ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-4–

சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,
பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –
தத்த்வ ஸ்திதி -உண்மை நிலையினை அறியுமவர் தாம். என்றது,
இதனுடைய உத்பத்தி -படைப்பு அவனுக்காகக் கண்டது -என்றபடி;
அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்று இருக்குமவர்கள்’

கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை.’திருக்குறள்.

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’
நாராய ணா வென்னா நாவென்ன நாவே!’
கண்ணனைக் காணாத கண்ணென்ன கண்ணே!’- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-ஸ்ரீராமா. . 40 : 5. 2‘காட்டில் வசிக்கும்பொருட்டே படைக்கப்பட்டாய்’ என்பது போலே.

தன்மை அறிபவர் தாம் –
அன்றிக்கே,
உலகத்திற்குக் காரணமாகவுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல்.
காரணம் து த்யேய:’ ஸ்ருதி.‘காரணப்பொருளே தியானம் செய்யத்தக்கது’ என்பது சுருதி. ‘
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’ பிரஹ்ம சூத்திரம். 1. 1 : 1, 2.
வேதத்தின் பூர்வ பாகத்தின் பொருளை விசாரித்த பின்
ஞான முடையவனாய்ப் பிரஹ்மத்தை அறியக் கடவன்’ என்னா,
இந்த உலகத்திற்குப் படைப்பு அளிப்பு அழிப்பு என்னும் முத் தொழில்களும் எதனிடத்தினின்றும் உண்டாகின்றனவோ,
அது பிரஹ்மம்’ என்னா நின்றதே அன்றோ?

அவற்கு ஆள் அன்றி ஆவரோ –
கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து-
தேவர்கள் முதலான பேதத்தால் -வேற்றுமையாலே பல வகைப் பட்டுக் கர்மங்களுக்குத் தகுதியாக
விரிந்த பொருள்களுள் ஒன்றும் இல்லாத காலத்து. என்றது,
தேவர் மனிதர் திரியக்குகள் முதலான உருவங்களான உண்டாக்கக் கூடிய பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி
பாழ் கூவிக் கிடக்கிற நெடுங்காலத்து’ என்றபடி.
ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.
பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,
இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற சம்ஹரித்திட்டு -காலம் அழித்திட்டு வைப்பன்.
கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற அவஸ்தை -நிலையுடன் கூடிய காலத்து.

நன்மைப் புனல் பண்ணி –
அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று.
அப ஏவ ஸஸர்ஜாதௌ’ மநுஸ்மிருதி, 1 : 8.
‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே,
முதன் முன்னம் தண்ணீரைப் படைத்து.

நான்முகனைப் பண்ணி –
இவ்வளவும் வர அசித்தைக் கொண்டு காரியம் கொண்டு,
இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்ளுவோம்’ என்று
பார்த்துப் பிரமனையும் படைத்து.
யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’ பிருஹதாரண்ய உபநிஷத்.
எவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே,
இரண்டும் இவனுக்கு உறுப்பாய்ப் பர தந்திரமாய் அன்றோ இருப்பன?
யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’
எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ -என்பது, ஸ்வேதாஸ்வ. உபநிஷத்
ஒரு குழமணனைப் பண்ணி என்பாரைப் போலே
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.

தன்னுள்ளே –
தன்னுடைய -சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்திலே -சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே.

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்து –
பழையதாக, ‘ஸதேவ – சத் ஒன்றே’ என்கிறபடியே, ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே யாம்படி பண்ணி யிட்டு வைத்து,
பின்னர், ‘பஹூஸ்யாம் – பல பொருளாக ஆகக் கடவேன்’ என்கிறபடியே,
இவற்றைத் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உண்மை நிலையை அறியுமவர்கள் அவனை ஒழிய வேறே சிலர்க்கு ஆள் ஆவரோ?
தன்மை -உண்மை /புனல் என்றது மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் /தோற்றிய -தோற்றுவித்த /

விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,
இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.

பன்மைப் படர் பொருள், தன்னுள்ளே தொன்மை மயக்கிய, ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி, தோற்றிய சூழல்கள் சிந்தித்து,
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்று அந்வயம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: