நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ ச சா
வியாபகாவதி சம்ஸ்லேஷாத் ஏக தத்வமிவோ திதவ் –அஹிர் புத்ந்ய சம்ஹிதை
லஷ்ம்யா ஸமஸ்த அசித் சித் பிரபஞ்ச சேஷஸ் ததீசஸ்ய து ஸாபி சர்வம்
ததாபி சாதாரண மீசித்ருத்வம் ஸ்ரீ ஸ்ரீ சயொத்வவ் ச சதைக சேஷீ–ஸ்ரீ பாஞ்ச ராத்ர சம்ஹிதை
யாமா லம்ப்ய ஸூகே நேமம் துஸ்த்ரம் ஹி குணோ திதம்
விஸ்தரந்த்ய சிரேணைவ வயக்த த்யான பராயண –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை
சர்வ காமப்ரதாம் ரம்யாம் சம்சார ஆர்ணவ தாரிணீம்
ஷிப்ர ப்ரஸாதி நீம் தேவீம் சராண்யா மனுசிந்தயேத் –காஸ்யப ஸ்ம்ருதி
லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே –ஸ்ரீ லஷ்மீ தந்திரம்
தேவ திர்யங் மனுஷ்யேண புந்நாம பகவான் ஹரி
ஸ்த்ரீ நாம் நீ லஷ்மீர் மைத்ரேய நாநயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
வைகுண்ட து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத் பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்தைர் பாகவதைர் ஸஹ –லிங்க புராணம்
நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
————————————————-
பரம பதம் -8-ஆழ்வார்கள் -36- மங்களா சாசனப் பாசுரங்கள் / நம்மாழ்வார் மட்டும் -24-திரு விருத்தத்தில் -3-
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி யுள் அங்கு இருந்தாய் -பெரியாழ்வார்
வான் இளவரசு வைகுண்ட குட்டன் வா ஸூ தேவன்
அமரர் கோவை அந்தணர் அமுதத்தினை
ஆண்டாள் -மா மாயன் மாதவன் வைகுந்தன்
திருமழிசை ஆழ்வார் -அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை –நற்கிரிசை நாரணன் நீ —
ஏன்றேன் அடிமை இழிந்தேன் –மேலை இட நாடு காண இனி ஆன்றேன்
திருப்பாண் ஆழ்வார் -விண்ணவர் கோன்
திருமங்கை -சந்தோகா தலைவனே தாமரைக்கு கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் அருளே
திருக் குறும் தாண்டகத்தில் -ஆதியாய் நீதியான பண்டமாம் பரம் சோதி நின்னையே பரவுவேனே
முதல் ஆழ்வார்கள் -பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப் பண்ணகத்தாய்
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூம் கிடங்கின் நீள் கோயில்
நம்மாழ்வார் -இமையோர் தலைவா -/
எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
வேலைப் புணரி யம் பள்ளி அம்மான் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ உம் நிலையிடமே
எம்பெருமான் தனது வைகுண்ட மன்னாள் கண்ணாய்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருனோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக
ஸ்ருனோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாம் –
புருஷகார க்ருத்யத்தைச் சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்தில் நோக்கு –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம –என்றும் -இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு
கபோதத்தை கபோதி கேட்பித்தால் போலே அவசரத்தில் கேட் பிக்கும் என்னவுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் லோக ஹிதத்தைக் கேட்டு மித்ர மவ்பயிகம் கருத்தும் இத்யாதிகளில் படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம் –
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் -என்று வ்யுத்புத்தி யானபோது
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-என்றும்
சொல்லுகிறபடியே உபாய அதிகாரிகளுக்கு விரோதிகளான கர்மாதிகளைக் கழிக்கும் என்றதாம்
ஸ்ரீர்ணாதி ச குணைர் ஜகத் -என்று நிருக்தியில்
தன் காருண்யாதி குணங்களால் -நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
இத்யாதிகளில் படியே ஆஸ்ரிதற்கு கைங்கர்ய பர்யந்த குண பரிபாகத்தை உண்டாக்கும் என்றதாம் –
நம்மாழ்வாரும் –
அகலகில்லேன் இறையும் என்றும் அலர் மேல் மங்கை உறை மார்பா – என்றும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் –
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -என்றும்
உபாய தசையிலும் பல தசையிலும் ஸ்ரீமத் சப்தத்தில் சொன்ன நித்ய யோகத்தை அனுசந்தித்தார்
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் ஸ்ரீ ணாதி ச குணைர் ஜகத் –
ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் -என்றும் –இத்யாதிகளில் படியே
அநேக அர்த்தங்கள் உண்டே யாகிலும் ஸ்ரீஞ்சேவாயாம் -என்கிற தாதுவிலே
சேவ்யத்வாதிகளைச் சொல்லிக் கொண்டு கைங்கர்ய பிரதிசம்பந்தித்வ பரம் –
———————————————–
ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஸ்ரீ குறுங்குடி வல்லி தாயார் -ஸ்ரீ பஞ்சகேதக விமானம் -கிழக்கே பார்த்து நின்ற நம்பி
இருந்த நம்பி கிடந்த நம்பி சந்நிதியும் கோயிலுக்கு உள்ளே
திருப்பாற் கடல் நம்பி தனி சந்நிதி –
திருப்பரிவட்ட பாறை -ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி –
மலை மேல் நம்பி
நாமே வருவோம் -காரியாருக்கும் உடைய நம்பிக்கும் அருளி -நம்மாழ்வார் திருவவதாரம்
திருமங்கை ஆழ்வார் திருவரசு சேவை இங்கே
பெரியாழ்வார் -1-/ திருமழிசை ஆழ்வார் -1-/ நம்மாழ்வார் -13-/ திருமங்கை ஆழ்வார் -20-ஆக -40-பாசுரங்கள் மங்களாசாசனம்
உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமிழ் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மழைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழு உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே –பெரியாழ்வார்-1-5-8-
நான்கு திவ்ய தேசங்களையும் சேர்த்து மங்களா சாசனம்
மன்னு -நாஸ்தி விஷ்ணோ பரம் தத்வம் தஸ்ய காலாத் பரா தநு –ஸ்ரீ விஷ்ணு புராணம்
அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜோ ரூபம் -ஜகத் காரணன் -ஆதி -ரூபம் நித்யம் என்று பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்
கரண்டை மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே —
நாரஸிம்ஹ வபு ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம –
தம்ஷ்ட்ரா கராலம் ஸூர பீதீ நாசனம் க்ருத்வா வபுஸ் திவ்ய ந்ருஸிம்ஹ ரூபிணா-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
பயங்கரமான கோரைப்பற்களுடன் திரு அவதரித்து தேவர்களின் பயத்தைப் போக்கி ஹிரண்யனை சம்ஹாரம் செய்து
லோகத்தை ரக்ஷித்து அருளிய எம்பெருமானுக்கு ஆழ்வார் மங்களா சாசனம்
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ -திருவாய் -1-10-9-
அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை —
ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண -ஸ்ருதி –
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தண் செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்
குழனார் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே
ஜ்யேஷ்டாய நம –
பகவான் வாஸூ தேவோ ஜ்யாயஸீ விபூதி -புராதான புண்ய புருஷன்
ஏஷ ப்ரக்ருதி அவ்யக்த கர்தா சைவ சநாதந
பரச்ச சர்வ பூதேப்ய தஸ்மாத் வ்ருத்த தாமோச்யுத-இவனே அனைத்தும் -அனைத்துக்கும் தாரகம் –
ப்ரேரிதன் –சர்வ ஸ்வாமி -சர்வ நியாந்தா -ஜெகதாதாரன்
இத்தையே -குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே-என்கிறார்
இந்த இரண்டு பாசுரங்களுக்கு மேலே -5-5-திருவாய் மொழியில் -11-பாசுரங்களும் திருக்குறுங்குடி நம்பிக்கு மங்களா சாசனம்
எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர்
நாங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியைக் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களொடும்
செங்கனி வாய் ஒன்றினொடும் செல்கின்றது என் நெஞ்சமே
என் நெஞ்சினால் நோக்கிக் காணிர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னும் நூலும் குண்டலுமும் மார்பில் திரு மறுவும்
மன்னும் பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே
நின்றிடும் திசைக்கும் னையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாழும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
திவ்ய பஞ்சாயுதங்களை நம்பி திருமேனியில் சேவிக்கப் பெற்றேன்-
இமம் ஹரே பஞ்ச மஹாயுதாநாம் ஸ்தவம் படேத்ய அநு தினம் ப்ரபாதே
ஸமஸ்த துக்காநி பயாநி ஸத்ய பாபாநி நச்யந்தி ஸூகாநி சந்தி–என்று அன்றோ நீங்கள் எனக்கு கற்று வைத்தீர்கள்
குறுங்குடி நெடும் கடல் வண்ணா பாவினார் இன் சொல் பண் மலர் கொண்டு உன் பாதமே பரவி
நான் பணிந்து என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் –என்று முதலில் சரண் அடைகிறார் திருமங்கை ஆழ்வார் –
அடுத்து திரு விண்ணகர் பாசுரத்தில் குறுங்குடியில் குழகா -என்று கூப்பிட்டு ஆனந்தப்படுகிறார்
திரு நெடும் தாண்டகத்தில் -குறுங்குடியுள் முகிலை திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால்
பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே
பெரிய திருமொழி -9-5—மூலம் தோழிகளை தன்னை குறுங்குடிக்கே உய்த்திடுமின் என்று
பத்தும் பத்தாக அருளிச் செய்கிறாள் பரகால நாயகி
அடுத்த பத்தால் அவன் கல்யாண குணங்களையும் திரு மேனி அழகையும் அனுபவித்து அருளிச் செய்கிறார்
பொங்கார் அரவில் துயிலும் புனிதனூர் போலும் -திருப் பாற் கடல் நம்பிக்கு மங்களா சாசனம்
செங்கால் அன்னம் திகழ் தண் பணையில் கொங்கு ஆர் கமலத்து அலரில் -இயற்க்கை அழகையும் சொல்லி
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணன் மருவு உறையும் இடம் வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே
ஒலி மாலை பாடப் பாவம் நில்லாவே -பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்
ஸ்ரீ வாமன தக்ஷிண பத்ரிகாஸ்ரம க்ஷேத்ரே ஷீர சாகர புஷ்கரணி சிந்து நதீ தீர்த தடே பஞ்ச கேதக விமான சாயம்
ஸ்திதாய பூர்வாபி முகாய ஸ்ரீ மதே வாமன ஷேத்ரா வல்லி குறுங்குடி வல்லி நாயிகா சமேத ஸ்ரீ வாமன க்ஷேத்ர பூர்ணாய
குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ பூர்ணா ஸ்ரீ வைஷ்ணவ நம்பி நாமயுதாயா இதர த்ரிவிக்ரம பூர்ணா ஆஸீன
ஸ்ரீ தர பூர்ண ஸ்ரீ பூமி சமேத பத்ம நாப பூர்ண பார்ஸ்வே பர்வதே ஹ்ருஷீகேசா பூர்ண இத்யபி தர்சன ப்ரதாத்ரே பர ப்ரஹ்மணே நம –
——————————————–
ந நாரஸிம்ஹாத் அதி கச்ச தேவோ
ந தீர்த்தம் அந்யத் பாவ நாச ஹேதோ
ந காருடாத்ரே அபரோஸ்தி சைலோ
ந பக்த ஐந்தோர் அப ரோஸ்தி யோகீ
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாசம் ததோ ஜெயமு தீரயேத்
கயை பிரயாகை காசி கங்கை -விட உத்க்ருஷ்ட திவ்ய தேசம் அஹோபிலம் -சதுர அஷரி –
சதுர்வித புருஷார்த்தங்களையும் அளிக்கும்
பாப நாசினி -மேற்கு முகமாக பிரவகிக்கும் புண்ய நதி இங்கு
இதன் கரையில் கஜ குண்டத்தின் சமீபத்தில் பெரிய திருவடி தவம் இருந்ததால் கருடாத்ரி பெயர்
நரஸிம்ஹ ரஹிதம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி
நரஸிம்ஹ நாயகோ விஸ்வம் வ்யாப்தவான் புருஷோத்தம
பூமவ் நரஸிம்ஹோ புவநே நரஸிம்ஹோ வாயவ் நரஸிம்ஹோ வசநே நரஸிம்ஹ
அக்நவ் நரஸிம்ஹோ அப்யம்ருதே நரஸிம்ஹோ அப்ய ஆகாச தேசேப் யகில நரஸிம்ஹ
காயோ நரஸிம்ஹோ கானகம் நரஸிம்ஹ
காயோ நரஸிம்ஹ சவனம் நரஸிம்ஹ வனம் நரஸிம்ஹ வனதா நரஸிம்ஹ
யத் அஸ்தி யந் நாஸ்தி சதந் நரஸிம்ஹ
நரஸிம்ஹ தேவதா பரம் விஜாநந் நர பசு பாதயுக ப்ரஸூத
ததோ வரம் ஹ்ய பிரசவோ ம்ருதிர் வா யதோ ஹரீம் சர்வகதம் ந வேத
ஜாந்தோபி ந ஜாநந்தி ஜாட்யா சக்தஸ மநீஷிகா
கிமு தேஹாத்மவி ஞான ரஹி தானாம் துராத்ம நாம்
சிறுக்கன் பிரார்த்திக்க பல நரஸிம்ஹ திவ்ய ரூபம் இங்கே
1–ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹர் –
2–ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர்-
3–ஸ்ரீ மாலோல நரஸிம்ஹர் – ஈசான பாகத்தில் கனக நதி தடாகம் -தாரை பிரவாகம் நித்யம் -லஷ்மி குடி அம்மவாரு குடி –
க்ருத யுகத்தில் சோமகன் வேத அபஹாரம் -செய்ய மீட்டுக் கொடுத்து அருளிய பின்பு
வேதங்களே இங்கே தவம் இருந்ததால் வேத கிரி -வேத மலை -வேதாச்சலம் -பெயர்
4–யோகாந்த நரஸிம்ஹர் -ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு யோகம் பயிற்சி அளித்தவர்
5–பாவன நரஸிம்ஹர் –ஸ்ரீ பரத்வாஜருக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் போக்கி அருளினவர்
6—காரஞ்ச நரஸிம்ஹர் -சங்கு சக்கரம் வில் ஏந்தி சேவை -துர்வாச சாபம் தீர்க்க கபில முனியூவர் தவம் செய்த க்ஷேத்ரம்
7—சத்ரவட நரஸிம்ஹர் -கிழக்கு பார்த்து சேவை -ஹாஹா- ஹாஹூ கந்தர்வர்கள் -காண பாடி வரம் பெற்ற ஸ்தலம்
நிஷாதம் ரிஷபம் காந்தாரம் ஷட்ஜம் மத்யமம் தைவதம் பஞ்சமம் -சப்த ஸ்வரங்கள்
8–பார்கவ நரஸிம்ஹர் -அக்ஷய தீர்த்தம் -பார்க்கவ முனிவர்-வசிஷ்டர் போல்வார் – தவம் செய்த க்ஷேத்ரம்
9—ஜ்வாலா நரஸிம்ஹர் –
போகும் வழியில் பாவநாசி தாரை அருவி –
உத்யுத் பாஸ்வத் சஹஸ்ர ப்ரபம் அசநிபம் ஸ்வேஷணைர் விஷ்க்ரந்தம்
வஹ்நீ நஹ்நாய வித்யுத்த திவித திசடா பீஷணம் பீஷணைச்ச
திவ்யைரா தீப்த தேஹம் நிசித நகலசத் பாஹு தண்டைர நேக
சம் பின்னம் பின்ன தைத் யேச்வர தனு மத நும் நாரஸிம்ஹம் பஜாமா
இந்த ஷேத்ரங்கள் யாவும் ஸ்வயம்பூ ஷேத்ரங்கள்
பஷீந்த்ரம் ப்ரோத்ர சம்ஜ்ஞம் ஜல நிதி தநயா சம்ஜ்ஞிதம் யோக சம்ஜ்ஞம்
காரஞ்ஜம் க்ஷேத்ர வர்யம் பலித பலசயம் சத்ர பூர்வம் வடம் ச
ஜ்வாலாக்யம் பார்கவாக்யம் பிமதம் பாவிதம் யோகி வர்ய புண்யம் தத்
பாவ நாக்யம் ஹ்ருதி ச கலயதாம் கல்பதே சத்பலாய –
சனகர் சனாதனர் சனத்குமாரர் சனத்சுஜாதர் –நால்வரும் -ஜய விஜயர் சாபம் –
ஜிஷ்ணுர் விபுர் யஜ்ஜவ் யஜ்ஞ பாலக பிரப விஷ்ணுர் க்ரஸிஷனுச்ச லோகாத்மா லோக நாயக
மோதக புண்டரீகாக்ஷ ஷீராப்தி க்ருத கேதந பூஜ்ய ஸூரா ஸூரைரீச பிரேரக பாப நாசன
வைகுண்ட கமலா வாச சர்வ தேவ நமஸ்க்ருத த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வமோங்கார த்வமக்நய
த்வம் ஸ்வாஹா த்வம் ஸ்வத தேவஸ் த்வம் ஸூ தா புருஷோத்தம
நமோ தேவாதி தேவாய விஷ்ணவே சாஸ்வதய ச அனந்தாயா ப்ரேமேயாய் நமஸ்தே கருடத்வஜ
இதி ஸ்தோத்ரம் மஹச் சக்ரே பகவான் பார்வதீ பதி –என்று அனைத்து தேவர்களும் ஸ்துதிக்க
ஹிரண்யகசிபுவை நிரசித்து -ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்து அருளினார்
அநுஹ்லாதான் -ஹ்லாதன் -சம்ஹ்லாதான் – ப்ரஹ்லாதன் -நால்வரும் சகோதரர்கள்
அஹோ வீர்யம் அஹோ சவ்ரயம் அஹோ பஹு பராக்ரமம் நாரஸிம்ஹ பரம் தைவதம்
அஹோ பலம் அஹோ பலம் –என்று கொண்டாட அஹோபிலம் திரு நாமம்
ஆவிர்பவித்த ஸ்தம்பம் உக்ர ஸ்தம்பமாக இன்றும் சேவை
சம்புர் பவந் ஹி சரப சலபோ பூவ -பரமசிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரபத்தை நரஸிம்ஹர் கொன்றார்
தத க்ருத்தோ மஹா காயோ நரஸிம்ஹோ பீமநிஸ்வந சஹஸ்ர கரஜை த்ரஸ்த தஸ்ய காத்ராணீ பீடயன்
தத் ஸ்புரச் சடாடோப ருத்ரம் சரப ரூபிணம் வயதாரயன் நகை தீக்ஷணை ஹிரண்ய கசிபும் யதா
நிஹதே சரபே தஸ்மிந் ரௌத்ரே மது நிகாதினா துஷ்டுவு புண்டரீகாக்ஷம் தேவா தேவர்ஷயஸ் ததா –ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
ஹந்தும் அப் யாதகம் ரௌத்ரம் சரபம் நர கேஸரீ நகை விதாராயாமாஸ ஹிரண்யகசிபும் யதா –ஸ்ரீ வராஹ புராணம்
நமோஸ்து நரஸிம்ஹாய லஷ்மீ சதத ஜிதக்ருத யத் க்ரோத அஃனவ் புரா ரௌத்ர சரப சலபாயிம்–புராணாந்தரம்
நாரதர் -நரர் களுக்கு அஞ்ஞானம் போக்குபவர்
பாவ நாசினி திவ்ய நதியும் திருப் புளிய மரத்தின் அடியிலே -ஸ்ரீ சடகோபரை போலவே உண்டாக்கிற்று
கங்கையைப் போன்ற பவித்ரமானது –
நமஸ்தே சர்வ ரூபாய துப்யம் கட்கதராய ச
மாமுத்தராஸ்மாத் அத்ய த்வம் த்வத்தோஹம் பூர்வ முத்திதா
த்வத்தோஹம் உத்திதா பூர்வம் த்வன்மயாஹம் ஜனார்த்தன
ததா அன்யாதி ச பூதாநி ககநாதீந்ய சேஷத
நமஸ்தே பரமார்த்தாத்மன் புருஷாத்மன் நமோஸ்து தே
ப்ரதா நமஸ்து பூதாய கால பூதாய தே மம
த்வம் கர்த்தா சர்வ பூதா நாம் த்வம் பிதா த்வம் விநாச க்ருத்
ஸ்வர்க்காதிஷூ பரோ ப்ரஹ்மா விஷ்ணு ருத்ராத்ம ரூபாத்ருத்
சம்பஷயித்வா சகலம் ஜகத் யே கார்ண வீக்ருத
சேஷே த்வமேவ கோவிந்த சிந்த்ய மாநோ மநீஷிபி
பவதோ யத் பரம் ரூபம் தத் ந ஜா நந்தி கேசந
அவதாரேஷூ யத் ரூபம் தத் தர்சயதி திவவ் கச
வாஸூதேவ மநாராத்ய கோ மோக்ஷம் சமவாப்நுயாத்
யத் கிஞ்சித் மனஸா க்ராஹ்யம் அக்ராஹ்யம் சஷூராதிபி
புத்யா ச யத் பரிஜ்ஜேயம் தத் ரூபம் அகிலம் தவ
த்வன் மயாஹம் த்வதா தாரா த்வத் ஸ்ருஷ்டா த்வாம் உபாஸ்ரிதா
மாதா வீதி ச விஜ்ஜேயம் அபி தத்தே ததோ ஹ மாம்
ஜயாகிலஜ்ஞா நமய ஜய ஸ்தூல மயாய ச
ஜெயா அநந்த மயா வ்யக்த ஜய வ்யக்த மய ப்ரபோ
பராவராத்மந் விஸ்வாத்மந் ஜய யஜ்ஞபதே அநக
த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் அங்காரஸ் த்வம் அக்நிஜ
த்வம் வேதாஸ் த்வம் ஷடங்காநி த்வம் யஜ்ஞ புருஷா ஹரே
ஸூர்யாதயோ க்ரஹாஸ் தாரா நக்ஷத்ராண் யகிலம் ஜகத்
மூர்த்தாமூர்த்தமத் ருஸ்யம் ச த்ருஸ்யம் ச புருஷோத்தம
யச் சோக்தம் யச்ச நை வேக்தம் மயோக்தம் பரமேஸ்வர
தத் சர்வம் த்வம் நமஸ் துப்யம் பூயோ பூயோ நமோ நாம
இதம் ஸ்தோத்ரம் பகவதோ தரண்யா பரிகீர்த்திதம்
யே படந்தி நரா லோகே ஸ்ராவயந்தி ச மாநவாந
தே யாந்தி பரமம் சித்திம் லபந்தே பிரார்த்திதம் பலம் –ஸ்ரீ வராஹ ஸ்தோத்ரம் –
பால்குனி பவ்ர்ணமி விசேஷம் அஹோபிலத்தில் / வைகாசி மாத ப்ரஹ்மோத்சவம் /
ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம் -ஸ்ரீ நரஸிம்ஹ அவதார விவரணம்
ஸ்ரீ மத் நாராயணீயம் -24-25-தசகங்களும் விவரிக்கும்
நம்பனை நரஸிம்ஹனை -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றி -திரௌபதிக்கு கொஞ்சம் விளம்பம்-
நேரில் போனால் பாண்டவர்களை நிரசிக்க ப்ராப்தமாக இருக்குமே -நேராக வர வில்லை புடவை அனுப்பி ரக்ஷணம் –
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கும் பல காலம் ஸூ வய ரக்ஷணத்தில் இழிந்து பின்பு –1000-ஆண்டுகள் -நேரம் கழித்து
இங்கோ கூப்பிட்ட அந்த க்ஷணத்தில் வந்தார்
எம்பார் சாதித்த படி இப்படி மூன்று பரீஷைகளிலும் வந்து தனது ரக்ஷணத்வம் காட்டி –
நம்பனை நரஸிம்ஹனை ரக்ஷணத்தில் ஊற்றம் -அவனையே போற்றுவோம்
———————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply