ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-5-2–

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை ப்ரக்ருத்ய -நோக்க,
கீழில் பாசுரத்தில் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி
மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே–7-5-2-

நாட்டிற்பிறந்தவர் –
இப் பாசுரத்தில், ‘திரு வயோத்தியி லுள்ளாரை ராம குணங்களையே தாரகராம்படி செய்த அளவையோ,
நாட்டிலுள்ளாருடைய விரோதிகளைப் போக்கி ரஷிக்கும் படிக்கு – உயர்ந்தது இல்லையோ?’ என்கிறார்.
நாட்டிற்பிறந்தவர் –
நாட்டிற் பிறவாதார் இலரே அன்றோ?
ஆயின், ‘நாட்டிற்பிறந்தவர்’ என்றதற்குப் பொருள் தான் யாதோ?’ எனின்,
ராம குணங்கள் நடையாடும் இடத்திலே பிறந்தவர்கள் என்கிறது.
பெருமாளுடைய எல்லை இல்லாத இடம் இல்லை அன்றோ?
இக்ஷ்வாகூணாம் இயம்பூமி; ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ ப்ரக்ரஹாவபி’-கிஷ். 18 : 6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இஷ்வாகு குலத்து அரசர்களைச் சேர்ந்தது.’ என்கிறபடியே

விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ சுந். 21 : 20. இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
விதிக:ஸஹி தர்மஜ்ஞ:- ‘இராவணா!! பெருமாளுடைய குணங்கள் கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ?
அந்தக் குணங்கள் நடையாடாதது ஓரிடம் உண்டானால் அன்றோ, அவ்விடம் இவர் எல்லை அன்றிக்கே இருப்பது?
நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே ஜீவிக்கை -வாழ்தல்.

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –
பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.
பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:- யுத். 120 : 13.
பிரமன் முதலான தேவர்களும்,நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ?‘
ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

நாரணற்கு –
வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,
ஆஸ்ரிதற்காக தன்னை ஓக்கி வைக்கயும்,
அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,
அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
ஆஸ்ரித வத்சலனாய் இருக்கையும்,
அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும்
ஆகிய இவை எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?

ஆள் அன்றி ஆவரோ –
கீழில் பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது;
இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.
பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ –
ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’ அயோத். 40 : 5.
நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்று விக்கப் பட்டாய்’ என்னுமாறு போலே
பிறந்தவர் பிறவியின் பலத்தை இழப்பரோ?’ என்றபடி.
வகுத்த துறையிலே பார தந்திரிய மாகையாலே வாசி அறிந்த இவர்களுக்கு உத்தேஸ்யமாகத் தோற்றுமன்றோ?
வகுத்தது அல்லாத துறைகளில் பண்ணின வாசனையாலே ‘இது புருஷார்த்தமோ?’ என்று தோற்றுகிறது.

நாட்டிற்பிறந்து –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாய் -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவனா யிருக்கிறவன்,
கர்மவஸ்யரும் -கர்மங்கட்குக் கட்டுப்பட்டுவர்களுங்கூட அருவருக்கும் தேசத்திலே பிறந்து.
ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-அயோத். 1 : 7
செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும்
நித்யருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே.
ஸ:-ஜஞே ஹி –
கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ் வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி.
இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
அர்த்தித:’
என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. இரப்பு தான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? ?
இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.
இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ
தேவை:-
தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக் கட்டினவாறே
எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர்,
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ திருவிருத். 92.என்பார்கள். என்றது,
லங்கையை சுட்டுத் தர வேணும்,’ என்பர்கள் என்றபடி.
உதீர்ணஸ்ய ராவணஸ்ய –
அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வர பலத்தாலே அழியச் செய்ய வேண்டும்படி விஞ்சினவாறு.
வத அர்த்திபி:-
தாங்கள் பட்ட நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள்.
ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச் செய்தானைத்தனை.
அர்த்தித:-
தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்தில் பட்டக் கிடந்து இதுவே.
அர்த்தித:–
உபாசித்தவர் அல்லர்.
மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;-
ஆக்கரான -உண்டு பண்ணப்பட்ட தேவர்கள்,
மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோஜனைக்கு அவ் வருகே தின்று
ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்;
அவர்கள் மனிதத் ஸ்தானத்திலே யாம்படியான பொருள் கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார்.
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.-
ஜஜ்ஞே–
ஆவிர்ப்பூதம் -தோன்றிய மாத்திர மன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில்
பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’
ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-. பால. 18 : 10.
பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ -என்றபடி
ஜாதோஹம் யத்தவோதராத்’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.
நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ -என்றபடி
விஷ்ணுஸ் ச நாதன –

நாட்டிற்பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –
கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே -சஜாதீயமாய் -ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,
அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே, கடலுக்கு அக் கரையிலே உயிரும் இக் கரையிலே உடலுமாம் படியான
ஜனக ராஜ புத்ரீ விஸ்லேஷம் -ஜானகியின் பிரிவு என்ன,
பெரியவுடையார் நிதனம் -சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,
அதற்கு மேலே, செய்ந் நன்றி அறியாத மனிதர்கட்காக.

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச்செய்து –
நிரபராதமான -யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற ராவணன் முதலான கண்டகரை,-
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி,எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ!-பெருமாள் திருமொழி, 9-5-2–என்கிறபடியே.
அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று, லங்கையின் வாசலிலே விஜய ஸ்ரீ பரிவ்ருத்தராய் –
வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க, அவ்வளவிலே பிரமன் முதலான தேவர்கள் வந்து.
ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’-யுத். 120 : 29.
தருமத்தைத் தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது;
ராமரே! ராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’ என்கிறபடியே,‘
நாங்கள் வேண்டியவை அடைய எங்கள் அளவு பாராதே தேவர் செய்தருளிற்று,
இனி, தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்’ என்ன, அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப் போன்று கிடக்கின்றது; திருத் தாய்மாரையும் திருத் தம்பிமாரையும் திருப் படை வீட்டிலுள்ள ஜனங்களையும், மீண்டு புக்குச் சில நாள் எழுந்தருளி யிருந்து ஈரக் கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’ என்ன,
கடல் ஞாலத்து அளி மிக்கான்’ திருவாய்.. 4. 8 : 5.என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளி யிருந்து பாதுகாத்தப் படியைச் சொல்லுகிறது
‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’- யுத். 120 : 3.
நாட்டை அளித்து’ என்று.இதற்காக அன்றோ முக் கண்ணனை,
ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் – முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது?
இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ?
நெடு நாள் இருந்து தன்னால் அல்லது செல்லாதபடி செய்து, இட்டு வைத்துப் போகாதே கூடக் கொடு போய்
உஜ்ஜீவிப்பித்த படியைச் சொல்லுகிறது உய்யச் செய்து’ என்று.

நடந்தமை கேட்டுமே –
திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’ உத்தரகாண். 109 : 22.
விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’ என்றும்
விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் சஹா நுக -என்கிறபடியே,
தன்னுடனே கூடக் கொடு போய் வைத்தான்’ என்று ஐயப்பட்ட வேண்டாதபடி அருளிச் செய்து வைத்தாரே அன்றோ ஆழ்வார்,
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, பெருமாள் திருமொழி. 10 : 10.- என்று பரமபதத்தே கொடு போனமையை?

நடந்தமை கேட்டும் –
இந்த பிரயாண வ்ருத்தாந்தம் -கொடு சென்ற இந்தச் செயலைக் கேட்டும் என்றது,
பசித்தார் இளைத்தாரைப் பார்த்துக் கொடு போகையைத் தெரிவித்தபடி.
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’-, ஜிதந்தா.
தாமரைக் கண்ணனுடைய திரு நாம சங்கீர்த்தன அமிருதமே அன்றோ பாதேயம்?
ஜிதந்தே புண்டரீகாஷா -புண்டரீகாக்ஷனே! உனக்குத் தோற்றோம்’ என்று கொடு போலே காணும் போவது.
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.
–ராமர் தாமரை மலர் போன்ற கண்களையுடையவர்’ என்னப் படுவதன்றோ?
அண்ணல் தன் திரு முகம் கமல மாமெனின்
கண்ணினுக் கவமை வேறு யாது காட்டுகேன்!
தண் மதி யாமென வுரைக்கத் தக்கதோ!
வெண் மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.’- கம்பராமாயணம்.

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான் போந்து
சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

இப்படி உஜ்ஜீவிப்பித்து நடந்தமை கேட்டும் நாரணற்கு ஆளின்றி ஆவரோ
கீழில் பாட்டில்
சப்தாதி விஷய ப்ரவணராய் -சர்வேஸ்வரன் என்று ஒரு தத்வம் உண்டு என்று கேட்டார் வாய்க் கேட்டு இருக்கிறவர்களை
தான் வந்து திருவவதரித்து தன் வடிவு அழகாலும் குணங்களாலும் வசீகரித்துத்
தன்னை அல்லது அறியாதபடி பண்ணினான் என்று சொல்லிற்று
இப்பாட்டில்
இது ஒரு ஏற்றமோ தன்னால் அல்லது செல்லாமையைப் பண்ணிப் பொகட்டுப் போகையாகிறது
படு கொலை காரரோபாதி இ றே –
அங்கன் செய்யாதே தன்னோடே கூடக் கொடு போய் ரஷித்த குணத்துக்கு என்கிறார் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: