ஸ்ரீ கௌசிக புராணம் -ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம் —

ஸ்ரீ பராசார்ய பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச ப்ரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே —

நமஸ்தேஸ்து வராஹாய சீல யோத்தரதே மஹீம்
குரமத்ய கதோ யஸ்து மேரு கண கணா யதே

ப்ரளோய தன்வ துத்தீர்ணாம் பிரபத்யேகம் வஸூந்தராம்
மஹா வராஹ தம்ஷ்ட்ராக்ர மல்லீ கோச மது வ்ரதாம் –

ஸ்ரீ வராஹ புராணம் -48-அத்தியாயத்தில் உள்ளது இது –
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஒன்றுக்கே பூர்வர் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் வியாக்யானம் உண்டு –
வேறே ஒன்றுக்கும் இல்லை -இது ஒன்றுக்குமே ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்

——————————

வேதோ அகில தர்ம மூலம் –என்றும்
பித்ரு தேவ மனுஷ்யானாம் வேதஸ் ச ஷு ஸனாதனம்-என்றும் சொல்லுகிறபடியே அதீந்த்ரியங்களான
தத்வ ஹித புருஷார்த்தங்களில் பிராமண பூதங்களான வேதங்களுக்கு பரிகர பூதங்களான வித்யா ஸ்தானங்கள் பத்து -இவற்றில்

சிஷையானது -வர்ணங்களினுடைய உச்சாரண விசேஷண ப்ரதிபாதன மாத்திரத்திலே தத் பரம் ஆகையாலும்
நிருக்தமனானது -வர்ண சாமான்யாதிகளைக் கொண்டு பதார்த்த விசேஷ ப்ரதிபாதனத்திலே தத் பரம் ஆகையாலும்
சந்தோ விசித்தியானது -வர்ண சங்க்யா விசேஷ நியதி காயத்ரியாதிச் சந்தா மாத்ர ப்ரதிபாதிகமாகையாலும்
வ்யாகரணமானது -வர்ண சமுதாயாத்மகங்களான பதங்களுடைய சாதுத்வ மாத்ர வ்யாப்ருதமாகையாலும்
கல்ப ஸூத்ரங்கள் பல சங்காத ரூப வாக்ய விசேஷ சோதித கர்மா அனுஷ்டான விசேஷ கல்ப நா ப்ரவ்ருத்தங்கள் ஆகையாலும்
ஜ்யோதிஷமானது -யதா சாஸ்த்ர அநுஷ்டேயங்களான கர்மங்களை யதா காலம் அனுஷ்டிக்கும்படி கால விசேஷ பிரதர்சன பிரதானம் ஆகையாலும்
நியாய சாஸ்திரமானது -பிரமாணாதி ஷோடச பதார்த்த வ்யவஹார மாத்ர ப்ரதிஷ்டாபகம் ஆகையாலும்

உப ப்ரும்ஹணங்கள் தன்னில்
தர்ம சாஸ்திரங்கள் கர்ம பாக உப ப்ரும்ஹண பிரதானங்கள் ஆகையாலும்
ப்ரஹ்ம பாக உப பிரும்ஹண பிரதானங்களான இதிஹாச புராணங்களில்
இதிஹாஸங்கள்
தர்மாதி புருஷார்த்த விசேஷ ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு பிரவர்த்திகையாலே தத்வ ப்ரதிபாதனத்தில்
விளம்பித ப்ரதிபாத்யங்கள் ஆகையாலும் இவைகள் தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதனத்தில் அப்ரயோஜனங்களாகக் கடவன-

புராணங்கள் பர தத்வ பரம ஹித பரம புருஷார்த்தங்களில் சாஷாத் உப ப்ரும்ஹணங்களாகக் கடவன- புராணங்கள் தன்னில்
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவை ராஜஸாஸ் தாமஸாஸ் ததா-என்று கல்ப விசேஷங்களை விபஜித்து –

யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணோ புரா
தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தாமசேஷூ ப்ரகீர்த்தயதே
ராஷசேஷூ ச மஹாத்ம்யம் யமதிகம் ப்ரஹ்மணோ விது
சங்கர்ணேஷூ சரஸ்வத்யா பித்ருணாம் ச நிகத்யதே
சாத்விகேஷ்வத கல்பேஷூ மஹாத்ம்யம் யமதிகம் ஹரே
தேஷ் வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் –என்று சொல்லுகிறபடியே

சாத்விக கல்பங்களிலே ஸத்வோத்தரான ப்ரஹ்மாவாலே ப்ரோக்தங்களாய்
சத்வாத் சஞ்சாயதே ஞானம் -என்றும்
ஸத்வம் ஞானம் பிரகாசம் -என்றும் -சொல்லுகிறபடியே
அஞ்ஞான சம்சய விபர்யயங்கள் தீரும்படி பரதத்வாதி விசேஷ நிச்சாயங்களான சாத்விக புராணங்கள்
முமுஷுக்களுக்கு உப ஜீவியங்களாகக் கடவன
சாத்விக புராணங்கள் தன்னில் இதர வக்த்ருகங்களான புராணங்களில் காட்டிலும்
பரம சத்வ சமாஸ்ரயனான பகவான் வக்தாவாக ப்ரவ்ருத்தமான புராணமே உத்க்ருஷ்டமாகக் கடவது –

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு
உயிர் உண்ட உபாயங்களும்-என்கிறபடியே
திண் கழல் கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திரு மால் -என்கிற சர்வேஸ்வரன் ஆஸூர ப்ரக்ருதிகளுடைய
மோஹன அர்த்தமாக அருளிச் செய்யும் வார்த்தைகள் சாத்விகர்களுக்கு உப ஜீவ்யங்களாக —
மற்றும் இவனுடைய அவஸ்தா விசேஷங்களில் வாக்கியங்களைப் பார்த்தால்
பகவத் வாக்கியங்கள் தன்னிலும் –

பரமபத நிலையன் அருளிச் செய்யும் வார்த்தை பரன் வாக்கியம் ஆகையால் பந்தம் இல்லாதார் கேட்கும்படியாய் இருக்கும்

ஷீராப்தி நாதன் வாக்யங்களைப் பார்த்தால் கடலோசை யோடே கலந்து அர்த்த ப்ரத்யாயம் ஆகாது –

மத்ஸ்ய ரூபியானவன் வாக்யத்தைப் பார்த்தால் ஒரு காலும் கரை ஏற்றம் அற்றவன் வார்த்தை யாகையாலே
ஜடாசய சம்பந்தம் தோற்றும்படியாய் இருக்கும்

கூர்ம ரூபியானவன் வார்த்தையைப் பார்த்தால் கம்பீரர் ஆகையாலும் ஸ்திரர் ப்ரமிக்கையும் கீழ்மை விடாமல் இருக்குமவன்
சொல்லும் வார்த்தை ஆகையாலே மேற் கொள்ளும் வார்த்தையாய் இராது –

ஸ்ரீ ந்ருஸிம்ஹன் வாக்யம் கழுத்துக்கு மேல் ஒரு படியும் கீழ் ஒரு படியும் ஆகையாலே ப்ரதோஷதிதமாய் இருக்கும்

ஸ்ரீ வாமனன் வாக்யம் -அடியில் சொன்னபடி அன்றிக்கே விஷம பதமாய் இருக்கும்
இவ்வளவும் அன்றிக்கே கவியாய் இருப்பான் ஒருத்தன் அளவிலே கண் அழிவை உடைத்தாய் இருக்கும்

பரசுராமன் வாக்யம் -பரசு தாரணம் பண்ணி சர்வ அவஸ்தைகளிலும் க்ஷமை விட்டவன்
வார்த்தை யாகையாலே ப்ரத்யயம் பிறக்கும் படி இராது

சக்ரவர்த்தி திருமகன் வாக்யம் கபிகளோடே கலந்து புண்ய ஜன பாதா பர்யந்தமாய் இருக்கும்

பல பத்ரன் வாக்யம் -சரஸ் ஸ்ரோதஸ்ஸாலே தாழப் போவாரையும் உதோத்த ப்ரவ்ருத்தர் ஆக்கினவன்
வார்த்தை யாகையாலே மத விகாரம் தோற்றி இருக்கும்
அவ்வளவு இன்றிக்கே சுத்த வர்ணனாய் இருக்கச் செய்தேயும் கலப்பை உடையவன் வார்த்தை ஆகையாலே
விஸ்வசிக்க ஒண்ணாத படியாய் இருக்கும் –

ஸ்ரீ கிருஷ்ணன் வாக்யம் பிறந்த அன்று தொடங்கி கை வந்த களவிலே காணலாம் படி இருக்கும்

கல்கி அவதாரத்தின் வாக்யம் வரப்போகிறது என்றுமது போக்கி ஒருவருக்கும் கை வந்து இருக்கும் வார்த்தை அன்று
அவ்வளவும் அன்றிக்கே அனுமானித்தே அறியவேண்டியதாய் இருக்கும்

இப்படிக்கு ஒரு அந்யதா சங்கை பண்ண ஒண்ணாதபடி
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்ட ஞானத்தின் ஒளி உரு என்றும்
ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரான் -என்றும் –
சொல்லுகிறபடி சம்யக் ஞான உபகாரகன் ஆகையாலும்

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய -என்று
ஞானவான்கள் விஸ்வசித்துக் கைக் கொள்ளும் படியான கிருபாதிசயத்தை யுடையவன் ஆகையாலும்

ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி யது எம்மை யாளும் யரசே -என்றும் சொல்லுகிறபடியே
ரக்ஷகத்வ பூர்த்தியை யுடையவன் ஆகையாலும்

இரும் கற்பகம் சேர் வானத்தர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று ஆழ்வாரும் பிரதம பிரபந்தத்தில் சர்வருக்கும்
இவனை ஒழிய ரக்ஷகாந்தரம் இல்லை என்று அறுதியிட்டு

சரம பிரபந்தத்தின் முடிவிலும்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் யுன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -என்று அவதாரங்கள் எல்லாம் கிடக்கச் செய்தே
இந்த அவதாரத்தில் தாம் அந்தமில் பேரின்பம் பெற்ற படியை அருளிச் செய்கையாலும்

அவனுடைய ரக்ஷகத்வமானது உத்தாரகமான ரக்ஷகத்வம் ஆகையாலும்
இப்படி பண்ணுகிற ரக்ஷணம் வாத்சல்ய மூலம் என்று தோற்றும்படி
ஏனமாய் நிலம்கொண்ட என் அப்பனே -என்றும்
அப்பன் ஊன்றி எடுத்து எயிற்றில் கொண்ட நாள் -என்றும்
வாத்சல்ய அவி நா பூதமான பித்ருத்வம் இவனுக்கு உண்டு என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ வராஹ அவதாரமே சர்வ உத்க்ருஷ்டமாகக் கடவது

இது சர்வேஸ்வரன் நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்யும் வார்த்தை யாகையாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து -என்கிறபடியே
இதுவும் உபாலம்ப விஷயம் ஆகிலோ என்னில் அவ்வார்த்தையும்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று
அறிந்து இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ கிலேசம் பொறுக்க மாட்டாத படியான த்வரா அதிசயத்தாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து –என்று
அநந்த புஜக சம்சர்க்க தோஷத்தால் பொய்யாகிறதோ என்று அதி சங்கை பண்ணினாள் அத்தனை –

இவ்வார்த்தை அப்படி இன்றிக்கே -பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே
நாச்சியார் பக்கல் உண்டான பாவ பந்தத்தாலே பிரளய ஆர்ணவ மக்னையான இவளை அதில் நின்றும் மேல் எடுத்து
இவளுடைய கிலேசத்தைத் தவிர்த்து வைத்த அளவிலும் -சம்சார ஆர்ணவ மக்நரான தம் பிரஜைகளுடைய
துக்க நிவ்ருத்திக்கு ஒரு ஸூகர உபாயம் காணாமையாலே விஷண்ணையாய் இருக்கிற இவளைக் கண்டு
அருளின பகவான் இவள் தேறும்படியாகச் சொன்ன வார்த்தை யாகையாலே அதி சங்கை பண்ண வேண்டியது இல்லை –
ஆகையால் அவஸ்தாந்த்ரங்கள் போல் அன்றிக்கே ஸ்ரீ வராஹ அவஸ்தையில் தமக்கு அருளிச் செய்யும் வார்த்தை தப்பார் என்னும் அர்த்தத்தை
பாசி தூர்த்து கிடந்த பார் மகட்க்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே – என்று நாச்சியார் தாமே அருளிச் செய்தார் –
ஆகையால் இந்தப் புராணம் எல்லாப் புராணங்களிலும் உத்க்ருஷ்டமாகத் தட்டில்லை-எங்கனே என்னில்

இப்புராணம் தன்னில் பகவான் அருளிச் செய்த உபாயங்கள் எல்லாத்திலும் கான ரூபமான உபாயமே
அத்யந்த உத்க்ருஷ்டமாகக் கடவது –
இவர் பல உபாயங்களையும் அருளிச் செய்யக் கேட்டு அருளின நாச்சியார் உபாயங்கள் எல்லாம் கிடக்கச் செய்தே
இக் கான ரூபமான உபாயத்தைத் தாம் பற்றி
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி என்றும்
தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி -என்றும்
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் -என்றும்
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு -என்றும்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடி -என்றும்
மனத்துக்கு இனியானைப் பாட -என்றும்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி -என்றும்
பங்கயக்கண்ணனைப் பாடி என்றும்
மாற்றாரை மாற்று அழிக்க வல்லானைப் பாட என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் துயில் எழுப் பாட என்றும்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி என்றும்
கோவிந்தா உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும்
இவர் அருளிச் செய்யக் கேட்ட உபாயங்கள் எல்லாத்திலும் இவள் திரு உள்ளத்துக்கு ஏறத் தான் பாடின பாட்டிலே
அனுஷ்டித்துக் காட்டின உபாயமும் இதுவேயாய் இருக்கும்
ஆகையால் பல பிரதேசங்களிலும் தாம் பாடின் பாட்டை அருளிச் செய்து பாடவல்ல நாச்சியார் என்னும் பேர் பெற்ற படியாலும்
இக் கீதா ரூப உபாயமே முக்கியமாகக் கடவது என்று நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்து அருளினார் –
பாட வல்ல நாச்சியார் -பாடுவதே உபாயம் என்று பலகாலும் அருளிச் செய்வதாலேயே

——————————————————–

ஸ்ரீ வராஹ உவாச
ஜாகரே து விசாலாக்ஷி ஜா நதோ வாப்ய ஜாநாத
யோ மே பிரகாயதே கேயம் மம பக்த்யா வியவஸ்தித -1-

இந்த ஸ்லோகத்தில் தமக்குப் பாடுவான் பாடும் படியை அருளிச் செய்கிறார்
பாட வல்லான் ஒருத்தன் ஜாகரத விரத நிஷ்டனாய்–ப்ரஹ்ம முஹூர்த்த சோத்தாய –என்கிறபடியே
ப்ரஹ்மமான முஹூர்த்தத்திலே வந்து நாம் முகம் கொடுத்துக் கேட்கிலுமாம்–
நாம் ஜகத் ரக்ஷண சிந்தையிலே அந்நிய பரராய் இருக்கிலுமாம்-
நம்முடைய குண அபதானங்களை உள்ளீடாக வைத்துப்
புணர்க்கப்பட்ட காதைகளை ஒரு பலத்தையும் நினையாமல் நம்முடைய பக்கல் பக்தி அதிசயத்தோடே
நமக்கே பாடக் கடவன் என்று நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்கிறார்

மே பிரகாயதே-நம் பாடுவான் இதனால் -நேரான மொழி பெயர்ப்பு –
விசாலாஷி –சீதா பிராட்டியையும் -பெரிய பெருமாளை பெருமாள் சேவிக்கும் பொழுது
பார்த்த விசாலமான திருக்கண்கள்
அவனைப் பார்த்து உள்ளம் பூரித்தததால் இங்கும் –
பெரும் கேழலார் –பெரும் கண் புண்டரீகம் -ஒத்த திருக்கண்கள் -துல்ய சீல வயோ வ்ருத்தம் இத்யாதி

—————

யாவந்தி த்வஷாரண் யஸ்ய கீயமாநே யசஸ்விநி
தாவத் வர்ஷ சஹஸ்ராணி ஸ்வர்க்க லோகே மஹீயதே -2-

இப்படி உம்முடைய புகழையும் நம்முடைய புகழையும் உள்ளீடாக வைத்து புணர்க்கப்பட்ட காதைகளை நமக்குத் பாடினால் –
அந்த காதைகளில் உண்டான அக்ஷரங்களுக்கு இசையால் மேல் ஏற்றமாக ஓரோர் அக்ஷரங்களுக்கும்
ஆயிரம் ஆயிரம் சம்வத்சரம் ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் காணும் நம் பாடுவான் என்று அருளிச் செய்தார்
இந்த்ர லோகம் வேண்டேன் – இந்த்ர பரம ஐஸ்வர்யம் -ஸ்ரீ வைகுண்டம் வேண்டேன் என்கிறார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஈரரசு -அன்றோ ஆகவே அவ்வாறு அருளிச் செய்கிறார்

————–

ரூபவான் குணவான் சுத்த சேவை ( சர்வ )தர்ம ப்ருதாம் வர
நித்யம் பச்யதி வை சக்ரம் வஜ்ர ஹஸ்தம் ந சம்சய –3-

அவன் ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் அளவும் அங்கு உள்ளார் எல்லாரிலும் வடிவு அழகியனுமாய் குணவானுமாய்
ஸ்வர்க்க ஸூகத்தில் சக்தனும் இன்றிக்கே சர்வ தர்மங்களையும் அறிந்து அங்கும் நம்மை மறவாமல் இருக்கிற இவன்
அத்தேசத்துக்கு அதிபதியான இந்திரன் தன் ஆயுதத்தோடே வந்து சேவித்து நிற்க அபாங்க வீக்ஷணம் பண்ணி இருக்கும்
காணும் நம் பாடுவான் -என்று அருளிச் செய்கிறார்

தேவதாந்த்ரங்கள் பக்தர்களுக்கு தொண்டு செய்வதையே பாரித்து இருப்பார் என்பதற்கு இதுவே பிரமாணம்
ஆழி மழைக் கண்ணா -பர்ஜன்ய தேவதைக்கு ஸ்ரீ ஆண்டாள் ஆஜ்ஜை -ஸ்ரீ ஆழ்வான் ஐதீகம்
அங்கு உள்ளார் எல்லாரிலும் வடிவு அழகியனுமாய் -ப்ரஹ்ம தேஜஸ்ஸூ இவனுக்கு –
அமுத உப்புச்சாறு தேஜஸ்ஸூ அவர்களது -ஆராவமுதத்துக்கும் உப்புச்சாறுக்கும் வாசி உண்டே

———

மத் பக்த்தாச் சாபி ஜாயதே இந்த்ரேணை கபதே ஸ்தித
சர்வ தர்ம குண ஸ்ரேஷ்ட தத்ராபி மம லுப்தக-4–

இப்படி இந்திரன் சேவித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
இந்திரனைப் போலே அங்கு நம்மை மறந்து இருக்கை அன்றிக்கே
நமக்கு ஆராதனங்களான கர்மங்களை செய்து நம்மையே அனுசந்தித்திக் கொண்டு இருப்பான்
நம் பாடுவான் என்று அருளிச் செய்தார்

இந்த்ரேணை கபதே-இந்திரனை போலே ஏக பதத்தில் இருந்தாலும்
நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்க -அவர் எங்கு இருந்தாலும் இந்த நினைவே
நமக்கோ அங்கே இருந்தாலும் எங்கேயோ நினைவு
திவி வா புவி வா –நரகே வா –அவிஸ்ம்ருதி சரணாராவிந்தமே வேண்டும்
நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி அன்றோ

———-

இந்திர லோகாத் பரிப்ப்ரஷ்டோ மம கேய பராயணா
பிரமுக்த சர்வ சம்சாரைர் மம லோகஞ்ச கச்சதி -5-

இந்திர லோகத்தில் இருக்கும் அளவும் அங்கு உள்ளார் எல்லாரையும் அழைத்துப் பாட்டுக் கேட்பிக்கும் அளவு அன்றிக்கே
நம்மை நினைத்துப் பாடிப் போருகையாலே அங்கு நின்றும் இவனைக் கொண்டு போய் நம் பெரிய வீட்டிலே –
ஏதாத் சாமான் காயன் நாஸ்தே-என்று எப்போதும் நமக்கே பாடி இருக்கும் படி வைத்தோம் காணும் என்று அருளிச் செய்தார்-

————-

ஏவந்து வசனம் ச்ருத்வா தத் ப்ரஸாதாத் வஸூந்தரா
வராஹ ரூபிணம் தேவம் ப்ரத்யுவாச சுபாநநா-6-

இப்படி ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்யக் கேட்டு திரு உள்ளத்தில் உகப்பு எல்லாம் திரு முகத்தில் தோற்றும் படி
அலர்ந்த திரு முகத்தை யுடையவளாய்க் கொண்டு ஸ்ரீ வராஹ நாயனாரைப் பார்த்து
ஸ்ரீ பூமிப் பிராட்டி ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறாள் –

ஆநநம் –திரு முகம் -ஸூப ஆநநம்-அழகிய திரு முகம் கண்டு அவனுக்கும் ஆனந்தம்

———-

அஹோ கீத பிரபாவோ வை யஸ் த்வயா பரிகீர்த்தித
கச்ச கீத ப்ரபாவேந சித்திம் ப்ராப்தோ மஹா தபா -7-

வேதங்களாதல் ரிஷிகளாதல் சொல்லுகை அன்றிக்கே தேவரீர் தாமே அருளிச் செய்யும்படியாய் இருந்தது
இப்படிக்கொத்த கீத ப்ரபாவத்தாலே தேவரீர் திருவடிகளை பெற்றவன் யாவன் ஒருவன் அவனை அருளிச் செய்ய வேணும் –
என்று விண்ணப்பம் செய்தாள்

ஆவலைத் தூண்ட பேரைச் சொல்லாமல் ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ வராஹ நாயனாரும்
ஸ்தித ப்ரதிஞ்ஞன் என்று பொதுச் சொல் -ஆசை பிறந்து -மதிப்பை அறிந்து த்வரையுடன் கேட்க விவரித்து சொல்லுவான்
கீத ப்ரபாவத்தாலே-பால் என்கோ -இசை என்கோ –கண்ணனைக் கோவுமாறு அறிய மாட்டேன்
கான பிரியன் -சாமவேதம்
பாட்டினாலே இருந்தமை கட்டி அருளுபவர்
நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா -பண் வைத்து பரகால நாயகியை மயக்க

—————–

ஸ்ரீ வராஹ உவாச
இப்படி விண்ணப்பம் செய்த பூமிப் பிராட்டியைப் பார்த்து வராஹ நாயனார் அருளிச் செய்கிறார்

ச்ருணு தத்வேந தே தேவி கத்யமாநம் யசஸ்விநம்
யாசித்து கீத ப்ரபாவேந சித்திம் ப்ராப்தோ மஹா தபா -8-

பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உள வாய்த்து-என்று நீர் நம்மைச் சொல்லும்படி
உம்மோடு நாம் ரசித்துச் சொல்லுகிற வார்த்தையாக நினையாதே இத்தை ஸத்ய வார்த்தையாக இருக்கும்
யாவன் ஒருவன் நம்மைப்பாடி நம் பெரிய வீடு பெற்றான் அவனைச் சொல்லுகிறோம் காணும் கேளீர்
என்று அருளிச் செய்கிறார் –

———————-

அசதி தக்ஷிண திக் பாகே மஹேந்திர நாம பர்வதே
தத்ர ஷீர நதி புண்ய தஷிணே சாக ரங்கமா -9-

வாரீர் பிராட்டியே தக்ஷிண திக்கிலே மஹேந்த்ரம் என்றதொரு பர்வதம் பிரசித்தமாய் இரா நின்றது
அவ்விடத்தில் ஷீர நதி என்றறொரு நதியானது தக்ஷிண சமுத்திர காமி நியாய் இரா நின்றது –

மேற்கு சமுத்திரத்தில் கலக்கும் பாலாறு -ஷீர நதி -மஹேந்திர கிரி -திருக் குறுங்குடி

——————–

தத்ர சித்தாஸ்ரமே பத்ரே சண்டாள க்ருத நிச்சய
தூராஜ் ஜாகரேண காதி மம பக்த்யா வ்யவஸ்தித -10-

முன்பு நீரும் நாமும் குறுங்குடியாகக் கட்டி இருந்த ஆஸ்ரமத்தில் பாப யோனியிலே பிறந்தான் ஒருவன்
நமக்குப் பாட வேணும் என்று சங்கல்பித்து ஜாகர விரத நிஷ்டனாய் மேலும் நம் பக்கல் பக்தியோடு
ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே வந்து தன் ஜாதி அனுகுணமாக தூரத்திலே வந்து நின்று பாடினான் காணும் என்று அருளிச் செய்தார் –

சித்தாஸ்ரமம் -வாமன க்ஷேத்ரம் இது என்பதால் –
ஸ்ரீ வாமன மூர்த்தி க்ருஹஸ்தராக கட்டி வாழ்ந்ததாக -எந்த அவதாரத்தில் பிரியாதவள் அன்றோ –

——————

ஏவந்து காயமா நஸ்ய கதா சம்வத்சரா தச
ஸ்வ பாகஸ்ய குணஜ் ஞஸ்ய மத் பக்தஸ்ய வஸூந்தரே–11-

இப்படி அந்த்ய ஜாதியிலே பிறந்து இருக்கச் செய்தேயும் நம் குண அனுசந்தாநத்தைப் பண்ணி
நமக்குப் பக்தனாய் வந்து இப்படி பத்து சம்வத்சரம் பாடினான் காணும் என்று அருளிச் செய்கிறார்

ஸ்வ பாகஸ்ய குணஜ் ஞஸ்ய-நாய் மாமிசம் உண்பவனாய் இருந்தும் எனது பக்தன் -ஜாதி அனுகுணமாக கர்மம் –
வேளாளர் குலம் நம்மாழ்வார் –
ஜீவாத்மாவுக்கு ஸ்வா தந்தர்யம் கொடுத்ததே -எந்த ஜாதி வர்ணம் ஆனாலும் பக்தனாகி அவனை அடையவே –
திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலம்

——————-

கௌமுதஸ்ய து மாஸஸ்ய த்வாதஸ்யாம் சுக்ல பஷகே
ஸூப்தே ஜனே கதே யாமே வீணா மாதாய நிர்யயவ் -12-

பின்பு ஒரு கார்த்திகை மாசத்தில் சுக்ல பக்ஷ த்வாதசியின் ராத்திரி ஒரு யாமத்துக்கு மேலே எல்லாரும் உறங்கின அளவிலே
தான் ஜாகர விரத நிஷ்டனாகையாலே உணர்ந்து இருந்து நாம் இருக்கிற இடத்தியலே வந்து நமக்குப் பாடுவதாக
கையும் வீணையுமாய்க் கொண்டு தன் வீட்டில் நின்றும் புறப்பட்டான் காணும் என்று அருளிச் செய்தார் —

யாமே-முதல் ஜாமத்தில்
ஜாகர விரத நிஷ்டனாகையாலே-திருப்பள்ளி உணர்ச்சி கைங்கர்ய நிஷ்டர்
புஷ்ப தியாக போக மண்டபங்களில் -பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமாக அந்தரங்கரை
திருப் பாண் ஆழ்வார் போலே நம்பாடுவானும் –
முடி மன்னவனும் தொண்டை மன்னன் -வைதிக உத்தமர் -ராமானுஜர் போனகம் செய்த சேஷம் ஆசைப்பட்டவர் –
மஹா முனியும் -லோக சாரங்க முனிவர் -முனி வாஹனர் -அனுவர்த்தித்த க்ரமம்
மூவரும் ப்ராஹ்மணர் இல்லை -க்ஷத்ரியர் -யதி -வைதிகர் மூவரும் ஆதரித்ததால் ஜாதி எதற்குப் பார்க்க வேண்டும் –

—————–

ததோ வர்த்தமனி சண்டாலோ க்ருஹீதோ ப்ரஹ்ம ரக்ஷஸா
அல்ப பிராணா ஸ்வ பாகோ வை பலவான் ப்ரஹ்ம ராக்ஷஸ -13-

அநந்தரம் நடு வழியில் வந்த வழியிலே ஒரு ப்ரஹ்ம ரக்ஷசின் கையிலே அகப்பட்டான்-
அவன் ஊன் மல்கி மோடு பருத்தவன் ஆகையால் பலவானாக இருந்தான்
நம் பாடுவான் நினைந்து நைந்து உள் கரைந்து உருகுவான் ஆகையால் துர்பலனாய் இருந்தான்
காணும் என்று அருளிச் செய்தார் –

ஊன் மல்கி மோடு பருத்தவர் உத்தமர்க்கு என் செய்வார் -ஆழ்வார்
என்பு தூண் நாட்டி -குரம்பை -பார்த்து வளர்க்கிறோம் -ஓட்டை மாடம் புரளும் போது அறியாமல்
பனி அரும்பு உருக -என் செய்வேன் உலகத்தீரே –
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –
அது இது எது –நைவிக்கும்
அழல் வாய் மெழுகு அன்ன உருகுகின்றேன்
ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடும் இம் வாள் நுதலே
உருகுமால் நெஞ்சம் -பெருகுமால் வேட்கை –
சதா பரகுண ஆவிஷ்டா -ஆஹ்லாத சீத்ர நேத்ராம்புக
பத்தர் பித்தர் –
மாலே செய்யும் மணாளன் -இரங்கும் பாவை பேணாள் பள்ளி கொள்ளாள் —
கடல் வண்ணார் இது செய்வார் காப்பார் யார் -உற்ற நல் நோய் இது தேறினோம்

——————–

துக்கேந ச து சந்தப்தோ ந ச சக்தோ விசேஷ்டிதும்
உவாச வசனம் மந்தம் மாதங்கோ ப்ரஹ்ம ரக்ஷஸாம் –14-

நம்பாடுவான் பலவான் அல்லாமையாலே பராக்ரமித்து விடுவித்துக் கொண்டு போக சமர்த்தனாக வில்லை
ப்ராஹ்மண ஜாதியும் அல்லாமையாலே ஒரு பஞ்ச ஜாதியைச் சொல்லி விடுவித்துக் கொள்ளவும் சமர்த்தன் ஆகவில்லை
நம்முடைய பக்கல் பரந்யாஸமே பண்ணி ப்ரஹ்ம ரக்ஷஸைப் பார்த்து ஒரு மதுரமான வார்த்தை சொன்னான் காணும்
என்று அருளிச் செய்தார் –

பகவத் சம்பந்தம் கொண்டே உத்க்ருஷ்டம் -ப்ராஹ்மண ஜாதி உத்க்ருஷ்டமாக பிரமிக்கத்தானே வைக்கும் –
குங்குமம் சுமந்த கழுதையோ பாதி -இருகால் மாடு –
ப்ராஹ்மண பக்தர் -சண்டாள பக்தர் இருவருக்குள்ளும் -ஸ்வா தந்தர்யம் உள்ளுக்குள்ளே இருக்குமே அவனுக்கும் –
ஜென்ம சித்த நைச்யம் உண்டே இவனுக்கு –
பய ஜனகன் -ஆரூட பதிதன் ஆகையாலே -மேல் படியில் இருந்து விழுந்தால் அடி அதிகமாகுமே
அயல் சதுப்பேதுமாரில் குடிமையில் அடிமைப்பட்டு குக்கரில் பிறப்பரிலும் –குக்கர் நாய் மாமிசம் உண்ணும் –

———————

கச்சாமி சந்தோஷயிது மஹம் ஜாகரணே ஹரிம்
காநேந புண்டரீகாக்ஷம் ப்ரஹ்ம ராக்ஷஸ முஞ்ச மாம் –15-

சிற்றம் சிறுகாலை வந்து உன்னைத் சேவித்து -என்கிறபடியே சர்வேஸ்வரனைப் பாடிப் பறை கொள்ளப் போகிறவனாய்
இருக்கிற என்னை விடாய் காணும் என்று அருளிச் செய்கிறார் –
முஞ்ச மாம் -என்னை விடாய்-
ஹரிம்-புண்டரீகாக்ஷம்-பாபங்களை போக்கும் இரண்டு சப்தங்கள்

——————–

ஏவம் உக்த்வா ஸ்வபாகேந பலவான் ப்ரஹ்ம ராக்ஷஸ
அமர்ஷ வசமாபந்நோ ந ச கிஞ்சித் தம ப்ரவீத் -16-

இப்படி நம் பாடுவான் சொன்ன வார்த்தையைக் கேட்டு ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸூம் அதி க்ரூரமாய்
வார்த்தையும் சொல்லாதே உதாசித்து இருந்தது காண் என்கிறார் –

———————-

ஆத்மா நம் ப்ரதி தாவந்தம் சண்டாலோ ப்ரஹ்ம ரக்ஷஸாம்
கிம் த்வயா சேஷ்டி தவ்யம் மே ய ஏவம் பரிதா வசி–17-

இப்படி கோபாக்ராந்தனாய் மேல் விழுந்து வருகிற ப்ரஹ்ம ரக்ஷசைப் பார்த்து மீளவும் நம் பாடுவான் ஒரு வார்த்தை சொன்னான்
நீ இப்படி என் பேரில் ஓடி வந்து செய்யப் போகிறது என்ன காணும் என்றான் -என்கிறார் –

——————–

ஸ்வபாக வசனம் ஸ்ருத்வா ததோ வை ப்ரஹ்ம ராக்ஷஸ
உவாச வசனம் கோரம் மானுஷாஹாரா லோலுப -18-

அந்த ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸூ நம் பாடுவான் சொன்ன வார்த்தையைக் கேட்டு தன் பசியால் மானுஷ மாம்சத்தில்
ஆசை யுடைத்தானாதாய்க் கொண்டு இவனைப் பார்த்து ஒரு குரூரமான வார்த்தை சொல்லிற்று காணும் என்கிறார் –

மானுஷாஹாரா லோலுப-மானுஷ மாம்சத்தில் ஆசை யுடைத்தானாதாய்க் கொண்டு

———————

அத்ய மே தச ராத்ரம் வை நிராஹா ரஸ்ய கச்சத
தாத்ரா த்வம் விஹிதோ மஹ்யா மாஹார பரிதோ மம -19-

நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -என்று நீ பத்து சம்வத்சரம் பாடி இளைப்பற்றுத் திரிகிறாய்
நான் பத்து நாள் உண்டு காண் பட்டினியே இளைத்துத் திரிகிறேன்
ஆகையால் நமக்குத் தைவதம் ஆகாரமாகக் கல்பித்து வைத்த உன்னை விடுவேனோ என்று சொல்லிற்றுக் காணும் என்கிறார் –

படைக்கப்பட்ட எவனையும் அவனே அன்றோ காக்கிறான் –
தேவ அஸூரா விபாகம் -நானே என்னால் வாழ்கிறேன் நினைவே அஸூர எண்ணம்-
உள்ளே இருப்பது சத்தைக்காக -அவனது கர்மாதீனமாக அன்றோ பேசுகிறான்

——————-

அத்ய த்வாம் பக்ஷயிஷ்யாமி ஸ்வ ஸா மாம்ச சோணிதம்
தரப்ப யித்வா யதா நியாயம் யாஸ்யாமி ச யதேப்சிதம்-20-

இப்போது நான் உன்னை விடுவது இல்லை -உன் அவயவங்களைத் தனித்தனியே பிரித்து உன் சரீரத்தின்
உதர மாம்சாதிகளைக் கொண்டு தேவதா ஆராதனம் பண்ணி என் பசியும் தீர்த்துக் கொண்டு
எனக்கு இஷ்டமானபடி போவேன் -என்று சொல்லிற்று காணும் என்கிறார் –

தரப்ப யித்வா–கண்டு அருளப்பண்ணியே -தேவதா ஆராதனம் பண்ணி

—————————-

ப்ரஹ்ம ரஷோ வசநம் ச்ருத்வா ஸ்வ பாகோ கீத லாலஸ
ராக்ஷஸம் சந்த்யா மாச மம பக்த்யா வியவஸ்தித–21-

இப்படி ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸூ சொன்ன வார்த்தையைக் கேட்டு நம் பாடுவான் சரீர ஹானி பர்யந்தமான
ஆபத்து வந்த அளவிலும் நம் பக்கல் பக்தி அதிசயத்தாலே வியவஸ்திதனாய் நமக்குப் பாட வேணும்
என்கிற ஆசையால் அந்த ரக்ஷசை அனுவர்த்தித்து நன்மையான ஒரு வார்த்தை சொன்னான் காணும் –
என்று அருளிச் செய்தார் –

—————————–

ச்ருணு தத்வம் மஹா பாக பஷ்யோஹம் சமுபாகத
அவஸ்யமேதத் கர்த்தவ்யம் தாத்ரா தத்தம் யதா தவ -22-

வாராய் மஹா பாகனே -யதார்த்தம் சொல்லுகிறேன் -நீ கேள் -நீ சொன்னபடியே உனக்கு நான் பஷ்யமாகக் கடவன் –
ப்ரஹ்மா கல்பித்தபடி செய்ய வேண்டியது உனக்கும் எனக்கும் அவசியம் தான் என்று சொன்னான் காணும் நம் பாடுவான் –
என்று அருளிச் செய்தார் –

தாத்ரா தத்தம்–ப்ரஹ்மா கல்பித்தபடி

——————-

பச்சாத் காதசி மாம் ரஷோ ஜாகரே விநி வர்த்திதே
விஷ்ணோ சந்தோஷ அர்த்தாய மமதைத் விரதம் உத்தமம் -23-

வாராய் ரக்ஷஸே எனக்கு நியமும் உண்டு -சர்வேஸ்வரனுடைய ப்ரீதி அர்த்தமாக ஜாகர விரதம் என்ற ஒரு விரதம் உண்டு
அது முடித்து மீளவும் வருகிறேன் -என்னை உனக்கு பஷ்யமாகக் கொள்ளக் கடவாய்
என்று சொன்னான் காணும் நம் பாடுவான் என்கிறார் —

விஷ்ணோ சந்தோஷ அர்த்தாய -வரணாஸ்ரமம் செய்வதே ப்ரீதி -அஹிம்சா -பிரதமம் –இந்திரிய நிக்ரஹம் –
சர்வ பூத தயா -ஷமா–த்யானம் – தபஸ் –சத்யம் அஷ்டவிதம் -விஷ்ணோ புஷ்பம் ப்ரீதி கரம் பவேத் ஏற்படுத்தும்

கொடுமின் கொள்மின் -ஞானம் கொடுத்து-ஞானம் பெற்றுக் கொண்டு –
என்னை விட மேலாக என்னுடைய பக்தர்களை கொள்ள வேண்டும் என்கிறான்
மாறனேர் நம்பி சம்ஸ்காரம் பெரிய நம்பி
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்ட -மூன்று நம்பிகள் -பெரிய நம்பி -திருமலை நம்பி திரு க் கோஷ்ட்டியூர் நம்பி
விதுரனுக்கு தர்மர் சம்ஸ்காரம் – ராமர் ஜடாயுவுக்கு சம்ஸ்காரம்

————————-

ரக்ஷமாம் விரத பங்காத் வை தேவம் நாராயணம் பிரதி
ஜாகரே விநிவ்ருத்தே து மாம் பஷயே யதேப்சிதம்-24-

பகவானைப் பற்றி நான் ஏறிட்டுக் கொண்ட விரதத்துக்கு பங்கம் வாராமல் நீ என்னை ரக்ஷிக்க வேணும்
இந்த ஜாகர விரதம் ஸமாப்தமானவாறே உன் மனஸ்ஸூக்கு சரிப்போன படி என்னைப் பஷ்யமாகக் கொள்ளக் கடவாய்
என்று சொன்னான் காணும் நம் பாடுவான் என்கிறார் –

——————–

ஸ்வ பாகஸ்ய வாச ச்ருத்வா ப்ரஹ்ம ரக்ஷஸ் ஷூதார்த்தம்
உவாச மதுரம் வாக்யம் ஸ்வபாகம் தத் அநந்தரம் -25-

இப்படி நம்பாடுவான் சொன்ன வார்த்தையைக் கேட்டு பசியாலே இளைத்து இருக்கிற
ப்ரஹ்ம ரக்ஷஸானது இனிதாக ஒரு வார்த்தை சொல்லிற்று காணும் என்கிறார் –

ஷூதார்த்தம்–பசியாலே இளைத்து இருக்கிற –
இனி அதுவே மதுரமாக வார்த்தை

——————-

மோகம் பாஷஸி சண்டாள புனரேஷ்யாம் யஹம் த்விதி
கோ ஹி ரஷோ முகத்த பிரஷ்ட ஸ்தன் முகாயா பிவர்த்ததே-26-

வாராய் சண்டாளா -உன் ஜன்மத்துக்கு ஈடாக இருந்தது நீ சொன்ன வார்த்தை–
போய் மீண்டு வருகிறேன் என்று நேரே அசத்யமே சொன்னாய்
எவனாகிலும் ப்ரஹ்ம ரஷஸின் கையிலே அகப்பட்டுத் தப்பித்துக் கொண்டு போய் மீண்டும் வந்து
அதன் கையில் அகப்படுவானோ என்று சொல்லிற்று என்கிறார் –

அமோகம் பொய்க்காதே -ஸ்ரீ ராம பானம் போலே

———————

பகவ சந்தி பந்தாநோ தேசாச்ச பகவஸ் ததா
ஆத்ம தேசம் பரித்யஜ்ய பரேஷாம் கந்து மிச்சசி -27-

இவ் வழி ஒழிய பல வழிகள் உண்டு -இத் தேசம் ஒழிய பல தேசங்கள் உண்டு
உன்னுடைய தேசத்தை விட்டு தேசாந்தரம் போவதாக நினைக்கிறாய் என்று சொல்லிற்று -என்கிறார்

பந்தாநோ-பல வழிகள்
பக்தியாலே அடைய முடியும் -வேறு வழிகளால்-அறியவும் காணவும் அடையவும் முடியாதே –
இந்த ஒரு வழியையே அறிவான்
அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் இவை இரண்டாலும் சொன்னபடி –
சொம்பு இடுக்கி அலம்பும் கதை
த்வம் ஏவ உபாய பூத — ஏவ காரம் -நாராயணனே நமக்கே பறை தருவான்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்வோம்

———————

ஸ்வ சரீர விநாசாய ந ச ஆகச்சதி கச்ச ந
ரக்ஷசோ முக ப்ரவிஷ்ட புநராகந்து மிச்சசி –28-

தனக்கு சரீர நாசம் பிறந்து இருக்கும் இடம் அறிந்து இருக்கச் செய்தே
அந்த இடத்தைக் குறித்து யாரேனும் ஒருவர் வருவார் உண்டோ
ரஷஸின் கையில் அகப்பட்டது தப்பிப் போய் மீண்டு வருகிறேன் என்று நேராக அசத்யமே சொன்னாய் –

———————–

ராக்ஷஸஸ்ய வச ச்ருத்வா சண்டாலோ தர்ம சம்ச்ரிதம்
உவாச மதுரம் வாக்யம் ராக்ஷஸம் பிசிதாசநம் –29 –

இப்படி ரக்ஷஸ்ஸூ சொன்ன வார்த்தையைக் கேட்டு நம் பாடுவானும் இந்த ரக்ஷசைப் பார்த்து
தர்ம சம்யுக்தமாகவும் இனிதாகவும் ஒரு வார்த்தை சொன்னான் காணும் என்கிறார் –

இவனுக்கு ஆத்மாவில் நோக்கு -அவனுக்கு தேகத்தில் நோக்கு
நாமே தான் ரக்ஷஸ்ஸூ தேஹாத்ம பிரமம் வரும் பொழுது –
தர்ம சம்ச்ரிதம் உவாச மதுரம் -தர்மமாகவும் இனியதாகவும் -சுசியும் ருசியும் சேர்ந்து -பிரியம் ஹிதம் இரண்டும் –
அன்னையாய் அத்தனாய் -சடகோபன் என் நம்பியே -தொண்டர்க்கு அமுது உண்ண-பிரிய ஹிதங்கள்
அத்தனாகி அன்னையாகி -ஆழ்வார் அவனைப் பார்த்து -வரிசை மாறி -அவனுக்கு ஹிதம் முக்கியம் –
அத்தை பிரியமாகவும் சொல்லுவான்
ஆழ்வாரோ பிரியம் சொல்வதிலே நோக்கு -அதில் ஹிதம் சேர்ந்தே இருக்கும்
நாமம் சொல்லும் பிள்ளை -ஹிதம் -தன் சிறுவன் -பிரியம் -இரண்டையும் கொள்ள வில்லையே ஹிரண்யன்

——————–

யத்யப்யஹம் ஹி சண்டாள பூர்வ கர்ம விதூஷித
ப்ராப்தோஹம் மானுஷம் பாவம் விதிதேந அந்தராத்மாநா-30-

பூர்வ கர்ம தோஷத்தால் இந்த சண்டாள ஜென்மத்தில் பிறந்தேன் ஆகிலும் பரமாத்ம ஞானம் உண்டான படியால்
ஒரு மநுஷ்யனுக்கு உண்டான ஞானமும் எனக்கும் உண்டு காண் -ஆகையால் என்னுடைய வார்த்தையைக் கேளாய்
என்று சொல்லுகிறான் காணும் என்கிறார் –

உடலால் அபசாரம் -ஸ்தாவரங்கள் -வாயால் -பக்ஷிகள் ஜங்கமங்கள் -மனத்தால் அபசாரம் -சண்டாளன்
பிறவிக்குத்தக்க அசத்தியம் பேச மாட்டேன் -மனுஷ்ய பாவனையில் சத்தியமே பேசுவான் என்ற நினைவு
ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்தில் உஜ்ஜீவனம் உண்டே
கர்ம சண்டாளனுக்கு இல்லையே
ஈஸ்வர ஞானம் வந்தால் அசுத்தி போகுமே –

—————

ச்ருணு தத் சமயம் ரஷோ யேந அகச்சாம் யஹம் புந
தூராஜ் ஜாகரணம் க்ருத்வா லோக நாதஸ்ய திருப்தயே–31-

த்ரைலோக நாதனான சர்வேஸ்வரனைத் திருப்பள்ளி உணர்த்தி ஸமாப்த வ்ரதனாய் யாதொருபடி நான்
மீள வருவேனா அதுக்கு ஈடான ப்ரதிஜ்ஜைகளைப் பண்ணிக் கொடுக்கிறேன்
அவற்றை நீ கேளாய் என்று சொன்னான் காணும் நம் பாடுவான் என்கிறார் –

உத்தான துவாதசி ஏகாதசி -இது -எழுந்து இருந்து அனுக்ரஹிப்பான்
முக்தி தா வைகுண்ட ஏகாதசி

—————

சத்ய மூலம் ஜகத் சர்வம் லோகஸ் ஸத்ய ப்ரதிஷ்டித
நாஹம் மித்ய்யா ப்ரவிஷ்யாமி சத்யமேவ வதாம் யஹம் –32-

லோகம் உண்டானதும் சத்யத்தாலே லோகம் ப்ரதிஷ்டிதமாய் நின்றதுவும் சத்யத்தாலே
ஆகையால் நான் சத்தியமே சொல்லும் அத்தனை போக்கி அசத்தியம் ஒருக் காலும் சொல்லேன் என்றான் காணும் என்கிறார் –

மூலமும் ஆதாரமும் சத்தியமே -சத்ய மூர்த்தி திரு மெய்யம் –
சத் தி யம் -சத்தையும் தீ யையும் -அசேதன சேதன வர்க்கங்களை-சர்வ நியந்தா

——————

அத்யமே சமயஸ் தத்ர ப்ரஹ்ம ராக்ஷஸ தம் ச்ருணு
சபாமி சத்யேன கதோ யத் யஹம் நாகமே புந –33-

வாராய் ப்ரஹ்ம ராக்ஷஸே என்னுடைய ப்ரதிஜ்ஜையைக் கேளாய் -யாவன் ஒருவன் சர்வ காரணமான
சத்யத்தை தப்புகிறானோ அவன் பாபத்தை அடையக் கடவேன் மீளவும் வந்திலேன் ஆகில் -என்கிறான் –
தர்ம புத்ரன் அஸ்வத்தாமா -கண்ணன் ப்ரஹ்மம் அருகில் இருந்தாலும் அசத்தியம் பேசி
நரக தர்சனம் பண்ண வேண்டி இருந்ததே
சகாதேவன் -அமாவாசை நாள் குறித்து -கண்ணன் சொன்னாலும் மாற்ற வில்லையே
அமாவாசையை மாற்றி கண்ணன் க்ருத்யம்

——————

யோ கச்சேத் பர தாராம்ச்ச காம மோஹ ப்ரபீடித
தஸ்ய பாபேந லிப்யேயம் யத் யஹம் நாகமே புந -34-

யாவன் ஒருவன் மன்மத பீடிதானாயக் கொண்டு பர ஸ்த்ரீ கமனம் பண்ணுகிறான்
அவன் பாபத்தை அடையக் கடவேன் -மீளவும் வந்திலேன் ஆகில் -என்கிறான்

——————-

பாக பேதம் துய குர்யாத ஆத்மநச்சோப புஞ்சத
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -35-

புஜிக்கும் இடத்தில் பாக பேதம் பண்ணி புஜிப்பவன் அடையும் பாபம்

———————

தத்வா வை பூமி தானம் து புநர் ஆச்சிந்த தீஹ ய
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -36-

ப்ராஹ்மணனுக்கு பூமி தானம் பண்ணி அத்தை அபஹரிக்குமவன் அடையும் பாபம்

——————

ஸ்த்ரீயம் புக்த்வா ரூபாவதீம் புநர் யஸ்தாம் வி நந்ததி
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -37-

ரூபவதியான ஸ்திரீயை யவ்வன காலத்தில் அனுபவித்து பின்பு தோஷம் சொல்லி கை விட்டவன் அடையும் பாபம்

——————

யோ அமாவாஸ்யாம் விசாலாக்ஷி ஸ்ரார்த்தம் க்ருத்வா ஸ்த்ரீயம் வ்ரஜேத் –
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -38-

அமாவாஸ்யை ஸ்ரார்த்தம் பண்ணி-தனது தாரத்தையும் கூட- ஸ்த்ரீ கமனம் பண்ணுபவன் அடையும் பாவம்
க்ருஹஸ்தனாக இருந்தாலும் ப்ரஹ்மசர்யம் அனுபவிப்பவன் ஆவான் –

—————

புக்த்வா பரஸ்யச அந்நாநி யஸ்தம் நிந்ததி நிர்க்ருண
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -39-

பரன் அன்னத்தை புஜித்து தயை இல்லாமல் தூஷிக்குமவன் பெறும் பாவம்
இதனாலே கண்ணன் திரியோதனர் பீஷ்மர் க்ருஹத்தில் உண்ண வில்லை

—————-

யஸ்து கன்யாம் ததா மீதி புநஸ் தஸ்ய ந பிரயச்சதி பாபேந
லிப்யேயம் யத்யஹம் நாகேம புந -40-

கன்னிகையைக் கொடுக்கிறோம் என்று சொல்லி கொடுக்காமல் போகுமவன் அடையும் பாபம்

——————-

ஷஷ்டி அஷ்டம்யோர் அமாவாஸ்யா சதுர்தச் யச்ச நித்ய ச
அஸ்நா தானாம் கதிம் கச்சே யத்யஹம் நாகேம புந -41-

யாவன் ஒருவன் ஷஷ்ட்டி அஷ்டமி அமாவாஸ்யை சதுர்த்தசி இந்த திதிகளிலே ஸ்நானம் பண்ணாமல் புஜிக்குமவன் பாவம்
மற்ற நாள்களிலும் குளிக்காமல் உண்ணக் கூடாது -இந்த நாள்களில் அதிக தோஷம் –
கூழானாலும் குளித்தே பூசி –
பூப்புனை கண்ணி புனிதன் -இன்று மட்டும் நீராடி வந்தான் -உடம்பு இருக்க தலை குளிக்கும் ஆயர்கள் –
இவனோ ஆயர் தலைவன் -அலங்கார பிரியன் விஷ்ணு -அபிஷேக பிரியன் கங்காதரன் –

—————–

தாஸ்யாமீதி பிரதி ஸ்ருத்ய ந ச யஸ் தத் பிரயச்சதி
கதிம் தஸ்ய ப்ரபத்யே வை யத்யஹம் நாகமே புந -42-

யாவன் ஒருவன் ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்காமல் போகிறவன் அடையும் பாபம்-
ஸ்ரத்தையுடன் மரியாதை உடன் வெட்க்கி கொடுக்க வேண்டுமே-

——————-

மித்ர பார்யாம் து யோ கச்சேத் காம பாண வசா நுக
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகமே புந -43-

மிதாத் த்ராயத இதி மித்ரம்-என்று சொல்லுகிறபடியே மஹா உபகாரகனான மித்ரன் உடைய
பார்யை அபகரிக்குமவன் -வசீகரிப்பவன் -அடையும் பாபம்

——————-

குரு பத்னீம் ராஜ பத்னீம் யே து கச்சந்தி மோஹிதா
தேஷாம் கதீம் ப்ரபத்யே வை யத்யஹம் நாகமே புந -44-

ஆமுஷ்மிக ஐமிஹ ஐஸ்வர்யம் அளிப்பவர்கள்-குரு ராஜ பத்நீமார்களை அபகரித்தவன் பாபம்

——————

யோ வை தார த்வயம் க்ருத்வா ஏகஸ்யாம் ப்ரீதிமான் பவேத்
கதிம் தஸ்ய ப்ரபத்யே வை யத்யஹம் ந ஆகமே புந -45 —

இருவரை விவாஹம் பண்ணி ஒருவரை உபேக்ஷிக்குமவன் அடையும் பாவம்

பிரதம பரிக்ரகத்துக்கு செங்கல் கீரையும் உடுக்கும் கூறையும் வைத்து -பட்டத்துக்கும் மரியாதைக்கும் –
பிடித்தமும் ஆசையும் த்வதீய பரிக்ரகத்துக்கு -ஈசன் வானவர்க்கு -என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி –
சந்திரன் ரோகினி -27-பெண்களை தக்ஷன் கல்யாணம் -சாய ரோக சாபம் -சந்த்ர புஷ்கரணியில் நீராடி சாப விமோசனம்
துண்டை வெண் பிறையின் துயர் தீர்த்தவன் -பிறையின் துயர் பாட பேதங்கள் உண்டே
இந்து புஷ்கரணி-திரு இந்தளூர்

————————–

அநந்ய சரணாம் பார்யாம் யவ்வனே ய பரித்யஜேத்
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகமே புந -46-

அநந்யகதியான தனது பார்யையை யவ்வனத்திலே விட்டவன் அடையும் பாபம் –

பரிக்கப்படுகிறாள்-பார்யை-சப்தார்த்தம்–திரு மார்பிலே இடம் கொடுத்து காட்டி அருளுகிறார்
பதியினுடைய சிசுரூஷை-பதி வ்ரதை

———————

கோகுலஸ்ய த்ருஷார்த்தஸ்ய ஜலார்த்த மபிதாவத
விக்ந மாசரதே யஸ்து தத் பாபம் ஸ்யாத நாகமே -47-

தாகத்துடன் ஓடி வருகிற பசுக்கூட்டத்துக்கு ஜல பான விக்னம் பண்ணுகிறவனது பாபம்

முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் உண்டே -விஸ்வ ரூப சேவை இன்றும் உண்டே –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திட்டமான பசுக்களை நீரூட்டி-

———————–

ப்ரஹ்மக்நே ச ஸூராபே ச சோரே பஃன வ்ரதே ததா
யா கதிர் விஹிதா சத் பிஸ் தத் பாபம் ஸ்யாதநாக மே -48-

ப்ரஹ்மகத்யை செய்யும் பாபம் -மது பாநம் பண்ணும் பாவம் -ஸ்வர்ண ஸ்தேயம் பண்ணும் பாவம் –
விரத பங்கம் பண்ணும் பாவம் -இப்படி குரூரமான பாபங்களை அடையாக கட வேன் –

ஜாக்ரத விரதத்தை பங்கம் பண்ணைக் கூடாதே — இதில் நான்கும் சொல்லி -அதுக்கும் மசியாமல் இருக்க
அடுத்து -அவனாலும் விட முடியாத பெரிய பாபம்

—————–

வா ஸூ தேவம் பரித்யஜ்ய ய அந்யம் தேவம் உபாஸதே
தேஷாம் கதிம் பிரபத்யே வை யத்யஹம் நாகமே பு ந -49-

தேவதாந்த்ர ஆராதனை பாபம்

ஆரோக்யம் ஸூர்யம் -ஐஸ்வர்யம் -அக்னி -ஞானம் -சங்கரன் -மோக்ஷம் -ஜனார்த்தனன்
மறந்தும் புறம் தொழா மாந்தர்
வியபிசாரம் இல்லாத அநந்ய பக்தனாக வேண்டுமே
முக்கோல் பிடித்த ராமானுஜர் திருவானைக்கால் கோயிலுக்குள் போகாத ஐதிக்யம் -நம் பெருமாளே போனாலும் –
ஆதிப்பிரான் நிற்க வேறு தெய்வம் நாடுவோமோ –
மார்கண்டேயனும் கரியே

——————-

நாராயணம் அதான்யைஸ் து தேவைஸ் துல்யம் கரோதி ய
தஸ்ய பாபேந லிப்யேயம் யத்யஹம் நாகமே புந -50-

சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ அந்தர்யாமியாய் -சர்வ கர்ம சமாராத்யானாய் -முமுஷு உபாஸ்யனாய் –
மோக்ஷ பிரதனாய் -முக்த ப்ராப்யனான சர்வேஸ்வரனையும்
காணிலும் உருப் பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரம் தரும் மிடிக்கிலாத தேவராய்
கர்ம பரவசரான வியதிரிக்த தேவதைகளையும் சமமாக எண்ணி நித்ய சம்சாரியாகக் கடவேன் –
இப்படி சபதங்களைப் பண்ணினான் காணும் நம் பாடுவான் என்று ஸ்ரீ பூமிப் பிராட்டியைப் பார்த்து
ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தார்-

கீழே சமமாக தொழுவார்களால் வரும் பாபம் -இங்கு சமமாக நினைப்பவர்கள் பெரும் பாபம்
தாழ் சடை இத்யாதி –அவனுக்கும் சேர்ந்த ஈசன் -அவனுக்கும் ஏக தேசத்தில் இருக்க வைத்த
திருவேங்கடத்தான் என்று -அறியாமல் சாம்யத்வம் சொல்வது மடப்பமே
பொல்லாத தேவர் -திரு இல்லாத் தேவர் -இவர்கள் அதிகார புருஷர்களே-அவன் அத்விதீயம் –
தங்கம் -குந்துமணி இடம் ஒப்புமை போலே அன்றோ –
வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடாதி ஆபத் விமோசன-இத்யாதி
திருவடி தீர்த்தம் -சங்கரன் தலையில் –
இடர் கெடுத்த திருவாளர் இணை அடியே அடை நெஞ்சே-
நின் அகலத்து அன்றோ — உந்திப்பூ-

——————

சண்டாள வசனம் ச்ருத்வா பரிதுஷ்டஸ்து ராக்ஷஸ
உவாச மதுரம் வாக்யம் கச்ச சீக்ரம் நமோஸ்து தே -51-

ஸந்துஷ்டமாய் நமஸ்கரித்து கடுகப் போய் விரதத்தை தலைக்கட்டி வரக்கடவாய்
மதுரமாக வார்த்தை சொல்லிற்று

—————–

ராக்ஷஸேன விநிர் முக்தச் சண்டாள க்ருத நிச்சய
புநர் காயதி மஹ்யம் வை மம பக்த்யா வியவஸ்தித -52-

முக்தன் வருமா போலே வந்து முன்பு போலே நமக்குப் பாடினான் காணும்

பக்த்யா வியவஸ்தித-பக்தியால் பீடிக்கப்பட்டவனாய்

——————-

அத ப்ரபாதே விமலே வி நிவ்ருத்தே து ஜாகரே
நமோ நாராயணேத் யுக்த்வா ஸ்வபாக பு நராகமத் -53-

பொழுது விடிந்து -ஜாகர விரதம் தலைக்கட்டின அளவிலே நம்மிடம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணி
தனக்குத் தியாஜ்யமான சரீரம் கழிகையில் உண்டான ஆசையால் கடுக மீண்டான் காணும் நம்பாடுவான்
என்று அருளிச் செய்தார்

செய்த வெளியார் -இனி என்ன குறை நமக்கு -க்ருதக்ருத்யனாக –
நமோ நாராயணேத்-பிரணவம் இல்லாமல் -நம் பாடுவான் அன்றோ -நிஷ்டை அறிந்தவன்

—————

கச்சதஸ் த்வரிதம் தஸ்ய புருஷ புரத ஸ்தித
உவாச மதுரம் வாக்யம் ஸ்வபாகம் தத் அநந்தரம் -54-

பாட வந்த கடுமையயைக் காட்டிலும் இரட்டிப்பாக திரும்ப அவன் முன்னே ஒரு புருஷன்
வந்து இனிமையாக வார்த்தை சொன்னான் காணும்

நம்பி கிழவன் இவனை சோதிக்க-

—————

குதோ கச்சசி சண்டாள த்ருதம் கமன நிச்சிதம்
ஏததா சஷ்வ தத்வேந யத்ர தே வர்த்ததே மந -55-

முன்பை விட வேகமாக போகிறாய் -எங்கு ஏறப் போகிறது -உண்மையாக சொல் -என்றான் அந்த புருஷன்

——————-

தஸ்ய தத் வசனம் ச்ருத்வா ஸ்வபாக ஸத்ய சம்மத
உவாச மதகுஞ் வாக்யம் தத் அநந்தரம் -56-

ஸத்ய பிரதிஞ்ஞனான நம் பாடுவான் அத்தைக் கேட்டு மதுரமாக ஒரு வார்த்தை சொன்னான்

——————–

சமயோ மே க்ருதோ யத்ர ப்ரஹ்ம ரக்ஷஸ் சந்நிதவ்
தத்ராஹம் கந்துமிச்சாமி யத்ர அசவ் ப்ரஹ்ம ராக்ஷஸ–57-

ப்ரதிஜ்ஜை தப்பாமல் அங்கு ஏறப் போகிறேன் -முன்பு இருந்த இடத்தில் இல்லையாகில்
அவன் எங்குள்ளான் என்று தேடித் போகிறேன் –

காரார் திரு மேனி காணும் அளவே போய்-கலியன்-
ப்ரஹ்ம ரஜஸ்ஸை தேடி இவன் -சத்யம் நழுவாமல் –

—————–

ஸ்வபாக வசனம் ச்ருத்வா புருஷ பாவ சோதக
உவாச மதுரம் வாக்யம் ஸ்வபாகம் தத் அநந்தரம் –58-

இவன் மனசை சோதிக்க மதுரமான வார்த்தை சொன்னான் அப்புருஷன்

மாயாயாம் அபஹ்ருதாம் வாசா -போலே-கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே –
அடுத்த ஏகாதசிக்கு பாட வேண்டாமோ போன்ற வார்த்தைகள் –

—————–

ந தத்ர கச்ச சண்டாள மார்க் கேனாநேந ஸூ விரத
தத்ர அசவ் ராக்ஷஸ பாப பிஸிதாசீ துராசத–59-

ஜாதி ராக்ஷஸன் -விபீஷணனைப் போலே தர்மாத்மா அல்லன்-பாபிஷ்டன் -சரீரம் கொண்டு தப்பித் போகாமல்
மாம்ச பக்ஷகன் -கொன்று போக ஒண்ணாதபடி பலவான் -நீ அங்கே போகக் கடவை அல்ல என்றான்

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –

——————

புருஷஸ்ய வச ச்ருத்வா ஸ்வபாக ஸத்ய சங்கர
மரணம் தத்ர நிச்சித்ய மதுரம் வாக்கியம் அப்ரவீத் -60-

சத்தியத்தை விடுவதைக் காட்டிலும் ப்ராணனை விடுவதே ஸ்ரேஷ்டம்-என்று நினைத்து
மதுரமான வார்த்தை சொன்னான் –

——————

நாஹமேவம் கரிஷ்யாமி யன்மாம் த்வம் பரிப்ருச்சசி
அஹம் சத்யே அப்ரவ்ருத்தோ வை சீலம் சத்யே ப்ரதிஷ்டிதம் -61-

நான் சத்யம் தப்பாதவன் -நான் தப்பினாலும் என் ஸ்வபாவம் சத்யம் தப்பாது காண்-

ஸத்ய விரதம் –ஸத்ய பரம் -திரு சத்யம் சத்யஸ்ய யோனி -நிஹிதஸ்ய சத்யம் —
சத்யம் சரணம் தேவர்கள் கண்ணன் ஆவிர்பவிக்க பிரார்த்தனை

————————

தத ச பத்ம பத்ராஷ ஸ்வபாகம் ப்ரத்யுவாச ஹ
யத்யேவம் நிச்சயஸ்தாத ஸ்வஸ்தி தேசத்து கமிஷ்யத-62-

சத்யம் ரஷிப்பேன் என்றதைக் கேட்டுப் பிரியப்பட்டு அமலங்களாக விழிக்கும் -என்று சொல்லுகிறபடி நம் பாடுவானைப் பாட
வரக் காட்டின ப்ரஹ்ம ரக்ஷசினுடைய ஆபத்தும் போகும்படி பூர்ண கடாக்ஷம் பண்ணி உனக்கு மங்களம் உண்டாகுகக
கடவது போகாய் என்று அனுப்பினான் காணும்
அந்தப் புருஷன் யாரோ என்று ஸந்தேஹியாதே
மஹா வராஹா ஸ்புட பத்ம லோசன-என்றும்
புருஷ புஸ்கரேஷனை-என்றும் சொல்லுகிறபடியே
இருவரையும் ஒருவராகக் கொள்ளீர் என்று அருளிச் செய்கிறார் –

கடாக்ஷம் பலனாக -மீண்டும் அடுத்த ஏகாதசி கைங்கர்யம் கிட்டும்
ஸ்ரமணி விதுர ரிஷி பத்னி -புனிதராக்கிய நெடு நோக்கு
கமலக்கண்ணன் என் கண்ணில் உள்ளான் காண்பான் -அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஜாயமான மது சோதனை கடாக்ஷம்
நீண்ட அப்பெரியவாய –கண்கள் பேதைமை செய்தவனே
இருவரும் ஒருவரே -ஸ்ரீ பட்டர் நமக்கு காட்டி அருளுகிறார்

———————-

ப்ரஹ்ம ரஷோந்திகம் ப்ராப்ய சத்யே ஸுக்ருத நிச்சய
உவாச மதுரம் வாக்கியம் ராக்ஷஸம் பிசிதாச நம் –63-

அந்த புருஷனும் விடை கொடுக்க அந்த ப்ரஹ்ம ராக்ஷச இருக்கும் இடம் தேடித் சென்று
தனதுமாமிசம் உண்ணும் அவன் இடம் இனிதாக ஒரு வார்த்தை சொன்னான் –

ராக த்வேஷம் இரட்டை விட்டவன் அன்றோ
பரமன் அடி பாடி நெய் உண்ணோம் -இவன் உண்டு வந்தவன்
அவனுக்கு தன்னைக் கொடுக்க வந்தான்

————————

பவதா சம நுஞ்ஞாதோ காநம் க்ருத்வா யதேப்ஸயா
விஷ்ணவே லோக நாதாய மம பூர்ண மநோ ரத-
ஏதாநி மம சங்காநி பக்ஷ யசவ யதேச்சயா–64-

நீ அநுஜ்ஜை பண்ணிப் போன நான் எனக்கு வேண்டியபடி சர்வேஸ்வரனாய் மஹா விஷ்ணுவான
அழகிய நம்பியைப் பாடி உகப்பித்து பூர்ண மநோ ரதனானேன்
நீயும் என் சரீரத்தில் ருதிர மாம்ஸாதிகளைக் கொண்டு பூர்ண மநோ ரதன் ஆகாய என்றான் –

பிராமணனாக -சோமா சர்மா -நீ ஆசீர்வாதத்தால் பாடப் பெற்றேன் –

——————–

ஸ்வபாக வசனம் ச்ருத்வா ப்ரஹ்ம ரஸோ பயாநகம்
உவாச மதுரம் வாக்கியம் ஸ்வபாகம் ஸம்ஸித விரதம் –65-

நம் பாடுவானைப் பார்த்து மதுரமான வார்த்தை சொல்லிற்று

—————

த்வமத்ய ராத்ரவ் சண்டாள விஷ்ணோர் ஜாகரணம் பிரதி
பலம் கீதஸ்ய மீ தேஹி ஜீவிதம் யதிசேத்தசி-66-

இன்று இரவு சர்வேஸ்வரனைப் பாடின பலத்தைத் தந்து உன் பிராணனோடு போகாய் என்றான்

ஜீவிதம் யதிசேத்தசி-ஸ்ரீ ஸீதாப்பிராட்டி ராவணனுக்கு சொன்ன வார்த்தை

——————-

ப்ரஹ்ம ரஷோ உவாச ச்ருத்வா ஸ்வபாக பு நரவீத் –67-

இத்தை கேட்ட நம் பாடுவான் மற்றொரு வார்த்தை சொன்னான் –

———————

யத் த்வயா பாஷிதம் பூர்வம் மயா சத்யஞ்ச யத் க்ருதம்
பக்ஷ யஸ்வ யதேச்சம் மாம் தத்யாம் கீத பலம் ந து -68-

நீ முன்பு சொன்னபடி என்னுடைய சரீரத்தை பஷிக்குமத்தைப் போக்கி எனக்கு
கீத பலம் என்று ஓன்று இல்லையே என்றான்

—————–

சண்டாளஸ்யா வச ச்ருத்வா ஹேது யுக்தம் அநந்தரம்
உவாச மதுரம் வாக்கியம் சண்டாளம் ப்ரஹ்ம ராக்ஷஸ -69-

இப்படி காரணமுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் இனிதாக ஒரு வார்த்தை சொன்னான்

ஹேது யுக்த –காரணத்துடன் சொன்ன வார்த்தை

——————

அதவா அர்த்தம் து மே தேஹி புண்யம் கீதஸ்ய யத் பலம்
ததா மோஷ்யாமி கல்யாண பஷா தஸ்மாத் விபீஷணாத் -70-

கீத பலத்தில் பாதியாகிலும் தந்து பயங்கரமான பாஷாணத்தில் நின்றும் தப்பித் போகலாகாதோ
மஹாநுபாவனே என்று சொல்லிற்றுக் காணும் -என்கிறார் –

—————–

ப்ரஹ்ம ரக்ஷ உவாச ச்ருத்வா ஸ்வபாக ஸம்ஸித விரத
வாணீம் ஸ்லக்ஷணாம் சமாதாய ப்ரஹ்ம ராக்ஷஸம் அப்ரவீத் -71-

இந்த வார்த்தை கேட்டு நம் பாடுவானும் இனிதாக ஒரு வார்த்தை சொன்னான்

ஸம்ஸித விரத-ஸத்ய வரதன் நம் பாடுவான் -ஸத்ய விரத க்ஷேத்ரம் ஸ்ரீ காஞ்சீபுரம்

———————

பக்ஷயாமீதி ஸம்ஸ்ருத்ய கீதம் அந்யத் கிம் இச்சசி -72-

அப்படி தரவும் ஒன்றும் இல்லை

——————–

ஸ்வபாகஸ்ய வச ச்ருத்வா ப்ரஹ்ம ரஷோ பயாவஹம்
உவாச மதுரம் வாக்கியம் ஸ்வபாகம் ஸம்ஸித விரத –
ஏக யாமஸ்ய மே தேஹி புண்யம் கீதஸ்ய யத் பலம்
ததோ யாஸ்யசி கல்யாண சங்கமம் புத்ர தாரகை 73-

ஒரு யாமத்தில் பாடின பாட்டின் பலமாகிலும் தந்து உன் புத்ர தாராதிகளுடன் கூடக் கடவாய் -என்றான்

உயிர் வாழ ஆசை கீழே சொல்லி இங்கு புத்ர தாரா ஆசை காட்டுகிறான்
திரியாமா -இரவுக்கு பெயர்

—————-

ச்ருத்வா ராக்ஷஸ வாக்யாநி சண்டாலோ கீத லாலஸ -74-
உவாச மதுரம் வாக்கியம் ராக்ஷஸம் க்ருத நிச்சய

தீரனாயும் திருட விரதனான நம்பாடுவான் மீண்டும் ஒரு வார்த்தை சொன்னான்

கீத லாலஸ-கீதங்களிலே ஆசை கொண்டவன்
க்ருத நிச்சய -திட வரதன் -ஸ்தித ப்ரதிஞ்ஞன் –
தீரன் -விவேக ஞானம் -கொண்டவன் -ஆத்மாவின் வைலக்ஷண்யம் அறிந்தவன் -மோஹம் அடைய மாட்டான்

———————–

ந யாமஸ்ய பலம் தத்யாம் ப்ரஹ்ம ரக்ஷஸ் தவேப்சிதம்
பிபஸ்வ சோணிதம் மஹ்யம் யத் த்வயா பூர்வ பாஷிதம் –75-

என்னுடைய பாட்டுக்குப் போல ராகம் உள்ள ரத்தத்தை பானம் பண்ணும் அத்தனை போக்கி
வேறு ஒன்றும் இல்லை என்றான்

பாடுவதில் ராகம் ஆசை எனக்கு -உனக்கு ரத்தத்தில் ஆசை –
ராகத்தின் வர்ணம் சிகப்பு -பராங்குச திரு உள்ளம் -ராகம் -சிகப்பு ஏறி திருவடிகள் சிவந்தன

—————–

ஸ்வபாகஸ்ய வாச ச்ருத்வா ராக்ஷஸ பிசிதாச ந
சத்ய வந்தம் குணஜ்ஞம் ச சண்டாளம் இதம் அப்ரவீத் -76-

சத்யம் தப்பாமல் உறுதியாய் இருந்து பிராணனைக் காட்டிலும் கானத்தின் வைபவம் அறிந்தவனாய் இருப்பத்தைக் கண்டு
இவன் சர்வத்தினுடைய வைஷம்யத்தையும் அறியும் என்று அறுதியிட்டு மேலும் ஒரு வார்த்தை சொன்னான் –

குணஜ்ஞம்-சத்தியத்தில் நிலை நின்றது மட்டும் இல்லை -பகவத் குண ஞானம் அறிந்தவன் –
சக்ரவத்தி வறட்டு சத்ய விரதன் -பெருமாளை நோக்காமல் -அதனால் ஸ்வர்க்க பிராப்தி மட்டுமே –
விவேக ஞானம் கொண்டவன் என்று உணர்ந்தது பிரம்மா ரஜஸ்ஸூ –
த்யாஜ்ய உபாதேய ஞானம் உள்ளவன் -வீடுமின் முற்றவும்-அனைத்தையும் விட்டு –
வீடு செய்து –விட்ட பின் -உம் உயிர் -உம்மையும் உடலையும் அவன் இடமே விட வேண்டுமே

——————–

ஏகம் கீதஸ்ய மே தேஹி யத் த்வயா விஷ்ணு சம்சதி -77-
நிக்ரஹாத் தாரயாஸ் மாத்வை தேந கீத பலேந மாம்
ஏவ முக்த்வாது சண்டாளத் ராக்ஷஸ சரணம் கத -78-

ஒரு பாட்டின் பலத்தையாகிலும் தந்து என்னை ராக்ஷஸ ஜென்மத்தின் நின்றும்
உத்தரிப்பிக்க வேணும் என்று சரணம் புகுந்தது –

இதில் தான் தனது சாபத்தை சொல்லி தாண்டுவிக்க சரண் –
பலத்தைக் குறித்து செய்யக் கூடாது என்றாலும் பாடின திரு உள்ள உகப்பாலே அவனே கொடுப்பான் –
அவன் இடம் கேட்டுப் பெற்று இவனுக்கு அளிப்பான் –
வேதத்தின் முன் செல்க –விரிஞ்சன் –போதத்தின் முன் செல்க –
எங்கள் தென் குருகூர் புனிதன் கவி ஓர் பாதத்தின் முன் செல்லுமே
திருவாய் மொழி வீற்று இருந்தே கேட்டு அருளுகிறார் –

—————

ச்ருத்வா ராக்ஷஸ வாக்யாநி ஸ்வபாக ஸம்ஸித விரத
உவாச மதுரம் வாக்கியம் ராக்ஷஸம் பிசிதாச நம் -79-

பிரார்த்தனையைக் கேட்டு நம் பாடுவான் மதுரமான வார்த்தை சொன்னான்

ஸம்ஸித விரத –சத்யம் அறிந்தவன் -சரணாகதி ரக்ஷணம் பண்ண வேண்டும் என்று அறிந்தவன் அன்றோ

——————

கிம் த்வயா துஷ்க்ருதம் கர்ம க்ருத பூர்வம் து ராக்ஷஸ
கர்மனோ யஸ்ய தோஷேண ராக்ஷஸேம் யோனிம் ஆஸ்ரித-80-

ராக்ஷஸ யோனியில் பிறக்க என்ன பாபம் பண்ணினாய் என்று கேட்டான் –

————–

ஏவம் யுக்த ஸ்வபாகே ந பூர்வ வ்ருத்தம் அநு ஸ்மரன்
ராக்ஷஸ சரணம் கத்வா ஸ்வபாகம் இதம் அப்ரவீத் -81-

பூர்வ வ்ருத்த ஸ்மரணம் வந்தவாறே சரணாகதி பண்ணி ஒரு வார்த்தை சொல்லிற்று காணும்

——————-

நாம்நா வை சோமசர்மாஹம் சரக்கோ ப்ரஹ்ம யோனி ஜ
ஸூத்ர மந்த்ர பரிப்ரஷ்டோ யூப கர்மண் யதிஷ்டித -82-

சோமசர்மா என்ற ப்ராஹ்மணனாய் -சரக கோத்ர உத்பவனாய் பிறந்து
ஸூத்ர மந்த்ர பரப்ருஷ்டனாய் யாகம் பண்ண உபக்ரமித்தேன் -என்றது

வர்ணாஸ்ரம விரோதமாக எதுவும் செய்யக்கூடாதே –
செம்புகன் பண்ணின தப்பான யாகம் –உத்தர காண்ட வ்ருத்தாந்தம்

—————–

ததோஹம் காரயே யஜ்ஜம் லோபமோஹ ப்ரபீடித
யஜ்ஜே ப்ரவர்த்தமாநே து சூல தோஷஸ் த்வஜாயத-83-

அர்த்த லோப மோகத்தினால் யஜ்ஜம் பண்ணினேன் -மகத்தான சூல தோஷம் உண்டாய்த்து

லோபமோஹ-பேராசை -மயக்கம் –
சாத்விக தாமச ராஜஸ யஜ்ஞங்கள் ஸ்ரீ கீதை

——————

அத பஞ்சம ராத்ரே து அசமாப்தே க்ரதாவஹம்
அக்ருத்வா விபுலம் கர்ம தத பஞ்சத்வ மாகத -84-

ஐந்தாம் நாள் யாகம் சமாப்தி ஆகாமலே நான் மரணம் அடைந்தேன்

——————–

தஸ்ய யஜ்ஜஸ்ய தோஷேண மாதங்க ச்ருணு யந் மம
ஜாதோஸ்மி ராக்ஷசஸ் தத்ர ப்ராஹ்மணோ ப்ரஹ்ம ராக்ஷஸ -85-

அந்த யாக தோஷத்தால் ப்ரஹ்ம ரக்ஷஸாக வந்து பிறந்தேன் -என்றது –

———————–

ஏவம் து யஜ்ஜ தோஷேண வபு பிராப்தமிதம் மம
இத் யுக்த்வா து ததா ரக்ஷஸ் ஸ்வபாகம் சரணம் கதம் -86-

இவ்வாறு சொல்லி சரணம் அடைந்தது

வபு பிராப்தமிதம் மம -இந்த ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸூ சரீரம் அடைந்தேன்

—————–

ப்ரஹ்ம ரக்ஷஸ் உவாச ச்ருத்வா ஸ்வபாக ஸம்ஸித விரத
பாடமித்ய ப்ரவீத் வாக்கியம் ப்ரஹ்ம ராக்ஷஸ சோதித-87-

நாம் ஸ்ரீ விபீஷணனுக்கு அபயப் பிரதானம் பண்ணினால் போலே ரஷஸூக்கு பாபம்
என்று அபய பிரதானம் பண்ணினான் காணும் என்கிறார்

பாடம் –அப்படியே என்றவாறே -உனக்கு அபயம் கொடுத்தோம் –
உப நயனம் -பிதாவுக்கு பாத பூஜை -பட்டு வேஷ்ட்டிக்குள் மறைந்து –
பாடம் -அப்படியே சொல்லுவதை பிள்ளை ஏத்துகே கொள்ள வேண்டும்
க்ருத யுகம் -ஸ்ரீ வராஹ நாயனார் -சதுர் யுகம் தோறும் அவதாரங்கள் உண்டே –
இது ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி யாகவும் கொள்ளலாம்

—————–

யன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகம் உத்தமம்
பலேந தஸ்ய பத்ரம் தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்-88-

கைசிக பண்ணைப் பாடி அதன் பலத்தால் மோக்ஷம் அடையக் கடவாய் என்று
அபயப் பிரதானம் பண்ணினான் காணும் நம் பாடுவான் என்கிறார்

கைசிக பண்ணில் பாடிய -பச்சிமம் கீதம்–உயர்ந்த கீதம் -பள்ளி எழுப்பிய கீதம் –

——————

ஸ்ரீ வராஹ உவாச
யஸ்து காயதி பக்த்யா வை கைசிகம் மம சம்சதி
ச தாரயதி துர்காணி ஸ்வபாகோ ராக்ஷஸம் யதா –89-

யாவன் ஒருவன் பக்தியோடு நம் சந்நிதியில் வந்து கைசிகம் பண்ணைப் பாடுகிறான் -அவன்
ப்ரஹ்ம ராக்ஷஸை உத்தரிப்பித்த நம் பாடுவானைப் போலே தன்னை ஆஸ்ரயித்தவர்களை உத்தரிப்பான் -என்று
ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டியை நோக்கி அருளிச் செய்தார் –

பக்தியோடு -பலத்தை எதிர்பாராமல் -சந்நிதிக்கு முன்னே பாடுவதால் பலன்
துர்காணி–தடங்கல்கள் போக்கப் பெறுவோம் -/ தன்னை ஆஸ்ரயிப்பாரையும் உத்தரிக்கும் சக்தி பெறுவோம்-

—————-

ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராக்ஷசோ ப்ரஹ்ம சம்ஸ்தித
ஜாதஸ்து விமலே வம்சே மம லோகஞ்ச கச்சதி -90-

நல்ல வம்சத்தில் நம் பக்தனாய் பிறந்து நமக்குப் பல்லாண்டு பாடி நம்
பெரிய வீடும் பெற்றான் அந்த ராஷஸூம் என்று நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்தார் –

ப்ரஹ்ம ராஜஸ்ஸூ அடுத்த பிறவியில் மோக்ஷம் -நம்பாடுவான் இதே பிறவியில் பெரிய வீடு பெற்றான் –

—————-

ஸ்வபாகச் சாபி ஸூஸ்ரோணி மம சைவோபகயாக
க்ருத் வாது விமலம் கர்ம ச ப்ரஹ்மத்வம் உபாகத-91-

நம்பாடுவானும் பலகாலம் நம் வைபவத்தைப் பாடி பெரும் வீடு பெற்றான் காணும் என்று அருளிச் செய்தார்

துருவன் ப்ரஹ்லாதன் போல்வாரும் அதே ஜென்மத்தில் மோக்ஷம் பெறவில்லையே
பக்தி யோக நிஷ்டனுக்கு பிராரப்த கர்மா கழிந்த பின்பே மோக்ஷம்
தேக அவசானே முக்தி பிரபன்னனுக்கு
ஜடாயு மஹாராஜர் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போல்வாருக்கு அதே ஜென்மத்தில் மோக்ஷம்
பிரபன்னனுக்கு பக்தி உபாயம் இல்லை -கைங்கர்யமாக -ஸ்வயம் பிரயோஜனமாக -உண்டு-
ஸூஸ்ரோணி-அழகிய ஸ்ரீ பூமிப் பிராட்டி -விசாலாட்சி -ஸ்ரீ வராஹ நாயனார் பக்த பிரபாவம் அருளிச் செய்வதைக் கேட்ட அழகு –

————————–

ஏதத் கீத பலம் தேவி கௌமுத த்வாதஸீம் புந
யஸ்து காயதி ச ஸ்ரீ மான் மம லோகஞ்ச கச்சதி -92-

நமக்குப் பாடுவான் பெரும் பேறு சொல்கிறோம் -யாவன் ஒருவன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ துவாதசி
அன்றைய தினம் நம்முடைய சந்நிதி முன்பே வந்து இந்த கைசிக மஹாத்ம்யத்தை வாசிக்கிறான் -கேட்கிறான் –
அவர்களும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு என்றும் ஏதத் சாம காயன் நாஸ்தே என்றும் சொல்லுகிறபடி
பல்லாண்டு பாடிக் கொண்டு ஆத்ம அனுபவம் பண்ணிக் கொண்டு இருப்பார்கள் காணும் என்று
ஸ்ரீ நாச்சியாரைப் பார்த்து ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்தார்
இத்தைக் கேட்ட ஸ்ரீ நாச்சியாரும் பிரளய ஆர்ணவத்தில் உண்டான இளைப்பு எல்லாம் தீர்ந்து
இக் கான ரூபமான உபாய வைபவம் இருந்தபடி என் என்று க்ருதார்த்தை யானாள்

நமக்குப் பாடுவான் இதில் -கீழே நம் பாடுவான் -என்னுடையவன் என்று அபிமானம் அவனுக்கு –
ஸ்ரீ மான் ஆவோம் -திருமகள் அருளால் சாம்யா பத்தி பெறுவோம்

—————

இதி ஸ்ரீ வராஹ புராணே ஸ்ரீ பூமி ஸ்ரீ வராஹ சம்வாதே கைசிக மஹாத்ம்யம் நாம அஷ்டஸத்வாரிம்சோத்யாய-

————————————-

சாதுர் மாசம் -ஜீயர் நான்கு பக்ஷங்களுக்கு-கோயிலுக்கும் உண்டு -ஆகமம் -கைசிக உத்சவம் –
பனிக்காலம் தொடங்கும் உத்ஸான ஏகாதசி -ஆனி சுக்ல ஏகாதசை -ஐப்பசி சுக்ல பாஷ ஏகாதசி -சயனம்
ஆவணி மாத சுக்ல பாஷா ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி -வலது பக்கம் திரும்பி -பவித்ர உத்சவம் அப்பொழுது தொடங்கும் –
கார்த்திகை சுக்ல பக்ஷ-ப்ரபோத ஏகாதசி -உத்தான ஏகாதசி -ஷீராப்தி நாத பூஜை -துளசி தேவியுடன் கல்யாணம் வடக்கே நடக்கும் இன்று
தசமி -சாயங்காலம் அங்குரார்ப்பணம் -திரு முளைச்சாத்து
ஏகாதசி காலை -திரு மஞ்சனம்
மாலை ஐந்து மணிக்கே உள்ளே எழுந்து -சீக்கிரம் -இரவில் பத்து மணிக்கே திருக்கதவு திறக்கும்
புறப்பாடு -கிளி மண்டபம் -பகல் பத்து மண்டபம் -துலுக்க நாச்சியாருக்கு ஒய்யார நடை சேவை சாதித்து -சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி
-360-பச்சை வடம் சாத்தி -தாம்பூலம் அடைக்காய் அமுது ஒவ் ஒன்றுக்கும் –
ஒவ் ஒன்றுக்கும் அருளப்பாடு -உண்டு
அடைக்காயிலும் பச்சை கற்பூரம் வைத்துள்ளார்
அரையர் ஸ்வாமி பட்டை அடித்து -கூப்பிட்டு -மாத்வ சம்ப்ரதாயம் -கோயில் மஹா ஜனத்துக்கு இந்த கைங்கர்யம்
ஸ்தலக்காரர் மணியக்காரர் கோயில் அண்ணன் பட்டர் ஸ்வாமி கூப்பிட்டு வர கைங்கர்யம் இவர்களுக்கு
அக்கும்–பக்கம் நிற்பார் திருக்குறுங்குடி -பத்தும் -முதல் பாசுர வியாக்யானம் அபிநயம் உண்டு -அரையர் சேவை

திரை சேர்த்து வடை பருப்பு சமர்ப்பித்து –
எங்கனேயோ -நம்மாழ்வார் -முதல் பாசுரம் -வியாக்யானமும் உண்டு
இவர் சேவையும் பச்சை வடமும் ஒரே சமயத்தில் நடக்கும்
பட்டர் கூப்பிட்டு
அழகிய மணவாளன் சந்நிதியில் காத்து -இருப்பார்
புராணம் -ஓலை சுவடி வைத்து இருப்பார் -ஸ்தானிகர் கையில் கொடுத்து -நம் பெருமாள் திருவடியில் சமர்ப்பித்து
இது காலை மூன்று மணி வரை நடக்கும்
கும்ப ஹாரம் -கட தீபம் காட்டுவார் -த்ருஷ்ட்டி வராமல் இருக்க –
கண்ணாடி அரைக்கு எழுந்து அருளி –
தொங்கு கபாய் குல்லாய் சாத்தி பட்டர்
நம் பெருமாள் -நீல நாயக கௌஸ்துபம் மட்டும் சாத்தி மற்றவை களைந்து நல்ல சேவை பட்டருக்கு –
இருவரும் மேலப்படி ஏறுவார்
விஜயநகர சொக்க நாதன் –
புஷபம் பச்சை கற்பூரம் தூவி
ஹாரத்தி காட்டி உள்ளே
மாலை களைந்து -பட்டருக்கு சமர்ப்பித்து
ஆர்ய பட்டர் வாசலில் ப்ரஹ்ம ரதம்-மரியாதை உடன் திரு மாளிகைக்கு –
வீதியாரப் புறப்பட்டு –பிராட்டி கூரத்தாழ்வான் இவர்களது பிரசாதம் வாங்கிச் செல்வர்
ஆகமத்தில் உள்ளவற்றையும் இந்த ஐதீகத்தையும் சேர்த்து உத்சவம்

——————————-

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்கா ஸூத ஸ்ரீமாந் ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: