ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -விளக்கம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

இப்படி பூர்வார்த்தத்தாலே ஓர் அதிகாரி விசேஷத்துக்கு த்வ்யத்தில் பூர்வ கண்டத்திலே அனுசந்தேயமாய்
சர்வ தர்மங்களுக்குமுள்ள ப்ரபாவத்தையும் அவற்றுக்கு இல்லாத ஸ்வ அசாதாரண பிரபாவத்தையும் உடைத்தான
ஸக்ருத் கர்தவ்ய உபாய விசேஷத்தை அதிகாரி நைரபேஷ்யாதி விவரண பூர்வகமாக விதித்து
உத்தரார்த்தத்தாலே த்வயித்திலே உத்தர கண்டத்தில் பலத்தை நமஸ் சப்த சம்ஷிப்த அநிஷ்ட நிவ்ருத்தி
விவரண முகத்தாலே அருளிச் செய்தான் –

இங்கு பூர்வார்த்தத்தாலே அதிகாரி கிருத்யத்தை அருளிச் செய்தான் –
உத்தாரார்த்தத்தாலே சரண்யனாய் ஸ்வீ க்ருத பரனான தன் க்ருத்யத்தை அருளிச் செய்து
க்ருதக்ருத்யனான இவனைத் தேற்றுகிறான் –

இவ்விடத்தில் –
மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனாலே -நான் -தோற்றா நிற்க -மிகுதியான -அஹம் -என்கிற பதம் –
அர்த்த ஸ்வ பாவத்தாலே சர்வ பாப விமோசனத்துக்கு உறுப்பான அகடிதகடநா சக்த்யாதிகளை விவஷித்து ச பிரயோஜனம் ஆகிறது
அபராதம் பண்ணினவனை விலங்கிட்டு வைத்த சமா அதிகு தரித்ரனான நான் ஒரு வ்யாஜத்தாலே
உல்லாசித காருண்யனாய் அபராதத்தைப் பொறுத்து விடும் போது விலக்க வல்லார் இல்லை –
வேறு ஒருவனாலே இவனை முக்தனாக்கவும் ஒண்ணாது -என்று இங்கு தாத்பர்யம் –
இவ்வர்த்தம் –
மோக்ஷதோ பகவான் விஷ்ணு -பஸவஸ் பாஸிதா பூர்வம் பரமேண ஸ்வ லீலயா –
தேனைவ மோச நீ யாஸ்தே நான்யைர் மீசயிதும் ஷமா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
இத்யாதிகளிலே பிரசித்தம்

இவ் -அஹம் -என்கிற பதத்தில் –
சஹஜ காருண்யாதிகள் பேரணியாக பிரபத்தி அடியாக வந்த பிரசாத விசேஷம் இளவணியாய்
நிரங்குசமான ஸ்வாதந்தர்யம் சர்வ விரோதி நிராகரண அர்த்தமாக முன்னே நிற்கிறது –
அது எங்கனே என்னில்
சஹஜ காருண்யம் அல்ப வியாஜ்யத்தைக் கொண்டு அனந்த அபராதங்களை அநாதரிக்கும் படியான பிரசாதத்தை உண்டாக்குகிறது
இப் பிரசாத விசேஷம் காருண்ய உபஸ்லிஷ்டமாய்க் கொண்டு நிரங்குச ஸ்வாதந்தர்யத்தை ஆஸ்ரிதருடைய
சர்வ விரோதி நிராகரணத்துக்கு உறுப்பு ஆக்குகிறது
இப்படி சர்வ பாப விமோசனத்துக்கு அபேக்ஷிதமான சர்வ ஆகாரத்தாலும் விசிஷ்டனான ஈஸ்வரனுடைய நிரபேஷ
கர்த்ருத்வ தாத்பர்யமான -அஹம் -சப்தத்தில் அவதாரணம் பலிதம் –

த்வா -என்றது –
ந த்வே வாஹம் –ஸ்ரீ கீதை 2-12-முதலான
உபதேச பரம்பரையாலே -சித் அசித் ஈஸ்வர தத்வத்ரய விவேகம் பிறந்து –
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களினுடைய அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களைத் தெளிந்து
மத் பிராப்தி ரூபமான பரம புருஷார்த்தத்தைப் பெற வேண்டும் என்று அபி நிவிஷ்டனாய்
இதுக்கு உபதிஷ்டமான துஷ்கர உபாயாந்தரங்களிலே துவக்கற்றுப்
பிராப்யனாய்-சர்வ விரோதி நிராகாரண ஷமனான என் பக்கலிலே பரந்யாசம் பண்ணிக்
க்ருதக்ருத்யனாய்க் கோலின பல லாபத்தை பற்ற இனி ஒரு கர்த்தவ்யாந்தரத்தில் பிராப்தி இல்லாத உன்னை -என்றபடி –

இப்படி பந்த மோக்ஷ சக்தனான மோக்ஷ ப்ரதனையும்
அசக்தனாய் அவன் பக்கலிலே ந்யஸ்த பரனான முமுஷுவையும் சொல்லி -மேல்
சர்வ பாபேப்ய -என்று
பந்தங்களை சொல்லுகிறது –

பாபமாவது ஸாஸ்த்ர விதேத்யமான அநர்த்த சாதனம்
அநர்த்தமாவது பிரதிகூல பிராப்தியும் அனுகூல நிவ்ருத்தியும்
இங்கு பாப சப்தம் முமுஷுவைப் பற்ற அநிஷ்ட பலங்களான சாம்சாரிக புண்யங்களையும் சொல்லுகிறது –
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன–சாந்தி பர்வம் -196-6-என்கையாலே –
ஸ்வர்காதிகளும் முமுஷுக்கு நரகம் ஆகையாலே இவனுக்கு ஸ்வர்க்க ஹேதுவோடே நரக ஹேதுவோடே வாசி இல்லை –
ஆகையால் இறே முமுஷுவுக்கு பாபங்களை விடச் சொல்லுகிறாப் போலே –
த்ரை வர்க்கான் த்யஜேத் தர்மான் -என்று விதிக்கிறது –
இரு வல் வினைகளும் சரித்து -திருவாய் -1-5-10–என்கிறபடி
ஸூக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் முமுஷுக்கு நிராகாரணீயங்களாக விறே சொல்லுகின்றன –

இப்படி புண்ய பாப ரூபமான பந்த காரணத்தைப் பாப சப்தத்தால் சொல்லி
பஹு வசனத்தாலே
புண்ய பாபங்களினுடைய அனந்த்யத்தை விவாசிக்கிறது

இனி சர்வ சப்தத்தாலே
விசேஷிக்கிறது என் என்னில் -பிராப்தி விரோதியான கர்மத்துக்குக் காரணமாயும்
கார்யமாயும் வருகிற அவித்யையும் -விபரீத வாசனையையும் -விபரீத ருசியையும்
ஸ்தூல ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி சம்பந்தத்தையும் பாப ராசியிலே சேர்க்கைக்காக –

இப்படி சர்வ பாபேப்யோ -என்கிற
விரோதி வர்க்கத்தை எல்லாம் –சூரணை -11–மநோ வாக் காயை என்று தொடங்கி
மூன்று சூரணைகளாலே சப்தமாகவும் ஆர்த்தமாகவும் அருளிச் செய்தார்

ஷபயித்வா அதிகாரான் ஸ்வான் சஸ்வத் காலேந பூயஸா-வேதஸோ யத்ர மோதந்தே
சங்கரா ஸூ புரந்தரா-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –17 /18-என்றும்
யாவததிகாரம் அவஸ்தித ஆதிகாரி காணாம்—என்றும் சொல்லுகிறபடியே
சிலருக்கு அதிகார அவசானத்திலே மோஷமாய் இருந்தது –

அதிகாரிகள் அல்லாதார்க்கும் -அநாரப்த கார்யே ஏவ து பூர்வே ததவதே -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–4-1-15–என்கிறபடியே
பிராரப்த கர்ம போக அவசனத்திலேயாய் இருந்தது

இப்படி இருக்க இவ்விடத்தில் ஆரம்பத்தை கர்மத்தை ஷமிக்கை யாவது என் என்னில் –
பல பிரதான ப்ரவ்ருத்தமான கர்மத்திலும் ஜன்மாந்தர திவ ஸாந்த்ர ஸ்தித் யாதிகளுக்கு ஆரம்பகமான அம்சமும்
இஸ் ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு அநிஷ்டமாய்-அத்தையும் பற்ற இவன் சோகிக்கில் அவ்வம்சத்தையும் ஈஸ்வரன் ஷமிக்கும்
அப்போதே மோக்ஷம் பெற்று அன்று தரிக்க மாட்டாத ஆர்த்தி அதிசயம் யுடையாருக்கு அஷ் க்ஷணத்தில்
பிராரப்த கார்யமான கர்மத்தை நிஸ் சேஷமாக ஷமிக்கும் ஆகையால் ஆரப்த கர்மத்தை க்ஷமிக்க வேணும்
என்று அபேக்ஷிக்கக் குறை இல்லை –

இவ்விடத்தில் பிரபத்தி காலத்துக்கு முன்புள்ளவற்றை -க்ருதான் -என்று எடுத்து –
பின்புள்ளவற்றை கரிஷ்யமாணான் -என்று சொல்லா நின்றது –

பிரபத்தி காலத்தில் பண்ணுவன சில பாபங்கள் காண்கிறோம் -இப்படி இருக்க க்ரியமாணங்களை ஷமிக்கையாவது என் என்னில்
பிரார்ப்பதோபரி சமாப்தச்ச வர்த்தமான என்னும் ப்ரக்ரியையாலே பிரபத்திக்கு முன்பே தொடங்கி பின்பே தலைக்கட்ட வேண்டும்படி
சிரகால சாத்யமாய் இருக்குமவற்றையும் தத் க்ஷணத்தில் பிரமாதிகங்களையும் இங்கு க்ரியமாணங்கள் என்கிறது
கரிஷ்யமாணங்கள் ஆவன பின்பு தொடங்குமவை
இப்படி க்ரியமாண ஏக தேசங்களையும் கரிஷ்யமாணங்களாயும் உள்ள உத்தராகத்தில் புத்தி பூர்வகம் அல்லாதவை
ஈஸ்வரன் க்ஷமிக்க ஸ்லேஷியாதே போம்
புத்தி பூர்வகங்களானவை ப்ரபன்னனுக்கு ப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்-ஸ்ரீ லஷ்மி தந்திரம் -17-91–
என்கையாலே புந பிரபத்தியாலே ஷமிக்கும் –

சர்வேஸ்வரன் தான் மோக்ஷம் தர நினைக்கும் போது பாதங்கங்களும் விலக்காகா என்னும் வார்த்தையும்
புத்தி பூர்வ உத்தராகத்தில் நிக்ரஹமும் வாராது பிராயச்சித்தமும் வேண்டா என்றபடி அன்று –
ப்ரஸாதத்தாலே அவன் பிரசன்னனானால் மோக்ஷம் அவசியம் பாவிக்கும் என்றபடி –
இதுக்கு இப்படி ஈஸ்வரன் புன பிரபத்தி யாகிற பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் ஷமா பலம்

ப்ரியதமாய் உடம்பில் அழுக்கையும் வத்சத்தினுடைய வழும்பும் போலே பிரபன்னனுடைய தோஷம் என்கிற வார்த்தையும் –
துஷ்டரும் சரணாகதரானால் ஈஸ்வரன் கை விடாதே திருத்தும் என்றபடி
இங்கன் அன்றிக்கே புத்தி பூர்வக உத்தராகமும் ஈஸ்வரனுக்கு பாக்யம் என்று விவஷிதமானால்
பிரபன்னனுக்கு இதுவே யதா சக்தி சம்பாத்யமாம்

பிரகிருதி விசேஷ ஸ்வபாவத்தால் அபராதங்கள் புத்தி பூர்வகமாக வந்தாலும் புன பிரபத்தி பண்ணாதார் பக்கலிலும்
தேவம் சார்ங்க தரம் விஷ்ணும் யே பிரபன்னா பராயணம் –
ந தேஷாம் யம சா லோக்ய ந ச தி நரகவ் கச யஸ்மின் கஸ்மின் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந
வாஸூதேவரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே –ஸ்ரீ வாமன புராணம் –94-43-இத்யாதிகளில் படியே
நரகாதிகள் வராத படி பண்ணி
ராஜ புத்ராதி அபராதத்தில் போலே லகு ப்ரத்யவாயத்தாலே கண் அழிக்கிறதுவும் ஷமா விசேஷம்
பாபங்களுக்கு த்ருஷ்டா ப்ரத்யவாயங்களும் நரகாதி ப்ரத்யவாயங்களும் உண்டாய் இருக்க
நரகாதிகள் இவனுக்கு இல்லை என்று விசேஷ வசனங்கள் சொன்னால்
த்ருஷ்டா ப்ரத்யவாயங்களுக்கு பாதகர் இல்லை -வசன விரோதத்தில் நியாயம் ப்ரவர்த்தியாது –

சாபராதருமாய் -அனுதாபமும் இன்றிக்கே புன பிரபத்தியும் பண்ணாதே இருப்பார் சில ப்ரபன்னர்க்கு
உப க்லேசங்களாகச் சொன்ன காணத்வாதி த்ருஷ்டா ப்ரத்யவாயங்கள் காணாது இரா நின்றோம்
என்கை மந்த சோத்யம் –
அவர்களுக்கும் அபராதாதி தாரதம்யத்துக்கு நாநா பிரகார தாப த்ரய அனுபவம்
உபயுக்த ஞான மாந்த்யம் -இங்குள்ள பகவத் அனுபவ ரஸ சங்கோச விச்சேதங்கள் –
பகவத் பாகவத கைங்கர்ய ரஸ விச்சேதம் -பகவத் அபசார பாகவத அபசாராதிகள் -சிஷ்ட கர்ஹா பஹிஷ் காராதிகள் —
ஸூ ஹ்ருத விசேஷ நாசம் -சாத்விகாநாதரம்-மநோ ரத பங்க கிலேசம் -என்று
இப் புடைகளில் ஏதேனுமோர் உப க்லேச ரூபமான ப்ரத்யவாயம் காணலாம் –

அக்ருத்ய கரண க்ருத்ய அகராணாதி ரூபங்களான நாநாவித பாபங்களுக்கு இப்படி நாநாவித
த்ருஷ்டா ப்ரத்யவாய கரத்வமும் ஸ்ருதிகளிலும் மன்வாதி தர்ம சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராண பகவத் சாஸ்திரங்களிலும் பிரசித்தம்
ஆகையால் காணத்வாதி-(கண்கள் குருடாதல் போன்ற ) உபக் கிலேச விசேஷ உதாஹரணமும்
உப லக்ஷணம் என்னும் இடமும் வாக்ய உபக்ரமத்தில் சமுதாய நிர்தேசாதிகளாலே சித்தம்

வசன பல ஸித்தமாய்-புத்தி பூர்வ உத்தராக பலமான உப கிலேச வர்க்கத்தை
பிராரப்த கர்ம விசேஷ பலம் என்று நிஷ் கர்ஷிக்க விரகில்லை-
இவை யதா சம்பவம் உபயவித கர்மத்தாலும் வரும் –
ஆகையால் இறே புத்தி பூர்வக உத்தராகத்துக்கு சாத்விகர் அஞ்சிப் போருகிறது
இங்கன் அல்லாத போது புன பிரபத்தி விதாயக சாஸ்திரமும் அப்படிக்கு
சிஷ்ட அனுஷ்டானமும் பூர்வ சம்பிரதாயமும் விரோதிக்கும்

அபசார அநந்தரம் அனுதாபம் பிறந்தது இல்லையாகில் ஞானம் பிறந்தது இல்லை யாகக் கடவது
என்ற நஞ்சீயர் வார்த்தைக்கும்
அனுதாபம் பிறவாதாருடைய ஞான மாந்த்யத்திலே தாத்பர்யம் சோபாதிகளான பகவத் அபிப்ராய பேதங்களுக்கு
ஈடாக வரும் புத்தி பூர்வ அபசாரம் சிலர்க்குப் பிறவாது –
சிலர்க்குப் பிறந்தவை அனுதாபிகளாலே கழியும் -கடின ப்ரக்ருதிகளுக்கு அனுதாபம் பிறவாது –
ஆகையால் புத்தி பூர்வக உத்தராகம் பிறந்தால் அனுதப்த்தனாய் புன பிரபத்தி பண்ணாத போது
உப க்லேசம் சொல்லுகிற ஸ்ருத் யாதிகளின் கட்டளையில் லகு ப்ரத்யவாயத்தாலே தீரும்
விவேகா நாம் ப்ரபந்நானாம் தீ பூர்வகஸ் யநுத்யம
மத்யாநாநுதாபாதி சிஷா கடின சேதஸாம் —
விவேகம் அடைந்த பிரபன்னன் புத்தி பூர்வக பாபங்களை செய்ய மாட்டான்
நடுத்தர பிரபன்னனுக்கு வருந்துதல் மற்றும் பிராய்ச் சித்தம் உண்டாகும்
கடினமான மனம் கொண்டவர்களுக்குச் சிறிய தண்டனைகள் உண்டாகும் -என்றவாறு

ஆனபின்பு ஒரு படியாலும் பகவத் நிக்ரஹம் வாராமைக்காக புத்தி பூர்வ அபராதம் பரிஹரணீயம்
ப்ரீதிமேவ சமுதிச்ய ஸ்வதந்த்ர அஞ்ஞான அநு பாலநே
நிக்ரஹ அநு தய அப்யஸ்ய நாந்தரீயக ஏவ வா —
பகவத் ப்ரீதியே பலமாக எண்ணியபடி -அவன் ஆஞ்ஜையைப் பின் பற்றி இருக்க
அவன் தண்டனை கிட்டாமல் இருத்தல் என்பதே நாம் வேண்டாமல் தானாகவே வரும் பலமாகும்

இப்படி யச சக்தி அபராதங்களைப் பரிஹரித்துக் கொண்டு போகா நின்றால்
பாகவத அபசாரமும் அதுடையாரோடு சம்சர்க்கமும் போரப் பரிஹணீயம் –
ப்ரஹ்ம வித் பாப வர்க்காணாம் அனந்தநாம் மஹீயசாம்
தத் த்வேஷி ஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் தத் அபராதத
சாபராதேஷூ சம்ஸர்கே அபு அபராதான் வஹத்யசவ்
வோதுமீஸ்வர க்ருத்யாநி தத் விரோதாத பீப்சதி–

ப்ரஹ்மவித் அறியாமல் செய்த பாப பலன்கள் அவர்களை வெறுப்பவர் இடம் சேரும் –
ப்ரஹ்மவித்துக்கள் இடம் அபராதம் செய்தவர் இடம் சேர்ந்தவனும் அபராதம் செய்தவனும் ஆகிறான்
அபசாரம் செய்தவனை தண்டிக்க முனைந்தாலும் ஈஸ்வரன் செய்யும் தண்டித்தல் போன்ற
செயல்களைத் தான் சுமந்தவன் ஆகிறான்

தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன்
என் நினைவை இப் பவத்தில் இன்று மாற்றி இணை யடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து
முன் நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே நின்று
நன் நினைவால் நாம் இசையும் காலம் இன்றோ நாளையோ என்று நகை செய்கின்றானே —

மோக்ஷயிஷ்யாமி -என்றது உனக்கு இஷ்டமான போது முக்தனாக்குவேன் -என்றபடி –

சில பாபங்களை -ந ஷமாமி -ஸ்ரீ வராஹ புராணம் –என்கையும்
இங்கே -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையும் விருத்தம் அன்றோ -ஆகையால்
இது உபசந்த்தனமாம்-)மனசுக்கு ஆறுதலாக சொன்ன யுக்தி ) யத்தனை யன்றோ என்னில் –
இவை இரண்டும் பின்ன விஷயம் ஆகையால் விரோதம் இல்லை –
ந ஷமாமி என்றது பத்மபத்ர சதேநாபி ந ஷமாமி வஸூந்தரே -உபசார சதேநாபி ந ஷமாமி வஸூந்தரே-
என்றால் போலே -சொல்லுகிற போலியான ப்ராயச்சித்தாந்தரங்களால் ஷமியேன் என்றபடி –
இங்கு சர்வ பாப ப்ராயச்சித்தமாய் இருப்பதோர் உபாய விசேஷத்தாலே எல்லாவற்றையும் ஷமிப்பேன் என்கிறது
யதி வா ராவண -வரண ஸ்வயம் –யுத்த -18-34—என்று இறே அபிப்ராயம் இருப்பது –
இப்படி வியவஸ்தித விஷயமாக வசனங்கள் தாமே காட்டுகையாலே விரோதம் இல்லாமையால்
இது உபசந்நதநம் மாத்ரம் அன்று
இங்கன் அகலாத போது பக்தி பிரபத்தி ரூப மோக்ஷ உபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்கள்
எல்லாம் வ்யாகுலங்களாம்

இங்கு பாபங்களின் நின்றும் விடுவிக்கையாவது
அநாதியான விபரீத அனுஷ்டானத்தாலே பிறந்த நிக்ரஹ அபிப்ராயத்தை ஈஸ்வரன் தான் விடுகை –
இந் நிக்ரஹ நிவ்ருத்தியாலே நிக்ரஹ கார்யங்களான அவித்யாதிகள் எல்லாம் நிவ்ருத்திகளாம்
ஈஸ்வரனுடைய நிக்ரஹ நிவ்ருத்தியாவது -மத் ப்ரஸாதாத்-ஸ்ரீ கீதை -18-56–என்கிற அபிப்ராய விசேஷம்
ஜீவனுக்கு அவித்யாதிகளுடைய நிவ்ருத்தியாவது ஞான விகாசாதிகள் –

இவனுக்கு இப்படி புண்ய பாப ரூபமான சம்சார காரணம் கழியும் க்ரமம் எது என்னில்
உபாய விரோதிகள் முன்பே ஸ்வ ஹேதுக்களால் கழிந்ததால் பிரார்ப்பதே தரங்களாய்ப்
பிராப்தி விரோதிகள் ஆக வல்ல பூர்வ புண்ய பாபங்கள் உபாய ஆரம்பத்திலே நிஸ் சேஷமாகக் கழியும் –
உத்தரங்களான பாபங்களில் புத்தி பூர்வம் அல்லாதவையும் தேச கால வைகுண்யாதிகளால் வருமவை ஒன்றும் லேபியாது
உபாயத்தில் உத்தி பூர்வ உத்தராகங்கள் ஸ்வ அதிகார அனுகுண பிராயச்சித்த விஸ்லேஷத்தாலே யாதல்
சிஷார்த்தமான லகு பல விஸ்லேஷத்தாலே யாதல் தீரும்
பிரபன்னனுக்கு ப்ராரப்தத்தில் இசைந்த காலத்துக்குள்ளே விபக்வமாம் கரமாம்சம் அனுபவத்தாலும்
அவாந்தர பிராயச்சித்தத்தாலும் நாஸ்யம்
மேல் உள்ளத்து எல்லாம் உபாய மாஹாத்ம்யத்தாலே கழியும்
உபய பாவனா க்ரமத்தாலே வந்த புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் பிரதிபந்தகம் இல்லாதவையும்
உபாசகனுக்கு வித்யா அனுகுண பூர்வ உத்தர புண்யங்களும் பல பிரதானத்தாலே கழியும்
வித்யைக்கு அனுப யுக்த புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் பிரதிபத்த பலன்களும்
வித்யோ பயுக்த பூர்வ உத்தர புண்யங்களில் அனுகூல பிரதிகூல பிரபல கரமாந்தர பலங்களாலே
நிருத்த அவசரங்களாய் பலம் கொடுக்கப் பெறாதே மிகுதியாய் நின்றவையும் அந்திம காலத்திலே கழியும்
இவ்வர்த்தம்
இதரஸ்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து -என்கிற ப்ரஹ்ம-ஸூத்ரத்திலே–4-1-14-
புண்ணியங்களுக்கும் அதே போன்று சரீரம் நீங்கும் நேரத்தில் -என்றவாறு- அபிப்ரேதம்

பகவத் ப்ரீதி மாத்திரமே பலமாக அனுஷ்டித்த கேவல கைங்கர்ய ரூப ஸூஹ்ருதங்கள் அப்போதே
தத்த பலங்களாகையாலே-அவற்றுக்கு அஸ்லேஷம் சொல்ல வேண்டா –
லோக ஸங்க்ரஹார்த்த விதியால் அனுஷ்டிக்குமவையும் தனக்கு அப்படியே பகவத் ஆஜ்ஞா சித்தங்கள் ஆகையாலே
அவையும் இவனுக்கு கேவல கைங்கர்யங்களாய் தத்த பலங்கள்-
இவற்றில் அநவதாநத்தாலே சாத்விக தியாக ரஹிதமாக அனுஷ்டிதங்கள் உண்டாகில் அவையும் எல்லாம்
தான்யேவ பாவோ பஹதாநி கல்க—மஹா பாரதம் -ஆதி பர்வம் –1-301-
தானம் போன்றவை தனக்காகச் செய்யப்படும் வரை பாபம் ஆகாது -என்றபடி –
என்கிறபடியே பாப துல்யங்களாய் மோக்ஷயிஷ்யாமிக்கு விஷயமாகும்

பலாந்தரார்த்தமாகப் பண்ணின பிரபத்யந்தரங்களும் தத்த பலங்களாகப் போகும்
பூர்வ பிரபத்திக்குக் கோரின பலத்தைப் பற்ற புன பிரபத்தி பண்ணுகை
மஹா விசுவாசத்தோடு கூட அனுஷ்டித்த பூர்வ பிரபத்தி பிரதி பந்தத்தாலே கூடாது
அநேக ப்ரபத்திகள் கூட ஏக பல சாதனம் என்று நினைத்து அனுஷ்ட்டித்தாலும் உபாயாந்தரச் சாயையாம் –
வித்யா மஹாத்ம்யத்தாலே இக்கர்மங்களுக்கு விநாசம் ஆவது
ஈஸ்வரன் இவற்றுக்குப் ப்ராப்தமான பல பிரதான அபிசந்தியை விடுகை –
அஸ்லேஷமாவது இவ் வாஸ்ரிதர் திறத்தில் இக்கர்ம பல பிரதான அபி சந்தி உதியாது ஒழிகை –

இப்படி சர்வ கர்மங்களும் கழியா நிற்க ஸூஹ்ருத்துக்களும் த்விஷத்துக்களும் கூறிட்டுக் கொள்ளுமவை எவை என்னில் –
அஸ்லேஷ விநாச விஷயங்களும் புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் கரமாந்தர பிரதிபத்த பலன்களும்

இவற்றை ஈஸ்வரன் உபாய ஆரம்பத்திலே ஸூஹ்ருத்துக்கள் பக்கலிலும் த்விஷுக்கள் பக்கலிலும் ஸங்க்ரமிப்பியாதே –
அந்திம தசை அளவும் பார்த்து இருக்க வேண்டுவான் என் என்னில் –
இவ் வாஸ்ரிதர் பக்கல் பண்ணின ஆனுகூல்யத்துக்கு மேல் விபரீதம் செய்யில் இஸ் ஸூஹ்ருதங்களை
ஸங்க்ரமிப்பியாது ஒழிகைக்காகவும்-
ஆஸ்ரிதர் பக்கலில் பண்ணின ப்ராதிகூல்யத்துக்கு மேல் க்ஷமை கொள்ள அவசரம் கொடுக்கைக்காகவும் –
இவ் வாஸ்ரிதருடைய அந்திம சரீர விஸ்லேஷத்து அளவும்
இவர்களுடைய புண்ய பாபங்களை அசல் பிளந்து ஏறிடாது ஒழிகிறான் –
ஸ்வர்க்காத்யர்த்த ஸூஹ்ருதம் முமுஷுவுக்கு பாபம் ஆகையாலே அது முமுஷுவான ஸூஹ்ருதத்தின் பக்கல் ஸங்க்ரமியாது

ஆரேனும் பண்ணின கர்மங்கள் வேறே சிலர் பக்கலிலே ஸங்க்ரமிக்கை யாவது என் என்னில்
இக்கர்த்தாவைப் பற்ற ஈஸ்வரனுக்கு வரும் நிக்ரஹ அனுக்ரஹங்களோடே சமானமாக இவனுடைய
சத்ரு மித்ரர்கள் பக்கலில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் உதிக்கை –
ஆரேனும் அனுஷ்டித்த கர்மங்களுக்கு ஆரேனும் பக்கலிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் பிறந்தால்
அதி பிரசங்கம் வாராதோ என்னில் இதுவும்
முமுஷு விஷயத்தில் அனுகூல பிரதிகூலர்க்கு உபசார அபசார ரூபமான கர்மம் அடியாக வருகிறது ஆகையால் அதி பிரசங்கம் இல்லை
ஆகையால் இறே உதாசீனர் பக்கலிலே ஸூஹ்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் ஸங்க்ரமிக்கும் என்னாது ஒழிகிறது –
பல ஸாரூப்ய மாத்திரத்தாலே இங்கு ஸங்க்ரமண உபசாரம்
இஸ் ஸூஹ்ருத துஷ்க்ருத ஸங்க்ராந்தி சொல்லுகிற ஸ்ருதியாலே ஈஸ்வரனுக்கு அத்யந்த பிரியனான
ஜ்ஞாதி விஷயத்தில் பண்ணின உபசார அபசாரங்களால் வரும் ப்ரீதி கோபங்களினுடைய தீவ்ர தமத்வம் ஸூசிதமாயிற்று

ஸூ துஷ் கரேண சோசேத்ய–ஸ்ரீ கீதை -18-66–தன்னால் செய்ய இயலாது என்று யார் ஒருவன் உள்ளானோ
அவனுக்கு அந்த உபாயத்தின் இடத்தில் நானே நிற்பேன் -என்ற ஸ்லோகத்தில் சொன்ன யோஜனையில்-
சர்வ பாபேப்ய–என்றது அதிகாரியுடைய அபேக்ஷைக்கு ஈடாகப்
பிராப்தி விரோதிகளையும்
உபாய விரோதிகளையும்
பிரதிகூல அனுபவ ஹேதுக்களையும்–ஸங்க்ரஹிக்கிறது

இங்கு பிராப்தி விரோதியாவது -ச அபராதனான இவன் நம்மை அனுபவிக்கக் கடவன் அல்லன்-என்கிற பகவத் சங்கல்பம்
உபாய விரோதி யாவது -நம்மை இவன் தெளிந்து வசீகரிக்கக் கடவன் அல்லன் -என்கிற சங்கல்பம்
பிரதிகூல அனுபவ ஹேது வாவது -அவ்வோ பிரதிகூல கர்ம அனுஷ்டங்களாலே வந்த அவ்வோ பல பிரதான சங்கல்பம்

முமுஷுவைப் பற்ற சர்வ நிக்ரஹங்களும் நிவ்ருத்தங்கள் ஆனால் நிக்ரஹ கார்யங்களாம்
பின்பு காரணா பாவத்தால் கார்யமான பிரதிகூலங்களில் ஒன்றும் வாராது
இது அநாவ்ருத்தி சப்தாத்-4-4-22–என்கிற ஸூத்ரத்திலே விவஷிதம்
இந்த நிஷ் கர்ஷங்கள் எல்லாம் ஸ்ரீ பாஷ்யத்திலே சத் ஸம்ப்ராயத்தோடே கூடச் சிர பரிசயம் பண்ணின-
சிரமத்துடன் தகுந்த முறையில் கற்ற – மஹா ப்ராஞ்ஞருக்கு நிலமாய் -அறியக் கூடிய விஷயமாய் -இருக்கும்

இப்படி சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று
கார்ய காரண ரூப ஸமஸ்த பிரதிபந்த ப்ரவாஹ நிவ்ருத்தியைச் சொல்ல –
(காரண அவஸ்தை பிரதிபந்தகம் -பகவத் தண்டம்-கார்ய அவஸ்தை பிரதிபந்தகம் -அவித்யாதிகள் )
ஸ்வத ப்ராப்தமான பரிபூர்ண பகவத் அனுபவ ஆவிர்பாவம் சொல்லிற்று ஆயிற்று
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷாள நாந்மணே –தோஷ பிரஹானான் ந ஞானம் ஆத்மன க்ரியதே ததா —
யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜாலம்பரம் -சதேவ நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத –
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதா ததயோ குணா –பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே –
ஸ்ரீ விஷ்ணு தர்மம் -104–55-56-57–என்று ஸ்ரீ சவ்ந பகவான் அருளிச் செய்தான் –

ஞான த்ரவ்யமும்-தர்ம பூத ஞானமும் – இதினுடைய சர்வ விசேஷ விகாசத்துக்கு ஸ்வரூப யோக்யதா
ரூபையான சக்தியும் நித்யங்கள் ஆகையால்
அவற்றில் ஆவிர்பாவ சப்தம் முக்கியம் –
சர்வ விசேஷ விகாசமும் -துக்க நிவ்ருத்தியாதிகளும் -சங்கல்பாதிகளும் -கைங்கர்யங்களும் –
ஆகந்துகளாய் இருக்க இவை நிவ்ருத்தி பிரதிபந்த ஸ்வரூப உபாதிகங்கள் ஆகையால்
மேலே முழுக்க நடக்கும்படி தோற்றுகைக்காக இவற்றில் —
ஆவிஸ்ஸ் யுர்மம சஹஜ கைங்கர்ய விதய–அஷ்ட ஸ்லோகி -3–இத்யாதிகளாலே ஆவிர்பாவ சப்தம் ப்ரயுக்தமாகிறது —

ஸ்வரூப யோக்யத்வத்தாலே
கார்போபாதிகமாக பஹு விதமான ஆனுகூல்ய ப்ராதிகூல்யங்கள் நடந்த பகவத் விபூதியான வஸ்துக்களுக்கு
எல்லாம் மேல் எல்லாம் மோக்ஷ தசையில் ஆனுகூல்யமே ஸ்வரூப ப்ராப்தமாகையாலே –
அதிலும் ஆவிர்பாவ சப்தத்துக்கு விரோதம் இல்லை –
ஆகையால் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்ன இவ்வநுகூல அவஸ்தாந்தரம் சித்தமாயிற்று –

ஏக சப்தத்துக்கு உபாய பல ஐக்கியம் பொருளான போது இஷ்ட பிராப்தியும் இஸ் ஸ்லோகத்தில் ஸூ வியக்தமாகச் சொல்லிற்றாம் –
கீழில் ஸ்லோகத்தில்-18-65-விசதமாகச் சொன்ன அர்த்தம் இங்கு பிராப்தி விரோதியைக் கழிக்கையாலும்-
ஏக சப்தத்தில் -விவஷா விசேஷத்தாலும் சொல்லிற்றாம் –
ஆனபின்பு இது சாபேஷமாய்க் கொண்டு -கீழில் ஸ்லோகத்துக்கு சேஷமாகிறதன்று

சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்ற இவ்வளவாலே
மாமேவைஷ்யஸி -என்று சொன்ன பகவத் பிராப்தி சித்திக்குமோ –
சர்வ பாப நிவ்ருத்தி உண்டாயே பகவத் பிராப்தி அன்றிக்கே -ஸ்வ ஆத்ம மாத்ர அனுபவ ரூபமான
கைவல்யம் பெறுவாரும் இல்லையோ
பகவத் ப்ராப்தியில் காட்டில் வேறுபட்ட கைவல்யம் –
இஹ லௌகிகர் மைஸ்வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம்-கைவல்யம் பகவந்தம் ச மந்த்ர அயம் சாதயிஷ்யாமி-என்று
ஸ்ரீ நாரதாதிகளால் சொல்லப் பட்டது இறே –
ஸ்ரீ ஆளவந்தாரும் ஐஸ்வர்ய அக்ஷர யாதாம்ய பகவச் சரணார்த்தி நாம் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -12-என்றும்
சம்ஸ்ருத் யக்ஷர வைஷ்ணவாத் வஸூ -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகி -3-என்றும் அருளிச் செய்தார்-
ஸ்ரீ கத்யத்திலும் -சர்வ காமாம்ச்ச ச அக்ஷரான் -என்கிற வாக்கியமும் உபாத்தமாயிற்று –
ஸ்ரீ கீதா பாஷ்யாதிகளிலும் இவ்வர்த்தம் பிரபஞ்சிதம் –

ஆகையால் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற சர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் ப்ராப்திக்கும்
பொதுவன்றோ -என்கை மந்த சோத்யம் -எங்கனே என்னில்
சர்வ பாபங்களும் கழிந்தால் ஸ்வத ப்ராப்தமான பகவத் அனுபவத்தை இழந்து கிடைக்கைக்குக் காரணம் இல்லாமையாலே
அப்போது பகவத் அனுபவ ரஹிதமான ஆத்ம மாத்ர அனுபவம் கடியாது –
ஆகையால் அவ்வஸ்தையில் ஐஸ்வர்யமும் ஜரா மரணாதி துக்கங்களும் வருகைக்கு ஈடான கர்மங்கள் கழிந்து
பரிபூர்ண பகவத் அனுபவத்துக்குப் பிரதிபந்தகமான கர்மம் கழியாதே கிடக்கிற அளவிலே –
யம் லப்த்வா சா பரம் லாபம் மந்யதே நாதிகம் தத—ஸ்ரீ கீதை –6-22-என்னும்படி இருப்பது ஒரு ஸ்வ ஆத்ம அனுபவ ஆனந்த விசேஷம் –
ஆத்மார்த்த சேத்த்ரய அப்யதே தத் கைவல்யஸ்ய சாதகா –ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –27-என்று சொல்லுகிறபடியே –
தனக்கு ஸக்யமாய் இருப்பதோர் உபாய விசேஷத்தாலே சித்தித்த இவ்வனுபவத்தை –
அசித் அனுபவத்தோடும் பகவத் அனுபவத்தோடும்
துவக்கு இல்லாத படியால் கைவல்யம் என்று பேரிட்டார்கள் –

ஸ்ரீ பகவத் ப்ராப்தியில் கைவல்ய சப்தம் சர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது -ஆத்ம மாத்ர அனுபவ விஷயமாக
ஸ்வ ஆத்ம அநுபூதிரிதி யா கில முக்தி ருத்தா–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –81-இத்யாதிகளில் பிரயுக்தமான முக்தி சப்தமும் –
விகதேச்சா பய க்ரோதோ ய சதா முக்த ஏவ ச –ஸ்ரீ கீதை -5-28-இத்யாதிகளில் போலே நிர்வாஹம்
ஜரா மரண மோஷாய –ஸ்ரீ கீதை -7-29-என்றதுவும் தேவர்களுடைய அபரத்வம் வ்யபதேசம் போலே அபேஷிகம் –
க்ரமேண முக்தி பர்யந்தமாம் விஷயத்தைப் பற்றச் சொல்லிற்று ஆகவுமாம் –

இப்படி விபவ வ்யூஹ சாலோக்யாதி மாத்திரத்தில் முக்தி சப்தமும் நிர்வாஹம்-
லோகேஷு விஷ்ணோர் நிவசாந்தி கேசித் சமீபம் ருச்சந்தி ச கேசி தந்யே அந்யே து ரூபம் சத்ருசம் பஜந்தே சாயுஜ்யம்
அந்யே ச து மோக்ஷ யுக்த –ஸ்ரீ மத் பாகவதம் என்று நியமிக்கப் பட்டது இறே-
இதில் சொன்ன சாயுஜ்யம் ஸ்ரீ பரமபதத்தில் சென்றவனுடைய போக சாம்யமாம் –

கேவல ஆத்ம அனுபவம் நித்யம் அன்று என்னும் இடமும் சாஷாத் மோக்ஷம் அன்று என்னும் இடமும் –
சதுர்விதா மம ஜனா பக்தா ஏவ ஹி தே ஸ்ருதா தேஷா மே காந்தின ஷ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா –
அஹமேவ கதிஸ்தேஷாம் நிராஸீ கர்ம காரிணாம்-யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மதா-
சர்வே ஸ்யவந தர்மாண பிரதிபுத்தஸ்து மோஷபாக்-என்கிற வசனத்தாலே சித்தம் –
முச்யே தார்த்தஸ் ததா ரோகாத் ச்ருத்வேமாமாதித கதாம் ஜிஜ்ஜாஸூர்லபதே பக்திம்
பக்தோ பக்த கதிம் லபேத்–சாந்தி பர்வம் -348-81-என்கையாலே ஸ்ரீ கீதையில் ஜிஜ்ஞாஸூ-7-16- என்கிற
ஆத்ம நிஷ்டனும் கிரமேண ஞானியாம் என்று யுக்தமாயிற்று –

மன்னுறில்–திருவாய் -1-2-5- என்கிற பகவத் அனுபவத்தை நித்யம் என்கையாலும் இதுக்கு வியவச்சேத்யமாய்ச் சொல்லும்
ஆத்ம மாத்ர அனுபவம் நித்யம் அன்று என்னும் இடம் வ்யவஞ்சிதம் –
இதுக்கு இறுதி கூடா –திருவாய் –6-9-10-இத்யாதிகளில் நாசம் இல்லை என்கிற பாசுரமும்
சாதுர்பாச்யாதி கர்மா பல விசேஷங்களில் அக்ஷயத்தவ யுக்தி போலே எனை ஊழி என்கிற அதிசிரகால ஸ்தாயித்தவ அபிப்பிராயம் –
யோகிநாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38–என்று
இவ்வாத்மா அனுபவ ஸ்தான விசேஷமும் சொல்லப்பட்டது –
இஸ் ஸ்தான விசேஷம் பரமபதம் அன்று என்னும் இடம் இப்பிரகரணம் தன்னிலே –
ஏகாந்திந சதா ப்ரஹ்மம் த்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை
பஸ்யந்தி ஸூரய–ஸ்ரீ விஷ்ணு புராணம் —1-6-39 —
என்று பகவத் பிராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரி த்ருஸ்யமான ஸ்தானாந்தரம் சொல்லுகையாலே சித்தம் –

பஞ்சாக்கினி வித்யாதிகளில் சொன்ன ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம அனுசந்தானம் பண்ணுவார்க்கு
பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதி கதியும் ப்ரஹ்ம பிராப்தியும் சொல்லப்பட்டது –
ஆகையால் இப் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டருக்கு ஆத்ம மாத்ர அனுபவ ரூபமான அவாந்தர பலம் வந்தாலும்
மது வித்யா நியாயத்தாலே ப்ரஹ்ம பிராப்தி பர்யந்தமாய் விடும் –

ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டமாயாதல் பிரகிருதி வியுக்தமாயாதல் இருக்கும் ஆத்ம வஸ்துவை ஸ்வரூபேணவாதல்
ப்ரஹ்ம த்ருஷ்டியாலேயாதல் பண்ணும் அனுசந்தானங்கள் நாலுக்கும் நாமாதி உபாசனங்களைப் போலே
அர்ச்சிராதி கதியும் ப்ரஹ்ம பிராப்தியும் இல்லை என்னும் இடத்தை –
அப்ரதீ காலம்பனாத் நயதீதி பாதராயண உபயதா ச தோஷாத் தத் க்ரதுச்ச -4-3-14-என்கிற ஸூத் ரத்திலே அருளிச் செய்தார் –
ஸ்ருதோபநிஷத்க கத்ய பிதானாச்ச -1-2-17–என்கிற ஸூத் ரத்திலும் ஒரு வித்யா விசேஷத்தில் உபாஸ்யன் பரமாத்மா என்கைக்கு
அர்ச்சிராதி கதி சொன்னதை ஹேதுவாய்க் கொண்டு சாதிக்கையாலே ஜீவ மாத்ர உபாசகனுக்கு
அர்ச்சிராதி கதியும் இல்லை என்னும் இடமும் சித்தமாயிற்று –
ஆகையால் ப்ரஹ்ம பிராப்தி இல்லாதார்க்கு இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிற -சர்வ பாப- நிவ்ருத்தி இல்லை –
சர்வ பாப நிவ்ருத்தி உடையோருக்கு ப்ரஹ்ம அனுபவ சங்கோசம் இல்லை –

இப்படி இங்கு சர்வ பாப நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே கேவல ஆத்ம அனுபவத்துக்கு காரணமாய்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷமும் கழிகையாலே மாமேவைஷ்யஸி என்று-18-65–
கீழ் ஸ்லோகத்தில் சொன்ன அர்த்தம் இங்கும் சித்தமாயிற்று –
மாமேவைஷ்யஸி என்கிற ப்ராப்தியாவது பரிபூர்ண அனுபவம்-
இப்பரிபூர்ண அனுபவ சித்திக்காக அர்ச்சிராதி கதியும் தேச விசேஷ பிராப்தியும் உண்டாகிறது –
இக்கிரமத்திலே இவ்வனுபவம் கொடுப்பதாக ஸ்வ தந்த்ரன் அநாதியாக நியமித்து வைத்தான் என்னும் இடம்
இக்கதி விசேஷாதிகளைப் பிரதிபாதிக்கிற சாஸ்த்ரங்களாலே சித்தம் –

இக்கதி விசேஷத்துக்கு முன்பு சாஸ்திரத்தாலே ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறிகிற போதும் யோகத்தாலே சாஷாத்காரிக்கிற போதும் –
விபவ லோகாதிகளில் பிராபிக்கும் போதும் பிறக்கும் பிரகாசம் சக்ருதாதீனமாய்க் கரணாயத்தமாய் வருகிறது ஆகையாலே
பரிமிதமுமாய் விச்சேதவத்துவமாய் இருக்கும் —
முக்த தசையில் பிறக்கிற பிரகாசம் சங்கோச விச்சேதங்களுக்குக் காரணம் ஒன்றும் இல்லாமையால்
பரிபூர்ண விஷயமுமாய்ப் புனர் விச்சேத ரஹிதமுமாய் இருக்கும் –
இவ் வனுபவ பரீவாஹமாய்-க்ரியதாம் இதி மாம் வத – ஆரண்ய -15-7-என்கிறபடியே
சேஷி உகந்த பரிபூர்ண கைங்கர்யம் வருகிறது –
பாரமார்த்திக என்கிற ஸ்ரீ கத்ய வாக்கியத்தில் சொன்ன பல பர்வ பரம்பரை எல்லாம்
இங்கே யதா பிரமாணம் விவஷிக்கப் படுகின்றன

இனி மேல் மாஸூச -என்கிற இத்தால் –
கீழ் அருளிச் செய்த அர்த்தத்தில் தீர்வு பிரகாசிதமாகிறது
சிலர் -மாஸூச -என்கிற இது விதியாகையாலே பிரபன்னனான பின்பு சோகிக்கை விதி அதிலங்கனமாய்-
இவனை உபாய பூதனான சரண்யன் நெகிழ்ந்து தன் காரியத்துக்கு தானே கடவனாகை யாகிற ப்ரத்யவாயம் உண்டாம்
என்று சொன்ன இடம் புத்தி பூர்வ உத்தராகத்தையும் –
சர்வ பாபேப்ய என்கிற இடத்தில் கூட்டித் தாங்களே பண்ணின வியாக்யானத்துக்கும்-
பிரபன்னனை சரண்யன் ஒருபடியாலும் கை விடான் -என்கிற வாக்யங்களுக்கும் விருத்தமாம் –
ஆகையால் இவ்வுபாயத்தில் இழியுமவனுக்கு சோக ஹேதுக்கள் எல்லாம் கழிகையாலே சோகிக்க வேண்டா
என்னும் இடத்தைச் சொல்லிக் கொண்டு விஸ்வாசத்தை த்ருடிகரிக்கையிலே தாத்பர்யம் –

பந்து நாச ஆதய பூர்வம் பஹவ சோக ஹேதவ
தத் தத் சமுசிதை சம்யக் உபதேசை அபோதிதா
ஸூ துஷ் கரத்வாத் தர்மானம் அபாரத்வாத் விரோதி நாம்
சித்த பல விளம்பவாத் ச சோக அத்ய விநிவார்யதே
அபிமத பலத்துக்கு துஷ்கர சாதனமும் இன்றிக்கே-சர்வ விரோதி நிவர்த்தன ஷமமுமாய்ப் பல விளம்பமும் இன்றிக்கே இருக்கிற
இவ்வுபாய விசேஷம் உபதிஷ்டமான பின்பு
உபாய தவ்ஷ்காரத் யாதிகள் அடியாக உனக்கு சோகிக்கப் பிராப்தி இல்லை –
இவ்வுபாயம் அனுஷ்ட்டித்தால் உன் கார்யம் எனக்குப் பரமாய் நானே பலியுமாய்
உன்னை ரஷியாது போது எனக்கு அவத்யமாம் படி இருக்கும் திசையிலும் தத் அநாதி துல்யனான உனக்கு
சோகிக்கப் பிராப்தி யுண்டோ என்று திரு உள்ளம்

இங்கு கழிக்கிற சோகம்
யதாவஸ்தித ஆத்ம உபதேசாதிகளாலே கழிந்த பந்து வதாதி நிமித்தமான பழைய சோகம் அன்று –
பிரகரண அனுகுணமான சோகாந்தரம் -எங்கனே என்னில் –
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய அஸூரி மதா–16-5–என்று பிரித்துக் சொன்னவாறே –
நாம் ஆஸூரா பிரக்ருதிகள் ஆகில் செய்வது என்-என்று சோகித்த அர்ஜுனனைப் பற்ற –
மாஸூச சம்பதம் தேவம் அபிஜாத அசி பாண்டவ -என்றால் போலே
இங்கு சீரிய பலத்தில் தீவ்ர சங்கம் நடவா நிற்க-சிரகாலம் ஸேவ்யமாய்-அந்தராய பாஹுலமாய்-அத்யந்த வஹிதர்க்கும்
க்ருச்சர சாத்யமான உபாயத்தையும் தன் அளவையும் கண்டு –
நமக்கு இவ்வுபாயம் தலைக்கட்டி எங்கே இப்பல சித்தி உண்டாகப் போகிறது -என்று சோகித்த அர்ஜுனனுக்கு –
க்ஷண கால சாத்யமாய் -சர்வ அந்தராய ரஹிதமாய் -ஸூகரமான உபாயத்தைக் காட்டிக் கொடுத்து –
அம்முகத்தாலே பல சித்தியில் -நிர்ப்பரனுமாய் நிஸ் சம்சயனமுமாம் படி பண்ணி மாஸூச என்று சொன்னால்
இது உபாயாந்தர த்வஷ்கர்யாதிகள் அடியாகப் பிறந்த சோகத்தைக் கழிக்கிறதாம் அத்தனை இறே –

இப்பகவத் கீதையில் முற்பட
பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கிப் பின்பு
பரம்பரையா மோக்ஷ காரணங்களான கர்மயோக ஞான யோகங்களையும் சாஷாத் மோக்ஷ சாதனமாக
வேதாந்த விஹிதமான பக்தி யோகத்தையும் ச பரிகரமாக உபதேசித்து
இதி தே ஞான முகாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா விம்ருச்யை தசேஷேண யதேச்சசி ததா குரு–18-63-என்று அருளிச் செய்தவாறே
அர்ஜுனனுடைய முகத்தில் உருவதலைக் கண்டு அருளி இருக்கச் செய்தே கடுக லகூ உபாயத்தை அருளிச் செய்யாதே
பரீஷாம் ச ஜெகந்நாத கரோத்யத்ருட சேதஸாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் 74-89–என்கிற கட்டளையைக் கண்டு அருளி -நாம்
இன்னது உனக்கு சாஷாத் மோக்ஷ சாதனமான பரிமஹிதம் -இத்தைப் பிரதானமாகக் கணிசித்து
இதுக்கு அனுரூபமாக வர்த்தி -என்று நிகமியாதே
ஏஷ மந்தா விதர்பாணாம் ஏஷ கச்சதி கோசலான் -வன பர்வம் -50-48-நளன் தமயந்தியிடம் என்னுமா போலே –
உபேக்ஷகத்வ சங்கை பண்ணலாம் படி –
யதேச்சசி ததா குரு –என்று சொல்லித் தலைக் கட்டினோம் என்று
இது வியாஜமாக சோகித்தான் என்று பாவித்து இன்னும் ஒரு நிலை பிரதானமான பக்தி யோகத்தை நிஷ்கர்ஷித்து –

உபதேசித்த பக்தி யோகம் தன்னையே -சர்வ குஹ்ய தமம் பூய-18-64-என்று தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே
அத்யாதரம் தோற்ற சப்ரத்யபிஜ்ஞமாம் படி -நிஷ்கர்ஷித்து நிகமிக்க-
அவ்வளவிலும் இவன் சோகம் இரட்டித்துத் தோற்றினபடியைக் கண்டருளின சாரதி ரூபனான சர்வேஸ்வரன் –
இனி இவன் அதி லகுவான மோக்ஷ உபாயத்தை உபதேசிகைக்குப் பூர்ண பாத்ரமானான் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்யப் போகிற சீரிய லகு உபாயத்துக்கு பிரஸம்ஸா ரூபமாக ஒரு கால ஷேபம் பண்ணாதே
கடுக சகல பல சாதனமான ஸ்வ விஷய சரணாகதியை உபதேசித்து –
இவனுடைய மநோ ரதத்துக்கும் சாரதியாய் சர்வ சோகத்தையும் கழிக்கிறானாகையாலே
இங்கு நிவாரிக்கிற சோகம் பழைய சோகங்களில் வேறுபட்டது என்னும் இடம் பிரகரண பரமர்சத்தாலே ஸூ வ்யக்தம் –

உபாயாந்தர ரஹிதனானவனைக் குறித்து -மாம் ஏகம் சரணம் வ்ரஜ-18 -66 – -என்று விதித்த கட்டளையிலே –
அசக்தனானவன் சக்தன் கையிலே பர சமர்ப்பணம் பண்ணுகையாலும்
இப்பிரபன்னனுக்கு இஸ் ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் நிரபரத்வமும்
சர்வ சக்தியாய் ஸ்வீ க்ருத பரனாய் ஆஸ்ரிதர் விஷயத்திலே சத்யவாதியான சேஷி –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி-18-66–என்று அருளிச் செய்கையாலே
நியஸ்த பரனான இவனுக்கு இனி ஆகாமி நரகாதி ப்ரத்யவாய சங்கா பிரசங்கம் இல்லாமையால் நிர்பயத்வமும்
இஸ் ஸ்லோகம்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -ஸ்ரீ நாச்சியார் -11-10-ஆகையால்
நிஸ் சம்சயத்வமும் பலிதம்
ஆகையால் இங்கு உபாய விசேஷ அனுஷ்டானங்கள் வந்தால் உபாய அனுபந்தியாயும் வரும் சோகத்தில் பிராப்தி இல்லை என்கிறது –

இத்தாலே சோக விசேஷ ஆவிஷ்டன் பிரபத்திக்கு அதிகாரி என்று தோற்றா நிற்க –
அஹம் பீத அஸ்மி -ஸ்ரீ ஜிதந்தே –1-8–என்றும் –
பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் ஸ்ரீ பெரிய திருமொழி -1-6-4–என்றும்
பீதனானவன் ப்ரபத்திக்கு அதிகாரி என்று சொல்லுகிறபடி என் என்னில்
கீழ் அபிமதம் சித்தியாதே நின்ற நிலையைப் பார்த்து சோகமும்
மேல் அபிமதத்துக்குப் பிரதிபந்தகங்களான
பிரபல விரோதிகளைப் பார்த்து பயமும் நடையாடுகிறதாகையாலே
முமுஷுவுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியிலும் இஷ்ட ப்ராப்தியிலும் ஒன்றைச் சொல்ல இரண்டும் வருமா போலே –
அதிகாரத்திலும் பய சோகங்களில் ஒன்றைச் சொல்ல இரண்டும் சித்திக்கும் –
அத்யந்த அகிஞ்சனனுக்கு இப்பய சோகங்கள் இரண்டும் விஞ்சி இருக்கும் –
ஆகையால் இங்கு அதிசயித சோக ஆவிஷ்டனான அதிகாரி விசேஷத்துக்கு அனுகுணமான உபாய விசேஷத்தைக் காட்டி
இவனை நிஸ் சம்சயனுமாய் -நிர்பரனுமாய் -நிர்பயனுமாய் -ஹஷ்டம நாவுமாக்கித் தலைக் கட்டுகிறது –
இவ் வதிசய பயத்தைப் பற்றி-
அஞ்சின நீ என்னை அடை என்றார் வந்தார் -ஸ்ரீ திருச்சின்ன மாலை -8–என்றும் சொன்னோம்

இப்படி க்ருதக்ருத்யனான இவனுக்கு
தத்து கர்ம சமாசரேத்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17-88- -என்று விஹிதமான
கர்த்தவ்யாந்தர கைங்கர்ய அனுபிரவிஷ்ட சதாசார்ய விசேஷம் என்னும் இடம் பூர்வாபர க்ரந்தங்களாலும்
இஸ் ஸ்லோகம் தன்னில் அக்ரியாவதநர்த்தாய-என்கையாலும் சித்தம் –
ஆகையால் மேல் பல சித்தியில் சம்சயம் இல்லாமையாலும் –
மோக்ஷ உபாயமாக ஒரு கர்தவ்ய சேஷம் இல்லாமையாலும்
இவனுக்கு உள்ள கர்தவ்யம் ஆஜ்ஜா அநு பாலந ரூபமான ஸ்வயம் பிரயோஜனம் ஆகையாலும்-
அபராத பிரசக்தமானால் அதிகாராந்தரத்தில் சொன்ன கட்டளையில் அநுதாபாதிகளாலே ஸூ பரிஹரம் ஆகையாலும்
இவன் ஹ்ருஷ்டமனாவாகக் குறை இல்லை
இந்த ஹர்ஷம் விவேகியாய் ஹேயமான சரீராதிகளோடே கூட துவக்குண்டு இருக்கிற இவனுக்கு
நிர்வேத மிஸ்ரமாய் நடந்ததே யாகிலும்-இந் நிர்தேசமும்-இஸ் சோஹ நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்கள் ஆகையால் விரோதி இல்லை –

மாஸூச -என்கிற இதுவே சோக நிமித்தமானவை எல்லாம் மோசநீயமாகைக்கு நியாமகமாகையாலே –
பிராரப்த கர்மத்திலும் சோக நிமித்த அம்சம் எல்லாம் கழிகையாலே -ஆர்த்தி அதிசயம் உடையவனுக்கு
அப்போதே மோக்ஷம் சித்திக்கும் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இத்யாதிகளில் படியே பிராரப்த கர்மத்திலும் மேல் உள்ளது எல்லாம் கழிந்து
இச் சரீர அவசனத்திலே மோக்ஷம் என்று இசையை வேண்டியதால் இச் சரீரம் தன்னிலும் ஆயுச் சேஷம் அநிஷ்டமான போது
இதுவும் பிரபத்தி வஸீக்ருத சர்வ சக்தி சங்கல்பத்தாலே கழியக் குறை இல்லை இறே

பிராயச்சித்த விசேஷ ஷூ சர்வ ஸ்வாராதி கேஷூ ச
ந ஆத்ம ஹிம்ஸந தோஷ அஸ்தி ததா ஆர்த்த சரணாகதவ்
திருப்தஸ்ய து யதா சாஸ்திரம் சிரம் ஜீவிதம் இச்சத
பிரண ரக்ஷண சாஸ்த்ரார்த்த லங்கநம் து அபராத நம்
யோகிகள் யோக விசேஷத்தாலே தேஹ ந்யாஸம் பண்ணுமா போலே-ஆர்த்தி அதிசயம் உடையவன் ப்ரபத்தியாலே
தேஹ ந்யாஸம் பண்ணுகைக்குத் தீர்த்த பிரவேசாதிகளில் போலே யுக விசேஷ நியமும் இல்லை-
இவ்வார்த்தி பிரபன்னனே எல்லாரிலும் கடுக ஆத்ம ரக்ஷணம் பண்ணுகிறவன்-

இப்படி ஆர்த்தன் திருப்தன் என்கிற பிரிவும் இவனுக்குப் பிறந்த சோகத்தில் வைஷம்யம் அடியாகச் சொல்லுகிறது அத்தனை –
ஒருவனுக்கு சோகம் இல்லாமை அன்று -ஜன்மாந்த்ராதி மாத்திரம் சோக நிமித்தமாய் ஏதேனும் ஒரு நாள் மோக்ஷம் பெறுவோம்
என்று தேறி இருக்குமவன் இங்கு திருப்தன் –
அல்லது உத்க்ருஷ்ட ஜன அவமாநாதி ஹேதுவான கர்வ ரூபமான
அநாத்ம குணத்தை யுடையவன் அல்லன்-
இச் சரீரத்தில் சதுர்முக ஐஸ்வர்யம் பெற்றாலும் இது பரிபூர்ண பகவத் அனுபவ விரோதியான படியால்
இவ்வர்த்தமான தேஹ சம்பந்தமும் கூட மஹாக்னி போலே துஸ் சஹமாய் –
உடலும் உயிரும் மங்க ஒட்டு –ஸ்ரீ திருவாய் -10-7-9-என்னும் படி -பிரபத்ய அனுஷ்டான அனந்தரம்
க்ஷண மாத்ர விளம்ப ஷமன் இல்லாதவன் ஆர்த்த ப்ரபன்னன் –
அல்லது -ஆர்த்தோ ஜிஜ்ஜாஸூ -ஆர்த்தார்த்தீ-ஸ்ரீ கீதை -7-16–என்கிற
இடத்தில் சொல்லப் பட்டவன் அல்லன் –
ஆர்த்தோ வா யதி வா திருப்த-ஸ்ரீ ராமாயணம் யுத்த காண்டம் -18-28-என்கிற இடம் அதிவாதம் யென்பார்க்கும் இங்கு
இவ்வர்த்த ஸ்திதியில் விவாதம் பண்ண ஒண்ணாது –
உபாய அனுஷ்டானத்துக்குப் பின்பு பலமாகையாலும் -இது உபதேச வேளையாகையாலும்-இவ்வார்த்தன் திறத்திலும்-
மோக்ஷயிஷ்யாமி என்ற பவிஷ்யத் நிர்தேசத்துக்குக் குறை இல்லை –

இவ்வார்த்த திருப்தாதி விபாகங்கள் எல்லாம் சக்ருத தாரதம்ய மூலமான பகவத் அனுக்ரஹ தாரதமயத்தாலே வரும்
பிராரப்த மாத்ர முக்தத்ர தத்வவித் ஸூகமாப்நுயாத் -இத்யாதி வசனங்கள் ஆர்த்த பிரபன்ன விஷயத்தில் நிர்வகாசங்கள் –
திருப்த ப்ரபன்னன் திறத்தில் உத்தர க்ருத்யம்சத்தைப் பற்ற மாஸூச என்ற வாக்கியத்தின் கருத்தை –
ஆத்யாத்மிக ஆதி பவ்திக-என்று தொடக்கி –
அதஸ்தம் தவ தத்வதோ மத ஞான தர்சன பிராப்திஷூ நிஸ் சம்சய ஸூகமாஸ்வ -என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் நம் ஸ்வாமி –

இங்குச் சொல்லுகிற சோக நிவ்ருத்திக்கு ஒரு படியாலும் சங்கோசகர் இல்லாமையாலே-
இவ் உபாய விசேஷ ஞானத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக சர்வ பிரகார சோக ஹேதுக்கள் எல்லாம் கழியும்படி சொல்லிற்று ஆகிறது –
அனுஷ்டான பர்யந்தம் அல்லாத ஞான மாத்திரம் இவ்வுபேதேசத்தாலே பிறந்தாலும்
ந காதா காதிநம் சாஸ்தி பஹு சேதபி காயதி-பிரக்ருதிம் யாந்தி பூதாநி குலிங்க சகுநிர்யதா சாந்தி பர்வம் -42-21-என்கிற கணக்காய்
நிர்பிரயோஜனம் ஆகையால் ஞான அனுஷ்டானங்கள் இரண்டினுடையவும் பலமான சோக நிவ்ருத்தியை எல்லாம் இங்கு விவஷிக்கிறது
ஆகையால் உபாய அனுஷ்டானத்தில் பூர்வ அபர மத்திய தசைகளை பற்ற சம்பாவிதமான சோகம் எல்லாம் இங்கே கழிக்கப் படுகின்றன –
எங்கனே என்னில் –
அதிகாரி விசேஷத்தையும் -உபாய விசேஷத்தையும் -உத்தர க்ருத்ய விசேஷத்தையும் –
பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த பல சித்தியையும் பற்றப் பல படியாக சோகம் சம்பாவிதம் –

மா ஸூச -என்பதற்கு -10-வித பொருள்கள்
1–அதில் அனுஷ்ட்டிக்கப் புகுகிற சரணாகதி தர்மம் -ஜாதி -வர்ண -ஆஸ்ரமாதி விசேஷ நியதம் இல்லாமையாலே –
ப்ராப்ய ருசியும் -ப்ராபக விஸ்வாசமும் -ஆகிஞ்சன்ய ஞானாதிகளும் -உண்டான போது ஒருவருக்கும்-
நாம் இதுக்கு அதிகாரிகள் அல்லோம் -என்று சோகிக்க வேண்டாம்

2–இவ்வுபாய விசேஷம் ச பரிகரமாக க்ஷண கால சாத்யமாய் -ஸூ கரமாய் -ஆவ்ருத்தி நிர பேஷமாய்-
உபாயாந்தர வ்யவதானமும் துஷ்கர பரிகராந்தமும் -இன்றிக்கே இருப்பதாய் –
கோலின காலத்திலேயே அபேக்ஷித பலங்கள் எல்லாவற்றையும் தர வற்றதாய் இருக்கையாலே-
ஆகிஞ்சன்யமும் பல விளம்ப பயமுமுடைய நமக்கு ச பரிகரமுமாய் சிரகால அனுவர்த்தனீயமுமாய்-
அத்யந்த அவஹிதர்க்கும் க்ருச்ர சாத்யமாய் ததாவித பரிகராந்த சாபேஷமாய்ப் பல விளம்பம் உடைத்தான் உபாயாந்தரத்திலே
அலைய வேண்டுகிறதோ என்று சோகிக்க வேண்டா –

3-இப்படி லகு உபாய மாத்ரத்தாலே வசீகார்யனாய்ப் பல பிரதானம் பண்ண இருக்கிற சரண்யன்
சர்வ ஸூலபனாய் -விஸ்வாசநீய தமனாய் -பரம காருணிகனாய்-நிரங்குச ஸ்வாதந்திரனாய் இருக்கையாலே
சித்த உபாயத்தைப் பற்ற சோகிக்க வேண்டா –

4—இவ் உபாய அனுஷ்டானத்துக்குப் பின்பு ஆஜ்ஞா அநுஜ்ஜைகளாலே பண்ணும் சத் கர்மங்கள் எல்லாம்
இப்பிரபத்திக்கு அங்கம் அல்லாமையாலே அவற்றுக்கு தேச காலாதி வைகுண்யத்தாலே சில வைகல்பம் உண்டானாலும்
உபாசனத்துக்குப் போலே இதுக்குப் பரிகர வைகல்பம் பிறக்கிறது என்று சோகிக்க வேண்டா

5—பகவத் கைங்கர்யாதிகளுக்கு அநர்ஹதையை உண்டாக்கும் புத்தி பூர்வ மஹா பாகவத அபசாராதிகளை விளைவித்து
தக்த படம் போலே ஆக்கவல்ல பிராரப்த பலமான பாப விசேஷத்துக்கு அஞ்சி பிரதம பிரதிபத்தி காலத்திலே யாதல்-
பின்பு ஒரு கால் அதுக்காகப் பிரதிபத்தி பண்ணியாதல் நிரபராதமான உத்தர க்ருத்யத்தை அபேக்ஷித்தால்
மேல் அபராத பிரசங்கத்தையும் பற்ற சோகிக்க வேண்டா –

6–இப்படி நிரபராதமான உத்தர க்ருத்யத்தை அபேஷியாதார்க்கும் -மேல் புத்தி பூர்வ அபராதம் வந்தாலும் –
ந த்யஜேயம் கதஞ்சன–யுத்த –18-4-என்று இருக்கக் கடவ -சரண்யன் இவனுக்கு அனுதாபத்தை உண்டாக்கிப் புன பிரபத்தி யாகிற
பிராயச்சித்த விசேஷத்தில் மூட்டியும் –
அதுவும் கை தப்பும்படியான கடின ப்ரப்ருதிகளுக்கு சிஷ ரூபங்களான உப கிலேச மாத்ரங்களைக் காட்டி
மேல் அபராதம் பண்ணாதபடி விலக்கியும் –
பலம் கோரின காலத்துக்கு முன்பே கண் அழிக்கையாலே பிரபன்னனுக்கு மின் ஒளி போலே தோற்றி நிலை நில்லாதே போகிற
புத்தி பூர்வ அபராத லேசங்களாலே நரகாதி மஹா கிலேசங்கள் வரில் செய்வது என் என்று சங்கித்து சோகிக்க வேண்டா –

7–ஆர்த்தி பிரபன்னனுக்கு அப்போதே பல சித்தி உண்டாம்படி இருக்கையாலே –
தேஹ சேத் ப்ரீதிமான் மூடோ பவிதா நரகே அபி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-63–என்னும்படி நரக துல்யமான
இச் சரீரம் அனுவர்த்திக்கிறதோ என்று சோகிக்க வேண்டா –

8-கர்ம யோகம் முதலான நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாம் -ந இஹ அபி க்ரம நாஸ அஸ்தி–ஸ்ரீ கீதை –2-40-இத்யாதிகளில் படியே
இட்டபடை கற்படை யாகையாலும் -இச் சரணாகதனைப் பற்ற விசேஷித்து -ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-4-என்கையாலும் –
த்ருப்த பிரபன்னனுக்கும் கோரின காலத்து அளவு விளம்பித்தாலும் -பல சித்தியில் சம்சயம் இல்லாமையாலே-
யஜ்ஜ அன்ருதேந ஷரதி தப ஷரதி விஸ்மயாத்-ஆயுர் விப்ர பரிவாதாத் தாநம் ச பரிகீர்த்திநாத்-ஸ்ரீ மனு ஸ்ம்ருதி -4-27-
இத்யாதிகளில் படியே ஸூஹ்ருத நாசகங்களாய் இருப்பன சில துஷ்க்ருதங்களாலே இப்பிரபத்தி ரூபமான ஸூஹ்ருதம்
நசித்துப் பலம் கிடையாது ஒழியில் செய்வது என் என்று சோகிக்க வேண்டா

9–இச்சரீர அனந்தரம் மோக்ஷம் பெற வேண்டும் என்று காலம் குறிக்கையாலே ஜன்மாந்தராதி ஹேதுக்களான
பிராரப்த கர்ம விசேஷங்களாலே நமக்கு ஜன்மாந்தரங்கள் வரில் செய்வது என் என்று சோகிக்க வேண்டா –

10–அநந்ய ப்ரயோஜனனாய் ப்ரபன்னனான இவனுக்குப் பிரதிபந்தகங்களான சர்வ பாபங்களும் கழிகையாலே-
கேவல ஆத்ம அனுபவாதிகளான அந்தரயங்களாலே பரம பலத்துக்கு விளம்பம் வருகிறதோ என்று சோகிக்க வேண்டா

இப்படி சர்வ பிரகார சோக ஹேதுக்களும் கழியும்படி எனக்கு அனுக்ரஹ விஷய பூதனான நீ இனி சோகிக்கையாவது-
முன்பு நிக்ரஹ விஷய பூதனாய் நின்ற தசையில் சோகியாதாப் போலே அநிபுண க்ருத்யமாய்
இவ்வுபாய விசேஷ வைலக்ஷண்யத்துக்கும் ரக்ஷண பரம் ஏறிட்டுக் கொள்கிற சித்த உபாய பூதனான என் பிரபாவத்துக்கும்
என் பக்கலிலே சர்வ பர ந்யாஸம் பண்ணிக்க க்ருதக்ருத்யனனாய் இருக்கிற உன் நிலைக்கும் தகுதி அன்று என்று திரு உள்ளம்

இப்படி ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் சாரதமான-மாஸூச -என்கிற சரம வாக்கியத்தின் தாத்பர்யத்தை
தங்கள் சரம தசையிலே ஆச்சார்யர்கள் ஸச் சிஷ்யர்களுக்கு உபதேசிப்பார்கள் –

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ் பொருள்களின் சுருக்கம்

இஸ் ஸ்லோகத்தில் பதங்களில் அடைவே
1-சர்வ தர்மான் பரித்யஜ்ய
அதிகாரி விசேஷம் -ஆகிஞ்சன்ய புரஸ்காரம் -துஷ்கர பரிகராந்தர நைரபேஷ்யம்-அஸக்ய ப்ரவ்ருத்தி அநைசித்யம் –
துஷ்கர அபிநிவேச வையர்த்யம் -உபாய விசேஷத்தின் கணையுடைமை –
2–மாம்
முமுஷுவுக்கு சரண்ய விசேஷம் -சரண்யனுடைய ஸூலபத்வ ஸூசீலத்வாதி குண பூர்ணத்வம் -ஹித தம உபதேசித்வம்
3–ஏகம்-
ப்ராப்யனே ப்ராபகனானமை -நிரபேஷ சர்வ விஷய நிஷ்ப்ரத்யூக கர்த்ருத்வம் -வ்யாஜ மாத்ர ப்ரதீஷத்வம் –
உபாயாந்தர வ்யவதான நிரபேஷத்வம்-பரிகராந்தர நிரபேஷ ப்ரஸாத்யத்வம் -சர்வ பாலார்தி சரண்யத்வம் –
சரண்யாந்த்ர பரிக்ரஹ அஸஹத்வம் -சரண்ய வைசிஷ்டயம்
4–சரணம் –
உபாயாந்தர ஸ்தாந நிவேஸ்யத்வம் –பர ஸ்வீ கர்த்ருத்வம் –
5–வ்ரஜ -என்பதன் தாதுப்பகுதி
பரந்யாச ரூப சாத்ய உபாய விசேஷம் -அதின் பரிகரங்கள் -சர்வாதிகாரத்வம் -ஸக்ருத் கர்தவ்யத்வம் –
ஸூகரத்வம் -அவிளம்பித பல பிரதத்வம் -பிராரப்த நிவர்த்தன ஷமத்வம்
6–வ்ரஜ என்பதன் விகுதி
அதிகாரியினுடைய பராதீன கர்த்ருத்வம்-சாஸ்த்ர வஸ்யத்வம்
7–அஹம்
ரக்ஷகனுடைய பரம காருணிகத்தவம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்ற கர்த்தவ்யாந்தரத்தில் ப்ராப்தியில்லாமை –
பகவதத்யர்த்த ப்ரியத்வம்
8–த்வா
சரண்யகதனுடைய க்ருதக்ருத்யத்வம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்றக்
கர்த்தவ்யாந்தரத்தில் பிராப்தி இல்லாமை -பகவதத்யர்த்த ப்ரியத்வம்
9—சர்வ பாபேப்யோ
த்ரைகாலிக விரோதி பூயஸ்த்வம் -விரோதி வர்க்க வைச்சித்ரயம்
10–மோக்ஷயிஷ்யாமி
அவற்றினுடைய ஈஸ்வர சங்கல்ப மாத்ர நிவர்த்யத்வம் -ப்ரபந்ந இச்சா நியதமான
விரோதி நிவ்ருத்தி காலம் -விரோதி நிவ்ருத்தி ஸ்வரூபம் -ஆத்ம கைவல்ய வ்யாவ்ருத்த யதாவஸ்தித ஸ்வரூப ஆவிர்பாவம் –
பரிபூர்ண பகவத் அனுபவம் -சர்வவித கைங்கர்யம் -அபுநராவ்ருத்தி
11–மா ஸூச
முன்பு சோக ஹேது ப்ராசுர்யம்-பின்பு சோகிக்க பிராப்தி இல்லாமை -விமர்ச காலம் எல்லாம் நிஸ் சம்யத்வம்-சோக நிவ்ருத்தி
நிர்பயத்வம் -ஹர்ஷ விசேஷம் -சரீரபாத கால ப்ரதீஷத்வம்-நிர்பராத கைங்கர்ய ரசிகத்வம்-என்று இவை பிரதானமாய்
மற்றும் இவற்றுக்கு அபேக்ஷிதங்கள் எல்லாம் சப்த சக்தியாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் அனுசிஷ்டங்கள்

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ்ந்த திரண்ட பொருள்
1–சர்வ தர்மான் பரித்யஜ்ய
அல்பஞ்ஞனாய்-அல்பசக்தியாய் -பரிமித கால வர்த்தியாய்-விளம்ப ஷமனும் இன்றிக்கே உன்னாலே
அறியவும் அனுஷ்ட்டிக்கவும் அரிதாய் பல விளம்பமும் உண்டாய் இருக்கிற உபாயாந்தரங்களிலே அலையாதே
2–மாம் ஏகம்
சர்வ ஸூலபனாய் -சர்வலோக சரண்யனாய் -சரண்யத்வ உபயுக்த்வ சார்வாகார விசிஷ்டனான என்னை ஒருவனையுமே
3–சரணம் வ்ரஜ
அத்யவசித்திக் கொண்டு அங்க பஞ்சக சம்பன்னமான ஆத்ம ரஷா பர சமர்ப்பணத்தைப் பண்ணு
4– த்வா
இப்படி அனுஷ்டித்த உபாயனாய் -க்ருதக்ருத்யனாய் -எனக்கு அடைக்கலமாய் அத்யந்த பிரியனான உன்னை
5– அஹம்
பரம காருணிகனாய்-ஸூ ப்ரசன்னனாய் -நிரங்குச ஸ்வா தந்திரனாய் –
ஸ்வார்த்த ப்ரவ்ருத்தனான நானே என் சங்கல்ப மாத்திரமே துணையாகக் கொண்டு
6–சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
பஹு பிரகாரமாய் -அநந்தமாய் -துரத்யயமான சர்வ விரோதி வர்க்கத்தோடும் பின் தொடர்ச்சி இல்லாதபடி துவக்கு அறுத்து –
என்னோடு ஓக்க என்னுடைய ஆத்மாத்மீயங்களை எல்லாம் அனுபவிக்கையாலே துல்ய போகனாக்கிப்
பரிபூர்ண அனுபவ பரிவாஹ ரூபமான சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோதித சர்வ வித கைங்கர்யத்தையும் தந்து உகப்பன்
7–மாஸூச
நீ ஒன்றுக்கும் சோகிக்க வேண்டா
என்று ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் திரண்ட பொருள்கள்

ஏகம் சர்வ ப்ரதம் தர்மம் ஸ்ரீயா ஜூஷ்டம் ஸமாஸ்ரிதை
அபேத சோகை ராசார்யை அயம் பந்தா ப்ரதர்ஸித

குறிப்புடன் மேவும் தர்மங்கள் இன்றி அங்கோவலனார்
வெறித் துளவக் கழல் மெய் அரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத்திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருள் அற்றனமே –

வ்யாஸ ஆம்நாய பயோதி கௌஸ்துப நிபம் ஹ்ருத்யம் ஹரே உத்தமம்
ஸ்லோகம் கேசந லோக வேத பதவீ விஸ்வாசித அர்த்தம் விது
யேஷாம் யுக்திஷூ முக்தி ஸுவ்த விசிகா சோபாந பங்க்திஷூ அமீ
வைசம்பாயன ஸுநக ப்ரப்ருதய ஷ்ரேஷ்டா சிர கம்பிந

ஸ்ரீ சரம ஸ்லோஹாதிகாரம் சம்பூர்ணம்

பாத வாக்ய யோஜனா பாகம் சம்பூர்ணம் –

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: