ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
———————————–
பர வ்யூஹ வர்ணகம் — –முதல் -8-ஸ்லோகங்கள்
அம்ருத ஹரண வர்ணகம் -9-முதல் -25-ஸ்லோகங்கள்
நாக தமன வர்ணகம்–26-முதல் -35-ஸ்லோகங்கள்
பரிஷ்க்கார வர்ணகம்-36-முதல் -45-ஸ்லோகங்கள்
அத்புத வர்ணகம்-46-முதல் -50-ஸ்லோகங்கள் –
————————-
அங்கேஷூ அநந்த முக்ய ஸ்ருதி சிகர மிலாத் தண்டகம் கண்ட பூர்வம்
பிராகேவ அப்யஸ்ய ஷத்ஸு ப்ரதிதிஸாம் அநகம் ந்யஸ்த சுத்தாஸ்தர பந்த
பஷி வியஸ்த பஷி த்விதய முக புதா பிரசபு தோதார தாரம்
மந்த்ரம் கருத்மதம் தம் ஹுதவாக தயிதா சேகரம் சீலயாம-1-
ஓம் பஷி ஸ்வாஹா / ஓம் ஷிப ஸ்வாஹா / பஷி ஓம் ஸ்வாஹா / ஷிப ஓம் ஸ்வாஹா –
கண்ட -கருட ஸூசகம் –
——————-
வேத ஸ்வார்த்தா த்ருதா பஹி அபஹி அபி வியக்திம் அப்யேதி யஸ்யாம்
ஸித்தி சங்கர்ஷனி ச பரிணாமதி யயா சாப வர்க்க த்ரி வர்க்க
ப்ராணாஸ்ய பிராணாம் அந்யம் பிராணி ஹித மனச யாத்ரா நிர்த்தாரயந்தி
ப்ராஸீ ச ப்ரஹ்ம வித்யா பரிச்சித கஹன பாது காருத்மதீ ந -2-
வேத ஸ்வரூபி -வேதாத்மா விஹகேஸ்வர–/ பஹி அபஹி-உள்ளும் வெளியிலும்
சாஸ்த்ர யோநித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் பிரமாணம் -தஸ்ய பாவ சாஸ்த்ர யோனோத்வம்-தஸ்மாத் சாஸ்த்ர யோநித்வாத்
-சகல புருஷார்த்த ப்ரதன்-சங்கர்ஷணன் அம்சம் -ஞானம் பலம் பூர்ணம் -கருட மந்திரமே சகல புருஷார்த்தங்களையும் அருளும்
-பிரணவம் -பழமையான திரு மந்த்ரம் -நம்மை ரக்ஷிக்கட்டும்-
நாயமாத்மா பிரவசநேந லப்ய-ந மேதயா ப பஹுநா ஸ்ருதேந -யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய
தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட உபநிஷத் —2-2-23-
பக்த்யா த்வந் அநந்ய சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11–54-
————————–
நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் -3-
சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் –
வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்
————————————–
யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந -4-
அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாகவும் -சேஷ வ்ருத்தி -நம் இடம் அவனைக் கூட்டிக் காட்டி அருளுகிறார்
———————————————
ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-
ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –
———————————————
சத்யாத்யை ஸாத்வதாதி பிரதித மஹிமாபி பஞ்சபி வ்யூஹ பேதை
பஞ்ச பிக்யோ நிருந்தன் பாவகரலா பாவம் பிராணினாம் பஞ்ச பாவம்
பிராணா பானாதி பேதாத் பிரதிதனு மருத தைவதம் பஞ்ச வ்ருத்தே
பஞ்சாத்மா பஞ்சதா அசவ் புருஷ உபநிஷத் கோஷித தோஷயே ந -6-
பாஞ்சராத்ர ஆகமம்-பெரிய திருவடியை -சத்யன் -ஸூபர்ணா-கருட -தார்க்ஷ்யா – விஹஹேச்வர
-பஞ்ச பிரகாரங்கள் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை -சத்யம் ஞானம் அநந்தம் -சிவம் சுந்தரம் –
பஞ்ச பிராணன் -பிராண அபான உதான வியான ஸமான
——————————————
ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி பேதே ஸ்வகீயே
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை
பிராணா ஸர்வஸ்ய ஐந்தோ ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ ச இதாம்
கிலேசம் சிந்தன் ககேச சபதி விபதி ந சந்நிதி சந்நிதத்தாம்-7-
ககேச-பஷி ராஜன் -புள்ளரையன் இருவருக்கும் ஒக்குமே /இருவரும் சர்வ ஜந்துக்களும் பிராணன் /
ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ-இருவருக்கும் ஒக்கும்
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை -வித வித வர்ணங்கள் பெரிய திருவடி திரு மேனி
சதுர்வித வர்ணங்கள் அவன் திருவடி திருத் தொடை திருத் தோள்கள் -திரு முடி -புருஷ ஸூக் தம்
ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி – வேத நிதி தானே அவன்
ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ -நாகங்கள் இவன் திரு மேனியில் உண்டே -அவன் அரவணை-போகீந்த்ர- மேல் பள்ளி கொண்டு அருளுகிறார்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்கவும் பெரிய திருவடி மேல் எழுந்து அருளி த்வரித்து வந்தானே –
ஆக த்வரித்து வந்து ரஷிப்பதும் இருவருக்கும் ஒக்குமே –
——————————————-
அக்ரே திஷ்டன் உதக்ர மணி முகுர இவ அநந்ய த்ர்ஷ்டே முராரே
பாயான் மாயா புஜ நாகி விஷம விஷ பயாத் காதாம் அஸ்மான் கருத்மான்
ஷூப்யாத் ஷீராப்தி பாத ஸஹ பாவ கரலா ஸ்பர்ஸா சங்கீ ச சங்கே
சாயாம் தத்தே யதீயாம் ஹ்ருதி ஹரி ஹ்ருதய ஆரோஹ தன்யோ மணீந்திர -8-
சந்நிதி கருத்மான்-அக்ரே திஷ்டன்- -நித்தியமாக கடாக்ஷம் –அநந்ய த்ர்ஷ்டே-அநந்யார்ஹத்வம் உரு கொண்டது போலே அன்றோ
ரூபம் மட்டும் இல்லாமல் ஸ்வரூபமும் காட்டும் கண்ணாடி போலே ஸ்ரீ கருத்மான்
ஸ்ரீ கௌஸ்துபம் ஹாலாஹலா சம்பந்தம் தோஷம் -ஸஹ பாவ-போக்கிக் கொள்ள நேராக -இருந்து அருளி –
விஷய அனுபவ தோஷங்களை நமக்கும் போக்கி அருளுகிறார்
——————————–
அஹர்த்தாரம் ஸூதாயா துரதிகமா மஹா சக்ர துர்கஸ்தி தாயா
ஜேதாரம் வஜ்ர பாணே ஸஹ விபூதி கணை ஆஹவே பாஹு வேகாத்
விஷ்ணவ் ஸம்ப்ரீயமானே வரவினி மயதோ விஸ்வ விக்யாத கீர்திம்
தேவம் யா அஸூத ச அசவ் திஸாது பகவதீ சர்ம தக்ஷயணீ ந -9-
வினதை சிறுவன் -அருணனும் கருத்மானும் -கத்ரு –கஸ்யப பிரஜபதி –
உச்சிரவஸ் குதிரை வால் வெளுப்பு வினதை சொல்ல கருப்பு கத்ரு சொல்ல –
அம்ருத கலசம் கொண்டு வந்த மஹிமை –
————————————
வித்ராசாத் வீதிஹோத்ரம் ப்ரதமம் அதிகதை அந்திகே மந்த தாம்நா
பூய தேநைவ சார்தம் பய பர தரலை வந்திதோ தேவ ப்ருந்தை
கல்பாந்த ஷோப தக்ஷம் கதம் அபி க்ருபயா ஸம்ஷிபன் தாம கண்டம்
பித்வா அண்டம் நிர்ஜிஹான பவபயமிஹ ந கண்டாயத் அண்டஜேந்த்ர -10
தேவர்கள்-கருத்மான் முட்டையில் உருவாகும் பொழுது தேஜஸ் மிக்கு இருப்பதால் பயந்து பிரார்த்திக்க
தானே குறைத்துக் கொண்டு ரஷித்தான்
நம் சம்சார பயத்தையும் போக்கி அருள்வான் –
—————————–
ஷூண்ண ஷோணீ தராணி ஷூபிதா சது அகூபார திம்யத் கருந்தி
த்ரு த்யத் தாரா சராணி ஸ்தபு தித விபூத ஸ்தாந காணி ஷிபேயு
பாதாள ப்ரஹ்ம ஸுதாவதி விஹித முதா ஆவர்த்தனானி அஸ்மத் ஆர்த்திம்
ப்ரஹ்மாண்டஸ் யாந்தராலே ப்ர்ஹதி ககபதே அர்பக க்ரீதிதானி-11-
கருத்மான் இளமையில் எங்கும் பறந்து -மலைகளும் தூளாகும் படியும் -கடல்களும் கலங்கும் படியும் –
நக்ஷத்ரங்களும் பொடி பொடியாகும் படியும்
இருந்தது பூலே நம் சம்சார துரிதங்களையும் போக்கி அருளுவான்
———————–
சம்வித் சாஸ்திரம் திஸந்தே ஸஹ விஜய கமு ஆசிஷா ப்ரேஷயந்தே
சம்பத் நந்தே தனுத்ரம் ஸூசரித மசானம் பக்கானாம் நிர்திசந்தே
யேநோ அஸ்மாத் வைநதேயோ நுதாது விநதயா க்லுப்த ரக்ஷ விசேஷ
கத்ரு சங்கேத தாஸ்ய ஷபனா பணா ஸூதா லக்ஷ பைக்க்ஷம் ஜிக்ர்க்ஷூ-12-
தாஸ்ய ஷபனா பணா-அடிமைத் தன்னை வெட்டும் பணயமாக -அம்ருத கலசம் கொண்டு வர வினதை —
விஜய கமு ஆசிஷா -ஆசீர்வாதம் துணையாக -சம்வித் சாஸ்திரம்–ஞானமே படையாக –தனுத்ரம் ஸூசரித-அனுஷ்டானம் கவசமாக –
————————————
விஷேபை பக்ஷதீநாம் அநிப்ர்தா கதிபி வாதித வ்யாமதூர்ய
வாசாலாம்போதி வீசீவலய விரசித ஆலோக சப்தானுபந்த
திக்கன்யா கீர்யமான ஷரத் உது நிகர வியாஜ லாஜாபிஷேக
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து-13-
வாதித வ்யாமதூர்ய- இறக்கைகள் ஒலி முழங்க–வாசாலாம்போதி வீசீவலய- -கடல் அலைகள் வெற்றிக்கு வாழ்த்தி அலை வீச
திக்கன்யா கீர்யமான -உது நிகர வியாஜ –லாஜாபிஷேக -நக்ஷத்திரங்கள் மங்கள அச்சதை போலே வீச –
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து–தேவ லோகம் சென்ற -கருத்மான் -நாக ஹந்தா –
————————————
ரிக்க்ஷாஷ ஷேப தஷ மிஹிர ஹிமகர உதால தாலாபி காதி
வேலாவா கேலி லோலோ விவித கணக தா கந்துகாகாத சீல
பாயாத் ந பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப ஜாத
வாத பாதாள லேகாப தஹ ப துரவ ஆரம்ப சம்ரம்ப தீர -14-
ரிக்க்ஷாஷ ஷேப தஷ-நக்ஷத்திரங்கள் -பகடைக் காயை வீசுவது போலே
மிஹிர-ஸூர்யன் /ஹிமகர-சந்திரன் –
பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப-பக்ஷங்களை பரப்பி -கணக தா கந்துகாகாத சீல-மேக கணங்களை தள்ளி –
பந்து விளையாடுவது போலே -பறை அடிக்கும் சப்தம் ஒலித்து-
இவையே நம் பிரதிபந்தகங்களை நசிப்பிக்கும் –
—————————————
கிம் நிர்காத கிம் அர்க பரிபததி திவ கிம் சமித்த அயம் ஓவ்ர்வ
கிம் ஸ்வித் கார்தஸ் வராத்ரி நனு விதிதமிதம் வ்யோமர்த்மா கருத்மான்
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி
அலாப உத்யுக்த பில்லாகுல ஜ தார பு த பாது ந பத்ரிநாத–15-
நிர்காத-இடி போலேயும் –/ அர்க-ஸூர்யன் போலேயும் /சமித்த-அயம் ஓவ்ர்வ பாடாகினி போலேயும்-
தங்களை நோக்கி வந்ததுபோலேயும் – கார்தஸ் வராத்ரி-மேரு மலை போலேயும் -வேடர்கள் கண்டு –
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி-அம்மா என்று கத்தினார்கள்
———————————–
ஆஸ்ருக் வ்யாப்தைரஸ்ருக் பிர்த்துருபசம த்ருஷா சாதநீ சாத தம்ஷ்ட்ரா
கோடீ லோடாத் கரோடீ விகட கட கடா ராவ கோராவதாரா
பிந்த்யாத் சார்த்தம் புளிந்த்யா சபதி பரிஹ்ருத ப்ரஹ்மகா ஜிஹ்மகாரே
உத்வேல்லத்ப் பில்ல பல்லீ நிகரண கரணா பாரணா காரணாம் ந –16-
சாத தம்ஷ்ட்ரா–பற்கள்
லோடாத் கரோடீ -எலும்புகள் முறிந்து
கட கடா -சப்தங்கள்
ஜிஹ்மகாரே-வளைந்து வளைந்து போகும் நாகங்களுக்கு விரோதி -என்கிற பதபிரயோகம்
உத்வேல்லத்ப் –வேடுவர்கள் பயந்து உருள
ஒரு பிராமணன் வேடுவிச்சி திருமணம் புரிந்ததால் அவனையும் விழுங்க –
பற்கள் மூலம் ப்ராஹ்மணன் என்று அறிந்து உமிழ –
அவன் மனைவி உடன் தான் வருவேன் என்று சொல்ல அவனையும் அவளையும் -உமிழ்ந்தான்
———————————–
ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி ராஸீ விஷாரே
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல்லோல மாலா
ஹாலா நிர்வேச ஹேலா ஹல ஹல பஹுலோ ஹர்ஷ கோலாஹலோ ந–17-
ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா -தேவர்கள் சஞ்சாரம் இஷ்டப்படி நடக்க
ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர-இடி போன்ற சப்தம் -மேல் வரும் ஆபத்துக்களுக்கு ஸூசகம்
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல் லோல மாலா — அலை அலையாக
ஓடும் வேடர்கள் இரத்தம் குடித்து கருடன் மகிழ
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி –மகிழ்ந்து பூமி கடல்களை உருட்ட
ஆஸீ விஷாரே–கருடனுக்கு இந்த பத பிரயோகம் –
—————————————————
சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல -18-
விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட / ஆமை-கரடிநவ் /யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு சேலை அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-
——————————————
அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -19-
அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம் -கல்ப முடிவில் நடனமாடும் சிவன் தலையில்
உள்ள பிறை சந்திரனில் உள்ள கொஞ்சம் அம்ரிதம் கொண்டு வர முயன்ற
ஸ்ரீ கருடனை ஏளனம் செய்தனர் கத்ரு குமாரரர்களான நாகங்கள்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து -கடலில் இருந்து அமிர்தம்
தனது மலை போன்ற திருத் தோள்களை கொண்டு எடுக்கப்பார்த்தால் -அதில் உள்ள அமிர்தம் முன்பே கடைந்து எடுத்தாயிற்றே
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய –பூர்ண சந்திரன் இடம் கொண்டு வர முயன்றால் ராகு தடையாக இருக்குமே
கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -இப்படி நாகங்கள் எண்ணிக் கொண்டு இருக்க
அவர்கள் அறியாமை கண்டு சிரித்து அமிர்தம் கொண்டு வந்த ஸ்ரீ கருடாழ்வார் நம்மை ரக்ஷிக்கட்டும்
—————————————-
ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந
பிராம்யன் சவ்யா ஸவ்யம் ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல –20-
இதில் மந்தார மாலையுடன் ஒப்பு –
ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்–ஐராவதம் உச்சைஸ்வரஸ் போன்றவை எழுந்தன
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந பிராம்யன் சவ்யா ஸவ்யம் -இடதும் வலதும்
இறக்கைகளை கொண்டு வீசி -திக்குகள் தோறும் செல்ல -எழுந்த கோஷம் இந்திராதி தேவர்களை அதிர வைக்க-
திவிஷத் -தேவர்கள் என்றபடி
ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே –கண் வீச்சு -இங்கு -வாசுகி அங்கு –
ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல — –ஸ்ரீ யையும் நம்மையும் சேர்த்து வைக்கட்டும் –
———————————————–
அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா
த்வித்ரா ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட ஜேந்த்ரஸ்ய சண்டா
பஷோத்ஷேபா விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–21-
அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா த்வித்ரா–கிழக்கும் மேற்கும் வாசி அறியமுடியாமல்
சூர்ய சந்திரர்கள் தங்கள் வழி செல்ல முடியாமல்
ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட–தேவர்கள் அமிர்தம் கொண்டதால் கலகம்-ஏற்பட
ஜேந்த்ரஸ்ய சண்டா பஷோத்ஷேபா -இறக்கைகளில் இரண்டு துளி உதிற
விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–இறக்கைகள் அசைவால் வரும் காற்றால்
கிரஹங்கள் தங்கள் நிலைமை தடுமாற –
இந்த இறக்கைகள் நம்மை ரக்ஷிக்கட்டும்
——————————————–
தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ ருஷாந்தை
ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–22-
தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ -கோபம் அடைந்தால் போலே நடித்து
ருஷாந்தை ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை–தேவர்கள் அநேகர் -பெரிய திருவடியே தனியாக
ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண -அமிர்தம் பெறுவது ஒன்றே லஷ்யமாகக் கொண்டு
விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–பெரிய திருவடியின் பாகங்கள்
ஒன்றுக்கு ஒன்றுக்கு போட்டி போட்டிக் கொண்டு அமிர்தம் பெற
——————————————–
அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –23-
அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ –சூர்யா மண்டலத்தையே மறைத்த சிறகுகள்
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி –எங்கும் இருள் மயமாய்-அகால இருட்டு –
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள-ஸ்வர்க்க லோகமே ஆடிப்போகும் படி
ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்-புவி ஈர்ப்பு பந்தம் குலைந்து -நக்ஷத்திரங்கள் கிரகங்கள் நிலை குழையும்படியும்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –ப்ரஹ்ம லோகமும் இடம் மாறும்படி அன்றோ
பெரியதிருவடி அமிர்தம் கொண்ட படி
—————————————————
யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-
யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தா
———————————————-
ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-
ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி
————————————————–
நாக தமன வர்ணக –
புக்ந ப்ரூர்ப் ரூகுடீ ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித ஷமாந்தரிக்ஷ
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர ஸூக
ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன ஸ்யந்த நேந்த்ர –26-
ஷமாந்தரிக்ஷ–பூமியும் ஆகாசமும் -கொதிக்கும் படி –
புக்ந ப்ரூர்ப் ரூகுடீ- ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித-கோபத்தால் வளைந்த புருவங்கள் –
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள-வட்ட கண்களை சுழற்றி -கொடூரமான பற்கள் வளைந்த கூரிய நகங்கள்
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர–இவைகளைக் கண்ட நாகக் கூட்டங்கள் நடுங்க
ஸூக ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன -இந்த்ரனுடைய பிரதான சேனை ஸங்க்ரந்தநாதி களை வீழ்த்திய வீரன்
ஸ்யந்த நேந்த்ர -பிரதான வாஹனம் -கருடன் -என்றவாறு –
———————————————————
அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-
அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –
—————————-
சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கணா சங்கயா துங்க ரோஷ
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா –28-
சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்–தனது பிரதிபிம்பம் -அவர்கள் பணா மண்டலத்தில்
கண்டு -பயத்தால் தனது பிம்பத்தை தரித்து கொண்டு இருப்பதாக அநுதபித்து
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப -அவர்கள் மேல் கடாக்ஷித்து -வீஷ்யம்-
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கண அசங்கயா துங்க ரோஷ -எண்ணிலாத -வேறே பல கருடர்கள் துணை கொண்டு –
அசங்கயா பிரதி கருட கணா -அவர்கள் பாணா மண்டலம் அசைவதை கண்டு இப்படி எண்ணி -துங்க ரோஷ-கோபம் கொண்டு –
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா —சர்ப்ப கூட்டங்களை கொள்ள முயன்ற
பெரிய திருவடி நம் வினைகளை களைந்து ரக்ஷிக்கட்டும் –
——————————————–
உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண கடித ம்ருஷ மவ்க்திகா கல்ப சில்ப
பக்ஷ வ்யாதூத பாதோ நிதி குஹர குஹா கர்ப தத்தா வகாச
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ
அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ பத்ரிணா மக்ரணீர்ந –29-
உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண –பெரிய திருவடியின் உச்சா வாச பலத்தால் நக்ஷத்திரங்கள் மாலை போலே
கடித ம்ருஷ மவ்க்திகா -போலியான ஆபரணம்
கல்ப சில்ப பக்ஷ வ்யாதூத பாதோ நிதி -பக்ஷங்கள் அடித்து ஆகாச இடைவெளி உண்டாக்கி
குஹர குஹா கர்ப தத்தா வகாச -நாக லோகத்துக்கு செல்ல அவகாசம் உண்டாக
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் -இறகுகள் செல்லும் முண்டே கடாக்ஷம் -பார்வை சர்ப்பங்கள் மேலே விழ
ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ -சிறகுகளை மேலே வைத்து காலை ஊன்றி –
பத்ரிணாம் அக்ரணீர்ந-புள்ளரையன் என்றவாறு –
—————————————
ஆ வேத சவ்த ஸ்ருங்காத னுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத்
பாதாளஸ் யாந்தரளே ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத -30-
ஆ வேத சவ்த ஸ்ருங்காத் -ஸத்ய லோகம் தாண்டி
அனுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்-பாதாளஸ் யாந்தரளே–நாக லோகம் வரை பாதாள லோகத்துக்கு
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார –ஒரே க்ஷணத்தில் நடுவில் உள்ள லோகங்களை
எல்லாம் கடந்து -ஒளி கற்றை வேகத்தில் வந்தது போலே
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத் ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத –கர்ம பலமாக
கும்பீ பாக நரகாதிகள் கிட்டாமல் -நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுவார்
———————————-
ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்குலா கோடி வக்ரம்
துண்டாக்ரம் சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-
ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-
பக்வ த்விரசன ப்ருதநா சாலி –பாதாள க்ஷேத்ரே-பக்குவமான -அன்னம் போலே பாதாள லோக சர்ப்பங்கள்
சங்குலா கோடி வக்ரம் துண்டாக்ரம்–பெரிய திருவடியின் வளைந்த கூர்மையான திரு வாய் இந்த போகம் அனுபவிக்கும்
ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே -பாணா மண்டலம் உண்டு அனுபவிக்க
சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து -தன்னுடைய வாய் அலகை கூர்மையாக்க பூமியில் அசைக்க –
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண-அதனாலே ஏழு குல பர்வதங்கள் தனியாக உண்டாயினவாம்
மஹேந்திர -மலயா மிலி -சுக்திமான் -ரிஷபர்வத -விந்தியா -பாரியாத்ர -குலபர்வத -போன்ற ஏழு குலபர்வதங்கள் –
————————————–
பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயா நர்பகாந் கர்ப கோசாத்
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம்
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத் க்ஷண கடித நப ஸ்போடமாஸ் போடிதம் ந -32-
ஆஸ்போடமாஸ் போதிதம் ந-கொற்றப் புள் சிறகை விரிக்க
பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயாந் அர்பகாந் அகர்பகோசாத் -கர்ப்பிணி சர்ப்பங்கள் அந்த த்வனியாலே பிரவேசிக்க –
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப -ப்ரஹ்மா முதல் பிபிலீ ஈறாக அனைத்தும் நடுங்க
வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம் -அனைத்து சமுத்ரங்களும் நடுங்கி அலை பரிக்க
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத்-மலைகளும் நடுங்க
நாபஸ்போடமாஸ்-ஆகாசமும் வெடி வெடித்தால் போலே நடுங்க
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
க்ஷண கடித போதிதம் ந -மீதம் உள்ள சர்ப்பங்கள் கட்செவிகள் செவிடாகும்படி ஒலித்தது –
————————————-
தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ சமகடத மித பக்ஷ விஷேப பின்ன
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க
பிரத்யாயாத ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித பாது பத்ரீஸ்வரோ —33-
தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ -கடலை பிளந்து பாதாள லோகம் சென்று மீண்டு வேகமாக திரும்பும் வரை
கடல் சேர வில்லை -அவ்வளவு வேகம் –
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே –ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–இவன் சென்ற வழியே சூரியனின் ரஸ்மி கதிர்களும்
பாதாள லோகம் செல்லும் முன்பே திரும்ப –
சமகடத மித பக்ஷ விஷேப பின்ன -ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித -தன்னுடன் இருப்பார்
இவர் பிரிந்து சென்று வந்ததை அறியாதவாறு
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க பிரத்யாயாத பாது பத்ரீஸ்வரோ –சர்ப்பங்களை விழுங்கி
வாய் வழியே வழியும் நஞ்சு முகத்துக்கு திலகம் பூலே உள்ளதே –
—————————
பத்த ஸ்பர்த்தைரிவ ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே
பாயாந்ந ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி பீதே
சந்தித்தவ் சர்ப்ப ராஜே ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -34-
பத்த ஸ்பர்த்தைரிவ -மீதம் உள்ள சர்ப்பங்கள் இப்படி வேண்டிக் கொண்டன
ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே -ஒரே முகமாக தங்கள் மேல் கருணை காட்ட வேண்டிக் கொண்டன
சர்ப்ப ராஜே ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி-சர்ப்ப ராஜனும் தினம் ஒரு சர்ப்பத்தை உணவாக கொடுக்க உறுதி செய்ய
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே –தேவ கணங்களும் முழு அழிவாகாமல்
இப்படி இருக்க வேண்டிக் கொள்ள
பாயாந்ந பீதே சந்தித்தவ் ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -அருணனின் இளைய சகோதரனான பெரிய திருவடியும்
இதற்கு சம்மத்தித்து -தம் திவ்ய கீர்த்தி பொலிய விளங்குகிறார் –
————————————–
க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம் க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம்
நிர்மோகை க்வாபி கீர்ணம் விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹ மஹ மிகயா வத்ய வேஷம் ததா நை
காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -35–
க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம்–இந்த ஒப்புமை படி வந்த சர்ப்பங்களை புஜித்து அவற்றின் ஏழுமண்புகள் மலை போலே குவிய
க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம் –அவற்றின் இரத்த வெள்ளம் உறைந்து மது போலே இருக்க
நிர்மோகை க்வாபி கீர்ணம் -அவற்றின் மேல் தோல் வேறே இடத்தில் குவிந்து இருக்க –
விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை -பணா மணிகள் வேறே இடங்களில் குவிய
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹம் அஹ ம் இகயா வத்ய வேஷம் -நான் நான் என்று முந்தி தங்கள் குலத்தை ரக்ஷிக்க
சர்ப்பங்கள் முன் வர
ததா நை காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -அவற்றுடன் லீலை அனுபவித்து
பின்பு புஜித்த பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்
———————————————-
பரிஷ்கார வர்ணக–
வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-
பரிஷ்கார வர்ணாக
வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-
ஆதி சேஷனே கையில் கங்கணம் / வாஸூகி பூணூல் / தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் / பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் / குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –
————————————-
வர்த்தயாப ஸ்வஸ்தி காக்ர ஸ்புர தருண சிகா தீப்ர ரத்ன பிரதீபை
பத்நத்பி ஸ்தாப மாந்தர்ப்ப பஹள விஷமஷீ கந்த தைலாபி பூர்ணை
நித்யம் நீ ராஜ நார்த்தம் நிஜ பண பலகை கூர்ண மாநாநி தூர்ணம்
போகைரா பூரயே யுர் புஜக குலரி போர் பூஷணா நீஷணாம் ந –37-
மங்கள ஹார்த்தி-போலே சர்ப்பங்கள் அசைவு -பணங்களின் தேஜஸ் -ஒளிக்கற்றையே திரி -விஷாக்னி –
பெரிய திருவடிக்கு நீராஞ்சனம் –
சேஷன் –கபுகி-பெரிய திருவடி உடன் சேர்ந்து நித்ய கைங்கர்யம் –
————————————
அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த
ஸ்த்ரா சாத்த்ரா சாநுபந்தாதிவ சஹஜ மிதோ வைர சங்கோத் தரங்காத்
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகா திவாஸ்மத்
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -38-
சர்ப்பங்கள் பெரிய திருவடி திருமேனியில் ஆலிங்கனம் பண்ணுவதற்கு முக்கிய காரணங்கள்
அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த-அமுதம் வழிவதை பருக –
சஹஜ மிதோ வைர சங்க உத்தரங்காத் -அநுபந்தாதிவ–பயம் போக –
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகாத் இவாஸ்மத் –ருத்ரா என்னும் பெரிய திருவடி பத்னியுடன் கலந்து
ஆனந்த உஸ்வாஸ காற்றுக்குள் அடங்கி –
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -சர்ப்பங்களை- கூட பாத சப்தத்தால் –மறைந்த திருவடிகள் –
விட்டு விலகாமல் இருப்பதை காட்டி அவை நம்மை ரக்ஷிக்கட்டும் –
———————————————–
கோடீரே ரத்ன கோடி பிரதி பலித நைகதா பின்ன மூர்த்தி
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை க்லுப் தரஷ
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ
ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க–39-
இது முதல் பெரிய திருவடி திருமேனியில் உள்ள சர்ப்பங்கள் வர்ணனை –
இதில் சங்கசூடன் -ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க-திரு முடியில் சூடா மணி –
கோடீரே ரத்ன கோடி பிரதி பலித-கோடிக்கணக்கான ரத்னங்களால் பிரதிபிம்பம்
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை–இவன் அசையும் பொழுது மற்ற சர்ப்பங்களை
காத்து அருளும் மேகம் போலே இருக்குமே
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ -மேரு மலை மேலே நீல மேக கூட்டம்
போலே இருக்குமே இந்த சந்நிவேசம் –
—————————————–
த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ ஸ்வ போகம்
சங்ஷிப்யாஸ்நந் சமீரம் தரவி நதமுகோ நிஸ் வசந் மந்த மந்தம்
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ
க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா குண்டல குண்டலீந்த்ர-40-
குண்டல குண்டலீந்த்ர–பத்மம் மஹா பத்மம் -குண்டலங்கள்
ஸ்வ போகம் சங்ஷிப்யா-தங்கள் வடிவை சுருக்கி
மந்த மந்தம் நிஸ் வசந்-மெதுவாக மூச்சு விட்டு
தர விநத முகோ-வினித வேஷம் கொண்டு
அஸ்நந் சமீரம் -காற்றையே உணவாகக் கொண்டு
த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ -பெரிய திருவடியின் திருச் செவிகளின் பரந்த தேஜஸ் கண்டு வெட்கி
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந–தேஜஸ் கற்றை -சுவர் போன்ற -அகன்ற கன்னங்களில் பிரதிபலித்து
மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா-ஒதுங்க இடம் தேடுவாரைப் போலே இருந்து –
———————————————-
வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச
விஷ்வக்தம் போளி தாரா வ்ரண கிண விஷமோத் தம்பன ஸ்தப்த வ்ருத்தி
வ்யாளா ஹாரஸ்ய ஹ்ருத்யோ ஹரது ச மதகம் ஹார தர்வீ கரேந்த்ர –41-
கார்கோடகன் -திரு மார்பில்
வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய -தனது வாலை தலையில் முடித்துக் கொண்டு
பண ஒளி தேஜஸ் விளங்க -நாயக ரத்னம் போலே –
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச -பவள
மாலையில் நீலக்கல் பொறுத்தினது போலே இவன் நிறமும் தேஜஸ் ஸூம்
வ்யாளா ஹாரஸ்ய-இத்தால் பெரிய திருவடி யை சொன்னபடி
தர்வீ ஹார –இத்தால் இவை பெரிய திருவடி அவயவ பூதர் என்றபடி –
————————————-
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார -42-
புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் /
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி /
————————————————-
ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார
ஸ்பாரமோதா பிலாஷாந் நமித ப்ருது பணா சக்ர வாளாபிராம
பிராய ப்ரயா படீ ரத்ரும விடப தியா ஸ்லிஷ்ட பஷீந்த்ர பாஹு
வ்யாஹன் யாதஸ் மதீயம் வ்ருஜிந பரமசவ் ப்ருந்த சோ தந்த ஸூக -43-
ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார ஸ்பாரமோதா பிலாஷாந் நமித
சேஷ குளிக-இருவரும் தோள்வளைகள் / ருத்ரா ஸூ கீர்த்தி-பெரிய திருவடி பத்தினிகள்
இவர்கள் கொங்கை மேல் குங்கும சந்தன அவன் திருமேனியில் வீச
ப்ருது பணா சக்ர வாளாபிராம-இவர்கள் பண மண்டலம் உருண்டு பரந்து இருக்க
சந்தன மரம் போலே திருவடி -சந்தன மரக் கொப்பை சுற்றி இருக்க விரும்பும் சர்ப்பங்கள் –
—————————————–
க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன்
ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன் ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா
பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா கேஹ வாஸ்தவ்யதாம் ந -44-
தக்ஷகன் -திரு வயிற்றில்
க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ -ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன் ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன்-உண்ட சர்ப்பங்கள் –
கவலை உடன் திரு வயிற்றின் மேலே கட்டிக் கொண்டு இருப்பது போலே –
ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந –கோபத்தால் -பெரிய திருவடிக்கு பசிக்காமல் இருக்கவே இங்கே சுற்றி –
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா
கேஹ வாஸ்தவ்யதாம் ந –மீண்டும் மீண்டும் பெரிய த்வனியுடன் குகை போன்ற கழுத்து மூலம் ஒலிக்க-
இந்த சேர்த்தியைச் சேவிக்க நாம் கருவில் செல்லாமல் பரம புருஷார்த்தம் பெறலாமே –
————————————————–
காடா சக்தோ கருத்மத் கடிதட நிகடே ரக்த சண்டாத காங்கே
பக்கத் காஞ்சீ மஹிம்நா பண மணி மஹசா லோஹி தாங்கோ புஜங்க
சத்தா சாம் ஸித்திகம் ந சபதி பஹு விதம் கர்ம பந்தம் நிருந்த்யாத்
விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய -45-
இதுவும் தக்ஷகனை பற்றியே
பீதாம்பரம் மேலே இருப்பது-விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய
மின்னல் வெட்டினால் போலே –
பண மணி மஹசா லோஹி தாங்கோ-பண மண்டல தேஜஸ் நமது பந்தங்களை வெட்டட்டும்
பெரிய திருவடி திருப்பாதங்கள் விந்த்யா மலை போலே என்றவாறு
——————————————–
அத்புத வர்ணகம்-
அடுத்த –5–ஸ்லோகங்கள் பெரிய திருவடியின் சேஷ விருத்திகள்
வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-
வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன
————————————-
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –47-
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்
————————————-
வேகோத்வேல ஸூவேல கிமி தமித மிதோ மந்த்ரிதோ வாநரேந்த்ரை
மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா
த்ருஷ்ணா பாரிப் லவாநாம் ச பவது கருடா துக்க வாரி ப்லவோ ந — 48-
மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ -சக்ரவர்த்தி திருமகனாக -அவதரித்த பொழுதும்
கைங்கர்யம் -நாகாஸ்திரம் -ரக்ஷணம் -வ்ருத்தாந்தம் –
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா-திருவடியை
ஆலிங்கனம் போலே இவனையும் ஆலிங்கனம் –
———————————–
துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா
பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம் -49-
விரோச்சனன் -பிரகலாதன் -பாற் கடல் திரு அபிஷேகம் கொண்டு போக பெரிய திருவடி
பாதாள லோகம் சென்று மீட்டு வர -கண்ணன் அவதாரம் –
துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம –அவனது மகிமைக்கு அனுரூபமான திரு அபிஷேகம் –
ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட-மயில் பீலி அணிந்த
கிருஷ்ணன் திரு முடிக்கு ஏற்றதாய்
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத-விரோச்சனன் உடன் சண்டையில் பட்ட தழும்பு –
முன் அம்ருதம் கொண்டு வரும் பொழுது வஜ்ராயுதத்தால் பட்ட தழும்பு இரட்டிப்பானதே
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம்-பெரிய திருவடியின் உள்ள
இந்த தழும்பு நம்மை ரக்ஷிக்கட்டும் –
——————————————–
ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை
தீவ்யன் திவ்யா பதா நைர்த் தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த -50-
தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த-அசுரர் நிரசனம் செய்து அருளும் பொழுது – -த்வஜமாக கைங்கர்யம் –
ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா-இவன் சிறகுகள் அசைய
காருண்ட மேகம் பொழிவது போலே இருக்க –
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக –பஞ்சு தூசு போலே அசுரர்கள் இதனால்
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை தீவ்யன் திவ்யா பதா நைர்த் -புள்ளரையன்
நம் பிரதிபந்தகங்களையும் இப்படி போக்கி அருளுவான் –
————————————–
யத் பக்ஷஸ்தா த்ரி வேதி த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத
த்ரை கால்யோபஸ்திதாத் ச த்ரியுக நிதிரகா தாயதாத் த்ராயதாம் ந
த்ராதா நேகாஸ் த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -51-
யத் பக்ஷஸ்தா த்ரி வேதி -வேதாத்மா -பக்ஷங்கள் ருக்கு யஜுர் சாம த்ரி வேதங்கள்
த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை -இவனை பற்றி சத்வ ரஜஸ் தமஸ் -முக்குணம் தாண்டி
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் -தர்மம் அர்த்தம் காமம் இவற்றை பெறவும் இவனைப் பற்றி
கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத -பரமகதியும் இவனாலேயே -அவனை தூக்கி கொடு வந்து காட்டும் அருளாழி புட் அன்றோ –
கதி -இவனே கதி -கொடு வந்து காட்டுபவன் என்றுமாம் -அர்ச்சிராதி கதி என்றுமாம் –
ச த்ரியுக நிதிரகா -த்ரியுக -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – மூன்று இரட்டைகளும் இவனுக்கும் அவனைப் போலே உண்டே
தாயதாத் த்ராயதாம் ந த்ராதா நேகாஸ் -பலரையும் ரக்ஷித்து அருளினான் –
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்
—————————————————-
சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -52-
பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்
—————————————-
இதி கருட பஞ்சாசத் சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –