ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-8–

இங்ஙனே இருக்கச்செய்தேயும், இதர தேவதா ஸமாச்ரயணம் பண்ணி –
மற்றைத் தேவனாகிய சிவபிரானை வணங்கி – அன்றோ மார்க்கண்டேயன் தான் விரும்பிய பயனைப் பெற்றது?’ என்ன,
ஆகில், இருந்தபடி கேட்கலாதோ?’ என்கிறார்.

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

புக்கு அடிமையினால் –
அடிமையினால் புக்கு; என்றது, ‘சர்வேஸ்வரனுக்கு அடிமை என்று புக்கான் அல்லன்;
உருத்திரனுக்கு அடிமை’ என்று புக்கான்,’ என்றபடி.

தன்னைக் கண்ட –
காணப் பெறாமையாலே தான் இழந்தான் அல்லன்.
ஆக, ‘போற்றி வணங்கிய தன்மையில் குறையினாலே இழந்தான் அல்லன்;
காணப் பெறாமையாலே இழந்தான் அல்லன்,’ என்றபடி.

மார்க்கண்டேயன் அவனை –
மார்க்கண்டேயனானவனை

நக்கபிரான் –
நக்கன் – நக்நன். ‘பிரான்’ என்கிறார், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனாய் இருக்கையாலே.
அன்றிக்கே, ஞானத்தினைக் கொடுக்கக் கூடியவன் ஆதலாலே ‘பிரான்’ என்கிறார் என்னுதல்.
மேல், ‘நாராயணன்’ என்கையாலே, ‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று
ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தான் என்கை.

அன்று உய்யக் கொண்டது –
ஆபத்துக் காலத்திலே பாதுகாத்தது.

நாராயணன் அருளே –
நாராயணனுடைய திருவருளாலேயாம். என்றது, நீ நெடுநாள் பச்சையிட்டு என்னை வணங்கினாய்;
அவ்வணக்கம் பயன் அற்றுப் போயிற்றதாக ஒண்ணாது,’ என்று அவனை அழைத்து,
நானும் உன்னைப்போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக் காண் இப்பதம் பெற்றது;
ஆதலால், இனி உன்னுடைய விருப்பத்தை நம்மால் செய்து முடிக்க இயலாது;
இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலே அன்றோ?’ என்று அவனைக் கொண்டுபோய்ச் சர்வேஸ்வரன்
பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி.
அருள்’ என்ற பெயர்ச் சொல் எல்லா வேற்றுமையோடும் சேரத் தக்கதாகையாலே,
அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமையாக விரித்துக்கொள்க.
அன்றிக்கே, ‘சிவபிரான் இவனைக் காப்பாற்றிக்கொண்டது சர்வேஸ்வரன் திருவருளைப் பண்ணிக் கொடுத்து’ என்று
இரண்டாம் வேற்றுமையாக விரித்துப் பொருள் கோடலுமாம்.
இவன் புருஷகாரமாய் நின்று திருவருள் புரியச் செய்தான்,’ என்றபடி.

கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூரதனுள் –
கொக்குப் போன்று வெளுத்த நிறத்தை யுடைய மலர்களை உடைத்தா யிருப்பதாய்ப் பெருத்திருந்துள்ள
தாழைகளை வேலியாக உடைத்தாயிருக்கின்ற திருநகரியாயிற்று;
இதனால், நிலத்தியல்பு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

மிக்க ஆதிப்பிரான் நிற்க –
அறப் பெரிய உலகத்திற்கெல்லாம் காரணமாயுள்ளவன் நிற்க;
மிக்க’
என்றதனால், சொல்லும் போது கனக்கச் சொல்லி, கிட்டினவாறே குறைந்திராதொழிகையைத் தெரிவிக்கிறார்.
என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், நெடுநாள் தன்னை வணங்கும்படி செய்துகொண்டு பின்பு
காரிய காலத்தில் வந்தவாறே வேறே ஒருவன் வாசல் ஏறக் கொண்டு போக வேண்டா திருக்கையைத் தெரிவித்தபடி.

மற்றைத் தெய்வம் விளம்புதிரே
பிரகாரங்களில் –‘சரீரங்களிலே ஒன்றை ஈஸ்வரனாகச் சொல்லுகின்றீர்கோளே!’ என்றது,
அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும் பொருளாகும் தன்மை இன்றிக்கே யிருக்க,
விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால்,வியவஹரிக்கைக்கும் – எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’
என்று இருக்கிறார் காணும் இவர்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: