ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை –
சர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என் நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் தருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி –
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து
வாழலாம் –
உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே –
மனசே நீ சககரிக்க வேணும்
மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ –
செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ –
மழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply