ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-7–

ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வனான தன்னைத் தாழ விட்டு இரந்து ரஷித்தது ஒரு பெரிய ஏற்றமோ,
தேவதாந்த்ர பஜனம் பண்ணின மார்க்கண்டேயனை விஷயீ கரித்த இம் மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கண்டு தெளிந்தும் கற் றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–7-5-7-

கண்டும் தெளிந்தும் கற்றார் –
கற்றும் தெளிந்தும் கண்டார்
ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தை சிஷித்து – கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி.
பின்பு சாஷாத்கார -நேரே அறிதல் பர்யந்தமாக்கி வைப்பார்.
ஸ்ரவண மனனங்கள் -கேட்டல் தெளிதல்கள் தாம், தர்சன சாமாநாகாரத்து -நேரே பார்ப்பதற்குச் சமானமான
ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ?

கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ –
தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்றபொருளை விட்டுப் புறம்பே போவாரோ?

வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் –
வண்டுகள் தேனைக் குடிக்கின்ற பூ மாலையை யுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ் நாள் உண்டாகைக்காக’ என்னுதல்;
அன்றிக்கே. வாழு நாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச் செல்ல’ என்றதனோடு கூட்டலுமாம்.
தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட, அங்கே ஓர் அசரீரி வாக்கியம்
இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல, அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க,
இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று இவன் சென்று சிவனை அடைய,
அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு,
ஒரு நாளிலே வந்த வாறே தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,
உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:
அருகில் மாலையைப் பாராதே என் தலையில் ஜடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
ஆனாலும் நெடுநாள் பச்சை இட்டு என்னை ஸ்துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?
உனக்கு ஒரு ஆஸ்ரயம் -பற்றுக்கோடு காட்டக் காணாய்!’ என்று,
சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோஷத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும்
சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

கொண்டு அங்கு
அங்குக் கொண்டு –
ஐயோ! ம்ருத்யு பீதனாய் -மரண பயத்தை யுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திரு வுள்ளத்திலே கொண்டு:
நெஞ்சில் கொண்டு’ என்னும்படியே.
அன்றிக்கே, துர்மானியான -செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,
ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.
தன்னொடும் கொண்டு-பெரிய திருமொழி, 5. 8 : 4.-இவன் வந்த காரியத்தை முடித்து,
பின்பு தன்னுடன் சாம்யா பத்தியையும் -ஒத்த தன்மையையும் கொடுத்து.

உடன் சென்றது உணர்ந்தும் –
ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திரு மொழியில் பிராட்டியைக் கொடு போமாறு
போலே கொடு போனான் காணும்.
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய’ பெரிய திருமொழி. 5. 8. 6.-என்கிறபடியே –
ஒரு ப்ருதக் தர்மி -வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்த படியை நினைத்து,
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?

தன்னை ஆஸ்ரயித்த இந்திரனுக்காத் தன்னைத் தாழ விட்டது ஓர் ஏற்றமோ?
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே’- ஸ்ரீ கீதை, 7 : 14.
என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘
தேவதாந்த்ர பஜனம் பண்ணி – அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க,
என் செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பே யாகிலும் கொண்டு போய் ரஷிப்பித்தான்’
என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,

மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு –
தாமச புருஷர்களுடைய ஸ்னேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்;
சத்வ நிஷ்டருடைய ஸ்னேகம்-ஸஹ வாசம் -ஸ்வீகார ஹேது -அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்;
இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: