அர்த்த பஞ்சகம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————————————-

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி -மிக்க இறை நிலையும் இத்யாதி –
இதில் ப்ராப்யமான பரமாத்மா ஸ்வரூபத்தை முதல் இரண்டு பாசுரங்களால் நிரூபித்து அருளுகிறார்

அமலன் அவியாத சுடர் அளவில்லா ஆரமுதம்
அமல வுருக் குணங்கள் அணி யாயுதங்கள் அடியவர்கள்
அமல வழியாத நகர் அழிந்து எழும் கா வுடனே எல்லாம்
கமலை யுடன் அரசாளும் கரிகிரி மேல் காவலனே –1–

கரிகிரி மேல் காவலனே -ஹஸ்தகிரியில் நித்ய சாந்நித்யம் பண்ணி அருளும் சர்வ ரக்ஷகன்
அமலன் -அகில ஹேயப்ரத்ய நீக ஸ்வரூபன்
அவியாத சுடர் -மாறுபாடு இல்லாத தேஜஸ் -ஞான ஸ்வரூபன் -ஸ்வயம் பிரகாசன்
அளவில்லா – -தேச கால வஸ்து அபரிச்சின்ன
ஆரமுதம் அமிர்தம் – பரிபூர்ண போக்ய ஸ்வரூபன்
அமலவுருக் குணங்கள் அணி யாயுதங்கள் அடியவர்கள் -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய ஆபரணங்கள் -நித்ய முக்தர்கள் –
அமல வழியாத நகர் -நித்ய விபூதி
அழிந்து எழும் கா வுடனே எல்லாம்-லீலா விபூதி -விளையாட்டு சோலை-கர்மாதீனம் –
கமலை யுடன் அரசாளும் -ஸ்ரீயபதித்வம்–-உபய விபூதியையும் பெரும் தேவிப் பிராட்டி உடன் அரசாள்கின்றான்

ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள் என்றும்– நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் என்றும் இரு வகை
ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள்
1–சத்யம் -அவியாத
2–ஞானம் -சுடர்
3–அநந்தம் –அளவில்லாத -தேச கால வஸ்து -அபரிச்சின்னம்
4–ஆனந்தம் –ஆரமுதம்
5–அமலத்வம் –அமலன்

அமலன் –
பர ப்ரஹ்ம வாஞ்சம் பரம பரிமிதம் சம்சரதி தத் பரோத்யா லீடம் விவசம ஸூபஸ் யாஸ்வ மிதி -இத்யாதி படி
ஸ்வேதா நிர்மலம் -அகில ஹேய ப்ரத்ய நீகமாயும் என்றவாறு
பிரிவில்லா இருள் ஓன்று பிணக்கு ஒன்றும் இல்லா பெரு வெயிலை மறைத்து உலகம் காட்டும் என்ன
அறிவில்லா அறிவு ஒன்றை அவித்யை மூடி அகம் புறம் என்று இவை அனைத்தும் அமைக்கும் என்பர் -பரமத பங்கம்
மங்கிய வல்வினை நோய்கள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேல்மின் புகேல்மின் எளிதன்று கண்டீர் புகேல்மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டு அன்று பட்டினம் காப்பே –பெரியாழ்வார் -5-2-4-

சத்யம் ஞானம் -என்று சத்தியத்தை ஞான த்வாரா ஸ்வரூப விசேஷணம் ஆக்கி –
நித்ய ஞான ஸ்வரூபம் -என்றும்
நித்ய ஸ்வரூபம் என்றும் –
ஸ்வதஸ் -நித்ய அசங்குசித ஞான ஸ்வரூபன் -நித்ய முக்த வ்யாவ்ருத்தி
நந்தா விளக்கே -மலராது குவியாது மாசூணா ஞானம் –
அளவில்லா -ஸ்வரூபத்துக்கும் -ஆனந்தத்துக்கும் விசேஷணம் –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம – ஆச்சார்யன் சொல்ல –சிஷ்யன் கஞ்சத் கஞ்சது ந ஜானாமி கேட்க
யத்வாவ கம் ததேவ கம் யத்வாவ கம் ததேவ கம்-ஏது ஆனந்தமோ அது அளவில்லாது இருக்கிறது
ஸ்வரூபாத் ஸ்வாமி நோ ரூபம் உபாத்தேய தமம் விது-என்பதால் குணங்களுக்கு முன் உருவை அருளிச் செய்கிறார்

அமலம்-உரு-குணம் – இத்யாதிகளிலும் அந்வயம் -நிர்ஹேதுக ஸ்வதஸ் சித்த குணங்கள்
திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் திருமேனி ஸுகுமார்யத்துக்கு அனுரூபமாய் இருக்கை
சிலை இலங்கு பொன்னாழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
அதி ப்ருதூல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய சித்ரா புங்க வைசித்ரய -விசித்ர சக்தி உடைமை
அடியர்வர்களுக்கு அமலத்வம் கைங்கர்யத்துக்கு விச்சேதம் இல்லாமை
அமலத்வமுள்ள நித்ய விபூதி -தமஸ பரஸ்தாத் -தெளி விசும்பு –நீதி வானம் –கலங்காப் பெரு நகர் –

காவு -உத்யான வனம் -திரு விண்ணகர் அப்பன் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூ உலகே
எல்லாம் -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –
கமலையுடன் அரசாளும் -தேவ்யா காருண்ய ரூபாயா ரக்ஷகஸ் சர்வ சித்தாந்தே அஸ்யா மம சேஷம் ஹிவிபூதி ரூபயாத்மிகா –
காந்தஸ்தே புருஷோத்தம -இத்யாதி
சோதி அனந்தன் காலையிலே தொழுது எழ நின்ற அநந்த சரஸ் கரையிலே
ஆஸ்ரித ரக்ஷணமே தனக்கு ஸ்வபாவம் என்பதை பிரகாசித்து கொண்டு இருக்கும் தேவ பெருமாள் -என்றபடி

—————————————–

ஆஞ்ஜையால் மட்டும் இல்லாமல் அந்தர்யாமியாயும் இருந்து அருளி நியமிக்கிறார் என்கிறார் இதில்
சகல வஸ்துக்களின் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தியாதிகள் இவன் சங்கல்பத்துக்குள் அடங்கின என்றபடியுமாம்

உள்ள பொருள் அனைத்துக்கும் உருவ நிலை கருமங்கள்
தெள் இசைவின் வசமாக்கித் திகழ்ந்து உயிராய் உறைகின்றாள்
நள் இருள் தீர்த்து அடியவர்க்கு நலம் கொடுக்கும் திருவுடனே
வள்ளல் அருளாளர் எனும் வாரண வெற்பு இறையவனே –2-

உள்ள பொருள் அனைத்துக்கும் உருவ நிலை கருமங்கள்–பிராமண சித்தங்களான எல்லா வஸ்துக்களும்
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி -இவைகளை
தெள் இசைவின் வசமாக்கித் திகழ்ந்து உயிராய் உறைகின்றாள்-தெளிந்த ஸ்லாக்யமான தன் சங்கல்பத்துக்கு
அதீனமாகச் செய்து பிரகாசித்திக் கொண்டு ஆத்மாவாய் -அந்த அந்த வஸ்துக்களுக்குள் நித்ய வாசம் செய்து அருளும்
வள்ளல் அருளாளர் எனும் வாரண வெற்பு இறையவனே -பரம உதாரனான-பேர் அருளாளர் -ஹஸ்தி கிரி நாதன் –
நள் இருள் தீர்த்து அடியவர்க்கு நலம் கொடுக்கும் திருவுடனே-ஸ்ரீ பெரும் தேவித் தாயாருடன் கூடி தன்னை
ஆஸ்ரயித்தவர்களுக்கு நிபீடமான அஞ்ஞானத்தை -சம்சாரத்தை -நிவ்ருத்தி செய்து –
பரம புருஷார்த்த பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யத்தைக் கொடுத்து அருளும் –

உள்ள பொருள் -தன்னை ஒழிந்த இதர ஸமஸ்த வஸ்துக்களும் -இத்தால் விபூதி குணம் இத்யாதிகள்
இல்லை என்பவர் மதங்கள் நிரசனம்
நித்ய வஸ்துக்களும் நித்யத்வம் அவன் சங்கல்ப அதீனம்
நதத் அஸ்தி விநாயத் ஸ்யாத் மயா பூதம் சராசரம்
உருவு -அசாதாரண ஸ்வபாவங்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்ட வஸ்து என்றபடி
நிலை -கொஞ்ச காலம் தொடர்ந்து இருக்கை –
பஹு வசனத்தால் ஸ்வரூப -ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் விவஷிதம்
தெள் இசை -ஒன்றாலும் தடுக்க முடியாத சங்கல்பம் -பரமாத்மாவின் இச்சையே இவ்வஸ்துக்களை
பரமாத்மாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும் -பிரதான பிரதிதந்தர அதிகாரம் –
திகழ்ந்து -வ்யாப்ய கத தோஷங்கள் தட்டாமை–அம்ருத தேவ-ஸ்ருதி அநஸ்நந் நந்யோபி சாக ஸீதி –
உயிராய் -உடல் மிசை உயிர் என
உறைகின்றான் -ரம்சாவாஸ்யம்–நாராயண ஸ்திதி -உளன்
நள்ளிருள் தீர்த்த -நித்ய முக்தர்களுக்கும் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் இவன் ஆதீனமே
திரு உடன் -சர்வ அந்தராத்மத்வமும் ஸ்ரீயபதியே
நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம
ஸ்ரிய சமஸ்தஸ் அசித் சித் பிரபஞ்சோ வ்யாப்ய ததீதஸ் யதுஸாபி சர்வம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –

இத்தால்
ஸ்ரீ லஷ்மீ ஸஹாயமாய்
அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஹேயப்ரத்ய நீகனாய்
ஞான சக்த்யாதி கல்யாண ஏக குண விசிஷ்டனாய்
திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய்
உபய விபூதி நாயகனாய்
சர்வாத்ம பாவனாய்
சர்வ ஜகத் வியாபாரங்களையும் தண் ஆதீனத்துக்குள் வைத்து நடத்துபவனாய்
இருக்கும் பரமாத்மா ஸ்வரூபத்தை கீழ் இரண்டு பாட்டாலே நிரூபித்து அருளி

———————————-

மேலே ப்ராப்யனான பரமாத்மாவை பிராபிக்கும் ஜீவாத்மா ஸ்வரூபத்தை இரண்டு பாட்டுக்களால் நிரூபித்து அருளுகிறார்
அதில் எல்லா ஆத்மாக்களுக்கு பொதுவான ஆகாரமும்
இப்பொழுது உபாயத்தை அனுஷ்ட்டிக்க வேண்டியவனாய் இருக்கும் தனக்கு அசாதாரணமாக ஆகாரமும்
அரிய வேண்டும் என்று ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரத்தில் அருளிச் செய்தபடியே இரண்டு பாட்டுக்களாலும் அருளிச் செய்கிறார்

பூத வுடல் புலன் கண் மனம் புல்லாவி புந்தி எனும்
யாதும் அலனே இலகி யான் எனும் இன் நுண் அறிவாய்ச்
சேதனனாய் அடிமையுமாய் உயிர்க்கு எல்லாம் திண் உயிராய்த்
தீதலின்றித் திகழும் சீர் அத்திகிரித் திருமாலே –3-

பூத வுடல் -பஞ்ச பூதங்களால் சரீரம்
புல்லாவி – -அழிந்து போவதால் -அல்பமான பிராண வாயு
புலன் கண் மனம் புல்லாவி புந்தி எனும்
யாதும் அலனாய் -இப்படி சொல்லும் -சரீரம் -இந்த்ரியங்கள் -மனம் -பிராண வாயுக்கள் -ஜ்ஞானம் –
எப்பொருளும் ஆகாமல் வேறுபட்டவனாய் –
சரீரம் தோறும் வேறுபட்டு இருப்பவன் ஜீவாத்மா -என்றுமாம் –
இலகி -பிரகாசித்து –
யாதும் அலனாய் உலகில் -பாட பேதம்
யான் எனும் -நான் என்றே தோற்றி -தனக்குத் தானே தோற்றி-
இன் -ஆனந்த ஸ்வரூபனும்
நுண் -அணு ஸ்வரூபனும்
அறிவாய்-ஞான ஸ்வரூபனும்
சேதனனாய் -ஞான குணமுடையவனாய்
அடிமையுமாய் -எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷ பூதனுமாய்
உயிர்க்கு எல்லாம் திண் உயிராய்த்-ஜீவாத்மாக்களுக்கு எல்லாம் சாசுவதமான அந்தராத்மாவாய்
தீதலின்றித் திகழும் சீர் அத்திகிரித் திருமாலே –அழிவின்றி பேர் அருளாளன் பிரகாசிக்கின்றான் -என்றவாறு –
திருமாலே உயிர்க்கு உயிராய்த் திகழும்-என்று அந்வயம் –

அந்தவந்த இமே தேஹா -ஸ்ரீ கீதா ஸ்லோகம் —
தேக இந்திரிய மன பிராண தீப்ய அந்நிய -என்று அருளிச் செய்த அர்த்தம்
பல அனுபபத்திகள் ஸூசகம்
ஆவி -ஆத்மாவையும் குறிக்குமாத்தால் வேறுபடுத்தி பிராணனைக் காட்ட புல்லாவி என்கிறார்
புந்தி -ஆச்ரயத்தை பற்றி நின்று விஷயத்தைப் பற்றி நின்று -ச கர்மகமான க்ரியா விசேஷம் -ஆத்மாவாகாதே
உலகின் யான் என்னும் -ஒவ் ஒரு வஸ்துக்குள்ளும் இருக்கும் ஆத்மா தன்னைத் தான் என்று அறிகிறான் –
பிரதி க்ஷேத்ரம் பின்ன -என்றதின் அர்த்தம்
இன் -ஸ்வதஸ் ஸூகி -ஸ்வாபாவிகமான ஆனந்த ஸ்வரூபம்
நுண் -ஒன்றால் அழிக்க முடியாத அணு ஸ்வரூபன் -சர்வ வஸ்துக்களிலும் தடை இல்லாமல் பிரவேசிக்கும் தன்மை
நைனம் பிண்டந்தி சஸ்த்ராணி -என்றும்
நித்ய வ்யாபீ -என்ற அர்த்தங்கள்
அறிவாய் -ஞான ஸ்வரூபன் -அநந்ய சாதன-என்றதின் அர்த்தம்
அடிமையுமாம் -ஸ்வரூப நிரூபக தர்மம் -அநந்யார்ஹ சேஷத்வம்
ஸ்வதஸ் சேஷத்வே சதி சேதனத்வம் -என்னக் கடவது இறே
சேதனனாய் -ஆத்மாவாய் -ப்ரீதி பவதாவேச -தர்ம பூத ஞானம் உடலின் எங்கும் வியாப்தி என்ற அர்த்தமும்
உயிர்க்கு எல்லாம் திண் உயிராய்–நித்யோநித்யானாம் சேதனஸ் சேதநாநாம் -என்றதின் அர்த்தம் –
இவர்கள் உறங்கும் பொழுதும் ஜாக ரூபனாய் இஷ்ட பூர்த்தி செய்து கொண்டு இருக்கும் தன்மை
இத்தால் ஜீவாத்மாக்குள் பேதமும் -அசேதன ஈஸ்வர வியாவ்ருத்தியும் அருளிச் செய்ததாயிற்று
தீதல் இன்றி -அந்தராத்மாவாய் இருந்தாலும் இவற்றின் தோஷங்கள் தட்டாமல் இருக்கும் என்றதாயிற்று

———————————————

தானடைத்த குணம் கருவி தம் கிரிசை வழி ஒழுக்கி
ஊன் எடுத்து உண்டு உமிழ்ந்து உழலும் உயிர்க்கு எல்லாம் உயிராகிக்
கான் நடத்திக் கமலையுடன் கண்டு உகந்து விளையாடும்
தேன் எடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே –4–

தேன் எடுத்த சோலைகள் சூழ் திருவத்தியூரானே –தேனை ஏந்திக் கொண்டு நிற்கிற உத்யோனங்களாலே
சூழப்பட்ட ஸ்ரீ ஹஸ்திகிரி திவ்ய ஷேத்ரத்தில் நித்ய ஸந்நிஹிதன் ஆனவனே
தானடைத்த குணம் கருவி தம் கிரிசை வழி ஒழுக்கி
ஊன் எடுத்து உண்டு உமிழ்ந்து உழலும் உயிர்க்கு எல்லாம் உயிராகிக்
கான் நடத்திக் கமலையுடன் கண்டு உகந்து விளையாடும்

தானடைத்த -தன்னால் ஏற்படுத்தப்பட்ட –தான் இயற்கையாக ஆத்மாவுக்குக் கொடுத்து அருளிய
குணம் -அபஹதபாப் மத்வம் முதலிய குணங்களை
கருவி –
மறைத்து –
அன்றிக்கே -தன்னால் முன் செய்த கர்மங்களுக்கு அனுகுணமாகிற சத்வாதி குணங்கள் ஆகிற
கருவி -காரணங்களினால் -என்றுமாம் –
குணங்கள் இந்த்ரியங்களையும்-என்றுமாம் –
தம் கிரிசை வழி ஒழுக்கி – அவர் அவர்கள் செய்த கர்மங்களின் வழியிலே நடக்கும்படி செய்து -அனுசரித்து நடத்தி
ஊன் எடுத்து -மாம்ச மயமான -சரீரத்தைப் பெற்று-சுமந்து –
உண்டு -கர்ம பலன்களை-ஸூக துக்கங்களை – அனுபவித்து –
உமிழ்ந்து -பின் தள்ளி -அவைகளை விட்டு விட்டு என்றபடி –
உழலும்-இப்படியே மறுபடியும் அதிலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கும்
உயிர்க்கு எல்லாம்-ஆத்மாக்களுக்கு எல்லாம்
உயிராகிக் -அந்தர்யாமியாக நின்று
கான் நடத்திக்-சம்சாரம் ஆகிய காட்டிலே நடக்கச் செய்து
அன்றிக்கே -காலால் நடத்தி -அனுபவிக்கச் செய்து
கமலையுடன் கண்டு உகந்து விளையாடும் -மிதுனத்தில் –
ஜீவர்கள் கர்ம பலனை-ஸூக துக்காதிகளை -அனுபவிப்பதை பார்த்து உகந்து –
எம்பெருமானுக்கு லீலா ரசம் என்றவாறு –

மறைத்து -பராஹித்துநாத்யா திரோஹிதம் –சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் குண கர்ம விபாகஸ
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ பிரபவைர் குணை —
ப்ரக்ருதே க்ரியா மாணாநி குணை கர்மாணி ஸர்வஸ —
கர்ம அவித்யாதி சக்ரே பிரதி புருஷ மிஹா நாதி சித்ர ப்ரவாஹ
தேவாதி சதிர் வித தேகம் எடுத்து ஸூக துக்கங்கள் அனுபவித்து -த்யஜித்து -மீண்டும் த்யஜித்தையே அனுபவித்து –
கதாகதம் காமகா மா லபந்தே -என்றவாறே
கான் நடத்தி – தம காந்தார மத்வா நாம் கதமேகோ கமீஷ்யஸி
சம்சார பதவீம் வ்ரஜன் –ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து
கமலையுடன் விளையாடும் -யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீநோ வியத்தேகிலம் -என்றும்
ஹரே விஹரசி க்ரிதா கந்து கைரிவ ஐந்து ஹி

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கமுமாய்
மன் பல் உயிர்களுமாகி பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையவன்

பஸ்யந்தீஷு ஸ்ருதிஷு பரித ஸூரி ப்ருந்தேன சார்த்தம் மத்யே க்ருத்யே த்ரிகுண பலகம் நிர்மித ஸ்தானம் பேதம்
விஸ்வாதீச பிரணயிநி சதா விப்ரம த்யூத வ்ருத்தவ் ப்ரஹமே சாத்யா தததி யுவாயோ ஜஷா சார பிரசாரம் -ஸ்ரீ ஸ்துதி

தேன் எடுத்த –
தாப த்ரய ஹரத்வம் ஸூசிதம் -அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி அத்திகிரியே
திருவத்தியூரானே-
பாவனத்வம் போக்யத்வம் –
ஸூபகஸ் சித்ர கூடோசவ் கிரிராஜோபமோ கிரி -யஸ்மின் வசதி காகுத்ஸத் குபேர இவ நந்தநே
அறிவில்லா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பாராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே
நா வாயில் உண்டே -நாராயணாதி நாமம் அஸ்தி –

———————————————–

இப்படி ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தாவான ஜீவாத்ம ஸ்வரூபத்தையும் நிரூபித்து அருளி
உபாயத்தை அருளிச் செய்ய வேண்டி இருந்ததே யாகிலும்
விரோதியை அறிந்து அத்தாலே சோகார்த்தி யானவனே உபாய அதிகாரி ஆகையால் அர்த்த கிராமத்தை அனுசரித்து
முந்துற விரோதி ஸ்வரூபத்தை நிரூபித்து அருளுகிறார்
அதில் முற்பட பொய் நின்ற ஞானமும் இத்யாதிப்படியே விபரீத ஞான விபரீத அனுஷ்டானங்கள் ஆகிற விரோதிகளை-
அவற்றிலும் தேஹாத்ம அபிமானம் ஸ்வ தந்த்ர அபிமானம் ஆகிற விரோதிகளை முற்பட நிரூபித்து அருளுகிறார் –

உய்யும் உறவு இசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப்
பொய்யுருவைத் தமக்கு ஏற்றிப் புலன் கொண்ட பயனே கொண்டு
ஐயுறவும் ஆர் இருளும் அல்வழியும் அடைந்தவர்க்கு
மெய்யருள் செய்திடும் திருமால் வேழ மலை மேயவனே –5–

உய்யும் உறவு இசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப்
பொய்யுருவைத் தமக்கு ஏற்றிப் புலன் கொண்ட பயனே கொண்டு
ஐயுறவும் ஆர் இருளும் அல்வழியும் அடைந்தவர்க்கு
மெய்யருள் செய்திடும் திருமால் வேழ மலை மேயவனே –5–

வேழ மலை மேயவனே -திருமாலே –
உய்யும் உறவு இசையாதே -அவனுக்கே அற்ற சேஷி சேஷ பாவ – சம்பந்தத்தை – அறிந்து ஒத்துக் கொள்ளாமல்
ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப் -தம்மைப் போலே கர்ம வச்யர்களுக்கு -ஷேத்ரஞ்ஞர்களுக்கு – தாஸ பூதர்களாக இருந்து
பொய்யுருவைத் தமக்கு ஏற்றிப்-அழியும் தன்மையான சரீரத்தின் தன்மையை -தனக்கு இல்லாதான் ஜடத்வம் போன்ற
ஆகாரத்தை பொய் என்கிறது -ஏறிட்டுக் கொண்டு-ஆரோபித்திக் கொண்டு
புலன் கொண்ட பயனே கொண்டு -இந்த்ரியங்கள் பலனே தனக்கு என்று கொண்டு-
இந்த்ரியங்களால் கிரஹிக்கப்பட்ட அல்ப அஸ்திர புருஷார்த்தங்களை அங்கீகரித்து – -தேகாத்ம அபிமானம் கொண்டு
ஐயுறவும் ஆர் இருளும் -சித்தாந்த விஷயங்களில் சங்கையும் பூர்ணமான அஜ்ஞ்ஞானத்தையும் கொண்டு –
அல்வழியும் அடைந்தவர்க்கு -அதனாலே தகாத அல்லா வழியையும் கெட்ட நடவடிக்கையையும் – அடைந்தவர்கட்கு
மெய்யருள் செய்திடும் -உபாயத்தின் மூலம் அழியாத கிருபை யாகிய மோஷத்தை தந்து அருளுவான் –

உய்யும் உறவு இசையாதே –
சேஷி சேஷ பாவ சம்பந்தத்தை இசைகையே ஆத்ம உஜ்ஜீவன ஹேது –
வீடு இசைமினே
விரோதிகளை நிரூபிக்க கிழியாமல் முதலில் இத்தை அருளிச் செய்தது கிருபாதிசயத்தாலே
ஸூலபமான பரிஹாரம் -த்ருஷ்டா சீதா போலே -ஆஸ்வாசகரமாய் அருளிச் செய்கிறார்
ஒத்தவர்க்கே அடிமையுமாய்–
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தோ ஜகத் அந்தர் வ்யாவஸ்திதா பிராணிந கர்ம ஜெனித சம்சார வஸ வர்த்திந
தன்னோடு ஒழுகு சங்கிலியில் கட்டுண்டு உழலுகிற ஷேத்ரஞ்ஞர் காலிலே விழப் பண்ணியும் –
அடிமையுமாய்
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் -சர்வே தேவாஸ்மை பலிமா வஹந்தி -என்னும்படி தரத்தை பெற பிராப்தி இருக்க
உபய பாவனர்களாய் ப்ரயோஜனாந்தர சங்கம் விடாமல் -ஈஸ்வரத்வ அபிமானம் பாராட்டித் திரிபவர்களோடு
சாம்யத்தை அடைவதே அஸத்ருசமாய் இருக்க -அவர்களுக்கு தாஸ்யத்தையும் அடைந்தோம் என்கிற விரோதி அம்சம் தெரிவிக்கப் பட்டது –
ஒத்தவர்க்கே
ஏவகாரத்தால்-ஸ்வரூப விரோதம் -ஆத்ம அபஹார தோஷத்தில் பர்யவசானம் அடையும் –
கிந்தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா
ஓத்தார் என நின்ற உம்பரை நாம் பிறவித் துயர் செகுவீர் என்று இரக்கும் பிழை அறவே
பொய்யுருவை -என்பதால் பொய் நின்ற ஞானம் -இத்யாதி ஸூசிதம்
தனக்கு இல்லாத ச பரத்வாதிகளை ஏறிட்டுக் கொண்டு -தன்னுருக் கொடுத்து வேற்று உருக் கொண்டு
தனக்கு
ஞான ஆனந்த ஸ்வரூபனான தனக்கு அதுக்கு விரோதியான ஜடாதவ துக்கித்வாதிகளை ஏறிட்டுக் கொண்டு

புலன் கொண்ட
சப்தாதி விஷயங்கள் -விஷய புருஷார்த்தங்கள் என்றுமாம்
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா–
தத்வ ஹித புருஷார்த்த விஷயமாய் யதாவத் பிரகாச ரஹிதனாய் நிற்கிறோமே
உய்யும் உறவு இசையாமல் -ஹிதத்தில் விபரீத ஞானம்
பொய்யுறைவைத்த தனக்கு ஏற்றி -தத்துவத்தில் விபரீத ஞானம்
புலன் கொண்ட இத்யாதியால் புருஷார்த்தத்தில் விபரீத ஞானம்
ஐயுறவுசந்தேகம் -ஆர் இருள் -இவற்றால் விபர்யயம் சம்சயம் அஞ்ஞானம்
அல் வழி -பொல்லா ஒழுக்கம் -அழுக்கு உடம்பு அர்த்தம் -மேல் பாட்டில் ஸங்க்ரஹம்
மெய்யருள்
நிவாரகர் இல்லாத ஸ்வ தந்த்ரன் அருளும் பொழுது இவ்வளவையும் நிவ்ருத்தி செய்வதே மெய்யேயாகுமே

செய்திடும்
ஆஸ்ரயண காலத்திலேயே விரோதி நிரசனத்தைப் பண்ணுவிக்கும் என்பது த்யோயிதம்
திருமால்
புருஷகார பலத்தால் செய்திடும் என்பது த்யோயிதம்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-சம்சார ஆர்ணவ தாரிணீம்
வேழ மலை மேயவனே
இங்கே ஸந்நிஹிதனானதாலேயே மெய்யருள் -என்பது த்யோயிதம்
மெய்யவனே-பாட பேதம்
ப்ரத்யக்ஷத்தாலே -கண்டாலே சர்வாதிகன் என்பது தோற்றும் –
காண் தகு தோள் அண்ணல் –
அஹம் ஏவ பரம் தத்வம்

—————————————-

அநாதி கர்ம ப்ரவாஹத்தினால் தேக சம்பந்தம் வருவதும் –
அத்தாலே அஞ்ஞானம் மேல் இடுகிறதும் ஆகிற விரோதிகளை நிரூபித்து அருளுகிறார் –

விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே
சதை யுடல நால் வகைக்கும் சரண் அளிப்பான் எனத் திகழ்ந்து
பதவி யறியாது பழம் பாழில் உழல்கின்றார்க்கும்
சிதைவில் அருள் தரும் திருமால் திருவத்தி நகரானே –6-

திருமால் திருவத்தி நகரானே-
விதை முளையின் நியாயத்தால் -பீஜாங்குர நியாயத்தால்-கர்மம் -சரீரம் -கர்மம் -சுழற்சி விதை முளை விதை போலே
அடியில்லா வினையடைவே-அநாதியான கர்மங்களை அனுசரித்து
கர்மம் சரீர சுழலிலே அகப்பட்டு என்றவாறு -இரண்டுமே அநாதி –
சதை யுடல நால்வகைக்கும் -மாம்ச மயமான -தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம -நான்கு வகை மாம்ச மயமான -சரீரம் பெற்ற ஜீவர்களுக்கும்
சரண் அளிப்பான் எனத் திகழ்ந்து -ரஷணத்தை அளிப்பான் என்று கூறும்படி நின்று பிரகாசித்து அருளி
பதவி யறியாது -சம்சார பந்தத்தை நீக்கும் வழியை அறியாமல்
பழம் பாழில் உழல்கின்றார்க்கும் -அநாதியான சம்சார மண்டலத்தில் -பிரக்ருதியிலே சஞ்சரித்துக் கொண்டு -துன்பப்படுமவர்க்கும்
சிதைவில் அருள் தரும் -ஒன்றாலும் கலக்க முடியாத -குறைவற்ற கிருபையை செய்து அருளி சம்சார சம்பந்தத்தை நீக்கி அருளுவான்

அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் –
எந்த விதையில் இருந்து எந்த செடி வருகிறதோ -அந்த விதை அந்த செடியில் உண்டாக்கவில்லையே
அதே போன்ற ஜாதியான விதையே அந்த செடியில் உண்டாகும் -இது அந்யோன்ய ஆஸ்ரய ஆபாசம்
அடியில்லா
கர்மமும் அநாதி -தத் தத் கர்ம ஜெனித
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல் படி கால் வழி ஏறிக் கண்டீர்
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே –
பரதேவதா பாரமார்த்யர்த்தம் -ஒன்றும் தேவும் திருவாய்மொழி
த்ரீன் லோகம் சம் பரிக்ரம்ய–எங்கும் போய்க் கரை காணாதே
திருமால் -திருவத்தி நகரானே
தேவ்யா காருண்ய ரூபயா ரஷக / லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
இப்படி ஸம்ஸாரித்துப் போந்தவர்களும் தம்மை இழவாமைக்கு அன்றோ இங்கே ஸந்நிஹிதன் ஆனான்

———————————

உபாய ஸ்வரூபத்தை மேலே இரண்டு பாட்டாலே நிரூபித்து அருளுவாராய் அதில்
முதலில் இதில் பக்தி உபாயத்தை அருளிச் செய்கிறார் –

எம நியம ஆசனங்கள் இயலாவி புலனடக்கம்
தமது அறியும் தாரணைகள் தாரை அறா நினைவு ஒழுக்கம்
சமமுடைய சமாதி நலம் சாதிப்பார்க்கு இலக்காகும்
அமரர் தொழும் அத்திகிரி யம்புயத்தாள் ஆரமுதே –7-

எம நியம ஆசனங்கள் இயலாவி புலனடக்கம்
தமது அறியும் தாரணைகள் தாரை அறா நினைவு ஒழுக்கம்
சமமுடைய சமாதி நலம் சாதிப்பார்க்கு இலக்காகும்
அமரர் தொழும் அத்திகிரி யம்புயத்தாள் ஆரமுதே –7-

அமரர் தொழும் அத்திகிரி யம்புயத்தாள் ஆரமுதே
எம நியம ஆசனங்கள் -யமம் நியமம் ஆசனம் ஆகியனவும்
ஸூசவ் தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆசன மாத்மந –
யமம் -பிரமச்சார்யாதி விரதங்கள் / நியமம் -வேத அத்யயனாதிகள் –உபாசனங்கள்
இயலாவி புலனடக்கம் –இயலாவி அடக்கம் –
இயல் -நம்மால் செய்யக் கூடியதான –
சஞ்சரிக்கின்ற பிராண வாயுக்களை அடக்குவதாகிய பிராணாயாமமும்
புலன் அடக்கம் -இந்த்ரியங்களை அடக்கும் ப்ரத்யாஹாரமும்
தமது அறியும் தாரணைகள் -ஜீவர்கள் தம் மனத்தால் அறிகின்ற எம்பெருமான் திருமேனியை-
பிரிய தமமான திவ்ய மங்கள விக்ரஹத்தை – நினைத்தால் ஆகிய தாரணையும்
தாரை அறா நினைவு ஒழுக்கம் -தொடர்ந்து -இடைவிடாத- நினைவின் தொடர்ச்சியாகிய த்யானமும்
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி –
சமமுடைய சமாதி நலம் -சமம் உடைய -மனத்தின் அடக்கம் ஆகியவற்றை அங்கமாக உடைத்தான
புலன் அடக்கம் -ஞான கர்ம இந்த்ரியங்கள் அடக்கம் -சமம் -மனச் அடக்கம் -இரண்டாலும் ப்ரத்யாஹாரம் -என்னும் அங்கம் கூறப்பட்டது
நலம் சமாதி -ஆனந்த ரூபமான -சமாதி -தர்சன சமண சாஷாத்காரம் போலே விசதமாய் இருக்கை -பக்தி யோகத்தை
சாதிப்பார்க்கு இலக்காகும் -அனுஷ்டிப்பார்க்கு குறிப் பொருளாகி -தியானத்துக்கு விஷயமாகி -மோஷம் அளித்து அருளுவான்

யோகத்தின் அம்சங்கள்
யமம் -அஹிம்சை -சத்யம் -திருடாமை -காமத்தை அடக்குதல் -பொருளைச் சேர்க்க முற்படாமை -இத்யாதி –
நியமம் -பரிசுத்தி -இருப்பதைக் கொண்டு திருப்தி -விரதங்கள் -தவம் – வேதாந்த பரிசயம் –
கர்ம கர்த்ருத்வம் பலன் இத்யாதிகளை அவன் இடம் சமர்ப்பித்தல் –
ஆசனம் -பத்மாசனம் -பத்ராசனம் இத்யாதி
பிராணாயாமம் -சுவாசம் அடக்குதல்
ப்ரத்யாஹாரம் -இந்திரியங்களை சபித்தாதி விஷயங்களில் இருந்து மீட்பது
தாரணை –திவ்ய மங்கள விக்ரஹத்தை மனசில் கொள்ளுதல்
த்யானம் -இடைவிடாமல் தைலதாரா சிந்தனை
சமாதி -தர்சன சமண சாஷாத்காரம் -இது அங்கி -கீழே ஏழும் அங்கங்கள்
பக்தி யோக அம்சங்கள்
பாகவதர்கள் இடம் அன்பு / பகவத் ஆராதன ஹர்ஷம் / பகவத் சரித்திரங்களை கேட்க ஆவல் /
பேசி நினைத்து கேட்டு குரல் தழுதழுத்தது கண்ணீர் பெருக்கி மயிர் கூச்சு எரிதல்/ பகவத் ஆராதனம் /
டம்பம் அற்ற கைங்கர்யம் / தைல தாராவத் த்யானம் / பிரயோஜனாந்தர நிராசை

அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹம் மிகவும் உபாதேயம் என்றதாயிற்று
அஸூத் தாஸ்தே சமஸ்தாஸ்து தேவாத்யா கர்ம யோநயா -என்றபடி ப்ரஹ்மாதிகளுக்கு ஸூபத்வமும் ஆஸ்ரயத்வமும் இல்லையே
பகவானுடைய ஸ்வரூபத்துக்கு ஸூபத்வம் உண்டே ஆகிலும் ஆஸ்ரயத்வம் இல்லையே
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கே இரண்டும் உண்டு
சமமுடைய சமாதி நலம்
நலம் -ஆனந்தத்தை சொல்லி -இங்கு ப்ரீதியை காட்டும் -ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி ரித்ய பீதியதே –
பக்த்யாத்வ நந்யா சக்ய
இலக்காகும்
த்யானாதிகளுக்கு விஷயமாகவும் ப்ராப்யமாகவும்
ஸாத்ய பக்தி ஏக கோ வர நாராயண பரம் ப்ரஹ்மம்
அமரர் ஆராவமுது –
ப்ரஹ்மாதிகள் ஆராதனை
சோதி அனந்தன் கலியில் தொழுது எழுத்து நின்றானே
அம்புயத்தாள் ஆரமுதே -அமுத்தினாள் பிறந்த பெண் அமுதுக்கும் தான் அமுதானவனே
இப்படிப்பட்ட போக்ய வஸ்துவைப் பற்றிய பக்தி ஆரம்ப தசை தொடங்கி ஆனந்தமாய் பல துல்யமாய் இருக்குமே
ஸூ ஸூகம் கர்த்தவ்யம்
விளம்பேந பிராப்தி கர்ஜன ஸூகமே கஸ்ய விபுலம் -என்றது இங்கு இப்படி நிரூபித்து அருளப் பட்டது

———————————

இப்படி பக்தி யோகத்தின் பிரயாசத்தை நிரூபித்து அருளி இவ்வாயாசங்கள் ஒன்றும் இல்லாத
ஸூகரமான ப்ரபத்தியை அருளிச் செய்கிறார் –

புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு உற்றவருக்கும்
அகலகிலா வன்பர்க்கும் அன்றே தன்னருள் கொடுக்கும்
பகலதனால் பழம் கங்குல் விடிவிக்கும் பங்கயத்தாள்
அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே –8-

பங்கயத்தாள் -அகலகிலேன் என்று உறையும் அத்திகிரி அருள் முகிலே
புகல் உலகில் இல்லாது பொன்னருள் கண்டு -உபாயம் தான் அனுஷ்ட்டிக்கக் கூடியதாக இல்லாமையாலும் –
பொன் -ஸ்வர்ணம் போலே சர்வ புருஷார்த்தங்களுக்கும் சாதனமான -பகவத் கிருபையை
அகிஞ்சனர்கள் பக்கலில் இருக்கும் கிருபாதிசயத்தை கண்டு -புருஷகார பிரபத்தியால் பெற்று
கண்டு -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -ஆச்சார்ய உபதேச கடாக்ஷ மகிமையால் கண்டு
உற்றவருக்கு -தன்னைச் சரணம் அடைந்தவர்க்கும்
அகலகிலா வன்பர்க்கும் அன்றே -அவனின் விஸ்லேஷம் சஹியாத பக்தர்களுக்கு -அவர்கள் வேண்டிய காலத்திலேயே –
த்ருப்த பிரபத்தி -ஆர்த்த பிரபத்தி -இரண்டில் தாம் தாம் வேண்டிய காலத்திலேயே தன்னருள் கொடுத்துப்
பகலதனால் -மோஷம் ஆகிற பகலால்
பழம் கங்குல் விடிவிக்கும் -தாஸ பூத ஞானம் யாதவத்தாக பிரகாசிக்கும் அந்தமில் பேரின்ப வானாடு –
அநாதியான சம்சாரம் ஆகிய காள ராத்ரியில் நின்றும் நீக்கி-நிவ்ருத்தி செய்து அருளி –
பொழுது விடியச் செய்து அருளுவான் –மோக்ஷத்தைக் கொடுத்து அருளுவான் –

புகல் இத்யாதி
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க ஞானம் சக்தி அதிகாரம் இல்லாமை
உலகில்
இதனால் உலகில் தான் இருக்கும் வரை இவை இல்லாமை த்யோதிதம்
அநாகதந அநந்த கால சமீஷயாப்ய த்ருஷ்ட சந்தோரோபாய
பொன்னருள்
பக்தி யோகம் அபீஷ்டமான போது அத்தையும்
அதனால் பேராக் கூடிய மோக்ஷம் அபீஷ்டமான போது அத்தையும்
இதர புருஷார்த்தங்களையும் சாதித்துக் கொடுக்கும் பகவத் கிருபை
உபாயாந்தர ஸ்தானத்தில் உள்ள பகவத் விசேஷ கிருபை
உற்றவர்க்கும் -அன்பர்க்கு
என்றதால் பிரபத்தி சர்வாதிகாரம் என்றதாயிற்று
அன்றே தன்னருள் கொடுத்து
அபேக்ஷித்த காலத்திலே -திருப்த ஆர்த்த விபாகமும் நிரூபிதம்
பகலாதனால்
ஸ்வச் சாந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்
பழம் கங்குல் -சம்சார காளராத்ரி
க்ஷிப்ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிபதி யத் சங்கல்ப ஸூர் யோதய
உபாய தசையோடு உபேய தசையோடு மிதுனமே உத்தேச்யம்
இவளை பிரித்து தனியே ஆஸ்ரயிப்பார்கள் -சைத்ய ராவண அநு சாரிணாம் –
அங்கும் இங்கும் திருமால் இன்றி இன்மை கண்டு
கிருஷ்ண மேகம் படிந்து நிற்கும் ஹஸ்த கிரி

————————-

மேலே பலத்தை நிரூபிக்கக் கருதி முதலில் ஹார்த்தனான பரமாத்மாவினால் செய்யப்படும்
அர்ச்சிராதி கதியையும் ஸ்தான விசேஷ ப்ராப்தியையும் அருளிச் செய்கிறார் –

இரு விலங்கு விடுத்திருந்த சிறை விடுத்தோர் நாடியினால்
கரு நிலங்கள் கடக்கும் வழி காவலரால் கடத்துவித்துப்
பெரு நிலம் கண்டு உயிர் உணர்ந்து பிரியாமல் அருள் செய்யும்
உரு நலம் கொண்டு உறும் திருவோடு உயர் அத்திகிரியானே –9-

இரு விலங்கு விடுத்திருந்த சிறை விடுத்தோர் நாடியினால்
கரு நிலங்கள் கடக்கும் வழி காவலரால் கடத்துவித்துப்
பெரு நிலம் கண்டு உயிர் உணர்ந்து பிரியாமல் அருள் செய்யும்
உரு நலம் கொண்டு உறும் திருவோடு உயர் அத்திகிரியானே –9-

உரு நலம் கொண்டு -தனக்கு ஏற்ற திருமேனியையும் ஆனந்தத்தையும் கொண்டு
உறும் திருவோடு-தன்னுடன் பொருந்திய பிராட்டியுடன்-சந்நிஹிதனாகி
உயர் அத்திகிரியானே
இரு விலங்கு விடுத்து -உபாயம் அனுஷ்டித்த ஜீவனுக்கு புண்ய பாபங்கள் ஆகிய இரண்டு விலங்கையும் நீக்கி
இருந்த சிறை விடுத்து -அநாதி காலம் -இது வரை இருந்த சரீரம் ஆகிய சிறையினின்றும் விடுவித்து
தோர் நாடியினால் -அத்விதீயமான –ஹிருதயத்தில் மத்யத்தில் உள்ள நாடி -ஸூஷ்ம நாடி -ப்ரஹ்ம நாடி -மூர்த்தன்ய நாடி –
கரு நிலங்கள் கடக்கும் வழி -கர்ப்ப வாசத்தைக் கொடுக்கும் ப்ராக்ருத -ஸ்தானங்கள் ஆகிய லோகங்களை
தாண்டிச் செல்லலும் அர்ச்சிராதி மார்க்கத்தை
காவலரால் கடத்துவித்துப் -ஆதி வாஹிகர்களால் தாண்டுவித்து
பெரு நிலம் கண்டு-பரமபதத்தை பிரத்யக்ஷமாக – பார்த்து
உயிர் உணர்ந்து – தன்னுடைய ஜீவாத்ம ஸ்வரூபத்தை உள்ளவாறு அறிந்து
பிரியாமல் அருள் செய்யும் -நச புநராவர்த்ததே -என்று தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் படி அருள் புரிவான் –

விடுத்து -நடத்து வித்து -பேர் அருளாளன் க்ருத்யங்கள்
கண்டு -உணர்ந்து -ஜீவாத்மாவின் க்ருத்யங்கள்
சம்சாரி ஜீவன் குற்றவாளி யாகவும் / புண்ய பாபங்கள் விலங்காகவும் / சரீரம் சிறையாகவும்
அக்னி தேவதை -பகலின் தேவதை -சுக்ல பக்ஷ தேவதை -உத்தராயண தேவதை -வர்ஷ தேவதை –
வாயு தேவதை -ஸூர்யன் -சந்திரன் -மின்னலின் தேவதை -இந்திரன் பிரஜாபதி ஆகிய ஆதி வாஹிகர்கள்-வழிக் காவலர் –
பெரு நிலம்
த்ரிபாத் விபூதி -பெருமை மிக்க நித்ய விபூதி
உயிர் உணர்ந்து
ஸம்பாத்ய பிர்பாவ ஸ்வேந சப்தாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத் ரேம்
பிரகிருதி திரோதானம் -சாஸ்திரங்கள் மூலம் அறிந்த அபஹத பாப்மாத் வாதிகளை ப்ரத்யக்ஷமாக கண்டு
அன்றிக்கே அவன் அந்தராத்மாவாக இருப்பதை உணர்ந்து என்றுமாம்
ஸ்புட ததப்ருதக் ஸ்திஸ் சித்யத் குண அஷ்டக தத் பல
பிரியாமல்
அவதார தசையில் அவன் உடன் வந்து கைங்கர்யம் செய்வது புநராவ்ருத்தி ஆகாதே என்பது த்யோதிதம்
உரு நிலம்
தகர குஹரே தேவஸ் திஷ்டன் நிஷத் வர தீர்ப்பிகா நிபதித நிஜா பத்யாதித் சாவதீர்ண பித்ருக்ரமாத்
கிணற்றில் விழுந்த பிரஜையை தூக்க ஓக்க குதிக்கும் பிதாவைப் போலே அதி ஹெயமான சரீரத்தில் இருந்து
திருவோடு உயர்
ஸ்ரீ யபதியாய் அன்றோ இப்படி -ஸுலப்யம் சர்வ உத்க்ருஷ்டன்

———————————————

நித்ய ஸூரிகளுடன் ஒரு கோவையாக்கி -பரி பூர்ண அனுபவம் கொடுத்து அருளி
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் கொடுத்து அருளுவதை அருளிச் செய்கிறார் –

தந் திருமாதுடனே தாம் தனி யரசாய் யுறைகின்ற
வந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச் சேர்த்து
முந்தி இழந்தன வெல்லா முகிழ்க்கத் தந்து ஆட் கொள்ளும்
அந்தமிலா வருள் ஆழி யத்திகிரித் திருமாலே –10-

முழுக்க-அனைத்தும் -பாட பேதம் / முகிழ்க்க-அவகாஹிக்கும் படி
தனி யரசாய் – அத்விதீய சர்வேஸ்வரன்
முந்தி இழந்தன வெல்லா முகிழ்க்கத் தந்து ஆட்கொள்ளும்
கர்ம சம்பந்தத்தால் முன்பு இழந்த கைங்கர்யங்களை எல்லாம் மறந்து போகும் படி இப்பொழுது முழுவதும் கொடுத்து
அருளி மூழ்கடித்து எம்மை உஜ்ஜீவிக்கச் செய்து அருளுவார் –
தன் திரு மாதுடன்
பரம சாம்யா பத்தி அருளினாலும் தனது அத்விதீயம் தோன்ற ஸ்ரீ யபதித்தவம்
ஈஸ்வரோஹம் அஹம் போகி-அங்கு நீதி வானவர் -கலக்குவாரும் கலங்குவாரும் இல்லையே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோள் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான்
வானவர்க்கு ஆவர் நற்கோவையே
அடியார்கள் உடன் கூடி -நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவ -ஏக ரசர்கள்
தஸ்மாத் க்ஷிப்ரம் ஸஹ அஸ்மாபிஸ் துல்யோ பவது ராகவ -அன்று ஈன்ற கன்று அன்றோ நாம் –
நித்ய முக்தர்கள் ஒரு தட்டுமாக நாம் ஒரு தட்டுமாக –

முந்தி இத்யாதி –
நாள் இழவே போக்கி பொருள் இழவு இல்லை என்னும்படி எல்லா அனுபவங்களையும் தந்து அருளும்
ப்ராசீன துக்கம் அபிமே ஸூகயந்நிவ த்வத் பாதாரவிந்த பரிசார ரஸ ப்ரவாஹ -என்றபடி
முன் இழந்தவை எல்லாம் மறந்து போகும்படி இப்போதைய அனுபவம்
தன் தாள் கொள்ளும்
தன்மை பெருத்தித் தன் தாள் இணைக் கீழ் கொள்ளும் அப்பன்
தன் தாள் இணைக் கீழ் சேர்த்தி அவன் செய்யும் சேமம் –
நித்ய கிங்கரதாம் பிரார்த்தயே
நித்ய கிங்கரா பவாநி
கதாஹாமேகாந்திக நித்ய கிங்கர
ஒழிவில் காலம் எல்லாம்
அத்திகிரித் திருமாலே
ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
ஊன் ஒட்டி நின்று என் உயிரினில் கலந்து இயல்வான் ஒட்டுமொ இனி என்னை நெகிழ்க்கவே

———————————–

பெரியோர்கள் நியமனத்தால் பிரவர்த்தித்த -ஸங்க்ரஹமான அர்த்த பஞ்சக பிரபந்தம்
க்யாதி லாப பூஜை ஆசை இல்லாமல் -ஸ்வயம் பிரயோஜனமாக வேதாந்த வேதிகளுக்கு பரம போக்யம் –

அயன் பணியும் அத்திகிரி யருளாளர் அடியிணை மேல்
நயங்கள் செறி கச்சி நகர் நான் மறையோர் நல்லருளால்
பயன்கள் இவை யனைத்தும் எனப் பண்டு உரைத்தார் படி யுரைத்த
வியன் கலைகள் ஈரைந்தும் வேதியர்கட்கு இனியனவே –11–

நயங்கள் சேர் கச்சி நகர் -என்றும் பாட பேதம் –

அயன் பணியும் -ப்ரஹ்மாவானால் வணங்கப்பட்ட அத்திகிரி யருளாளர் அடியிணை மேல்
நயங்கள் செறி -நயங்கள் நியாயங்கள் -நல்ல பயன்கள் பொருந்திய
கச்சி நகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்கள் இவை யனைத்தும் எனப் –
இங்கே அருளிச் செய்த பாசுரங்கள் முழுதும் சகல பலன்களையும் இருக்க வல்லன என்னும் படி
வேறு பலன்களை விரும்பாத படி இவற்றையே பிரயோஜனமாக கொள்வர் -அநந்ய பிரயோஜனர் ஆவார்
நல்லருளால்
இங்கு கிருபாகார்ய நியமனத்தை கிருபையாக நிரூபித்து இருக்கிறபடி
ஒவ்வொரு பாசுரங்களிலும் பிராட்டி சம்பந்தம் அருளிச் செய்வதால் உபாயமும் உபேயமும் மிதுனமே என்றதாயிற்று
ஸ்வயம் பிரயோஜனம் இந்த பாசுரங்கள் என்றவாறு
பண்டு உரைத்தார் படி யுரைத்த -முன்னோர் மொழிந்த ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளின் படியே
வியன்கலைகள் ஈரைந்தும் வேதியர்கட்கு இனியனவே-அதிசயமான கலைகள் ஆகிய இந்தப் பத்துப் பாசுரங்களும்
வேதாந்த அர்த்தங்களை அறிந்த மகான்களுக்கு மகிழ்ச்சியைத் தருவனவாகும்
வேதாந்தார்த்தங்களை நன்கு உணர்ந்த மகான்களே இப் பாசுரங்களின் இனிமையை அறிய வல்லார்கள் என்றவாறு –
அருளாளர்
பிரசாத பரமவ் -கிருபையைக் கொண்டே நிரூபிக்கும் படியான ஸ்வ பாவம்
அடி இணை மேல்
அர்த்த பஞ்சகம் நிரூபிக்க வந்தாலும் ஸ்தோத்தம் பண்ணுவதிலேயே நோக்கு
நயங்கள் சேர்
அல்வழக்குகள் ஒன்றும் இல்லாமல் ஞான அனுஷ்டானங்கள் நன்றாகவே உடையவர்கள்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் போலே
பாகவத கைங்கர்ய ரூபமாக அருளிச் செய்தது என்றதாயிற்று

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: