சிங்கப்பிரான் சீர்மை-/ஆத்ம ஸ்வரூப விளக்கம் -/திருத் துளசி மஹாத்ம்யம் —

சிங்கப்பிரான் உகந்து அருளின -மலை உச்சி -கடிகாசலம் -அஹோபிலம் /
மலை குகை -தேவ பெருமாள் சந்நிதி /
வனம்-காட்டு அழகிய சிங்கர் -ப்ருந்தாரண்யம் -தெள்ளிய சிங்கர் -/
தும்பை வனம் திரு வேளுக்கை -மிக விருப்பத்துடன் -வேள்-விருப்பம் – -எழுந்து அருளும் தெய்வ தேசம்

பயக்ருத -பய நாசக -ராகவ ஸிம்ஹம் -கேசவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -/

ஜலே ரக்ஷது வராஹ ஸ்தலே ரக்ஷது வாமன அடவ்யாம் நாரஸிம்ஹஸ் ச ஸர்வத பாது கேசவ

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியனாய மைந்தன் உய்ந்தான் -நினைக்கும் கால்
வேளுக்கை ஆளரியே வேறு உதவி யுண்டோ உன்
தாளுக்கு ஆளாகாதவர்க்கு –நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –

———————

ஆதா வீஸ்வரகத் தயைவ புருஷ ஸ்வாதந்தர்ய சக்த்யா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரயதநாந் யுதபாதயந் வர்த்ததே தத்ரோ பேஷ்ய ததோ நுமத்ய விததத்
தத் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம் பிரயச்சதி தத ஸர்வஸ்ய பும்ஸோ ஹரி –தத்வசாரம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள்

சர்வ நியாமகனாய் -சர்வ அந்தராத்மாவான சர்வேஸ்வரன் ஆதியிலே உண்டாக்கிக் கொடுத்த ஞாத்ருவ ரூபமான
ஸ்வா தந்தர்ய சக்தியால் சேதனன் தானே
அவ்வோ விஷயங்களில் ஞான சிகீர்ஷா பிரயத்னங்களைப் பண்ணிக் கொண்டு இருப்பன்
அவ்விடங்களில் அ சாஸ்த்ரீயங்களிலே உபேக்ஷித்தும்
சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களில் நிக்ரஹ அனுக்ரஹங்களைப் பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலன்களையும் சர்வேஸ்வரன் கொடா நிற்பான்

ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி

சர்வேஸ்வரன் எந்த சேதனனை உயர்கதியை அடைவிக்க விரும்புகிறானோ அவனைக் கொண்டு நல்ல கார்யங்களைச் செய்விக்கிறான்
எந்த சேதனனை நீச கதியை அடைவிக்க விரும்புகிறானோ அவனைக் கொண்டு கெட்ட கார்யங்களைச் செய்விக்கிறான்

இந்த உபநிஷத் சர்வ ஜன சாதாரணம் அன்று –
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் மிக அதிகமான ஆனுகூல்யத்தில் ஒருப்பட்டவனாய் பிரவர்த்திக்கிறானோ அவனை
அனுக்ரஹியா நின்று கொண்டு சர்வேஸ்வரன் தானே தன்னைப் பெற சாதனங்களாயும் அதி கல்யாணங்களாயும் உள்ள
கர்மங்களிலே ருசியை ஜனிப்பிக்கிறான் என்றும்
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் மிக அதிகமான ப்ராதிகூல்யத்தில் ஒருப்பட்டவனாய் பிரவர்த்திக்கிறானோ அவனை
ஸ்வ பிராப்தி விரோதிகளாயும் அதோகதி சாதனங்களாயும் உள்ள கர்மங்களிலே சக்தன் ஆக்குகிறான் என்றும்
இந்த உபநிஷத் வாக்யத்துக்கு பொருளாம்

ஆகவே சேதன ப்ரவ்ருத்தியில் சர்வேஸ்வரனுக்கு அனுமந்த்ருத்வமே சர்வ ஜன சாதாரணம்
ப்ரயோஜகத்வம் விசேஷ விஷயம் –

——————————————-

ஆத்மாவை ஞானம் -என்று
யோ விஞ்ஞாநே திஷ்டன் / விஞ்ஞானம் யஜ்ஞம் தனுதே -ஸ்ருதிகள்
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும் -ஞானம் சேதனனுக்கு சார குணம் ஆகையால்
ஸ்வரூப அனுபந்தியாய் ஸ்வரூப நிரூபகம் ஆகையால் அங்கனே சொல்லிற்று

தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஜ்ஞாவத்-என்றும்
யாவதாத்ம பாவி த்வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் -என்றும் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரங்களும் உண்டே

ஞான மாத்ர வ்யபதேசஸ் து ஞானஸ்ய பிரதான குணத்வாத்-ஸ்வரூப அனுபந்தித்வேந -ஸ்வரூப நிரூபக குணத்வாத்-
ஆத்ம ஸ்வரூபஸ்ய ஞானவத் ஸ்வ ப்ரகாசத்வாத் வா உபவத்யதே – ஸ்ரீ வேதாந்த தீப ஸ்ரீ ஸூ க்திகள் இவற்றை விளக்கும்

—————————————————–

ஞானமே ஆத்ம பார்த்தோம் -ஞானத்துக்கு ஆஸ்ரயமும் ஆத்மாவே –
விஜ்ஞாதார மரேகேந விஜாநீயாத் -என்றும்
ஞானாத் யேவாயம் புருஷ -என்றும் இருப்பதால் ஞான ஆஸ்ரயம் –
அஹமித மபிவேத் மீதி ஆத்ம வித்த்யோர் விபேதே ஸ்புரதி யதி ததைக்யம் பாஹ்ய மப்யேக மஸ்து-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –

ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் சொன்ன போதே கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் வரும்
கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதி ருஸ்யதே புருஷஸ் ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே -ஸ்ரீ கீதை -13-21-
சாங்க்யர் கர்த்ருத்வம் பிரக்ருதிக்கே -என்பர் -அது ஒவ்வாது -ஸாஸ்த்ர வஸ்யதை குலையும்
கர்த்தா சாஸ்த்ரார்தத் வத்வாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்
கர்த்ருத்வம் -ஸ்வரூப ப்ரயுக்தமாயும் -ஓவ்பாதிகமாயும் இருக்கும் –
உண்டு உடுத்து சப்தாதி விஷய அனுபவம் ஓவ்பாதிகம் -கர்மம் அடியாக -முக்குண சம்சர்க்கத்தால் வருமவை
ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மந்யதே -ஸ்ரீ கீதை
ஆத்மாவின் ஞானம் இச்சை பிரயத்தனம் இவை அனைத்தும் சர்வேஸ்வர அதீனம்
பராத் து தத் ஸ்ருதே
க்ருத ப்ரயத் நாபேஷஸ் து விஹித பிரதிஷித்தா வையர்த்யா திப்ய
என்கிற ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களால் விதி நிஷேதங்கள் வீணாமைக்காக
சேதனனுடைய பிரதம ப்ரயத்னத்தை அபேக்ஷித்திக் கொண்டு சர்வேஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கும்

———————————————————-

திருத் துளசி மஹாத்ம்யம் —

மகரத்வஜன் -விருந்தா பெண் -துளசி-துலா ராசி -ஒப்பற்ற அழகு -பெயர் காரணம் – ஸ்யாம நிறம் –
ஜலந்தரன் -அசுரன் பிறந்த கதை -இந்திரன் -சிவனை தேடி செல்ல -சிவன் யோகம் அடிக்க அக்னி –
ப்ருஹஸ்பதி வந்து மன்றாட -மன்னித்து நீரிலே சேர்த்து அதனால் பிறந்தான்
விருந்தா -இவனை கல்யாணம் -சிவனாலும் கொல்ல முடியாமல் –
விஷ்ணு தியானம் கவசம் -விஷ்ணு ஜலந்தரனாக வேஷம் -தியானம் கலைக்க –
கபட நாடகம் என்னிடமே -நெருப்பில் மாய -பொசுங்கி சாம்பலில் இருந்து செடி ஸ்தாவரம் -தேவதா ஸ்வரூபம் கொடுத்து -வரங்கள்
உகந்த பத்னி -அர்ச்சை பிரியம் கேசவ பிரியா
என் மூல சர்வ தீர்த்தானி–நடுவில் சர்வ தேவாச்சா — எது அக்ரே சர்வ வேதாச்சா –
வேராயினும்–இத்யாதி தள்ளுபடி ஒன்றும் இல்லை
கார்த்திகை சுக்ல பக்ஷம் துவாதசி துளசி கல்யாணம் –
-1992-தபால் தலை வெளியிட்டு basil plant
ozimam sanctam
royal plant -french
மதிக்காத நாடு எங்கும் இல்லை /
பசு -துளசி இலை -வேதம் கற்ற ப்ராஹ்மணன்- அரச மரம் -கங்கை புனிதம் சாம்யம்
துளசி மாடம் வைத்தே hindu முன்பு / ராதா அம்சம் –
பிருந்தா வனம்- விருந்தா மருவி –
துளசி கவசம் பூண்டு தாரகாசுரன் வதம் முருகன் ப்ரஹ்மாண்ட புராணம் சொல்லும்

பூ லோக பாற் கடல் அமுதம் இது
ராமர் துளசி
ஸ்யாம துளசி கரும் பச்சை
கபம் சளி நீக்கும் /கிருமி நாசினி /
வெளியிடும் காற்று O -3 இருப்பதாக சொல்கிறார்கள் -இந்த காற்று பட்டாலே நலம்
பத்ம புராணம் -பல வரங்கள் துளசிக்கு அருளி –
லஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்
த்ருஷ்ட்டி தோஷம் பில்லி சூன்யாதிகள் போகும்
துளசி மணி மாலை -ஸ்ரேஷ்டம்
புத்ர காமாஷ்டி ஹோமம் துளசி சமித்து வைத்து
துளசி கட்டை தூபம் –1000-பசு தானம் பலம்
சுக்ராச்சாரியார் சஞ்சீவினி துளசி கொண்டே செய்து அசுரர்களை பிழைப்பித்தார்

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: