ஸ்ரீ சில்லரை ரஹஸ்யம் –

குரு பரம்பரை பூர்வகமாகவே கொள்ள வேண்டுமே
பொய்கை முனி –மனன சீலர் / பூதத்தார் -பூ சத்தா கர்ப்ப ஸ்ரீ மான் – கருவரங்கத்துள்ளே கை தொழுதார் -/
பேயாழ்வார் -மாறுபட்ட ஸ்வா பாவம்-எழுந்தும் பறந்தும் துள்ளி –
நாட்டாரோடு இயல் ஒளிந்து நாரணனை நண்ணி / நம் பாணர் -முனி வாஹனர் /
இந்நின்ற நீர்மை -உள்ளம் நடுங்கி அனுவாதம் -பீதி அனுவாதம் ஹேது -என்று இவர்கள் -ப்ரீதி அனுவாத ஹேது / மகிழ்ந்து பாடி /
என் உயிர் தந்து அளித்தவரை-நல்கு த் தான் அளித்து – சரணம் புக்கு யான் அவர் குருக்கள் நிரையினை -குரு பரம்பரையை -அடைவே -ஆ பகவந்த-வணங்கி —
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் / அவதாரங்களை பின் -குரு பரம்பரை வணங்கிய பின் -என்றுமாம் -/
பெரிய -விசேஷணம் -பிராட்டியாருக்கும் / திருவடிக்கும் / பெரிய உடையார் / பெரியாழ்வார் / பெரிய நம்பி / பெரிய ஆச்சான் பிள்ளை /
ஆளவந்தார் -அடியோம் –சம்சாரம் போக்கி நிரந்தர உஜ்ஜீவிக்க -/ மணக்கால் நம்பி -மணல் கால் என்றுமாம்
/நல் நெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் /
ராம மிஸ்ரரும் புண்டரீகாக்ஷரும் /பழையது சாப்பிட்டு உய்யக் கொண்டார் -நாத முனிகள் திரு குமாரி புக்கத்தில் /
பிணம் கிடக்க மணம் சூடுவார் உண்டோ -நாம் உய்ய அன்றோ பிரபத்தியை ஸ்வீகரித்து கொண்டார் /
நல் நெறி -நாதமுனி நியமனம் படி ஆளவந்தாருக்கு சேர மணக்கால் நம்பிக்கு உரைத்த என்றுமாம்
நாத முனி -மனன சீலர்-லோகத்தாருக்கு நாதர் அன்றோ /மாறன் -அஞ்ஞானம் விடுவித்து/ சேனை நாதன் –
ஸ்ரீ லஷ்மி நாதன் / வியாசாதிகள் உபகார பரம்பரை -இவர்கள் உத்தாரகர்கள்
ஸ்ரீ பராங்குச தாசர் மூலமாகவும் யோக மஹிமையாலும் சாஷாத்தாக நம்மாழ்வார் அருள் பெற்றார் ஸ்ரீ மத் நாத முனி
இன்னமுத திரு மகள் -அமுதத்வம் அசாதாரணம் -பகவானுக்கு -அவனுக்கும் இனியவளே –
இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடியை அடைகின்றேன் -ப்ராப்ய பிராபக கோடி இரண்டிலும்

குரு கு சப்தம் அந்தகார ரு சப்தம் தன் நிவர்த்தகம் / ஆச்சார்யர் மூன்று –
1-ஆஸி நோதி சாஸ்த்ரார்த்தம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்களை அறிந்து அறிவித்து –
2–சிஷ்யனுக்கு ஆச்சாரங்களில் நிலை பெருவித்து —
3-ஸ்வயம் தானும் ஆசரித்து-அவன் பொருட்டு இவரே சரணாகதி என்றவாறு – -/
ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டும் கொண்டு சிஷ்யருக்கு வளங்கி /
நம அதீமஹே–நமஸ் சப்தார்த்தம் –ஓதாமல் ஒருக்காலும் இருக்க வேண்டாம் -சந்தை சொல்லி கிரஹித்து –
கிரமமாக ஜபம் பண்ணி -அத்யந்த ஆதாரத்துடன் /
காலத்தாலும் கௌரவ புத்தியாலும் /மானஸ வாசிக காயிக நமஸ் முக்கரணங்களால்
தத்ர -ஸ்வ ஆச்சார்யர் தொடக்கமாக குரு பரம்பரை /வரித்து கொண்டு விரிணீ மஹே//
ஆத்யம் தம்பதி -ஜெகதாம் பதி-சேஷி –காரணத்வம்-ஆதி /
ஆச்சார்ய சம்பந்தமே சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேது என்று அறுதி இட்டார்கள் –
பாபிஷ்ட சத்ர பந்துவுக்கும் கூட -இவன் செய்வது எல்லாமே பாபமே -அவனுக்கும் கூட மோக்ஷம் பலம் கிட்டிற்றே ஆச்சார்ய சம்பந்தத்தால்
புண்டரீகன் செய்த புண்ணியத்தால் இல்லை -இவனுக்கும் ஆச்சார்ய சம்பந்தத்தால் -மோக்ஷம் பலம் -கிட்டிற்றே –
அன்வய வ்யதிரேகத்தால் காட்டி அருளுகிறார்

ஆதியிலே வேதம் சதுர்முகனுக்கு அருளி / மீளவும் அவன் தொலைக்க மீட்டு கொடுத்தான் /
நாரதாதி மகரிஷிகள் வியாசர் -அனுபிரவேசம் பண்ணி வேதங்களை பிரவர்த்திப்பித்து
அவதாரம் -ஞான பிரதானம் ஹம்சம் -அன்னமாய் வெளிப்படுத்தி / மத்ஸ்ய -மனுவுக்கு தர்ம சாஸ்திரம் / ஹயக்ரீவ / நர நாராயண /கீதாச்சார்யன்
பீஷ்மாதிகள் இட்டு மூதலித்து / பாஞ்சராத்ர ஆகமம் பிரவர்த்திப்பித்து / ஆழ்வார்களாக அபிநவ தசாராவதாரம்
திராவிட பாஷையால் அருளிச் செய்து /பிரகட பிரசன்ன பாஷண்டிகளை நிரசிக்க ஆச்சார்ய முகேன-அவதரித்ததும் -/இப்படி தச வித உபகாரங்கள்

ஆரண நூல் வழி செவ்வை அழித்திடும் ஐதுகர் -விசுவாச ரஹிதர்கள் -ஆரிய சிதைவு -ஹேது கேட்டே வாழ்க்கை –
ஓர் வாரணமாய் -அத்விதீய -அவர் வாதக் கதவிகளை-அழித்து ஒழித்து
ஏரணி கீர்த்தி ராமானுஜர் -இன்னுரை சேரும் சீர் அணி சிந்தையினோம் நம் தீவினைகள் போக்கும்

ஆளவந்தார் அடியோம் இனி அல்வழக்கு படியோம் –

———————————-

அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள் -சம்பிரதாய பரிசுத்தி- சோதனம் -கலக்கம் போக்குவது -போல்வன–
சாஸ்திரம் மூலமான சம்ப்ரதாயம் -தத்வ ஞானம் அனுஷ்டானம் / தத்வ ஹித புருஷார்த்தம் விளக்கி /

தம்பரம் என்று இரங்கி தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே –1–

உபாயம் ஒன்றால் -பிரபத்தி மார்க்கத்தால் –
ஞானப் பெரும் தகவோர் -அருளால் –பெரும் -ஞானத்துக்கும் அருளுக்கும் -அபரிச்சின்னமான ஞானம் தயை நிரூபணம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
தகவு -ஸ்வரூப நிரூபணம் / அருளால் -கார்யம் கொண்ட தயை
தம்பரம் என்று இரங்கி -நம்மை தம்முடைய பரம் என்று இரங்கி-பொறுப்பில் கொண்டு -அருளால் இரங்கி
எல்லா பிர்விருத்திகளும் அருளால் -பிடிக்கி பிடிக்கு ராஜ குமாரர் நெய் சேர்ப்பது போலே
தளரா மனம் தந்து -தத்வ ஹத புருஷார்த்தங்களில் -மஹா விச்வாஸம் -உபாயாந்தர பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல்
உம்பர் தொழும் திருமால் -நித்ய ஸூ ரிகள் -உபாய அபேக்ஷை இல்லாமல் –மிதுனம் -ஸ்ரீ யபதி
உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்–ஏற்கும் உபாயம் பக்தி /பிரபத்தி -இவற்றுள் உகந்து ஏற்பது பிரபத்தி என்றவாறு –
நம் பிறவித் துயர் மாற்றிய –ஜென்மாதி ஷாட்ப்பாவ விகாரங்கள் –அழித்து-
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே-ஆச்சார்ய சிஷ்ய க்ரமத்தில் வரும் சாஸ்த்ரார்த்த ஞானம்
-நிரூபிதம்-ஒன்றி -முழுமையாக அவகாஹித்து -சதிர் -புருஷார்த்தம் -சர்வ வித கைங்கர்யம் -மா சதிர் இது பெற்று -அடியேன் சதிர்த்தேன் இன்றே –

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமால் அடி காட்டிய நம்
தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே –2-

நமக்கு திருமால் திருவடியே உபாயமாகக் காட்டி அருளின நம் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தை சிறந்ததாகப் பற்றி ஈடுபட்டோமே –

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால் -ஏக தேச அந்வயம் – நம் -தேசிகர் தம் நிலை பூர்ண அந்வயம்
கடலைக் கடைந்து அமுதம் சேர்த்த திருமால் –
திருமால் அடி தானே நம் தேசிகர் -பூர்வாச்சார்யர்கள் -ப்ராப்யம் ப்ராபகம் இவரே –
சாஸ்திரம் கடலை கடைந்து தத்வ ஹித புருஷார்த்தங்கள் அமிருதம் சேர்த்த தேசிகர் –
பாராசாராய வக்ஷஸ் ஸூ தாம் –சடஜித் -உபநிஷத் -சிந்தும் -இத்யாதி –
திருமால் அடி காட்டிய நம் -தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே -நிலை -நிஷ்டை -ஞான நிஷ்டை –
சதாச்சார்யர் திருவடிகளில் கேட்டு சிந்தித்து தரித்து -நிர்பயராக நீர்பரராக-
தத்வம் /உபாயம் /புருஷார்த்தம் முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றின் நிலை

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: