ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-9–

நீங்கள் உஜ்ஜீவனத்துக்கு -உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ?
அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

விளம்பும் ஆறு சமயமும் –
சிலவற்றைச் சொல்லா நின்றால், தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்பர்களத்தனை போக்கி,
பிரமாணத்திற்கு அநுகூலமான தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உத்தி சாரமே யாயிருக்கிற புறச் சமயங்கள் ஆறும்.
புறச் சமயங்கள் ஆறாவன: சாக்கிய உலூக்கிய அக்ஷபாத க்ஷபண கபில பதஞ்சலி மதங்கள்.
இது பாஷ்யகாரர் அருளிச்செய்தது.
சாக்கியமதம் – பௌத்த மதம். உலூக்கியமதம் -சார்வாக மதம்.
அக்ஷபாதமதம் – கௌதம மதம். க்ஷபணமதம் – ஜைந மதம்.

மற்றும் அவை ஆகியும் –
மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும். புற மதத்தில் உள்ளவர்களும் குத்ருஷ்டிகளும்
மோக்ஷ பலனைப் பெறாதவர்கள். அவர்கள் தாமஸ குணமுடையவர்கள் என்று எண்ணப் படுகின்றார்கள்.
தமோ நிஷ்டாஹிதாஸ் ஸ்ம்ருதா

தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும் –
பிரமாணத்திற்கு மாறுபட்ட தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறிய ஒண்ணாதபடி இருக்கிற
உலக காரணன் விரும்பித் தங்கியிருக்கிற;
தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று பரிச்சேதிக்க – அளவிட அரிதாய் இருக்கும்;
இல்லை’ என்னும் போதும்,வஸ்துவை ‘இது’ என்று அளவிட வேண்டுமே?
அதாவது, ‘இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால்
அசைக்க முடியாதனவாய் இருக்கும்,’ என்றபடி. அதற்கு அடி என்?’ என்றால்,

ஆதிப் பிரான்’
என்கிறார். என்றது,
மே மாதா வந்த்யா–என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனை –
செல்வத்தை யுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான-ஸ்ரமஹரமான – நீர் நிலங்களாலே சூழப்பட்டு,
கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாதபடி காட்சிக்கு இனியதான திருநகரியை.

உளம்கொள் ஞானத்து வைம்மின் –
ஞானம் உதித்து, புறத்தேயுள்ள இந்திரியங்களாலே புறப் பொருள்களில் செல்வதற்கு முன்னே,
மனக் கண்ணுக்குத் திருநகரியை விஷயம் ஆக்குங்கோள்.
உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது,
பஹிர் விஷயம் -புறத்திலே செல்லாதபடி ஞானத்தை-ப்ரதயக்கர்த்த – உள் விஷயத்தில் (திருநகரியில்)
ஈடுபடும்படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.

உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –
சந்த மேநம்- இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே,
உம்முடைய சத்தை – இருப்பைப் பெற்றுப் போகவேண்டியிருக்கில்.
அசந்நேவா இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர். –
மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாத படியான
பெருமாளோடே விரோதம் உண்டு;
ஆகையாலே, நேயமஸ்தி–ஸ்ரீராமா சுந். 43 : 25. ‘தன்னில் தான் வாசி
சொல்லுமத்தனை போக்கி’ என்றது, ‘அவதார வேடத்தோடே நின்ற
ஸ்ரீராமபிரானாகிய தனக்கு, பரத்துவ ஆகாரமே ஒப்பு என்று சொல்லுமத்தனை
போக்கி, ஒப்பாகச் சொல்லத்தக்க வேறு பொருள் இல்லை,-
இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினால் போலே.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: