ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-6–

கீழ்ச் சொன்ன குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ,
அலம் புரிந்த நெடுந் தடக் கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6. –
கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியை ரஷித்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்ட மிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென் றிரந்தார்க் கிடர் நீக்கிய
கோட்டங் கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே–7-5-6-

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.
வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’-கம்பராமாயணம்.

வாட்டம் இலா வண் கை-
கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப் பட்ட கை.
ராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் பொகட ஒண்ணாமைக்குக் காரணம்
உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-
இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு.

ஈட்டம் கொள் தேவர்கள் –
கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ ஜாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.
எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள்.

சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய –
கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ
செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திரு வுள்ளத்தே கொண்டு
அவர்கள் இடரைப் போக்கினபடி.
(‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டி விட விஷ்ணு ஜயித்ததனால் )
அதிகம் மேநிரே விஷ்ணும்’ பால. 75 : 19.
விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’ என்கிறபடியே, ‘
ஒரு சொத்தை வில்லை முரித்த போதாக எம்பெருமான் அறப் பெரியன் என்பது;
அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவ ஜாதி பற்களைக் காட்ட,
அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் –
நீர் ஏற்கக் குவித்த அழகிய கையை யுடையவனாய்;
பொல்லாக் குறள் உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே,
தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேஷத்தாலே அழியச் செய்ய மாட்டான்;
இனி, இரண்டற்கும் அனுரூபமாக -தக்கதாக ஒரு வழி ரஷகனான தான் பார்க்கு மித்தனை அன்றோ?
பொற்கை – பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி.
கொடுத்து வளர்ந்த கை;
கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’- யுத். 21:7.
ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும்,
தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’- சுந். 33 : 25.
சத்ய பராக்கிரமத்தை யுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்க மாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.
ஏற்றுக் குவிந்த கையை யுடையவனாய் -அங்கை அழகிய கை –

செய்த கூத்துகள் கண்டுமே –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே பிஷையிலே அதிகரித்து -இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல,
பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் முஜ்ஜீயுமான -தருப்பைப் புல்லுமான –
வினீத -வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றால் போலே சொன்ன
பிள்ளைப் பேச்சுக்களும் சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற
இவ்வியாபாரங்கள் -இச் செயல்கள் அடங்கலும்
இவர்க்கு வல்லார் ஆடினால் போலே இருக்கிறபடி.

ஐஸ்வர்யமும் -இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே,
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வனான தான் இரந்து ஆஸ்ரிதரை ரஷித்த நீர்மைக்குப்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: