ஹிரண்ய வத வ்ருத்தாந்தம் அருளிச் செய்கிறார்.
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–7-4-6-
போழ்து மெலிந்த-
பலித ப்ராயோ வாசரா -பெரும்பாலும் பகற்பொழுது போயிற்று’ என்னுமாறு போலே,
பொழுது போகா நிற்கச் செய்தே.
புன் செக்கரில்-
செக்கர் வானம் இடுகிற அளவிலே. என்றது, ‘அவன் வரத்தில் அகப்படாத சந்தியா காலத்திலே’ என்றபடி
இரவிலும் படகில்லேன்; பகலிலும் படகில்லேன்’ என்று வரம் கொண்டானே.
வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா-
பரப்பையுடைத்தான ஆகாசம் திக்குகள் அடங்கலும், பள்ளம் கொண்ட இடம் எங்கும்
வெள்ளம் பரக்குமாறு போலே குருதியானது கொழித்துப் பரக்கும்படி.
மலை கீழ்து பிளந்து சிங்கம் ஒத்ததால் –
ஒரு மலையைக் கீழே இட்டுக் கொண்டு மேலே இருந்து அதனைப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.
அன்றிக்கே, ‘கிழித்துப் பிளந்த சிங்கத்தை ஒத்தது’ என்னுதல்.
அன்றிக்கே மகிழ்ந்து பிளந்த சிங்கத்தை ஒத்தது’ -என்னுதல்.
மகிழ் -அனாயாசத்தால் சித்தம்-இரண்டு கூறாக பிளந்த ஸிம்ஹம் -என்கை –
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம்’ திருச்சந்த விருத். 62.எனக் கடவது அன்றோ?
ஒக்கப் பிளந்த ஸிம்ஹம் ஒத்ததால் –
அப்பன் ஆழ் துயர் செய்து –
நரசிங்கத்தினுடைய மொறாந்த முகத்தைக் கண்டபோதே, மேல் போய் அனுபவிக்கக் கூடிய அனுபவ மடைய
அப்போதே அனுபவித்து அற்றான். என்றது,
பல காலம் பகவத் பாகவத விஷயங்களிலே செய்து போந்த ப்ரதிகூல்யம் -தீமை முழுதினையும்
அரை ஷணத்திலே அனுபவித்து அற்ற படி. மிகவும் துக்கத்தை விளைத்து.
அசுரரைக் கொல்லுமாறே-
அசுரனைக் கொன்றபடி. ‘இதனால், என் சொல்லியவாறோ?’ எனின்,
எல்லார்க்கும் பொதுவாளனாய் நிற்கும் நிலை ஒழிய. தாய் தந்தையர்கள் முகமாகக் குழந்தைகள் பக்கலிலே
வத்சலனாய் நிற்பது ஒரு நிலையும் உண்டு அன்றோ?
அது குலைந்தால், அவன் பகைவனாயும் நிற்கும் அன்றோ?
அப்போதும் இவன் தான் முன்னின்று ரஷிப்பான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
இத்தாலும் சொல்லிற்றாயிற்று, ஆபத்துக் கனத்ததனையும் கடுக வந்து ரஷிக்கும் என்கை.
தமப்பன் பகையாக உதவினவன், அவனில் அண்ணியனான தான் தனக்குப் பகையானால் உதவச் சொல்ல வேணுமோ?
உத்தரேத் ஆத்மநா ஆத்மாநம் நஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹி ஆத்மநோ பந்து; ஆத்மைவ ரிபு: ஆத்மந:’- ஸ்ரீ கீதை, 6 : 5.
தனக்குத் தானே அன்றோ சத்ரு -பகைவன்?’ என்கிறபடியே,
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply