ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-9–

ஸ்ருஷ்டியும் -விஷஜாதீயம் ஆகையால் , அதனையும் விஜயமாக அனுசந்திக்கிறார் ஆகவுமாம்
அப்பன் முதல் உலகம் செய்ததும் அன்று – மஹோபகாரகன் முதலிலே உலகத்தை உண்டாக்கிற்றும்
ஆதியான படைப்புக் காலத்திலே.
அதற்குக் காரணமாக ‘மண் நீர்’ என்பது முதலாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே, முன்னும் பின்னும் கிருஷ்ணனுடைய விருத்தாந்தம் -செயலைப் பற்றி அருளிச் செய்கையாலே,
வாணனைத் தண்டித்த அன்று கண்டீர் உலகத்தை உண்டாக்கினான்’ என்று அதனையே பேசுகிறார் என்னுதல்.
பயிர் செய்கையே அன்றே வேண்டுவது? பயிர் அழியாமல் நோக்கின அன்றே அன்றோ – பயிர் செய்ததாவது?

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே–7-4-9-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் –
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உண்டாக்கினபடி.

சுடர் இரண்டு –
சந்திர சூரியர்களை உண்டாக்கினபடி.

பிறவும் –
மற்றும் உண்டான நக்ஷத்திரங்கள் முதலான தேஜஸ் -ஒளிப் பொருள்களும்.

பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் –
அதற்கு மேலே மழை பெய்யக் கடவதான மேகம்,
மழையாலே உயிர் வாழக் கூடிய ஆத்மாக்கள்,
மழையைத் தோற்றுவிக்கின்றவர்களான உத்பாதகரான -தேவர்கள்,
மற்றும் உண்டான திரியக்கு ஸ்தாவரங்கள் முதலானவைகள்.

அப்பன் –
சர்வ உத்பாதகன் ஆனவன் -எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தவன்.

அன்று முதல் உலகம் செய்ததுமே –
தனித் தனியே சொல்ல வேணுமோ?
வாணனைத் தண்டித்து ஈர் அரசு அறுத்த அன்று கண்டீர் இவற்றை எல்லாம் படைத்தது?’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே,-நாம ரூப -பெயர் வடிவங்களை இழத்து, சதேவ ‘‘சத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையில்
பஹுஸ்யாம் பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று சங்கல்பித்த -நினைத்த அன்று முதல்’ என்றுமாம்.

ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்’- சாந்தோக்யம். 6. 2 : 1.
பஹூஸ்யாம்’ என்பது, சாந்தோ. 6. 2:3.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: