர்-ஆர்த்த பிரபன்னர்

பரமபத சோபானத்தில் வீடு பேற்றை ஒன்பது படிகளால் –
விவேகம் கொள்ளுதல் -வீண் காலத்துக்கு வருந்துதல் -ஆசை அறுத்தல் -வினைகட்கு அஞ்சுதல் –
சரண் புகுதல் ஆகிய ஐந்தும் சரணாகதன் க்ருத்யம்
ஆன்மா நீக்கி -அர்ச்சிராதி மார்க்கம் -பரமபதம் சேர்த்தால் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
இவை நான்கும் சரண்யன் கிருத்யம்
ஆன்மா நீக்கி
இந்திரியங்களை மனசில் சேர்த்து -மனசை பிராணனில் சேர்த்து -அத்தை ஆன்மாவில் சேர்த்து –
அத்தை ஐம்பூதங்களுடன் சேர்த்து

பைந்துழாய் போலேப் பத்துப் பாவலர் செப்பிய தமிழ் நூல் தேறிப் பற்பலர் விரசைக்கு அப்பால் மேவினர் அன்றே

தள்ளத் துணியினும் தாய் போல் இரங்கும் தனித்தகவால் உள்ளத்து உறைகின்ற உத்தமன் –

வரை வேலை ஓதம் அடையச் செந்தமிழ் நூல் வகுத்த சிறு மா மனிச்சர் சிறுகை சிறாங்கை அது போல்
சந்தம் எலாம் உரைப்ப இவை என்று தங்கள் இதயத்து அடக்கி அடியோம் பந்தம் எலாம் அறுக்க அருள் தந்து உகந்து

அருள் வரதர் நிலை இலக்கில் அம்பு என நான் அமிழ்ந்தேனே –

எதிவரானார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே —
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கைங்கர்ய பலனே இவர் ஸ்ரீ ஸூ க்திகள்

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: