ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம்–31-61-ஸ்லோகங்கள் –

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

————————

ஸ்வதஸ் ஸ்ரீ ஸ் தவம் விஷ்ணோஸ் ஸ்வமஸி தத  ஏவைஷ பகவான்
த்வதா யத்தர்த் தித்வேப் யபவ தபராதீன விபவ
ஸ்வயா தீப்தாயா ரத்னம் பவதபி மஹார்கம் நவிகுணம்
நகுண்ட ஸ்வா தந்த்ர்யம் பவதி சன சான்யா ஹித குணம் -31–

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

————————————————

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா
ப்ரணதவரண ப்ரேம ஷேமங்க ரத்வ புரஸ்ஸரா
அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரி தீந்திரே
தவ பகவதச் சைதே சாதாரணா குண ராசே –32-

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

——————————————————-

அன்யேபி யௌவன முகா யுவயோஸ் சமாநா
ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண
சம்ச்தீர்யா தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே –33-

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

—————————————————–

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ருசமன
ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸூலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா
ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா -34-

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

——————————————–

கந கநக த்யுதீ  யுவதசாமபி முக்ததசாம்
யுவ தருண த்வயோ ருசித மாபரணாதி பரம்
த்ருவ மாசமாநதேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயிச குசேசயோதர விஹாரிணி நிர்விசசி–35–

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

——————————————

அங்கந்தே ம்ருது சீத முக்தமதுரோ தாரைர் குணைர் கும்பத
ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா மன்யே மஹார்காச் தத
இந்து கல்பலதா ஸூ தா மதுமுகா இத்யாவிலாம் வர்ண நாம்
ஸ்ரீ ரங்கேச்வரி சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –36–

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ

———————————————-

ப்ரணம தநு விதித்சா வாஸநா நம்ர மக்ரே
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந
பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி –37–

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

———————————————————————

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம்
மத்யே விஷ்டர புண்டரீக மபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்யா கூலங்கஷ
ஸ்பாரா பாங்க தரங்க மம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம் –38-

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

———————————————————————-

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ  யேந்திராயா
தவகமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப
ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–39-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

——————————————-

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்
த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே –40–

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

————————————

ஆநந்தாத்மபி ரசமஜ்ஜ நமத ஷீபாலசை ராகல
ப்ரேமார்த்ரை ரபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவிதா ச்மாத்ருசை
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை
ஐஸ்வர் யோத்க மகத்கதை ரசரணம் மாம்பால யாலோ கிதை–41–

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

———————————————

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜச் சேடீப்ருசா லோகிதை
அங்கம் லாநி ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ
டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –42-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

————————————————

ஆமர்யாத மகண்டகம் ஸ்தனயுகம் நாத்யாபி நாலோகித
ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச
ஸூ தே சைசவ யௌவன வ்யதிரேகரோ காத்ரேஷூ தே சௌரபம்
போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –43–

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

———————————————————————-

ஆமோதாத்புதசாலி யௌவன தசா வ்யாகோச மம்லா நிமத்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்
ஸ்ரீ ரங்கேச்வரி  கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே
காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மா  ம காண்டாகுலம் –44–

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

—————————————-

மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி
புஷ்பாவளீவ ரஸிகப்ரமரோப புக்தா
த்வம் தேவி நித்ய ம்பிநந்தயசே முகுந்தம் –45–

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

———————————————

கநகரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிசர துலா கோடி ப்ராயைர் ஜநார்தன ஜிவிகே
பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை
வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்பலதா யதா –46-

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்

———————————————-

சாமான்ய போக்யமாபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுதாதி ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி  காஹதே த்வாம் –47-

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி 
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

———————————————–

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே
அநுஜநூர் அநு ரூபா தேவி நாவாதரிஷ்ய
அஸரஸ மபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாத
தரதள தரவிந்தோ தந்த காந்தாயதாஷி -48–

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

—————————————-

ஸ்கலித கடக மால்யைர் தோர்பி ரப்திம் முராரே
பகவதி ததிமாதம் மத்ந்தச் ஸ்ராந்தி சாந்த்யை
பிரமதம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –49—

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

—————————-

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

——————————————————

மாதர் லஷ்மி யதைவ மைதில ஜனஸ் தேநாதவநா தேவயம்
த்வத் தாஸ்யைக ரஸாபிமான ஸூகைர் பாவை ரிஹா முத்ரச
ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம பிரதியாம யாமசபரீ சாரான் ப்ரஹ்ருஷ்யேமச  –51-

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –

——————————————————————

பிதேவ த்வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாகஸி ஜனே
ஹித ஸ்ரோதோவ்ருத்யா பவதிச கதாசித் கலுஷ தீ
கிமோதன் நிர்தோஷ கஇஹ ஜகதீதி தவ முசிதை
உபாயைர் விச்மார்ய ஸ்வ ஜனயசி மாதா ததசி ந– 52-

பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

———————————————

நேதுர் நித்ய  சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் தவ மத்ராகதா
லோகேத்வன் மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே
சாதோ திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்-53–

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

————————————–

அதிசயிதவா நப்திம் நாதோ மமந்த பபந்த தம்
ஹரத நுர சௌ வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரஷக பந்த மநர்த்தயத்
கிமவ நபதி கர்த்தா த்வச்சாடு சுஞ்சு மநோரத –54–

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

——————————————

தசசத பாணி பாத வதநாஷி முகை ரகிலை
அபி நிஜ வைச்வரூப்ய விபவை ரநுரூப குணை
அவதரணை ரதைச்ச ரசயன் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–55-

அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

——————————————–

ஜநந பவந ப்ரீத்யா துக்தார்ணவம் பஹூ மன்யஸே
ஜநநி தித ப்ரேம்ணா புஷ்ணாசி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய மாத்ருச ரஷண
ஷமமதி தியா பூயச் ஸ்ரீ ரங்க தாமநி மோத ஸே –56–

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

—————————————-

ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ
பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத
ஸ்ரீ ரங்கதாம்நி யது தான்யா துதாஹரந்தி
ஸீ தாவதார முக மேத தமுஷ்ய யோக்யா –57-

அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –

———————————————

ஐஸ்வர்யம் அஷரகதிம் பரமம் பதம் வா
கஸ்மைசி தஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப
த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ –58-

அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –

——————————————————-

ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்
இச்சாதிகார சகநாநுசயா நபிஜ்ஞ
ஆகாம்சி தேவி யுவயோரபி துஸ் சஹாநி
பத்தநாமி மூர்க்க சரிதஸ் தவ துர்பரோஸ்மி –59-

ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –

——————————————-

இத் யுக்தி கைதவசதேந விடம்பயாமி
தாநம்ப சத்ய வசச  புருஷான் புராணான்
யத்வா ந மே புஜ பலம் தவபாத பத்ம
லாபே த்வமேவ சரணம் விதித க்ருதாசி–60-

ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச  புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –

————————————————-

ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம் சஹஸூ ஹ்ருத் வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸூ ஸூ கஞ்ச தாஸ்ய ரசிகாம் புக்த்வா சம்ருத்திம் பராம்
யுஷ்மத்பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் –61-

தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: