ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-8–

தேவதாந்த்ர பஜனம் பண்ணினவனை விஷயீகரித்த மஹா குணத்தைக் காட்டிலும்
நரத்வ ஸிம்ஹத்வங்கள் இரண்டனையும் ஏறிட்டுக் கொண்டு
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணின மஹா குணத்தை அருளிச் செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே–7-5-8-

செல்ல உணர்ந்தவர் –
ஆபாசமான -போலியான ஐஸ்வர்யம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல்,
எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது,
அவனுடன் நித்யமான போகத்தை -இன்பத்தை வேண்டி இருக்குமவர்கள்’ என்றபடி.
வாய்க் கரையான ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் -சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே,
ஆத்மாவினுடைய யாதாம்ய -உண்மை ஞானம் பூர்வகமாக -முன்னாகப் பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள்.

செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ –
ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ?
இன்னம் சொல்லாய் சீமானை’ என்னக் கடவது அன்றோ?

எல்லை இலாத பெருந்தவத்தால்-
அளவு இல்லாத பெரிய தவத்தாலே. வரத்தைக் கொடுத்த தேவ ஜாதிக்கும் குடியிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது?

பல மிறை செய் அல்லல் அமரரைச் செய்யும் –
தேவ ஜாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து, துக்கத்தை உண்டாக்குகிற
ஹிரணியனுடைய -தேவர்களுடைய வர பல புஜ பழங்களால் பூண் கட்டின -சரீரத்தை. மிறுக்கின் காரியம் – துக்கம்.

மல்லல் அரி உருவாய்-
மல்லல்-பெருமை. ‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ரு ஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம் யஹம்’

ஹிரணியன் குளப்படி யாம்படி யாகப் பெரிய வடிவைக் கொண்டு.
அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், லஷ்மி நர ஸிம்ஹமமாய்’ என்னலுமாம்;
நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்தி ஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.
நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப் படுகின்றதே அன்றோ?
அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?

செய்த மாயம் அறிந்துமே –
சிறுக்கனுடைய ப்ரதிஜ்ஜா -சூளுறுவு செய்த அக் காலத்திலே தோற்றி,
ஹிரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ் வாச்சரியமான சேஷ்டிதங்களை -செயலை அறிந்தும்.

ஒருவன் புருஷகாரமாகக் கொடுவர் அவனை ரஷித்தது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, முகம் ஒரு வடிவம் திரு மேனி ஒரு வடிவுமாகக் கொண்டு ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.-
என்கிறபடியே வந்து ரஷித்த குணம் அன்றோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: