ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அவதாரங்களுக்குள் ஸ்ரேஷ்டமானால் போலே திருப்பாவை அருளிச் செயல்களுக்கும் ஸ்ரேஷ்டம்
ஸ்ரீ மன் நாராயணனே நமக்கே பறை தருவான்
ஆய்க்குலத்து உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் –மற்றை நம் காமங்கள் மாற்று –
பெருமாள் திருமுக முயற்சிக்கு உகப்பாக அடிமை செய்வதே பரம புருஷார்த்தம்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்ரீ ஸூ க்தி
இவளோ அவனே உபாயம் உபேயம் என்று அத்யாவசித்துள்ள பாகவதர்கள் அபிமான பாத்திரமாக இருப்பதே -என்று
அத்தை சிஷித்து -தானும் அனுஷ்ட்டித்து காட்டி அருளுகிறாள்
நல்ல என் தோழீ நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் நாம் செய்வது என் –
பெரியாழ்வாரது அபிமானம் தனக்குத் தஞ்சம் என்று அனுஷ்ட்டித்து காட்டி அருளினால்
பாகவத பக்தி -பாகவத அபிமானம் -பாகவத அனுக்ரஹம் –
சம்சார விஷ வ்ருஷஸ்ய த்வே பலே ஹ்யம் ருதோபமே -கதா சித் கேசவே பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம் –
அன்னம் – கஞ்சி -போலே அன்றோ பாகவத சமாகமும் கேசவ பக்தியும் –
பிள்ளாய் எழுந்திராய் –பாகவத பிரபாவம் அறியாதவள்
பேய்ப்பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் அறிந்தும் மறந்தவள்
கோதுகலமுடைய பாவாய் -கண்ணன் ப்ரீதிக்கு பாத்ரபூதை
மாமன் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் -தேஹ சம்பந்தம் ஸ்ரேஷ்டம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –ஏஷ ஹ்யேவா ஆனந்தயாதி-கண்ணனால் கண்ணனைப் பெற்று ஆனந்திக்கிறவள்
குற்றம் ஒன்றுமில்லாத கோவலர் தம் பொற் கொடியே -துல்ய சீல வாயோ வ்ருத்தாம் –
நனைத்து இல்லம் சேறாக்கும் -நற்செல்வன் தங்காய் -கைங்கர்ய ஸ்ரீ மான் தேஹ சம்பந்தம்
போதரிக் கண்ணினாய்
நங்காய் நாணாதாய் நா உடையாய்
எல்லே இளங்கிளியே
பாகவத அபிமான பர்யந்தம் பகவத் அபிமானத்துக்கு நாம் பாத்ர பூதர்களாக வேண்டும் -ரஹஸ்யார்த்தை வெளியிட்டு அருளுகிறாள்
வங்கக்கடல் கிடைத்த மாதவன் -பஸ்யைதாம் சர்வ தேவா நாம் யவவ் வக்ஷஸ்தலம் ஹரே
அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்ட திரு மார்பன் -சர்வே ஸ்வார்த்த பரா
அங்கு ஒரு பிராட்டி -இங்கோ பஞ்ச லக்ஷம் கோபிமார்
கேசவன் -அம்ருத மதன தசையிலும் -நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் என்ற போதிலும்
அவன் அருளியது செவிப்பூ ஒன்றே
இவளோ சூடிக் கொடுத்த மாலையையும் முப்பதும் பாடிக் கொடுத்த மாலையையும் சமர்ப்பிக்கிறாள்
பாவனமான அளவன்றிக்கே போக்யமுமாய் -தலையிலே சுமக்க வேண்டும்படி ஸீரோ பூஷணமுமாய் –
பாற் கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி முதல் மாதவனை கேசவனை -பாதாதி கேசாந்தமாக அனுபவம் –
மாதவனை கேசவனை -மிதுனமே உத்தேச்யம் –
சேயிழையீர் -ப்ரஹ்ம ஞானத்தால் வந்த தேஜஸ் -ஸ்ரீ கிருஷ்ண விஷயீகார யோக்யதை –
ஸ்ரீ கிருஷ்னமா விஷயீ காரத்தால் புகுந்த புகர்-ஸ்வரூப ரூப குணங்கள் ப்ரஹ்மாலங்காரத்தால் வந்த தேஜஸ்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்று அனைய பல்கலனும்
அவன் சூட்ட அணியப் போகிறார்களே -திங்கள் முகத்து சேயிழையார்
அணி புதுவை -தாய் தமப்பன் பிள்ளை மூவரையும் ஏக ஸிம்ஹாஸனம்
சங்க தமிழ் மாலை -ஏக ஸ்வாது ந புஞ்சீத -கூடி முப்பதையும் அனுபவிக்க வேண்டுமே
பட்டர் பிரான் -ஆண்டாளை அழகிய மணவாளனுக்கு கன்னிகா பிரதானம் செத்து உபகரித்தவர்
ஜனகர் -சீதா -ராமபிரான் -பெருமாள் /பெரியாழ்வார் -கோதா -அழகிய மணவாளன் -பெரிய பெருமாள்
கர்ம யோக நிஷ்டர் அவர் -மங்களா சாசன பரர் இவர்
பரம ஸுலப்யத்துக்கு எல்லை நிலையில் அருளிச் செய்த பிரபந்தம்
————————————–
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -நீராட்டம் -பறை –குண கண சாகரம் – போதுமினோ –
வாழ்வீர்காள் -அவ்வூர் திரு நாமம் கற்ற பின்-கற்பதே திரு நாமம் சொல்வதே –
தொலை வில்லி மங்கலம் -மரங்களும் இரங்கும் வகை –தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாள் இணைக் கீழ் வாழ்ச்சி
மழை-வயல் -பால் –மூன்றும் செழிக்க -வியாதி பஞ்சம் திருட்டு -போக –அஷ்டாக்ஷர சம்சித்த கொண்டாட்டம் –
பிரணவம் அர்த்தம் அறிந்து திருட்டு -தாஸ்கரா -போகும் /-நமஸ் அர்த்தம் அறிந்து -பஞ்சம் -துர்பிக்ஷம் -போக —
நாராயணாயா அறிந்து வியாதி போக -ஆத்மபந்து அறிந்தபின்பு -மும்மாரி இதுவே
பகவத் கைங்கர்யம் ஏற்றம் -ஆழி மழை கண்ணா -பர்ஜன்ய தேவன்
தூய யமுனை துறைவன் -தூயோமாய் வந்தோம் -தூ மலர் தூவி தொழுது -மூன்று தூய்மை
உச்சிஷ்டம் பாவனம் -பானகம் தருவரேல் -அநந்ய ப்ரயோஜனத்வம் -பக்தி -மடி தடவாத சோறு
பிள்ளாய் -முனிவர் யோகி -மனன சீலர் கைங்கர்ய நிஷ்டர் -மானஸ காயிக கைங்கர்யம் செய்து ஆனந்தம்
கர்மத்தில் அதிகாரம் -பலத்தில் இல்லை -கீதை –
பேய்ப்பெண்ணே- நாயகப் பெண் பிள்ளாய் -பரஸ்பர நீச பாவம் -தண்டவத் ப்ரணவத் -ஆச்சார்யர் துல்யர் -பகவானை விட மிக்கார் பாகவதர்கள் –
கீழ்வானம் -எருமை இவற்றால் –விபரீத ஞானம் -பொருளை மாற்றி -தேகாத்ம அபிமானம் /அந்யதா ஞானம் -பண்பு மாற்றி -ஸ்வ ஸ்தந்த்ர நினைவு /
தூ மணி -கண் வளரும் -நித்ய சித்தர் -நித்ய முக்தர் போல்வார் -வெளியில் முமுஷுக்கள் -ப்ராப்ய த்வரை
பெரும் துயில் -நோற்று சுவர்க்கம் -புருஷோத்தமன் என்ற ஞானம் -புனர் ஜென்மம் இல்லையே
கோவலன் பொற் கொடி-கணங்கள் பல -ஜீவ சமஷ்டி -ஏகமேவ அத்விதீயம்
கனைத்து -சென்று நின்று ஆழி தொட்டான் த்வரை –
கள்ளம் தவிர்ந்து கலந்து -ஆத்ம அபஹாரம் தவிர்ந்து -பிறர் நன் பொருளை நம்பக் கூடாதே –
போதரிக் கண்ணினாய் –சேஷி -ஸ்வாமினி -கைங்கர்யம் கொடுக்காமல் இருக்கும் கள்ளத்தன்மை இதில் -சேஷித்வ அபஹாரம் பண்ணாதே
செங்கல் பொடிக் கூறை-வெண் பல் தவத்தவர் -வெளுப்பு உள்ளே-சத்வம் / சிகப்பு ரஜஸ் வெளியில்
எல்லே -பாகவத நிஷ்டை –
த்வார சேஷி -கோயில் காப்பான் -நாயகன் இத்யாதி –உபகார ஆச்சார்யர் /உத்தாராக ஸ்வாமி -பிராட்டி -மூலம் பெருமாள்
காட்டில் தொட்டில் -இருவரையும் விடாத பிராட்டி
பந்தார் விரலி -ஸ்பர்சம் /வளை ஒலிப்ப -கந்தம் கமழும்- வாசல் கடை திறவார் ரூபம் பேர் பாட நாக்கு -பஞ்ச இந்திரியங்களும் பிராட்டி விஷயம்
குத்து விளக்கு-ஸ்வயம் பிரகாசம் -பர பிரகாசம் -தண்ணீர் ஆற்ற தண்ணார் வேண்டாமே -வெந்நீருக்கு தான் வேணும்
ஐ ஐந்து முடிக்க -முன் சென்று கப்பம் தவிர்க்கும் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
எண்ணிலும் வரும் -சிந்திப்பே அமையும் –
ஆற்றப்படைத்தான் மகன் -ஏற்ற கலங்கள் –சிஷ்ய ஸம்ருத்தி –
அம்கண்-கடாக்ஷம் கொண்டே அஹங்காரம் மமகாரம் நிவர்த்திக்க -அபிமான பங்கமாய் –
நடை அழகு -ஸ்ருஷ்ட்டி -காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் -சீரிய ஸிம்ஹம் அறிவுற்று
குணம் போற்றி -ஷமா -அபராத சஹத்வம் -சர்வான் அபசாரன் க்ஷமஸ்வ –
உன்னை அர்த்தித்து -உன்னிடம் உன்னையே கேட்டு -அவதார ரஹஸ்யம் -அறிந்து புனர் ஜென்மம் தவிர்க்க ஒருத்தி
பிறந்தவாறும் -கிருஷ்ண அவதார தசையில் சரணாகதி
மாலே-உபகரணங்கள் -சாம்யா பத்தி -மம சாதர்ம்யம் –
கூடாரை -சாயுஜ்ஜியம் -ஸம்மானம் -அடியார் குழுவுடன் -குண அனுபவம்
கறைவைகள் -சித்த புண்ணியம் உண்டே நம்மிடம் -சாஷாத் தர்மமும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -உத்தர வாக்யார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –
பாற் கடலில் பையத் துயின்ற உபக்ரமித்து -வங்க கடலில் – கடைந்து மாதவன் -நாராயணனே மாதவன் –
மாது வாழ் மார்பினாய் -திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -திருமாலார் சேர்விடம் வாட்டாறு –
கேசவனை -அடி பாடி தொடங்கி -பாதாதி கேசாந்த அனுபவம் –
திங்கள் திரு முகம் சேயிழையீர் இங்கு -மார்கழி திங்கள் -ஆரம்பம் – கதிர் மதியம் -வெளிச்சம் இருக்கும் சூர்யன் இல்லை -திருப்பாவை
நேயிழையீர் போதுமினோ கூட்டு – அங்கே -சேயிழையீர் சென்று இறைஞ்சி -வந்து பெற்றமை இங்கு
அங்கு அப்பறை -சீர் மல்கு ஆய்ப்பாடி -முன்பே சொல்லியதால் இங்கு அங்கு
பறை கொண்ட ஆற்றை-இங்கு முடித்து -நாராயணனானே நமக்கே பறை தருவான் அங்கு
செல்வச் சிறுமீர்காள் அங்கே -பட்டர் பிரான் கோதை இங்கு -நமக்கு இதுவே செல்வம் –
சீர் மல்கும் ஆய்ப்பாடி அங்கு -அணி புதுவை இங்கு –
கேளீரோ -அங்கு கோதை சொன்ன முப்பது இங்கு
சங்க தமிழ் மாலை -கூட்டமாக அனுபவம் –
ஆண்டாள் பெரியாழ்வார் தொடுத்த மாலை -மாலை கட்டிய மாலை திருப்பாவை -மாலைக் கட்டிய மாலை –
கார் மேனி செங்கண் தொடங்கி செங்கண் -முடித்து
திங்கள் திரு முகம் -செங்கண் -ஆயர்களை பெற்ற சிகப்பு செல்வத் திருமால் –
மாதவன் செல்வத் திருமால் -ஸ்ரீ பூர்வ உத்தர வாக்யத்திலும் உண்டே –
——————————-
ஸ்ரீ கோதா பிராட்டியார் விஷயமான 8-ஸ்லோகங்கள் –
நீராட்டம் உத்சவம் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள்
ஸ்ரீ பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்–
1-ஸ்ரீ கோதா பிராட்டியாரும் அன்னமும்
2-ஸ்ரீ கோதா பிராட்டியாரும் சிந்தாமணியும்
3- ஸ்ரீ கோதா பிராட்டியாரும் கற்பக வருஷமும் –
4- சூடிக் கொடுத்த நாச்சியாரும் சூரியனும்
5- ஆண்டாளும் சந்திரனும்
6- ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்
7-ஸ்ரீ கோதா தேவியும் காம தேவனும்
8-நீராட்டத்தின் பயன்
——————————————-
முதல்-26–29-30
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –
ஆழி மழைக்கு-பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
மாரி மலை முழைஞ்சில் – பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –
கீசு கீசு -ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
கீழ் வானம் -எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை -கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –
வங்க கடல் -மூன்றாவது கேசவன் -உண்டே –
பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இறே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள் நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –
பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால் வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால்
பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி –
அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை புறப்படச் சொலுவார் ராவணாதிகளோ பாதி இறே –
ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் –இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்
13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –
15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –
23 rd பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி –
17th- செம் பொன் கழல் அடி செல்வா பல தேவா -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –
18 th – நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –
பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –
19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –
22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி சம்பந்தத்தை சொல்லி –
23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இறே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –
19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –
பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –11-வைகுந்தன் -13-புண்ணியன் –
14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் –
18-மணி வண்ணன்19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்-30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இறே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இறே -இவனே ஸ்ரீயபதி என்றபடி –
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply