ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-10-6–

பகவானுடைய பரத்வத்தை நீர் அருளிச் செய்யக் கேட்ட போது வெளிச் சிறத்து அல்லாத போது
தேவதாந்த்ர ப்ராவண்யம் உண்டாகாநின்றது; இதற்கு அடி என்?’ என்ன,
உங்கள் பாபம்’ என்கிறார்.
எம்பெருமானே சர்வேஸ்வரனாகில் எங்களை தேவதாந்த்ர ப்ரவணராக்கி வைப்பான் என்?’ என்ன,
உங்களை இங்ஙனே வைத்தது, ‘புண்ணிய பாவங்களைச் செய்த ஆத்மாக்கள் அவ்வவற்றிற்குத் தகுதியான
பலன்களை அனுபவிக்க வேண்டும்,’ என்று கூறுகின்ற சாஸ்திர மரியாதை அழியும் என்று;
ஆன பின்னர், அதனையறிந்து எம்பெருமானையே ஆஸ்ரயித்து அவன் வஞ்சனத்தைத் தப்புங்கோள்,’ என்கிறார்.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே–4-10-6-

போற்றி –
நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்;
உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அப்ராப்தம் -அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை.

மற்றோர் தெய்வம் –
யேப் யான்ய தேவதா பக்தா – அர்ஜூனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தி யுடையவர்களாய்க் கொண்டு
சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ, அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே.

பேண –
அவை தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல்
அவர்களை அடைகின்ற உங்களுக்கே பரம்’ என்பார், ‘பேண’ என்கிறார்.

புறத்திட்டு –
ஈஸ்வரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து.

உம்மை இன்னே தேற்றி வைத்தது –
உங்களை இப்படியே தெளியும்படி செய்து வைத்தது. என்றது,
நபிபேதி குதஸ்ஸ ந -ஓர் இடத்தில் நின்றும் அஞ்சுகிறான் இல்லை,’ என்கிறபடியே,
நான் மேல் வரும் கேட்டிற்கு அஞ்சாதே-நிர்ப்பரனாய் – பரம் அற்றவனாய் இருக்கின்றால் போலே,
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே
ருசி விசுவாசங்கள் உண்டாம்படி செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’ என்றபடி.

எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே –
எல்லீரும் இருந்ததே குடியாக மோக்ஷத்தைப் பெற்றால், லீலைக்கு அடியான சாஸ்திரம்
நிரர்த்தமாய் -பயன் அற்றதாய் விடும். என்றது,
புண்ணியங்களைச் செய்வாரும் பாவங்களைச் செய்வாருமாய் அன்றோ நாடுதான் இருப்பது?
பாவம் செய்தவர்களும் புண்ணியம் செய்தவர்களுடைய பலத்தை அனுபவிக்குமன்று,
புண்ய புண்யேந கர்மணா பப பாபேந — புண்ணியத்தினாலே புண்ணியனாகவும் பாவத்தாலே பாவியாகவும் ஆகின்றான்’
என்கிற சாஸ்திர மரியாதை குலையும்,’ என்றபடி.
ஆக, பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும்
ஆகிற சாஸ்திர மரியாதை குலையாதபடியாகச் செய்து வைத்தான் என்றவாறு.
ஆதலால், அதோஸ்மி லோகே வேதேச பிரதித புருஷோத்தம – உலகத்திலும் ( சாஸ்திரங்களிலும் ) வேதங்களிலும்
புருஷோத்தமன் என்று பிரசித்தனாய் இருக்கிறேன்’ என்றவிடத்தில் ‘லோக’ சப்தத்தால்,
பிரமாணத்தைச் சொல்லிற்று என்று கொண்டதைப் போன்று, இங்கும் ‘உலகம்’ என்ற சொல் சாஸ்திரத்தைச் சொல்லுகிறது.

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு –
அவ்வூரில் உள்ள பொருள்கள் முழுதும் ஒன்றற்கு ஒன்று இசலி வளரா நிற்கும்.
இதனால், ‘உரம் பெற்ற மலர்க்கமலம்’ என்பது போன்று, அவ்வூரிலே உள்ள பொருள்களில்
ஒன்றில் ஒன்று குறைந்திருப்பது இல்லையாயிற்று என்பதனைத் தெரிவித்தபடி.

ஆற்ற வல்லவன் –
அதிசயித சக்தன் -மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே,
புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும், பாவம் செய்தார் அதன் பலத்தினை
அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ என்றபடி.

மாயம் கண்டீர் –
மம மாயா துரத்யயா -என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டக்கூடாதது,’ என்கிறபடியே,
தான் அகற்ற நினைத்தாரைத் தன் பக்கல் வந்து கிட்டாதபடி பிரகிருதியை இட்டு வஞ்சித்து வைத்தபடி கண்டீர்கோள்.

அது அறிந்து –
இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து.

அறிந்து ஓடுமின் –
மாமேவ யே பிரபத்யந்தே மாயா மே தாந்தரந்தி -சத்ய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே
எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச் செய்து வைத்தான்;
அதனை அறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது,
இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில்,
அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’

இடராக வந்தென்னைப் புன் சிறு தெய்வங்கள் என்செயும்? மான்
இடராக வன் பிணி மாநாக மென்செயும்? யான் வெருவி
இடராக வன்னி புனலிடி கோள் மற்று மென்செயும்?வில்
இடராக வன் னரங்கன் திருத் தாள் என் இதயத்ததே- திவ்வியகவியின் திருவாக்கு

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: